ஸாயி அடியார் புவிராஜ்
(Translated into Tamil by Dr.Sankarkumar, USA)
ஸாயிராம். அனைவருக்கும் இனிய ஸாயி நாள் வாழ்த்து.
நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் ஸாயி அடியவர்களின் அனுபவங்களைப் பிரசுரிக்கிறேன். ஸாயிபாபா எப்போதும் தன் குழந்தைகளை வழிநடத்தி, நேர் வழியில் அழைத்துச் செல்கிறார். இந்த அனுபவத்தைப் பெற்றவர் திரு. புவிராஜ். தனது அனுபவத்தைப் பகிர்வது மட்டுமின்றி, அன்றாட வாழ்வில் பாபாவின் வழி நடத்துதலைப் பெறுவதற்கான தனது
ஆலோசனைகளையும் திருமதி. புவி;ஜி தெரிவிக்கிறார். ஜெய் ஸாயிராம்.
மனிஷா
அன்பார்ந்த ஸாயி அடியவர்களே,
என் பெயர் புவி ராஜ். அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்திலிருக்கும் ஆல்ஃபரெட்டா என்னும் நகரில் வசிக்கிறேன்.
குறுகிய காலத்துக்குள்ளேயே பாபா என்னை ஆசீர்வதித்த அதிசய அனுபவத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஏற்கெனவே எனது ஷீர்டி அனுபவத்தைப் பற்றிய பதிவு இங்கு வெளியாகியிருக்கிறது.
இந்தத் தளத்தை நடத்துவதற்காகவும், பலரையும்
ஸாயியின்பால் திருப்புவதற்காகவும் நீங்கள் செய்துவரும் முயற்சிகளை வாழ்த்துகிறேன், மனிஷா'ஜி. ஸாயி உங்களை ஆசீர்வதிப்பாராக! எனது அனுபவம்.
பாபாவின் புண்யதிதி விழா
ஸுவானீயில்[ஜார்ஜியா] இருக்கும் பாபா ஆலயத்தில் அவரது 94-வது புண்யதிதி 108 கலஸாபிஷேகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் உபயதார்களுக்கு வீட்டுக்கு ஒரு கலஸம் வீதம் ஒருவர் எடுத்துச் சென்று பாபாவுக்கு அபிஷேகம் செய்யும் புண்ணியம் கிடைத்தது. காலை 5.45 முதல் இரவு 8 மணி வரைக்கும் ஆலயத்திலேயே பாபாவுடன் இருக்கும் அரிய வாய்ப்பு பாபாவால் எனக்குக் கிடைத்தது.