மதிசூடி துதிபாடி

187 views
Skip to first unread message

Siva Siva

unread,
Oct 9, 2009, 12:14:57 PM10/9/09
to santhavasantham

2009-10-09
மதிசூடி துதிபாடி
----------------------
நதியோடு மதிசூடும்
பதிநாடும் மதியோடு
துதிபாடு; நிதியோடு
கதிகூடும் விதிதானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Oct 9, 2009, 10:55:22 PM10/9/09
to santhav...@googlegroups.com

அமைப்பு அருமை

இதை இப்படிப் பிரித்துப் பொருள்கொள்ள வேண்டுமோ?

 

நதியோடு மதிசூடும்

பதி

நாடும் மதியோடு

துதிபாடு;

நிதியோடு

கதிகூடும் விதிதானே.

 

இலந்தை



2009/10/9 Siva Siva <naya...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 9, 2009, 11:16:06 PM10/9/09
to santhav...@googlegroups.com

உடுமாறும் கடல்மீது

விடிகாலை அடிவானம்

படர்கோளம் வடிவாகும்

பிடிமானம் திடமாகும்

 

இலந்தை



2009/10/10 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 9, 2009, 11:19:06 PM10/9/09
to santhav...@googlegroups.com
ithaiyee onpathusiir viruththamaaka maarri ezuthalaam

2009/10/10 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Siva Siva

unread,
Oct 9, 2009, 11:44:00 PM10/9/09
to santhav...@googlegroups.com
ஆமாம்.

(
கங்கையையும் பிறைச்சந்திரனையும் அணியும் தலைவனை நாடுகிற அறிவோடு அவன் புகழைப் பாடுவாயாக; அருள்நிதியும் நற்கதியும் பெறும் முறை இதுவே. )


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/10/9 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 10, 2009, 3:36:45 AM10/10/09
to santhav...@googlegroups.com

உடுமாறும் கடல்மீது

விடிகாலை அடிவானம்

படர்கோளம் வடிவாகும்

பிடிமானம் திடமாகும்

 

இலந்தை

இதையே கொஞ்சம் மாற்றி ஒன்பதுசீர் விருத்தமாக மாற்றி எழுதலாம்

 

அதன் ஒரு அடி

 

உடுமாறும் கடல்மீது விடிகாலை அடிவானம்

படர்கோளம் வடிவாகும் பிடிமானம் திடமா கும்மே

 

இலந்தை



2009/10/10 Siva Siva <naya...@gmail.com>

srinivasan s

unread,
Oct 10, 2009, 5:34:10 AM10/10/09
to santhav...@googlegroups.com
இப்படி மாற்றினால் எப்படி:
 
உடுமாறும் கடல்மீது
விடிகாலை அடிவானம்
படர்கோளம் வடிவாகும்
பிடிமானம் திடமாமே.
 
தவறிருப்பின் மன்னிக்கவும்.
அன்புடன்
அன்பில் சீனிவாசன்

 
2009/10/10 Siva Siva <naya...@gmail.com>

Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Siva Siva

unread,
Oct 13, 2009, 6:50:50 PM10/13/09
to santhavasantham
http://bhaaluu.blogspot.com/2005_04_01_archive.html

.....................

4) stragviNii
This is the first chhanda that wasn't mentioned before. If the syllable pattern in each charaNa is {2 1 2} X 4, it is called as stragviNii chhanda. Very beautiful poems are present in this very regular meter, which oscillates between long and short syllables. A few examples follow:

Example(s):

achyutaM keshavaM raamanaaraayaNaM |
kRRiShNadaamodaraM vaasudevaM hariM ||
shriidharaM maadhavaM gopikaavallabhaM |
jaanakiinaayakaM raamcha.NdraM bhaje ||
---  Adi Shankaracharya, "Achyutashtakam''
.........................
.........................


2009/10/9 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Oct 14, 2009, 6:03:29 PM10/14/09
to santhavasantham
தாள்தொழாய் நெஞ்சமே
------------------------
1)
ஈசனார் மீதிலோர் பூச்சரம் விட்டவன்
நாசமாய் வீழவே கண்ணினால் பார்த்தவர்
நேசமார் நெஞ்சினர் வாசமார் பூவினால்
பூசைகள் செய்யவான் வாழ்வுதான் ஈவரே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/10/13 Siva Siva <naya...@gmail.com>
http://bhaaluu.blogspot.com/2005_04_01_archive.html

.....................

4) stragviNii
This is the first chhanda that wasn't mentioned before. If the syllable pattern in each charaNa is {2 1 2} X 4, it is called as stragviNii chhanda. Very beautiful poems are present in this very regular meter, which oscillates between long and short syllables. A few examples follow:

Example(s):

achyutaM keshavaM raamanaaraayaNaM |
kRRiShNadaamodaraM vaasudevaM hariM ||
shriidharaM maadhavaM gopikaavallabhaM |
jaanakiinaayakaM raamcha.NdraM bhaje ||
---  Adi Shankaracharya, "Achyutashtakam''
.........................
.........................


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Oct 14, 2009, 6:18:42 PM10/14/09
to santhav...@googlegroups.com
அருமை.
 
சந்த இலக்கணம்  
அடி =  5 மாத்திரை கூவிளம் நான்கு
 
என்ற வாய்பாடு சொல்லலாம்.. சம்பந்தர் பாடியுள்ளார்.
 
-இல் பயிற்சி 29.1.6 பார்க்கவும்.
( தங்கமணி பயிற்சிக்கு விடை கொடுத்தாரா என்பது
நினைவில்லை!:-))
2009/10/14 Siva Siva <naya...@gmail.com>

Pas Pasupathy

unread,
Oct 14, 2009, 6:41:41 PM10/14/09
to santhav...@googlegroups.com


2009/10/14 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

அருமை.
 
சந்த இலக்கணம்  
அடி =  5 மாத்திரை கூவிளம் நான்கு
 
என்ற வாய்பாடு சொல்லலாம்.. சம்பந்தர் பாடியுள்ளார்.
 
-இல் பயிற்சி 29.1.6 பார்க்கவும்.
( தங்கமணி பயிற்சிக்கு விடை கொடுத்தாரா என்பது
நினைவில்லை!:-))
 
 
 
மன்னிக்கவும்! தங்கமணி பதிலும் கொடுத்திருக்கிறார்.
(கட்டுரையில்  உள்ள பிழைகளையும் சுட்டியிருக்கிறார்! )
 
 
 
 
(TSC fonts)

thangamani

unread,
Oct 15, 2009, 3:51:29 AM10/15/09
to சந்தவசந்தம்
நுதல்கண்ணால் மதனாரை
வதம்செய்தார் பதம்நாடி
நிதமோதும் சதமான
பதநாமம் இதமாமே.

சிவசிவா!சரிபார்க்கவும்.ஈற்றுச் சீர் ஆறுமாத்திரைகள்.சரியா?

அன்புடன்,
தங்கமணி.

On Oct 9, 9:14 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009-10-09
> மதிசூடி துதிபாடி
> ----------------------
> நதியோடு மதிசூடும்
> பதிநாடும் மதியோடு
> துதிபாடு; நிதியோடு
> கதிகூடும் விதிதானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Oct 16, 2009, 3:50:14 PM10/16/09
to santhavasantham
2)
சீலனாய்ச் சேவடிக் கன்புசெய் நற்றவப்
பாலகன் வாழுநாள் ஆனதென் றண்டிய
காலனார் மாளவோர் காலினால் செற்றவன்
சூலமார் கையினன் பேரருங் காவலே.
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/10/14 Siva Siva <naya...@gmail.com>

தாள்தொழாய் நெஞ்சமே
------------------------
1)
ஈசனார் மீதிலோர் பூச்சரம் விட்டவன்
நாசமாய் வீழவே கண்ணினால் பார்த்தவர்
நேசமார் நெஞ்சினர் வாசமார் பூவினால்
பூசைகள் செய்யவான் வாழ்வுதான் ஈவரே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 17, 2009, 5:32:03 PM10/17/09
to santhav...@googlegroups.com

அன்புள்ள மணி,

அழகான அமைப்பும் கருத்தும் கொண்ட பாடல்கள். அடிதோறும் சீர் மோனை இருப்பின் இன்னும் சிறக்கும் என நினைக்கிறேன். 

அனந்த்
 
2009/10/16 Siva Siva naya...@gmail.com

Siva Siva

unread,
Oct 18, 2009, 9:56:58 PM10/18/09
to santhav...@googlegroups.com
ஆமாம். அடிக்குள் மோனை அமைந்தால் ஒலிநயம் இன்னும் கூடும்.

இந்த ஸ்ரக்விணீ அமைப்புப் பாடல்களில் புணர்ச்சியோடு நோக்கும்பொழுது முதல் 3 சீர்களின் ஈற்றில் நெடிலோ ஒற்றோ அமையவேண்டுவதால் சொல்ல வரும் கருத்துக்கேற்ப அது சற்றுச் சிரமமாக இருக்கலாம்.

2009/10/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Oct 18, 2009, 10:00:29 PM10/18/09
to santhavasantham

3)
முப்புரம் சாம்பலாய் வீழுமா றத்தினம்
வெற்புவில் கொண்டுமோர் அம்பையும் விட்டிலன்
அப்புவெண் திங்களைச் சென்னிமேல் வைத்தவன்
அற்புதன் பேர்நிதம் சிந்திநீ நெஞ்சமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/16 Siva Siva <naya...@gmail.com>
2)

thangamani

unread,
Oct 19, 2009, 5:39:32 AM10/19/09
to சந்தவசந்தம்
பாதியன் வேதியன் பார்வதி நாயகன்
சோதியுன் பேரருள் துய்த்திடும் பேறருள்
ஆதியென் றொன்றிலை அந்தமென் றொன்றிலை
நாதியென் றுன்னையே நம்பினேன் ஈசனே!

