( Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A )
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்து. இந்த தளத்தின் மூலம் ஸாயி என்னும் ஸாகரத்தில் மேலும் ஒரு துளி! பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அன்பர் தனது இளவயது முதல் இன்றுவரை பாபா அவருடன் இருந்து அருள்வதைக் கூறுவதைக் கேட்போம். ஜெய் ஸாயிராம்.
ஓம் ஸாயிராம்
மனிஷா
இந்தத் தளத்தின் மூலம் நான் பகிரும் இரண்டாவது அனுபவம் இது.
கர்மவினைகளின் காரணமாக அவதிப்படும் அடியவர்கள் இந்தத் தளத்தில் பல அடியவர்களும் கூறும் ஸாயி லீலைகளைப் படித்து, ஸாயி எப்போதும் நம்முடனே இருக்கிறார் எனும் நம்பிக்கையைக் கொள்கின்றனர். நானும் அதுபோன்ற ஒரு அடியவளே. அவ்வப்போது என் நம்பிக்கையும் குலைந்து போகும் என்றாலும், நம்மை மிகவும் நேசிக்கும்
பாபாவை விட்டு நம்மால் விலக இயலாது என அறிவேன்.