ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்து!
பெயரிட
விரும்பா ஒரு அடியவரின் அனுபவம் இன்று வெளிவருகிறது. அடியவரின் வாழ்வின்
ஒவ்வொரு கட்டத்திலும் பாபாவின் விசேஷ ஆசிகள் கிடைப்பதை இது விவரிக்கிறது.
ஸாயி மாதா எப்படி தம் அடியவரைக் காத்தருள்கிறார்; எப்படி பாபாவின் ஆலோசனையை
நாம் பெறுவது என்பதையெல்லாம் இது விரிவாகச் சொல்கிறது. ஜெய் ஸாயிராம்.
-- மனிஷா.
-------------------------------
'அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ் பரப்ரம்ம ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்'
[06/09/12 வியாழக்கிழமை]
அன்புள்ள மனிஷா'ஜி,
ஓம் ஸாயிராம்.
இந்த
அருமையான தளத்துக்கும், "ராம் விஜய்" தொடருக்கும், பல்வேறு அன்பர்களின்
அனுபவங்களுக்கும், குறிப்பாக 'வீரேந்த்ர தார்க்கட்' அவர்கள் பகிர்ந்த
அனுபவத்துக்கும் எனது வந்தனங்கள். பாபாவின் நெருங்கிய அடியாராக நீங்கள்
இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். எனது ஒருசில அனுபவங்களை இங்கே
பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது பெயர் முதலிய தகவல்களை வெளியிட வேண்டாம்.
மிகவும் செல்லமான, சுட்டித்தனம் செய்யும் ஒரு குழந்தையாக, அதே
சமயம், அந்தக் குழந்தையின் தவறுகளை மீண்டும் மீண்டும் மன்னித்து, மூடி
மறைத்து, அதைப் பற்றி எப்போதும் பெருமை பாராட்டும் ஒரு தாய்க்குக்
குழந்தையாக இருப்பதுபோல நான் என்னை உணருகிறேன். நம் வாழ்வில் நிகழும்
தெய்வீகச் செயல்கள் அனைத்தையும் விவரிக்க முடியாது. ஒரு சிலர் இவற்றை மூட
நம்பிக்கை எனச் சொல்லலாம் ஆனால், இவற்றை உணர்ந்தவர்க்கு அப்படி தோன்றாது.
என் அனுபவங்களை நான் இங்கே சுருக்கமாகவே தருகிறேன். எவற்றையாவது நான்
மறைத்திருந்தால், எங்கும் நிறை, எல்லாம் அறிந்த ஸாயி என்னை மன்னிக்கட்டும்.