சொற்கள் கடுமையாக கூட்டி எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் துணிவில்லை, மெய்ப்புப் பார்ப்பவர்கள் தகுந்த இடங்களில் பிரித்தெழுதினால் படிப்பவருக்கு எளிதாக இருக்கும்.
இதனால் தமிழ்மொழி இருவேறு வகைப்பட்ட தன்றென்றும், உறுதிப்பொருளில் உயர்ந்ததான வீடுபேற்றுக்குரிய தமிழ்நூல்வழக்கே ஆரியத்தமிழ் என்றும், அவ்வீடு பேற்றில், தண்ணியவாய அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் தமிழ்நூல்வழக்கே தண்டமிழ் என்றும் கருதி அப்பாட்டிற் கூறியிருப்பதாகக் கொள்ளவேண்டியதாயிற்று.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஆம் திரு. முகவை இராம்குமார். இதை அலகிட்டு
இணைய உலா வரச் செய்தோருக்கு தமிழன்னை
நன்றி சொல்வாள்.
திரு. அப்பன் ராஜகோபாலன் ஐயா இந்த
திரு. நாராயணையங்காரின் அரிய கட்டுரைகளை
மறுஅச்சு செய்தது மட்டும் அல்லாமல், இணையத்திற்கும்
அளித்துள்ளார்கள். அன்னார் வழங்கியுள்ள தமிழ்க்கொடை போற்றத்தக்கதாகும்.
அண்டகோள விருத்தியுரை எந்த ஆண்டு திரு,
நாராயணையங்கார் அச்சிட்டார்? என அறிய அவா.
திரு. ரா. ராகவையங்கார் எழுதிய உரை
தமிழ் மரபு அறக்கட்டளையில் கிடைக்கும்.
அதன் வெள்ளுரை (plain-text format) திரு, குமரன்
மல்லி தட்டெழுதியுள்ளார் - அவரது வலைப்பதிவொன்றில்.
இரண்டு உரைகளையும் தமிழ் ஆர்வம் கொண்டோர்
ஒப்பிட்டுப் படிக்கலாம்.
-------------
ஆரியத்தமிழ் கொண்டு நம்மாழ்வார் தமிழ்ச்
சங்கத்தில் பொற்கிழி அறுத்த முத்தகச் செய்யுள்
இது. 20-ஆம் நூற்றாண்டின் இரு பெரும் புலவர்கள்
அற்புதமான உரைகண்டு விளக்கியுள்ளார்கள்.
நாராயணையங்கார் ஸ்வாமி ஆரியத்தமிழுக்கும்,
தண்டமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை அழகாக
விளக்கியுள்ளார். ஆரியத்தமிழ் என்பதை
வட இந்தியாவில் தொன்மையாய் இருந்த
தமிழ்-த்ராவிட பாஷை என்று கொள்கிறேன்.
மொழியியல், தொல்லியல் தற்கால ஆய்வுகள்
கூடற்புராணமுடையார் ஆரியத்தமிழ் என்று
போற்றும் நம்மாழ்வார் படைப்புக்கு மிகப் பொருந்தும்.
ஆரியத்தமிழை - உ-ம்: இன்று ஈரான், பாக்கிஸ்தான்
(ஆனால், பண்டை இந்தியா, சிந்து) உள்ள பிராகுவி
போன்ற மொழிகளாகக் கொள்ள வாய்ப்புள்ளது.
வட இந்தியாவின் எழுத்தில்லா ஆரியத்தமிழ்
பாஷைகளை எழுத த்ராவிட லிபியான
கிரந்தம் சாலச் சிறந்தது.
ஸ்ரீ நம்மாழ்வாரின் அகவலில் ஆமா என்னும்
முக்கியமான சொல் இருக்கிறது. அதன்
பொருள் காண இரு புலவர்களும் இடர்ப்பட்டுள்ளனர்
என்று தெரிகிறது. நாராயணையங்கார் அண்டகோள
மெய்ப்பொருள் செய்யுளில்
ஆமா என்பதை “அம் மா” என்றாக்கி, அதற்கு
ஏதுவாக, “பெருமரம்” என்பதைப் பெருமா என்றாக்குகிறார்.
அது தேவையில்லை என கருத இடமுண்டு.
ரா. ரா. ஸ்வாமியோ ஆமா என்பதை ஆமாறு என்று
கொண்டு வியாக்கியானம் செய்கிறார்.
ஆனால், ஆமா (அல்லது ஆமான்) சங்கத் தமிழ்ப்
பொருள் என்ன? ஆரியத்தமிழர் வாழ்ந்த தொல்
கலாச்சாரத்தில் ஆமா உண்டா? அதன் இடம் என்ன?
பிற்காலத்தில் போதிதருமர், சாக்கிய நாயனார்
போன்றோர்களுக்கு முன்னோரான சக வம்மிச
ராஜாக்களின் காசுகளில் ஆமா உண்டா?
அந்தச் சக குலத் தோன்றல் புத்தருக்கும் ஆமாவுக்கும்
யாது தொடர்பு? என்று கண்டால் ஸ்ரீ நம்மாழ்வார்
ஆரியத்தமிழ் அகவல் இன்னும் ஒளிகூடும்
என்று அடியேன் எண்ணுகிறேன். இதற்கான
கட்டுரை ஒன்று எழுதி திருமிகு. அ. ரா. போன்ற
புலவர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க பெரியகடவுள்
துணைவேணும்.
பொங்கல் வாழ்த்து,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2008/01/pongal.html
http://groups.google.com/group/santhavasantham/msg/1439622ff3ff5796