பாரதியின் தேசப்பற்று!

6,050 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Sep 17, 2009, 6:35:10 PM9/17/09
to சந்தவசந்தம்
தினமணி, 11 Sep 2009 கட்டுரை

நிஜம்தானா? பாரதி அன்பர்களே.

நா. கணேசன்

-------------

பாரதியின் தேசப்பற்று!

எஸ்.வி.எஸ். ஜெகஜோதிFirst Published : 11 Sep 2009 12:06:00 AM IST
Last Updated :


இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில்
புதுச்சேரியில் பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் தங்கி இருந்தனர்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய
வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதி.

பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு
கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு
சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது போல் எளிமையாகச்
செய்வதா? அல்லது ஆடை ஆபரணங்களுடன் வசதியாக இருக்கும்படி செய்வதா? என்று
கேட்டார் சிற்பி.

இதைக் கேட்ட பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. ""என் பாரதத் தாயை ஏழை
என்று எப்படிச் சொல்லலாம்? எல்லாச் செல்வங்களும், வளங்களும் என்
பாரதத்தாய்க்கு இருக்கத்தானே செய்கின்றன. தங்கம், வைரம், நெல், கோதுமை
இவையெல்லாம் எங்கள் நாட்டில் விளையவே இல்லையா? என்றுமே வற்றாத
ஜீவநதிகளும், ஆறுகளும் ஓடத்தானே செய்கின்றன. எனவே, என் பாரதத் தாயை
மிகுந்த செல்வச் செழிப்போடும், ஆடை, ஆபரணங்களோடும் இருப்பது போலச்
செய்யுங்கள்'' என்று கர்ஜித்தாராம் பாரதி.

பாரதத் தாயின் மீது பாரதியார் வைத்திருந்த மதிப்பைக் கண்டு பாரதிதாசன்
சிறிது நேரம் மெய்சிலிர்த்துப் போனார். இன்று நாம் காணும் பாரதத் தாய்
பாரதியின் விருப்பப்படியே ஆடை, ஆபரணங்களோடு வடிவமைக்கப்பட்டுக் காட்சி
தருகிறாள்.

வாசலில் வந்து நின்ற குடுகுடுப்பைக்காரன் உடுக்கையடித்து "நாட்டுக்கு
நல்லகாலம் பொறக்குது' என குறி சொன்னதற்காக, தான் அணிந்திருந்த வேட்டியைக்
கூட சிறிதும் யோசிக்காமல் அவிழ்த்துக் கொடுத்த வள்ளல்தான் பாரதி. "என்று
தணியும் இந்த சுதந்திர தாகம்?, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம்!, அச்சமில்லை, அச்சமில்லை என்பன போன்ற பல பாடல்களைப் பாடி,
சோர்ந்து கிடந்த இளைஞர்களையும் எழுந்து உட்கார வைத்து சுதந்திர தாகத்தைத்
தூண்டி அவர்களது மனங்களை உழுதவர் மகாகவி.

வறுமை, தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை கூடவே கைகோர்த்துக் கொண்டே
வந்தபோதும்கூட சுதந்திரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடத்
தயங்காத மாமனிதன். கூனாதே, குனியாதே! என்று தன்னுடன் இருந்த இளைஞர்களைக்
கூட வளைய விடாமல் இருந்து ஒரு ராணுவ வீரனைப் போல நடந்து வந்த
புரட்சியாளன்.

""ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா'' என்று பாப்பா
பாடல்கள் மூலம் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைக் கூடப் பாட்டால் உழுத
விவசாயி.

ஒருமுறை சுதந்திரப் போராட்டத்துக்காக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்
பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார் பாரதி. ""உங்கள் வீரம் செறிந்த
உரைவீச்சு என்னை மிகவும் புத்துணர்ச்சி உடையவனாக்கி விட்டது. தங்களுக்கு
ஏதேனும் பலகாரம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு என்ன பலகாரம்
வேண்டும்?'' என்றார் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர். அதற்கு பாரதியோ,
""எனக்கு வீரப் பலகாரம்தான் வேண்டும்'' என்றார்.

அது என்ன வீரப் பலகாரம்? இதுவரை அப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே
இல்லையே! என்று குழம்பி அவரிடமே அதற்கான விளக்கத்தைக் கேட்டார். ""பஜ்ஜி,
மெதுவடை, இட்லி இதெல்லாம் கோழைப் பலகாரங்கள்.

பக்கோடா, காராபூந்தி, முறுக்கு இதெல்லாம்தான் வீரப் பலகாரங்கள்.
வாய்க்குள் இவற்றைப் போட்டதும் ""நொறுக்கு, நொறுக்கு'' என்றும் ""கடக்கு,
முடக்கு'' என்றும் பல்லுக்கு வீரமான வேலை கொடுக்கும். அதனால் தான் இவற்றை
வீரப் பலகாரம் என்று சொன்னேன். வெள்ளைக்காரனை நம் நாட்டைவிட்டே ஓட, ஓட
விரட்டுறதுக்கு வீரம் தானே அவசியம்'' என்றாராம் பாரதி.

ஒருமுறை ராஜாஜி வீட்டில் அண்ணல் காந்தியடிகள் தங்கி இருந்தபோது, அவரது
அறைக்குள் தலைப் பாகையுடன் கோட்டும் அணிந்து நிமிர்ந்த நடையுடன் அண்ணலின்
அருகில் சென்று அமர்ந்தார் பாரதி. ""இன்று மாலை திருவல்லிக்கேணி
கடற்கரையில் சுதந்திரப் போராட்டப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசப் போகிறேன்.
நீங்கள் தலைமை தாங்க வர முடியுமா?'' என்று கேட்டார் பாரதி. ""இன்று
எனக்கு வேறொரு இடத்தில் கூட்டம் இருக்கிறது. நாளை வேண்டுமானால்
வருகிறேன்'' என்றார் காந்தி.

""எனது நிகழ்ச்சியை உங்களுக்காக நான் மாற்றிக் கொள்ள முடியாது. நான்
வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் பாரதி.

கூட்டத்துக்கு வரச் சொன்ன அந்த வித்தியாசமான மனிதர் யாரென்று காந்தி,
ராஜாஜியிடம் கேட்டபோது, அவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்றாராம்.
வியப்பில் ஆழ்ந்த காந்தியடிகளோ, ""இந்த மாமனிதரை பத்திரமாகப் பாதுகாத்து
வாருங்கள்'' என்றாராம்.

நம் நாடு, நம் தேசம் என்றே வாழ்ந்து எழுத்துகளாலும், பாடல்களாலும்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மகத்தான மாமனிதர் பாரதியின் நினைவு
தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம்!

கடைசிச் சொட்டு ஈரப்பசை இருக்கும் வரை மரங்கள் மலர்களைத் தருவது போல
நாமும் பாரதி புகழ் பரப்புவோம்! வாருங்கள்!

srinivasan s

unread,
Sep 17, 2009, 8:41:53 PM9/17/09
to santhav...@googlegroups.com
மிக நன்றி, இந்த கட்டுரையை இங்கிட்டதற்கு. பாரதத் தாயை எல்லாச் செல்வங்களும் உடையவளாக வடிக்கச் செய்தவர் தம்மை வறுமையிலேயே வைத்திருந்தது ஒர் இணயற்ற பண்பு. முற்காலத்தில் பெரியோர்கள் வாழ்ந்தது இப்படித்தான்.
திரு வேதாந்த தேசிகன் என்ற ஆசாரியர், அடுத்த நாளைக்கென்று கூட சம்பாதித்து வைத்ததில்லை. பண்டைக்கால அந்தணர்கள் வாழ்ந்த முறை அதுவே. மறுநாளைக்கென்று சொத்து சேர்க்கக் கூடாதென்பது சாத்திர விதி.  அவ்வாறே அவர்கள் வாழ்ந்தார்கள். இந்த பழக்கம் மாறியது, அரசர்கள்  அந்தணர்களுக்கு நிலம் வழங்கி கெளரவித்த போது. எத்தனையோ அந்தணர்கள் அத்தகைய அன்பளிப்புகளை ஏற்காமலேயே இருந்து, வேதத்தை பாராயணம் செய்வதிலும் சீடர்களுக்கு அதைச் சொல்லிக்கொடுப்பதிலுமேயே தம் வாழ்வைச் செலவிட்டனர். அடுத்த வேளைக்காக சொத்து சேர்த்ததில்லை. அந்த வழக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது. இப்போது உண்மையான அந்தணர்களைக் கண்டுபிடிப்பது துர்லபம்.
ஆனால், பாரதியார் அப்படி வாழ்ந்தார் என்பதை நினைத்தாலே மயிர் சிலிர்க்கிறது. அவர் உண்மையிலேயே பூரண்மான அந்தணர் என்பதில் ஐயமில்லை.
அவரது எளிமையையும் மற்றவர்க்கு உதவும் பண்பையும் நினைவு கூர வைத்தற்கு மிக்க நன்றி.
 
அன்புடன்
அன்பில் சினிவாசன்

 

SUBBAIER RAMASAMI

unread,
Sep 17, 2009, 10:03:17 PM9/17/09
to santhav...@googlegroups.com
1-

பாரதமாதா  சிலை பற்றிப் பலகதைகள் வந்துவிட்டன. ஆனால் உண்மைக்கு மிக நெருங்கிய வரலாற்றில் வ.வே.சு அய்யருக்கும்  பாரதிக்கும் இடையே நடந்த உரையாடல் அது.  அந்தச் சில்லை பாண்டிச்சேரி அரசினர் பூங்காவில் முன்னாள அமைச்சர் வ. சுப்பையா அவர்களால் நிறுவப்பட்டதாக அவரே எழுதியிருக்கிறா  (தாமரை- பாரதி நூற்றாண்டு மலர்)

 

முறுக்கு  கதை - நான் கேள்விப்பட்டதில்லை. அது உண்மையென்று எனக்குப் படவில்லை.

