புதிய தலைமுறை - மொழி அறிவோம்

107 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Apr 8, 2012, 3:00:43 AM4/8/12
to santhav...@googlegroups.com
வணக்கம்,

அடியேன் தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வேலை செய்கிறேன். அதில் இன்னும் இரண்டு வாரங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை  8.45 மணி அளவிற்கு "மொழி அறிவோம்" என்ற நிகழ்ச்சி வரவிருக்கிறது. அதில் எது சரியான சொல் ? எது தவறான சொல் ? என்று அடியேனை விளக்கம் அளிக்க சொல்லியிருக்கிறார்கள் .  ஐந்து நிமிடங்கள் தான். உதாரணத்துக்கு இரும்பல் என்பது தவறு. இருமல் என்பது சரி.  முழுங்கு என்பது தவறு. விழுங்கு என்பது சரி.   இது போன்ற விளக்கங்கள். 

இணையத்தில் தேடியதில் இந்த சுட்டி கிடைத்தது.


இதில் ஏன் இந்த சொல் தவறு , ஏன் இந்த சொல்  சரி என்ற விளக்கங்கள் இல்லை . அதற்கு விளக்கம் அளிக்க இந்த குழுமச் சான்றோரின் உதவியை பணிவன்போடு நாடுகிறேன்.  இந்தச் சுட்டியில் இல்லாத சொற்களைக் கூட நாம் சொல்லலாம். எதற்கு ஒற்று மிகும் ? எதற்கு மிகாது ? என்பதைக் கூட சொல்லலாம். வடசொல் எது ? தமிழ்ச்சொல் எது ? என்பதையும் சொல்லலாம். 

இது மட்டுமின்றி இதில் போகப் போக வேறென்ன சுவாரஸ்யங்கள் சேர்க்கலாம் என்பது பற்றி இந்தக் குழுமத்தின் கருத்துக்களைக் கேட்க ஆவலாய் இருக்கிறேன். 

"புதிய தலைமுறை" மூலமாக ஒரு புதிய தலைமுறைக்கு தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்று நம்புகிறேன். தங்கள் உதவியோடு.

அன்புடன்,
நிரஞ்சன்  

 


330.gif

இராம்குமார் முகவை

unread,
Apr 8, 2012, 5:12:50 AM4/8/12
to santhav...@googlegroups.com
ஆகா, அருமையான வாய்ப்பு.

இந்தக் குழுமத்தில் அறிந்து கொண்ட சொல்.

முயல்கிறேன் என்பது சரி. முயற்சிக்கிறேன் என்பது தவறு. முயற்சி என்னும் பெயர்ச்சொல்லை மேற்கொண்டு வினைக்கிறோம்;-)

வடசொல் (அ) பிறமொழிச்சொல் நிறைய காட்டலாம்.

வார்த்தை - சொல்
உபயோகம் - பயன்பாடு
கச்டம் - சரவல்
தேதி - நாள்
வாரம் - கிழமை
மேசை - பலகை
அலமாரி - அடுக்குப் பலகை
வாக்கியம் - தொடர்
பென்ச் - நீள்பலகை
சவால் - அறைகூவல், பந்தயம்
பிரச்சினை - சிக்கலை
அவசியம் - தேவை

ஏதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி உரையாடலைக் கூர்ந்து பாருங்கள். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் பலவும் தமிழ் இல்லை என்பதை எளிதில் ஓரலாம். பிறமொழிச்சொற்களை அடையாளம் காண்பதை விடவும் சரியான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுப்பது சரவல். இங்கே மேசை, அலமாரி, பென்ச் போன்றவற்றிற்கு நானே தேர்ந்தெடுத்த சொற்களை தந்திருக்கிறேன். எல்லோரும் ஒப்புவார்கள் என்று சொல்ல இயலாது.

விசயத்திற்கு (matter) சரியான  சொல் எனக்குத் தெரியலை. ஆனால், விசயம் என்ற சொல் வரும் தொடர்களில் அச்சொல்லை எடுத்துவிட்டு பயன்படுத்தினாலும் தொடர் பொருள் குன்றாமல் வருகிறது.

எனக்குத் தெரிந்த  பரிந்துரைகளை தந்திருக்கிறேன். நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

அன்புடன்,
முகவை இராம்குமார்.


