இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 02

9 views
Skip to first unread message

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 4:59:14 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - இரண்டு பற்றிய தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வணக்கம்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை - 5 நிமிடம்
  • புதிய பதிவர்கள் அறிமுகம் - 10 நிமிடம்
         --- சென்ற சந்திப்புக்கு வராதவர்கள் மாத்திரம் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
  • கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் - 35 நிமிடம்
         --- பதிவுகளின் தன்மை, எவ்வாறது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறதை மேம்படுத்துவது போன்றன.
  • கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை - 35 நிமிடம்
         --- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
  • சிற்றுண்டியும் சில பாடல்களும் - 15 நிமிடம்
         --- வாய்க்குச் சுவையாக சில பலகாரஙகள், செவிக்கினிமை சேர்க்க சில பாடல்கள்
  • கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது? - 20 நிமிடம்
        --- குழுமத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும், எவ்வாறு பாவிக்கக் கூடாது
  • கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் - 15 நிமிடம்
       --- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி - 10 நிமிடம்
      --- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்
  • உங்களுக்குள் உரையாடுங்கள் - 20 நிமிடம்
      --- கதைக்க விடயம் இல்லையெனும் வரை பதிவர்கள் மாறி மாறித் தங்களுக்குள் கதைத்து, சிரித்து மகிழ்தல்

பிற்குறிப்பு : நிமிடங்கள் அண்ணளவாகக் குறிக்கப்பட்டுள்ளன.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தூர இருந்து வரும் பதிவர்களுக்கு வாகாக மாலை இரண்டு மணி தேர்ந்தெடுக்கப்பட்டுளது. 

வரும் பதிவர்கள் அனைவரும் நாங்கள் எமக்காக, எமது நன்மைக்காக, எமது மகிழ்வுக்காக, எமது தீர்வுகளுக்காக நடாத்தப்படும் சந்திப்பு என்பதை மனதிற் கொண்டு குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சந்திப்பை சிறப்புற நடாத்துகின்றோம்.

பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

மேலும் இதுபற்றிப் பதிவிடும்போது ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இச்சந்திப்பைப் பற்றியே வராதிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மார்கழி பதின்மூன்று வரை காலம் உளது. நீங்கள் இச்சந்திப்பு பற்றி பதிவிட்டால் உடனடியாக குழுமத்தின் புதிய பதிவுகளில் இணைத்துவிடுங்கள். மற்றவர்களும் தெரிந்து மற்றைய நாள் பதிவிடுவதற்கு வாகாக.

நிகழ்ச்சி நிரல்களுக்கிடையில் நான் தந்துள்ள விளக்கம் உங்களுக்கானது. அதை அப்படியே பதிவிட்டுவிடாதீர்கள். நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாகத் தந்து கீழே சேர்ந்த ஒரு விளக்கமாகப் போடுங்கள். நிமிடங்கள் உங்களுக்கானது. பதிவுகளில் அதைத் தவிர்த்தல் நலம்போலத் தெரிகிறது. மூன்று மணித்தியாலங்கள் சந்திப்பு நிகழும்.

இச்சந்திப்பிற்கான இணையத் தட்டிகளை வேறுவேறான அளவுகளில் நிமலப்பிரகாசன் செய்துகொண்டிருக்கிறார். அது விரைவில் இங்கே தரப்படும்.

நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers

வேறென்ற இலங்கைத் தமிழ்ப் பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது.

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்
--
Mathuvathanan Mou.
Message has been deleted

Mayooran Peri

unread,
Nov 24, 2009, 5:24:16 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
கலந்துகொள்கின்றேன். ஏற்பாட்டுக்கு குழுவினருக்கு வாழ்த்துக்கள். பணம் சம்பந்தமான விடயத்தை பதிவுகளில் போடவேண்டாம். இந்த விடயம் குழுமத்தில் மட்டுமே இருக்கட்டும்.

Skandhakumar Nimalaprakasan

unread,
Nov 24, 2009, 5:27:47 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
2009/11/24 க.கோபி கிருஷ்ணா. <kanag...@gmail.com>:
> பிரச்சினை என்னவென்றால் யார் ஒழுங்கமைப்புக் குழுவினர் என்பது இன்னும்
> அறிவிக்கப்படவில்லை....

//இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்//

அப்ப (நீங்க/கனககோபி/க.கோபி கிருஷ்ணா) ஒண்டா? வேறையா...??? :-)

க.கோபி கிருஷ்ணா.

unread,
Nov 24, 2009, 5:30:02 AM11/24/09
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்
அத நான் கவனிக்கேல... என்ர அந்தப் பதில தூக்கிற்றன்....

On Nov 24, 3:27 pm, Skandhakumar Nimalaprakasan
<nimalapraka...@gmail.com> wrote:
> 2009/11/24 க.கோபி கிருஷ்ணா. <kanagag...@gmail.com>:

M.Mauran

unread,
Nov 24, 2009, 5:30:43 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
/பணம் சம்பந்தமான விடயத்தை பதிவுகளில் போடவேண்டாம். இந்த விடயம் குழுமத்தில் மட்டுமே இருக்கட்டும்/

வெளியில் சொல்வதால் ஏதும் பிரச்சினை இருக்கிறதா மயூரன்?

