இந்த இழையில் தயைகூர்ந்து மொக்கைகளை இடவேண்டாம்.
கவியரங்கம் தொடர்பான விளக்கமாக இம்மடல்.
1. கவிஞர்கள் வரிசையை இன்னும் முடிவுசெய்யமுடியவில்லை. தனிமடலில்
நண்பர்கள் முதலில் வேண்டாம் என்ற விண்ணப்பத்தை இன்னமும் தந்தவண்ணம்
இருக்கிறார்கள். வரிசை இன்று இரவு வெளியாகும், இதே இழையில்.
2. ஒப்புதல் தெரிவித்தோர் பட்டியலும், அழைக்கப்படும் வரிசையுமாக இரண்டும்
ஒன்றாக வெளியாகும்.
3. கவியரங்கின் தலைப்பு 'இனிவரும் நாள்கள்'
4. புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, கானா, இசைப்பாடல், நவீன கவிதை என
கவிதையின் எந்த வகையில்வேண்டுமானாலும் கவிதை வடிக்கலாம்.
5. 14.1.09 நள்ளிரவு (துபாய் நேரம்) தலைமைக் கவிதையின் முற்பகுதியை
இடுவேன்.
6. பிறகு 14.1.09 காலை ஒன்பது மணிக்குள்ளாக, மேலே சொன்ன அழைக்கும்
வரிசையின்படி முதல் கவிஞரை அழைப்பேன்.
7. அவர் தனது கவிதையை இடுவார். 15ம்தேதி காலை ஒன்பது மணிவரையில் அவர்
தனது கவிதையை இடுவதற்காகக் காத்திருப்பேன்.
8. அதற்குள் அவர் இட்டுவிட்டாரென்றால் 14ம் தேதி இரவு அவருக்கு நன்றி
சொல்லுவேன்.
9. நன்றி சொன்னாலும், 15ம் தேதி காலையில்தான் அடுத்த கவிஞரை அழைப்பேன்.
இடைப்பட்ட அந்த 24 மணி நேரத்தில் கவிஞர் இட்ட கவிதை குறித்தான
பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.
10. கவிதைக்கான பாராட்டுகள், ஆஹா ஓஹோக்கள், இன்னும் நன்றாக
எழுதியிருக்கலாம், சரியில்லை போன்ற சிந்தனைகள் மட்டுமே இந்த இழையில்
இடம்பெறும்.
11. கவிதையின் உட்கரு தொடர்பான தீவிரமான விவாதங்கள் ஏதும் இருக்குமானால்,
தயைகூர்ந்து 'இன்னாரின் கவிதையின் உட்கரு குறித்த விவாதம்' என்ற
தலைப்பில் உறுப்பினரும் கவிஞரும் வேறு இழையில் பேசிக்கொள்ளலாம்.
12. கவிதையை இட்டதும் கவிஞரின் பங்கு முடிகின்றது. நன்றி, நன்றிக்கு
நன்றி போன்ற தொடரல்களைத் தவிர்க்கலாம்.
13. ஒரு கவிதை தொடர்பான 24 மணி நேர அவகாசத்தில் அந்தக் கவிதை தொடர்பான
பாராட்டுகளைத் தெரிவிப்பதே நல்லது. அடுத்த 24 மணி நேரத்தில் அடுத்த கவிதை
தொடர்பானவை. இப்படியாகத் தொடர்ந்தால் மிக அழகான இழையாக இது அமையும்.
14. ஆக், ஒரு நாளுக்கு ஒரு கவிதைதான், இன்னொரு பார்வையில் 24
மணிநேரத்திற்கு ஒரே ஒரு கவிதை பராட்டுதலுக்கு உள்ளாகப்போகின்றது, அதனால்
தீர்க்கமான வரிகளை கவிஞர்கள் எழுத வேண்டுகிறோம்.
15. பத்து கவிஞர்கள் இருந்தால் பத்து நாள்கள் கவியரங்கம் நடக்கும்.
கடைசிக் கவிஞர் முடித்ததும் எனது முடிவுரையுடன் கவியரங்கம் முடியும்.
மேற்கொண்டு விளக்கங்கள் வேண்டுமென்போர் கேட்கலாம்.
இங்கே இந்த நெறியாள்கைக்கு துணையாக அனைவரும் இயங்கவேண்டுகிறேன்.
உதாரணமாக, மூன்றாவது கவிதையின் பாராட்டுதல்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது
ஒருவேளை விடுமுறையில் சென்றிருந்த நண்பர் முதல் கவிதையைப் படித்துவிட்டு
பாராட்டினால், அவருக்கு நன்றி சொல்லலாம். விவாதங்கள் துவங்கப்பட்டால்
மட்டுறுத்தி வேறு இழைக்கு அழைத்துச் செல்லலாம்.
நம்முடைய கவனம் இதனை செவ்வனே செய்து முடிப்பதில் இருக்கவேண்டும்.
முடிப்பதற்கு முன், இந்த இழையில் மொக்கைகள் தவிர்க்கப்படவேண்டும்.
அன்புடன்
ஆசாத்
கே.பாலமுருகன்
கவிஞர்கள் தங்கள் பெயரையும் பட்டியலில் இணைக்க தயைகூர்ந்து தனிமடலில்
தொடர்புகொள்ள வேண்டுகிறேன். அப்படிக் கேட்பது இழையின் எண்ணிக்கையைக்
குறைக்கும், இழையை மொத்தமாக வாசிப்போர்க்கு அயர்ச்சியை உண்டாக்காது.
1.செல்வராஜ் ஜெகதீசன் - 14.1.09 காலை - துபாய் நேரம்
2.கோகுலன் - 15.1.09
3.பக்ருத்தீன் - 16.1.09
4.எழில் - 17.1.09
5.சாபு - 18.1.09
6.லக்கி ஷாஜஹான் - 19.1.09
7.வேணு - 20.1.09
8.தஞ்சை மீரான் - 21.1.09
9.சகாராத்தென்றல் - 22.1.09
10.ஆர்.நாகப்பன் - 23.1.09
11.சாந்தி - 24.1.09
12.சுபைர் - 25.1.09
13.அய்யனார் - 26.1.09
குறிப்பிட்ட நாளன்று காலை துபாய் நேரத்திற்கு உங்களுக்கான அழைப்பு இங்கே
வரும்.
அழைப்பு வந்த பின்னர் கவியரங்கத் தலைப்பில் நீங்கள் எழுதியிருக்கும்
கவிதையை இடவேண்டும்.
அடுத்த நாள் காலை வரையில் உங்கள் கவிதைக்கான பாராட்டுகளை அல்லது
விமர்சனங்களை இங்கே பின்னூட்டங்களாக நண்பர்கள் இடுவார்கள். கருத்தின்
மீதான விவாதமாக இருந்தால் அவை இன்னொரு புதிய இழைக்கு எடுத்துச்
செல்லப்படும். அன்றைய இரவு கவிஞருக்கு நன்றி சொல்லி முடிப்பேன்.