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

SUBBAIER RAMASAMI

unread,
Oct 19, 2009, 5:48:10 AM10/19/09
to santhav...@googlegroups.com

மிகச் சிறப்பு

இலந்தை


2009/10/19 thangamani <tvthan...@gmail.com>

nahupoliyan

unread,
Oct 19, 2009, 6:45:34 AM10/19/09
to சந்தவசந்தம்
sragvini srak=garaland

On Oct 14, 3:50 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> http://bhaaluu.blogspot.com/2005_04_01_archive.html
>
> .....................
>
> 4) stragviNii
> This is the first chhanda that wasn't mentioned before. If the syllable
> pattern in each charaNa is {2 1 2} X 4, it is called as stragviNii chhanda.
> Very beautiful poems are present in this very regular meter, which
> oscillates between long and short syllables. A few examples follow:
>
> Example(s):
>
> achyutaM keshavaM raamanaaraayaNaM |
> kRRiShNadaamodaraM vaasudevaM hariM ||
> shriidharaM maadhavaM gopikaavallabhaM |
> jaanakiinaayakaM raamcha.NdraM bhaje ||
> ---  Adi Shankaracharya, "Achyutashtakam''
> .........................
> .........................
>

> 2009/10/9 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-10-09
> > மதிசூடி துதிபாடி
> > ----------------------
> > நதியோடு மதிசூடும்
> > பதிநாடும் மதியோடு
> > துதிபாடு; நிதியோடு
> > கதிகூடும் விதிதானே.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> > --
> >http://nayanmars.netne.net/
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Oct 19, 2009, 9:14:33 AM10/19/09
to சந்தவசந்தம்
திரு.இலந்தை அவர்களுக்கு,
தங்கள் பாராட்டுக்கு
மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Oct 19, 2:48 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> மிகச் சிறப்பு
>
> இலந்தை
>

> 2009/10/19 thangamani <tvthangam...@gmail.com>

> > > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Oct 19, 2009, 7:49:13 PM10/19/09
to santhav...@googlegroups.com


2009/10/19 thangamani <tvthan...@gmail.com>

பாதியன் வேதியன் பார்வதி நாயகன்
சோதியுன் பேரருள் துய்த்திடும்  பேறருள்
ஆதியென் றொன்றிலை அந்தமென் றொன்றிலை
நாதியென் றுன்னையே நம்பினேன் ஈசனே!

சிவா!சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.


1) பாடல் இனிமையாக உள்ளது.

2) "பார்வதி நாயகன்" என்ற இடத்தில் 'பார்வதி' என்பது 'குரு-லகு-குரு' அமைப்பிலிருந்து சற்று மாறுபடுகிறது. "பார்வதிந் நாயகன்" என்ரு ஒற்று விரித்தல் விகாரமாக ஆக்கலாமோ?

அதே போல், "பேரருள் துய்த்திடும்" என்பது 'பேரரு டுய்த்திடும்' என்று புணரும் என எண்ணுகிறேன். அங்கும் ஒற்று விரித்தல் தேவைப்படலாம்.

3) "பாதியன் வேதியன் பார்வதி நாயகன் ..." என்று படர்க்கையில் சொல்லிப் பின் முடிவில் ஈசனே எண்று முன்னிலையில் உள்ளதே.

பாதியா, வேதியா, நாயகா,,,, ஆதியென் றொன்றிலாய், , என்பன போல் அமையவேண்டுமோ?

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Oct 19, 2009, 7:52:01 PM10/19/09
to santhavasantham

4)
பாற்கடல் மத்திடும் போதெழும் வல்விடம்
நாற்புறம் பாயவா னோர்பயந் தேத்தவும்
காப்பதற் காயதைப் போனகம் செய்தவன்
மூப்பிலா மூத்தவன் பேருரைத் துய்ம்மினே.

பதம் பிரித்து:
பாற்கடல் மத்திடும் போ(து) எழும் வல்விடம்
நாற்புறம் பாய, வானோர் பயந்(து) ஏத்தவும்,
காப்பதற்காய் அதைப் போனகம் செய்தவன்,
மூப்(பு) இலா மூத்தவன் பேர் உரைத்(து) உய்ம்மினே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/18 Siva Siva <naya...@gmail.com>

3)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Oct 20, 2009, 5:45:01 AM10/20/09
to சந்தவசந்தம்
பாதியன் வேதியன் பக்தரின் நாயகன்
சோதியுன் பேரருட் துய்த்திடும் பேறருள்

ஆதியென் றொன்றிலை அந்தமென் றொன்றிலை
நாதியென் றுன்னையே நம்பினேன் ஈசனே!


மேல்கண்டவாறு இட்டுள்ளேன்.பார்க்கவும்.சிவா!பிழை
சுட்டியமைக்கு நன்றி!

//1) பாடல் இனிமையாக உள்ளது.//
நன்றி!சிவா!

2) "பார்வதி நாயகன்" என்ற இடத்தில் 'பார்வதி' என்பது 'குரு-லகு-குரு'
அமைப்பிலிருந்து சற்று மாறுபடுகிறது. "பார்வதிந் நாயகன்" என்ரு ஒற்று
விரித்தல்
விகாரமாக ஆக்கலாமோ?

பாதியன் வேதியன் பக்தரெம் நாயகன் --- சரியா?


//அதே போல், "பேரருள் துய்த்திடும்" என்பது 'பேரரு டுய்த்திடும்' என்று
புணரும்
என எண்ணுகிறேன். அங்கும் ஒற்று விரித்தல் தேவைப்படலாம்.//

பேரருட் துய்த்திடும் - சரியா?


//3) "பாதியன் வேதியன் பார்வதி நாயகன் ..." என்று படர்க்கையில் சொல்லிப்
பின்
முடிவில் ஈசனே எண்று முன்னிலையில் உள்ளதே.//

அண்மை விளியாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.
நீ என்பது தொக்கிநிற்கிறது.

//பாதியா, வேதியா, நாயகா,,,, ஆதியென் றொன்றிலாய், , என்பன போல்
அமையவேண்டுமோ?//
பாதியன்,வேதியன்,ஆதிஎன்றொன்றிலை,அந்தமென்றொன்றிலை -- இவை முன்னிலை
என்பது என் எண்ணம்.தவறென்றால் திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Oct 19, 4:49 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009/10/19 thangamani <tvthangam...@gmail.com>


>
> > பாதியன் வேதியன் பார்வதி நாயகன்
> > சோதியுன் பேரருள் துய்த்திடும்  பேறருள்
> > ஆதியென் றொன்றிலை அந்தமென் றொன்றிலை
> > நாதியென் றுன்னையே நம்பினேன் ஈசனே!
>
> > சிவா!சரிபார்க்கவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> 1) பாடல் இனிமையாக உள்ளது.
>
> 2) "பார்வதி நாயகன்" என்ற இடத்தில் 'பார்வதி' என்பது 'குரு-லகு-குரு'
> அமைப்பிலிருந்து சற்று மாறுபடுகிறது. "பார்வதிந் நாயகன்" என்ரு ஒற்று விரித்தல்
> விகாரமாக ஆக்கலாமோ?
>
> அதே போல், "பேரருள் துய்த்திடும்" என்பது 'பேரரு டுய்த்திடும்' என்று புணரும்
> என எண்ணுகிறேன். அங்கும் ஒற்று விரித்தல் தேவைப்படலாம்.
>
> 3) "பாதியன் வேதியன் பார்வதி நாயகன் ..." என்று படர்க்கையில் சொல்லிப் பின்
> முடிவில் ஈசனே எண்று முன்னிலையில் உள்ளதே.
>
> பாதியா, வேதியா, நாயகா,,,, ஆதியென் றொன்றிலாய், , என்பன போல் அமையவேண்டுமோ?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Oct 20, 2009, 8:32:02 PM10/20/09
to santhavasantham

5)
தாயவன் தத்துவன் சங்கரன் தந்தையும்
ஆயவன் கேளவன் மண்புனல் காற்றுவிண்
தீயவன் பத்தருள் நிற்பவன் தீதிலாத்
தூயவன் பேர்நிதம் சொல்லுவார்க் கின்பமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/19 Siva Siva <naya...@gmail.com>

4)


http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Dr Subramanian

unread,
Oct 20, 2009, 8:59:07 PM10/20/09
to santhav...@googlegroups.com
"சொல்லுவார்க்" என்பது "சொல்பவர்க்" கென்றால் பொருந்துமா?
வவேசு

2009/10/21 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Oct 20, 2009, 9:22:46 PM10/20/09
to santhav...@googlegroups.com
// "சொல்லுவார்க்" என்பது "சொல்பவர்க்" கென்றால் பொருந்துமா? //

பொருந்தும்.
சொல்லுவார் என்பதும் திருமுறைகளில் வந்துள்ளது.
இவ்விரு பிரயோகங்களின் இடையே வேறுபாடு ஏதேனும் உள்ளதா என்று அறியேன்.

திருவாசகம் - சிவபுராணம் - கடைசி 4 அடிகள்:
..................
..................
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

தேடியதில் கண்ட வேறு சில பாடல்கள்:

அப்பர் தேவாரம் - 6.15.8
துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
..  சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
...................

பெரிய புராணம் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் - பாடல் 755:
பிள்ளையார் செம்பொன்மணிப்
    பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால்
    உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம்
    மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள்
    சிவந்துபல சொல்லுவார்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/10/20 Dr Subramanian <vav...@gmail.com>

"சொல்லுவார்க்" என்பது "சொல்பவர்க்" கென்றால் பொருந்துமா?
வவேசு

2009/10/21 Siva Siva <naya...@gmail.com>

5)
தாயவன் தத்துவன் சங்கரன் தந்தையும்
ஆயவன் கேளவன் மண்புனல் காற்றுவிண்
தீயவன் பத்தருள் நிற்பவன் தீதிலாத்
தூயவன் பேர்நிதம் சொல்லுவார்க் கின்பமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Oct 21, 2009, 7:51:00 AM10/21/09
to சந்தவசந்தம்
பாதியன் வேதியன் பக்தரெம் நாயகன்
சோதியன் பேர்புகழ் சொல்லிடக் கூடுமோ
ஆதியென் றொன்றிலான் அந்தமென் றொன்றிலான்
நாதியென் பேனவன் நற்றுணைப் பாதமே!

சிவா!படர்க்கையில் வரும்படி அமைத்துள்ளேன்.சரி பார்க்கவும்.
நன்றி!


அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Oct 21, 2009, 8:16:29 AM10/21/09
to santhav...@googlegroups.com
நன்றாக அமைந்துள்ளது.
உங்கள் முயற்சியை மெச்சுகிறேன்.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

2009/10/21 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Oct 21, 2009, 9:43:46 AM10/21/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவா!
மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

On Oct 21, 5:16 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> நன்றாக அமைந்துள்ளது.
> உங்கள் முயற்சியை மெச்சுகிறேன்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/10/21 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Oct 21, 2009, 8:19:34 PM10/21/09
to santhavasantham

6)
அத்தனே ஐயனே அன்பராய்ப் பாடுவார்
சித்தனே செல்வனே ஓட்டினிற் பிச்சைகொள்
பித்தனே நித்தனே பெண்ணுமோர் கூறனே
சுத்தனே என்பவர்க் கில்லையே துன்பமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/20 Siva Siva <naya...@gmail.com>

5)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Oct 22, 2009, 9:00:56 PM10/22/09
to santhavasantham

7)
பெற்றமூர் முக்கணா பேதையோர் பாகனே
பெற்றவா உச்சியில் முற்றிலாத் திங்களாய்
உற்றவா உண்மையாய் நிற்பவா மும்மலம்
அற்றவா என்பவர்க் கில்லையோர் அல்லலே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/21 Siva Siva <naya...@gmail.com>

6)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Oct 22, 2009, 10:38:08 PM10/22/09
to santhavasantham

2009-10-22 (கந்தஷஷ்டி ஸ்பெஷல்)
காத்தருள் கந்தனே
----------------------------------
நீலகண் டத்தரன் பாலனே சண்முகா
வேலவா மாமயில் மீதமர் வித்தகா
காலைநான் காதலாய்ப் பற்றினேன் கோபமாய்க்
காலனார் பற்றுமுன் காத்தருள் கந்தனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/22 Siva Siva <naya...@gmail.com>

Dr Subramanian

unread,
Oct 22, 2009, 11:32:57 PM10/22/09
to santhav...@googlegroups.com
கோபமாய்க்
காலனார் பற்றுமுன் காத்தருள் கந்தனே
.

இங்கே காலனுக்கு என்ன கோபம் ?  அவன் தன் கடமையைத்தானே செய்கிறான்!  அருணகிரியார் கூட " கா கா நமனார் கலகம் செயும் நாள்" என்றுதானே உரைக்கிறார். அடியவரைத் துன்புறுத்தும் அவன் மீது ஆண்டவனுக்குத்தானே கோபம் வரும் ( உ-ம். மார்க்கண்டேய புராணம்) . இல்லை கோபம் கந்தனோடு  இணைய வேண்டுமா? தயவுசெய்து தங்கள் விளக்கத்தை அளிக்க வேண்டும்.
அன்புடன்
வவேசு

2009/10/23 Siva Siva <naya...@gmail.com>

சௌந்தர்

unread,
Oct 23, 2009, 6:21:02 AM10/23/09
to சந்தவசந்தம்
இன்று அனந்த் இங்கிட்ட வேறுதிரியில் திருமுருக கிருபானந்த வாரியாரின்
வெண்பாவிலும் இதே கருத்து காணக் கிடைக்கிறது.

காலன் தனையனையார் கன்றுஞ் சினத்தால்செய்
ஆலந் தனையகற்றி ஆண்டருள்வாய்

கிருபானந்த வாரியார் இப்படி எழுதியுள்ளதால் சிவசிவாவின் பாடலில் கோபமாய்
வருவது காலனே என்பது சரி. ஆசிரியர் கோபம் காட்டாமல் (கடமையைச்
செய்தாலும்) மாணவரைத் தண்டிக்க முடியாதல்லவா? அதுபோலே என்று கொள்ளலாம்.

இருவிழி சிவந்து கனல்பொறி தெறிப்ப எடுத்த கதையினால்
வருமவர்முன் நின்று ஒருமொழி கேட்ப மறுமொழி கொடுத்திடல் அறியேன் (இரட்சணிய
யாத்திரிகம்). இவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது. இங்கும் காலதூதர்கள்
கோபப்படுவதாகச் சித்தரிக்கப்படுகிறது.

சௌந்தர்

Siva Siva

unread,
Oct 23, 2009, 8:14:27 AM10/23/09
to santhav...@googlegroups.com
திருமுறைகளிலும் ஆங்காங்கே சினத்தோடு காலன் வருவதைப் பற்றிக் கூறப்படுகிறது.

அவற்றுள் சில கீழே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50910&padhi=091&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் 5.91.6

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

நமனால் - எமனால். எற்றுக்கு - எதற்கு. முனிவுண்பது - கோபத்தை அடைவது.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41070&padhi=107&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 4.107.4

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

மான்குட்டி விளங்கும் கையினனாய், தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட, மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன், கடவூர் உறை உத்தமன்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41070&padhi=107&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 4.107.2
பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் - 2.85.4 (கோளறு பதிகம்)

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

கொதி - கோபம், உக்கிரம்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50390&padhi=039&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம்  - 5.39.4

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே.

2009/10/23 சௌந்தர் <rsou...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 23, 2009, 10:15:48 AM10/23/09
to santhav...@googlegroups.com
அட்டகாசம் ஐயா சிவா....காலன் வரும்போது கூட கோபமாய்த்தான் வரணும் னு ஒரு விதியா?
 பேஷ் பேஷ்!.. வேணும்னே யோசிப்போம்...அவன் கோபம் ஏன் என ஒரு கவிதை இவண் பிறக்குமா?
 எதிர் பார்க்கலாமா கற்பனையை...!,
 யோகியார்

2009/10/23 Siva Siva <naya...@gmail.com>

--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Siva Siva

unread,
Oct 23, 2009, 5:42:21 PM10/23/09
to santhavasantham

2009-10-23
கழல்போற்றி உய்யும்
----------------------------
அடிதொழுதால் அகமென்ற தாமரையும் விரியும்
முடிவிலதோர் இன்பநிலை மூளுமெனத் தெரியும்
கொடியவினைக் கூட்டமெலாம் பறந்தோடச் செய்யும்
வடியுடைய வேலனவன் கழல்போற்றி உய்யும்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/22 Siva Siva <naya...@gmail.com>

2009-10-22 (கந்தஷஷ்டி ஸ்பெஷல்)
காத்தருள் கந்தனே
----------------------------------
நீலகண் டத்தரன் பாலனே சண்முகா
வேலவா மாமயில் மீதமர் வித்தகா
காலைநான் காதலாய்ப் பற்றினேன் கோபமாய்க்
காலனார் பற்றுமுன் காத்தருள் கந்தனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Oct 23, 2009, 11:05:44 PM10/23/09
to santhavasantham

8)
அண்ணலார் மேவுவெற் பாட்டினான் ஓவெனப்
பண்ணினார் பத்துவாய் பாடவாள் நல்கினார்
வெண்ணிலாச் சூடினார் விண்ணவர் நாதனார்
எண்ணிலாப் பேரினார் தாள்தொழாய் நெஞ்சமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/22 Siva Siva <naya...@gmail.com>

7)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Dr Subramanian

unread,
Oct 25, 2009, 12:27:14 AM10/25/09
to santhav...@googlegroups.com
சிவா மிகவும் நன்றி. ஐயம் தீர்த்தீர்கள்.
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான் என்பது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

அன்புடன்
வவேசு

2009/10/23 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Oct 25, 2009, 11:03:52 PM10/25/09
to santhavasantham

9)
நான்முகன் கேசவன் தேடுநீள் சோதியே
கான்தனில் பல்கணம் காணநின் றாடுவாய்
மான்மறிக் கையனே மைந்நிறக் கண்டனே
நான்மகிழ்ந் தேத்துவேன் நாளுமுன் தாளையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/23 Siva Siva <naya...@gmail.com>

8)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Oct 26, 2009, 4:04:01 AM10/26/09
to சந்தவசந்தம்
ஊற்றெழும் கங்கையில் உன்சடைத் தோன்றிடும்
ஏற்றினில் ஊர்வலம் இன்பமேத் தந்திடும்
நீற்றனுன் பேரருள் நெஞ்சினில் நிற்குமே
சாற்றியுன் சோதியாம் சந்நிதிக் காண்பனே!

சிவா!சரி பார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Oct 25, 8:03 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> நான்முகன் கேசவன் தேடுநீள் சோதியே
> கான்தனில் பல்கணம் காணநின் றாடுவாய்
> மான்மறிக் கையனே மைந்நிறக் கண்டனே
> நான்மகிழ்ந் தேத்துவேன் நாளுமுன் தாளையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/10/23 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 8)
>
> > --
> >http://nayanmars.netne.net/
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Oct 26, 2009, 8:31:23 AM10/26/09
to santhav...@googlegroups.com


2009/10/26 thangamani <tvthan...@gmail.com>

ஊற்றெழும் கங்கையில் உன்சடைத் தோன்றிடும்
ஏற்றினில் ஊர்வலம் இன்பமேத் தந்திடும்
நீற்றனுன் பேரருள் நெஞ்சினில் நிற்குமே
சாற்றியுன் சோதியாம் சந்நிதிக் காண்பனே!

சிவா!சரி பார்க்கவும். 

அன்புடன்,
தங்கமணி.

சில இடங்களில் ஒற்று மிகாது. அங்கும் சந்தத்திற்காக ஒற்றைக் கூட்டியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
புணர்ச்சியைப் பிரிக்காமல் கீழே உள்ளபடி எழுதிப் பார்த்தீர்களாயின் எங்கே குரு-லகு-குரு அமையவில்லை என்பது உங்களுக்கே புலப்படும்

ஊற்றெழுங் கங்கையி லுன்சடை தோன்றிடும்
ஏற்றினி லூர்வல மின்பமே தந்திடும்
நீற்றனுன் பேரரு ணெஞ்சினி னிற்குமே
சாற்றியுன் சோதியாஞ் சந்நிதி காண்பனே!

