இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:
கொசு - அரசன் - சிலேடை
-----------------------------------
இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
அரசன்:
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
'சிலேடை'யின் இலக்கணம் யாது?
சிலேடையணி
76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்.
77. அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.
78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப.
'சிலேடை', 'இரட்டுற மொழிதல்' இரண்டும் ஒன்றா?
சிலேடையை மிகுதியாகக் கையாண்ட புலவர் யார்?
சங்க நூல்களில் சிலேடை உள்ளதா?
78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப.
இன்னொன்று!
2008-07-10
கொசு - குளிர்பானம் (carbonated soft drinks) - சிலேடை
-------------------------------------------------------------------------
காணுமிடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணு மகளிரு டன்மிக வேவருந்தும்
பாணிசைக்கும் பன்னோய் பரப்பும் கொசுபல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:
கொசு - அரசன் - சிலேடை
-----------------------------------இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்அரசன்:
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-07-10
கொசு - பெண் - சிலேடை
-----------------------------------
தலையணை மந்திரம் தானோதும் அந்த
வலையில் மகிழ்ந்திருக்கும் போது - விலங்கே
எனினும் குடித்தனம் பண்பென் றிருக்கும்
இனியபெண்ணிற் கோர்கொசு ஈடு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
படிப்போர் வசதிக்காகப் பதம் பிரித்து:
2008-07-10
கொசு - குளிர்பானம் (carbonated soft drinks) - சிலேடை
-------------------------------------------------------------------------
காணுமிடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணு மகளிரு டன்மிக வேவருந்தும்
பாணிசைக்கும் பன்னோய் பரப்பும் கொசுபல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!
குளிர்பானம்:
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும் மகளிருடன் மிகவே அருந்தும்,
பாண் இசைக்கும், பல் நோய் பரப்பும், கொசு பல் பேர்
பூணும் குளிர்பானம் போல்!
கொசு:
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும், மகளிர் உடல் மிகவே வருந்தும்,
பாண் இசைக்கும், பல் நோய் பரப்பும், கொசு பல் பேர்
பூணும் குளிர்பானம் போல்
!
---
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
இரண்டாம் அடியைச் சற்று மாற்றி:
2008-07-10
கொசு - பெண் - சிலேடை
-----------------------------------
தலையணை மந்திரம் தானோதும் அந்த
வலைகட்டி உள்ளார் அவரோர் - விலங்கே
எனினும் குடித்தனம் பண்பென் றிருக்கும்
இனியபெண்ணிற் கோர்கொசு ஈடு.
பெண்:
தலையணை மந்திரம்தான் ஓதும், அந்த
வலை கட்டி; உள்ளார், அவர் ஓர் விலங்கே
எனினும், குடித்தனம் பண்பு என்று இருக்கும்
இனிய பெண்ணிற்கு, ஓர் கொசு ஈடு.
கொசு:
தலையணை மந்திரம் தான் ஓதும்; அந்த
வலை கட்டி உள்ளார் அவர்; ஓர் விலங்கே
எனினும் குடித்தல் நம் பண்பு என்று இருக்கும்;
இனிய பெண்ணிற்கு ஓர் கொசு ஈடு.
தான் - தேற்றம்; / அது;
ஓதுதல் - இரகசியத்தில் போதித்தல் / பாடுதல் ;
அந்த வலை - அழகு என்ற வலை; / கொசுவலை;
உள்ளார் - நினைக்கமாட்டார்; / இருக்கிறார்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-07-10
கொசு - பெண் - சிலேடை
-----------------------------------
தலையணை மந்திரம் தானோதும் அந்த
வலையில் மகிழ்ந்திருக்கும் போது - விலங்கே
எனினும் குடித்தனம் பண்பென் றிருக்கும்
இனியபெண்ணிற் கோர்கொசு ஈடு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
2008-08-20
செய்யுள் - மாடு
----------------------
அசையு மணியு மதுகாட்டும் ஏர்கொண்(டு)
அசையும் அடிநான்கும் ஆகும் - விசைகொண்டும்
செல்லுமாங் காங்கே திரிதலும் காணலால்
சொல்லிழைபா மாடு துணை.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-09-03
பிள்ளையார் - சிவன் - சிலேடை
-------------------------------------------
என்னானை நல்வடிவத் தானை இனியமறை
சொன்னவனை மூத்தவனைத் தோத்திரிப்பார்க்(கு) - இன்னமுதைத்
தந்தஇறை யைக்கொம்பை ஓர்பால் உடையானை
வந்திமுக்கண் ணன்மைந்தன் என்று.
பிள்ளையார்:
என் ஆனை நல் வடிவத்தானை, இனிய மறை
சொன்னவனை, மூத்தவனைத், தோத்திரிப்பார்க்(கு) - இன் அமுதைத்,
தந்த இறையைக், கொம்பை ஓர்பால் உடையானை,
வந்தி முக்கண்ணன் மைந்தன் என்று.
சிவன்:
என்னானை, நல் வடிவத்தானை, இனிய மறை
சொல் நவனை, மூத்தவனைத், தோத்திரிப்பார்க்(கு) - இன் அமுதைத்
தந்த இறையைக், கொம்பை ஓர்பால் உடையானை,
வந்தி, "முக்கண்ணன், மைந்தன்" என்று.
2008-09-04
பிள்ளையார் - சிவன் - சிலேடை - 2
-------------------------------------------
இருநாலு கையன் பிறைஎயிறு தாங்கி
பெருமா உரியன் பெரிதும் - அருள்வான்
அறுகால் மகிழ்மலரால் அன்பாய்த்தாள் போற்ற
கறுத்தகண்டன் பிள்ளையார் காண்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
மீண்டும் சரிசெய்து (!):
<> சிவன் - மாணவர் சிலேடை <>
பொதுவில் நடமிடுவார் போதும்ஊர் சுற்றி
எதையும் இரந்துண்பார் எங்கும் - குதுகலித்துப்
பெண்ணுக் கிடங்கொடுப்பார் பித்தாவார் தம்தலையில்
மண்ணும் சுமப்பார் மகிழ்ந்து!
அன்புள்ள மணி,
முதலிலிருந்தே இந்தச் சிலேடை சரியாக அமைந்தாற்போல எனக்கும் தோன்றவில்லை. ஆகவே, இதைக் கவனியாது ஒதுக்கிவிடலாம் (முடிந்தால் மட்டுறுத்துநர் இது பற்றிய இடுகைகளை நீக்கிவிடலாம்).