அடுத்த நாள் காலை அடுத்த கவிஞருக்கான அழைப்பு.
இடையில் எனது இணைய இணைப்பில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்பட்டாலும்
ஆசிபின் துணையுடன் உரிய நேரத்தில் அழைப்பும் நன்றியும் இங்கே இடப்படும்
வகையில் இயங்குவேன்.
சிறப்பான முறையில் கவிஞர்கள் கவனிக்கப்படவேண்டும், அவர்கள் கவிதை மீதான
விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒரு முழு நாளுக்கு இங்கே பின்னூட்டங்களாக
இடப்படவேண்டும் என்பதில் விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்.
தேதியையும் அறிவித்துவிட்டதால் இனியும் யாருக்கும் கடைசியில் பாடவேண்டும்
போன்ற தயக்கங்கள் இருக்காதென நினைக்கிறேன்.
பாணி:
14.1.09 - *முதலாம் அழைப்பு*
14.1.09 - கவிஞர் செல்வராஜின் கவிதை
14.1.09 - நண்பர்களின் பாராட்டு / விமர்சனம் (கருத்தின் மீதான விவாதம்
இந்த இழையிலல்ல)
15.1.09 - *கவிஞர் செல்வராஜுக்கு நன்றி*
15.1.09 - *இரண்டாம் அழைப்பு*
15.1.09 - கவிஞர் கோகுலனின் கவிதை
15.1.09 - நண்பர்களின் பாராட்டு / விமர்சனம் (கருத்தின் மீதான விபாதம்
இந்த இழையிலில்லை)
16.1.09 - *கவிஞர் கோகுலனுக்கு நன்றி*
...இப்படியாகத் தொடரும்.
இப்போது அனைத்து விளக்கங்களும் கிடைத்துவிட்டதென நினைக்கிறேன்.
விவரங்கள் வேண்டுமென்றால் கேளுங்கள். இன்னும் ஒருநாள் சமயமிருக்கிறது.
என்னை மறந்ததேன் ஆசாத்ஜீ?:)
ஆசாத் ஜி, நேற்று நானும் பெயரைக் கொடுத்திருந்தேனே பொங்கள் கவியரங்கத்தில்.
என்னவாயிற்று?
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
இனிய கவிஞர் பாலமுருகன்,
தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருளுரைந்த
முந்துகவி சக்தி மகன் முருகன் வந்தான் - பல்
முளக்குமுன்னே எனக்குக் கவிதை தந்தான்! - என்பார் திரைப்பாடல்
கந்தர்கலியில். அந்தப் பெயர் கொண்டோர் ஒப்புதல் தந்தும் அவர் பெயரை
விடுவேனா? இரண்டாம் நாள் பட்டியலில் இணைத்து விடுவேன். சுடாத
பழத்திற்குத்தான் கிளைகளை உலுக்கினாராம் முருகப்பெருமான், இங்கே மடலுக்கு
பதில் எழுதும்போது பின்னிணைப்பில் நீங்களும் உலுக்கிவிட்டீர்கள் அய்யா :-)
இறைவணக்கம்
விளைநிலம் எதிலும் உன்றன்
. விழிதருங் கருணை வேண்டும்!
கிளைவிடும் மனிதம் வாழ
. கிருபைகள் அருள வேண்டும்!
வலையினில் வரிகள் கட்டும்
. வலைஞரெம் கவியின் சொற்கள்
நிலைபெறும் மொழியாய் நிற்க
. நிறையருள் பொழிய வேண்டும்!
*
தமிழ் வாழ்த்து
எம்மவர் நெஞ்சில் நாவில் நினைவில்
. எழுத்தா ணிகளின் நுனியில் நறுக்கில்
செம்மலர் இதழின் பரப்பில் இறகில்
. செங்கோல் கொண்டவர் அவையில் அகத்தில்
விம்மிய மலையில் குடகில் விரியில்
. விரிந்த பஃருளி வீழ்ந்த நிலத்தில்
அம்மையின் அரியணை கொண்டிருந் தாயே
. அழைக்கின் றேன்என் அவைக்கும் வாராய்!
*
சபையோர்க்கு
ஏனின்று என்தலைமை என்னய்யா செய்தேன்நான்
. எடுத்தாண்ட இழையெல்லாம் திரையிசையும் மொக்கைகளும்
நானிங்கு வரவில்லை நண்பர்தான் எனையழைத்தார்
. நான்கேநாள் விருந்தினன்நான் உறுப்பினனாய் ஆனேனே!
ஊன்நிற்கும் உதிரத்தின் உவமைகள் உவப்பில்லை
. உறவுகளை மதிக்கின்ற உள்ளத்தால் உள்வந்தேன்!
வானிற்கும் கவியரங்கம் என்றெல்லாம் வழக்கில்லை
. வகையாக அவைசிறக்க உம்வாழ்த்தை வேண்டுகிறேன்!
*
தலைமைக் கவிதையின் முற்பகுதி
பொங்கல் திருநாள் இதுதானா?
. போகியில் எரிவது இனந்தானா?
மங்கலம் பொங்க மனையில்லா
. மானுடர் எம்மவர் சரிதானா?
மனவெழுச் சிகளால் சார்பில்லா
. மானுடச் சிந்தனை வேதனையில்
கணமொன் றாகத் தமிழரினம்
. கணக்கிற் குறைவது முறைதானா?
கவிஞன் என்றால் கனவுலகில்
. காதற் புரிபவன் மட்டுமலன்
புவியின் அரசா ணைகளையும்
. புரிந்து தெளிபவன் புதுக்கவிஞன்!
அரசியற் காய்கள் நகர்த்தலிலே
. ஆலைக் கரும்பாய்த் தமிழர்கள்
வரிசையில் வாசல் இழப்பதனால்
. வார்த்தை சிக்கித் தவிக்கின்றான்!
ஏற்றுக் கொண்ட வாழ்க்கைமுறை
. ஏனைய திசையில் பயணங்கள்
ஆற்றும் செயலாய் உணர்வுகளை
. அழுகையி னூடே வடிக்கின்றான்!
ஏட்டுச் சுரைக்காய் அல்லதிது
. ஏழை வடிக்கும் ஏக்கமிது
கூட்டுக் காரன் குற்றுயிராய்
. கூழாய் ஆன சரிதையிது!
இனிவரும் நாளில் எவரேனும்
. ஈங்கு எங்கள் இனத்தவரின்
இல்லத் துள்ளே இன்னொளியை
. ஏற்றிடும் பணியை செய்வாரோ!
அவையின் தன்மை அறிகின்றேன்
. அணையிடு கின்றேன் உணர்வுக்கு
அரங்கம் நன்றாய் அமைந்திடவே
. அழைப்பேன் கவிஞரை காலைமுதல்!
