3-way distinction in sound for Tamil 'hard' consonants, K & C

11 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 2, 2009, 8:56:16 AM4/2/09
to
Forwarding my mail from a thread I started in minTamil ggroup
for emphasizing the importance of the 3-way distinctions needed
in pronunciation for Tamil 'hard' consonants: k & c.
Please note the voiceless fricative sound when k as well as c
when occurring intervocalically.

Unfortunately, as English medium schools spread even into
Tamilnadu villages and poor neighborhoods, the intervocalic -k-
which is a voiceless fricative sound is dumped along with
a voiced -g- (which is typically post-nasal occurrence).
This is what I usually term as "The Hindu" newspaper effect,
which is very harmful to Tamil language.
Writing agam, azhagu, Murugan, ulagu, piragu, varuga, ....
is evidently wrong (because of -g- ).
It can be done with a -k- (as is standard in academic works)
or a -h- as normally Eelam Tamil do For example,
http://noolaham.net

Thanks.

Dr. N. Ganesan


---------
> அப்புறம் ஜேசுதாஸ் ஐ மேற்கோள் காட்ட ஆரம்பிச்சா..........
> :-))
>தி.வா

31 மார்ச், 2009 11:53 pm அன்று, shivan . <sivan...@gmail.com>
எழுதியது:


> > பாடுபவரின் உச்சரிப்பு பிழை உதாரணமாகாது என்றே நினைக்கிறேன்.


பல அண்டை மாநிலத்தாருக்கு
ககர, சகரத்தின் மூவொலி வேற்றுமை
பயிற்றப்படாமையே இந்தப் பிரச்சினையின்
மூலகாரணம். அவர்களைச் சொல்லிக்
குற்றமில்லை. எல்லாம் ஆங்கிலத்தில்
Muruga என்று எழுதிப் படித்தலின் விளைவு.

இன்னும் ஒரு 20 மொழியியல் உசாத்துணை
ஆதாரங்களுடன் கட்டுரை தருவேன்.

> We need 3-way distinction for -k- and -c- in Tamil:
> க் - k (while doubling), h (ḥ or ḵ or q) (intervocalical), g (post-nasal)
> ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).


செல்வா அவர்கள் அருணா சாயிராமின் பிழையான
முருகா, முருகா ஒலிப்பைக் குறிப்பிட்டிருந்தார்.
கிரந்த எழுத்து ஓரிரு இடத்தில் கூகுளில்
தேடினால் கிடைக்கும் ஆனாலும் அது பழைய தமிழ் ஆகுமா?
அது போன்றது அருணாவின் ககர ஒலிப்பும்,
சிறுவன் அனந்தராமனின் ஒலிப்பும்.
அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் திருத்தி விடுவர்.
யாரிடமாவது ஃபோன் எண், இ-மெயில் முகவரி
இருந்தால் தாருங்கள். தொடர்பு கொள்ளலாம்.

அருணா அரிய பாடகர், தமிழின் பழைய
கீர்த்தனங்களுக்குப் புத்துயிர் கொடுத்து
வருபவர். அருமையான சங்கீத ஞானம்
உண்டு. ஸ்ரீமதி அருணாவைத் தெரிந்தவர்கள்
(சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் நேரும்,
ககர எழுத்தில் ஃப்ரிகேட்டிவ் ஒலிப்பை
விளக்க வேண்டும்). அவரைச் சொல்லமுடியாது.
அருணா பம்பாயில் பிறந்து வளர்ந்த
பெண்மணி. நம்பி அனந்தராமன் சிறுவன்போல்,
அருணா, ... இவர்கள் எல்லாம் ஆங்கில
எழுத்தில் தமிழ்க் கீர்த்தனங்கள் படிக்கிறார்களா?
அப்படி எழுதிப் பாடுவோர் அனேகர் உண்டு.


---------------


முருகா, முருகா பாடலின் ஒலிப்பைக் கேட்க:


சூலமங்கலம் ராதா-ஜெயலக்‌ஷ்மி சகோதரியர்:
http://www.youtube.com/watch?v=zYmMJQFhr04