அனந்த்
11-9-2008
பி.கு. இந்தச் சிலேடையின் முதலடியில் இருந்த விளாங்காய்ச் சீரைச் சரிசெய்த சில நிமிடங்களுக்குப் பின், உ.வே.சா.வின் நூலில் புளித்த விளாங்காய் பற்றிய ஒரு நாலடியார் வெண்பா எதேச்சையாகத் தென்பட்டது விளாங்காய்ச் சீருடன! :
சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் *புளிவிளாங்காய்* ஆம்
(வல்சி= ஆகாரம்; தோள்கோப்பு = தோளில் மாட்டிக்கொள்ளும் உணவு மூட்டை)
2008-10-31
சிவன் - செங்கல் - சிலேடை
--------------------------------------
மண்ணாதி ஆவதால் தீக்கண் சுடுவதால்
பெண்ணாண் சிரம்தாங்கும் பெற்றியினால் - மண்ணோர்கள்
வீடுபெற வேண்டுவதால் செம்மை மிகுவதால்
காடுநடம் செய்சிவன்செங் கல்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-10-31
சிவன் - செங்கல் - சிலேடை
--------------------------------------
மண்ணாதி ஆவதால் தீக்கண் சுடுவதால்
பெண்ணாண் சிரம்தாங்கும் பெற்றியினால் - மண்ணோர்கள்
வீடுபெற வேண்டுவதால் செம்மை மிகுவதால்
காடுநடம் செய்சிவன்செங் கல்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
விளக்கத்துடன்:
2008-11-07
சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------
நீர்மேல் இருக்கும் நிரம்பப்பேர் ஏறும்ஓர்
ஊர்தி துறைகளில் உள்ளதே - சேர்விடம்
காணலாம் கண்டங்கண் ணீர்வழிஅன் பர்புகழ்தீத்
தூணரன் கப்பல் துணை.
கப்பல்:
நீர்மேல் இருக்கும்;
நிரம்பப் பேர் ஏறும் ஓர் ஊர்தி;
துறைகளில் உள்ளதே சேர்விடம் - அது அடையுமிடம் துறைகளில் (ports) உள்ளது;
காணலாம் கண்டங்கள் நீர் வழி - நீரில் உள்ள வழி மூலம் (அதில் சென்று) பல கண்டங்களைக் காணலாம்.
சிவன்:
நீர் மேல் இருக்கும் - முடிமீது கங்கை உடையவர்;
நிரம்பப் பேர் - பல பெயர்கள் உடையவர்;
ஏறும் ஓர் ஊர்தி - அவருக்கு எருதும் ஒரு வாகனம்;
("நீர்மேல் இருக்கும் நிரம்பப்; பேர் ஏறும் ஓர் ஊர்தி" என்றும் பிரிக்கலாம். "முடிமேல் மிகுந்த நீர் இருக்கும்; பெரிய எருதும் ஒரு வாகனம்;)
துறைகளில் உள்ள தே - (பராய்த்துறை, ஆவடுதுறை, பெருந்துறை, சோற்றுத்துறை, அன்பிலாலந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, எனப்) பல துறைகளிலும் உறைகிற தெய்வம்;
சேர் விடம் காணலாம் கண்டம் - சேர்கிற விடத்தைக் கழுத்தில் காணலாம்;
கண்ணீர் வழி அன்பர் புகழ் தீத் தூண் அரன் - (உள்ளம் உருகிக்) கண்ணீர் வழிகிற பக்தர்கள் புகழ்கிற, பெரிய நெருப்புத் தூணாக நின்ற சிவபெருமான்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-11-07
சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------
நீர்மேல் இருக்கும் நிரம்பப்பேர் ஏறும்ஓர்
ஊர்தி துறைகளில் உள்ளதே - சேர்விடம்
காணலாம் கண்டங்கண் ணீர்வழிஅன் பர்புகழ்தீத்
தூணரன் கப்பல் துணை.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
விளக்கத்துடன்:
2008-11-07
சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------
விளக்கத்துடன்
:
2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.
கோலம்:
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - வெள்ளைப் பொடி எங்கும் திகழும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - தரை மீது இருக்கும்;
நன் மாவு இழையும் பண்பு இருக்கும் - நல்ல மாவு இழையும் தன்மை இருக்கும் - (இழைகோலம்);
கோடா நிற்கும் - கோடாக இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்து இடும் - தினமும் பலர் குனிந்து இடுகிற;
சிவன்:
வெண் பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - திருநீறு திருமேனியில் எங்கும் விளங்கும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - பூமியில் காட்சிகொடுக்கும்;
நன் மா விழையும் பண்பு இருக்கும் - நல்ல எருதை (வாகனமாக) விரும்பும் குணம் இருக்கும்;
கோடா நிற்கும் - பாரபட்சமின்றி இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்திடும் - பலரும் தினமும் வணங்கும்;
காடு ஆடு அரன் - சுடுகாட்டில் நடம் செய்யும் சிவபெருமான்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
கார்த்திகை பிறக்குமுன்னே மார்கழிக்கு வரவேற்பு !
2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
விளக்கத்துடன்
:
2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.
கோலம்:
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - வெள்ளைப் பொடி எங்கும் திகழும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - தரை மீது இருக்கும்;
நன் மாவு இழையும் பண்பு இருக்கும் - நல்ல மாவு இழையும் தன்மை இருக்கும் - (இழைகோலம்);
கோடா நிற்கும் - கோடாக இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்து இடும் - தினமும் பலர் குனிந்து இடுகிற;
சிவன்:
வெண் பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - திருநீறு திருமேனியில் எங்கும் விளங்கும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - பூமியில் காட்சிகொடுக்கும்;
நன் மா விழையும் பண்பு இருக்கும் - நல்ல எருதை (வாகனமாக) விரும்பும் குணம் இருக்கும்;
கோடா நிற்கும் - பாரபட்சமின்றி இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்திடும் - பலரும் தினமும் வணங்கும்;
காடு ஆடு அரன் - சுடுகாட்டில் நடம் செய்யும் சிவபெருமான்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
கார்த்திகை பிறக்குமுன்னே மார்கழிக்கு வரவேற்பு !
2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
விளக்கத்துடன்:
2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
2008-12-09
சிவன்
-
கயிறு
-
சிலேடை
----------------------------------
சென்னிசே
ரப்புரியும் நாரியையும்
நற்பொருள்
பன்னலம்
ஈயும் பலபிணி -
இன்னிலை
ஆக்கும்
அரவமென்றும் தோன்றுமிருள்
கண்டவிடம்
காக்கும்
பெருமான் கயிறு.
பதம்
பிரித்து:
கயிறு:
சென்னி
சேர் அப் புரியும் நார் இயையும்
நற்பொருள்;
பல்
நலம் ஈயும்;
பல
பிணி இன் நிலை ஆக்கும்;
அரவம்
என்றும் தோன்றும் இருள் கண்ட
இடம் :
காக்கும்
பெருமான்,
கயிறு.
சிவன்:
சென்னி
சேரப் புரியும் நாரியையும்;
நற்பொருள்
பல்
நலம் ஈயும்;
பல
பிணி இல் நிலை ஆக்கும்;
அரவம்,
என்றும்
தோன்றும்,
இருள்
கண்ட இடம்/விடம்;
காக்கும்
பெருமான்,
கயிறு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-03-03
சிவன்
-
காவலர்
-
சிலேடை
--------------------------------------
அரவமிக
அல்லில் நடமாடி வீடு
புரத்துக்கோ
லோச்சுவார் தீயார் -
வரமருள்வார்
நற்றுணை
நல்லார்க்கு நானிலத்தில்
காவலர்
நெற்றி
விழிஈசர் நேர்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.