எனது கருத்து என்னவென்றால், ஆளுக்கு நூறு ரூபாய் என்று தெளிவான தொகை இருப்பதால், நிகழ்ச்சி முடிந்ததும் வெளிப்படையான ஒரு கணக்கறிக்கையை பொதுவாகவே அறிவித்துவிடலாம்.

காசு மிஞ்சினால் பொதுவான அறிவித்தலோடு அதனை ஏதாவது பொதுப்பணிக்கு நன்கொடையளித்துவிடலாம்.

எல்லாம் வெளிப்படையாய் இருக்கும். பிரச்சினைகள் எழாது.

--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/24 Skandhakumar Nimalaprakasan <nimalap...@gmail.com>

Mayooran Peri

unread,
Nov 24, 2009, 5:32:51 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
//வெளியில் சொல்வதால் ஏதும் பிரச்சினை இருக்கிறதா மயூரன்?// எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் சில காழ்ப்புணர்ச்சிகள் இதனை வைத்தே எம்மைத் தாக்குவார்கள். பெயர்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா? என்ன கொடுமை இது மற்றும் படி நீங்கள் சொல்வது சரிதான்.

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 5:34:15 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
இக்குழுமம் பொதுப் பார்வைக்குரியதுதான். யாரும் இக்கலந்துரையாடல்களைப் பார்க்கமுடியும். குழுமத்தை ஐம்பது வீதமானவர்கள்தான் பாவிக்கிறார்கள் பார்க்கிறார்கள். மற்றவர்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது? பதிவுகளில் அதை குறிப்பிடுவதில் தப்பில்லை போல் தெரிகிறது. எல்லாம் நாங்கள்தானே :)

- cowboymathu

2009/11/24 M.Mauran <mma...@gmail.com>



--
Mathuvathanan Mou.

M.Mauran

unread,
Nov 24, 2009, 5:36:20 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
பண விசயத்திலும் சரி எல்லாவற்றிலும் சரி முற்றிலும் வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தப்பிரச்சினையும் எழாது. தாக்குவதற்கும் எதுவும் இருக்காது.

மடியினில் கனம் இல்லையே; பயம் இல்லையே
மனதினில் கறை இல்லையே; குறை இல்லையே..

 
--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/24 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>

Mayooran Peri

unread,
Nov 24, 2009, 5:37:17 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
கெளபாய் சொல்வதும் சரிதான். நடத்துங்கள் கூட வருகின்றேன்.

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 5:40:12 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
பதிவு போடும்போது பணத்தைக் கொண்டு வாங்கோ எண்டு சொல்வதை விட நாங்கள் எல்லோரும் நூறு நூறு ரூபாய்கள் போட்டு சந்திப்பை சிறப்புற நடாத்துகின்றோம் என்று போடலாம். :)

2009/11/24 Mayooran Peri <mayo...@gmail.com>

கெளபாய் சொல்வதும் சரிதான். நடத்துங்கள் கூட வருகின்றேன்.



--
Mathuvathanan Mou.

புல்லட் த கிரேட்

unread,
Nov 24, 2009, 6:06:09 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
அருமை... நிச்சயம்  ரூபாயுடன் வருகிறோம்.. ;-)


YOGA CHAN

unread,
Nov 24, 2009, 6:31:08 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
கட்டாயம் வருகிறோம், சந்திப்பை சிறப்பிப்போம், 

Keerthy Jsam

unread,
Nov 24, 2009, 7:23:35 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ... எப்போ.... என நாம் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த இரண்டாவது முறையாக ஒன்றுக்கூட்டப்பட இருந்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பிற்கான ஒழுங்குகள் நிகழ்ந்த வண்ணமாக!

ஆம் எதிர்வரும் மார்கழி மாதத்தில் நடாத்தி முடிப்பதாக அமைப்பு குழுவினர் தீர்மானித்துள்ளனர். அது சார்ந்த விபரங்கள் நிகழ்ச்சி நிரலோடு கீழ்வருமாறு;

தொடர்ச்சி
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/11/blog-post_24.html

 நன்றி

அமைப்புக்குழு
--
WhN SmEoNe LoVeS U, De WaY ThEy SaY Ur NaMe S DiFfErEnT. U JsT KnW ThT Ur NaMe S SaFe N ThEiR MoUtH, HeArT & SoAl

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 7:41:13 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
சம்யுக்தா,

இது புதிய பதிவுகளின் கீழ் வரவேண்டியது.. :-)

மது.

2009/11/24 Keerthy Jsam <keerth...@gmail.com>



--
Mathuvathanan Mou.

Mathuvarman

unread,
Nov 24, 2009, 8:07:33 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
//
  • அறிமுகவுரை - 5 நிமிடம்
  • புதிய பதிவர்கள் அறிமுகம் - 10 நிமிடம்
         --- சென்ற சந்திப்புக்கு வராதவர்கள் மாத்திரம் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்//

நான் என்ன நினைக்கின்றேனென்றால்.

எல்லா பதிவர்களுமே தங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை செய்யவேண்டிய தேவையுள்ளது. பதிவர் சந்திப்பில் புதிதாக கலந்துகொள்ளும் பதிவர்கள் அறிந்துகொள்வதற்காகவாவது, ஏனைய பதிவர்களின் அறிமுகம் அவசியம்.

அதைவிட, எல்லோரும் எல்லோரைரும், ஒரேயொரு பதிவர் சந்திப்போடு நினைவில் வைத்திருப்பதில்லை. பதிவர் சந்திப்பு நடக்கும்போதெல்லாம் ஒவ்வொரு பதிவர்களும் அறிமுகம் செய்துகொள்ளவேண்டியது அவசியமென்று நான் கருதுகின்றேன்.