 


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

330.gif

S.Krishnamoorthy

unread,
Apr 8, 2012, 6:52:21 AM4/8/12
to santhav...@googlegroups.com
வாழ்த்துக்கள் நிரஞ்சன்!
உங்கள் புதிய முயற்சி வெல்க!
கிருஷ்ணமூர்த்தி

2012/4/8 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>



--
S. Krishnamoorthy

330.gif

Siva Siva

unread,
Apr 8, 2012, 8:32:50 AM4/8/12
to santhav...@googlegroups.com
உங்கள் தொடர் சிறக்க!

/வடசொல் எது ? தமிழ்ச்சொல் எது ? என்பதையும் சொல்லலாம்.  /
இதை இயன்ற அளவு தவிருங்கள்.

தமிழ்நாட்டில் வாழ்வோர்க்கு ஆங்கிலக் கலப்பைக் குறைத்துத் தமிழ் பேசக் கற்றுத் தாருங்கள். ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் பேசுவோர்தம் மொழியைக் கேட்கக் காது கூசுகிறது!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/4/8 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
330.gif

Raja.Tyagarajan

unread,
Apr 8, 2012, 1:26:46 PM4/8/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள பாவலர் நிரஞ்சன் பாரதி,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
உளமார்ந்த வாழ்த்துகள்.  தனிமடலில் கேளுங்களேன்.  நிறைய வைத்திருக்கிறேன். நீங்களும் முகநூலில் இருப்பதால், அங்கிருக்கும் பேரா. பசுபதியவர்களின் தொடக்கத் தமிழிலக்கண கட்டுரைகளில் இருந்தும் நிறைய கிடைக்கும்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
----- Original Message -----
Sent: Sunday, April 08, 2012 12:30 PM
Subject: புதிய தலைமுறை - மொழி அறிவோம்

வணக்கம்,

Subbaier Ramasami

unread,
Apr 8, 2012, 1:37:03 PM4/8/12
to santhav...@googlegroups.com
நிரஞ்சனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொழிலில் வெற்றி நிச்சயம் கிட்டும்.

பேராசிரியர் முத்துக்கண்ணப்பர்  அமுதசுரபி இதழில் நன்றாகத்தமிழ் எழுதுவது பற்றிப்பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மிகச் சிறந்த கட்டுரைகள். அவை தொகுக்கப்பட்டுப் புத்தகமாகக் கிடைக்கலாம். அதைப்போல பேராசிரியர் தமிழண்ணல் அவர்களும் எழுதியுள்ளார். 
முனைவர் வா.சே.குழந்தைசாமி அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது தமிழில்  எழுத்துபிழைகள் என்றொரு புத்தகம் வளார்தமிழ் மன்றத்தின் சார்பில் வெளியிட்டார்.  முனைவர பெரியண்ணனின் சுமதிப்பதிப்பகத்தில் பல புத்தகங்கள் கிடைக்கும்.

இலந்தை

naa.g...@gmail.com

unread,
Apr 8, 2012, 1:51:31 PM4/8/12
to சந்தவசந்தம்

On Apr 8, 10:26 am, "Raja.Tyagarajan" <thiaga...@dataone.in> wrote:
> அன்புள்ள பாவலர் நிரஞ்சன் பாரதி,
> இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
>
> உளமார்ந்த வாழ்த்துகள்.  தனிமடலில் கேளுங்களேன்.  நிறைய வைத்திருக்கிறேன். நீங்களும் முகநூலில் இருப்பதால், அங்கிருக்கும் பேரா. பசுபதியவர்களின் தொடக்கத் தமிழிலக்கண கட்டுரைகளில் இருந்தும் நிறைய கிடைக்கும்.
>
> அன்பன்
> இராஜ.தியாகராஜன்.
>
>

நிரஞ்சன் போன்ற இளைய கவிஞர்கள் கேள்விகளைப் பொது அம்பலத்தில் கேட்பது
நல்லது.
அதற்குப் பல அறிஞர்கள் அளிக்கும் விடைகள் என்றும் இருக்கும். அடுத்த
தலைமுறைக்கும்
அவர்களுக்கு வரும் அதே அல்லது நெருங்கிய தொடர்புடை வினாக்களுக்கும்
பொதுமன்று மடல்கள் துணைதரும்.

