இன்று நான் சகோதரி ராதா ஸ்ரீதரின் சிவம்மா தாயீ ஆலய மூன்றாம் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
மனிஷா
என்னுடைய மூன்றாம் அனுபவம்
எனக்கு சிவம்மா தாய் ஆலயத்தில்
கிடைத்த இரண்டாவது அனுபவத்துக்கு நான் ஒருநாள் ரவா கேசரியை செய்து அதை
பாபாவின் ஆரத்தியின்போது நெய்வித்தியம் செய்து அங்குள்ள பள்ளி
குழந்தைகளுக்கும், முதியோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கும் கொடுக்க
வேண்டும் என எண்ணி இருந்தேன்.
எனக்கு அந்த ஆலய பூசாரியை நன்கு
தெரியும் என்பதினால் அதைப் பற்றி அவரிடம் கூறியதும் அவர் மறுநாள் 12
மணிக்கு நடைபெறும் மதிய ஆரத்தியின்போது அதை எடுத்து வருமாறு கூறினார்.