ஆகவே, இம்முறை பதிவர்கள் அறிமுகத்துக்கு 10 நிமிடங்களை விட அதிகமான நேரம் தேவைப்படுமென நான் கருதுகின்றேன்.

shanthru yokarajah

unread,
Nov 24, 2009, 8:08:45 AM11/24/09
to srilankanta...@googlegroups.com

 

நல்லது நண்பர்களே நானும் கலந்து கொள்கிறேன். பல பதிவார்கள் எமது குழுமம் பற்றி தெரியாமல், அல்லது எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கின்றனர்.( நானும் அண்மையில்தான் பயன்படுத்த ஆரம்பித்தேன் ) எனவே குழும சுட்டியினை பதிவுகளில் இணைப்பது நல்லதே.

 

அன்புடன்...

சந்ரு



2009/11/24 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>

shanthru yokarajah

unread,
Nov 24, 2009, 8:13:09 AM11/24/09
to srilankanta...@googlegroups.com

அனைத்து பதிவர்களும் தங்களை அறிமுகம் செய்வதுதான் நல்லது. புதிய பதிவர்களுக்கு எல்லோரையும் தெரிய வாய்ப்பில்லை. அத்தோடு கடந்த சந்திப்பிலே கலந்து கொள்ளாதவர்களுக்கும் வாய்ப்பில்லை.

 

ஒளிபரப்பின் முலம் பார்க்கும் வெளிநாட்டு பதிவர்களும் இலகுவாக பதிவர்களை அறிந்து கொள்ள முடியும்.



2009/11/24 shanthru yokarajah <shanth...@gmail.com>

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 8:24:04 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
நூறு பதிவர்கள் வந்திருக்கிறார்கள். அனைவரினதும் அறிமுகம் ஞாபகத்திற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். நிகழ்ச்சி நிரலின் படி புதியவர்கள் மட்டும் முன்னை அறிமுகத்தை மேற்கொண்டுவிட்டு இறுதியாக நடக்கவுள்ள போட்டிக்குப்பின்னர் ஏனையோரின் அறிமுகத்தை மேற்கொளலாம்.

இறுதி நேரத்தில் சென்ற சந்திப்பிற்கு வந்தவர்கள் அறிமுகத்தை மேற்கொள்ளும்போது புதிதாக வநதவர்களுக்கு உடனடியாக ஞாபகத்தில் வைத்து அவருடன் இறுதி "உங்களுடன் உரையாடுங்கள்" நேரத்தை செலவழிக்க முடியும்.

புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை அறிமுகப்படுத்தியும் ஆச்சு. இறுதி நேரத்தை சிறப்புறப் பயன்படுத்தியும் ஆச்சு.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

2009/11/24 Mathuvarman <mathu...@gmail.com>



--
Mathuvathanan Mou.

Ashokbharan Nalliah Kumaraguruparan

unread,
Nov 24, 2009, 8:28:34 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
Concepts look easy when they are told - or when the are just laid as theories but when implementing them we cannot assure the same results!

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 8:42:52 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
அசோக்பரன்,

இது என்னத்துக்கு? மொத்தமாக பதிவர் சந்திப்பிற்கா? அல்லது குறித்த ஏதும் பதிலளிப்பிற்கா?

2009/11/24 Ashokbharan Nalliah Kumaraguruparan <nkasho...@gmail.com>

Concepts look easy when they are told - or when the are just laid as theories but when implementing them we cannot assure the same results!



--
Mathuvathanan Mou.

Mathuvarman

unread,
Nov 24, 2009, 8:45:18 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
எந்தவொரு சந்திப்பிலும் எல்லோரையும் முதலில் அறிமுகப்படுத்தவேண்டிய முறை இருக்கின்றது, அது அவசியமானதும் கூட. அறிமுகம் செய்வது நிகழ்ச்சியின் இறுதியிலல்ல.

ஏனென்றால், ஒருவர் ஒரு கருத்தை சொல்லும்போது அவர் யார் என்ற தகவல் தெரிந்திருக்கவேண்டும். ஆரம்பத்தில் நிகழ்த்தப்படும் அறிமுகம் அடுத்துவரும் நிகழ்ச்சிகளை ஆரோக்கியப்படுத்தும்.

ஒருவர் எல்லோருடைய அறிமுகத்தையும் நினைவில் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை. யார் யாரை நினைவில் வைத்திருக்கின்றோம் என்பது அவரவர் தனிப்பட்ட தெரிவுகளையும், அறிமுகமாக சொல்லப்படும் விடயங்களிலும் தங்கியிருக்கின்றது. ஒருவரைப்பற்றி ஒருவர் மறந்திருந்தாலும், பக்கத்திலுள்ளவரை கேட்டாவது தெரிந்துகொள்ளலாம்.

ஆகவே இந்த சாதாரன நடைமுறையை பின்பற்றுவதே சரியென நான் கருதுகின்றேன்!

Ashokbharan Nalliah Kumaraguruparan

unread,
Nov 24, 2009, 8:45:53 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
இல்லை... கடைசியாக எல்லோரும் கதைச்சு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியும் - இரண்டு நேரத்தையும் பயனுள்ளதாக்கலாம் என்றீா்கள்... - வாசித்தவுடன் சடுதியாக சிந்தையில் மின்னியது - எழுதிவிட்டேன்!

