Shirdi Sai Baba Stories in Tamil-Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 27

31 views
Skip to first unread message

Sai.Manisha

unread,
Jan 26, 2012, 12:37:34 AM1/26/12
to shirdi-sai-baba...@googlegroups.com




அன்பானவர்களே
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்.
பாபாவின் அன்பானது கடல் போன்றது. அதில் ஆழமாக பயணிப்பவர்கள் பாபாவின் முத்து எனும் ஆசிர்வாதங்களை பெறுகிறார்கள்.நம்பிக்கையும், பொறுமையுமே பாபாவின் ஆசிர்வாதங்களை பெற்று தரும்.ஒவ்வொரு வாரமும் இந்த உலகத்தில் உள்ள சாய் பக்தர்களின் அனுபவத்தை இந்த தளத்தின் மூலம் நாம் அறிந்து வருகிறோம். அனைத்து அனுபவங்களும், பாபா தன் குழந்தைகளின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாட்டிற்கான அடையாளம். பலதரப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு ரூபங்களில் தேவையான தருணங்களில் அவர் அன்பை வெளிபடுத்துவது தான் நம் அனுபவத்தின் தனித்தன்மை.
உறுதியான நம்பிக்கையை பாபாவின் மேல் வைப்பதுடன், அவர் தக்க சமயத்தில் துணை நின்று அருள் புரிவார் என்ற பொறுமையும் இருக்க வேண்டும் என்பதை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளபடுகிற சாய் அனுபவங்கள், அனைத்து பக்தர்களுக்கும் பாபா மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வழியுறுத்துகிறது.
பாபாவின் நான்கு சாய் அனுபவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.சாய் அனுபவங்களையும், அவரின் அழகான படங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு நன்றி. ஜெய் சாய் ராம்.
மனிஷா
--------------------------------------------
அன்புள்ள மனிஷா சகோதரி,
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள். பாபாவுடனான அனுபவங்களைப் படிக்கும் போது நமக்கு ஆத்மா சக்தி பெருகுகின்றது.  நம்முடைய கவலைகளை மறப்பதற்கு அவருடனான அனுபவங்கள் உதவுகின்றன.   உங்கள் இணைய தளத்தில் பாபாவுடனான அனுபவங்களைப் படிக்கும்போதெல்லாம்  பாபா எப்படி தன்னுடைய பக்தர்களுக்கு ஆறுதல் தந்து அவர்களுடைய பிரச்சனைகளுக்கான பதில்களையும் தருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.  நானும் என்னுடைய ஒரு அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  ஜெர்மனியின் பிராங்க்பர்ட் எனும் இடத்தில் உள்ள பாபாவின் படத்தை அனுப்பி உள்ளேன். அதை பிரசுரிக்கவும்.  

பாபாவின் இனிய லீலை 
 

ஒரு வியாழர்  கிழமை என் வீட்டின் அருகிலுள்ள ஷீரடி பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன்.அறிமுகமில்லாத ஒரு சாய் பக்தர் என்னை, மிகவும் விசேஷமான துணி பூஜையை செய்யுமாறு கூறினார்.மேலும் அவர் துணி பூஜை யாக குண்டத்தில் நவதானியங்களை சேர்த்து எரிக்குமாறும், அவ்வாறு செய்தால் அனைத்துவித தோஷங்கள், பித்ரு தோஷங்கள்,தடைகள் மற்றும் பிணிகள் நீங்குமென கூறினார்.  

READ:[MORE]

(Tamil  Translation By Ramya Karthick)
(Uploaded By Santhipriya )


--
Posted By N.R.Jayaraman to Shirdi Sai Baba Stories in Tamil. at 1/20/2012 07:16:00 PM

Sairam 
Baba Guide us all,
At the feet of my Sathguru Sai Baba
Baba's blessing are every where 
Manisha.Rautela.Bisht


Reply all
Reply to author
Forward
0 new messages