கலைமாமணி கீதா ராஜசேகர்:
http://www.youtube.com/watch?v=sZ6qJo-rOoQ


இந்த உயிரெழுத்தின் இடையுறும் ககர ஒலிப்பை
‘voiceless dorso-velar fricative’ என்று ஒலியனியல் மொழிநிபுணர்
வரையறுத்துள்ளனர். இந்த voiceless dorso-velar fricative வளியொலியை
பல மொழிகளில் h (example: Hungarian) என்றும்,
அல்லது ḥ (Arabic), q (Arabic), ḵ or kh (Hebrew), ch (German, e.g.,
Bach), என்றும் குறிப்பிடுகின்றனர். ஐபிஏ ஸிம்பல்: [X].
எளிதில் புரிய, h அல்லது ḥ போதும்.
மொழியியல் ஆதாரங்களுக்குப் பார்த்தருள்க:
http://groups.google.com/group/minTamil/msg/9a2ac2aba756b3dd


---------------


'pAr mahaLE pAr' - an old film song:
http://video.google.com/videoplay?docid=5909923084720230536


Vairamuthu, a very popular poet in Tamil Nadu
reading his poem:
http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk


P. Suseela, a popular lady singer in 60s:
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong851.ram


Sudha Raghunathan, sings Aarumuha, :
http://www.youtube.com/watch?v=-Dfd0hyGb2M


Bangalore Ramani Ammal
Muruhaa, Maal Maruhaa:
http://www.youtube.com/watch?v=xk4FDZgJLTo


Muruha, Muruha - K. B. SundarambaL (of Pazhani):
http://www.youtube.com/watch?v=O-zgx1UuvN0


Madurai Somu - Muruha, Muruhayyaa:
http://www.youtube.com/watch?v=82qfhI7uZf0


azhahu sirikkirathu:
http://www.youtube.com/watch?v=vUhDgI_VOV4


Variyar SwamikaL: Muruhaa, Muruhaa:
http://www.youtube.com/watch?v=0LLPkumMjn4


இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைக்
காட்டலாம்.

> We need 3-way distinction for -k- and -c- in Tamil:
> க் - k (while doubling), h (ḥ or ḵ or q) (intervocalical), g (post-nasal)
> ச் - c (while doubling), s (intervoclaical), j (post-nasal).
> Obviously, the media (e.g., The Hindu) way of
> writing Tamil intervocalic -k- as voiced -g- is
> quite wrong, and we need to start using
> h, ḥ or or ḵ or q to describe the Tamil sound more correctly.


இவ்விழை முற்றுகிறது. முக்கியமாய்
தென் தமிழகம், ஈழம் பழந்தமிழ்
மரபுகள் சில கொடுக்கணும். அவ்வளவே.

அன்பிணை,
நா. கணேசன்

Pas Pasupathy

unread,
Apr 2, 2009, 2:12:33 PM4/2/09
to santhav...@googlegroups.com


2009/4/2 N. Ganesan <naa.g...@gmail.com>

Forwarding my mail from a thread I started in minTamil ggroup
for emphasizing the importance of the 3-way distinctions needed
in pronunciation for Tamil 'hard' consonants: k & c.
Please note the voiceless fricative sound when k as well as c
when occurring intervocalically.

Unfortunately, as English medium schools spread even into
Tamilnadu villages and poor neighborhoods, the intervocalic -k-
which is a voiceless fricative sound is dumped along with
a voiced -g- (which is typically post-nasal occurrence).
This is what I usually term as "The Hindu" newspaper effect,
which is very harmful to Tamil language.
Writing agam, azhagu, Murugan, ulagu, piragu, varuga, ....
is evidently wrong (because of -g- ).
It can be done with a -k- (as is standard in academic works)
or a -h- as normally Eelam Tamil do For example,
http://noolaham.net
 
 
:-))
 
or as the example , in
 
 
Pasupathy
2-4-09
 
 


Thanks.

Dr. N. Ganesan

Siva Siva

unread,
Apr 2, 2009, 8:55:02 PM4/2/09
to santhav...@googlegroups.com
audio clip attached.
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
murugA murugA murugaiyA.mp3

Kaviyogi Vedham

unread,
Apr 3, 2009, 5:19:11 AM4/3/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
ரொம்ப அழகான ருசியுள்ள இழை இது.
 பல மேற்கோள்களையும், பாடல்களையும் இவண் இட்ட சிவா, கணேசன் இவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். வாழ்க!,
யோகியார்

2009/4/2 N. Ganesan <naa.g...@gmail.com>

nahupoliyan

unread,
Apr 4, 2009, 4:16:32 AM4/4/09
to சந்தவசந்தம்
அடடா, இந்த அரியவிழை முற்றுப்பெறும்போதுதான் காணக்கிடைத்திருக்கிறது.
தமிழ் ஒலிவடிவ வரிவடிவங்களில் ஏற்பட்டுவரும் மயக்க/குழப்ப/மரூ மாற்றங்கள்
பற்றித்
தனியே கதறிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு
இப்போதாவது
உங்கள் தொடர்பு உண்டாயிருப்பது என் நற்பேறுதான்.