எல்லோரும் முதலிலேயே அறிமுகப்படுத்திக் கொள்வது தான் வசதி என்பது எனது எண்ணம்!

Ashokbharan Nalliah Kumaraguruparan

unread,
Nov 24, 2009, 8:54:57 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
Accepted! yes, we cannot continue introducing in each and every meet but in comparison if a bigger percentage of newcomers are coming then we should consider!

My heartfelt gratitudes to you guys who are organising this event, taking up a big responsibility and giving us a  chance to enjoy.!
thank you dear friends!

ATCHU

unread,
Nov 24, 2009, 10:23:06 AM11/24/09
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 02 சிறக்க வாழ்த்துக்கள்


//இம்முறை அமைப்புக் குழுவினர்


கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு

மயூரன்//

ஏற்பாட்டுக்கு குழுவினருக்கு பங்குச்சந்தை - ஸ்ரீலங்காவின்


வாழ்த்துக்கள்.

ஸ்ரீ.அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/

Srikaran

unread,
Nov 24, 2009, 11:23:54 AM11/24/09
to srilankanta...@googlegroups.com
எனக்கும் மதியம் 2 மணி கூட்டங்கள் மிகவும் பிடிக்கும்.... ஏனென்றால், அநேகமான இடங்களில் இலவசத் தாலாட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. :)

ஆனால், இது எம்மவர்களின் சந்திப்பாகையால், எனது வார இறுதி மதிய நேர தூக்கத்துக்கு நிச்சயம் ஆப்புத்தான்.

நிச்சயம் வருகின்றேன்... சந்திப்போம்.

அனைவரினதும் அறிமுகத்தை ஆரம்பத்தில் வைப்பது நல்லதென உணர்கின்றேன்.

2009/11/24 ATCHU <asrir...@gmail.com>

க.கோபி கிருஷ்ணா.

unread,
Nov 24, 2009, 12:18:17 PM11/24/09
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்
தமிழில் சொல்லுங்கள் ஐயா.... :P

On Nov 24, 6:54 pm, Ashokbharan Nalliah Kumaraguruparan

shanthru yokarajah

unread,
Nov 24, 2009, 12:41:02 PM11/24/09
to srilankanta...@googlegroups.com

காலம் : மார்கழி பதின்மூன்று, என்பதிலே சிறு மயக்கம் இருப்பது போன்று உணர்கின்றேன். டிசம்பர் 13 என்றுதான் வர வேண்டும். தமிழில் மார்கழி பதின்மூன்று என்பது டிசம்பர் இல் 28 வருகிறது. நாம் எடுத்திருக்கும் டிசம்பர் 13 தமிழில் குறிப்பிடுவதானால் கார்த்திகை 27 ல் வருகிறது.


 

இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. பலர் நம்மை பிழை பிடிக்க இருக்கின்றனர்.

 

அன்புடன்..
சந்ரு



2009/11/24 க.கோபி கிருஷ்ணா. <kanag...@gmail.com>
Message has been deleted

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 12:52:40 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
காலம் : மார்கழி ௮ (௮ - ௰௨ - ௨௲௯ )

அல்லது

காலம் : திசம்பர் 13 (13 - 12 - 2009)

பதிவிடுபவர்கள் தெளிவா ஏதோ ஒரு முறையில் போட்டுவிடுங்கள்.

2009/11/24 shanthru yokarajah <shanth...@gmail.com>

காலம் : மார்கழி பதின்மூன்று, என்பதிலே சிறு மயக்கம் இருப்பது போன்று உணர்கின்றேன். டிசம்பர் 13 என்றுதான் வர வேண்டும். தமிழில் மார்கழி பதின்மூன்று என்பது டிசம்பர் இல் 28 வருகிறது. நாம் எடுத்திருக்கும் டிசம்பர் 13 தமிழில் குறிப்பிடுவதானால் கார்த்திகை 27 ல் வருகிறது.




--
Mathuvathanan Mou.

Srikaran

unread,
Nov 24, 2009, 12:53:32 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
//மார்கழி ௮ (௮ - ௰௨ - ௨௲௩)//

உதை எங்க கொண்டு போய் மொழி பெயர்க்கலாம்..?


2009/11/24 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>
காலம் : மார்கழி ௮ (௮ - ௰௨ - ௨௲௩)

அல்லது

காலம் : திசம்பர் 13 (13 - 12 - 2009)

பதிவிடுபவர்கள் தெளிவா ஏதோ ஒரு முறையில் போட்டுவிடுங்கள்.

2009/11/24 shanthru yokarajah <shanth...@gmail.com>

காலம் : மார்கழி பதின்மூன்று, என்பதிலே சிறு மயக்கம் இருப்பது போன்று உணர்கின்றேன். டிசம்பர் 13 என்றுதான் வர வேண்டும். தமிழில் மார்கழி பதின்மூன்று என்பது டிசம்பர் இல் 28 வருகிறது. நாம் எடுத்திருக்கும் டிசம்பர் 13 தமிழில் குறிப்பிடுவதானால் கார்த்திகை 27 ல் வருகிறது.