 

இராஜாஜி வீட்டில் காந்தியடிகளைச் சந்தித்தது உண்மை.  ஆனால் அதைப்பற்றிய விவரங்கள்தான் சரியில்லை.  வ.ரா எழுதியிருப்பதை விட அரவிந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த அமிர்தா இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியிருப்பதில் உண்மை அதிகமிருக்கிறது. மஹாத்மாவின் முன்னிலையில் பாரதியைச் சந்தித்த செய்தியை இராஜஜி எழுதியிருக்கிறார். நறுக்குத் தெறித்தாற்போல “ஒரு முறை மகாத்மாவின் முன்னிலையில்..” என்று மட்டும் எழுதியிருக்கிறார். இராஜாஜி நிச்சயம் மஹாகவி என்ற சொல்லை அப்பொழுது பயன்படுத்தியிருக்க மாட்டார். இந்த மஹாகவி விவகாரமெல்லாம் பின்னால் வந்தவை. அதற்கு முன்னாலே அவரை இனம்கண்டு கொண்டவர்களில் முக்கியமானவர்கள் வ.வேசு ஐயரும், நெல்லையப்பபிள்ளையும் ,சுப்பிரமணிய பாரதியாரும் தான். ஆம் பாரதி தன்னையே சரியாக இனம்கண்டு கொண்டவர். அப்படி இனம் கண்டுகொண்டதனாலேயே பல மனவேதனைகளுக்கு

உள்ளானவர்.

 

“வறுமை, தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை கூடவே கைகோர்த்துக் கொண்டே”என்று சொல்வது கூடச் சரியில்லை. பாரதி நல்லகோட்டு அணிந்திருப்பதைக் கூடப் பொறுக்காதவர்கள் அவருக்குக் கிழிந்த கோட்டை அணிந்து அழகு பார்க்கிறார்கள். பூ வைத்துக்கொள்ள ஊசி வைத்திருந்தால் அது கிழிசலை மறைக்க வைத்திருந்ததாக எழுதுபவர்களுமுண்டு.

பாரதியின் வறுமை ஓரளவுக்கு உண்மை. ஆனால் வாழ்நாளெல்லாம் அவர் வறுமையில் வாடவில்லை. அவருடைய தாராள குணத்தால் அவர் வறுமையைத் தேடிக்கொண்டார் அவருக்கு இலட்சம் ரூபாய் எவரேனும் கொடுத்திருந்தால்கூட அவர் வறுமையை வரவழைத்துக்கொண்டிருப்பார்.  

 

இலந்தை



Hari Krishnan

unread,
Sep 18, 2009, 12:43:43 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

1-

பாரதமாதா  சிலை பற்றிப் பலகதைகள் வந்துவிட்டன. ஆனால் உண்மைக்கு மிக நெருங்கிய வரலாற்றில் வ.வே.சு அய்யருக்கும்  பாரதிக்கும் இடையே நடந்த உரையாடல் அது.  அந்தச் சில்லை பாண்டிச்சேரி அரசினர் பூங்காவில் முன்னாள அமைச்சர் வ. சுப்பையா அவர்களால் நிறுவப்பட்டதாக அவரே எழுதியிருக்கிறா  (தாமரை- பாரதி நூற்றாண்டு மலர்)

 

முறுக்கு  கதை - நான் கேள்விப்பட்டதில்லை. அது உண்மையென்று எனக்குப் படவில்லை.

 
வீர பலகாரம் கதை மிகப் பழைய ஒன்று.  உங்களுக்கு மறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  ஒருமுறை சைதாப்பேட்டையில் (பாரதி கவிதைகளைப் படிப்பதோ, விமரிசிப்பதோ என்னவோ ஒன்று செய்வாம்...நினைவில்லை) சுராஜ் கணபதி தேசிய உயர்நிலைப் பள்ளியில் இதைப் படித்துக் காட்டினார்.  வழக்கம்போல உச்சு உச்சு எல்லாம் கொட்டினார்.  நீங்களும் நானும் இருந்தோம்.  பிறகு வீடு திரும்பும்போது இதெல்லாம் பெரிய சுத்தல் என்று பேசிக்கொண்டே திரும்பினோம்.  இதைப் படித்த பிறகு ஒருவேளை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். :-)
 
கண்சிமிட்டும் நேரத்தில் பாரதமாதா தரிசனத்தைக் காட்டிய நிவேதிதா தேவியைப் பற்றி ஒருவர் ‘பாரதியின் முன்னால் நிவேதிதா விரலால் சொடுக்குப் போட்டார்... போட்ட மறுகணமே பாரததேவி பாரதி கண்ணுக்கு முன்னால் தரிசனம் தந்தாள்’ என்றெல்லாம் எழுதியிருந்தார்.  சுராஜ் இந்த இரண்டையும் அன்று ஒன்றாகப் படித்து உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.  இப்போது நினைவுக்கு வருகிறதா? அனேகமாக 1978-80ல் நடந்திருக்குமோ என்னவோ..நினைவில்லை.  ஆனால் நீங்களும் நானும் பேசியபடி தில்லை கங்காநகர் இரண்டாம் மெயின்ரோடில் நடந்தது நினைவிருக்கிறது. 
 
 
அடுத்ததாக.  பாரதியின் வறுமை என்பது சும்மனாச்சுக்கும் உலையில் ஊதி உலகக் கனல் வளர்ப்பாள் போலத்தான் வளர்த்துவிடப்பட்டிருக்கிறது.  பாரதிக்கு தென்னாப்பிரிகாவிலிருந்து 1000 ரூபாய் (1915 வாக்கில்) வந்திருந்ததையும், அதை ஒரு பைசாகூட மிச்சம் வைத்துக்கொள்ளாமல் உடனடியாக காலி பண்ணியதையும் பற்றி படித்திருக்கலாம்.  ஆகவே, பாரதிக்கு வவேசு ஐயர் அளவுக்கு பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது மட்டும்தான் உண்மை.  வறுமை என்பதெல்லாம் அவ்வப்போது வந்து போனதாகத்தான் இருக்க முடியும்.
 
அப்புறம் இன்னொன்று.  என்னைக் கேட்கவில்லை என்றாலும், பொதுவில் கேட்டுவிட்ட காரணத்தால் இதைச் சொல்கிறேன்.  அது தவிர மேற்படி கட்டுரையிலும் பாரதமாதா சிலை என்று சொல்லி, சிற்பியை வரவழைத்த கதையைச் சொல்லி எல்லாம் செய்திருப்பதால் இதைச் சொல்கிறேன். அது சிலையாக இருந்திருக்க வாய்ப்பில்லை.  மண் பதுமை.  அதன் படத்தை இணைத்திருக்கிறேன்.  பாரதிதாசன் பார்வையில் பாரதி என்று டாக்டர் ச சு இளங்கோவன் எழுதிய புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது.  நீங்கள் சொல்லியிருக்கும் பாரதமாதா வடிவத்துக்கும் இதற்கும் பொருந்தி வரவில்லை.  ஆனால், இதைச் செய்யும்போதுதான் பாரதி நீங்கள் சொல்லியிருப்பதுபோல் ‘சர்வாலங்காரபூஷிதையாக இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பதுமைக்குள்தான் கைத்துப்பாக்கிகளைப் பதுக்கி எடுத்துச் சென்று வினியோகிக்கச் சொல்லி பாரதிதாசனிடம் பாரதி கொடுப்பாராம்.  (இதைப் பற்றி என்னுடைய வெடிக்காய் வியாபாரம் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.) 
 
புத்தககத்தில் பதுமையின் படம் தரப்பட்டுள்ளது.  பாரதிதாசன் நடத்திய கவிதாமண்டம் பத்திரிகையில், பாரதிதாசனே வெளியிட்ட படத்தின் படம்.   கைத்துப்பாக்கியைப் பதுக்கி எடுத்துச் சென்றிருந்தால், அதற்கான hollow அல்லது chamber இதுதான் என்றும் படம் வெளியிட்டிருந்திருக்கலாம் இல்லையா?  பதுமை இருப்பது உண்மைதான்; பதுக்கி எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுவது......சொல்லப்படுவதுதான் என்று சொல்லிவிடலாம்.  படத்தையும், இந்தப் பதுமையைச் செய்தவரிடம் பாரதி சொன்னவற்றைப் பற்றிய குறிப்புகளையும் புத்தகத்திலிருந்து புகைப்படமாக இணைத்திருக்கிறேன்.
 
புதுச்சேரியில் அப்படி ஒரு சிலை இருக்கிறதா என்பதை தியாகராஜன் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
 
--
அன்புடன்,
ஹரிகி.
Bharati Bharata Matha (1).JPG
Bharati Bharata Matha (2).JPG
Bharati Bharata Matha (3).JPG
Bharati Bharata Matha (4).JPG

Hari Krishnan

unread,
Sep 18, 2009, 12:57:05 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>


பாரதிதாசன் பார்வையில் பாரதி என்று டாக்டர் ச சு இளங்கோவன் எழுதிய புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது.  நீங்கள் சொல்லியிருக்கும் பாரதமாதா வடிவத்துக்கும் இதற்கும் பொருந்தி வரவில்லை.  ஆனால், இதைச் செய்யும்போதுதான் பாரதி நீங்கள் சொல்லியிருப்பதுபோல் ‘சர்வாலங்காரபூஷிதையாக இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பதுமைக்குள்தான் கைத்துப்பாக்கிகளைப் பதுக்கி எடுத்துச் சென்று வினியோகிக்கச் சொல்லி பாரதிதாசனிடம் பாரதி கொடுப்பாராம்.  (இதைப் பற்றி என்னுடைய வெடிக்காய் வியாபாரம் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.) 
 


 
பொருந்தி வருகிறது.  பாரதமாதா இடதுகையை கன்னத்துக்கு முட்டுக் கொடுத்தபடி காட்சியளிப்பதைப் படத்தில் பார்க்கலாம்.
 
மண்பதுமையைத்தான் சிற்பமாக மாற்றினார்கள் என்றால், குயவனாரை சிற்பியாக மாற்றி, படுநேர்த்தியாகப் படங்காட்டியிருக்கிறார்கள் :-))
 
டாக்டர் இளங்கோவனுடைய குறிப்பும் திருலோக சீதாராம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான்.  (துப்பாக்கி விஷயம் இல்லை.  பொம்மை விஷயம்.)