நிரஞ்சனுக்கு வாழ்த்துடன்,
நா. கணேசன்

Pas Pasupathy

unread,
Apr 8, 2012, 2:07:37 PM4/8/12
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள்! 

என் கருத்து:



கட்டுரைகளில் எழுத்துகள் மூலம் தெரிவிக்கும் சில ‘பிழைகளை’ப் பேச்சின் மூலம் மட்டும் தெரிவித்தால் கேட்போருக்குப் புரியாமல் போகலாம். கரும்பலகையில் எழுதிக் காட்ட வேண்டியிருக்கலாம்.

இணையத்தையோ, இக்குழுமத்தையோ (;-)) நம்பாமல், இலந்தையார் சொன்னபடி, நல்ல தமிழறிஞர்கள் எழுதிய  நல்ல நூல்களை நம்புங்கள். பல பதிப்பகங்கள் இப்படிப்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கின்றன. 

புலவர் நன்னன் சென்னை வானொலியில் பல வாரங்களுக்கு 
இத்தகைய குற்றுரைகள் நிகழ்த்தினார் என்று நினைவு. நாளிதழைப் 
புரட்டியே வேண்டிய கருத்துகளைத் திரட்டினார் .






--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
330.gif

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 8, 2012, 2:53:46 PM4/8/12
to santhav...@googlegroups.com
சுப்பிரமணியன் கூறியதைக் கவனத்தில் கொண்டு, பிழையற்ற தமிழ் பேசுவதோடு ஆங்கிலக் கலப்பைக் குறைப்பதையும் மக்களுக்கு வலியுறுத்த வேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம் மட்டுமன்றி நடைமுறையிலும் சிறு குழந்தையிலிருந்தே ஆங்கிலம் கலந்து  தமிழ்  பேசுவதை  ஊக்குவிப்பதைப்  பார்க்கையில், அதை விடத் தமிழ்ச்சொற்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மேலெனத் தோன்றுகிறது! 
 
உங்களுக்கு அளிக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் இது பற்றிப் பேச நேரமிருக்காது எனினும் பின் ஒரு வேளை இதைப் பற்றிப் பேச உங்களுக்கு வாய்ப்புக் கிட்டுமென நம்புகிறேன்.
 
இலந்தை சுட்டிய முனைவர் முத்து-கண்ணப்பனின் கருத்துகளை அவரது ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்னும் நூலில் (கங்கை புத்தக நிலையம்) காணலாம். அது போன்ற பல நூல்கள் தற்போது சென்னைக் கடைகளில் கிடைக்கின்றன.
 
அனந்த்

2012/4/8 Siva Siva <naya...@gmail.com>
330.gif

Siva Siva

unread,
Apr 8, 2012, 9:32:20 PM4/8/12
to santhav...@googlegroups.com
இது தினமும் வரவிருக்கும் தொடர் நிகழ்ச்சி. தினம் 5 நிமிடங்களே எனினும், பல விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைக்க இயலும்.

பசுபதியார் சொன்னபடி, தினமும் தமிழ்ச்செய்தித்தாள்களையும் தமிழ்ப் பத்திரிகைகளையும் உன்னிப்பாகப் படியுங்கள். ஓராண்டிற்குப் பேசும் அளவிற்கு விஷயம் கிட்டும்!

ஒரு சொல் தமிழ்ச்சொல்லா சமஸ்கிருதச்சொல்லா என்ற ஆராய்ச்சியை அறவே ஒதுக்கிவிடுங்கள்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/4/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
330.gif

naa.g...@gmail.com

unread,
Apr 8, 2012, 10:10:06 PM4/8/12
to சந்தவசந்தம்

On Apr 8, 10:37 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> நிரஞ்சனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொழிலில் வெற்றி நிச்சயம் கிட்டும்.
>
> பேராசிரியர் முத்துக்கண்ணப்பர்  அமுதசுரபி இதழில் நன்றாகத்தமிழ் எழுதுவது
> பற்றிப்பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மிகச் சிறந்த கட்டுரைகள். அவை
> தொகுக்கப்பட்டுப் புத்தகமாகக் கிடைக்கலாம். அதைப்போல பேராசிரியர் தமிழண்ணல்
> அவர்களும் எழுதியுள்ளார்.
> முனைவர் வா.சே.குழந்தைசாமி அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது
> தமிழில்  எழுத்துபிழைகள் என்றொரு புத்தகம் வளார்தமிழ் மன்றத்தின் சார்பில்
> வெளியிட்டார்.  முனைவர பெரியண்ணனின் சுமதிப்பதிப்பகத்தில் பல புத்தகங்கள்
> கிடைக்கும்.
>
> இலந்தை