--
Mathuvathanan Mou.

shanthru yokarajah

unread,
Nov 24, 2009, 12:58:39 PM11/24/09
to srilankanta...@googlegroups.com

மார்கழி 28 (13.12.2009) என்று போட்டு விடலாம்



2009/11/24 Srikaran <cask...@gmail.com>

shanthru yokarajah

unread,
Nov 24, 2009, 12:59:38 PM11/24/09
to srilankanta...@googlegroups.com

////மார்கழி ௨௮ (௨௮ - ௰௨ - ௨௲௩)//

உதை எங்க கொண்டு போய் மொழி பெயர்க்கலாம்..?////
 

மார்கழி 28 (13.12.2009)
2009/11/24 shanthru yokarajah <shanth...@gmail.com>

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 1:21:07 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
பதிவர்களே சந்திப்பிற்கான இணையத் தட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன். அவற்றை இங்கே http://projects.techt3.com/files/itps2/ சென்று பெற்றுக் கொள்ளலாம். படங்களை நகலெடுப்பதை விடுத்து அங்குள்ள HTML நிரல்களைப் பாவியுங்கள். தட்டிகளில் செய்யவுள்ள மாற்றங்கள் அந்நிரலினைப் பாவித்தால் மட்டுமே உங்கள் பதிவுகளிலும் மாறும்.

சகபதிவர் நிமலப் பிரகாசனுக்கு நன்றி.

மதுவதனன் மௌ.
--
Mathuvathanan Mou.

MAthuvathanan Mou.

unread,
Nov 24, 2009, 1:27:31 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
இணையத் தட்டிகளில் ஏதாவதொன்றினை வலைப்பதிவின் Gadget ஆக வரும் சந்திப்பு வரை இணைத்துவிடுங்கள் பதிவர்களே.

2009/11/25 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>



--
Mathuvathanan Mou.

shanthru yokarajah

unread,
Nov 24, 2009, 1:33:55 PM11/24/09
to srilankanta...@googlegroups.com

நான் இணைத்துவிட்டேன் நண்பர்களே எல்லோரும் இணைத்துவிடுங்கள்.



2009/11/24 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>

M.Mauran

unread,
Nov 24, 2009, 3:30:22 PM11/24/09
to srilankantamilbloggers
தட்டியின் அகலம் ஒரு 150-200 இருக்கும்படி கொஞ்சம் ஒடுக்கமான ஒன்றைத் தயாரித்துத்தரமுடியுமா நிமல்?
 
--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/25 shanthru yokarajah <shanth...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 24, 2009, 8:52:34 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
2009/11/24 shanthru yokarajah <shanth...@gmail.com>:

> ////மார்கழி ௨௮ (௨௮ - ௰௨ - ௨௲௩)//
>
> உதை எங்க கொண்டு போய் மொழி பெயர்க்கலாம்..?////
>
> மார்கழி 28 (13.12.2009)

இதைப் பற்றி எழுதப்பட்டவைகள் சேர்த்து வாசிக்கையில் தலையில் குழப்பம்தான்
வருகிறது !

தாங்களே முதலில் Dec 13 என்றால் கார்த்திகை 27 என்றீர்களே? அது சரியானது
என வீட்டில் இருக்கும் மெய்கண்டானில் புரட்டிப் பார்க்கையில் புலனாகியது.
அத்துடன் இவ் வருட தமிழ் மார்கழி 28 = 12-01-2010 .

அழைப்பிதல் மடல்கள் மற்றும் பதிவுகளில் 13.12.2009 அல்லது 13-டிச.-2009
என்று மட்டும் அறிவித்தால் போதுமானதே. ஏன் குழம்ப வேண்டும் ?

௨௮ (௨௮ - ௰௨ - ௨௲௩) - அதில்ல இரண்டு தமிழ் எண் முறைகள் கலப்படம் உள்ளது
என்பது என் கருத்து. விளக்கி எழுத இப்ப நேரம் இல்லை.

~சேது

Loshan ARV

unread,
Nov 24, 2009, 9:52:41 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி..
எங்கள் வீட்டு குடும்ப சந்திப்பு நிகழ்வொன்று போலத் தானே இதுவும்...

 

நிச்சயமா வருகிறேன்.. அறிவித்தல்,பதிவொன்று இடுகிறேன்..
 


2009/11/25 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>



--
LOSHAN
http://arvloshan.com/

Srikaran

unread,
Nov 24, 2009, 10:15:34 PM11/24/09
to srilankanta...@googlegroups.com
(எ/உ)ங்களுக்கு ஆட்சேபனைகள் இருக்காதவிடத்து, இச்சந்திப்பு தொடர்பான அறிவித்தல்களை திரட்டிகளில் இடுமாறு அதன் நிர்வாகிகளை கேட்கலாம்.

கடந்த சந்திப்பு தொடர்பான அறிவித்தல்களை தமிழிஷ், தமிழ்மணம் போன்ற திரட்டிகள் தங்கள் முகப்பில் இட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தடவை இது தொடர்பாக நாங்கள் தமிழிஷ் நிர்வாகத்தினை அணுகிய வேளையில், அவர்களிடமிருந்து உடனடியான ஆக்கபூர்வமான பதில் கிடைத்தது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.



2009/11/25 Loshan ARV <arvl...@gmail.com>

Keerthy Jsam

unread,
Nov 25, 2009, 12:31:37 AM11/25/09
to srilankanta...@googlegroups.com
அனைவரின் ஆதரவிற்கும் நன்றிகள் மேலும் இது நம் நிகழ்வு நாம் அனைவரும் ஒன்றிணைந்தே நிகழ்வினை சிறப்பான முறையில் நடாத்தி முடிக்க வேண்டும்.