Hari Krishnan

unread,
Sep 18, 2009, 2:11:20 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>



2009/9/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

1-

பாரதமாதா  சிலை பற்றிப் பலகதைகள் வந்துவிட்டன. ஆனால் உண்மைக்கு மிக நெருங்கிய வரலாற்றில் வ.வே.சு அய்யருக்கும்  பாரதிக்கும் இடையே நடந்த உரையாடல் அது.  அந்தச் சில்லை பாண்டிச்சேரி அரசினர் பூங்காவில் முன்னாள அமைச்சர் வ. சுப்பையா அவர்களால் நிறுவப்பட்டதாக அவரே எழுதியிருக்கிறா  (தாமரை- பாரதி நூற்றாண்டு மலர்)

 
 

I missed the important note in your mail. திருலோக சீதாராம் எழுதிய புத்தகம் உங்களிடம் இருக்கிறது என்ற நினைத்தேன்.  தாமரை பாரதி நூற்றாண்டு மலரிலிருந்து பெற்ற குறிப்பின் அடிப்படையில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் என்றால், டாக்டர் ச சு இளங்கோவன் அவர்களுடைய புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது திருலோக சீதாராம் எழுதிய புத்தகத்தில் வந்திருக்கும் நேரடிக் குறிப்பின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது. வவேசு ஐயருக்கும் பாரதிக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆனால் வெகு தெளிவாக குயவனார்என்பதும், புதுவை குயவர் பாளையத்தில்நடைபெற்ற உரையாடல் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ன. எனவே, தாமரை கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள (பாண்டிச்சேரி அரசினர் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள பாரதமாதா சிலை) விஷயம் கற்பனை என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் தியாகராஜன் இதுகுறித்து சொல்லப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


 

SUBBAIER RAMASAMI

unread,
Sep 18, 2009, 6:00:53 AM9/18/09
to santhav...@googlegroups.com
பாரதமாதா சிலை சுதையால் ஆனதுதான். அதைப்பர்றி வ. சுப்பைய்யா எழுதியுள்ள கட்டுரை

இதைப் பற்றிப் புதுவையில் அமைச்சராக இருந்த பெரியவர் வா. சுப்பையா எழுதியுள்ளார்

பாரத நாட்டூக்கு ஓர்  அன்னை வடிவம் அளித்து அதை வடித்திடச் செய்து அதற்கு பாரதமாதா என்று பெயர் சூட்டிப் பெருமை ்தந்தவர் பாரதி என்பதை தமிழ் மக்கள் அறிவது அவசியம்.

புதுவையிலிருந்தபோதுபாரதியும் வ.வே.சுவும் ஒருநாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்றூ எண்ணினார்கள். அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஸ் என்பவர் பிரஞ்சுக் கல்லூரியில் ஆசிரியராய் இருந்தார். அவரைச் சந்த்தித்துபாரத மாதாவின் உருவப்படமொன்று வரைய வேண்டும். அதன் அமைப்புகள் எப்படியிருக்கவேண்டுமென்று விவாதித்தார்கள்.பாரத மாதா, இந்தியாவின் நில அமைப்பு அப்படியே பாரத தேவியின் உருவாகக் காட்சியளிக்க வேண்டும்என்றனர். அவரும் அப்படியே வரைந்து தலைமேல் ஒரு தங்கக் கிரீடம்.வைத்தார்

பாரத மாதாவின் உருவ அமைப்பைப்பற்றி வ.வே.சுவும் பாரதியும் விவாதித்த போது ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. வ.வே. சு பாரத மாதாவுக்கு ஆபரணங்கள் வேண்டாம்.. வெள்ளையன் நாட்டைக் கொள்ளை கொண்டு வறுமை நிலையில்  வைத்துள்ளான்” என்றார்.. பாரதி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு”இல்லை நமது நாட்டில் இன்னும் செல்வங்கள் ஏராளமாக உள்ளனனவே பாரதமாதா சர்வவாங்கார பூஷிதையாகவே காட்சிதரவேண்டும்” என்றார். அதன் படி படத்தில் திருத்தங்கள் செய்து நகைகள் அணிவிக்கப்பட்டன.

 

பின் இதை மண்ணில் சிலையாக உரிய வண்ணங்களோடு வடித்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.அக்காலத்தில் புதுவையில் குயவர் பாளையம் என்ற ஊரில் பொம்மைகள் செய்வதில் சிறந்த கலலஞர்கள் இருந்தார்கள்.அவர்கள் வடித்தெடுக்கும் பொம்மைகள் எழில் மிகுந்தவை. வெளிநாடுகளுக்கு அப்போது எடுத்துச் செல்லுவார்கள். ஓவியக்காரர் பேத்ரீஸ் அவர்கள் எழுதிய பாரத மாதாவின் ஓவியத்தைப் போல களிப்பு மண்ணினால் சிலையை வடித்து, வண்ணங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். குயவர்பாளையம் சிற்பக் கலைஞர்கள் சிறிதும் பெரியதுமாக இரு அளவுகளில் செய்தார்கள்.. அதில் பெரிய அளவிலுள்ள ஒன்றுரு இப்போது அரசின் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

நான் அமைச்சராக இருந்தபோதுதான் இந்தச் சிலை அரசுப்பூங்காவில் தனியிடம் ஒதுக்கி நிறுவப்பட்டது. அதற்கொரு சிறு விழாவும் நடத்தப்பட்டது. “

இந்தச் சிலையில் பாரத மாதா கல்களில் விலங்கிட்ட நிலையில் காட்சியளிக்கிள்ர். அவளது வலதுகரம் முகவாய்க் கட்டையில் ஊன்றிய நிலையில் உள்ளது. பாரதியின் யோசனையின் பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. “என் அன்னை சிந்தனையில் இருக்கிறாள்” என்பதே பாரதி இதற்குக் கூறியுள்ள விளக்கம்.’

Pas Pasupathy

unread,
Sep 18, 2009, 8:24:59 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/17 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

இராஜாஜி வீட்டில் காந்தியடிகளைச் சந்தித்தது உண்மை.  ஆனால் அதைப்பற்றிய விவரங்கள்தான் சரியில்லை.  வ.ரா எழுதியிருப்பதை விட அரவிந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த அமிர்தா இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியிருப்பதில் உண்மை அதிகமிருக்கிறது. மஹாத்மாவின் முன்னிலையில் பாரதியைச் சந்தித்த செய்தியை இராஜஜி எழுதியிருக்கிறார். நறுக்குத் தெறித்தாற்போல “ஒரு முறை மகாத்மாவின் முன்னிலையில்..” என்று மட்டும் எழுதியிருக்கிறார். இராஜாஜி நிச்சயம் மஹாகவி என்ற சொல்லை அப்பொழுது பயன்படுத்தியிருக்க மாட்டார்.

ரா.அ.பத்மநாபன் : 'சித்திர பாரதி' யிலிருந்து;
 
ராஜாஜி சொன்னது; " இவர் எங்கள் தமிழ்நாட்டுத் தேசீயக் கவி" .
 
காந்தி, பாரதி சந்திப்பை வ.ரா, இராஜாஜி உறுதிப் படுத்தியதாக ரா.அ.ப சொல்கிறார்.
 
உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்திருக்க வேண்டும் என்பது என்  கருத்து. அதை ஆங்கிலத்தில் யாராவது எழுதி இருந்தால், நன்றாக authentic - ஆக இருந்திருக்கும். ராஜாஜி , ' He is a great poet of Tamil Nad' என்று சொல்லியிருந்தாலும் , அது இயல்பாகத் தான் எனக்குத் தோன்றுகிறது; அதைத் தமிழில் 'மஹாகவி' என்று ஒருவர் மொழிபெயர்த்தால் ? :-))
 
மற்றபடி, 'சித்திர பாரதி'யில் இருப்பது போல், பாரதி, 'என்ன ஓய்' என்று வ.ராவை விளிப்பதும், 'மிஸ்டர் காந்தி' என்று பேசுவதும்
நம்பக் கூடியதாகவே இருக்கிறது.
 


பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

Hari Krishnan

unread,
Sep 18, 2009, 9:44:55 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/18 Pas Pasupathy pas.pa...@gmail.com



 
 
உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்திருக்க வேண்டும் என்பது என்  கருத்து. அதை ஆங்கிலத்தில் யாராவது எழுதி இருந்தால், நன்றாக authentic - ஆக இருந்திருக்கும். ராஜாஜி , ' He is a great poet of Tamil Nad' என்று சொல்லியிருந்தாலும் , அது இயல்பாகத் தான் எனக்குத் தோன்றுகிறது; அதைத் தமிழில் 'மஹாகவி' என்று ஒருவர் மொழிபெயர்த்தால் ? :-))
 
நீங்கள் சொல்வது பொருள் செறிந்த ஒன்று.  இருவரும் உண்மையில் என்ன உரையாடினார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.  ஏனெனில், வரா எழுதியபோது, பாரதி இறந்து 25 ஆண்டுகள் கடந்திருந்தன.   பத்மநாபன் எழுதத் தொடங்கியபோது பாரதி இறந்து 50 ஆண்டுகள் கழிந்திருந்தன.  வரா இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தார் என்றாலும், அவரும் நினைவுக் குறிப்பின் அடிப்படையில்தான் சொல்லியிருக்கிறார் என்பது வெளிப்படை.  வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அவர்களுடைய உரையாடலாக எடுத்துக் கொள்ள இயலாத ஒன்று.
 
 
மற்றபடி, 'சித்திர பாரதி'யில் இருப்பது போல், பாரதி, 'என்ன ஓய்' என்று வ.ராவை விளிப்பதும், 'மிஸ்டர் காந்தி' என்று பேசுவதும்
நம்பக் கூடியதாகவே இருக்கிறது.
 
ஆமாம். ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால், பத்மநாபன் தீட்டியிருக்கும் சித்திரங்களிலும் காட்சிகளிலும் தற்கருத்தேற்றமும், மிகை நவிற்சியும் அதிகம்.  இப்படிச் செய்திருப்பதால் உண்டான கவனப் பிசகு எப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதைத்தான் என்னுடைய ஓடிப்போனானா தொடரில் குறிப்பிட்டிருந்தேன்.
 
உரையாடல் நடை படிப்பதற்குச் சுவையானது.  ஆனால், படிக்கிறவனுக்கு ‘இது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பாரதியால் பேசப்பட்டது’ என்ற உணர்வை ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.  ஆகவேதான் நான் பெரும்பாலும் இந்த நடையைத் தவிர்க்கிறேன். 

Raja.Tyagarajan

unread,
Sep 18, 2009, 9:53:03 AM9/18/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையார், ஹரியண்ணா, பேரா.பசுபதி அவர்கட்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இப்படிப்பட்ட சிலை பாரதிப் பூங்காவில் இல்லை.  ஆனால் அரசின் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது (botanical garden).  இதைப்பற்றிய விவரங்களை தமிழ்மாமணி மன்னர் மன்னனிடமும், பாவேந்தரின் பெயரன் கலைமாமணி கோ.பாரதியிடமும் தொடர்புகொண்டு கேட்டதில் எனக்குக் கிடைத்த விவரங்கள்:
 
(1) பாரதமாதா கற்சிலை வடிவம் இல்லை.
 