பதம் பிரித்து:கயிறு:
சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் நற்பொருள்;
பல் நலம் ஈயும்; பல பிணி இன் நிலை ஆக்கும்;
அரவம் என்றும் தோன்றும் இருள் கண்ட இடம் :காக்கும் பெருமான், கயிறு.சிவன்:
சென்னி சேரப் புரியும் நாரியையும்; நற்பொருள்பல் நலம் ஈயும்; பல பிணி இல் நிலை ஆக்கும்;
அரவம், என்றும் தோன்றும், இருள் கண்ட இடம்/விடம்;காக்கும் பெருமான், கயிறு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-03-03
சிவன்
-
காவலர்
-
சிலேடை
--------------------------------------
அரவமிக
அல்லில் நடமாடி வீடு
புரத்துக்கோ
லோச்சுவார் தீயார் -
வரமருள்வார்
நற்றுணை
நல்லார்க்கு நானிலத்தில்
காவலர்
நெற்றி
விழிஈசர் நேர்.
காவலர்:
அரவ[ம்]
மிக
அல்லில் நடமாடி,
வீடு
புரத்துக்,
கோல்
ஓச்சுவார்;
தீயார்
வர மருள்வார்;
நற்றுணை
நல்லார்க்கு நானிலத்தில்
காவலர்
நெற்றிவிழி
ஈசர் நேர்.
சிவன்:
அரவ[ம்]
மிக
அல்லில் நடம் ஆடி;
வீடு
புரத்துக் கோலோச்சுவார்;
தீயார்;
வரம்
அருள்வார்;
நற்றுணை
நல்லார்க்கு நானிலத்தில்
காவலர்
நெற்றிவிழி
ஈசர் நேர்.
அரவம்
-
பாம்பு;
/ ஓசை;
வீடு
-
வீடு
பேறு;
/ இல்லம்;
புரத்தல்
-
அனுக்கிரகித்தல்.;
/ காத்தல்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-03-03
சிவன் - காவலர் - சிலேடை
--------------------------------------
அரவமிக அல்லில் நடமாடி வீடு
புரத்துக்கோ லோச்சுவார் தீயார் - வரமருள்வார்
நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்
நெற்றி விழிஈசர் நேர்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சிலேட்டை எடுத்தெழுதி இட்டதை அழித்தாலே
சிலேடை என்பானும் உளனே!
2009-03-06
சிவன்
- கூடை
-
சிலேடை
------------------------------------
பண்டம்பெய்
பாங்கிருக்கும் பாரித்
திருக்கும்தீக்
கண்ணீறாம்
பெற்றியும் காட்டும்பூ -
வுண்ணிறைய
மாந்தருச்சி
மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை
ஊர்ந்தசிவன்
ஓர்கூடை ஒப்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
On Jul 5 2008, 11:03 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:
>
> கொசு - அரசன் - சிலேடை
> -----------------------------------
> இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அரசன்:
> இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
> பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> கொசு:
> இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/7/5 kavimamani <ELAND...@gmail.com>:
>
>
உலங்கு என்றால் கொசுவுக்கு ஒரு பெயர்.
இலங்கையில் ஹெலிகாப்டரை உலங்கு வானூர்தி
என்கிறார்கள். உலகு/உலங்கு - அசைதல் என்ற
பொருள். அங்கங்கு போய் ஒரே இடத்தில்
நின்று பின் நகர்வது. உலவுதல் = உலகுதல் தொடர்புடைய
வினைச்சொற்கள். மற்ற கோள்களைப் போல் உலகும்
அண்டவெளியில் அசைவது. உலகு என்னும் சொல்லின் வேர்
இதுவாய் இருக்கலாம். விலகு/விலங்கு,
அழுகு/அழுங்கு, குணுகு/குணுங்கு, பகு/பங்கு, இசகு/இசங்கு,
நுணுகு/நுணுங்கு .... போல உலகு/உலங்கு.
உலங்கு - தன்வினை; உலக்கு - பிறவினை
(உலக்கை - மேலும் கீழும் அசைக்கப்படுவது/உலக்கப்படுவது).
உலங்கு வானூர்திக்கும், கொசு(உலங்கு)க்கும்
சிலேடை மரபுக்கவியில் தாருங்களேன்.
நா. கணேசன்
கொசுக்களில் ஆணும், பெண்ணும் காதற்கீதம்
ஒரே அதிர்வெண்ணில் தம் சிறகுகளால் எழுப்புகின்றன.
1200 Hz is divisible either by 400 Hz
or 300 Hz. Ie., 1200 is lowest common denominator
for 300 and 400.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/7814404.stm
"The amorous couple began to beat their wings together
at a matching frequency - 1,200 hertz.
This love song is a "harmonic", or multiple, of their
individual frequencies - 400 Hz for the female and
600 Hz for the male. "
>
>
>
> > அருமை
> > இலந்தை
> > On Jul 4, 5:13 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> > > முதல் அடியில் முதலிரு சீர்களைச் சற்று மாற்றி :
>
> > > இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> > > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > > அன்புடன்,
> > > வி. சுப்பிரமணியன்
>
> > > 2008/7/3 Siva Siva <nayanm...@gmail.com>:
>
> > > > 2008-07-03
> > > > கொசு - அரசன் - சிலேடை
> > > > -----------------------------------
> > > > இரியு மாற்றார் இரத்தம் மிகவும்
> > > > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > > > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > > > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > > > அன்புடன்,
> > > > வி. சுப்பிரமணியன்
>
> > > --http://www.geocities.com/nayanmars
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
2009-03-06
உலங்கூர்தி
(ஹெலிகாப்டர்)
- கொசு
-
சிலேடை
--------------------------------------------------------------
வான்படையாய்
வந்து வலிசேர்க்கும்
எப்போதும்
தான்விரும்பும்
தானம் தனிலிறங்கும் -
கான்வழியே
காணாமல்
போனாலும் தேடிவரும் காண்கொசு
சேணார்
உலங்கூர்தி செப்பு.
பதம்
பிரித்து:
வான்
படையாய் வந்து வலி சேர்க்கும்;
எப்போதும்
தான்
விரும்பும் தானம்தனில்
இறங்கும்;
- கான்
வழியே
காணாமல்
போனாலும் தேடி வரும் காண்;
கொசு
சேண்
ஆர் உலங்(கு)ஊர்தி
செப்பு.
வான்
படை -
ஆகாயப்
படை; /
பெரிய
படை;
வலி
- வலிமை;
/ நோவு;
தானம்
- இடம்;
கான்
-
காடு;
காணாமல்
போனாலும் -
தொலைந்து
போனாலும்;
/ பிறர்
அறியாமல் சென்றாலும்;
சேண்
ஆர் -
உயர்ச்சி
மிகுந்த;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
நன்றி,
நா. கணேசன்
விளக்கத்தோடு:
2009-03-06
சிவன்
-
கூடை
-
சிலேடை
------------------------------------
பண்டம்பெய்
பாங்கிருக்கும் பாரித்
திருக்கும்தீக்
கண்ணீறாம்
பெற்றியும் காட்டும்பூ -
வுண்ணிறைய
மாந்தருச்சி
மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை
ஊர்ந்தசிவன்
ஓர்கூடை ஒப்பு.
கூடை:
பண்டம்
பெய் பாங்(கு)
இருக்கும்
-
பொருள்களை
இடுமாறு இருக்கும்;
பாரித்(து)
இருக்கும்
-
(பொருளை
உள்ளே இட்டபின்)
கனமாக
இருக்கும்;
தீக்கண்
நீ(று)
ஆம்
பெற்றியும் காட்டும் -
தீயிடம்
சாம்பல் ஆகும் தன்மையும்
கொண்டிருக்கும்;
பூ
உள் நிறைய,
மாந்தர்
உச்சிமேல் கொள் -
(அதன்)
உள்ளே
பூக்களை நிரப்பி,
மக்கள்
தலைமேல் சுமக்கும்;
முடைதலையும்
பெற்ற -
(பிரம்பு
முதலியவற்றைக்கொண்டு)
பின்னுதலையும்
பெறும்
ஓர்
கூடை -
ஒரு
கூடை.