தமிழில் உச்சரிப்புகள் பற்றியும் பிற லிபியில் எழுதப்போய் அநியாயமாக
மலிந்து வளர்ந்துகொண்டிருக்கும் கேடுகள் பற்றியும் விவரமாக விசாரம்
செய்ய ஆசை.
அதற்காக ஒரு புதியவிழை, 'சொதப்பிலக்கணம்' என்ற பெயரில் துவக்க
'முஸ்தீப்புகள்'
பண்ணிக்கொண்டிருந்தேன்; சரியான தருணத்தில் உங்கள் இவ்விழை
தெரியவந்திருக்கிறது.

இந்தக் 'க', 'ச' வகைப்பாடு தவிர

* வல்லின றகரம் - தமிழகத்தார் ஒருபுறமும் ஈழத்தார் ஒருபுறமும் 'ற'-
வைப்படுத்தும் பாடு,
* நகர-னகர மயக்கம்,
* ஸம்ஸ்க்ருத 'ஜ்ஞ' வின் பிறழ்ச்சிகள் க்ஞ / ஞ்ஞ / வடக்கத்தியாரின்
'gya', மராட்டியரின் 'dnya'
* க்ஷகரத்தின் உச்சரிப்புக்கூத்துகள்,
தமிழல்லாத கூட்டுமெய்யொலியைத் தமிழ்ப்படுத்தும் இடைச்செருகுயிரான
குற்றியல் இகர
உகரங்கள்பற்றிய விதிகளில் தற்போது கண்டவர் கண்டபடி செய்யும் தவறுகள்
* 'இவை தமிழொலிகளல்ல' என்றுசொல்லி அவற்றுக்கான தனியெழுத்துகள்மீதும்
தடையாணை
போட்டுவிட்டு, அந்தவொலிகள் இல்லாத சொல்லிலும் தாமே அவ்வொலிகளை
உச்சரிக்கும்
கேலி க்கூத்து - e.g. 'ஸெந்தமிழ்', ஸொல், ஸொன்னது, 'ஸிந்தனை',
* இதெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல,
தமிழுக்கேவுரிய, எழுத்துகளின் இடத்துக்கேற்றவுச்சரிப்பு மரபுவிதிகளே
சிதைய
bathmini, bathmaa, gaandhimadhi, davam, dyaaham, vidhyaasam,
adhyaavasiyam,
bayilvan, balti, juut, jagadai etc. etc.

ஆகிய தலைப்புகளில் நான் ஏற்கெனவே வேறிடங்களில் எழுதிப்
பகிர்ந்துகொண்டுள்ளவற்றை இங்கேயும் விரிக்கப் பார்க்கிறேன்.

balu

On Apr 2, 5:56 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> Forwarding my mail from a thread I started in minTamil ggroup
> for emphasizing the importance of the 3-way distinctions needed
> in pronunciation for Tamil 'hard' consonants: k & c.
> Please note the voiceless fricative sound when k as well as c
> when occurring intervocalically.
>
> Unfortunately, as English medium schools spread even into
> Tamilnadu villages and poor neighborhoods, the intervocalic -k-
> which is a voiceless fricative sound is dumped along with
> a voiced -g- (which is typically post-nasal occurrence).
> This is what I usually term as "The Hindu" newspaper effect,
> which is very harmful to Tamil language.
> Writing agam, azhagu, Murugan, ulagu, piragu, varuga, ....
> is evidently wrong (because of -g- ).
> It can be done with a -k- (as is standard in academic works)

> or a -h- as normally Eelam Tamil do For example,http://noolaham.net

N. Ganesan

unread,
Apr 5, 2009, 7:13:51 AM4/5/09
to சந்தவசந்தம்

நன்றி பாலு சார்! விரிவாக, தனித்தனி இழைகளில் எழுதவும்.
நாங்களும் தெரிந்ததைப் பின்னூட்டாகத் தருகிறோம்.

அன்புடன்,
நா. கணேசன்

> balu

> ...
>
> read more »

செல்வா

unread,
Apr 6, 2009, 3:56:18 PM4/6/09
to சந்தவசந்தம்
வணக்கம்.

நான் நெடுக கணேசனுடன் உரையாடி
விடைபெற்றுவிட்ட அந்த இழையில்
இருந்து இங்கும் ஒன்றை எடுத்து விட்டுருக்கின்றார்!!

