அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள். பாபாவின் லீலை ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டே உள்ளது. அதை அனுபவிக்கும் ஒவ்வொரு பக்தரும் தம்முடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் அதுவே பாபாவின் புகழை மேலும் பரப்ப உதவும். இனி இவற்றை படித்து மகிழவும்.
ஜெய் சாயி ராம்
மனிஷா
லீலை 1:
என்னுடைய சங்கடங்கள் அனைத்திலும் பாபா துணை நின்றார்
மனிஷாஜி ,
என்னுடைய வயது 34 . நான் கணவர் மற்றும் சிறு குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றேன். நாங்கள் அனைவருமே பாபாவின் பக்தர்களே. என்னுடைய E Mail id யை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நான் சமீபத்தில்தான் சாயியின் ஒன்பது வார விரதத்தை செய்து முடித்தேன் . அந்த நேரத்தில்தான் எனக்கு பல சங்கடங்கள் நேர்ந்தன. அவை அனைத்தையும் பாபாவே நிவர்த்தி செய்துவந்தார். அதில் ஒன்று அமெரிக்காவில் குடிமகனாகும் பச்சைக் கார்ட் விஷயம்.