முதலாம் அழைப்பு
கவிஞர் செல்வராஜ் ஜெகதீசனுக்கு:
பந்திக்குப் பிந்தி
படைப்புக்கு முந்தி
இப்பாட்டரங்கின்
ஊற்றுக்கண் கவிதையை
உள்ளத்தில் எழுதியவர்
ஒலிவாங்கி
பலிவாங்கியல்ல
இதைச் சொல்லி நம்
செவிவாங்க வருகின்றார்
கவிவாங்க வந்தோரே
இவரை
கைதட்டிக் கூப்பிடுங்கள்
கவிஞர் ஜெகதீசன் வருக! - தன்
கவித்திறன் காட்டித் தருக!
[என்னை முன்னெடுத்துச் செல்லும்
அன்னைத் தமிழை வணங்கி
முன்னால் கவிபாட அழைத்த
'பண்புக்கு' நன்றி பாராட்டி
இனி வரும் நாட்கள் பற்றிய
என் ஆக்கத்தை முன் வைக்கிறேன்.]
போய்ச்சேரும் இடங்கள்
பற்றியொரு பிம்பத்தை
பிடித்தபடி அலையும்
பேய்மனம் ஒன்றுண்டு
என்னுள் எப்போதும்.
பெரும்பாலும் பிறிதொரு
தோற்றம் தரும் நிஜம்.
எதைப்பற்றியும்
ஏந்தித் திரியும்
வீண் பிம்பங்களை
விட்டொழிக்க வேண்டும்
இனிவரும் நாட்களில்.
முன் அபிப்பிராயமின்றி
முற்றிலும் புதிய ஒருவனுக்கு
முகம் காட்டுவதில்லை
என் சுயம்.
எதிர்ப்படும்
எவருக்குமான
இன்முகம்
இயலவேண்டும்
இனிவரும் நாட்களில்.
பெண் காதல் காமமென்றே
பெருகிவரும் கவிதை தவிர்த்து
இன்னொரு உயிரின் வலியை
இயன்றவரை பதிய வேண்டும்
இனி வரும் கவிதை நாட்களில்.
இயற்கை மரணமன்றி
இன்னல்களால் நிகழும்
வன்கொடுமைச் சாவுகள்
வழக்கொழிந்து போனதென்ற
அமைதிக் காலமொன்று
ஆகி வர வேண்டும்
இனி வரும் நாட்களில்.
எல்லாரும் எல்லாமும்
பெற வேண்டும்
எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக
என்று
ஓயாமல்
ஒலியெழுப்பும்
உள்மன ஓசையொன்றை
ஒழிக்கும் உறுதியொன்றோடு
இனிவரும் நாட்களுக்காக
இன்முகம் கொண்டு
அமைகிறேன்.
இனிவரும் கவிஞர்களின்
இனிய கவிப்பூக்களுக்காகவும்.
0
0
எதிர்ப்படும்
எவருக்குமான
இன்முகம்
இயலவேண்டும்
இனிவரும் நாட்களில்.
இன்னொரு உயிரின் வலியை
இயன்றவரை பதிய வேண்டும்
இனி வரும் கவிதை நாட்களில்.
ஆகி வர வேண்டும்
இனி வரும் நாட்களில்.
எல்லாரும் எல்லாமும்
பெற வேண்டும்
எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக
என்று
ஓயாமல்
ஒலியெழுப்பும்
உள்மன ஓசையொன்றை
ஒழிக்கும் உறுதியொன்றோடு
இனிவரும் நாட்களுக்காக
இன்முகம் கொண்டு
அமைகிறேன்.
2009/1/14 Jega <sjeg...@tebodinme.ae>
எழில் வாக்கு நல்லெண்ணத்து
எழுவாக்கு
நீங்கள் கவிதையை
உள்வாங்கினலே - நாங்கள்
கள்வாங்க இயலும் - பின்னூட்டக்
கள்வாங்க இயலும்
ஒருநாள் போதுமா :-)
ஏமநாதன் இங்கில்லை
பாணபட்டர் இங்கில்லை
பிட்டுக்கு மண்சுமந்த
பெருந்தோளர் வந்தாலும்
ஒருநாள் பொழுதிற்குள்
பெருகட்டும் பின்னூட்டம்!
அடுத்த கவிதைக்கான அழைப்பு 16ம் தேதி காலையில்தான். அதற்கடுத்த அழைப்பு
18ம்தேதி காலையில். நாள்கள் நீட்டிக்கப்படுகின்றன. கவிதையைப்
படிப்பதற்கும் ரசிப்பதற்கும் பின்னூட்டத்திற்கும் ஏதுவாக இந்த மாற்றம்.
திருத்திய பட்டியலை இன்று இரவு இடுகின்றேன்.
கவிதையின் உட்கரு குறித்த விவாதங்களென்றால் தனி இழை என்ற பழைய பகிர்வில்
மாற்றமில்லை.
ஆமாம் ஆசாத்ஜீ ஆசிஃப்ஜீஒருநாள் முழுதும் பின்னூட்டமிட நேரம்கொடுங்கள் .. பிறகுமறுநாள் அடுத்த கவிஞரை அழைக்கலாம் என்றும்தோன்றுகிறது.
சித்திரை வர போகாமல் இருந்தால் சரிதான்.:)
கவி'தை'க்கு 'பங்குநீ' போட்டால்...
> > சித்திரை வர போகாமல் இருந்தால் சரிதான்.:)கவி'தை'க்கு 'பங்குநீ' போட்டால்...>>>
இனி வரும் நாட்கள்...
* செல்வராஜ் ஜெகதீசன்
[என்னை முன்னெடுத்துச் செல்லும்
அன்னைத் தமிழை வணங்கி
முன்னால் கவிபாட அழைத்த
'பண்புக்கு' நன்றி பாராட்டி>>>>
இனி வரும் நாட்கள் பற்றிய
என் ஆக்கத்தை முன் வைக்கிறேன்.]
போய்ச்சேரும் இடங்கள்
பற்றியொரு பிம்பத்தை
பிடித்தபடி அலையும்
பேய்மனம் ஒன்றுண்டு
என்னுள் எப்போதும்.
பெரும்பாலும் பிறிதொரு
தோற்றம் தரும் நிஜம்.
எதைப்பற்றியும்
ஏந்தித் திரியும்
வீண் பிம்பங்களை
விட்டொழிக்க வேண்டும்
இனிவரும் நாட்களில்.>>>
முன் அபிப்பிராயமின்றி
முற்றிலும் புதிய ஒருவனுக்கு
முகம் காட்டுவதில்லை
என் சுயம்.
எதிர்ப்படும்
எவருக்குமான
இன்முகம்
இயலவேண்டும்
இனிவரும் நாட்களில்.>>>>
பெண் காதல் காமமென்றே
பெருகிவரும் கவிதை தவிர்த்து
இன்னொரு உயிரின் வலியை
இயன்றவரை பதிய வேண்டும்
இனி வரும் கவிதை நாட்களில்.>>>>>
இயற்கை மரணமன்றி
இன்னல்களால் நிகழும்
வன்கொடுமைச் சாவுகள்
வழக்கொழிந்து போனதென்ற
அமைதிக் காலமொன்று
ஆகி வர வேண்டும்
இனி வரும் நாட்களில்.>>>>
எல்லாரும் எல்லாமும்
பெற வேண்டும்
எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக
என்று
ஓயாமல்
ஒலியெழுப்பும்
உள்மன ஓசையொன்றை
ஒழிக்கும் உறுதியொன்றோடு
இனிவரும் நாட்களுக்காக
இன்முகம் கொண்டு
அமைகிறேன்.>>>>>
இனி வரும் நாட்கள்...