சிவன்:
பண்(டு)
அம்(பு)
எய்
பாங்(கு)
இருக்கும்
-
முன்னொரு
சமயம்,
(முப்புரங்கள்
மேல்,
பன்றி
மேல்)
அம்பு
எய்த நன்மை இருக்கும்;
('பாங்கு
-
பக்கம்'
எனக்கொண்டால்
அர்த்தநாரிக்கோலத்தையும்
சுட்டும்).
பாரித்(து)
இருக்கும்
-
காத்து
அருளும்;
தீக்கண்,
ஈ(று)
ஆம்
பெற்றியும் காட்டும் -
நெருப்பை
உமிழும் கண்ணும்,
அனைத்திற்கும்
முடிவாக இருக்கும் தன்மையையும்
காட்டும்;
பூவுள்
நிறைய மாந்தர் உச்சிமேல்
கொள் -
பூமியில்
பலரும் மிகவும் போற்றும்;
முடை
தலையும் பெற்ற -
(பிரமனது)
புலால்
நாறும் தலையைக் கையில்
ஏந்தும்;
விடை
ஊர்ந்த சிவன் -
இடபத்தின்
மேல் ஏறிவரும் சிவபெருமான்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-03-06
சிவன் - கூடை - சிலேடை
------------------------------------
பண்டம்பெய் பாங்கிருக்கும் பாரித் திருக்கும்தீக்
கண்ணீறாம் பெற்றியும் காட்டும்பூ - வுண்ணிறைய
மாந்தருச்சி மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை
ஊர்ந்தசிவன் ஓர்கூடை ஒப்பு.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-03-13
சிவன்
-
நீள்தொடர்
(mega
serial) -
சிலேடை
-------------------------------------------------------------
தொல்லை
மிகுத்திருக்கும் மேலும்
சலமிருக்கும்
எல்லை
இலாதிருக்கும் ஏசுதலை -
அல்லதொரு
பாத்திரம்
இல்லாத பாங்கிருக்கும்
ஈசன்தீ
நேத்திரன்
நீள்தொடர் நேர்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்தோடு:
2009-03-06சிவன் - கூடை - சிலேடை
------------------------------------
விளக்கத்துடன்
:
2009-03-13
சிவன்
-
நீள்தொடர்
(mega
serial) -
சிலேடை
-------------------------------------------------------------
தொல்லை மிகுந்திருக்கும் மேலும் சலமிருக்கும்
எல்லை
இலாதிருக்கும் ஏசுதலை -
அல்லதொரு
பாத்திரம்
இல்லாத பாங்கிருக்கும்
ஈசன்தீ
நேத்திரன்
நீள்தொடர் நேர்.
சிவன்
/
நீள்தொடர்:
தொல்லை
-
பழமை;
/ துன்பம்;
சலம்
-
நீர்
(கங்கை);
/ வஞ்சனை;
பொய்ம்மை;
கோபம்;
தீயசெயல்;
எல்லை
-
அளவு;
முடிவு;
ஏசுதலை
-
(ஏசு
+
தலை)
இகழப்படும்
மண்டையோடு;
/ (ஏசுதல்+ஐ)
திட்டுவதை;
பாத்திரம்
-
கொள்கலம்;
/ நாடகத்தில்
வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-03-13
சிவன் - நீள்தொடர் (mega serial) - சிலேடை
-------------------------------------------------------------
தொல்லை மிகுத்திருக்கும் மேலும் சலமிருக்கும்
எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு
பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் ஈசன்தீ
நேத்திரன் நீள்தொடர் நேர்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-04-03
(இராமநவமியை
ஒட்டி)
சிவன்
-
இராமன்
-
சிலேடை
-------------------------------------
கோதண்ட
பாணிதந்தை சொற்கடந்தா
னல்லனே
மாதரையாள்
வான்புகழ் மன்னியவன் -
வேதனை
தீர
இராவணனை அன்றடர்த்தான்
சேவின்மேல்
ஊரரன்
தாசரதி ஒப்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்துடன்:
2009-03-13சிவன் - நீள்தொடர் (mega serial) - சிலேடைதொல்லை மிகுந்திருக்கும் மேலும் சலமிருக்கும்
-------------------------------------------------------------சிவன் / நீள்தொடர்:
எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு
பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் ஈசன்தீ
நேத்திரன் நீள்தொடர் நேர்.
தொல்லை - பழமை; / துன்பம்;
சலம் - நீர் (கங்கை); / வஞ்சனை; பொய்ம்மை; கோபம்; தீயசெயல்;
எல்லை - அளவு; முடிவு;
ஏசுதலை - (ஏசு + தலை) இகழப்படும் மண்டையோடு; / (ஏசுதல்+ஐ) திட்டுவதை;
பாத்திரம் - கொள்கலம்; / நாடகத்தில் வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பதம் பிரித்து
:
2009-04-03
(இராமநவமியை
ஒட்டி)
சிவன்
-
இராமன்
-
சிலேடை
-------------------------------------
கோதண்ட
பாணிதந்தை சொற்கடந்தா
னல்லனே
மாதரையாள்
வான்புகழ் மன்னியவன் -
வேதனை
தீர
இராவணனை அன்றடர்த்தான்
சேவின்மேல்
ஊரரன்
தாசரதி ஒப்பு.
