(Translated into Tamil by Sankarkumar)
அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்து.
தமது அடியாருக்கு முன்னதாகவே ஷீர்டி ஸாயி பாபா தனது திட்டங்களை வகுத்துவிடுகிறார். ஏதோ ஒரு வடிவில் அவர் எப்போதுமே தமது அடியார்களுடனேயே இருக்கிறார். மனித மனம் தனக்குள் என்னதான் திட்டமிட்டாலும், தமது பிள்ளைகளுக்கு எது நல்லதென பாபா அறிந்து, அதனைச் சரியான நேரத்தில் நடத்தியும் வைக்கிறார். இதே போன்ற ஒரு
பக்தரின் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன், ஜெய் ஸாயி ராம்.
மனிஷா
------------------------------------
'ஓம் ஸாயி ராம்'
அன்புள்ள மனிஷா தீதி,
இது எனது முதலாவது மடல். சற்று நீளமாக இருப்பினும், பாபாவிடம் நான் அளித்த உறுதிமொழிக்கிணங்க, இங்கே இதனை நமது அடியவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் ஸாயி பாபாவின் தீவிர பக்தை. பாபவே எனக்கு சகலமும்,... மாதா, பிதா, பந்து, சகா என. கடந்த 6 - 7 ஆண்டுகளாக நானும் எனது குடும்பத்தினரும் பாபாவின் நிழலில் இளைப்பாறி, அவரது ஆசிகளில்
திளைக்கிறோம்.