* செல்வராஜ் ஜெகதீசன்
[என்னை முன்னெடுத்துச் செல்லும்
அன்னைத் தமிழை வணங்கி
முன்னால் கவிபாட அழைத்த
'பண்புக்கு' நன்றி பாராட்டி
இனி வரும் நாட்கள் பற்றிய
என் ஆக்கத்தை முன் வைக்கிறேன்.]
போய்ச்சேரும் இடங்கள்
பற்றியொரு பிம்பத்தை
பிடித்தபடி அலையும்
பேய்மனம் ஒன்றுண்டு
என்னுள் எப்போதும்.
பெரும்பாலும் பிறிதொரு
தோற்றம் தரும் நிஜம்.
எதைப்பற்றியும்
ஏந்தித் திரியும்
வீண் பிம்பங்களை
விட்டொழிக்க வேண்டும்
இனிவரும் நாட்களில்.
முன் அபிப்பிராயமின்றி
முற்றிலும் புதிய ஒருவனுக்கு
முகம் காட்டுவதில்லை
என் சுயம்.
எதிர்ப்படும்
எவருக்குமான
இன்முகம்
இயலவேண்டும்
இனிவரும் நாட்களில்.
பெண் காதல் காமமென்றே
பெருகிவரும் கவிதை தவிர்த்து
இன்னொரு உயிரின் வலியை
இயன்றவரை பதிய வேண்டும்
இனி வரும் கவிதை நாட்களில்.
இயற்கை மரணமன்றி
இன்னல்களால் நிகழும்
வன்கொடுமைச் சாவுகள்
வழக்கொழிந்து போனதென்ற
அமைதிக் காலமொன்று
ஆகி வர வேண்டும்
இனி வரும் நாட்களில்.
எல்லாரும் எல்லாமும்
பெற வேண்டும்
எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக
என்று
ஓயாமல்
ஒலியெழுப்பும்
உள்மன ஓசையொன்றை
ஒழிக்கும் உறுதியொன்றோடு
இனிவரும் நாட்களுக்காக
இன்முகம் கொண்டு
அமைகிறேன்.
இனிவரும் கவிஞர்களின்
இனிய கவிப்பூக்களுக்காகவும்.
0
On Jan 14, 8:02 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> பண்புடன்பொங்கல்விழாசிறப்புக் கவியரங்கம்
>
> முதலாம் அழைப்பு
>
> கவிஞர் செல்வராஜ் ஜெகதீசனுக்கு:
>
> பந்திக்குப் பிந்தி
> படைப்புக்கு முந்தி
> இப்பாட்டரங்கின்
> ஊற்றுக்கண் கவிதையை
> உள்ளத்தில் எழுதியவர்
>
> ஒலிவாங்கி
> பலிவாங்கியல்ல
> இதைச் சொல்லி நம்
> செவிவாங்க வருகின்றார்
> கவிவாங்க வந்தோரே
> இவரை
> கைதட்டிக் கூப்பிடுங்கள்
>
> கவிஞர் ஜெகதீசன் வருக! - தன்
> கவித்திறன் காட்டித் தருக!
2009/1/14 ஆசாத் <banu...@gmail.com>
> > சித்திரை வர போகாமல் இருந்தால் சரிதான்.:)கவி'தை'க்கு 'பங்குநீ' போட்டால்...>>>
மாசி லாக்கவிதைகள் எனில் மனம் ஆடி த்துள்ளுமே ஆசாத்ஜீ!!!!
அருமை, ஜகதீசன். பண்புடனின் பொங்கல் கவியரங்கத்தின் முதல் கவிதையே
மிக்கப் பண்புடன் அமைந்திருக்கிறது.
வாழ்த்துகள்.
மைதிலி
On Jan 14, 10:20 am, "Asif Meeran AJ" <asifmee...@gmail.com> wrote:
> இழை பிரிந்து வந்த கவிஞரின் கவியரங்கக் கவிதை
>
> இனி வரும் நாட்கள்...
> * செல்வராஜ் ஜெகதீசன்
>
> [என்னை முன்னெடுத்துச் செல்லும்
> அன்னைத் தமிழை வணங்கி
> முன்னால் கவிபாட அழைத்த
> 'பண்புக்கு' நன்றி பாராட்டி
> இனி வரும் நாட்கள் பற்றிய
> என் ஆக்கத்தை முன் வைக்கிறேன்.]
>
> போய்ச்சேரும் இடங்கள்
> பற்றியொரு பிம்பத்தை
> பிடித்தபடி அலையும்
> பேய்மனம் ஒன்றுண்டு
> என்னுள் எப்போதும்.
> பெரும்பாலும் பிறிதொரு
> தோற்றம் தரும் நிஜம்.
> எதைப்பற்றியும்
> ஏந்தித் திரியும்
> வீண் பிம்பங்களை
> விட்டொழிக்க வேண்டும்
> இனிவரும் நாட்களில்.
>
> முன் அபிப்பிராயமின்றி
> முற்றிலும் புதிய ஒருவனுக்கு
> முகம் காட்டுவதில்லை
> என் சுயம்.
> எதிர்ப்படும்
> எவருக்குமான
> இன்முகம்
> இயலவேண்டும்
> இனிவரும் நாட்களில்.
>
> பெண் காதல் காமமென்றே
> பெருகிவரும் கவிதை தவிர்த்து
> இன்னொரு உயிரின் வலியை
> இயன்றவரை பதிய வேண்டும்
> இனி வரும் கவிதை நாட்களில்.
>
அனைவருக்கும் என்
அன்பும் வணக்கங்களும்
நன்றியும்.
செல்வராஜ் ஜெகதீசன்
> > 0- Hide quoted text -
>
> - Show quoted text -
முத்தான முதற்கவிதை முழுமையுறும் புதுக்கவிதை
சத்தாகச் சாற்றிவைத்த செல்வரசே எம்நன்றி!
ஒன்றிரண்டு என்றண்ணி ஒவ்வொன்றும் மூளைக்குள்
கன்றிவிட்ட பொதுப்புத்தி கடைத்தேற சாட்டையடி!
உனக்கென்று நீவடித்த உண்மைகளின் வெளிப்பாட்டை
தனக்கென்றே அவையோர்கள் தாங்கியதைக் கண்டாயா?
முதலாக வந்ததனால் முன்சொன்ன பொற்கிழியை
சதமாகத் தந்திடுவேன் செகதீசா நீகேளாய்!
*
கவிஞர் ஜெகதீசனின் கவிதைக்கான நன்றியறிவிப்புகள் நிறைவுபெறுகின்றன.