இராமன்:
கோதண்டபாணி;
தந்தை
சொல் கடந்தான் அல்லனே;
மா
தரை ஆள்வான்;
புகழ்
மன்னியவன்;
வேதனை
தீர
இராவணனை அன்று அடர்த்தான்;
தாசரதி;
சிவன்:
கோ;
தண்டபாணி
தந்தை;
சொல்
கடந்தான்;
நல்லனே;
மாதரை
ஆள்,
வான்
புகழ் மன்னியவன்;
வேதன்;
ஐ;
தீர
இராவணனை அன்று அடர்த்தான்;
சேவின்மேல்
ஊர்
அரன்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-04-03 (இராமநவமியை ஒட்டி)
சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------
கோதண்ட பாணிதந்தை சொற்கடந்தா னல்லனே
மாதரையாள் வான்புகழ் மன்னியவன் - வேதனை
தீர இராவணனை அன்றடர்த்தான் சேவின்மேல்
ஊரரன் தாசரதி ஒப்பு.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-04-10
சிவன்
- காப்பி
-
சிலேடை
------------------------------------
பொடியாக
மேல்நீர் பொழியும் கசிந்தே
அடிசேர்ந்
தகமணக்கும் அன்பர் -
குடிக்கும்
பொருளாகும்
வாய்மணக்கப் போற்றிப்
புகழ்வார்
எருதேறி
காப்பி இணை.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பதம் பிரித்து:
2009-04-03 (இராமநவமியை ஒட்டி)சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------
விளக்கத்தோடு:
காப்பி:
பொடி
ஆக, மேல்
நீர் பொழியும் கசிந்தே அடி
சேர்ந்(து)
அக[ம்]
மணக்கும்
- பொடி
செய்யும்பொழுதும்,
அதன்
மேல் ஊற்றும் வெந்நீர் வடிந்து
கீழே பாத்திரத்தில் சேரும்பொழுதும்,
வீடே
கமகமக்கும்;
அன்பர்
குடிக்கும் பொருள் ஆகும் -
காப்பிப்
பிரியர்கள் குடிக்கிற
பொருளாகும்;
வாய்
மணக்கப்,
போற்றிப்
புகழ்வார் -
(அவர்கள்
அதைக் குடித்துத் தங்கள்)
வாய்
மணம் பெற,
அதைச்
சிலாகித்துப் பேசுவார்கள்;
சிவன்:
பொடி
ஆக[ம்]
- திருமேனியில்
திருநீறு;
மேல்
நீர் பொழியும் -
முடிமேல்
கங்கை பாயும்;
கசிந்தே
அடி சேர்ந்(து)
அக[ம்]
மணக்கும்
அன்பர் குடிக்கும் பொருள்
ஆகும் -
நெகிழ்ந்து
திருவடியை அடைந்து மணக்கின்ற
உள்ளத்தை உடைய பக்தர்கள்
குடும்பத்திற்கும் நன்மை
உண்டாகும்;
(அன்பர்கள்
அருந்தும் இன்பத் தேன் ஆவான்
என்றும் கொள்ளலாம்);
வாய்
மணக்கப் போற்றிப் புகழ்வார்
- (பக்தர்கள்
தங்கள்)
வாய்
மணக்க ஈசன் புகழைப்
பாடுவார்கள்/பேசுவார்கள்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-04-10
சிவன் - காப்பி - சிலேடை
------------------------------------
பொடியாக மேல்நீர் பொழியும் கசிந்தே
அடிசேர்ந் தகமணக்கும் அன்பர் - குடிக்கும்
பொருளாகும் வாய்மணக்கப் போற்றிப் புகழ்வார்
எருதேறி காப்பி இணை.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-05-19
சிவன்
-
கரும்பு
-
சிலேடை
------------------------------------
பல்லோர்கை
யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே
மெல்ல
விளையும் மிகஇனிமை -
நல்லஒரு
தோகையுண்(டு)
உச்சியில்
பாகங் களிக்கின்ற
ஏகன்
கரும்பென்(று)
இயம்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-04-10
சிவன் - காப்பி - சிலேடை
------------------------------------
விளக்கத்தோடு
:
2009-05-19
சிவன்
-
கரும்பு
-
சிலேடை
------------------------------------
பல்லோர்கை
யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே
மெல்ல
விளையும் மிகஇனிமை -
நல்லஒரு
தோகையுண்(டு)
உச்சியில்
பாகங் களிக்கின்ற
ஏகன்
கரும்பென்(று)
இயம்பு.
பல்லோர்
-
1) பல்
உடையவர்கள்;
2) பலர்;
கையேந்தி
-
1) கையில்
ஏந்தி;
2) கையை
ஏந்தி;
மெல்ல
-
1) கடித்து
மெல்லும்பொழுது;
2) மெதுவாக;
இனிமை
-
1) தித்திப்பு;
2) இன்பம்;
தோகை
-
1) நெல்
கரும்பு வாழை முதலியவற்றின்
தாள் (Sheath,
as of sugarcane); 2) பெண்;
உச்சி
-
1) மேல்
பகுதி;
2) தலை;
பாகங்களிக்கின்ற
-
1) பாகு
அங்கு அளிக்கின்ற;
2) பாகம்
களிக்கின்ற;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-05-19
சிவன் - கரும்பு - சிலேடை
------------------------------------
பல்லோர்கை யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே
மெல்ல விளையும் மிகஇனிமை - நல்லஒரு
தோகையுண்(டு) உச்சியில் பாகங் களிக்கின்ற
ஏகன் கரும்பென்(று) இயம்பு.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-07-03
சிவன்
- தேனீ
-
சிலேடை
------------------------------------
மலரகத்துத்
தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு
மாறடிகள் காட்டும் -
வலங்கொண்டோர்
கூடடையா
வண்ணம் கொடுக்கு மிருக்குமறை
பாடரன்
தேனீயென் பார்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்தோடு:
2009-05-19சிவன் - கரும்பு - சிலேடை
------------------------------------
விளக்கத்தோடு
:
2009-07-03
சிவன்
- தேனீ
-
சிலேடை
------------------------------------
மலரகத்துத்
தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு
மாறடிகள் காட்டும் -
வலங்கொண்டோர்
கூடடையா
வண்ணம் கொடுக்கு மிருக்குமறை
பாடரன்
தேனீயென் பார்.
தேனீ:
மலரகத்துத்
தங்கி மகிழும் தேன் நாடி -
மதுவை
விரும்பி மலர்களுள் சென்றிருந்து
களிக்கும்;
நலம்
செய்யும் -
(மகரந்தச்
சேர்க்கைக்கு உதவி)
நன்மை
செய்யும்;
ஆறு
அடிகள் காட்டும் -
ஆறு
கால்கள் இருக்கும்;
வலங்கொண்டோர்
கூடு அடையா வண்ணம் கொடுக்கும்
இருக்கும் -
வலியவர்கள்
(தன்)
கூட்டை
நெருங்காதபடித் தாக்கக்
கொடுக்கும் இருக்கும்;
அறை
பாடு தேனீ -
ரீங்காரம்
செய்யும் தேனீ.
சிவன்:
மலர்அகத்துத்
தங்கி மகிழும் தேன் ஆடி -
(அடியவர்களின்)
மலர்ந்த
மனத்துள் (அகத்தாமரையில்)
உறைந்து
மகிழ்பவன்;
தேன்
அபிஷேகம் உடையவன்;
நலம்
செய்யும் மாறு [/செய்யுமாறு]
அடிகள்
காட்டும் -
நன்மை
செய்பவனாக,
அர்த்தநாரீஸ்வரனாக
(ஆண்
பெண் என)
வேறுபட்ட
பாதங்களை உடையவன்;
[/திருவடிகளைக்
காட்டி நன்மை செய்பவன்];
வலங்கொண்டோர்
கூடு அடையா வண்ணம் கொடுக்கும்
- (தன்னைப்)
பிரதட்சிணம்
செய்யும் அடியவர்கள் மீண்டும்
ஓர் உடலை அடையாமல் (பிறப்பை
அறுத்து)
அருள்செய்பவன்;
இருக்கு
மறை பாடு அரன் -
ரிக்வேதம்
போற்றும் சிவன்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-07-03
சிவன் - தேனீ - சிலேடை
------------------------------------
மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்
கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமறை
பாடரன் தேனீயென் பார்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-07-10
சிவன்
- பழையது
-
சிலேடை
------------------------------------
நீர்மேல்
பொருந்த இரவெல்லாம்
நின்றாடும்
பார்மகிழு
மோர்அன்னம் நல்குமிகப் -
பேருண்டு
வாழ்த்துகிற
மாண்பிருக்கும் மாவடு
நற்றுணையாம்
ஏத்தரன்
இப்பழைய தொப்பு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
விளக்கத்தோடு:
2009-07-03சிவன் - தேனீ - சிலேடை
------------------------------------
2009-07-10
அரி
- பழையது
-
சிலேடை
------------------------------------
நீரில்
துயில்கொள்ளும் காலை
நினைப்பரன்பர்
பேரில்
பெரும்தொன்மை கொண்டிருக்கும்
-
பார்பிசைந்(து)
உண்ணலுண்(டு)
உள்ளியோர்
பக்கமிருக் கும்காக்கும்
கண்ணன்
பழையது காண்.