முகவை ராம்குமாருக்கும், நிரஞ்சனுக்கும், மற்றும் இங்குள்ளோரில்
விருப்பம் இருக்கும்
பலருக்கும் பயன்படும் புத்தகங்கள் முனைவர் வா. செ, குழந்தைசாமி தலைவராக
இருக்கும் தமிழ் இணையப் பல்கலை தளத்தில் கிட்டுகின்றன.

இன்னும் அங்கே என்ன இலக்கிய (அ) இலக்கண புஸ்தகங்கள் வேண்டும் என்று
கேட்டால் நிச்சயம் இணையப்
பல்கலைக் குழு பரிசீலிக்கும். இதுபற்றி தனி இழையில் என்னென்ன புத்தகங்கள்
இணையத்தில் வேண்டும்? என்று பரிந்துரைகள் தந்தால் அனுப்பி வைப்போம்.
காலப்போக்கில் வந்து விடும். நானும் வாசெகு ஐயாவிடம் பேசுகிறேன்.

அ. கி. பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, 1955
இணையப் பல்கலையில் இருப்பது 1984-ஆம் ஆண்டுப் பதிப்பு:
http://218.248.16.19/library/lA434/html/lA434inx.htm
பொருளடக்கம்:
http://218.248.16.19/library/lA434/html/lA434t01.htm
பேரா. ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் முன்னுரையுடன் கூடியது.

முகவையார் அ. ரா. போன்றோரிடம் கேட்டுப்பெற்று திரு. நாராயணையங்கார்
போன்றோர்
செந்தமிழ் (மதுரை) பிரசுரங்களை இணையமேற்ற வேண்டுகோள்.

ஏராளமான நல்ல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இணையத்தில் இன்று
கிடைக்கின்றன. நல்ல நூல்களைப் படித்து நூல்முகம் என்று அறிமுகம்
தனி இழைகளில் செய்யலாம்.

நா. கணேசன்

Niranjan Bharathi

unread,
Apr 9, 2012, 1:20:40 AM4/9/12
to santhav...@googlegroups.com
கருத்துகளைத்  தெரிவித்தும், சுட்டிகளைத் தந்தும் எனக்கு நல்வழி காட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் மறந்து தமிழிலேயே பேச வேண்டும் என்பதே என் கனவு. 

உங்கள் ஆசிகளுடன் இந்தப் பணியை நான் செவ்வனே நிறைவேற்றுவேன். 

நன்றி ,
நிரஞ்சன் 

வித்யாசாகர்

unread,
Apr 9, 2012, 2:04:17 AM4/9/12
to santhav...@googlegroups.com
//தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கலவாது தமிழிலேயே பேச வேண்டும் என்பதே என் கனவு//

பெருமைக்குரியவராக திகழ்வீர்கள். தமிழை நேசிப்போரை' தமிழ் வாழ்விக்கிறது. உங்களின் இச் சீரிய பணி சிறப்பு பெற என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்!!

வித்யாசாகர்

2012/4/9 Niranjan Bharathi <niranjan...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Niranjan Bharathi

unread,
Apr 9, 2012, 8:27:41 AM4/9/12
to santhav...@googlegroups.com

வணக்கம்,

அனைவரும் சொன்னது போலவே சில உரையாடல்களைக் கவனித்தேன்.  சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. சில காட்டுகள் உங்களுக்காக.