நாளையதினம் காலையில் (துபாய் நேரம்) கவிஞர் ஷைலஜாவை அழைப்பேன்.
*
முன்னம் அறிவித்தபடி எனது தனிப்பட்ட பரிசாக கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன்
அவர்களுக்கு பரிசு கொடுத்து கண்ணியப்படுத்தவேண்டும். ஜெகதீசன் என்னை
தனிமடலில் தொடர்புகொண்டு தனது முகவரியைத் தரவேண்டுகிறேன்.
இரண்டாம் அழைப்பு
கவிஞர் ஷைலஜாவுக்கு:
வானொலியில் என்கவியை வாசித்த தங்கையிவர்
.வம்பாக இவர்பெயரை வழக்காக மாற்றிடுவேன்
ஆனமட்டும் நினைவுகளை அசைபோட்டால் இணையத்தில்
.அன்றிவரைத் தான்முதலில் 'ஜீ'யென்று அழைத்துள்ளேன்!
தேனிருக்கும் குரலிருக்கும் தென்பாண்டித் தமிழிருக்கும்
.தெளிவிருக்கும் நட்பிருக்கும் சபையிவரால் கலகலக்கும்
ஏனிவரும் எனக்கொவ்வா மைபாவைச் சமைக்கின்றார் :-)))
.என்றெண்ணி இனிநானும் காண்டரலின் கனவுகளில் :-)))
கவிஞர் ஷைலஜா வருக! - தன்
கற்பனையள்ளித் தருக!
மெல்லிய நகைச்சுவையையும் ஊடே சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைவனுக்காக இனி வரும் நாட்களில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்
தலைவியின் நி்லையை ”நினைவோடே கன்னிகையின் நீர்மலிந்த கண்” என்று
வருணித்திருப்பது எம் கண்ணிலும் நீரை வருவித்தது.
வாழ்த்துகள்
மைதிலி
> 2009/1/16 ஆசாத் <banua...@gmail.com>
>
>
>
> > பண்புடன்பொங்கல்விழாசிறப்புக்கவியரங்கம்
>
> > இரண்டாம் அழைப்பு
>
> > கவிஞர் ஷைலஜாவுக்கு:
>
> > வானொலியில் என்கவியை வாசித்த தங்கையிவர்
> > .வம்பாக இவர்பெயரை வழக்காக மாற்றிடுவேன்
> > ஆனமட்டும் நினைவுகளை அசைபோட்டால் இணையத்தில்
> > .அன்றிவரைத் தான்முதலில் 'ஜீ'யென்று அழைத்துள்ளேன்!
> > தேனிருக்கும் குரலிருக்கும் தென்பாண்டித் தமிழிருக்கும்
> > .தெளிவிருக்கும் நட்பிருக்கும் சபையிவரால் கலகலக்கும்
> > ஏனிவரும் எனக்கொவ்வா மைபாவைச் சமைக்கின்றார் :-)))
> > .என்றெண்ணி இனிநானும் காண்டரலின் கனவுகளில் :-)))
>
> > கவிஞர் ஷைலஜா வருக! - தன்
> > கற்பனையள்ளித் தருக!- Hide quoted text -
அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்
சுயத்தைப் பற்றிய நேர்மையான ஒப்புதல்
தொடரட்டும்.
கே.பாலமுருகன்
மலேசியா
நன்று ஷைலஜா,
வித்தியாசமான கருவுடன் குறிப்பிட்ட தலைப்பில் பாடியிருப்பது சிறப்பு.
மெல்லிய நகைச்சுவையையும் ஊடே சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைவனுக்காக இனி வரும் நாட்களில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்
தலைவியின் நி்லையை "நினைவோடே கன்னிகையின் நீர்மலிந்த கண்" என்று
வருணித்திருப்பது எம் கண்ணிலும் நீரை வருவித்தது.
வாழ்த்துகள்
மைதிலி
>>>>>>>>>>>>நன்றி மைதிலி
அன்பின் சகோதரி ஷைலஜா,
அழகான கவிதை..அருமையான சொற்களைத் தேர்ந்தெடுத்து யாரும் எதிர்பாராக் கவிதையொன்றைத் தந்திருக்கிறீர்கள். மிக அழகான கவிதை, காட்சிகளைக் கண்முன்னால் விரித்துச் செல்கிறது சகோதரி..!
//மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல் //
அழகான உவமை..ரசித்தேன்..!
பாராட்டுக்கள் சகோதரி !>>>
இனிமை மிகுந்த 'பா'க்கள் சமைக்க
இவரை விடவும் வேறு யாரோ?
நினைவில் கொண்ட காட்சி யதனை
நல்ல தமிழில் பாடி விட்டார்.
இனிக்கும் தமிழோ மை.பா போல
இருந்தும் கடினம் இதிலே இல்லை:-))>>>
பொங்கல் கவியரங்கக்கவிதை.ஷைலஜா
உடன்பாடோ எதிர்மறையோ அவையோரே
கடன் உங்கட்கு என்கவிதை!கொட்டிடுவீர் கரவொலிகள்!திருவரங்க நாயகனே காப்பு!
இனி வரும் நாட்கள்**********************************
மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல்
ஷைலஜாக்கா...முதலில் கரவொலிகள்..எம்மிடமிருந்து..>>>>
"கடன் உங்கட்கு என்கவிதை!" நல்லவேளை "கவிதை மட்டுமே" :-)>>>>
"மண்ணினிலே" என்பது என்ன வகையான வார்த்தை என்பது தெரியவில்லை.. மண்ணிலே என்றே படித்ததன் காரணம்..ஏதாவது இலக்கணம் இருப்பின் தெரியப்படுத்தவும்.>>>>>
"கன்னிகையின் நீர்மலிந்த கண்" - என்ன ஒரு ஈற்றடி..அக்கா, அழகான பா.. அழகான நடை.. அழகான நிகழ்ச்சியை எடுத்தாண்ட திறன். உங்கள் தனித்துவத்திற்காக என் பாராட்டுக்கள்.>>>>>>
அடியேனின் வாழ்த்துகளையும்
ஏற்றுக்கொள்ளுங்கள்.
செல்வராஜ் ஜெகதீசன்
> > > ஆனமட்டும் நினைவுகளை அசைபோட்டால்- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
மிகவும் வித்தியாசமாக இனி வரும் நாட்களை கமலவல்லியுடன் பிணைத்து நினைத்திருக்கிறீர்கள். ஒரு விதத்தில் நம் கவியரங்கத்தில் இது ட்ரெண்ட் செட்டர் தான். இனி வரும் நாட்கள் என்பதற்கு ஒரு பாத்திரத்தின் பார்வையிலும் எழுதலாம் என்பது நல்ல யோசனை. அசத்தி விட்டீர்கள்.