(2) சா.சு. இளங்கோவன் அவர்களுக்கு கிடைத்த பெரும்பான்மையான தகவல்கள் திரு மன்னர் மன்னனிடம் இருக்கும் கோப்புகளிலிருந்து (சுதை உருவம்)
 
(3) இப்போது தாவரவியல் பூங்காவில் இருக்கும் பாரதமாதா சுதை உருவம் பாரதி விரும்பிய வடிவமேயன்றி அதன் மூலம் அல்ல.
 
(4) பாரதி விரும்பிய, சொல்லிய வடிவம் கைவிலங்குடன் இருப்பது அல்ல.
 
(5) பாரதி விரும்பி, சொல்லி செய்த மூல வடிவம், இப்போதும் பாவேந்தர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது.
 
(6) துப்பாக்கி விஷயம் நிச்சயம் உண்மையென்றும், அதை எடுத்துச் சென்றவர் பாவேந்தர் என்றும் மன்னர்மன்னன் உறுதி செய்கிறார்.
 
(7) செய்யப்பட்ட சுதை சிலைகள் ஒன்றல்ல என்றும் மன்னர் மன்னன் கூறுகிறார்.
 
(8) இதைப்பற்றிய விவரங்கள் ஒரு வரலாற்று செய்தித் தொடராக திரு கோ.பாரதியவர்கள் தமது புத்தகம் ஒன்றில் தந்திருக்கிறார்.
புத்தகத்தின் பக்கங்களை படியெடுத்து விரைவில் அனுப்பித் தருகிறேன்.
 
இவண் அன்பன்
இராஜ.தியாகராஜன்

Hari Krishnan

unread,
Sep 18, 2009, 11:00:49 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/18 Raja.Tyagarajan thia...@dataone.in

(1) பாரதமாதா கற்சிலை வடிவம் இல்லை.
 
(2) சா.சு. இளங்கோவன் அவர்களுக்கு கிடைத்த பெரும்பான்மையான தகவல்கள் திரு மன்னர் மன்னனிடம் இருக்கும் கோப்புகளிலிருந்து (சுதை உருவம்)
 
(3) இப்போது தாவரவியல் பூங்காவில் இருக்கும் பாரதமாதா சுதை உருவம் பாரதி விரும்பிய வடிவமேயன்றி அதன் மூலம் அல்ல.
 
(4) பாரதி விரும்பிய, சொல்லிய வடிவம் கைவிலங்குடன் இருப்பது அல்ல.
 
(5) பாரதி விரும்பி, சொல்லி செய்த மூல வடிவம், இப்போதும் பாவேந்தர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது.
 
(6) துப்பாக்கி விஷயம் நிச்சயம் உண்மையென்றும், அதை எடுத்துச் சென்றவர் பாவேந்தர் என்றும் மன்னர்மன்னன் உறுதி செய்கிறார்.
 
(7) செய்யப்பட்ட சுதை சிலைகள் ஒன்றல்ல என்றும் மன்னர் மன்னன் கூறுகிறார்.
 
(8) இதைப்பற்றிய விவரங்கள் ஒரு வரலாற்று செய்தித் தொடராக திரு கோ.பாரதியவர்கள் தமது புத்தகம் ஒன்றில் தந்திருக்கிறார்.
புத்தகத்தின் பக்கங்களை படியெடுத்து விரைவில் அனுப்பித் தருகிறேன்.
 
 
மிக்க நன்றி தியாகராஜன்.  அன்புக்கும் உடனடி பதிலுக்கும் கடன்பட்டுள்ளேன்.  துப்பாக்கி விஷயத்தில் மன்னர்மன்னனுடைய கருத்துக்கு மாறான கருத்துகளும் இருக்கின்றன.  அதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. அவர் கருத்தை அவர் சொல்லட்டும்.  His views are to be respected.
 
ஆனால், பாரதியே தன்னைப்பற்றிய தவறான செய்தியைச் சொல்லியிருந்தாலும், நடுவுநிலையில் நிற்கும் ஆய்வாளன் அதிலுள்ள தவறைக் கண்டறிந்து சரிசெய்யவேண்டியது அவன் கடன்.  எடுத்துக் காட்டாக,
 
மதனன் செய்யு மயக்க மொருவயின்
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்
இதனிற் பன்னிரண் டாட்டை இளைஞனுக்கு
கென்னை வேண்டு மிடர்க்குறு சூழ்ச்சிதான்
 
என்று தன்வராலாறு பேசுகையில், திருமணம் நடந்தபோது தனக்குப் பன்னிரண்டு வயது என்று குறிப்பிட்டிருக்கிறான்.  ஆனால் திருமணம் நடந்தது 1897 ஜூன் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.  அதாவது பாரதிக்கு 15 வயதில்.  இந்த விஷயத்தில் நான் பாரதியைக் காட்டிலும் ஆய்வு முடிவுகளையே நம்புவேன்.   ஒவ்வொரு கேள்வியையும் அதனதன் இடத்தில் வைத்து, தர்க்க நியாயங்களால் அலகிட்ட பின்னரே ஏற்கவேண்டும் என்பது என் எண்ணம். 
 
நீங்கள் இந்த விஷயத்தில் ஒரு பாலமாகச் செயல்படுவது குறித்து மகிழ்ச்சியே.  அவருடைய கருத்துகளையும் மற்றவருடைய கருத்துகளையும் சொல்லுங்கள்.  கேட்பதற்குச் செவிகள் காத்துக் கிடக்கின்றன. 
 
உங்களுடைய மடல் மூலமாக, ‘பாரதியின் சொற்படி செய்யப்பட்ட சிற்பம்தான் நிறுவப்பட்டுள்ளது’ என்று (கணேசன் அனுப்பியுள்ள கட்டுரை) சொல்லப்படுவது வலுவாக மறுக்கப்பட்டிருக்கிறது.  பாரத மாதா பதுமைகள் நிறைய செய்யப்பட்டன என்ற தகவலையும் அறிவேன்.  பல கருத்துகளையும் உள்ளே ஏற்றிக் கொண்டு, அசைபோட்ட பிறகே முடிவுக்கு வருவது அவசியம்.  ஒருவேளை உங்களுடைய கருத்தூட்டங்கள் என் நிலைப்பாட்டை மாற்ற இடமளித்தால் என் கருத்தை மாற்றிக் கொள்ளவும் தயார்நிலையில்தான் என் மனத்தை வைத்திருக்கிறேன். தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டு.  மீண்டும் நன்றி தியாகராஜன். 
 
 

SUBBAIER RAMASAMI

unread,
Sep 18, 2009, 11:20:18 AM9/18/09
to santhav...@googlegroups.com
But I go by amritha's version as he has taken bharathi to his house?
 
when amritha told that bharathi had come VA RA had told"ennaith tharmasangadaththil maattivittaaye?" 
 
ramasami

2009/9/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

இராஜ.தியாகராஜன்

unread,
Sep 18, 2009, 11:42:49 AM9/18/09
to சந்தவசந்தம்
அன்புள்ள ஹரியண்ணா அவர்கட்கு

இராஜ.தியாகராஜனின் வணக்கம்.


*(3) இப்போது தாவரவியல் பூங்காவில் இருக்கும் பாரதமாதா சுதை உருவம் பாரதி
> > விரும்பிய வடிவமேயன்றி அதன் மூலம் அல்ல.*
> > **

இதனை நான் சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மன்னர்மன்னன்,
மற்றும் பொதுவுடமைக் கட்சியின் பெரியவர்கள் கூற்றுபடி, பாரதி சொல்லி
வனைந்த மூலச் சிலையை அரசுத் தவரவியல் பூங்காவில் வைத்ததாகவே தெரிகிறது.
அனால் காலம் சென்றமையால் சிலை சிதைந்து சரிசெய்ய இயலாமல் வீணாகப்
போனதால், தமிழ்சங்கம், தமிழார்வலர்கள், இன்னும் பலரின் பெரு முயற்சியின்
பேரில், இன்று அந்த மூல உருவத்தின் நேர் படியாக, வேறு சிலைசெய்து அங்கு
நிறுவப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். ஆதலாலேயே அது பாரதி விரும்பிய
வடிவமேயன்றி மூலம் அல்ல என்று சொன்னேன்.

அன்பன்
இராஜ.தியாகராஜன்

On Sep 18, 8:00 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/9/18 Raja.Tyagarajan thiaga...@dataone.in
>
>
>
>
>
> >  *(1) பாரதமாதா கற்சிலை வடிவம் இல்லை.*
> > **
> > *(2) சா.சு. இளங்கோவன் அவர்களுக்கு கிடைத்த பெரும்பான்மையான தகவல்கள் திரு
> > மன்னர் மன்னனிடம் இருக்கும் கோப்புகளிலிருந்து (சுதை உருவம்)*
> > **
> > *(3) இப்போது தாவரவியல் பூங்காவில் இருக்கும் பாரதமாதா சுதை உருவம் பாரதி
> > விரும்பிய வடிவமேயன்றி அதன் மூலம் அல்ல.*
> > **
> > *(4) பாரதி விரும்பிய, சொல்லிய வடிவம் கைவிலங்குடன் இருப்பது அல்ல.*
> > **
> > *(5) பாரதி விரும்பி, சொல்லி செய்த மூல வடிவம், இப்போதும் பாவேந்தர்
> > அருங்காட்சியகத்தில்* *இருக்கின்றது.*
> > **
> > *(6) துப்பாக்கி விஷயம் நிச்சயம் உண்மையென்றும், அதை எடுத்துச் சென்றவர்
> > பாவேந்தர் என்றும் மன்னர்மன்னன் உறுதி செய்கிறார்.*
> > **
> > *(7) செய்யப்பட்ட சுதை சிலைகள் ஒன்றல்ல என்றும் மன்னர் மன்னன் கூறுகிறார்.*
> > **
> > *(8) இதைப்பற்றிய விவரங்கள் ஒரு வரலாற்று செய்தித் தொடராக திரு
> > கோ.பாரதியவர்கள் தமது புத்தகம் ஒன்றில் தந்திருக்கிறார்.*
> > *புத்தகத்தின் பக்கங்களை படியெடுத்து விரைவில் அனுப்பித் தருகிறேன்.*
> > **

> ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -

Hari Krishnan

unread,
Sep 18, 2009, 11:50:23 AM9/18/09
to santhav...@googlegroups.com


2009/9/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

But I go by amritha's version as he has taken bharathi to his house?
 
when amritha told that bharathi had come VA RA had told"ennaith tharmasangadaththil maattivittaaye?" 
 
ramasami
 
 
 
இந்தச் செய்தியில், நீங்கள் எடுத்திருக்கும் முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன்.  உங்களுடைய அனுமானம் மிகச் சரியானது.