  1. உங்க ஊரு எத்தனை கிலோ மீட்டர் ? 
  2. டேய் இன்னிக்கு உன் பிறந்த நாள் தானே ,Treat கொடுடா 
  3. எப்போ இவரை Discharge பண்ணுவீங்க ?
  4. இப்ப தான் நீங்க ரொம்ப Carefula இருக்கணும் .
  5. வாங்க Snacks சாப்பிட போலாம் 
  6. டிவி யை "ON" பண்ணுங்க .
  7. இந்த வழக்கை யாரு Handle பண்றது ?
  8. வண்டியை எப்ப Delivery பண்ணுவீங்க ?
  9. Actually  நீங்க Call பண்ணப்ப நான் Busiya இருந்தேன்.
  10. இந்த இருக்கையை நான் Occupy பண்ணிட்டேன்.
  11. இந்த நிகழ்ச்சி நல்ல Reach ஆகியிருக்கு
  12. உங்க பேரு Spelling சொல்லுங்க ?
  13. இந்த Job ரொம்ப Satisfying இருக்கு 
  14. மச்சான் நான் Signalல மாட்டிகிட்டேன் 
  15. ஏன்டா Dulla இருக்கே ?
  16. இந்த வார்த்தைக்கு என்ன Short Form ?
  17. புது Dress எடுக்க வேண்டாமா ?
  18. வயிறு Fulla இருக்கு.
  19. அந்தக் காரை Overtake பண்ணுங்க. 
  20. என் இப்படி indecenta behave பண்றீங்க ?
  21. ஓவரா பேசாதீங்க. 
  22. நான் சொல்றது ரொம்ப சிம்பிள் சார்.
  23. எல்லாம் என்னுடைய Bad Luck சார் 
  24. இல்ல ஒரு "Death" ஆகிப் போச்சு 

இதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால்

  1. நான் சுரேஷோட சிஸ்டர் பேசறேன்
  2. என் பொண்ணுக்கு மர்ரியாகே சார்.
  3. எங்க பெரிய அப்பாவுக்கு ரெண்டு டுக்ஹ்டேர்ஸ் சார் 
  4. மோர்னிங் வந்துடுவியா ?
  5. லஞ்ச் போலாமா ?

என்பன போன்ற உபயோகங்கள் மிகவும் வேதனை தருகின்றன. இவை நீங்கலாக முதலில் சொன்ன 
24 வாக்கியங்களை முழுக்க முழுக்க தமிழில் கூற முடியுமா ?

இன்னும் நிறைய கிடைக்கின்றன . அவற்றை அடுத்தடுத்து அனுப்புகிறேன். 

இராம்குமார் முகவை

unread,
Apr 9, 2012, 9:35:20 AM4/9/12
to santhav...@googlegroups.com
  1. உங்க ஊரு எத்தனை கிலோ மீட்டர் ? (மாற்றம் தேவையில்லை. கிலோமீட்டர் என்பது ஒரு அலகு.) 
  2. டேய் இன்னிக்கு உன் பிறந்த நாள் தானே ,Treat கொடுடா - விருந்து கொடுடா.
  3. எப்போ இவரை Discharge பண்ணுவீங்க ? - எப்போ இவரை அனுப்புவீங்க (விடுவிப்பீங்க)
  4. இப்ப தான் நீங்க ரொம்ப Carefula இருக்கணும் . - விழிப்போட இருக்கணும்
  5. வாங்க Snacks சாப்பிட போலாம்  - சிற்றுண்டி\நொறுக்கு
  6. டிவி யை "ON" பண்ணுங்க . - தொலைகாட்சியை போடுங்க.
  7. இந்த வழக்கை யாரு Handle பண்றது ? - யாரு கையாள்றாங்க
  8. வண்டியை எப்ப Delivery பண்ணுவீங்க ? - எப்ப அனுப்புவீங்க
  9. Actually  நீங்க Call பண்ணப்ப நான் Busiya இருந்தேன். - உண்மைல, நீங்க கூப்பிட்டப்ப நான் வேலையா இருந்தேன்.
  10. இந்த இருக்கையை நான் Occupy பண்ணிட்டேன். - இந்த இருக்கையை நான் எடுத்துக்கிட்டேன்.
  11. இந்த நிகழ்ச்சி நல்ல Reach ஆகியிருக்கு - இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.
  12. உங்க பேரு Spelling சொல்லுங்க ? - உங்க பேரை எழுத்துக்கூட்டி சொல்லுங்க.
  13. இந்த Job ரொம்ப Satisfying இருக்கு  - இந்த வேலை ரொம்ப நிறைவைத் தருது.
  14. மச்சான் நான் Signalல மாட்டிகிட்டேன்  - நான் (சாலை)விளக்குல மாட்டிக்கிடேன்.
  15. ஏன்டா Dulla இருக்கே ? - ஏண்டா தளர்ந்துருக்க?
  16. இந்த வார்த்தைக்கு என்ன Short Form ? - இந்த சொல்லுக்கு சுருக்க வடிவம் என்ன?
  17. புது Dress எடுக்க வேண்டாமா ? - புத்தாடை எடுக்க வேண்டாமா?
  18. வயிறு Fulla இருக்கு. - வயிறு நிறைஞ்சு போச்சு.
  19. அந்தக் காரை Overtake பண்ணுங்க. - அந்த மகிழுந்தை முந்துங்க.
  20. என் இப்படி indecenta behave பண்றீங்க ? - ஏன் இப்படி காட்டான் மாதிரி நடந்துக்குறீங்க?
  21. ஓவரா பேசாதீங்க. - ரொம்ப்ப் பேசாதீங்க.
  22. நான் சொல்றது ரொம்ப சிம்பிள் சார். - ரொம்ப எளிமையானதுங்க.
  23. எல்லாம் என்னுடைய Bad Luck சார் - எல்லாம் என்னோட போகூழ்.
  24. இல்ல ஒரு "Death" ஆகிப் போச்சு - ஒரு எழவாகிப் போச்சு.