>>>>>>>>
பொன் என்று உவமை சொல்லி விட்டு அதை பூவோடு சேர்பது சற்று பொருத்தமில்லாதது போல் தோன்றியது. பொன்னுக்கு பூவுக்கும் மோனை பொருத்தம் உண்டு உவமை பொருத்தம் உண்டா என தெரியவில்லை. இருப்பினும் நடை மிக அழகு. அதே போல் அன்னாய் என்பது expletive பிரயோகம். இங்கே பொருந்துகிறதா என்று கொஞ்சம் ஆய வேண்டும். அதாவது மிகுந்த வலி, கோபம் போன்ற இடத்தில் பயன்படுத்துகிற கவிதை சொல்.
இனி வரும் நாட்கள்
**********************************
அன்னாயிங் கிதுகேளாய் அன்றொருநாள் பிற்பகலில்
பொன்னனைய இளவரசி பூப்பறிக்க எமையழைத்தாள்>>>>
சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும் ......
இதனால் அந்தப்பெண்ணின் அன்னையிடம் தோழியர் சொல்வதாய் எழுதினேன்
'பூவிரியும் சோலைக்குள் போயெங்கள் உடைமாற்றி'...மிக அருமையான கவிதை நடை. இசை இயல்பாக சொல்லிலிருந்து உதயமாகிறது. எளிய சொற்கள்; இதமான பாதிப்பு. >>>>
நீங்குகிலா தென்றுமவள் நிழல்போல விளங்குகிற
பாங்கியரேம் தாமுமவள் பக்கத்தில் சென்றிட்டோம்
மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல்
பெண்ணரசி முன் செல்லப் பின்னேயாம் தொடர்ந்திட்டோம்
காவிரியின் வெள்ளத்தில் களிப்புடனே விளையாடிப்
பூவிரியும் சோலைக்குள் போயெங்கள் உடை மாற்றி
'கொல்' என்று சிரித்ததும், 'கொல்வான்' என சொன்னதும் அழகு. தமிழ் உங்களிடம் வசப்பட்டு நிற்கிறது.
ஆடுவதும் ஓடுவதும் பாடுவது மாய்வனத்தில்
நீடியதாம் போதிருந்து நிறைந்தெங்கும் காண்கின்ற
மல்லிகையே முதலான மலர்களெலாம் பறித்தெடுத்து
நல்ல பல ஆரங்கள் நாராலே தொடுத்ததன் பின்
மாளிகைக்கு மீளவும்யாம் வரவெண்ணும் நேரத்தில்
காளைபோல் பெருமிதத்தன் கண்கவரும் தோளழகன்
விண்ணொத்த கருநீலம் மிளிர்கின்ற மேனியினான்
வெண்ணிறத்துப் பரியேறி விரைவாயெம் முன்வந்து
வேட்டைக்கு வந்தேன் நான் மெல்லியரே வேங்கையிக்
காட்டுக்குள் உள்ளதேல் காட்டுங்கள் என்றிடவும்
ஆங்குளது காணுமென அரசகுலத்திருமங்கை
ஓங்கியதாய்க் கிளைவிரித்தே உள்ளதொரு மரங்காட்ட
கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி
வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்
சொற்களை மீறி காட்சி படருகிறது. கவிதைக்கு வெற்றி. >>>>
பாரோர்கள் புகழுகிற பார்த்திபனின் மகளறியீர்
ஆரோநீர் என வினவின், அரங்கத்தான் என்றிட்டான்
தங்களுயர் இளவரசி முன்னுற்றுத் தாழ்கின்றேன்
இங்கிதுபோல் மணமாலை யானறியேன் என்பவனாய்
நங்கைதன் செங்கரத்து நறுமணமார் தொடையலினை
அங்கையால் பறித்தெடுத்தே அழகுறத்தன் தோள் சேர்த்துத்
தன்னெழிலார் ஆரத்தைச் சட்டென்று தானெடுத்து
அன்னவள்தன் கழுத்தினிலே அரைநொடிக்குள் சூட்டினனாய்
மின்னலெனப் பரியேறி விரைவாக மறைந்திட்டான்
என்னசெயல் என்றெண்ணி யாம்திகைத்து நோக்குகையில்
அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே
கன்னிகையின் நீர்மலிந்த கண்.
உரைநடையில் சுலபமாக இந்த அற்புத நிகழ்ச்சியினை விளக்கி விடலாம். ஆனால் அதே எளிமையுடன், அதே பாதிப்பு இதயத்தில் தோன்ற கவிதையில் விளக்கினீர்கள் பாருங்கள்.... அசத்தல்.
மனதார பாராட்டுகிறேன்.>>>>
இப்போது பிரச்சனை என்னவென்றால்...இதன் பிறகு என் முறை வரும்போது நான் என்ன கவிதை எழுத முடியும்? என் பாடு மெய்யாகவே கஷ்டம்தான்.<>>>>>>>>>
கவிஞர் சைலு அவர்களுக்கு,முதலில் வந்தமைக்கு என் வாழ்த்தை தெரியபடுத்தி விடுகிறேன்.இணையத்தை திறந்து பார்க்கும் வாய்ப்பு இரண்டு நாட்களுக்கு பிறகுஇப்போதுதான் கிடைத்தது. தாமத வாழ்த்திற்கு மன்னிக்கவும்.வெண்பாவும், புராணமும்எழுதினால்என்னை போல் உள்ளவர்கட்குபடித்து தெளிவு பெறமிக தாமதம் ஆகும்.இருப்பினும் இரண்டாவது கவிஞரும் வந்து அசத்தி விட்டார்.என் அழைப்பு வரும் பொழுது நான் என்ன செய்ய முடியும்? என்ற பயமே இப்பொழுதுதிருந்துதான் துவக்கம்.>>>
2009/1/17 Jega <sjeg...@tebodinme.ae>
நானும் கவிதையை படித்து ரசித்தேன்.
அழகாய் புரிந்தது.எனக்கு புரிந்த நிலையில் இதோ:தெய்வீக தலைவி அவள்
சூரியன் மறைகின்ற
சமயமும் வந்ததன்று
பூக்களும்தான் ஏங்குகின்றன
பூவையர் இவ் இளவரசியை
தாம் காணதலைவி அவளாயினும்
தோழிகள் நாம் ஆனோம்
இப் பூ உலகத்தில்
கிடைத்ததோர் அந்த
மிகப் பெரும் பாக்கியமாம்
அரங்கனின் விளையாடலுக்கும்
ஆயத்தம் நாம் ஆனோம்திடீரென்ன மின்னலாம்
வந்தது அரங்கன்தான்
அவனென்று
யாம் அறியாமல்
பிழையாய்
கேளி>>>>
செய்தோம்வேங்கையின் வேட்டைக்கு
சிரமபட்டு வந்தவனோ
அரச குலத்திருமங்கை
பார்வை வேட்டைக்கு
சிக்கிதான் போனானோ?>>>
பறித்த பூக்களும்தான்
அவன் பார்வையில்
படும்படியாய்
ஆரத்தில் கட்டி இருக்க
ஆழமாய் நோக்கினான்
பொன்னைய இளவரசியைஅரங்கன்தான் எடுத்த
பூமாலை கணக்கிற தென்று
தான் சொல்லி
அணிவித்தான்
மலர் மாலையை மங்கை
அவளின் கழுத்தினில்வேங்கை புலியாய் முதலில்
பார்த்து திகைத்த
மங்கை இவளோ
மானை வருடிய
மன நிலையில்
மயங்கிதான் போனாளோ?>>>>
இனியென்றால் சமுதாயம் எதிர்கொள்ளும் நாளா
.இன்முகத்துக் காதலையும் இணைகொள்ளும் நாளா
தனிச்சிறப்பு சூழ்கவிதை தந்தனையே நீயும்
.தமிழ்கூறும் யாப்பரசின் அவைக்கவியோ நீயும்
இனியிந்த அவைகொஞ்சம் அகத்தினையும் நோக்கும்
.இலக்காக இதயத்துக் காதலையும் பார்க்கும்
தனியாக நிற்காது தன்பின்னே கூட்டம்
.தன்னாலே வரும்கவியைத் தந்தவரே நன்றி!