இங்கே சில விடயங்களை நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து பகிரங்கப்படுத்தியமை பதிவர்கள் அனைவரும் நடப்புகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

உங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்கள், கருத்துக்களை அமைப்புக் குழுவினரில் ஒருவருக்கு தெரிவிக்கும் போது அது சார்ந்த தீர்வுகள் எடுக்கப்படும். மற்றும் குழுமம் கருத்துப்பகிர்விற்கு சிறந்த கலமாக அமையும்.

தொடர்பில் இருப்போம்.

Keerthy Jsam

unread,
Nov 25, 2009, 12:40:17 AM11/25/09
to srilankanta...@googlegroups.com
இம்முறையும் அனைத்து பதிவர்களின் அறிமுகமும் அவசியம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலந்தாலோசித்ததில் மூன்று மணித்தியாலங்களாக குறுக்கப்பட்டுள்ள கால அளவிற்குள்ளாகவே அனைத்து நிகழ்வுகளையும் நடாத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பதிவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொள்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டும் உள்ளபடியால் ஏலவே நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதைப் போன்று புதிதாக நிகழ்வில் கலந்து கொள்ளும் பதிவர்களை மாத்திரம் இம்முறை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கின்றோம்.


M.Mauran

unread,
Nov 25, 2009, 4:00:36 AM11/25/09
to srilankantamilbloggers
திரட்டிகளோடு தொடர்புகொள்ளக்கூடியவர்கள் திரட்டிகளில் எங்கள் அறிவித்தல்கள் வரும் படி செய்ய முயற்சியுங்கள். முக்கியமகாத் தமிழ்மணத்தில்.
நன்றி.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/11/25 Keerthy Jsam <keerth...@gmail.com>

Srikaran

unread,
Nov 25, 2009, 4:28:39 AM11/25/09
to srilankanta...@googlegroups.com
ser...@tamilish.com - தமிழிஷ் இன் தொடர்பு மின்னஞ்சல் முகவரி இதுதான். கடந்த தடவை தமிழ்மணத்துடன் வந்தியத்தேவன் தொடர்புகளை மேற்கொண்டார். தமிழ்மணத்தின் மின்னஞ்சல் முகவரியை அவர் இங்கு குறிப்பிடுதல் நன்று.

கடந்த சந்திப்பு தொடர்பாக நான் தமிழிஷ் இற்கு அனுப்பிய மின்னஞ்சலையும், அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் இங்கு இணைக்கின்றேன். நிச்சயமாக இந்தத்தடவையும் ஏற்பாட்டுக்குழுவினர் அவர்களை நாடுமிடத்து, நல்ல பதிலைப் பெற்றுக்கொள்ளலாம் என நம்புகின்றேன்.

வணக்கம்.
எதிர்வரும் 23ஆம் திகதி (23-08-2009) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடாத்துவதற்காக இலங்கை வலைப்பதிவர்கள் தீர்மானித்துள்ளோம். அனைவரினாலும் நாடப்படும் ஒரு திரட்டியென்ற வகையில் தமிழிஸ் இச்சந்திப்பு தொடர்பான அறிவித்தல் ஒன்றினை தங்கள் வலைத்தளத்தின் முன்பக்கத்தில் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. அவ்வாறு செய்யப்படுமிடத்து உலகின் அனைத்துப்பாகங்களிலும் உள்ளவர்கள் இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை பெற வழியேற்படும்.
இச்சந்திப்பு தொடர்பான தகவல்களும், இச்சந்திப்பிற்காக உருவாக்கப்பட்ட லோகோவும் இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன்.
இவ்வறிவித்தலை உங்கள் தளத்தில் பிரசுரிப்பதில் ஏதாவது நடைமுறைச்சிக்கல்கள் இருப்பின், அதனை ஏற்றுக்கொள்கின்றேன்.
நன்றி.


அவர்களின் பதில் மின்னஞ்சல்
அன்புள்ள ஆதிரைக்கு,
வணக்கம். தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி.
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான உங்கள் இடுகைக்கு தமிழிஷின் அனைத்து பக்கங்களிலும் தொடுப்பு கொடுத்து உள்ளோம். நீங்கள் அனுப்பி இருந்த லோகோவில் சிறிது மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளேன். முதல் மூன்று இடுகைகளுக்கு கீழே அதனை நீங்கள் காணலாம். வேறு ஏதும் மாற்றமோ / உதவியோ தேவைப்பட்டால் தயங்காமல் பதில் அனுப்பவும்.
உங்கள் வலைப்பதிவர் சந்திப்பு மிக சிறப்புடன் நடக்க தமிழிஷ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகிறது.
அன்புடன்,
குமார்
For Tamilish.com



2009/11/25 M.Mauran <mma...@gmail.com>

MAthuvathanan Mou.

unread,
Nov 25, 2009, 4:42:18 AM11/25/09
to srilankanta...@googlegroups.com
ஆதிரை,

ஏலவே நீங்கள் அவர்களுக்கு அறிமுகமாகையால் இங்கே குறிப்பிட்டுவிட்டு இம்முறையும் தமிழிஷூடன் தொடர்புகொண்டு செயற்படுத்துங்கள்.

ஏதும் சிக்கலிருக்குமெனின் தெரிவியுங்கள். நானே தொடர்பு கொள்கிறேன்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

2009/11/25 Srikaran <cask...@gmail.com>



--
Mathuvathanan Mou.