இயன்றவரை தமிழிலேயே தந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது.

நன்றி.

முகவை இராம்குமார்.

Kaviyogi Vedham

unread,
Apr 9, 2012, 9:38:47 AM4/9/12
to santhav...@googlegroups.com
>>> என்று நம்புகிறேன். தங்கள் உதவியோடு. [?][?]


--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
http://kaviyogi-vedham.blogspot.com/
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp.
Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************

Niranjan Bharathi

unread,
Apr 9, 2012, 9:41:06 AM4/9/12
to santhav...@googlegroups.com




வணக்கம்,

இதுவே என் மொழியாக்கம். 
  1. டேய் இன்னிக்கு உன் பிறந்த நாள் தானே ,Treat கொடுடா  - டேய் இன்னிக்கு உன்  விருந்து 
  2. எப்போ இவரை Discharge பண்ணுவீங்க ? - நோயாளிக்கு எப்ப விடுப்பு 
  3. இப்ப தான் நீங்க ரொம்ப Carefula இருக்கணும் .- கவனமா இருக்கணும் 
  4. வாங்க Snacks சாப்பிட போலாம்  - வாங்க நொறுவை சாப்பிடலாம்
  5. டிவி யை "ON" பண்ணுங்க .-  டி.வி இப் போடுங்க 
  6. இந்த வழக்கை யாரு Handle பண்றது ? - இந்த வழக்கு யார் கையில இருக்கு / யாரு பாக்குறாங்க ?
  7. வண்டியை எப்ப Delivery பண்ணுவீங்க ?  - வண்டியைப் எப்ப கொடுப்பீங்க ?
  8. Actually  நீங்க Call பண்ணப்ப நான் Busiya இருந்தேன்.- உண்மையில நீங்க கூப்பிடப்ப நான் வேலையா இருந்தேன். 
  9. இந்த இருக்கையை நான் Occupy பண்ணிட்டேன்.-  இந்த இருக்கையை நான் எடுத்துகிட்டேன். 
  10. இந்த நிகழ்ச்சி நல்ல Reach ஆகியிருக்கு -  நல்லா போய்ச் சேர்ந்திருக்கு 
  11. உங்க பேரு Spelling சொல்லுங்க ? - உங்க பேரு எழுதக்கூடி சொல்லுங்க ?
  12. இந்த Job ரொம்ப Satisfying இருக்கு - இந்த வேலை ரொம்ப திருப்தி ஆக இருக்கு. 
  13. மச்சான் நான் Signalல மாட்டிகிட்டேன்  - மச்சான் நான் வாகன  சைகைல மாட்டிகிட்டேன். 
  14. ஏன்டா Dulla இருக்கே ? ஏன்டா மந்தமா இருக்கே 
  15. இந்த வார்த்தைக்கு என்ன Short Form ? இந்த வார்த்தைக்கு என்ன சுருக்கம் ?
  16. புது Dress எடுக்க வேண்டாமா ? - புத்தாடை எடுக்கலாமா ?
  17. வயிறு Fulla இருக்கு - வயிறு ரொம்ப நிறைஞ்சு இருக்கு
  18. அந்தக் காரை Overtake பண்ணுங்க. - அந்த வண்டியைத் தாண்டி போங்க 
  19. என் இப்படி indecenta behave பண்றீங்க ? - ஏன் இப்படி கேவலாமா நடந்துக்கரே ?
  20. ஓவரா பேசாதீங்க. -  ரொம்ப  பேசாதீங்க  ?
  21. நான் சொல்றது ரொம்ப சிம்பிள் சார். - நான் சொல்றது ரொம்ப எளிது.
  22. எல்லாம் என்னுடைய Bad Luck சார்  - எல்லாம் என்னுடைய கெட்ட நேரம்.
  23. இல்ல ஒரு "Death" ஆகிப் போச்சு - இல்ல ஒரு துக்கத்துக்கு போயிட்டு வந்தேன். 
 இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாமா ?