2009/1/17 ஆசாத் <banu...@gmail.com>
கவிஞர் பக்ருத்தீன்
வெண்பாவில் விருத்தத்தில் வீச்சைக் காட்டும்
.வேங்கைதான் விளையாட்டுப் பேர்ச்சொல் லல்ல!
உன்பாடல் வரிகேட்க முன்னம் வைத்தேன்
.ஊஹூம்நான் பின்வருவேன் என்றீர் ஏற்றேன்!
பின்பாடல் பிள்ளைக்கவி பாட்டும் அல்ல!
.பிணைபொருளாய் முன்வரிசைப் பாட்டும் அல்ல!
அன்பாலே அழைக்கின்றேன் அனல்சேர் பாலை
.அரபுலகில் வாழ்வாய்அ ரங்கம் வாராய்!
கவிஞர் பக்ருத்தீன் வருக! - தன்
கல்பில் உள்ளதைத் தருக!
(சில இஸ்லாமியக் கவிஞர்கள் இதயத்தைக் குறிப்பிடும் அரபுச் சொல்லான கல்ப்
என்பதையே குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நானும் இதயம் என்பதை
இங்கே கல்ப் என்று சொல்லியுள்ளேன். அறிஞர் பெருமக்கள் மாற்றம்
வேண்டினார்களென்றால், பிறகு மாற்றிவிடுகின்றேன்.)
நட்புடையீர்..!
ஒரு மாணவப் பயிற்சியாளனாகவே மரபெழுதிப் பழகுகின்றேன்.>>
நட்புடையீர்..!
வாழ்த்துக்கள்.
செல்வராஜ் ஜெகதீசன்.
On Jan 18, 1:44 pm, "இப்னு ஹம்துன் (IBNU HAMDUN)"
<fakhrudee...@gmail.com> wrote:
> நட்புடையீர்..!
> ஒரு மாணவப் பயிற்சியாளனாகவே மரபெழுதிப் பழகுகின்றேன்.
> ஒளிவு மறைவற்ற உள்ளத்து விமர்சனங்களை தயக்கமின்றி தந்துதவுங்கள். என்னெழுத்தின்
> உயரங்களுக்கான விதை அதில் ஒளிந்திருக்கக் கூடும்.
>
> இனி, கவியரங்கில்...
> *
> இறைவாழ்த்து:*
> உயிருடன் உண்மை உயர்வும் அளித்து
> இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து
> மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
> புனித இறைக்கே புகழ்.
>
> *தமிழ்வாழ்த்து*
> சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
> எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ
> வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே
> இல்லை உனக்குமோர் ஈடு!
>
> *தலைவர் வாழ்த்து*
> நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்
> ....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்
> கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்
> ....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
> அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்
> .....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))
> பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
> ....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))
>
> *அவைவாழ்த்து:*
> நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே
> பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்
> சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே
> பிறந்திடும் இங்கே படைப்பு!
>
> *முதன்மைக் கவிதை*
> 2009 ஜனவரி 18 11:34 அன்று, ஆசாத் <banua...@gmail.com> எழுதியது:
முறையாக இறை வாழ்த்தில் தொடங்கிய மாண்பு நன்றாக இருக்கிறது.
அன்பிற்கினிய ஷைலஜாஜி
உங்கள் கவிதைக்கு தாமதமான பாராட்டுதல்கள்!>>>
மிகத் திறமையானவர்கள் தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்வது,
தாமாகவே உய்ரவுபெறத்தான் என பைபிளில் சொன்னது சரியாகத்தான்
இருக்கிறது. அருமையான சிந்தனை! அழகான மொழியில் சொன்னீர்கள்
ஷைலஜா!!>>>>>>
நண்பர் ஃபக்ருதினைப் பற்றி என்ன சொல்ல?
தமிழின் இனிமை அதன் சந்தத்தில் என்பதை மீண்டும் நிரூபணம் செய்திருக்கிறார்
வார்த்தை வீச்சினாலே, வளமிக்க கருத்தினாலே கவிதை நிறைவாக இருக்கிறது
மரபை அறிந்து பய்ன்படுத்தினால், மொழியைத் தெரிந்து புழங்கினால் அற்புதமான
கவிதைகளைப் படைக்க இயலுமென்பதையே ஃபக்ருதீன் கவிதை சுட்டுகிறது
வாழ்த்துகள் ஃபக்ருதீன்!!
பொங்கல் கவியரங்கம் என்று ஷைலஜாஜி சொன்னபோது எள்ளலோடுதான் சம்மதித்தேன்>>>
சரி.. பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு கவியரங்கென்று. ஆனால்... முதல் கவிதையே
முத்தாக அமைந்து மரபும், புராணமும் வித்தியாச சிந்தனைகளும் வீச்சும் கொண்ட கவிதைகள்
'இனி வரும் நாள்களுக்காக' காத்திருக்கச் சொல்கிறது. நன்றி ஷைலஜாஜி!! >>>>
முதன்மைக் கவிதை
கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
இனவாதம் மதவாதம் இறந்து போக
....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க
நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!
கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...
....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.
நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்
....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.
தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..
....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.
இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து
....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.
சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்
....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.
விண்ணதுவும் உயர்வில்லை உயர்வு என்றால்
....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!
மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு
....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்
....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!
இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி
....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்
....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.
பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்
....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்
இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல
....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.
பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்
....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..
எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்
....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்
விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து
....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...
இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல
....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்
வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்
....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்
தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்
....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?
கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்
விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.
கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க
....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?
கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி
....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை
உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்
....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!
இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்
....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறே இழைக்கும்
....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.
மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.
அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்
....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!
அன்பின் இப்னு ஹம்துன்,
தேர்ந்த பெரும் மரபுக் கவியாக உங்கள் வரிகள் உங்களை இனங்காட்டி விட்டன. அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!