SUBBAIER RAMASAMI

unread,
Sep 18, 2009, 12:50:07 PM9/18/09
to santhav...@googlegroups.com

வாழ்க்கை வரலாறு எழுதுவதிலே பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பர்றியெல்லாம் இப்பொழுது நான் பேசப்போவதில்லை. ஆனால் உரையாடல்களைப் பற்றிப் பேசப்போகிறேன்.

 

உரையாடல்கள் யாரைப்பற்றிப்பேசுகிறோமோஅவர் பேசியதாகத்தவறாகக் கருதப்படும் என்ற நிலை இருக்கிறது என்பது உண்மை.

 

ஆனால் உலக வரலாற்று இலக்கியங்கள் பலவற்றிலிந்த முறையே பெரும்பாலும் பின்பற்றப்பட்டிருக்கின்றது.

 

வாழ்க்கையும் ஒருவகையில் கதை போன்றதுதான். நானே என் வரலாற்றை எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். நான் ஒழுங்காக நாட்குறிப்பு எழுதிவருபவனென்றால் அப்படியே நான் அவ்வப்போது பேசியதை எழுதமுடியும். இல்லையென்றால் நான் எழுதுவதிலும் அப்படியே என் உரையாடல்களைக் கொடுக்க இயலாது.  காலப்பிழைகளும் நிகழ வாய்ப்புண்டு.   சம்பவங்களையும் பாத்திரங்களையும் நன் கு ஆய்ந்து இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்துக்கு வந்து அந்தக் கதநாயகன் பேசியிருந்தால் அப்படித்தான் பேசியிருப்பான் என்றுகருதி மனச்சாட்சிக்கு விரோத மில்லாமல் எழுத முடிந்தால் உரையாடல்களைப்பயன்படுத்துவதில் தவறில்லை.  அப்படித்தான் வரளாறு எப்படி எழுதுவது என்பது பற்றிய நூல்களின் ஆசிரியர்கள் பலரும்சொல்லியிருக்கிறார்கள்.

 

உரையாடலைப் புகுத்துவதால் ஹரி சொல்வதுபோல காதாநாயகன் அப்படித்தான் பேசினான் என்ற தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு, இதை முதலில் முன்னுரையில் விளக்கிவிடவேண்டும். அல்லது இன்னொரு வழியையும் பின்பற்றலாம். காதாநாயகன் நிச்சயமாகப்பேசியவை எழுத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டவற்றை ஒரு ஃபாண்டிலும் மற்றவற்றை வேறு ஃபாண்டிலும் கொடுத்து முன்னுரையில் விளக்கிவிடலாம்.

 

வாழ்க்கை வரலாறு என்பது செய்திக்கோவையல்ல. அதில் உயிர் இருக்கவேண்டும். மக்களை ஓரளாவாவது ஈர்க்கவேண்டும். அதற்கு உதவுவன உரையாடல்கள். ஓரளவுக்கு நாடகப்பாங்கும் தேவைப்படுகிறது. வாழ்க்கை வரலாற்று ஆசிரியன் என்று என்மேல் முத்திரை விழுந்ததற்கும் இந்த அணுகுமுறைதான் காரணம். ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை உரையாடல்களைத் தவிர்த்து எழுதினேன். பதிப்பகத்தார் அந்த நூலை மறுபரிசீலனை செய்யச் சொல்லிவிட்டார்கள். எனவே என்னுடைய பாணிக்குத் தாவினேன். ஆனால் அந்தக் கதையின் போக்கை உள்வாங்கிக்கொண்டுதான் உரையாடல்களைச் சமைக்கிறேன். கருத்து மோதல்கள் ஏற்படக்கூடிய விவாதங்களை உரையாடல் இல்லாமல் அமைக்கலாம். ஏனென்றால் மக்களுக்கு எப்பொழுதுமே விவாதங்களும் சண்டையும் பிடிக்கும். ஆனால் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுவையாகப் சொல்ல ஓரளவுக்கு உரையாடல்கள் அவசியம். அப்பொழுதுதான் மக்கள் படிப்பார்கள். இந்தப்பாணியில் நான் எழுதிய எடிசன் புத்தகம் மட்டுமே 20000 பிரதிகளுக்குமேல் விற்றுள்ளதாக அறிகிறேன்.

 

ஆனால் உரையாடல்களைச் சமைக்கும் போது யாரைப்பற்றி எழுதுகிறோமோ அந்தக் கதாநாயகனுக்கு உண்மையுள்ளவனாக எழுத்தாளன் இருக்கவேண்டும்.

இலந்தை
 
 
 
 
இது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பாரதியால் பேசப்பட்டது’ என்ற உணர்வை ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.  ஆகவேதான் நான் பெரும்பாலும்......
 
vazkkai vara
2009/9/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

ananth

unread,
Sep 18, 2009, 5:25:06 PM9/18/09
to சந்தவசந்தம்
இலந்தையின் வரலாறு நூல்களை, அவர் நன்றாக ஆய்ந்தறிந்த பின் எழுதி,
செய்திகளுக்கான ஆதாரக் குறிப்புக்களும் தருவதால், ஆங்காங்கு உரையாடல்
முறையில் அவர் எழுதும் பாணி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு மிகவும்
சுவைபட விளங்குகிறது. வரலாற்று நாயகன் எடிசனாகட்டும், வ.வே.சு., ஃபோர்ட்
ஆகட்டும் தொடக்கத்திலேயே ஒரு உரையாடலோடு அவர் ஆரம்பிக்கும் போது
படிப்பவர்க்கு மென்மேலும் படிக்க ஆவல் பிறக்கிறது. அவரது பாரதி
சரித்திரமும் இவ்வண்ணம் இருப்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது.

அனந்த்

On Sep 18, 12:50 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> வாழ்க்கை வரலாறு எழுதுவதிலே பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பர்றியெல்லாம்

> இப்பொழுது நான் பேசப்போவதில்லை. ஆனால் உரையாடல்களைப் பற்றிப் பேசப்போகிறேன்....
>
> read more »

> 2009/9/18 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2009/9/18 Pas Pasupathy pas.pasupa...@gmail.com


>
> >> உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்திருக்க வேண்டும் என்பது என்  கருத்து. அதை
> >> ஆங்கிலத்தில் யாராவது எழுதி இருந்தால், நன்றாக authentic - ஆக இருந்திருக்கும்.
> >> ராஜாஜி , ' He is a great poet of Tamil Nad' என்று சொல்லியிருந்தாலும் , அது
> >> இயல்பாகத் தான் எனக்குத் தோன்றுகிறது; அதைத் தமிழில் 'மஹாகவி' என்று ஒருவர்
> >> மொழிபெயர்த்தால் ? :-))
>
> > நீங்கள் சொல்வது பொருள் செறிந்த ஒன்று.  இருவரும் உண்மையில் என்ன
> > உரையாடினார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று.  ஏனெனில், வரா எழுதியபோது, பாரதி
> > இறந்து 25 ஆண்டுகள் கடந்திருந்தன.   பத்மநாபன் எழுதத் தொடங்கியபோது பாரதி
> > இறந்து 50 ஆண்டுகள் கழிந்திருந்தன.  வரா இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தார்
> > என்றாலும், அவரும் நினைவுக் குறிப்பின் அடிப்படையில்தான் சொல்லியிருக்கிறார்
> > என்பது வெளிப்படை.  வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அவர்களுடைய உரையாடலாக
> > எடுத்துக் கொள்ள இயலாத ஒன்று.
>
> >> மற்றபடி, 'சித்திர பாரதி'யில் இருப்பது போல், பாரதி, 'என்ன ஓய்' என்று வ.ராவை
> >> விளிப்பதும், 'மிஸ்டர் காந்தி' என்று பேசுவதும்
> >> நம்பக் கூடியதாகவே இருக்கிறது.
>
> > ஆமாம். ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால், பத்மநாபன் தீட்டியிருக்கும்
> > சித்திரங்களிலும் காட்சிகளிலும் தற்கருத்தேற்றமும், மிகை நவிற்சியும் அதிகம்.

> > இப்படிச் செய்திருப்பதால்- Hide quoted text -

Hari Krishnan

unread,
Sep 19, 2009, 12:00:30 AM9/19/09
to santhav...@googlegroups.com


2009/9/19 ananth <gan...@gmail.com>

இலந்தையின் வரலாறு நூல்களை, அவர் நன்றாக ஆய்ந்தறிந்த பின் எழுதி,
செய்திகளுக்கான ஆதாரக் குறிப்புக்களும் தருவதால், ஆங்காங்கு உரையாடல்
முறையில் அவர் எழுதும் பாணி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு மிகவும்
சுவைபட விளங்குகிறது. வரலாற்று நாயகன் எடிசனாகட்டும், வ.வே.சு., ஃபோர்ட்
ஆகட்டும் தொடக்கத்திலேயே ஒரு உரையாடலோடு அவர் ஆரம்பிக்கும் போது
படிப்பவர்க்கு மென்மேலும் படிக்க ஆவல் பிறக்கிறது. அவரது பாரதி
சரித்திரமும் இவ்வண்ணம் இருப்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது.

அனந்த்
 
 
அன்புள்ள அனந்த், என் மரியாதைக்குரிய இலந்தை,
 
 
இந்தத் தலைப்பில் நான் எழுதிய மடல்கள் ஒவ்வொன்றும் ரா அ பத்மநாபன், வரா இருவரும் உணர்ச்சியின் அளவு கடந்த வெளிப்பாட்டால் பல இடங்களில் குவிமையத்திலிருந்து விலகியதையும், அவை ஏற்படுத்திய பின்விளைவுகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்றன. இலந்தையின் பாணியைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.
 
கடந்த ஐந்தாண்டுகளாக என்னுடைய முழு கவனமும் மஹாபாரத மூலத்தில் மட்டுமே குவிந்திருக்கின்ற காரணத்தால், நான் ராமாயணத்தைக்கூட அவ்வப்போது இங்கே குமார்போன்ற சிலர் ஏதாவது கேட்கும்போது மட்டுமே புரட்டுகிறேன்; பாரதியைத் தொட்டுப் பார்த்தே எந்தக் காலமோ ஆகிறது.  இந்தச் சூழலில், நான் இதுவரையில் இலந்தை எழுதிய எதையும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.  ஆகவே அவரும் இப்படிப்பட்ட உத்தியைத்தான் கையாள்கிறார் என்பது எனக்குத் தெரியாது. 
 