Niranjan Bharathi

unread,
Apr 9, 2012, 11:08:36 PM4/9/12
to santhav...@googlegroups.com

காலை வணக்கம்,

கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு மொழியக்க்கம் சரியா ?

நான் சொல்றத Seriousa எடுத்துகோங்க/எடுத்துக்காத  = நான் சொல்றத கடுமையா எடுத்துக்காத/எடுத்துக்கோ 
Are you sure ? = நிச்சயம் தானே 
Of Course நான் பண்றேன் - கண்டிப்பா நான் பண்றேன். 
Obviousa தெரியுது டா இது தப்பு = தெளிவா தெரியுது டா. இது தப்பு. 
Atleast ஒரு 200 அடிப்போமா = குறைஞ்சது ஒரு 200 ஆவது அடிப்போமா.
எனக்கு 100 ரூபாய் தரியா Please = எனக்கு தயவு செஞ்சு 100 ரூபாய் தரியா. 
ஏன் டா Tension ஆகுற/ ஏன் டா Nervousa இருக்க  = ஏன் டா பதறுற ?
Be Cool Dude = அமைதியா இரு டா மச்சான்.

வித்யாசாகர்

unread,
Apr 10, 2012, 2:56:51 AM4/10/12
to santhav...@googlegroups.com
அன்பு நிரஞ்சன் அவர்களுக்கு வணக்கம்,

மச்சான் நான் வாகன  சைகைல மாட்டிகிட்டேன்
- சைகை வேறு சைஞ்கை
வேறு, இங்கே சைஞ்கை பொருந்தும்.

உங்க பேரு எழுதக்கூடி சொல்லுங்க ? - உங்களுடைய பெயரின் எழுத்துக்களைச் சொல்லுங்களேன்? அல்லது உங்களுடைய பெயரை எழுத்துவரிசையில் சொல்லுங்களேன்?

டி.வி இப் போடுங்க - பொதுவா ஆங்கிலத்தை அப்படியே நாம ஏன் மொழி பெயர்க்கனும்? இதைக் கூட நாம போடுன்னு சொல்வதை விட, அந்த தொலைக்காட்சியை கொஞ்சம் இயக்கி விடேன்னு கேட்கலாம், இதுபோல் நம் உணர்விற்கேற்றார்போல் இயல்பாய் சிலதைச் சொல்லிப் பழகினால் இதுபோன்ற மொழிக் குறைகள் தானே நீங்கிப் போகும். வீட்டில் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அப்படித் தான் பழகுகிறோம்.

அந்த வண்டியைத் தாண்டி போங்க - அந்த மகிழுந்தை மாத்திவாங்கிப் போங்க

இல்ல ஒரு துக்கத்துக்கு போயிட்டு வந்தேன். - ஒரு மரணம் நிகழ்ந்துப் போனது' ன்னும் சொல்லலாமே..

மொத்தத்தில் ஆங்கிலக் கலப்பை அறவே மறந்து நம் மொழியில் நாம் பேசவேண்டும், நம் பிள்ளைகளை அழைக்க வேண்டும், நம் பொருளை நாம் நமக்குப் புரிய பயன்படுத்தவேண்டும். நம் மொழியை நமக்குள் நாமே மீண்டும் மீண்டும் பேசிக் கொள்ளவேண்டும்' எனும் முனைப்பு நல்ல தமிழை வருங்காலத்தில் இயல்பிலேயே நாம் பேசும் சூழலை மெல்ல மெல்லவேனும் ஏற்படுத்தலாம்..