 

On Oct 25, 8:03 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)

Siva Siva

unread,
Oct 26, 2009, 8:47:55 PM10/26/09
to santhavasantham

10)
தெய்வமும் தேர்கிலார் பொய்யையும் கைவிடார்
உய்யவும் வல்லரோ? நையுநெஞ் சத்தராய்
"
ஐயனே செய்யனே அம்மையோர் கூறனே
மெய்யனே" என்பவர் நிச்சயம் வெல்வரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/25 Siva Siva <naya...@gmail.com>
9)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Soundar

unread,
Oct 26, 2009, 9:05:53 PM10/26/09
to santhav...@googlegroups.com
பெருகி வந்த கங்கையைச் சிவனாரின் சடை அடக்கியது. உலகம் உய்ய அவர் தனது சடையிலிருந்து ஒரு துளி மட்டும் வெளிப்படுத்த அது பூலோகத்தில் நதியாகப் பெருகியது. சடையின்  அளவை  வைத்துப் பார்த்தால் கங்கை  ஒரு திவலைதான்.
எனவே,  ஊற்றெழும் கங்கையில் உன்சடை  தோன்றிடும் என்று சொல்வது சிறப்பாகாது. இடம் மாறி இருக்கவேண்டும். உன்சடையில் கங்கை தோன்றும் என்றிருக்க வேண்டும் என்பது என் கருத்து.
சௌந்தர்

2009/10/26 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Oct 27, 2009, 5:08:38 AM10/27/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சௌந்தர்!
நீங்கள் கூறியதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்து இடுகிறேன்.
எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

On Oct 26, 6:05 pm, Soundar <rsoun...@gmail.com> wrote:
> பெருகி வந்த கங்கையைச் சிவனாரின் சடை அடக்கியது. உலகம் உய்ய அவர் தனது
> சடையிலிருந்து ஒரு துளி மட்டும் வெளிப்படுத்த அது பூலோகத்தில் நதியாகப்
> பெருகியது. சடையின்  அளவை  வைத்துப் பார்த்தால் கங்கை  ஒரு திவலைதான்.
> எனவே,  ஊற்றெழும் கங்கையில் உன்சடை  தோன்றிடும் என்று சொல்வது சிறப்பாகாது.
> இடம் மாறி இருக்கவேண்டும். உன்சடையில் கங்கை தோன்றும் என்றிருக்க வேண்டும்
> என்பது என் கருத்து.
> சௌந்தர்
>

> 2009/10/26 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > ஊற்றெழும் கங்கையில் உன்சடைத் தோன்றிடும்
> > ஏற்றினில் ஊர்வலம் இன்பமேத் தந்திடும்
> > நீற்றனுன் பேரருள் நெஞ்சினில் நிற்குமே

> > சாற்றியுன் சோதியாம் சந்நிதிக் காண்பனே!- Hide quoted text -

Siva Siva

unread,
Oct 27, 2009, 9:33:39 PM10/27/09
to santhavasantham

இப்பாடல்களைப் படித்துவந்தோர்க்கும், கருத்துச்சொன்னோர்க்கும், வினாக்கள் கேட்டோர்க்கும், விளக்கங்கள் அளித்தோர்க்கும் என் வணக்கம்.

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
ஆற்றையும் தண்மதிக் கீற்றையும் சூடினான்
ஏற்றினில் செல்பவன் கூற்றையும் கொல்பவன்
தோற்றமொன் றற்றவன் தோத்திரம் செய்யவோர்
தோற்றமும் கொள்பவன் பேர்சொனால் ஏற்றமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/26 Siva Siva <naya...@gmail.com>

10)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Oct 28, 2009, 8:54:32 AM10/28/09
to சந்தவசந்தம்
ஆற்றையுன் செஞ்சடைக் கற்றையுள் வைத்தவா
நீற்றனென் றுன்னெழில் நெஞ்சினில் போற்றுவேன்
ஏற்றனுன் நாமமே என்றுமென் தாரகம்
சாற்றுகின் றேன்மலர்த் தாளினைப் பற்றியே!

முதல் அடி சிவா செய்தார்!
நன்றி!சிவா!

அன்புடன்,
தங்கமணி.

On Oct 27, 6:33 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> இப்பாடல்களைப் படித்துவந்தோர்க்கும், கருத்துச்சொன்னோர்க்கும், வினாக்கள்
> கேட்டோர்க்கும், விளக்கங்கள் அளித்தோர்க்கும் என் வணக்கம்.
>
> இத்தொடரின் கடைசிப் பாடல்:
>
> 11)
> ஆற்றையும் தண்மதிக் கீற்றையும் சூடினான்
> ஏற்றினில் செல்பவன் கூற்றையும் கொல்பவன்
> தோற்றமொன் றற்றவன் தோத்திரம் செய்யவோர்
> தோற்றமும் கொள்பவன் பேர்சொனால் ஏற்றமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/10/26 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 10)
>
> > --
> >http://nayanmars.netne.net/
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Oct 28, 2009, 8:58:58 AM10/28/09
to சந்தவசந்தம்
ஆற்றையுன் செஞ்சடைக் கற்றையுள் வைத்தவா
நீற்றனென் றுன்னெழில் நெஞ்சினில் போற்றுவேன்
ஏற்றனுன் நாமமே என்றுமென் தாரகம்
சாற்றுகின் றேன்மலர்த் தாளினைப் பற்றியே!

முதல் அடி சிவா செய்தார்!
நன்றி!சிவா!

அன்புள்ள சௌந்தர்!உங்கள் கருத்துப்படி அமைந்திருக்கிறது
என எண்ணுகின்றேன்


அன்புடன்,
தங்கமணி.

> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Nov 4, 2009, 9:57:01 PM11/4/09
to santhavasantham

(பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' தொடரில் பயிற்சி 42.1 )
----

சம்பந்தர் தேவாரத்தில் 1.136.1 பதிகத்தின் முதல் பாடல்

மாதர்ம டப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
..
நடை உடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூதஇ னப்படைநின் றிசைபாடவும் ஆடுவர்
..
அவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வெண்திரை
..
இரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறை வண்டறை
..
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

-----

அதை ஒட்டிய என் பாடல்:

2009-11-04
உனை விழை மனம் அருள்வாய்
------------------------------------------
(5
கூவிளம் + 3 கருவிளம் + புளிமா)

நெஞ்சினில் ஆசைகள் வெற்பைநி கர்த்துநி றைந்தவை
..
நிதம்மதம் மிகும்இழி நிலைதர அதனால்
வெஞ்சின னாய்மிகு தீவினை செய்துழ லாதரு
..
வினைகெட அனைஉனை விழைமனம் அருள்வாய்
நஞ்செழ அஞ்சிய விண்ணவர் வந்தழ அன்பொடு
..
நனிஇனி கனிஎன நலமளி அமுதாய்
அஞ்சன வேல்விழி அம்மையும் அஞ்சிட உண்டவ
..
அணிமணி பணிதுணி மதிதிகழ் அங்கணனே.

பதம் பிரித்து:
நெஞ்சினில் ஆசைகள் வெற்பை நிகர்த்து நிறைந்(து), அவை
..
நிதம் மதம் மிகும் இழி நிலை தர அதனால்,
வெஞ்சினனாய் மிகு தீவினை செய்(து) உழலா(து), அரு
..
வினை கெட அனை உனை விழை மனம் அருள்வாய்;
நஞ்(சு) எழ, அஞ்சிய விண்ணவர் வந்(து) அழ, அன்பொடு
..
நனி இனி கனி என நலம் அளி அமுதாய்,
அஞ்சன வேல் விழி அம்மையும் அஞ்சிட உண்டவ;
..
அணி மணி பணி துணி மதி திகழ் அங்கணனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/27 Siva Siva <naya...@gmail.com>

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Nov 4, 2009, 10:39:15 PM11/4/09
to santhav...@googlegroups.com
மிக அழகாய் அமைந்திருக்கிறது.

2009/11/4 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Nov 5, 2009, 10:36:40 PM11/5/09
to santhavasantham

'மாதர் மடப்பிடியும்' பாடலைப் பற்றிய சில குறிப்புகளை இங்கே காண்க:

http://www.tamilhindu.com/2009/07/thirumurai-isai/



2009/11/4 Siva Siva <naya...@gmail.com>
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 6, 2009, 11:55:27 AM11/6/09
to santhav...@googlegroups.com

வேறொரு தளத்தில் சிவசிவா இட்டுள்ள இப்பாடலின் பொருள்:


நெஞ்சினில் ஆசைகள் வெற்பை நிகர்த்து நிறைந்(து) - மனத்தில் ஆசைகள் மலையைப் போல நிறைந்து;
அவை நிதம் மதம் மிகும் இழி நிலை தர அதனால் - அவை தினந்தோறும் செருக்கும் வெறியும் மிகுகிற இழிந்த நிலையைத் தர அதனால்;
 
வெஞ்சினனாய் மிகு தீவினை செய்(து) உழலா(து) - கொடிய சினத்தை உடைவனாகி, பல தீவினைகள் செய்து நான் உழலாமல்;

அரு வினை கெட அனை உனை விழை மனம் அருள்வாய் - கொடிய வினையெல்லாம் அழியும்படி அன்னை உன்னை விரும்பும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக;
நஞ்(சு) எழ, அஞ்சிய விண்ணவர் வந்(து) அழ - (பாற்கடலைக் கடைந்தபொழுது) விஷம் தோன்ற, அதைக் கண்டு பயந்த தேவர்கள் உன்னிடம் வந்து அழுது தொழ;

அன்பொடு நனி இனி கனி என நலம் அளி அமுதாய் - அன்போடு, மிகவும் இனிக்கும் பழம் என
அதை நன்மை கொடுக்கும் அமுதாக;
அஞ்சன வேல் விழி அம்மையும் அஞ்சிட உண்டவ - மை அணிந்த வேல் போன்ற விழி உடைய பார்வதியும் அஞ்சும்படி உண்டவனே;

அணி மணி பணி துணி மதி திகழ் அங்கணனே - (அதனால் கழுத்தில்) அழகிய மணியும்,
பாம்பும், பிறைச் சந்திரனும் திகழ்கிற, அருள் நோக்கு உடைய சிவபெருமானே!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/11/4 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Nov 6, 2009, 10:45:22 PM11/6/09
to santhavasantham

2009-11-06
மனமே நினை சடையன் கழலே


------------------------------------------
(5
கூவிளம் + 3 கருவிளம் + புளிமா

)
(
சம்பந்தர் தேவாரம் - 1.136.1 - "மாதர்ம டப்பிடியும் மட அன்னமும்)

என்பொருள் என்னிடம் என்குடி என்றெழும் இச்சையால்
..
இழிவழி உழிபழி இடர்மிகு[ம்] மனமே
முன்புரி தீவினை தீர்ந்துயர் வான்பெற நீநினை
..
முரண்அரண் எரிபரன் முடிவிலி பெருமான்
மென்மட வாளொரு பங்கினன் எந்தைமி டற்றினில்
..
விடம்அடை விடையுடை விழிநுதல் விமலன்
அன்புரு வானவன் நாதனி லாதவன் வண்டுகள்
..
அறைநறை நிறைமலர் அணிசடையன் கழலே.

