சாய் ராம் !
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்
பாபாவின் பக்தரான சச்சின் அவர்களின் ஷீரடி பாதயாத்திரை அனுபவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.இது ஷீரடிக்கு பாதயாத்திரையாக செல்ல விரும்பும் பக்தர்களுக்கு உதவியாகவும்,ஒரு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.மேலும் இங்கு அவர் அனுபவத்தின் படங்கள் மற்றும் படக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மனிஷா
சாய்ராம்
நான் ஹைதராபாத்திலிருந்து சச்சின் எழுதுகிறேன்.மும்பையிலிருந்து ஷீரடிக்கு பாதயாத்திரையாக சென்ற அனுபவத்தை இங்கே அளித்திருக்கிறேன்.மேலும் இது, பாதயாத்திரையாக செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு எது செய்ய வேண்டும் எது எல்லாம் செய்யக் கூடாது என தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.இதில் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட படங்களையும்
,படக்காட்சிகளையும் கொடுத்துள்ளேன்.நான் கொடுத்துள்ள படங்களையும் இந்த தளத்தில் இணைத்தால் படிக்கும் பக்தர்களுக்கு ஆர்வமாக இருக்கும் என நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
எனது கைபேசி எண்ணையும்,மின்னஞ்சல் முகவரியும் கொடுப்பதால் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் பக்தர்கள் மேலும் பல தவல்களை என்னிடம் நேரிடையாக பெற்றுக் கொள்ளலாம்.எனது கைபேசி எண் 09666682162
விரைவில் எனது அனுபவத்தை படங்களுடன் இந்த தளத்தில் காண்பேன் என நம்புகிறேன்.
சச்சின்
ஷீரடி பாதயாத்திரை - 2012
2010 ம் வருடம் நான் ஷீரடிக்கு சென்றிருந்த போது நாசிக்கிலிருந்து ஷீரடிக்கு சுமார் 100 கிமீ தூரம் பாதயாத்திரையாக பயணம் செய்து வந்த பக்தர்களின் கூட்டத்தை கண்டேன். அதன் பின் மும்பையில் இருந்து ஷீரடிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை பற்றி இணையதளம் ஒன்றில் பார்த்தேன்.அதில் நானும் பங்குக் கொள்ள விரும்பினேன்.ஆனால் நான் ஹைதராபாத்தில் இருப்பதால் மும்பை
பாதயாத்திரை குழுவினருடன் தொடர்பு கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. மேலும் அதை பற்றி போதிய அளவு தகவல்கள் எந்த இணையதளத்திலும் இடம்பெறவில்லை.