இந்தப் பின்புலம் உங்களுக்குத் தெரியாது.  ஆகையாலே நான் எழுதியவை ஏதோ ‘உள்ளர்த்தம் வைத்துச் சொன்னவை’ மாதிரி ஒலித்திருந்தால் அது இயற்கையே.  ஆனால் என் எழுத்தில் அப்படி ஒரு உள்ளர்த்தமும் இல்லை.  ஏனெனில் இலந்தை எழுதிய நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற கடந்த ஐந்தாண்டு காலமும் என் முழு கவனமும் மஹாபாரதத்தில் மட்டுமே குவிந்திருந்தது.  ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அதன் வடமொழி மூலத்தை அடையாளம் கண்டு, பொருத்தி, விரல்நுனிகளால் மட்டுமே உலகத்தை அறிந்துகொள்ளும் குருடனைப்போல் தட்டித் தடவிப் படித்து, சாந்தி பர்வம் வரையில் முடித்துவிட்டேன்.  ஏராளமான குறிப்புகளையும், இதுவரையில் மர்மமாகவே இருந்துவந்த பல கேள்விகளுக்கு விடைகளையும் தொகுத்திருக்கிறேன்.  தெய்வத்தின் திருவுள்ளமோ என்னவோ, சென்னை ஆன்லைனில் என்னுடைய பத்தியை மறுபடியும் தொடங்கச் சொல்லி அழைத்திருக்கிறார்கள்.  என்னுடைய மஹாபாரத பத்தி சென்னை ஆன்லைனில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடங்குகிறது. 
 
இலந்தை எழுதியதைப் படிக்கவில்லை என்றால் ஏன் படிக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டுமல்லவா?  அதற்காகத்தான் இதைச் சொன்னேன்.  சென்னைஆன்லைனில் எழுதப் போவது தற்செயலான ஒரு செய்தி.  சுயவிளம்பரமாகத் தோன்றினால், மன்னித்துக் கொள்ளவும்.  ஆகவே, படிக்கவில்லை என்பது அவர் எழுத்தின்பால் உள்ள அலட்சியத்தினால் அன்று என்பதையும்; நான் எழுதிய ஒரேஒரு சொல்கூட அவருடைய பாணியைப் பற்றியோ, அவருடைய புத்தகங்களைப் பற்றியோ எழுதப்பட்டது அன்று என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். 
 
உரையாடல் நடையைப் பயன்படுத்துவதில் தவறே இல்லை.  சொல்லப்போனால் நான் திருக்குறளைப் பற்றி எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் என்னையும் அறியாமல் இரண்டுபேர் உரையாடுவதான வழியில்தான் அமைந்திருக்கின்றன.  இதை வாழ்க்கை வரலாறு எழுதும்போது பயன்படுத்துவதில் தவறு இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ‘வாசகன் தவறாகப் புரிந்துகொள்ளும் ஆபத்து இருக்கிறது’ என்பதை மட்டும்தான் சொன்னேன்.  இதை எழுதும்போது என் மனத்தில் ரா அ பத்மநாபனும் வராவும் மட்டும்தான் இருந்தார்கள்.  இலந்தை இல்லை. 
 
இலந்தை அவர்களுடைய பாரதி வரலாற்றில் இப்படிப்பட்ட பிழற்வுகள் ஏற்படாது என்பதை நான் அறிவேன்.  என் கருத்து எதுவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவரைச் சுட்டவில்லை.  அப்படி தொனித்திருந்தால், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.  பெரியவர்களிடமும் உரியவர்களிடமும் காரண காரியம் நோக்காமல் காலில் விழுவதில் எனக்குப் பெருமையே. 
 

SUBBAIER RAMASAMI

unread,
Sep 19, 2009, 4:44:14 AM9/19/09
to santhav...@googlegroups.com

அன்புள்ள ஹரி,

வரலாறு எழுதுகிறபோது வர்லாற்று நாயகனான் பேசுவதாகக் கற்பனையாக எழுதப்படும் உரையாடல்கள் உண்மையில் அவ்வரலாற்று நாயகனே பேசியதாக எடுத்துக்கொண்டு அதை மேற்கோள் காட்ட ப்பலர் முனைவார்கள் என்பது முழுக்க முழுக்க உண்மை.

உங்கள் கூற்றை நான் அப்படியே ஏற்கிறேன். ஆனால் வரலாறு எழுதுபவனுக்குச் சில சங்கடங்கள் இருக்கின்றன. வெறும் செய்திகளை மட்டும்சொல்லிக்கொண்டு போனால் மக்களை அது நிச்சயம் ஈர்க்காது. வரலாற்று நாயகனே தன் வரலாற்றை எழுதினாலும் சொல்லப்படுகிற நிகழ்ச்சிநடந்த காலத்தில் நிகழ்ந்த உரையாடல்களை அப்படியே எழுதிவிடமுடியாது. எனவே நிகழ்ச்சி, நிகழ்ச்சி நிகழ்ந்த களம்,அப்பொழுது வரலார்று நாயகனின் நிலை இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உரையாடல்களைச்  சமைக்கிறபோது  அது வரலாற்றைச் சற்றுச் சுவை யோடு நிகழ்த்திச் செல்ல வழிவகுக்கிறது. இரஜாம்கிருஷ்ணனும் விஜயலக்ஷ்மி பாரதியும் எழுதியிருப்பதைப்போல முழுக்க முழுக்க நாவலாக்கிவிடாமல்  அதேமசமயம் வெற்றுச் செய்தித்தொகுப்பாகவும் ஆக்கிவிடாமல் ஒரு இடைப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து நான் எழுதுகிறேன். இதில் கவனமாக இல்லாவிட்டால் சறுக்கிவிட வாய்ப்புகள் அதிகம். உங்கள் கட்டுரைகள் எனக்கு இவ்வரலாற்றை எழுதப்பெரிதும் உதவியுள்ளன. அதற்கு என் தனிப்பட்ட நன்றி!

 

வலாற்றை எழுதி முடித்துவிட்டேன். முன்னுரை மட்டும் பாக்கி. அதில்தான் வரலாறு எழுதப்பட்ட விதம் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் பதிப்பாளர் சிலசமயம் முன்னுரையை விட்டுவிடுகிறார்கள். வீர சாவர்க்கரில் அப்படித்தான் ஆயிற்று.

சென்னை ஆன் லைன் புதிய தொடருக்கு என் வாழ்த்துகள்.

 

இலந்தை



2009/9/19 Hari Krishnan <hari.har...@gmail.com>

Pas Pasupathy

unread,
Sep 19, 2009, 9:57:41 AM9/19/09
to santhav...@googlegroups.com


2009/9/19 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

அன்புள்ள ஹரி,

வரலாறு எழுதுகிறபோது வர்லாற்று நாயகனான் பேசுவதாகக் கற்பனையாக எழுதப்படும் உரையாடல்கள் உண்மையில் அவ்வரலாற்று நாயகனே பேசியதாக எடுத்துக்கொண்டு அதை மேற்கோள் காட்ட ப்பலர் முனைவார்கள் என்பது முழுக்க முழுக்க உண்மை.

 
தமிழர்கள் பற்றிய வரலாறுகளில்  இது அதிகமான
முக்கியத்வம் பெறுகிறது. ( இலந்தை எடிஸனைப் பற்றித் தமிழில் எழுதினால், இது பிரச்சனையே இல்லை!) 
 
 
 
 
 

உங்கள் கூற்றை நான் அப்படியே ஏற்கிறேன். ஆனால் வரலாறு எழுதுபவனுக்குச் சில சங்கடங்கள் இருக்கின்றன. வெறும் செய்திகளை மட்டும்சொல்லிக்கொண்டு போனால் மக்களை அது நிச்சயம் ஈர்க்காது. வரலாற்று நாயகனே தன் வரலாற்றை எழுதினாலும் சொல்லப்படுகிற நிகழ்ச்சிநடந்த காலத்தில் நிகழ்ந்த உரையாடல்களை அப்படியே எழுதிவிடமுடியாது. எனவே நிகழ்ச்சி, நிகழ்ச்சி நிகழ்ந்த களம்,அப்பொழுது வரலார்று நாயகனின் நிலை இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உரையாடல்களைச்  சமைக்கிறபோது  அது வரலாற்றைச் சற்றுச் சுவை யோடு நிகழ்த்திச் செல்ல வழிவகுக்கிறது.

 
உ.வே.சாவின் 'என் சரித்திரம்', 'மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்'... இவற்றின் சுவைக்கும் இதுவே காரணம்.  ஏன், 'கல்கி'யின் நாவல்களின் வெற்றிக்கும் காரணம் அவற்றின் உரையாடல்களே! ( ஆனால், காலத்திற்குப் பொருந்தாத வார்த்தைகளைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும் அல்லவா? ...  'பார்த்திபன் கனவு' நூலாக வருவதற்கு முன், கல்கி அதைச் செய்தார் என்று நினைக்கிறேன்!)
 
 

வலாற்றை எழுதி முடித்துவிட்டேன். முன்னுரை மட்டும் பாக்கி. அதில்தான் வரலாறு எழுதப்பட்ட விதம் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் பதிப்பாளர் சிலசமயம் முன்னுரையை விட்டுவிடுகிறார்கள்.
=====
 
மிகவும் கண்டிக்கிறேன். இது வேறு எந்த மொழிப் பதிப்புகளில் நடக்கிறதா? நடக்குமா?தமிழ்ப் பதிப்பாளர்களைப் பற்றிய என் கருத்து மேலும் உரம் பெறுகிறது!
=======

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

Kaviyogi Vedham

unread,
Sep 19, 2009, 9:58:45 AM9/19/09
to santhav...@googlegroups.com
ஹரி! தொடர்க உன் அற்புத மகாபாரதப்பணி..என்றிலிருந்து தொடங்குகிறது?அந்த வலை- இழையைமட்டும் எமக்குத் தரவும். விடாமல் படிக்க உத்தேசித்திருக்கிறேன்..அது தினசரி வருமா? இல்லை வாராவாரமா?..
 யோகியார்

2009/9/19 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Hari Krishnan

unread,
Sep 20, 2009, 12:31:18 AM9/20/09
to santhav...@googlegroups.com


2009/9/19 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

ஹரி! தொடர்க உன் அற்புத மகாபாரதப்பணி..என்றிலிருந்து தொடங்குகிறது?அந்த வலை- இழையைமட்டும் எமக்குத் தரவும். விடாமல் படிக்க உத்தேசித்திருக்கிறேன்..அது தினசரி வருமா? இல்லை வாராவாரமா?..
 யோகியார்
 
 
 
அநேகமாக அடுத்த வாரத்திலிருந்து.  அவர்கள் அனுப்பிய கடிதம் என்னுடைய ஸ்பாம் ஃபோல்டரில் போய் விழுந்துவிட்டது.  நல்லவேளையாக, இரண்டு நாளுக்கு முன்னால் ஸ்பாம் ஃபோல்டரை சுத்தம் செய்வதற்கு முன்னால் ‘என்னதான் இருக்கிறது பார்ப்போம்’ என்று பார்த்தேன்.  இந்தக் கடிதம் கிடைத்தது.  நாம்பாட்டுக்கு டுபுக்குன்னு empty என்று அழுத்தியிருந்தேன் என்றால் எல்லாம் போயிந்தோ ஆயிருக்கும்.  அந்தக் கடிதத்தை பார்க்க வேண்டிய நேரத்தில் பார்த்திருந்தால் இப்போது நான் தொடங்கி பத்து நாளாவது ஆயிருக்கும்.  என்ன பண்றது.  முந்தாநாள்தான் பாத்தேன்.
 