பதம் பிரித்து:

என் பொருள், என் இடம், என் குடி என்(று) எழும் இச்சையால்
..
இழி வழி உழி பழி இடர் மிகும் மனமே;
முன் புரி தீவினை தீர்ந்(து) உயர் வான் பெற நீ நினை;
..
முரண் அரண் எரி பரன்; முடிவிலி; பெருமான்;
மென் மடவாள் ஒரு பங்கினன்; எந்தை; மிடற்றினில்
..
விடம் அடை, விடையுடை, விழிநுதல் விமலன்;
அன்(பு) உரு ஆனவன்; நாதன் இலாதவன்; வண்டுகள்
..
அறை நறை நிறை மலர் அணி சடையன் கழலே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/4 Siva Siva <naya...@gmail.com>

(பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' தொடரில் பயிற்சி 42.1 )
----

சம்பந்தர் தேவாரத்தில் 1.136.1 பதிகத்தின் முதல் பாடல்

மாதர்ம டப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
..
நடை உடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூதஇ னப்படைநின் றிசைபாடவும் ஆடுவர்
..
அவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வெண்திரை
..
இரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறை வண்டறை
..
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

-----

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 9, 2009, 7:52:48 AM11/9/09
to santhavasantham

2008-09-27
சிவனைப் பரவு நெஞ்சே
---------------------------------
('
கருவிளம் தேமா கருவிளம் தேமா' என்ற வாய்பாடு)

1)
அரகர என்னும் அடியரைக் கொல்ல
விரைகிற காலன் விழவுதை செய்த
விரைகமழ் பாத மரைதனை நாளும்
பரவிடத் தீரும் பயம்மட நெஞ்சே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/6 Siva Siva <naya...@gmail.com>

2009-11-06
மனமே நினை சடையன் கழலே


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Nov 9, 2009, 10:33:51 AM11/9/09
to சந்தவசந்தம்
சிவமய மாகும் திருமுறைப் பாடல்
தவமுறைக் காட்டிச் சரணிணைக் கூட்டும்
பவபயம் போக்கும் பரனருள் வாய்க்கும்
புவனமும் உய்யப் புரிகுவ தின்பே!

சிவா! பிழை சுட்டவும்

அன்புடன்,
தங்கமணி.


On Nov 9, 4:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2008-09-27
> சிவனைப் பரவு நெஞ்சே
> ---------------------------------
> ('கருவிளம் தேமா கருவிளம் தேமா' என்ற வாய்பாடு)
>
> 1)
> அரகர என்னும் அடியரைக் கொல்ல
> விரைகிற காலன் விழவுதை செய்த
> விரைகமழ் பாத மரைதனை நாளும்
> பரவிடத் தீரும் பயம்மட நெஞ்சே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/11/6 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-11-06
> > மனமே நினை சடையன் கழலே
>
> > --
> >http://nayanmars.netne.net/
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Nov 10, 2009, 6:52:30 PM11/10/09
to santhavasantham

2)
சிவனடிப் பூசை சிதைக்கிற தந்தை
அவனடி வெட்டும் அடியவர் செய்கை
தவமெனக் கொண்டு தயைபுரிந் தானை,
உவமையில் லானை உரைமட நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/9 Siva Siva <naya...@gmail.com>

2008-09-27
சிவனைப் பரவு நெஞ்சே
---------------------------------
('
கருவிளம் தேமா கருவிளம் தேமா' என்ற வாய்பாடு)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Nov 10, 2009, 11:24:18 PM11/10/09
to சந்தவசந்தம்
சிவமய மாக்கும் திகழொளி சேர்க்கும்
தவமுறை காட்டிச் சரணிணைக் கூட்டும்
பவபயம் போக்கும் பரனருள் நாட்டும்
அவனியை உய்க்கும் அருமறைப் பாட்டே!

anbudan,
thanggamaNi.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
Nov 11, 2009, 9:43:30 PM11/11/09
to santhavasantham

3)
அடிதொழும் தேவர் அருளென வேண்டக்
கொடியவி டத்தைக் குளிரமு தாயுண்
கடிவிடை ஏறும் கனல்விழி யானை
நொடிஅள வேனும் நுவல்மட நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/10 Siva Siva <naya...@gmail.com>

2)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 12, 2009, 11:30:02 PM11/12/09
to santhavasantham

4)
கரியமி டற்றன் கழல்தொழு வோர்க்காய்த்
திரிஅரண் மூன்றும் திகுதிகு வென்றே
எரிந்திடு மாறு சிரித்தவன் தன்னைப்
பரிவொடு நீயும் பணிந்திடு நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/11 Siva Siva <naya...@gmail.com>

3)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 13, 2009, 10:25:37 PM11/13/09
to santhavasantham

5)
மலரெனக் கண்ணை மலரடி இட்ட
உலகினை உண்டாற்(கு) உகந்தருள் செய்த
மலைமகள் கோனை, மதியணி கின்ற
தலைவனைப் போற்றித் தளையறு நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/12 Siva Siva <naya...@gmail.com>

4)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 14, 2009, 9:11:22 PM11/14/09
to santhavasantham

6)
இருடிகள் ஏவும் கருமலை போன்ற
பெருமத ஆனை உரிதனைப் போர்த்தான்,
அருமறை போற்றும் பொருளென நின்றான்
திருவடி தன்னைத் தினம்நினை நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/13 Siva Siva <naya...@gmail.com>
5)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 15, 2009, 8:21:33 PM11/15/09
to santhavasantham

7)
அமரரி றைஞ்ச அனல்விழி மூலம்
குமரனைத் தந்தார், உமையவள் தன்னைத்
தமதொரு கூறாய்த் தரித்திடும் நாதர்,
விமலரின் தாளை விரும்பிடு நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/14 Siva Siva <naya...@gmail.com>

6)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Nov 16, 2009, 9:03:08 AM11/16/09
to சந்தவசந்தம்
சிவமய மாகத் திகழுருக் கண்டால்
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்;
கவறுறு சித்தக் கசடனென் றாலும்,
அவர்நமர் என்பார் அருள்நினை நெஞ்சே!

கவறு=சூது

அன்புள்ள சிவா!பிழை சுட்டவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Nov 15, 5:21 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> அமரரி றைஞ்ச அனல்விழி மூலம்
> குமரனைத் தந்தார், உமையவள் தன்னைத்
> தமதொரு கூறாய்த் தரித்திடும் நாதர்,
> விமலரின் தாளை விரும்பிடு நெஞ்சே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/11/14 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 6)
>
> > --
> >http://nayanmars.netne.net/
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Nov 16, 2009, 9:42:08 AM11/16/09
to santhav...@googlegroups.com
கவறு - இது சூதாட்டம் (gambling) என்ற பொருள் அன்றோ? மனத்தில் இருக்கும் வஞ்சனைக்கும் இது வருவதுண்டா?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/11/16 thangamani <tvthan...@gmail.com>

சிவமய மாகத் திகழுருக் கண்டால்
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்;
கவறுறு சித்தக் கசடனென் றாலும்,
அவர்நமர் என்பார் அருள்நினை நெஞ்சே!

கவறு=சூது

அன்புள்ள சிவா!பிழை சுட்டவும்.

அன்புடன்,
தங்கமணி.



thangamani

unread,
Nov 16, 2009, 9:58:09 AM11/16/09
to சந்தவசந்தம்
சிவமய மாகத் திகழுருக் கண்டால்
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்;
கவருறு சித்தக் கசடனென் றாலும்,

அவர்நமர் என்பார் அருள்நினை நெஞ்சே!

கவர்=வஞ்சகம்(இப்போது சரியா?)

சிவா!சூது என்பதைத் தவறாக வஞ்சகம் என்க் கொண்டேன்.
பிழை சுட்டியதற்கு நன்றி!

அன்புடன்,
தங்கமணி.


On Nov 16, 6:42 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> கவறு - இது சூதாட்டம் (gambling) என்ற பொருள் அன்றோ? மனத்தில் இருக்கும்
> வஞ்சனைக்கும் இது வருவதுண்டா?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/11/16 thangamani <tvthangam...@gmail.com>


>
> > சிவமய மாகத் திகழுருக் கண்டால்
> > சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்;
> > கவறுறு சித்தக் கசடனென் றாலும்,
> > அவர்நமர் என்பார் அருள்நினை நெஞ்சே!
>
> > கவறு=சூது
>
> > அன்புள்ள சிவா!பிழை சுட்டவும்.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>

> --http://nayanmars.netne.net/

Raja.Tyagarajan

unread,
Nov 16, 2009, 10:08:25 AM11/16/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள தங்கமணி அவர்களுக்கும்,
சிவசிவா அவர்களுக்கும்
இராஜ.தியாகராஜனின் வணக்கம். 
 
கவறு என்றால் வஞ்சக சூது என்று கதிர்வேல் பிள்ளை அகராதி சொல்கிறது.
ஒருவேளை வஞ்சகமான சூதாட்டம் என்ற பொருளோ?  
அன்பன்
இராஜ.தியாகராஜன்
 
 
கதிர்வேல் பிள்ளை அகராதி:
----------------------------------------------------

கள்ளக்கவறு (p. ) [ kaḷḷakkavaṟu ] கவறு, வஞ்சகச்சூது.

சொக்கட்டான்கவறு (p. ) [ cokkaṭṭāṉkavaṟu ] பாச்சிகை.

தாயக்கட்டை (p. ) [ tāyakkaṭṭai ] சூதுகவறு.

விந்துதந்திரம் (p. ) [ vintutantiram ] சூதாடுகவறு, சூதாடுபடம்.

கயிர் (p. ) [ kayir ] கவறு.

கவறு (p. ) [ kavaṟu ] சூதாடுகருவி.

பெப்ரீஷியஸ் அகராதி:
--------------------------------------------

கவறு (p. 212) [ kavaṟu ] , s. dice, தாயக்கட்டை; 2. gambling; 3. palmyra timber.

கவறாட, to gamble.

கவறுபோட, --உருட்ட, to cast dice.

 
லெக்ஸிகன் அகராதி:
--------------------------------------

கவறாடல் (p. 0791) [ kavaṟāṭal ] n kavaṟāṭal . < கவறு¹ + ஆடு-. Gambling; சூதாடுகை. காதல் கவறாடல் (நள. கலிதொ. 39).

கவறு¹ (p. 0791) [ kavaṟu¹ ] n kavaṟu . perh. கவர்¹-. 1. Dice; சூதாடுகருவி. அரும்பொற் கவறங் குருள (சீவக. 927). 2. Gambling; சூது. கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட் டார் தொடர்பு (குறள், 92).

கவறு² (p. 0791) [ kavaṟu² ] n kavaṟu . prob. கவர். Palmyra timber; பனைவிட்டம். (J.)

கவறுருட்டு-தல் (p. 0791) [ kavaṟuruṭṭu-tal ] v. intr kavaṟuruṭṭu. < கவறு¹ + உருட்டு-. To play at dice; சூதாடுதல்.

கள்ளக்கவறு (p. 0806) [ kaḷḷakkavaṟu ] n kaḷḷa-k-kavaṟu . < id. +. False dice; கள்ளச் சூதுகருவி. (W.)