நான் இங்கும் இது பற்றி வாதாடவோ, கருத்தாடவோ
நினைக்கவில்லை, ஆனால் என் நிலை என்னவென்று மட்டும்
சுருக்கமாகக் கூறுகிறேன்.

ககரத்தின் *முறையான* ஒலிப்பு இரண்டுதான்.
நுட்பம் பார்த்தால் நூறும் கொள்ளும்.
1) முதல் எழுத்தாகவோ, வல்லின ஒற்று முன் வந்தாலோ மட்டுமே வலித்து (k)
ஒலிக்கும்
2) மற்ற இடங்களில் மெலிந்து ஒலிக்கும் (மற்ற இடங்களாவன
இனமான ங், ன் முன் வருதல், புள்ளி வைத்த எழுத்து முன் வாராதிருக்கும்
இடைவரும் ககரம். எ.கா அழகு, பகுதி, முருகன், அழகன்.).

இடைவரும் ககரத்தில், முற்பகுதியில், *சிறிதளவு* காற்றொலி வருதல் உண்டு.
இது
நுட்பம். இப்படிப்பட்ட சிறு சிறு நுட்பங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும்-
பல
எழுத்துச்சூழல்களில். காற்றொலியின் அளவை வெவ்வேறு மடங்கு
மிகைப்படுத்துதல் (பேச்சு வழக்கில்) பல பகுதிகளில் வாழும்
பல குழுமங்களில் நிகழ்கின்றது.
ஆனால் முறையான ஒலிப்பு g.
காற்றொலி சிறிதளவு கலந்திருப்பினும் அதுவும் க், ங் தோன்றும் *அதே*
இடத்தில் (dorso-velar) தோன்றுவதே (இதனை
எழுத்தொலி நுட்பியலர் voiceless dorso-velar fricative என்று கூறி
அதற்கு ஒலியன் இயல் குறியாகிய [x] ஐ இடுகின்றனர்.
இதுவும் கொச்சையான பேச்சொலி பெயர்ப்பில் இருந்தே).

இவ்வொலி glottal fricative (தொண்டையில்
தோன்றும் காற்றொலியாகிய h) அல்ல.

மெல்லின ஒற்று வந்தால்
சிறிதளவு மூக்கொலியும், இடைவரும் ககரமாக வந்தால் சிறிதளவு
காற்றொலியும் வரும், ஆனால் சரியான ஒலிப்பு பெரும்பான்மையும் g.

ஒருசிலர் வருவாஹ, வாராஹ, சொன்னாஹ என்று பேச்சுவழக்கில்
மிகையாக காற்றொலி கலந்து பேசினால் அதுதான் சரியான ஒலிப்பு என்று
கூறுதல் பொருந்தாது. சிலர் மகன் (magan) என்பதை,
மவன், மஹன், மஹெ(ன்), மஹே(ங்), மோன் என்றும் பலவாறு கூறுகின்றனர்.
"சரியான" ஒலிப்பு magan. (இங்கே ககரத்தின் முன் பகுதியில் சிறிதளவு
காற்றொலி நுட்பமாய் வரும். அது 10%, 20%? ஆனால் முக்கிய ஒலிப்பு ga).

முருகன் என்னும் ஒலிப்பை ஆக்சுபோர்டு பல்கலைக்கழக
ஆய்வாளர் ஒலியலை அதிர்வெண் படத்துடன் தந்து
Murugan என்றே எழுத்துப் பெயர்த்துக் காட்டியுள்ளார்.
அவரிடம் நேரடியாகவே இக் கேள்வியைக் கேட்டிருக்கின்றேன்.
என் மடலின் படியை கணேசனுக்கும் அனுப்பியிருந்தேன்.
(இன்னும் மறுமொழி அவர்கள் தரவில்லை)
Elinor Keane's (Oxford U, Phonetics Lab) report... see
http://aune.lpl.univ-aix.fr/~sprosig/sp2006/contents/papers/PS2-01_00...

நான் கூறவந்தது முறையான ஒலிப்பைப் பற்றியது மட்டுமே.

