1000+ பதிவுகள் சேர்த்தாச்சு :)

3 views
Skip to first unread message

Ravishankar

unread,
Dec 20, 2007, 3:37:35 PM12/20/07
to tamil-blog...@googlegroups.com
பாஸ்டன் பாலா அதிரடியாக அனுப்பி வைத்த பல opmlகளைக் கொண்டு இப்ப 1000+ பதிவுகளைச் சேர்த்தாச்சு..கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலப் பதிவுகளையும் நீக்கியாச்சு..மகளிர் சக்தி opml, தேன்கூடு வழங்கும் சிறிய ompl, மாற்று! opml  ஆகியவை ஏற்கனவே சேர்க்கப்பட்டாச்சு.

1. சில பதிவுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓடைகள் சேர்க்கப்பட்டிருக்கு..மாதக் கடைசியில் அவற்றை நீக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஓடைகள் இருக்கும் போது எந்த ஓடையை வைத்துக் கொள்வது? atom ஓடை சிறந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன்..ஒரு வேளை திரட்டிக் காரர்களுக்கு இது கூடுதல் உதவியா இருக்கலாம்..ஆனால், ப்ளாகர் posts default என்று ஒரு ஓடையை இயல்பிருப்பாக வழங்குவதால் பல பதிவுகளின் ஓடை இந்த வடிவத்திலேயே இருக்கிறது. புதிதாகப் பங்களிப்பாளர்கள் யாரும் சேர்க்கும்போதும் இந்த ஓடை சேர்க்கப்படுவதற்குத் தான் வாய்ப்பு அதிகம். அதனால், இதை நீக்கப்பார்த்தாலும் திரும்பத் திரும்பச் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது விசயத்தில் முடிவெடுக்க வேண்டும்.

2. குழுமத்தில் உள்ளவர்கள் தங்கள் கணினியில் இற்றைப்படுத்தப்பட்ட omplகளைப் படியெடுத்து வைத்துக் கொண்டால் நல்லது. கணக்கு திறந்த நிலையில் இருப்பதால் என்னவேணா ஆகலாம் தானே :)

3. wordpress பதிவுகளைச் சேர்ப்பதாக பாஸ்டன் பாலா சொல்லி இருக்கிறார். இது போல் குறிப்பிட்ட தளப் பட்டியல்களை யாராவது சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால் சொல்லி விட்டுச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் ஒரே வேலையை இருவர் வீணாகத் திரும்பத் திரும்பச் செய்வது போல் ஆகிவிடும்.

http://www.thamizmanam.com/bloglist.php பக்கத்தில் தமிழ்மணப் பதிவுகள் பட்டியல் பக்கத்துக்கு இருபதாய் 122 பக்கங்கள் உள்ளன. இதையும் நாம் ஆளுக்கு சிலவாய் பணியைப் பிரித்து opmlல் சேர்க்க முடிந்தால் நன்று. தமிழ்மணத்தில் இல்லாமல் பிற திரட்டிகளில் மட்டும் வரும் பதிவென்று எதுவும் எனக்குத் தெரியவில்லை. எனவே, முதற்கண் தமிழ்மணப் பட்டியலைச் சேர்ப்பதே போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ரவி

சிவகுமார் மா

unread,
Dec 21, 2007, 9:05:04 AM12/21/07
to tamil-blog...@googlegroups.com
வாழ்த்துக்கள் ரவி. உங்கள் செயல் வேகத்துக்கு நிகராக நான் வேறு எங்கும் பார்த்ததே இல்லை!

அன்புடன்,
மா சிவகுமார்
--
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

Ravishankar

unread,
Dec 21, 2007, 9:08:46 AM12/21/07
to tamil-blog...@googlegroups.com
சிவா,

இதில் என்னைப் பாராட்ட ஒன்றுமில்லை..கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பதிவுகளைச் சேர்த்து சீரமைக்க உதவியது பாஸ்டன் பாலா தான்..இன்னும் 450+ பதிவுகள் மாற்று! தளத்தில் இருந்து பெற்றது..தனித்தனியாக அங்கங்கு சிதறிக் கிடப்பதைச் சேர்க்கும் போது தானே நம்ம power நமக்கே புரியுது :)

ரவி

சிவகுமார் மா

unread,
Dec 21, 2007, 9:11:14 AM12/21/07
to tamil-blog...@googlegroups.com
On 12/21/07, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:
சிவா,

இதில் என்னைப் பாராட்ட ஒன்றுமில்லை..
:-)

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பதிவுகளைச் சேர்த்து சீரமைக்க உதவியது பாஸ்டன் பாலா தான்..இன்னும் 450+ பதிவுகள் மாற்று! தளத்தில் இருந்து பெற்றது..தனித்தனியாக அங்கங்கு சிதறிக் கிடப்பதைச் சேர்க்கும் போது தானே நம்ம power நமக்கே புரியுது :)
Reply all
Reply to author
Forward
0 new messages