வேறொரு இழையில் இன்று இட்டது. தொடர்ச்சிக்காக இவ்விழையிலும் இடுகிறேன்.
2009-07-10
சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
வேறொரு இழையில் இன்று இட்டது. தொடர்ச்சிக்காக இவ்விழையிலும் இடுகிறேன்.
2009-07-10
சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழு மோர்அன்னம் நல்குமிகப் - பேருண்டு
வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
விளக்கக்குறிப்புகளோடு:
2009-07-10
சிவன்
- பழையது
-
சிலேடை
------------------------------------
நீர்மேல்
பொருந்த இரவெல்லாம்
நின்றாடும்
பார்மகிழு
மோர்அன்னம் நல்குமிகப் -
பேருண்டு
வாழ்த்துகிற
மாண்பிருக்கும் மாவடு
நற்றுணையாம்
ஏத்தரன்
இப்பழைய தொப்பு.
நின்று
ஆடும் -
1) தங்கியிருந்து
குளிக்கும்;
2) காலில்
நின்று நாட்டியம் செய்தல்;
பார்மகிழுமோர்
- 1) பார்
மகிழு[ம்]
மோர்;
2) பார்
மகிழும் ஓர்;
ஓர்
- 1) ஒரு;
2) ஒப்பற்ற;
அன்னம்
- 1)
சாதம்/சோறு;
2) வீட்டின்பம்.
பேர்
- 1) மனிதர்;
2) பெயர்;
நாமம்;
உண்டு
- 1)
சாப்பிட்டு;
2) உள்ளது;
மாவடு
- 1)
மாம்பிஞ்சு;
2) மா வடு
- சிறந்த
பிரமச்சாரி;
நற்றுணையாம்
- 1) நற்றுணை
ஆம்; 2)
நற்றுணை,
யாம்;
(அப்பர்
தேவாரம் -
5.1.1 - "அன்னம்
பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்"
- பேரின்பவீடு
நல்கும் தில்லைத்
திருச்சிற்றம்பலம்);
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
சென்னை ஸ்பெஷல்!
2009-07-19
சிவன்
- நீர்வண்டி
(தண்ணீர்
லாரி)
-
சிலேடை
--------------------------------------------------------------
தண்ணீரைத்
தாங்கிவரும் காணத்
தவமிருப்போர்
உண்ணீர்
எனவாகும் உண்மைதான் -
பெண்ணாணாய்ச்
சேர்ந்துநிற்கக்
கண்டதும் என்னண்டா
என்றுரைக்கும்
நீர்வண்டி
முக்கண்ணன் நேர்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்தோடு
:
2009-07-19
சென்னை
ஸ்பெஷல்!
சிவன்
- நீர்வண்டி
(தண்ணீர்
லாரி)
-
சிலேடை
--------------------------------------------------------------
தண்ணீரைத்
தாங்கிவரும் காணத்
தவமிருப்போர்
உண்ணீர்
எனவாகும் உண்மைதான் -
பெண்ணாணாய்ச்
சேர்ந்துநிற்கக்
கண்டதும் என்னண்டா
என்றுரைக்கும்
நீர்வண்டி
முக்கண்ணன் நேர்.
உண்ணீர்
- 1) உண்
நீர்;
2) உள்
நீர்;
உள்
- மனம்;
தான்
- 1) தேற்றச்
சொல்;
2) படர்க்கை
ஒருமைப்பெயர் (He,
she or it) - இங்கே,
அவன்;
உண்மைதான்
- 1) மெய்யே;
2) மெய்ப்பொருள்
அவன்;
அண்டா
- 1) ஒரு
பெரிய பாத்திரம்;
(இங்கே
ஆகுபெயராய் இனப்பொதுமையால்
குடம்,
தோண்டி,
முதலியவற்றையும்
குறித்தது);
2) அண்டனே;
(அண்டன்
- கடவுள்
(God, as Lord
of the universe) );
(திருவாசகம்
- சிவபுராணம்
- "நீராய்
உருக்கியென் ஆருயிராய்
நின்றானே"
- என்
மனத்தை நீர் போல உருகச் செய்து
என் அரிய உயிராய் நின்றவனே!)
நீர்
வண்டி (தண்ணீர்
லாரி):
தண்ணீரைத்
தாங்கி வரும் -
காணத்
தவம் இருப்போர் உண் நீர் என
ஆகும் உண்மைதான் -
பெண்
ஆணாய்ச் சேர்ந்து,
நிற்கக்
கண்டதும் "என்
அண்டா"
என்(று)
உரைக்கும்
-
நீர்வண்டி.
சிவன்:
தண்ணீரைத்
தாங்கி வரும் -
காணத்
தவம் இருப்போர் உள் நீர் என
ஆகும் -
உண்மை
தான் பெண் ஆணாய்ச் சேர்ந்து
நிற்கக் கண்டதும்,
"என்
அண்டா"
என்(று)
உரைக்கும்
-
முக்கண்ணன்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
சென்னை ஸ்பெஷல்!
2009-07-19
சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை
--------------------------------------------------------------
Double
Feature !!
2009-05-19
சிவன்
- கடல்
-
சிலேடை
------------------------------------
அலைவீசும்
மேலே அடியார் அறிவார்
உலகுசுற்றும்
உண்ணீலம் தோன்றும் -
நிலைபெறும்
ஆறெல்லாம்
சென்றடையும் நன்மை
அளிக்குமே(று)
ஏறெம்மான்
ஆழி இணை.
===============
சூரியகிரகண
ஸ்பெஷல்!
2009-07-23
சிவன்
- சூரியகிரகணம்
-
சிலேடை
---------------------------------------------
ஒளிஎங்கும்
வீச இருள்கண்டத் தோடும்
களிபொங்க
அன்பர்கள் காண்பர் -
ஒளிநிலா
நேர்படும்க
ணங்கள் விளக்கேந்தும்
நீர்ச்சடையன்
நேர்சூ
ரியகிரக ணம்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்தோடு:
2009-07-19சென்னை ஸ்பெஷல்!சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை
--------------------------------------------------------------
விளக்கத்தோடு
:
2009-05-19
சிவன்
- கடல்
-
சிலேடை
------------------------------------
அலைவீசும்
மேலே அடியார் அறிவார்
உலகுசுற்றும்
உண்ணீலம் தோன்றும் -
நிலைபெறும்
ஆறெல்லாம்
சென்றடையும் நன்மை
அளிக்குமே(று)
ஏறெம்மான்
ஆழி இணை.
