[santhavasantham] thirumuRai 9.29.9 - thiruppallANdu - 'pAlukkup pAlagan vENdi'

227 views
Skip to first unread message

aka...@gmail.com

unread,
Jun 18, 2006, 6:30:16 PM6/18/06
to santhav...@googlegroups.com

nayanmars
(naya...@yahoo.com
) எழுதியது

சேந்தனார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
திருமுறை 9.29
தலம்: கோயில் (சிதம்பரம்)

பதிக வரலாறு:

'பல்லாண்டு வாழ்க' என வாழ்த்தும் வாழ்த்தினைப் 'பல்லாண்டு' என முதற்குறிப்புப் பெயராக வழங்குவர். அஃது இங்குக் காரியவாகுபெயராய் அவ்வாழ்த்தினைக் கூறுவதாய பதிகத்தைக் குறித்துநின்றது. எனவே இறைவனைப் 'பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவது இத் திருப்பதிகம்' என்பது பெறப்பட்டது.

இறைவன் என்றும் உள்ளவனாதலின் வாழ்த்துவார் வாழ்த்தும் வாழ்த்தினானாதல் வைவார் வையும் வைவினானாதல் அவனுக்கு வருவதொன்றில்லையாயினும் வெகுளியுற்றார்க்கு அவ்வெகுளி காரணமாக அவனை வைதல் இயல்பாதல்போல அன்புற்றார்க்கும் அவ்வன்பு காரணமாக அவனை வாழ்த்தலும் இயல்பாதலின், அடைக்கும் தாழ் இல்லாத அவ்வன்பின் செயல் அவர் மாட்டு இயல்பானே வெளிப்படுவதாம். இதனை இதன் நான்காந் திருப்பாட்டிற் கூறுமாற்றானும் உணர்க. அது நிற்க கதிரவன் முன்னர்த் தாமரை மலர்தலும் ஆம்பல் குவிதலும் அதனதன் இயல்பானே ஆயவாறுபோல வாழ்த்தலும் வைதலும் செய்வார் அதுவதற்கேற்ற பயனைத் தம்மியல்பால் தாம் பெறுவார் என அறிக.

இத்திருப்பதிகம் அறுசீரடிகளாலாய பாட்டுக்களால் இயன்றது எனினும் சீர்நிலைமை வரையறையின்றியும் சில அடி சீர்மிக்கும் குறைந்தும் வரப்பெற்றுள்ளது. இது பதின்மூன்று திருப்பாட்டுக்களை உடையதாய் இருத்தல் குறிப்பிடத்தக்கது.
--------

சேந்தனார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
தலம்: கோயில் (சிதம்பரம்)
திருமுறை 9.29.9

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

தருமை ஆதீன உரை:

பொ-ரை:
பாலை உண்பதற்கு வியாக்கிரபாத முனிவர் புதல்வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால்பெறாது அழுது வருந்த, அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெருமானாய், ஒருகாலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள்செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத்திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்வதற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாகக்கொண்டு, அருளை வழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

கு-ரை:
பாலுக்கு - பாலை உண்பதற்கு. "பாலகன்" என்றது, உபமன்னிய முனிவரை. வேண்டி - விரும்பி. வியாக்கிரபாத முனிவர் மகனாராகிய உபமன்னிய முனிவர் பிள்ளைமைப் பருவத்தில் பால் பெறாது அழுது வருந்த, அவரை வியாக்கிரபாத முனிவர் கூத்தப் பெருமான் திருமுன்பிற் கிடத்துதலும், கூத்தப்பெருமான் அவருக்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட் காண்க. சிவபெருமான் திருமால் செய்த வழிபாட்டிற்கு இரங்கிச் சக்கரம் அளித்த வரலாறு வெளிப்படை. ஆலிக்கும் - வேதத்தை ஓதுகின்ற. ஆலித்தல் - ஒலித்தல். "அஞ்செவி நிறைய ஆலின" (முல்லைப் பாட்டு - 89) என்றது காண்க. வாழ்கின்ற - வாழ்வதற்கு முதலாய் நிற்கின்ற. "சிற்றம்பலமே" என்ற ஏகாரம் பிரிநிலை. பாலித்து - அருளை வழங்கி. இது 'பாலியாநின்று' என நிகழ்காலம் பற்றிநின்றது.
---
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
------
Meaning:
The Lord who bestowed the ocean of milk to the boy who cried for milk, the Lord who bestowed the 'chakra' (discus) weapon to Vishnu, the Lord who dwells in Chidambaram, the town where the brahmins reciting the vedas live, the Lord who performs the cosmic dance - We say 'May you live long' to Him.

anbudan,
V. Subramanian

Thevaram and other Saivism info: http://www.geocities.com/nayanmars/


---------------------------------
How low will we go? Check out Yahoo! Messenger’s low PC-to-Phone call rates.

[Non-text portions of this message have been removed]

------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->
Check out the new improvements in Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/gi.u7A/fOaOAA/Zx0JAA/GE2qlB/TM
--------------------------------------------------------------------~->


Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/

<*> To unsubscribe from this group, send an email to:
santhavasanth...@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/


aka...@gmail.com

unread,
Jun 18, 2006, 8:30:09 PM6/18/06
to santhav...@googlegroups.com

pas_jaya
(pas_...@yahoo.ca
) எழுதியது

நன்றி. 'பால்' கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

(சம்பந்தரின் பாடல் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.)

--- siva siva <naya...@yahoo.com> wrote:

> சேந்தனார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு


__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com


------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->

See what's inside the new Yahoo! Groups email.
http://us.click.yahoo.com/si.u7A/bOaOAA/Zx0JAA/GE2qlB/TM

Reply all
Reply to author
Forward
0 new messages