மிக்க நன்றிகளுடன்..


வித்யாசாகர்


2012/4/10 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Apr 13, 2012, 3:38:26 PM4/13/12
to santhav...@googlegroups.com
விகடன், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் 40-50 ஆண்டுகளுக்குமுன் வந்த இதழ்களைப் படித்தால் ஆங்கிலக்கலப்பில்லாத வாக்கியங்களை அதிகம் காணலாம் என்று எண்ணுகிறேன்.

இடத்துக்கு ஏற்பச் சொல்லின் பொருள் வேறுபடக்கூடும்.

2012/4/9 Niranjan Bharathi <niranjan...@gmail.com>


காலை வணக்கம்,

கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு மொழியக்க்கம் சரியா ?

நான் சொல்றத Seriousa எடுத்துகோங்க/எடுத்துக்காத  = நான் சொல்றத கடுமையா எடுத்துக்காத/எடுத்துக்கோ 
--> நான் சொல்றத கவனத்துல வச்சுக்கோ / அவன் சொல்றத பெரிசா எடுத்துக்காத ......

Are you sure ? = நிச்சயம் தானே 
Here is an example where the context will determine the right Tamil phrase.
If someone is telling a 'news' --> நிஜமாவா?
If someone is promising to do something --> நிச்சயமா?
 
Of Course நான் பண்றேன் - கண்டிப்பா நான் பண்றேன். 
Obviousa தெரியுது டா இது தப்பு = தெளிவா தெரியுது டா. இது தப்பு. 
--> இது தப்பு. அதுல சந்தேகமே இல்ல.

Atleast ஒரு 200 அடிப்போமா = குறைஞ்சது ஒரு 200 ஆவது அடிப்போமா.
எனக்கு 100 ரூபாய் தரியா Please = எனக்கு தயவு செஞ்சு 100 ரூபாய் தரியா. 

--> The words we use in Tamil will depend on formality of the situation - informal versus formal. 'Please' is one such word.

Informal: loan from a friend: எனக்கு ஒரு 100 ரூபாய் கைமாத்தா தரயா?
Formal statement: தயவுசெய்து அமைதியாக இருக்கவும்.



ஏன் டா Tension ஆகுற/ ஏன் டா Nervousa இருக்க  = ஏன் டா பதறுற ?
Be Cool Dude = அமைதியா இரு டா மச்சான்.

அன்புடன்,
நிரஞ்சன்  


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 20, 2012, 12:33:44 PM4/20/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள நிரஞ்சன்,
 
கீழ்க்காணும் சுட்டியில் உள்ள இரா. திருமுருகனின் இலக்கண நூலில் பற்பல அயற்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன (பகுதி 23-ஐப் பார்க்கவும்). அவை உங்கள் பணிக்குப் பயன்படலாம்.
 
 
அனந்த்

 
2012/4/9 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
 
கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு மொழியக்க்கம் சரியா ?

நான் சொல்றத Seriousa எடுத்துகோங்க/எடுத்துக்காத  = நான் சொல்றத கடுமையா எடுத்துக்காத/எடுத்துக்கோ 

S.Krishnamoorthy

unread,
Apr 10, 2012, 1:13:00 AM4/10/12
to santhav...@googlegroups.com
இப்படியும் சொல்லலாம்:
ஏன் டா பதறுற ?= ஏண்டா பதட்டப்படறே?
Be Cool Dude = கொஞ்சம் சும்ம இருடா, மச்சான்!.


2012/4/10 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
S. Krishnamoorthy

Hari Krishnan

unread,
Apr 22, 2012, 7:20:12 AM4/22/12
to santhav...@googlegroups.com


2012/4/10 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>

ஏன் டா பதறுற ?= ஏண்டா பதட்டப்படறே?

ஏண்டா பதற்றப் படறே.

பதறுதல் என்பது பதற்றப்படுதல் என வடிவெடுக்கும். பதட்டம் அன்று; பதற்றம்.

--
அன்புடன்,
ஹரிகி.
Reply all
Reply to author
Forward
0 new messages