அருமையாய் ரசித்துப் பாடும் சிறுவன் ஈரோடு அனந்தராமன் பாடுவதைக்
கேட்டு இன்புறலாம்:
http://www.youtube.com/watch?v=g9c95fVT4OE

அன்புடன்
செல்வா


On Apr 2, 8:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> audio clip attached.
>
>  murugA murugA murugaiyA.mp3
> 1252KViewDownload
>
> On Thu, Apr 2, 2009 at 2:12 PM, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>wrote:
>
>
>
>
>
>
>
> > 2009/4/2 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >> Forwarding my mail from a thread I started in minTamil ggroup
> >> for emphasizing the importance of the 3-way distinctions needed
> >> in pronunciation for Tamil 'hard' consonants: k & c.
> >> Please note the voiceless fricative sound when k as well as c
> >> when occurring intervocalically.
>
> >> Unfortunately, as English medium schools spread even into
> >> Tamilnadu villages and poor neighborhoods, the intervocalic -k-
> >> which is a voiceless fricative sound is dumped along with
> >> a voiced -g- (which is typically post-nasal occurrence).
> >> This is what I usually term as "The Hindu" newspaper effect,
> >> which is very harmful to Tamil language.
> >> Writing agam, azhagu, Murugan, ulagu, piragu, varuga, ....
> >> is evidently wrong (because of -g- ).
> >> It can be done with a -k- (as is standard in academic works)
> >> or a -h- as normally Eelam Tamil do For example,
> >>http://noolaham.net
>
> > :-))
>
> > or as the example , in
>
> >http://groups.yahoo.com/group/thuRaimuham/
>
> > Pasupathy
> > 2-4-09
>
> >> Thanks.
>
> >> Dr. N. Ganesan
>

> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Apr 7, 2009, 10:20:21 AM4/7/09
to santhav...@googlegroups.com

On Apr 6, 4:02 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:

> அன்பு கணேசன்

> புதிதாக இந்த குழுவில் இணைந்திருப்பதால், இது சம்பந்தமாக இதற்கு முன்
> தாங்கள் சொன்ன விஷயங்களை சுருக்கமாக தந்தால் மகிழ்ச்சியடைவேன். இணைய
> பக்கத்தில் மடல் விரிய மிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

உயிரெழுத்தின் இடையுறும் ககர ஒலிப்பை
‘voiceless dorso-velar fricative’ என்று ஒலியனியல் மொழிநிபுணர்
வரையறுத்துள்ளனர். இந்த voiceless dorso-velar fricative வளியொலியை
பல மொழிகளில் h (example: Hungarian) என்றும்,
அல்லது ḥ (Arabic), q (Arabic), ḵ or kh (Hebrew), ch (German, e.g.,
Bach), என்றும் குறிப்பிடுகின்றனர். ஐபிஏ ஸிம்பல்: [X].
எளிதில் புரிய,  h அல்லது ḥ போதும்.
மொழியியல் ஆதாரங்களுக்குப் பார்த்தருள்க:
http://groups.google.com/group/minTamil/msg/9a2ac2aba756b3dd

For listening to the voiceless fricative -k-/-h- sound in famous
songs:
http://groups.google.com/group/minTamil/msg/b7d86f387580debd

Hope this helps,
N. Ganesan

N. Ganesan

unread,
Apr 7, 2009, 10:58:38 AM4/7/09
to சந்தவசந்தம்


On Apr 6, 2:56 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
>
> ககரத்தின் *முறையான* ஒலிப்பு இரண்டுதான்.
>


Let me just cite 3 Tamil linguists and phoneticians:

(a)
Francis Britto, Diglossia: A study of the theory
with application to Tamil, 1986: George Washington univ. press.
360 p.
On pronunciation of -k- and -c-, F. Britto, p. 171


------------------------------------------------------
Native
grapheme - Phone(s) - IPA symbol - Example


k -------- [k] -------- k ------- [kaDay] 'shop'
k -------- [g] -------- g ------- [seGgal] 'brick'
k -------- [h] -------- x ------- [pahay] 'enmity'


c -------- [c] -------- t[S] ------ [paccay] 'green'
c -------- [j] -------- d[z] ------ [iJji] 'ginger'
c -------- [s] -------- s --------- [saDay] 'pigtail'


-------------------------------------------------------


(b)

On the intervocalical -k- pronounced as -h-,
also refer to G. L. Hart, H. Heifetz, The four hundred
songs of war and wisdom: An anthology of poems
from classical Tamil, 1999, Columbia UP.
Esp. Short guide to Tamil pronunciation on pages ix and x
From p. x., George Hart writes,
"Single k between vowels is like English h (only a bit
harder): *akam* is pronounced as if it were aham.
*Gk* is like ng in anger."


http://groups.google.com/group/minTamil/msg/9a2ac2aba756b3dd

(c) Edinburgh phoentician and Tamil linguist, R. E. Asher
also gives the voiceless fricative sound of -k- from Tamil speech.
See Croom series of description for Tamil.

N. Ganesan
Reply all
Reply to author
Forward
0 new messages