சூதாடுகருவி (p. 1563) [ cūtāṭukaruvi ] n cūtāṭu-karuvi . < id. +. 1. Dice; தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு. (யாழ். அக.) 2. Conical pieces moved on the chess board according to the throw of dice; சூதுக் கட்டத்தில் வைக்குங் காய். (புறநா. 52, உரை.)

சொக்கட்டான் (p. 1645) [ cokkaṭṭāṉ ] n cokkaṭṭāṉ . [T. soga ṭamu, M. cokkaṭṭānkaḷi.] 1. A game similar to backgammon; கவறு உருட்டியாடுந் தாயவிளை யாட்டுவகை. 2. See சொக்கட்டான்சீலை, 2.

சொக்கட்டான்பாய்ச்சிகை (p. 1646) [ cokkaṭṭāṉpāyccikai ] n cokkaṭṭāṉ pāyccikai . < id. +. See சொக்கட்டான்கவறு.

தருக்கு¹-தல் (p. 1768) [ tarukku¹-tal ] 5 v. intr tarukku. 1. cf. dhṛṣ. To be proud, vain, arrogant; அகங்கரித் தல். தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38). 2. To be elated, intoxicated; to exult; களித் தல். (பிங்.) அவஞ்செய்து தருக்கினேனே (தேவா. 698, 9). 3. To be zealous, enthusiastic; ஊக்க மிகுத்தல். வெம்போர்த் தருக்கினார் மைந்தர் (சீவக. 1679).--tr. 1. To enhance, enlarge; பெருகச் செய்தல். தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து (தொல். பொ. 5). 2. To pound; இடித்தல். தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக் கலந்து (பதினொ. திருவீங்கோய். 4). 3. To injure, torment; வருத்துதல். மேலால் தருக்கு மிடம்பாட்டி னொடும் (திவ். இயற். பெரியதிருவந். 22). 4. cf. tṛh. To break, pierce; உடைத்துவிடுதல். மரக்கல மியங்கவேண்டி . . . தருக்கிய விடத்து (கம்பரா. மீட்சிப். 171). 5. cf. dhṛk. To take to, have resort to; மேற்கொள்ளுதல். கவறுங் கழகமுங் கையுந் தருக்கி (குறள், 935).

தாயக்கட்டை (p. 1840) [ tāyakkaṭṭai ] n tāya-k-kaṭṭai . < id. +. Dice; சூதாட்டத்தில் உருட்டுங் கவறு. (J.)

தாயம் (p. 1840) [ tāyam ] n tāyam . < dāya. 1. Patrimony, inheritance, wealth of an ancestor capable of inheritance and partition (R. F.); பாகத்திற்குரிய பிதிரார்ச்சிதப்பொருள். 2. Share; பங்கு. (யாழ். அக.) 3. Paternal relationship; தந்தைவழிச் சுற்றம். (யாழ். அக.) 4. A fall of the dice; கவறுருட்ட விழும் விருத்தம். முற்பட இடுகின்ற தாயம் (கலித். 136, உரை). 5. Cubical pieces in dice-play; கவறு. (யாழ். அக.) 6. Number one in the game of dice; கவறுருட்ட விழும் ஒன்று என்னும் எண். Colloq. 7. Gift, donation; கொடை. (யாழ். அக.) 8. Good opportunity; சமயவாய்ப்பு. (யாழ். அக.) 9. Affliction, distress; துன்பம். (யாழ். அக.) 1. Delay, stop; தாக்காட்டு. (W.) 11. A child's game played with seeds or shells on the ground; குழந்தை விளையாட்டுவகை. 12. Excel lence, superiority; மேன்மை. தாயமாம் பதுமினிக்கு (கொக்கோ. 1, 28).

பாய்ச்சிகை (p. 2614) [ pāyccikai ] n pāyccikai . perh. id. cf. pašaka. Dice; கவறு. (W.)

பாய்ச்சு² (p. 2614) [ pāyccu² ] n pāyccu . < பாய்ச்சு-. 1. Throw, as of dice; உருட்டுகை. 2. Dice; கவறு. (சீவக. 983, உரை.) 3. Plunging, thrusting; குத்துகை. 4. Thin, rough kind of lath, used in roofing huts or for hedging; வரிச்சல். (W.)

ஆகருடம் (p. 094) [ ākaruṭam ] n ākaruṭam . < ā-karṣa. (நாநார்த்த.) 1. Training in archery; விற்பழக்கம். 2. Playing at dice; சூதாடுகை. 3. Board for playing dice; சூதாடுபலகை. 4. Dice கவறு. 5. Pulling; இழுக்கை.

 

வின்சுலோ அகராதி:

-------------------------------

கவறு, (p. 262) [ kvṟu, ] s. Dice, சூதாடுகருவி. 2. [prov.] Palmyra timber,

பனம்பட்டை.

கவறுபோட--கவறுருட்ட--கவ றெறிய, inf. To cast dice.

 

 

Siva Siva

unread,
Nov 16, 2009, 6:13:55 PM11/16/09
to santhav...@googlegroups.com


2009/11/16 Raja.Tyagarajan <thia...@dataone.in>

அன்புள்ள தங்கமணி அவர்களுக்கும்,
சிவசிவா அவர்களுக்கும்
இராஜ.தியாகராஜனின் வணக்கம். 
 
கவறு என்றால் வஞ்சக சூது என்று கதிர்வேல் பிள்ளை அகராதி சொல்கிறது.
ஒருவேளை வஞ்சகமான சூதாட்டம் என்ற பொருளோ?  
அன்பன்
இராஜ.தியாகராஜன்
 

எனக்குத் தெரியாது. வேறு இலக்கியங்களில் இச்சொல் வந்திருக்கலாம். அறிந்தோர் சொல்லக்கூடும்.

அன்புடன்,

Siva Siva

unread,
Nov 16, 2009, 6:15:09 PM11/16/09
to santhavasantham

8)
இலங்கையன் ஆட்டும் மலைமிசை ஈசன்
மலர்விரல் வைத்துப் புலம்பிட வைத்தான்;
பலபுகழ் பாடிப் பணியவும் வாணாள்
நலமிகத் தந்தான்; நரைவிடை யானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/15 Siva Siva <naya...@gmail.com>

7)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Nov 17, 2009, 3:38:36 AM11/17/09
to சந்தவசந்தம்
அன்புள்ள தியாகராஜன்,
உங்கள் விளக்கமான இடுகைக்கு மிக்கநன்றி!
கவறு என்பது சூது என்னும் சூதாட்டம் என்ற பொருள்தருவதால்
நான் நினைத்த'சூது என்னும் வஞ்சகச் செயல்' என்பது தவறு.
எனவே 'கவர்'என்பது வஞ்சகம் எனப் பொருள்தருவதால்
அச்சொல்லை இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

>   2009/11/16 thangamani <tvthangam...@gmail.com>


>
>     சிவமய மாகத் திகழுருக் கண்டால்
>     சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்;
>     கவறுறு சித்தக் கசடனென் றாலும்,
>     அவர்நமர் என்பார் அருள்நினை நெஞ்சே!
>
>     கவறு=சூது
>
>     அன்புள்ள சிவா!பிழை சுட்டவும்.
>
>     அன்புடன்,
>     தங்கமணி.
>
>   --
>  http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Nov 17, 2009, 8:19:06 PM11/17/09
to santhavasantham

9)
மலரவன் மாயோன் பறந்(து)அகழ்ந்(து) அன்று
மலரடி யோடு மணிமுடி காணார்;
அலைபுனல் சூடும் அமலனைப் போற்றி
நிலைபெற இன்றே நினைத்திடு நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/16 Siva Siva <naya...@gmail.com>

8)


http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Nov 18, 2009, 5:52:02 AM11/18/09
to சந்தவசந்தம்
சிறிது மாற்றினேன்

சிவமய மாகத் திகழுருக் கொண்டே
கவருறக் கொல்லக் கருதிடு வோனை


சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்

அவர்நமர் என்பார் அருள்நினை மனமே!

அன்புடன்,
தங்கமணி.

thangamani

unread,
Nov 18, 2009, 6:25:28 AM11/18/09
to சந்தவசந்தம்

புடமிடு பொற்பில் புரிதவ யாக்கைக்
கடனென அம்மைக் கருதிடும் காட்சி
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்
நடனமும் காண நயந்தளித் தானே.

(காரைக்கால் அம்மைக்கு ஈசன் அருள்செய்தது)

அன்புடன்,
தங்கமணி

> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Nov 18, 2009, 8:47:01 PM11/18/09
to santhavasantham

10)
மறைமொழி காட்டும் அறவழி விட்டுப்
புறவழி தன்னில் புகுமெனச் சொல்வோர்
புறனுரை தள்ளிப், புனற்சடை கொண்ட
இறைவனை எண்ணி இருப்பவர்க் கின்பே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/17 Siva Siva <naya...@gmail.com>

9)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 19, 2009, 8:23:23 PM11/19/09
to santhavasantham

'சிவனைப் பரவு நெஞ்சே' என்ற இத்தொடரின் இறுதிப் பாடல் இங்கே:

11)
வருதினம் எல்லாம் மகிழ்ந்திடச் சொல்லாய்
இருளினை நீக்கி இருவினை போக்கி
அருளிடும் ஈசன் அடியவர் நேசன்
திருவெழுத் தஞ்சைத் தினம்தினம் நெஞ்சே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/18 Siva Siva <naya...@gmail.com>

10)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 20, 2009, 9:45:46 PM11/20/09
to santhavasantham

கார்த்திகை தீப ஸ்பெஷல்

2008-12-12
திருவண்ணாமலை - 3 - அருணாசலனே
-------------------------------------------
"
தனதன தானன தானன தானன தானன தானன தானனனா"

1)
இமையவ ரோடசு ரர்களு மின்னமு தாக்கிட மத்திடு வேலையிலே
குமைவிட மேலெழ விண்ணுல கோர்உமை கோனிட மோடியி றைஞ்சிடவே
அமரமு தாயதை உண்டமி டற்றின னற்புத னன்புரு வானவனே
மமதையி னால்மல ரான்முடி மாலடி தேடிய தீஅரு ணாசலனே.

பதம் பிரித்து:
இமையவரோ(டு) அசுரர்களும் இன் அமு(து) ஆக்கிட மத்திடு வேலையிலே
குமைவிட[ம்] மேல் எழ விண்ணுலகோர் உமைகோனிடம் ஓடி இறைஞ்சிடவே,
அமர் அமுதாய் அதை உண்ட மிடற்றினன்; அற்புதன்; அன்(பு) உரு ஆனவனே;
மமதையினால் மலரான் முடி மால் அடி தேடிய தீ அருணாசலனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


பி.கு: இத்தொடரில் இடம்பெறும் இப்பாடலை 2008 டிசம்பரில் சந்தவசந்தத்தில் இட்டிருந்தேன்.



2009/11/19 Siva Siva <naya...@gmail.com>

'சிவனைப் பரவு நெஞ்சே' என்ற இத்தொடரின் இறுதிப் பாடல் இங்கே:

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 22, 2009, 9:01:18 PM11/22/09
to santhavasantham

2)
புனலலை புன்சடை முக்கண னங்கொரு புண்விழி காட்டவு மோர்கணையால்
வனமுறை வேட்டுவ ரன்பொடு தம்விழி தன்னையி டந்திட வான்தருவான்
அனவர தம்புக ழன்பர கத்தினி லின்புற வென்றுமி ருப்பவனே
முனமரி நான்முக னுந்தொழு மாறெரி யாய்வரு வானரு ணாசலனே.

பதம் பிரித்து:

புனல் அலை புன் சடை முக்கணன் அங்(கு) ஒரு புண்விழி காட்டவும், ஓர் கணையால்
வனம் உறை வேட்டுவர் அன்பொடு தம் விழிதன்னை இடந்(து) இட, வான் தருவான்;
அனவரதம் புகழ் அன்பர் அகத்தினில் இன்புற என்றும் இருப்பவனே;
முனம் அரி நான்முகனும் தொழுமா(று) எரியாய் வருவான் அருணாசலனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/20 Siva Siva <naya...@gmail.com>

கார்த்திகை தீப ஸ்பெஷல்

2008-12-12
திருவண்ணாமலை - 3 - அருணாசலனே
-------------------------------------------
"
தனதன தானன தானன தானன தானன தானன தானனனா"

1)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 23, 2009, 8:41:35 PM11/23/09
to santhavasantham

3)
விடைமிசை ஏறிய வெண்மதி சூடிய கண்ணுத லோன்கணை எய்கிறவேள்
உடலது நீறென ஓர்நொடி யில்விழ நோக்கிய வன்சுர ருன்னபயம்
உடையவ னேஎன ஓர்மக னைப்பொறி யின்வடி வாயரு ளும்பெருமான்
மடலல ரோனொடு மாலறி யாவண மோங்கெரி ஆம்அரு ணாசலனே.

பதம் பிரித்து:

விடைமிசை ஏறிய, வெண்மதி சூடிய, கண்ணுதலோன்; கணை எய்கிற வேள்
உடல் அது நீ(று) என ஓர் நொடியில் விழ நோக்கியவன்; சுரர் "உன் அபயம்,
உடையவனே என ஓர் மகனைப் பொறியின் வடிவாய் அருளும் பெருமான்;
மடல்அலரோனொடு மால் அறியா வணம் ஓங்(கு) எரி ஆம் அருணாசலனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/22 Siva Siva <naya...@gmail.com>

2)



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 23, 2009, 11:02:06 PM11/23/09
to santhav...@googlegroups.com

அருமையான ஓசைநயம் கொண்ட சந்தத்தில் கருத்துக்களைப் பாடலில் பின்னியுள்ள விதம் அழகு! இறுதி அடிகள் திருவண்ணாமலையானின் தனிச்சிறப்பைச் செப்புமாறு அமைத்ததும் நன்று.

அனந்த்

2009/11/23 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Nov 24, 2009, 8:04:28 PM11/24/09
to santhavasantham

4)
பரியென நான்மறை பண்ணிய தேரென வானவர் ஏந்திட வில்லெனவோர்
பெரியவ டுக்கலும் ஆகிவ ரத்திரி முப்புர மெய்கிற நாளதனில்
கரியமி டற்றின னேறவு மச்சுமு ரிந்தது கண்டுந கைத்தடுவான்
அரிஅய னன்னமு மேனமு மாய்முய லுஞ்சுட ராமரு ணாசலனே.


பதம் பிரித்து:

பரி என நான்மறை, பண்ணிய தேர் என வானவர், ஏந்திட வில் என ஓர்
பெரிய அடுக்கலும் ஆகிவரத், திரி முப்புரம் எய்கிற நாள் அதனில்
கரிய மிடற்றினன் ஏறவும் அச்சு முரிந்தது கண்டு நகைத்(து) அடுவான்;
அரி அயன் அன்னமும் ஏனமுமாய் முயலும் சுடர் ஆம் அருணாசலனே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/23 Siva Siva <naya...@gmail.com>

3)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 25, 2009, 7:13:19 PM11/25/09
to santhavasantham

5)
தினமல ரோடடி போற்றிமி கத்துதி செய்கிற செம்மன மாணியிடம்
கனலெழு கண்ணொடு வந்தடு காலன தாருயி ரேபிரி வெய்திடவே
சினவிடை யானுதை செய்தடி யாருயிர் என்றுநி லைக்கவ ருள்புரிவான்
முனமரி நான்முக னென்றிவ ரெய்தவொ ணாவெரி ஆம்அரு ணாசலனே.

பதம் பிரித்து:

தின[ம்] மலரோ(டு) அடி போற்றி மிகத் துதி செய்கிற செம் மன மாணியிடம்,
கனல் எழு கண்ணொடு வந்(து) அடு காலன(து) ஆருயிரே பிரிவெய்திடவே
சினவிடையான் உதை செய்(து), அடியார் உயிர் என்று[ம்] நிலைக்க அருள்புரிவான்;
முனம் அரி நான்முகன் என்றிவர் எய்த ஒணா எரி ஆம் அருணாசலனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/24 Siva Siva <naya...@gmail.com>

4)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 26, 2009, 9:51:29 PM11/26/09
to santhavasantham
6)
ஒருகனி உண்டவன் இன்னொரு மாங்கனி யும்கொணர் என்றிட உத்தமியும்
உருகிய ரன்பதம் ஏத்தவு வந்திரு மாங்கனி ஈந்தவன் ஒண்புகழாள்
அருமலை மேல்தலை யால்வர அன்புடன் அம்மையெ னப்பகர் ஐயனவன்
அருமறை யான்கரி வண்ணனி வர்க்கிடை ஆரழல் ஆம்அரு ணாசலனே.


பதம் பிரித்து:
ஒரு கனி உண்டவன் இன்னொரு மாங்கனியும் கொணர் என்றிட, உத்தமியும்
உருகி அரன் பதம் ஏத்த, உவந்(து) இரு மாங்கனி ஈந்தவன்; ஒண் புகழாள்
அரு மலை மேல் தலையால் வர, அன்புடன் அம்மை எனப் பகர் ஐயன் அவன்;
அருமறையான் கரிவண்ணன் இவர்க்(கு)இடை ஆர் அழல் ஆம் அரு ணாசலனே.


2009/11/25 Siva Siva <naya...@gmail.com>

5)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 27, 2009, 10:27:06 PM11/27/09
to santhavasantham
7)
உறவென உள்ளவன் உள்கிடும் அன்பரின் உள்ளுறை கின்றவன் இவ்வுலகில்
பிறவிகொ டுக்கிற தீவினை யின்பிடி அற்றிட நற்படை ஆகியவன்
அறவடி வானவன் ஆயிர நாமமும் ஏற்றவன் ஆணலி பெண்ணுமவன்
மறையவ னோடரி வாதிடு நாளெழு மாவழல் ஆம்அரு ணாசலனே.


பதம் பிரித்து:
உற(வு) என உள்ளவன்; உள்கிடும் அன்பரின் உள் உறைகின்றவன்; இவ்வுலகில்
பிறவி கொடுக்கிற தீவினையின் பிடி அற்றிட நல் படை ஆகியவன்;
அற வடி(வு) ஆனவன்; ஆயிர நாமமும் ஏற்றவன்; ஆண் அலி பெண்ணும் அவன்;
மறையவனோ(டு) அரி வாதிடு[ம்] நாள் எழு மா அழல் ஆம் அருணாசலனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/11/26 Siva Siva <naya...@gmail.com>
6)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 28, 2009, 9:31:44 PM11/28/09
to santhavasantham
8)
கடுகிவி யங்கிடு தேர்தரை கண்டதும் ஆத்திர மாய்க்கரம் அத்தனையால்
விடுவிடு வென்றரு வெற்பையெ டுக்கமு யன்றவ ரக்கனை மெல்விரலால்
படுவலி கொள்ளவ டர்த்தவன் ஏழிசை யாழொடு பாடந லம்புரிவான்
நடுமுதல் ஈறவன் அன்றரி நான்முக னுந்தொழு தீஅரு ணாசலனே.


பதம் பிரித்து:
கடுகி இயங்கிடு தேர் தரைகண்டதும் ஆத்திரமாய்க் கரம் அத்தனையால்
விடுவிடுவென்(று) அரு வெற்பை எடுக்க முயன்ற அரக்கனை மெல் விரலால்
படு வலி கொள்ள அடர்த்(து), அவன் ஏழிசை யாழொடு பாட நலம்புரிவான்;
நடு முதல் ஈ(று) அவன்; அன்(று) அரி நான்முகனும் தொழு தீ அருணாசலனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/11/27 Siva Siva <naya...@gmail.com>
7)


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 29, 2009, 6:04:23 PM11/29/09
to santhavasantham
9)
மருளுரை சொல்லியு ழல்கிற மூடரை வஞ்சரை நீங்கிம திச்சடையான்
திருவடி யேநினை வோர்தமை நாடுப வர்வினை தீர்நிலை எய்துவரே
திருவடி வாகிய எவ்வடி வேத்தினும் அவ்வணம் ஈகிற செம்பெருமான்
திருமுடி யோடடி தேடிய மாலய னுந்தொழு தீஅரு ணாசலனே.


பதம் பிரித்து:
மருளுரை சொல்லி உழல்கிற மூடரை வஞ்சரை நீங்கி, மதிச்சடையான்
திருவடியே நினைவோர்தமை நாடுபவர் வினை தீர் நிலை எய்துவரே;
திருவடி(வு) ஆகிய எவ்வடி(வு) ஏத்தினும் அவ்வணம் ஈகிற செம் பெருமான்;
திருமுடியோ(டு) அடி தேடிய மால் அயனும் தொழு தீ அருணாசலனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/11/28 Siva Siva <naya...@gmail.com>
8)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 30, 2009, 9:29:52 AM11/30/09
to santhavasantham
"திருவண்ணாமலை - 3 - அருணாசலனே" என்ற இத்தொடரின் கடைசிப் பாடல் இது:

10)
துடியிடை யாளொரு கூறென வைத்தொரு தூநதி வண்டிரை எற்றிடவே
முடிமிசை ஏற்றவன் எவ்விட முந்திரி மூவெயில் ஓர்கணை யாற்சுடுவான்
பொடியணி மேனிய ராய்மல ராலடி போற்றிடு மன்பரின் உள்ளுறைவான்
அடிமுடி தேடிய மாலய னார்அறி யாவழல் ஆம்அரு ணாசலனே.


பதம் பிரித்து:
துடி இடையாள் ஒரு கூ(று) என வைத்(து), ஒரு தூ நதி வண் திரை எற்றிடவே
முடிமிசை ஏற்றவன்; எவ்விடமும் திரி மூ எயில் ஓர் கணையால் சுடுவான்;
பொடி அணி மேனியராய் மலரால் அடி போற்றிடும் அன்பரின் உள் உறைவான்;
அடி முடி தேடிய மால் அயனார் அறியா அழல் ஆம் அருணாசலனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/11/29 Siva Siva <naya...@gmail.com>
9)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Dec 14, 2009, 9:04:18 AM12/14/09
to santhavasantham

2008-11-09
கச்சித் திருவேகம்பம்
------------------------------
திருக்குறுந்தொகை அமைப்பில் - கலிவிருத்தம்
(
ஒவ்வோர் அடியிலும்
1.
முதற்சீர் மாச்சீர்.
2.
இரண்டாம் சீரின் முதல் அசை நேரசை.
3.
அதன்பின் வரிக்குள் வெண்டளை பயிலும்.
4.
நேரசையில் தொடங்கும் வரிக்குப் 11 எழுத்துகள். நிரையசையில் தொடங்கும் வரிக்குப் 12 எழுத்துகள்.)

1)
எல்லை இல்லா இடர்க்கடல் தன்னிலே
அல்லல் எய்தி அலமரும் நெஞ்சமே,
தொல்லை வல்வினைத் துன்பங்கள் ஏதுமே
இல்லை யேதிரு ஏகம்பம் ஏத்தவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/30 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Dec 15, 2009, 8:09:16 AM12/15/09
to santhavasantham

2)
என்றன் பேதை மனமே இதையுணர்,
முன்வி னைப்பயன் என்னும் முடிவிலாத்
துன்ப மும்துய ரும்தொலைந் தெய்தலாம்
இன்ப மேதிரு ஏகம்பம் ஏத்தவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/14 Siva Siva <naya...@gmail.com>

2008-11-09
கச்சித் திருவேகம்பம்
------------------------------
திருக்குறுந்தொகை அமைப்பில் - கலிவிருத்தம்

Siva Siva

unread,
Dec 16, 2009, 8:22:10 AM12/16/09
to santhavasantham

3)
விடமாட் டாத வினைகளும் வீடுமே,
மடமா தோர்பால் மகிழ்பவன், சென்னியில்
படநா கத்தொடு பால்மதி சூடுவான்,
இடபத் தான்உறை ஏகம்பம் ஏத்தவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/15 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Dec 16, 2009, 12:24:59 PM12/16/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
இப்பாடலில் பிழை சுட்டவும்.

அன்புடன்,
தங்கமணி.

முந்தும் வல்வினை மூண்டிடும் வேளையில்
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே!
விந்தை யாக விளையாடும் ஈசனாம்
எந்தை தேசனின் ஏகம்பம் ஏத்தவே!

On Dec 15, 5:09 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> என்றன் பேதை மனமே இதையுணர்,
> முன்வி னைப்பயன் என்னும் முடிவிலாத்
> துன்ப மும்துய ரும்தொலைந் தெய்தலாம்
> இன்ப மேதிரு ஏகம்பம் ஏத்தவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/12/14 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2008-11-09
> > கச்சித் திருவேகம்பம்
> > ------------------------------
> > திருக்குறுந்தொகை அமைப்பில் - கலிவிருத்தம்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Dec 16, 2009, 9:19:20 PM12/16/09
to santhav...@googlegroups.com


2009/12/16 thangamani <tvthan...@gmail.com>

அன்புள்ள சிவசிவா!
இப்பாடலில் பிழை சுட்டவும்.

அன்புடன்,
தங்கமணி.

முந்தும் வல்வினை மூண்டிடும் வேளையில்
உந்து நற்பதம் உன்னுவை நெஞ்சமே!
விந்தை யாக விளையாடும் ஈசனாம்
எந்தை தேசனின்  ஏகம்பம் ஏத்தவே!

சீர்களின் அமைப்புச் சரியாக உள்ளது.

Siva Siva

unread,
Dec 17, 2009, 8:12:23 AM12/17/09
to santhavasantham

4)
ஆசைச் சேற்றினில் ஆழ்ந்துழல் நெஞ்சமே
மாசைப் போக்கி மகிழ்வழி ஆவது,
பாசத் தோடெமன் பாயும்கால் காக்கிற
ஈச னார்உறை ஏகம்பம் ஏத்தலே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/16 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
Dec 17, 2009, 10:05:24 AM12/17/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
இப்பாடலில் பிழை சுட்டவும்.

பாச மாகியப் பற்றதும் நீங்கிட
நேச .னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச .னாருறை ஏகம்பம் ஏத்தவே!


அன்புடன்,
தங்கமணி.


On Dec 17, 5:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> ஆசைச் சேற்றினில் ஆழ்ந்துழல் நெஞ்சமே
> மாசைப் போக்கி மகிழ்வழி ஆவது,
> பாசத் தோடெமன் பாயும்கால் காக்கிற
> ஈச னார்உறை ஏகம்பம் ஏத்தலே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/12/16 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Dec 18, 2009, 7:59:01 AM12/18/09
to santhav...@googlegroups.com


2009/12/17 thangamani <tvthan...@gmail.com>

அன்புள்ள சிவசிவா!
இப்பாடலில் பிழை சுட்டவும்.

பாச மாகியப் பற்றதும் நீங்கிட
நேச .னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச  .னாருறை ஏகம்பம் ஏத்தவே!


பாச மாகியப் பற்று - 'ப்' மிகாது.

 

அன்புடன்,
தங்கமணி.




--

Siva Siva

unread,
Dec 18, 2009, 8:00:02 AM12/18/09
to santhavasantham

5)
கோடி கோடிப் பிறவியில் செய்வினை
ஓடிப் போய்இன் புறுவது திண்ணமே,
கேடி லான்உமை கேள்வன்உம் பர்தொழும்
ஈடி லான்திரு ஏகம்பம் ஏத்தவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/17 Siva Siva <naya...@gmail.com>

4)


thangamani

unread,
Dec 18, 2009, 2:55:19 PM12/18/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவா!பிழை சுட்டவும்.

மாடு மேலமர் மாதுமை பங்கனாய்
ஆடு வான்கழல் அண்டிடு நெஞ்சமே!
பாடும் பக்தரைப் பார்த்தருள் செய்குவான்
ஈடி லான் திரு ஏகம்பம் ஏத்தவே!


அன்புடன்,
தங்கமணி.

On Dec 18, 5:00 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கோடி கோடிப் பிறவியில் செய்வினை
> ஓடிப் போய்இன் புறுவது திண்ணமே,
> கேடி லான்உமை கேள்வன்உம் பர்தொழும்
> ஈடி லான்திரு ஏகம்பம் ஏத்தவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/12/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Dec 18, 2009, 2:59:16 PM12/18/09
to சந்தவசந்தம்
பாச மாகிய பற்றதும் நீங்கிட

நேச .னாமமே நெஞ்சினில் நின்றிட
வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
ஈச .னாருறை ஏகம்பம் ஏத்தவே!

//பாச மாகியப் பற்று - 'ப்' மிகாது.//

பிழை நீக்கி எழுதியுள்ளேன்.
நன்றி!சிவா!

அன்புடன்,
தங்கமணி.

On Dec 18, 4:59 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009/12/17 thangamani <tvthangam...@gmail.com>


>
> > அன்புள்ள சிவசிவா!
> > இப்பாடலில் பிழை சுட்டவும்.
>
> > பாச மாகியப் பற்றதும் நீங்கிட
> > நேச .னாமமே நெஞ்சினில் நின்றிட
> > வாச மேவுநல் மாலைகள் சூடிடும்
> > ஈச  .னாருறை ஏகம்பம் ஏத்தவே!
>
> பாச மாகியப் பற்று - 'ப்' மிகாது.
>
>
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Dec 19, 2009, 10:29:20 AM12/19/09
to santhavasantham

6)
மாறி மாறிப் பிறப்பளி வல்வினை
பாறிப் போய்விடும் பார்வதி கூறனார்
ஆறி ருக்கும் அவிர்சடை அண்ணலார்
ஈறி லார்திரு ஏகம்பம் ஏத்தவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/18 Siva Siva <naya...@gmail.com>

5)


thangamani

unread,
Dec 20, 2009, 5:01:41 AM12/20/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
பிழை சுட்டவும்.நன்றி!

சோத .னைமிகு துயரில் நலிந்து
வேத .னைதனில் வீழ்வ தறிகிலாய்!
போத .னாம்தவப் புண்ணியன் பேர்சொலும்
ஏத மில்திரு ஏகம்பம் ஏத்தவே!


அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Dec 20, 2009, 9:59:50 AM12/20/09
to santhav...@googlegroups.com


2009/12/20 thangamani <tvthan...@gmail.com>

அன்புள்ள சிவசிவா!
பிழை சுட்டவும்.நன்றி!

சோத .னைமிகு துயரில் நலிந்து
2ம்-3ம் சீர்களிடையே வெண்டளை பிறழ்கிறது.

வேத  .னைதனில் வீழ்வ தறிகிலாய்!
போத  .னாம்தவப் புண்ணியன் பேர்சொலும்
ஏத  மில்திரு ஏகம்பம் ஏத்தவே!


அன்புடன்,
தங்கமணி.


--

Siva Siva

unread,
Dec 20, 2009, 10:22:23 AM12/20/09
to santhavasantham

7)
பண்டிக் கென்றே பலநாள் உழல்வதால்
கண்ட தென்னே; கலிபோய்த் திருவரும்,
சண்டிக் கின்னருள் செய்தவன் தான்உறை,
எண்டிக் கும்புகழ் ஏகம்பம் ஏத்தவே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/19 Siva Siva <naya...@gmail.com>

6)


It is loading more messages.
0 new messages