Mathuvarman

unread,
Nov 25, 2009, 8:12:31 AM11/25/09
to srilankanta...@googlegroups.com
உங்கள் பதிவுகளிலோ, அழைப்பிதழ்களிலோ, நிகழ்ச்சி நிரல்களிலோ இடத்தை குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிருங்கள்

இடம்: கைலாசபதி கேட்போர் கூடம்
             தேசிய கலை இலக்கியப் பேரவை,
             தலைமைப் பணிமனை
             571/15, காலி வீதி, 
             வெள்ளவத்தை, 
             கொழும்பு-06

குறிப்பு : தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxyதிரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.

ம.து.வ.ர்.ம.ன்

Skandhakumar Nimalaprakasan

unread,
Nov 25, 2009, 1:29:20 PM11/25/09
to srilankanta...@googlegroups.com
வணக்கம்,

உங்கள் வலைப்பதிவுகளில் இணைப்பதற்கு சிறிய அளவிலான தட்டிகள் சிலவும் செய்யப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பெறலாம். - http://projects.techt3.com/files/itps2/
நீங்கள் அங்குள்ள HTML நிரல்துண்டை உங்கள் பதிவில் இணைத்தல் போதுமானது.

திரட்டிகளில் இப்போதிருந்து இணைப்பது தேவையா?

தமிழ்மணம் பரவாயில்லை, ஆனால் விளம்பர வருமானம் மூலம் இயங்கும்(?) தமிழிஷ் திரட்டி சந்திப்பு வரையான இன்னும் இரண்டு வாரங்களுக்கு இணைத்திருப்பது அவர்களுக்கு பாதகமாக(?) அமையலாம். அவ்வாறெனில் கடைசிவாரத்தில் மட்டும் திரட்டிகளில் விளம்பரப்படுத்துவது போதுமானதென்று நான் நினைக்கிறேன். (நான் மட்டும் தானோ இப்பிடி நினக்கிறன்..?)

நன்றி
நிமல்

Mayooran Peri

unread,
Nov 25, 2009, 1:33:39 PM11/25/09
to srilankanta...@googlegroups.com
நீங்கள் நினைப்பது சரி நிமல் 10 நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறிவித்தால் போதும். அதுவரை எங்கள் வலைகளில் விளம்பரப்படுத்துவோம்.

Loshan ARV

unread,
Nov 25, 2009, 1:42:38 PM11/25/09
to srilankanta...@googlegroups.com
நிமல், நன்றி.. இன்றே இணைக்கிறேன்..

ஆமாம்.. இறுதி ஒரு வாரத்தில் மட்டும் இணைப்போம்..
இல்லாவிட்டால் மிதமிஞ்சிய விளம்பரப்படுத்தலாக அமையலாம்..

LOSHAN
http://arvloshan.com/


2009/11/26 Mayooran Peri <mayo...@gmail.com>

Ashokbharan Nalliah Kumaraguruparan

unread,
Nov 25, 2009, 1:43:59 PM11/25/09
to srilankanta...@googlegroups.com
குறுகிய வடிவ படத்தைத் தந்தமைக்கு நன்றிகள்!!!

MAthuvathanan Mou.

unread,
Nov 26, 2009, 1:43:59 AM11/26/09
to srilankanta...@googlegroups.com
வணக்கம்,

தமிழ்10 திரட்டி எங்களுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு எமது நன்றிகள். கீழே அவர்கள் அளித்த பதில் உளது

---------- Forwarded message ----------
From: 
First Nametamil Nanu <tam...@ymail.com>
Date: 2009/11/26
Subject: Re: இலங்கைப் பதிவர் சந்திப்பு 2 ற்கு ஆதரவு வேண்டுகிறோம்....
To: Gopi krishna Kanagalingam <
kanag...@gmail.com>


வணக்கம் திரு .கோபிகிருஷ்ணா
தமிழ் பதிவர்களுக்கு தமிழ்10 .காம் என்றும் உறுதுணையாக இருக்கும் .இலங்கைப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்புக்கு எங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு .நீங்கள் விருப்பினால் உங்கள் சந்திப்பை தமிழ் 10 தளத்திலும் ஒளிபரப்புகிறோம் .(நிகழ்வு தொடர்பான படங்களை dec 2 முதல்  dec 13 வரை பிரசுரிக்கிறோம் ).இலங்கைப்பதிவர் சந்திப்பு சிறப்பான முறையில் நடைபெற தமிழ்10 தளம் சார்பாக வாழ்த்துகிறேன் .

நன்றி 
கிஷோர்
tamil10 .com


From: Gopi krishna Kanagalingam <kanag...@gmail.com>
To: tam...@ymail.com
Sent: Wed, November 25, 2009 10:09:26 PM
Subject: Re: இலங்கைப் பதிவர் சந்திப்பு 2 ற்கு ஆதரவு வேண்டுகிறோம்....

சந்திப்புக்கு ஒரு வாரத்துக்கு முதலிலிருந்து இணைத்தாலே பொதுமானது என்று கருதுகிறோம்....
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறோம்...

2009/11/26 Gopi krishna Kanagalingam <kanag...@gmail.com>
வணக்கம்....
இலங்கைப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் (13-12-2009) திகதி கொழம்பு, வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் மாலை இரண்டு மணிமுதல் இடம்பெறவிருக்கிறது...