இறைவாழ்த்து:
உயிருடன் உண்மை உயர்வும் அளித்து
இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து
மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
புனித இறைக்கே புகழ். >.>>>>>>>>>>>
சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
தமிழ்வாழ்த்து
எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ
வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே
இல்லை உனக்குமோர் ஈடு!>>>>>>
தலைவர் வாழ்த்து
நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்
....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்
கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்
....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்
.....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))
பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))>>>>>
அவைவாழ்த்து:
நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே
பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்
சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே
பிறந்திடும் இங்கே படைப்பு!>>>>>>>
முதன்மைக் கவிதை
கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
இனவாதம் மதவாதம் இறந்து போக
....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க
நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!>>>>>>>
கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...
....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.
நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்
....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.
தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..
....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.
இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து
....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.>>>>
சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்
....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.
விண்ணதுவும் உயர்வில்லை உயர்வு என்றால்
....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!
மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு
....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்
....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!>>>>>
இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி
....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்
....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.
பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்
....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்
இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல
....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.>>>>
>>>>>>>.
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
-~----------~----~----~----~------~----~------~--~---
தலைவர் வாழ்த்து
அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்
.....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))
பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))
முதன்மைக் கவிதை
கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
இனவாதம் மதவாதம் இறந்து போக
....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க
நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!
ஹ்ம்..இது இப்னு டச். எங்கெங்கயோ சுத்தி, மனிதன் மாறினா மாற்றம் தானா வரும்னு சொன்னீங்கல்ல, சூப்பர்ங்க..அன்புடன்,சுபைர்
நட்பின் சாபண்ணா,
இறைவன் போதுமானவன்.2009 ஜனவரி 19 08:15 அன்று, sadayan sabu <sadaya...@gmail.com> எழுதியது:
நண்பர் ஃபக்ருத்தீன்உங்களின் பெயரின் பொருள் நம்பிக்கை (Glory of faith)உங்கள் கவிதையில் இனி வரும் நாளில் பெரும் கவிஞராக வ்ரப்போகும் நம்பிக்கை தெரிகிறது.வாழ்த்துகள்அன்புடன்
சாபு
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com
------------------------------------------------
> நட்புடையீர்..!
> ஒரு மாணவப் பயிற்சியாளனாகவே மரபெழுதிப் பழகுகின்றேன்.
> ஒளிவு மறைவற்ற உள்ளத்து விமர்சனங்களை தயக்கமின்றி தந்துதவுங்கள். என்னெழுத்தின்
> உயரங்களுக்கான விதை அதில் ஒளிந்திருக்கக் கூடும்....
மாணவப் பயிற்சியாளன் என்று அவையடக்கத்துடன் நீங்கள் கூறினாலும் உங்கள்
எழுத்துக்கள் இல்லை, இல்லை இது தேர்ச்சிபெற்ற ஒரு கவிஞனின் கைவண்ணம்
என்றே பறைசாற்றுகிறது. நன்று கவிஞரே..
-----------------------------------------------
>
> இனி, கவியரங்கில்...
> *
> இறைவாழ்த்து:*
> உயிருடன் உண்மை உயர்வும் அளித்து
> இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து
> மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
> புனித இறைக்கே புகழ்.
நன்று
>
> *தமிழ்வாழ்த்து*
> சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
> எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ
> வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே
> இல்லை உனக்குமோர் ஈடு!
அருமை...
>
> *தலைவர் வாழ்த்து*
> நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்
> ....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்
> கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்
> ....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
> அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்
> .....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))
> பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
> ....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))
>
ஆசாத்... கவனிக்க... தம்பியுடையோன் படைக்கஞ்சான் என்பார்கள்.
ஃபக்ருத்தீன் போன்ற தம்பியை உடையோர் அவைக்கஞ்சவே வேண்டாம்...
> *அவைவாழ்த்து:*
> நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே
> பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்
> சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே
> பிறந்திடும் இங்கே படைப்பு!
>
உங்கள் போன்ற கவிஞர்களின் பழக்கத்தாலே என் போன்ற கவி ரசிகர்களுக்கு நல்ல
விருந்து. நன்றி..
> *முதன்மைக் கவிதை*
>
> கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
> ....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
> இனவாதம் மதவாதம் இறந்து போக
> ....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
> பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
> ....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க
> நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
> ....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!
>
அருமை. கண்ணாடி போன்று எம் எண்ணத்தினை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.
> கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...
> ....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.
> நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்
> ....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.
> தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..
> ....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.
> இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து
> ....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.
>
நன்று, நன்று....
> சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்
> ....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.
> விண்ணதுவும் உயர்வில்லை உயர்வு என்றால்
> ....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!
> மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு
> ....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
> என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்
> ....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!
>
நிஜம்தான்....
> இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி
> ....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
> தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்
> ....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம். --- ஆஹா, என்று வரும் இதுபோன்ற மாற்றம்?
> பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்
> ....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்
> இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல
> ....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.
நல்ல உதாரணம். நினைத்தாலே இனிக்கிறது.....
> பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்
> ....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..
நடக்குமா என ஏங்குகிறது மனம்..
> எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
> ....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
> நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்
> ....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்
> விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து
> ....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...
இனிவரும் நாள்களெல்லாம் ந(ம்)ன்னாட்களே....
>
> இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல
> ....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்
> வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்
> ....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்
> தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்
> ....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?--- அருமை, அருமை....
> கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
> ....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்
>
> விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
> ....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.
> கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க
> ....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?
> கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி
> ....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை
> உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்
> ....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!
>
> இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்
> ....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
> தனிமனித நலனுக்காய் தவறே இழைக்கும்
> ....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.
> மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
> ....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.
> அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்
> ....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!
ஃபகுத்தீன், வார்த்தைகள் கிடைக்கவில்லை ஐயா உம்மைப் பாராட்ட... என்னவொரு
சிந்தனை... அச்சிந்தனைகளைக் கோர்வையாய்க் கோர்த்து அழகான ஒரு
முத்தாரத்தைத் தமிழ்ன்னைக்குக் காணிக்கையாய் அளித்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்
மைதிலி
>
> 2009 ஜனவரி 18 11:34 அன்று, ஆசாத் <banua...@gmail.com> எழுதியது:
>
>
>
> > மூன்றாம் அழைப்பு
>
> > கவிஞர் பக்ருத்தீன்
>
> > வெண்பாவில் விருத்தத்தில் வீச்சைக் காட்டும்
> > .வேங்கைதான் விளையாட்டுப் பேர்ச்சொல் லல்ல!
> > உன்பாடல் வரிகேட்க முன்னம் வைத்தேன்
> > .ஊஹூம்நான் பின்வருவேன் என்றீர் ஏற்றேன்!
> > பின்பாடல் பிள்ளைக்கவி பாட்டும் அல்ல!
> > .பிணைபொருளாய் முன்வரிசைப் பாட்டும் அல்ல!
> > அன்பாலே- Hide quoted text -
>
> - Show quoted text -