நீலம்
- 1) நீலநிறம்;
2) விஷம்;
உண்ணீலம்
- 1) உள்
நீலம்;
2) உண்
நீலம்;
நிலைபெறுதல்
- 1) தன்மையைப்
பெறுதல்;
2) துன்பமற்ற
நிலையை அடைதல்;
ஆறு
- 1) நதி;
2) மார்க்கம்;
வழி;
சமயம்
(Religion);
கடல்:
அலை
வீசும் மேலே -
அதன்
மேல் அலை மோதும்;
அடி
யார் அறிவார் -
(மிக
ஆழமாக இருப்பதால்)
அதன்
கீழ்ப்பாகத்தை யாரும்
அறியமாட்டார்கள்;
உலகு
சுற்றும் -
உலகைச்
சுற்றி இருக்கும்;
உள்
நீலம் தோன்றும் நிலை பெறும்
- உள்ளே
நீலமாகத் தென்படும் தன்மையைக்
கொண்டிருக்கும்;
ஆறு
எல்லாம் சென்று அடையும் -
நதிகள்
எல்லாம் சென்று சேரும்;
நன்மை
அளிக்கும் -
உயிர்கள்
வாழ இன்றியமையாதது;
ஆழி
-
கடல்;
சிவன்:
அலை
வீசும் மேலே -
திருமுடிமேல்
(கங்கை
நதி) அலை
வீசும்;
அடியார்
அறிவார் -
அடியார்கள்
அறிவார்கள்;
/ அடியார்களை
அவர் அறிவார்;
உலகு
சுற்றும் -
மக்கள்
வலம்வருவார்கள்;
உண்
நீலம் தோன்றும் -
உண்ட
விஷம் (திருக்கழுத்தில்)
காணப்படும்;
நிலைபெறும்
ஆறு எல்லாம் சென்று அடையும்
- (பக்தர்கள்)
நற்கதி
அடையும் சமயங்களில் எல்லாம்
சென்று சரண் புகும்;
நன்மை
அளிக்கும் -
நலம்
செய்யும்;
ஏறு
ஏறு எம்மான் -
காளையின்மேல்
ஏறி வரும் எம் பெருமான் -
சிவன்;
(அலை
வீசும் மேலே அடி யார் அறிவார்
- 'மேலே'
என்பதில்
'ஏ'
என்பதை
அசையாகக் கொண்டு,
"(கங்கை
நதி) அலை
வீசும் உச்சியையும் திருவடியையும்
யார் அறிவார்"
என்றும்
பொருள்கொள்ளலாம்.
உண்
நீலம் தோன்றும் நிலைபெறும்
ஆறு எல்லாம் சென்று அடையும்
நன்மை அளிக்கும் -
இதை,
"உண்ட
விஷம் (கழுத்தில்)
தோன்றும்;
அங்கு
நிலையாக இருக்கும்;
(அன்பர்கள்
தம்) ஆறு
உட்பகைகளும் போய்ப் பெறும்
நன்மையைக் கொடுக்கும்"
என்றும்
பொருள்கொள்ளலாம்.
ஆறு
சிறுமைக் குணங்கள் -
காமம்,
குரோதம்,
உலோபம்,
மோகம்,
மதம்,
மாச்சரியம்;
(= ஆசை,
கோபம்,
miserliness, infatuation, செருக்கு
(arrogance),
பொறாமை
(Envy)
);
)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்தோடு
:
சூரியகிரகண
ஸ்பெஷல்!
2009-07-23
சிவன்
- சூரியகிரகணம்
-
சிலேடை
---------------------------------------------
ஒளிஎங்கும்
வீச இருள்கண்டத் தோடும்
களிபொங்க
அன்பர்கள் காண்பர் -
ஒளிநிலா
நேர்படும்க
ணங்கள் விளக்கேந்தும்
நீர்ச்சடையன்
நேர்சூ
ரியகிரக ணம்.
கண்டம்
- 1) பெரும்
நிலப்பரப்பு;
2) கழுத்து;
ஓடுதல்
- 1) விரைந்து
செல்லுதல்;
2) பரத்தல்;
காணுதல்
- 1)
பார்த்தல்;
2) ஆராய்தல்;
வணங்குதல்;
ஒளிநிலா
- 1)
வினைத்தொகை
- ஒளிக்கும்
நிலா;
2) ஒளிவீசும்
நிலா;
நிலாஒளி;
நேர்படுதல்
- 1)
சந்தித்தல்
(To meet; to
be in conjunction with, as planets); எதிர்ப்படுதல்
(To come in
front); சம்பவித்தல்;
2) காணப்படுதல்
(To
appear);
கணங்கள்
- 1)
காலநுட்பம்
- க்ஷணங்கள்;
2) பூதகணங்கள்;
(அப்பர்
தேவாரம் -
4.22.6 -
"ஓருடம்
பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ்
சென்னி"
- ஒரே
உடம்பில் தாமும் பார்வதியுமாக
இருவராகி,
ஒளிவீசும்
பிறையின் ஒளி பரவிய
சென்னியராய்..);
சூரிய
கிரகணம்:
ஒளி
எங்கும் வீச,
இருள்
கண்டத்(து)
ஓடும்
- (பகல்
ஆனபடியால்)
எங்கும்
வெயில் அடிக்க,
கண்டத்தில்
(சில
இடங்களில் மட்டும்)
இருள்
விரைந்து செல்லும்;
களி
பொங்க அன்பர்கள் காண்பர் -
மகிழ்ச்சியோடு
மக்கள் இதைப் பார்ப்பார்கள்;
ஒளிநிலா
நேர்படும் கணங்கள் விளக்(கு)
ஏந்தும்
- (சூரியனை)
மறைக்கும்
சந்திரன் சம்பவிக்கும் அந்தச்
சிறிது நேரத்தில் (எங்கும்
இருள் ஆகிவிட்டதால்)
விளக்கை
ஏந்துவார்கள்;
சூரிய
கிரகணம்.
சிவன்:
ஒளி
எங்கும் வீச இருள் கண்டத்(து)
ஓடும்
- சிவந்த
மேனியும் திருநீறும் ஒளி
வீசக்,
கருமை
கழுத்தில் பரவி இருக்கும்;
களி
பொங்க அன்பர்கள் காண்பர் -
இன்பம்
பொங்கப் பக்தர்கள் தியானிப்பார்கள்
/
தொழுவார்கள்;
ஒளிநிலா
நேர்படும் -
(முடிமேல்)
சந்திரனின்
ஒளியும் காணப்படும்;
கணங்கள்
விளக்(கு)
ஏந்தும்
- (இருளில்
ஆடும்போது)
பூதகணங்கள்
விளக்கு ஏந்தி இருப்பன.
நீர்ச்சடையன்
- கங்கையைச்
சடையுள் வைத்த சிவன்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-08-09
சிவன்
- மழை
-
சிலேடை
----------------------------------
வானீரை
ஏந்தி வருமே அமுதத்தைத்
தானீய
வந்துநஞ்சு கந்தருந் -
தானூரும்
போற்றும்
பொருளாய்ச் சிலசமயம்
தூற்றலுமாம்
நீற்றன்
சிவன்மழை நேர்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
விளக்கத்தோடு :சூரியகிரகண ஸ்பெஷல்!
2009-07-23
சிவன் - சூரியகிரகணம் - சிலேடை
---------------------------------------------
விளக்கத்தோடு.
2009-08-09
சிவன்
- மழை
-
சிலேடை
----------------------------------
வானீரை
ஏந்தி வருமே அமுதத்தைத்
தானீய
வந்துநஞ்சு கந்தருந் -
தானூரும்
போற்றும்
பொருளாய்ச் சிலசமயம்
தூற்றலுமாம்
நீற்றன்
சிவன்மழை நேர்.