வாரத்துக்கு ஆறுநாள் என்பது தொடருடைய நடை.  முதல்நாள் ஆங்கிலத்தில் எழுதியதை அடுத்த நாள் தமிழில் எழுதுவேன்.  எழுதுவது ஒரே விஷயத்தைதான் என்றாலும் ஒன்று இன்னொன்றின் மொழிபெயர்ப்பாக இருக்காது.  They would be independentaly written pieces. 
 
இதுக்கு மேல இங்க எழுதினா, தம்பட்டத்தை தூக்கிக் கொண்டு அலையவேணாம்...அங்க எங்கியாச்சும் போய் கொட்டிக்கோ என்று மௌனத்தாலேயே உணர்த்துவார்கள்.  நான் டாட்டாங்ணா.  படிக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி.

Kaviyogi Vedham

unread,
Sep 20, 2009, 9:26:46 AM9/20/09
to santhav...@googlegroups.com
rரொம்ப நன்றிங்க தம்பி..நிச்சயம் படித்து feed back'எழுதுவேன்.
 யோகியார்

2009/9/19 Hari Krishnan <hari.har...@gmail.com>


2009/9/19 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

ஹரி! தொடர்க உன் அற்புத மகாபாரதப்பணி..என்றிலிருந்து தொடங்குகிறது?அந்த வலை- இழையைமட்டும் எமக்குத் தரவும். விடாமல் படிக்க உத்தேசித்திருக்கிறேன்..அது தினசரி வருமா? இல்லை வாராவாரமா?..
 யோகியார்
 
 
 
அநேகமாக அடுத்த வாரத்திலிருந்து. 
 
வாரத்துக்கு ஆறுநாள் என்பது தொடருடைய நடை.  முதல்நாள் ஆங்கிலத்தில் எழுதியதை அடுத்த நாள் தமிழில் எழுதுவேன்.  எழுதுவது ஒரே விஷயத்தைதான் என்றாலும் ஒன்று இன்னொன்றின் மொழிபெயர்ப்பாக இருக்காது.  They would be independentaly written pieces. 
--
அன்புடன்,
ஹரிகி.

SUBBAIER RAMASAMI

unread,
Sep 23, 2009, 7:11:02 AM9/23/09
to santhav...@googlegroups.com

கன்னத்தில் கையும் காலில் விலங்கும் பூண்ட பாரதமாதா சிலை இதோ:  சர்வாலங்கார பூஷிதையாக இருக்கிறாள்.

 

இலந்தை

 

 

சித்திரபாரதியில் இப்படம் உள்ளது thia...@dataone.in>

bharathamatha.jpg

thangamani

unread,
Sep 23, 2009, 8:23:13 AM9/23/09
to சந்தவசந்தம்
அன்புள்ள ஹரி!
அனுமான் வார்ப்பும்,வனப்பும் கிடைத்து விட்டது!
என் தங்கை உமா திருச்சி (ஸ்ரிரங்கத்துலே) இருக்கிறாள்.
அவள் வாங்கி வைத்திருக்கிறாள்.கொரியரில் அனுப்புவாள்.
நான் படித்து மகிழ்வேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Sep 19, 9:31 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/9/19 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 8, 2009, 9:54:09 AM10/8/09
to santhav...@googlegroups.com

அன்புள்ள நகுபோலியன் அவர்களே,

 

 

பாரதி உருவாக்கி மண்டையம் குடும்பத்தாரிடமிருந்த பாரதமாதா சிலை இப்பொழுது உங்கள் வசம் இருக்கிறதாமே! இன்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த செய்தி இது.

 

நீங்கள் விமானத்தில் பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்த சிலை இப்பொழுது உங்கள் வசம் இருக்கிறதல்லவா? அதன் புகைப்படத்தை இங்கே இடுங்களேன்! அதைப்பற்றிய விவரங்களையுமெழுதினால் நலம்

 

இலந்தை



2009/9/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

nahupoliyan

unread,
Oct 9, 2009, 7:40:53 AM10/9/09
to சந்தவசந்தம்
1. இந்த இழையைப்பார்ப்பதில் இத்தனைதாமதமாயிருக்கிறது!
2. நான் தற்சமயம் சென்னைவிட்டு ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
3. இலந்தையார் ஒருமுறை என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைவு.
அப்போது அச்சிலையைத்
தாங்கள் காணாது போனது எப்படி என்று மண்டையை உடைத்துக்கொள்கிறேன்.
4. அனந்த்தும் [தங்கமணியும் வந்து கூடிய அன்று] அதைத் தரிசனம்
செய்திருக்கிறார்.
5. சிலையின் படத்தை உடனே அனுப்பப்பார்க்கிறேன்.

பாலு.

On Oct 8, 6:54 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> அன்புள்ள நகுபோலியன் அவர்களே,
>
> பாரதி உருவாக்கி மண்டையம் குடும்பத்தாரிடமிருந்த பாரதமாதா சிலை இப்பொழுது
> உங்கள் வசம் இருக்கிறதாமே! இன்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த செய்தி இது.
>
> நீங்கள் விமானத்தில் பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்த சிலை இப்பொழுது உங்கள்
> வசம் இருக்கிறதல்லவா? அதன் புகைப்படத்தை இங்கே இடுங்களேன்! அதைப்பற்றிய
> விவரங்களையுமெழுதினால் நலம்
>
> இலந்தை
>

> 2009/9/18 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>

> > 2009/9/18 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> >>  2009/9/18 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> >>>  2009/9/18 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
> >>>> 1-
>
> >>>> பாரதமாதா  சிலை பற்றிப் பலகதைகள் வந்துவிட்டன. ஆனால் உண்மைக்கு மிக
> >>>> நெருங்கிய வரலாற்றில் வ.வே.சு அய்யருக்கும்  பாரதிக்கும் இடையே நடந்த
> >>>> உரையாடல் அது.  அந்தச் சில்லை பாண்டிச்சேரி அரசினர் பூங்காவில் முன்னாள

> >>>> அமைச்சர் வ. சுப்பையா அவர்களால் நிறுவப்பட்டதாக அவரே எழுதியிருக்கிறா  *(தாமரை-
> >>>> பாரதி நூற்றாண்டு மலர்*)


>
> >> I missed the important note in your mail. திருலோக சீதாராம் எழுதிய
> >> புத்தகம் உங்களிடம் இருக்கிறது என்ற நினைத்தேன்.  தாமரை பாரதி நூற்றாண்டு
> >> மலரிலிருந்து பெற்ற குறிப்பின் அடிப்படையில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்
> >> என்றால், டாக்டர் ச சு இளங்கோவன் அவர்களுடைய புத்தகத்தில்
> >> இடம்பெற்றிருப்பது திருலோக சீதாராம் எழுதிய புத்தகத்தில் வந்திருக்கும்
> >> நேரடிக் குறிப்பின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது. வவேசு ஐயருக்கும்
> >> பாரதிக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>
> >> ஆனால் வெகு தெளிவாக ‘குயவனார்’ என்பதும், புதுவை ‘குயவர் பாளையத்தில்’ நடைபெற்ற
> >> உரையாடல் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ன. எனவே, தாமரை கட்டுரையில்
> >> குறிப்பிடப்பட்டுள்ள (பாண்டிச்சேரி
>

> ...
>
> read more »

SUBBAIER RAMASAMI

unread,
Oct 9, 2009, 10:43:50 AM10/9/09
to santhav...@googlegroups.com

பாரத மாதா சிலையைச் செய்யத் திட்டம் போட்டவர்கள் பாரதியும் வ.வே சு ஐயரும்

புதுச்சேரி அமைச்சரும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

முறுக்குச் செய்தியெல்லாம் சரடு

 

இராஜாஜி பாரதியை மகாகவி என்று அறிமுகப்படுத்தவில்லை.

 

இராஜாஜி வீட்டில் பாரதி காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சி 100 சதவிகிதம்  உண்மை. ஆனால் அதைப் பற்றி எழுதப்பட்டிருப்பதில்தான் வேறுபாடுகள் உள்ளன.

 

இன்றுதான் பாரதி புத்தகத்தை முன்னுரை சகிதம் முழுதாகப் பதிப்பகத்துக்கு அனுப்பினேன். . அதில்பச்சைச் சூரியன் , பாரத மாதா உட்பட  இதைப்பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறேன்

 

இலந்தை

தினமணி, 11 Sep 2009 கட்டுரை

நிஜம்தானா? பாரதி அன்பர்களே.

நா. கணேசன்

-------------

பாரதியின் தேசப்பற்று!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 9, 2009, 12:18:21 PM10/9/09
to santhav...@googlegroups.com

நகுபோலியனிடம் பாரத மாதா சிலை இருப்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், அவரே அது பற்றி இங்கு விவரம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் அது பற்றி முன்னமே இங்குச் சொல்லவில்லை. அவரிடம் மேலும் உள்ள பாரதிப் பொக்கிஷங்ளையும் வெளியுலகப் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என அவரைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். முன்பு சுட்டியபடி, தங்கமணியார் வருகையின் போது நகுபோலியனார் வீட்டில் எடுத்த விடியோ, ஒளிப் படங்களையும் வெளியிடல் நல்லது.