திரட்டி என்ற வகையில் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்....
உங்கள் தளத்தின் முகப்பில் இந்த நிகழ்வைப் பற்றி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறோம்....

நிகழ்வு தொடர்பான எங்கள் குழுமத் தகவலுக்கு http://bit.ly/6x9NQe என்ற முகவரிக்குச் சென்று அறியலாம்.

நிகழ்வு தொடர்பான அசையும் படங்களை http://projects.techt3.com/files/itps2/ என்ற முகவரியில் பெறலாம்....

உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.....

-- 
K.Gopi krishna.
----
http://tamilgopi.blogspot.com



-- 
K.Gopi krishna.
----
http://tamilgopi.blogspot.com

க.கோபி கிருஷ்ணா.

unread,
Dec 2, 2009, 10:42:39 AM12/2/09
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்
வணக்கம்...

யாழ்தேவி திரட்டி தங்களது ஆதரவை எங்களுக்கு வழங்கியிருக்கிறது...
இப்போதே எங்கள் சந்திப்புத் தொடர்பான அறிவித்தல் யாழ்தேவியில்
இணைக்கப்பட்டிருக்கிறது.
யாழ்தேவி நண்பர்களுக்கு நன்றிகள்....

இது தொடர்பாக அவர்கள் அளித்த பதில் .......

*****
வணக்கம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா…

இலங்கை பதிவர்களின் 2வது சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற ‘யாழ்தேவி’யின்
வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை பதிவர்களின் சந்திப்பு தொடர்பான அறிவித்தல் அல்லது குறித்த
இலத்திரணியில் அசையும் படம் யாழ்தேவி இணையத்தின் முகப்பு பக்கத்தில்
இன்று (டிசம்பர் 1, 2009) பிற்பகல் முதல் வெளியிடப்படும்.

வேறு ஏதாவது தேவைகள் அல்லது அறிவித்தல்கள் இருந்தால் அறிவிக்கவும்.
யாழ்தேவி, இணைய எழுத்தாளர்களையும், பதிவர்களையும் ஊக்குவிக்க துணை
நிற்பதில் பெருமை கொள்கிறது.

இலங்கை பதிவர்களின் 2வது சந்திப்பு இனிதே நடைபெற ‘யாழ்தேவி’
வாழ்த்துக்களையும், ஒத்துழைப்பையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி,
இப்படிக்கு…
யாழ்தேவி நண்பர்கள்.

M.Mauran

unread,
Dec 2, 2009, 12:12:09 PM12/2/09
to srilankantamilbloggers
நல்ல விடயம். மகிழ்ச்சி. யாழ்தேவிக்கு நன்றிகள்.  இப்படியே மற்றத்திரட்டிகளின் ஆதரவினையும் பெற முடிந்தால் நம்றாக இருக்கும்
--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/12/2 க.கோபி கிருஷ்ணா. <kanag...@gmail.com>

MAthuvathanan Mou.

unread,
Dec 4, 2009, 7:28:21 AM12/4/09
to srilankanta...@googlegroups.com
பதிவர்களே,
சந்திப்பும் நெருக்கிவிட்டது. உங்கள் பதிவுகளில் இதுபற்றிக் கூறி ஏனைய பதிவர்களையும் இயங்குநிலையில் வைத்திருங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

2009/12/2 M.Mauran <mma...@gmail.com>



--
Mathuvathanan Mou.

MAthuvathanan Mou.

unread,
Dec 9, 2009, 7:01:14 AM12/9/09
to srilankanta...@googlegroups.com
தமிழிஷ் திரட்டியும் எங்களுக்கு ஆதரவாக இணையத்தட்டியை நேற்றிலிருந்து தமது முகப்பில் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

2009/12/4 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>



--
Mathuvathanan Mou.

MAthuvathanan Mou.

unread,
Dec 9, 2009, 11:03:50 PM12/9/09
to srilankanta...@googlegroups.com
பத்திரிகைகளில் எமது சந்திப்புப் பற்றிய அறிவித்தல் வருமாறு ஆவன செய்திருக்கின்ற மருதமூரான், வந்தியத்தேவன் அவர்களுக்கும், வானொலிகளில் ஒலிபரப்புச் செய்ய ஆவன செய்யதிருக்கின்ற வரோ, டயானா, லோஷன் அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

--
Mathuvathanan Mou.

MAthuvathanan Mou.

unread,
Dec 11, 2009, 1:05:35 AM12/11/09
to srilankanta...@googlegroups.com
உலவு.காம் www.ulavu.com எங்களது வேண்டுகை இன்றியே சந்திப்புப் பற்றிய தட்டியை தமது முகப்பில் போட்டிருக்கிறார்கள். உலவுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.


-- 
Mathuvathanan Mou.

MAthuvathanan Mou.

unread,
Dec 11, 2009, 1:06:55 AM12/11/09
to srilankanta...@googlegroups.com
எமது சந்திப்புத் தட்டியை முகப்பில் வைத்துள்ள பூச்சரத்திற்கும் http://poosaram.blogspot.com/ எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

2009/12/11 MAthuvathanan Mou. <cowbo...@gmail.com>

உலவு.காம் www.ulavu.com எங்களது வேண்டுகை இன்றியே சந்திப்புப் பற்றிய தட்டியை தமது முகப்பில் போட்டிருக்கிறார்கள். உலவுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.


-- 
Mathuvathanan Mou.



--
Mathuvathanan Mou.
Reply all
Reply to author
Forward
0 new messages