வானீரை
- வான்
நீரை;
வான்
- 1) மேகம்;
/ 2) ஆகாயம்;
அமுதம்
- 1) நீர்;
/ 2) அமிர்தம்;
தான்
- 1) அது;
/ 2) அவன்;
தேற்றச்
சொல்;
நஞ்சுகந்தருந்தானூரும்
- 1) நம்
சுகம் தரும்தான்;
ஊரும்
/ 2) நஞ்சு
உகந்து அருந்து ஆன் ஊரும்;
ஆன்
ஊர்தல் -
எருதில்
செல்லுதல்;
சமயம்
- 1)
வேளை/பொழுது;
/ 2) மதங்கள்;
தூற்றல்
- தூறல்
- 1) சிறுமழை;
2) பழித்துப்
பேசுதல்;
குறிப்பு:
"வருமே
அமுதத்தை"
- புணர்ச்சியில்
"வருமே
வமுதத்தை"
- அதை
"வரு[ம்];
மேவு
அமுதத்தை"
(விரும்புகிற
அமுதத்தை)
என்றும்
பிரிக்கலாம்.
மழை:
வான்
நீரை ஏந்தி வருமே -
அமுதத்தைத்
தான் ஈய வந்து நம் சுகம்
தரும்தான்;
ஊரும்
போற்றும் பொருளாய்ச் -
சில
சமயம் தூற்றலும் ஆம் -
சில
வேளைகளில் சிறுமழையாகவும்
வரும்;
(--அல்லது
- பெருமழையாக
வெள்ளம் ஆகுமாறோ,
நமக்கு
இடைஞ்சல் விளைக்கும்படியோ
பெய்தால் பலரும் ஏசுவர்);
சிவன்:
வான்
நீரை ஏந்தி வருமே -
ஆகாய
கங்கையைத் தலையில் தாங்கி
வரும்;
அமுதத்தைத்தான்
ஈய வந்து நஞ்சு உகந்து அருந்து
-
ஆன்
ஊரும் -
போற்றும்
பொருளாய்ச் -
சில
சமயம் தூற்றலும் ஆம் -
நீற்றன்
சிவன் -
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-08-09
சிவன் - மழை - சிலேடை
----------------------------------
வானீரை ஏந்தி வருமே அமுதத்தைத்
தானீய வந்துநஞ்சு கந்தருந் - தானூரும்
போற்றும் பொருளாய்ச் சிலசமயம் தூற்றலுமாம்
நீற்றன் சிவன்மழை நேர்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2007-07-27
அகத்துறைப்
பாடல் - சிலேடை
------------------------------------------------------
(கலி
விருத்தம்? - "மா
விளம் காய் காய்" என்ற
வாய்பாடு)
நீரார்
சடையரே என்றால்ஆம் என்றாரே!
வாரார்
மங்கையோர் பாலென்றார்
வந்தாரே!
தாரார்
செல்வரே என்றேநான் எண்ணுங்கால்
ஊரா
அமர்ந்திருந்(து)
உள்ளத்தைக் கொண்டாரே
!
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
தமிழ் மரபு அறக்கட்டளை விழாவுக்குச் சென்றுவிட்டு நானும் திருப்பூர் கிருஷ்ணனும் வேறு சில நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தோம்.
பின் இருக்கையில் நான், இன்னொரு நண்பர் கிருஷ்ணன் மூவரும் அமர்ந்திருந்தோம்.
பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரிடம் ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்றேன்
“கிருஷ்ணாநகர் “என்றார் அவர். உடனே கிருஷ்ணன் சற்றுத்தள்லி உட்கார்ந்தார்.
“நீங்கள் ஏன் நகர்கிறீர்கள். வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள்” என்றார் நண்பர்
உடனே திருப்பூர் கிருஷ்ணன்
“நீங்கள் தானே கிருஷ்ணா நகர் என்று சொன்னீர்கள்!” என்றாரே பார்க்கலாம்.
உடனே பேச்சு சிலேடையைப் பற்றித் திரும்பியது.
கிவாஜ ஒருமுறை கிருஷ்ணன் வீட்டுக்குப் போயிருக்கிறார். வழியில் வாசலில் காயப்போட்டிருந்த புடவை அவர் மேல் பட்டது.
“கிருஷ்ணா இது என்ன புடவை தெரியுமா?” என்று கிவாஜ கேட்டாராம்.
“தேரியவில்லையே” என்றார்கிருஷ்ணன். உடனே கிவாஜ “இது வாயில் புடவை “ என்றாராம். வாயிலில் தொங்கிய புடவை வாயில் புடவை தானே!. வீட்டுக்குள் சென்றதும் டிபன் சாப்பிட அழைத்திருக்கிறார்கள். கிருஷ்ணனின் அக்கா கிவாஜவைப் பார்த்து
“நீங்கள் வருகிறீர்கள் என்று தெரியாது. தெரிந்தால் இட்டிலி பண்ணியிருப்பேன்.இப்பொழுது பூரி பண்ணியிருக்கிறேன். உங்களுக்குப் பூரி பிடிக்குமா? “ என்று கேட்டாராம். உடனே கிவாஜ
“என்ன இப்படிக்கேட்கிறீர்கள்?. ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காதா?” என்றாராம்.
பூரி ஜகந்நாதன் பிரசித்தமாயிற்றே!
இலந்தை
இலக்கிய அலங்காரங்களில் தனி அழகு கொண்டது, சிலேடை. நகைச்சுவையின் ஓர் அம்சம், அது. மற்ற நகைச் சுவைக்கும் சிலேடைக்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்றவற்றைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்கலாம். சிலேடையை மொழிபெயர்க்க இயலாது.
"கயா கயா கயா' என்று இந்தியில் ஒரு வாக்கியம். "கயா என்ற பெயருடைய நபர் புத்த கயா என்கிற ஊருக்குப் போனார்' என்பது அந்த வாக்கியத்தின் பொருள். இதைச் சிலேடை நயம் கெடாமல் அப்படியே தமிழில் மொழி பெயர்ப்பது எப்படி? அது போலவே தமிழ் மொழிச் சிலேடைகளை வேற்று மொழிக்குக் கொண்டு போக முடியாது. தாய்மொழி தவிர அன்னிய மொழிக்குக் கொண்டு செல்ல இயலாத தன்மைதான் சிலேடையின் தனிச்சிறப்பு.
"மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீய வன்கண்ணன் சிரமறுத்தான் திருவேங்கடத்துத்
தூயவன் கண் அன்பு உடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே.'
ஆகா! ரொம்ப அழகுற நயமான சிலேடைத் ‘தனம்’ வழங்கிஎம்மை மனத்தளவில் பெருந்’தனக்’ காரராக்கிவிட்டீர் அநந்த்!..
----~----~------~----~------~--~---
நல்ல போகியார் ஸ்பெஷல் போட்டீர் போம்..
எமக்கு ஒரு அழகான வெண்பா ருசிக்கக் கிடைத்தது..சுவைத்தேன்.
ஆமாம்..அந்த வெண்பா மூன்றாம் அடியில் தளை தட்டுகிறதே..
கவனிக்க விலையா?
..ஒருகை தனம்கொடுத்தால்,..உம்மைவைத் திப்போ
..திருகை தனம்கொடுப்பேன் யான்....