அனந்த்

2009/10/9 nahupoliyan <n.balasu...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 9, 2009, 12:30:20 PM10/9/09
to santhav...@googlegroups.com

நகுபோலியன் அனுப்பியிருக்கும் பாரதமாதா சிலையைக் கூர்ந்து பாருங்கள். குஜராத் பகுதி ஒரு சிங்கம் வாய்திறந்திருப்பது போல அமைந்திருக்கிறது. ‘அரிமிசையே ஊர்வாள் அவள். ‘ பாரதமாதாவைப் பராசக்தியாகக் காட்டிவிடுகிறான்

 

இலந்தை



2009/10/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 9, 2009, 2:27:35 PM10/9/09
to சந்தவசந்தம்

On Oct 9, 11:18 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> நகுபோலியனிடம் பாரத மாதா சிலை இருப்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும்,
> அவரே அது பற்றி இங்கு விவரம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் அது பற்றி
> முன்னமே இங்குச் சொல்லவில்லை. அவரிடம் மேலும் உள்ள பாரதிப் பொக்கிஷங்ளையும்
> வெளியுலகப் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என அவரைப் பணிவுடன்
> கேட்டுக்கொள்கிறேன். முன்பு சுட்டியபடி, தங்கமணியார் வருகையின் போது

> நகுபோலியனார் வீட்டில் எடுத்த விடியோ, ஒளிப் படங்களையும் வெளியிடல் நல்லது....
>
>

மிகப் பழைய தமிழ்ப் பாடல்:

மூவிலை நெடுவேல் ஆதி வானவன்
இடமருங்கு ஒளிக்கும் இமையக் கிழவி
தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர்
மிகப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின்
வாள்பிடித்து ஆளியேறித் தானவன்
மாளக் கடும்போர் கடந்த குமரி
மூவா மெல்லடித் திருநிழல்
வாழி காக்கவிம் மலர்தலை யுலகே!


>
> அனந்த்
>
> 2009/10/9 nahupoliyan <n.balasubraman...@gmail.com>

> > > >>>> 1-- Hide quoted text -

N. Ganesan

unread,
Oct 9, 2009, 3:02:51 PM10/9/09
to சந்தவசந்தம்

On Oct 9, 11:30 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> நகுபோலியன் அனுப்பியிருக்கும் பாரதமாதா சிலையைக் கூர்ந்து பாருங்கள். குஜராத்
> பகுதி ஒரு சிங்கம் வாய்திறந்திருப்பது போல அமைந்திருக்கிறது. ‘அரிமிசையே

> ஊர்வாள் அவள். ‘ பாரதமாதாவைப் பராசக்தியாகக் காட்டிவிடுகிறான்...
>

Also,

(அ) பாரதமாதா பதுமையில் கூந்தலை முடியாமல் இருக்கிறாள்.
ஹிந்துப் பெண்கள் துயரகாலத்தில் தான் அவிழ்த்த முடியுடன் காட்சி
அளிப்பர் (உ‍ம்: பாஞ்சாலி).

(ஆ) இந்தப் பதுமை வடிவம் 10 ‍ 20 வருடம் கழித்தும்
பிரபலமாக விளங்கியிருக்கிறது. வடக்கே, (உ‍ ம்), வங்காள‌
கலாசாலை சிற்பி (அ) சைத்ரீகர் செய்த வடிவத்தை
பேத்ரிஸ், குய்வர்பாளையத்தில் கொடுத்து வடித்த‌
பிரதியா? முழுக்க பாரதி செய்த வடிவமா? என்று ஆராய‌
வேண்டும். விரிவாகக் காலையில் படங்கள் கொடுத்துக்
கேட்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்


>
> இலந்தை
>
> 2009/10/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
> > நகுபோலியனிடம் பாரத மாதா சிலை இருப்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும்,
> > அவரே அது பற்றி இங்கு விவரம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் அது பற்றி
> > முன்னமே இங்குச் சொல்லவில்லை. அவரிடம் மேலும் உள்ள பாரதிப் பொக்கிஷங்ளையும்
> > வெளியுலகப் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என அவரைப் பணிவுடன்
> > கேட்டுக்கொள்கிறேன். முன்பு சுட்டியபடி, தங்கமணியார் வருகையின் போது
> > நகுபோலியனார் வீட்டில் எடுத்த விடியோ, ஒளிப் படங்களையும் வெளியிடல் நல்லது.
>
> > அனந்த்
>

> > 2009/10/9 nahupoliyan <n.balasubraman...@gmail.com>

> >> > > அவளது- Hide quoted text -

thangamani

unread,
Oct 10, 2009, 6:59:17 AM10/10/09
to சந்தவசந்தம்
திரு.அனந்த் அவர்களுக்கும்,திரு.இலந்தை அவர்களுக்கும்,
திரு.சங்கர் விரைவில் திரு.நகுபோலியனார் இல்லத்தில் எடுத்த
அரியதான ஒளிப் படங்களை சந்தவசந்தத்தில் வெளியிடுவார்.
திரு.நகுபோலியன் அவர்களுக்கு சிறப்புமிகு நன்றியைச் சொல்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Oct 9, 9:18 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> நகுபோலியனிடம் பாரத மாதா சிலை இருப்பது எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும்,
> அவரே அது பற்றி இங்கு விவரம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் அது பற்றி
> முன்னமே இங்குச் சொல்லவில்லை. அவரிடம் மேலும் உள்ள பாரதிப் பொக்கிஷங்ளையும்
> வெளியுலகப் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என அவரைப் பணிவுடன்
> கேட்டுக்கொள்கிறேன். முன்பு சுட்டியபடி, தங்கமணியார் வருகையின் போது

> நகுபோலியனார் வீட்டில் எடுத்த விடியோ, ஒளிப் படங்களையும் வெளியிடல் நல்லது....
>
> read more »


>
> அனந்த்
>
> 2009/10/9 nahupoliyan <n.balasubraman...@gmail.com>
>
>
>

> > > >>>> 1-- Hide quoted text -

N. Ganesan

unread,
Oct 10, 2009, 11:16:55 AM10/10/09
to சந்தவசந்தம்
அன்பின் இலந்தை, பாலு, ஹரி,

பாரதமாதா பதுமை செய்ய எந்த ஆண்டு பாரதியார் ஆர்டர்
மண்வனைஞரிடம் கொடுத்தார்?

நா. கணேசன்

SUBBAIER RAMASAMI

unread,
Oct 10, 2009, 12:40:34 PM10/10/09
to santhav...@googlegroups.com

பாரதமாதா சிலை எப்பொழுது செய்யப்பட்டது என்பதில் பழ குழப்பங்கள் இருக்கின்றன.

 

இந்தப் பாரதமாதா சிலை விவரங்கள் சகுந்தலா பாரதி எழுதிய பாரதி என் தந்தை என்ற புத்தகத்தில் வருகின்றன..

 

சகுந்தலாபாரதி பிறந்தது 1909 ஏப்ரல்.

 

குயவர்பாளையத்தில் பொம்மைகள் செய்து அதற்கு வர்ணம்  இடும் விசித்திரத்தையும் எங்களுக்குக் காண்பித்தார்கள் என்று சகுந்தலாஎழுதியிருக்கிறாள். இவ்வளவு நினைவு இருக்க வேண்டுமானால் அந்தக்குழந்தைக்கு அப்பொழுது

ஆறு வயதாவது ஆகியிருக்க வேண்டும். அதாவது 1915ஆவது குறைந்த பக்ஷம் இருக்கவேண்டும்.

 

சகுந்தலா தான் நேரடியாக அங்கே இருந்தாலும் திருலோக சீதாரம்கட்டுரையைக்குறிப்பிடுகிறார். அதில் இன்னொரு குழப்பம்.அந்தச் சமயத்தில் என் தந்தையும் ஐயரும் கூறியுள்ள அபிப்பிரயங்களைப் பாரதிதாசன் கூறியதாகத் திருலோகசீதாரம் எழுதியிருக்கிறார்.  இதிலும் ஒரு குழப்பம். ஐயர் கூறிய அபிப்பிராயத்தைப் பாரதிதாசன் தான் கூறியதாகச் சொன்னாரா அல்லது அவர்கள் இருவரும்பேசியதை அப்போழுது அங்கிருந்த பாரதிதாசன் சொன்னாரா அல்லது அது திருலோகசீதாராமின் கருத்தா  என்பது தெரியவில்லை.

 

யதுகிரி பாண்டிச்சேரியில் இருந்த போது நிகழ்ந்தவற்றை விவரமாக எழுதியுள்ளார். ஆனால் இந்தப் பாரதமாதா விஷயம் அதில் இல்லை. அப்படியென்றால் யதுகிரி  பாண்டிச்சேரியை விட்டுச் சென்றபின்புதான் நடந்திருக்க வேண்டும்.. யதுகிரி பாண்டியைவிட்டு 1913ல் சென்றார்.

 

பாரதிதாசன் எழுதியுள்ளதைப்போல துப்பாகிகளைப் பாரத மாதாபொம்மைகளில் வைத்து எடுத்துக்கொண்டு போயிருந்தால் அது ஆஷ் கொலைக்கு முன் நடந்திருக்க வேண்டும். ஆஷ் கொலையோ 1911ல் நடந்தது.. அதற்குப் பிறகு ஐயருக்கும் பாரதிக்கும் வாரண்ட் இருந்ததால் துப்பாக்கியை 1911க்குப் பிறகு அனுப்ப வாய்ப்பில்லை.

 

எல்லாவற்றையும் ஆய்ந்து பார்க்கிற போது 1915-16ல் சிலை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது என் கருத்து.

 

இலந்தை



2009/10/10 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 10, 2009, 1:41:43 PM10/10/09
to சந்தவசந்தம்

On Oct 10, 11:40 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:

> எல்லாவற்றையும் ஆய்ந்து பார்க்கிற போது 1915-16ல் சிலை
> செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது என் கருத்து.
>

நன்றி. 1916 வருடம் சென்னையில் ஊர்வலத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டதாக திரு. பாலு அனுப்பிய படத்தில் உள்ள
ஆங்கிலக் குறிப்பும் பொருந்துகிறது.

1910 வாக்கிலேயே பாரதமாதாவை துர்க்கையாக,
இந்திய வரைபடத்துடன் பொருத்தி கல்கத்தா அச்சகங்கள்
இதை அச்சிட ஆரம்பித்துவிட்டன. எனக்கு 1920-ஆம்
ஆண்டு வாக்கில் அச்சான படம் கிடத்துவிட்டது.
ஆனால், அதன் மூலம் 1905-1910. இதை உருவகித்தவர்
ஒரு வங்காளக் கலைஞராக, ஆனந்தமடம் (1882) நாவலின்
முழு ரசிகராக இருந்திருக்கவேண்டும்.

எல்லாம் படத்துடன் இன்னும் சில மணி நேரங்களில்
தருகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages