இது தொடரக்கூடாது!

7 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 5, 2009, 4:54:52 PM2/5/09
to மின்தமிழ், panb...@googlegroups.com
பத்திரிகையாளர் முத்துக்குமார் தீக்குளித்து இறந்த சம்பவம்
மனிதாபிமானமும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறையுமுள்ள அனைவரையும்
உலுக்கியிருக்கிறது. இலங்கைப் பிரச்னையில் ஆட்சியாளர்களின் கவனத்தை
ஈர்ப்பதற்கு தீக்குளித்து இறப்பதுதான் வழி என்கிற அளவுக்கு
முத்துக்குமாரைப் போன்ற இளைஞர்களிடையில் விரக்தி ஏற்படுத்தும் அளவுக்கு
ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது
வருத்தத்துக்குரிய விஷயம். இந்தப் பிரச்னையில் நாங்கள் முனைப்புடன்
செயல்படுகிறோம் என்கிற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாமல் போனது
துரதிர்ஷ்டமே.

அதேநேரத்தில், தீக்குளிப்பது, உயிரை மாய்த்துக் கொள்வது, பொதுச்
சொத்துகளைச் சேதப்படுத்துவது, இன்னும் ஒரு படி மேலே போய் தீவிரவாதச்
செயல்களில் ஈடுபடுவது என்று உணர்ச்சிக்கு வடிகால் தேடுவதை மக்களாட்சியில்
நம்பிக்கையுடைய எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது.

முத்துக்குமாரின் மரணம், அவர் மீது அனுதாப உணர்வைத் தூண்டுமே தவிர
இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடுமா என்ன?

பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவில் மிருகங்களைப்போல
அலைந்துகொண்டிருப்பதைப் பற்றியே கவலைப்படாத இலங்கை அரசு, முத்துக்குமார்
தீக்குளித்துவிட்டார் என்பதற்காக தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவா
போகிறது?

பொறுப்புள்ள பத்திரிகையாளராக முத்துக்குமார் நடக்கவில்லை என்பது
மட்டுமல்ல, ஏனைய இளைஞர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை அல்லவா
காட்டியிருக்கிறார். ஒற்றுமையுடன் பிரச்னைகளுக்காகப் போராடாதவர்கள் என்ற
ஏளனக் குரலுக்கு இதுநாள் வரை உள்ளாகியிருந்த தமிழகம், இப்போது துணிவுடன்
போராடத் தெரியாத கோழைகளின் பூமி என்கிற அவமானத்தையும் அல்லவா சுமக்க
நேரிடுகிறது.

தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் சமுதாயத்தின் கவனத்தை
ஈர்ப்பது என்கிற நோய், 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான்
அறிமுகமானது. அப்படி இறந்தவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்று கௌரவம்
வழங்கப்பட்டது முதல் தீக்குளித்து இறப்பது பெரிய தியாகம் என்பதுபோலவும்,
ஆட்சியாளர்களுக்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் சரியான வழி
என்பதுபோலவும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இளைஞர்கள் மத்தியில் அது
ஏற்படுத்தியது.

சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப்
போரிட்டவர்கள் அடக்குமுறை ஆட்சியாளர்களின் பெருங்கொடுமைச் சிறையையும்,
தடியடியையும், துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்டு போராடினார்களே
தவிர, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

அதற்குப் பெயர்தான் தியாகமே தவிர, ஒருங்கிணைந்து போராடுவதற்குப் பதிலாக
உயிரை மாய்த்துக்கொண்டு இறப்பதற்குப் பெயரா தியாகம்?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை
மட்டும் தியாகிகளாகக் கருதாமல், தீக்குளித்து இறந்தவர்களையும் தியாகிகளாக
வர்ணித்ததன் விளைவுதான் இன்றுவரை உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள்
தீக்குளிப்பதை ஏதோ வீரதீர சாகசம் என்று நினைத்துச் செயல்படுகின்றனர்.

எல்லா திராவிட பாரம்பரியக் கட்சிகளுமே வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற
தீக்குளிப்புகளை ஆதரித்தன என்பதுதான் கசப்பான உண்மை. இப்படித்
தீக்குளித்து இறப்பவர்களின் குடும்பங்களுக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு
கொடுப்பது என்கிற கலாசாரமும் தொடங்கப்பட்ட பிறகு, பல்வேறு
சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் தீக்குளிப்பதன் மூலம்
தங்களது குடும்பத்தின் வறுமையைப் போக்க முயன்ற சம்பவங்களும் உண்டு.

அதைவிட உண்மை, நமது தலைவர்களும் சரி, தங்களுக்காக இன்னின்னார்
தீக்குளித்தார்கள் என்கிற செய்தி வெளிவருவதை விரும்புகிறார்கள்
என்பதுதான். தீக்குளித்து இறப்பவர்களிடம் எங்களுக்கு அனுதாபம் கிடையாது
என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு நமது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்
திட்டவட்டமாகச் சொன்னால் ஒழிய இந்த முட்டாள்தனமான கலாசாரத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது.

முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே நியாயமானவை. அவரது
நான்கு பக்க வாக்குமூலம் அற்புதமான ஒன்று. சந்தேகமே இல்லை. அதற்காக
தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அவரது முட்டாள்தனம்
"பகுத்தறிவு"ள்ள யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு "தியாகம்" என்கிற
முலாம் பூசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் நமது
அரசியல்வாதிகள் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.

இந்தத் தவறு முத்துக்குமாருடன் முடிந்துவிடட்டும். இனிமேலும் இது தொடரக்கூடாது!

நன்றி: தினமணி, (1/31/2009)

N. Ganesan

unread,
Feb 5, 2009, 4:57:43 PM2/5/09
to பண்புடன்

http://panimalar.blogspot.com/2009/02/blog-post.html

http://74.125.95.132/search?q=cache:8h-pgAEgkJEJ:www.dinamani.com/NewsItems.asp%3FID%3DDNE20090130101639%26Title%3DEditorial%26lTitle%3DR%25FBXVeLm%26Topic%3D0%26ndate%3D2/4/2009%26dName%3DNo%2BTitle%26Dist%3D0+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D&hl=en&ct=clnk&cd=3&gl=us

Comment(s) on this article

Pali S, Trichy, India
Parents and elders should advise their wards and children never to
emulate such acts.....which will never solve any issue politically or
otherwise....

Kavitha, Salem, India
I respect Mr.Muthukumars sacrifice. If congress could forgive/forget/
the people who killed Indra Gandhi but could not forgive the people
who killed Raj Gandhi?? The reason is very simple VOTE. if Srilankan
Tamils had voting rights then there is no revenge from Congress party.
I am totally ashamed of Karunanidhi who claims to be the leader of
Tamil people. If we people have good memory then shut the doors for
those who come to our door steps for VOTES. Don't sell your rights. We
common people have only one power that is to choose our leaders. We
didn't do our job right. So we have to face this aftermath.

Vanthana, Virudhunagar, India
முத்துகுமாரின் செயல் முட்டாள்தனமாக தெரியலாம். அவரின் இந்த செயலை
கோழைத்தனம் என்று சொல்வதே மிகப்பெரிய முட்டாள்தனம். அவரின் இந்த செயல்
மக்களை யோசிக்க வைத்திருக்கிறது. உலகில் உள்ள அனைவரின் கவனமும்
தமிழீழத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. அவரின் இந்த உயிர் தியாகத்தை
பெருமை படுத்த வில்லை என்றாலும் சிறுமை படுத்தாமல் இருக்கலாம். யாருக்கு
வரும் இந்த தைரியம்? ஒரு தமிழன் உயிர் கொடுத்தால் இந்த போரை
நிறுத்திடுவோம் என இலங்கை அரசு அறிவித்தால் கூட தம் உயிரை கொடுக்க யார்
முன் வருவார்? யாருக்கும் இல்லாத ஒரு துணிச்சல் அவரிடம்
இருந்திருக்கிறது. ஆனால் அவர் எதிர்பார்த்த தமிழின புரட்சி நடக்கவில்லை
என நினைக்கும் போது தான் வேதனையாக இருக்கிறது.

Rajasekaran Iyer, Maesot, Thailand
Committing suicide is neither a solution nor an enouraging act. To be
very clear and frank, it is a personal waste. Especially, in the
Srilankan affair, we cant expect the decisions in one day as it is
prolonging for more than 2 decades. Secondly, LTTE and Tamils staying
in Srilanka are to be viewed separately. Definitely, a self immolition
by anyone in Tamil Nadu will have no effect at all in the Srilankan
affair. In fact, it is setting a bad precedence.

Sam, Thanjavur, India
Are there any politicians who have the guts to say these to the young
generation? Do they condemn this act and tell them to air their
opinion in a constructive way to the public. Next generation leaders
should start doing this instead of being so opportunistic.

Sahayaraj, Karur, India
No one accepts or encourages the act of muthukumar. but the government
does not understand the language, language of non violance and
peaceful protest. It seems violence is the only language it
understands. tamils have shown their protest to the government not to
give any military assistant to singhala goverment. but the indian
government has shown its deff ears.

M.S.Ramakrishnan, Hyderabad, India
it is really astonishing to see that one young man lost his life by
his own action.as you have pointed out a long complex issues cannot be
solved by such actions . india can also has his own
limitations.instead of blaming youngsters we must accuse political
parties and its leaders who have flammed the feelings of the masses by
mere objective of getting votes.certain sensitive issues like this has
to be dealt with caution and discreet manner.

HABEEB MOHAMED, TUTICORIN, INDIA
YOUR ARTICLE IS VERY GOOD. IT IS A GOOD GUIDENCE TO THE YOUNGER
GENERATION IN TAMIL NADU.SUCIDE IS NOT A RIGHT FORMULA TO SOLVE ANY
PROBLEM. OUR COUNTRY IS HAVING A GOOD RELATIONSHIP WITH SRI LANKA AND
IT CAN NOT GO BEYOUND THE LIMIT. SELF IMMOLATION WILL NEVER HELP OUR
GOVETRNMENT TO SOLVE THIS PROBLEM.

sathak, kuwait, kuwait
முத்துக்குமரனின் செயல் சரியில்லை என்பதை அனைவரும் அறிவர் என்கிறபோது
அவர் கொடுக்கும் மரண வாக்குமூலம் மட்டும் எப்படிச் சரியாக
இருக்கமுடியும்? போராட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. மேலும்
இம்மாதிரியான தற்கொலை முடிவைத் தனி கமிஷன் வைத்து விசாரணை செய்யவேண்டும்
ஏனெனில் இதற்கு பின்னணியில் சுயநல அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின்
கட்சிகள் தூண்டுதலாக கூட இருக்கலாம். இவைகளை தடுக்க. 1. அரசியல்வாதிகள்
தலையீட்டை தடுக்கவேண்டும். 2. இதற்காகப் பரிசுகள், நிவாரணம் என்கின்ற
பெயரில் அறிவிப்பதையும் கொடுப்பதையும் தடுக்க ஒரு சட்டம் இயற்றவேண்டும்.

Shameed, Kuwait, Kuwait
It's Really good article. I always Welcome dinamani Articles.
MutthuKumar's action was really very bad. Our political leaders should
not support such crazy things...!

PA. Samy, Chennai, India
I whole heartedly agree with your editorial that âSelf immolation is
not the answer to the problems. But your comments about the Muthukumar
are not acceptable. Here is a youth who is very much affected by the
mass genocide of the tamil population in the neighbouring country .
This being sponsored by his very own country , India. The proxy war of
India against tamils in Srilanka hand in hand with Singhalese is going
unabated with the full knowledge and support of the two main Dravadian
parties Viz DMK and ADMK who are ready to do anything just to keep
their power . The other parties are not doing much either. So he is
despair and desperate . The only way he could find to attract the
attention of the people is self sacrifice. It is for this good cause
he lost his life. If we go by your definition that sacrificing life
knowingly for a good cause is idiotic, irresponsible and cowardly act
then what do you label all those people who knowingly lost their life
in struggle for independence. The self destruction of Vaanchi, Bagat
Singh and innunemerable people who lost their life in Indian Nationa
Army of Subash Chandra bose is no different from the act of
Muthukumar. The fast unto death of mahatma Gandhi also should be
called as a cowardly act, according to your defenition since he just
want to die rather than to remain alive and act. Does the soldiers who
willingly loose their life to protect the unarmed civilians are no
different. But you call all these are noble. What an irony! Please in
the future stop making such insensitive comments.Now that Muthukumar
has done something which none us wanted him to do. And proved his
point. Let this be the only sacrifice for this cause. We for heaven
sake don't want anymore repeats.

p.mohaanavel, Dharmapuri, India
Muthu Kumar might have had no other option,except self immolation to
draw the attention of the government about tamils in SriLanka.But,our
government will do nothing to save lives of tamilians in SriLanka.In
the future,Srilankan government will definitely get the prize for
it.It may also lead to massive revolution in Tamil Nadu.A right
article in the right time.Thank You Dinamani...

rajasekar, siruvachur, india
very good article. sucide is not solution in any problems.

Kannan, Madurai, India
The editorial didn't disclose any solution to the youth like
Muthukumar. It reflects only one side of the coin which is absolutely
correct. Any sensible person will agree your editorial. But what the
youth should have done at this juncture to make the Govt of India to
understand his feelings?

Tamilmani, Tiruchy, India,
The entire tamil race in Srilnka is on the verge of elimination.This
situation exposed the mentality of Jayalalitha and Karunanithi.Both
are selfish and undeserved to be leaders.It is unfortunate that the
media is supporting Rajabaksa, a person equated to Hitler. Karunanithi
is busy with celebrtating his son's birth day.Jayalalitha is behaving
like Singala fundamentalist.The entire tamil community is watching the
situation emotionally.I am not supporting self sacrifice,but request
younger generation to find ways to remove selfish and adamant Jaya ,
nepotistic karunanidhi and corruptive congress from Tamilnadu
politics.

krkumar, singapore, singapore
very good opinion at the right time. Politician should not encourage
these kind of acts.

Paris EJILAN, Villetaneuse, France
Mr.MUTHUKUMAR's emotional self demoliation for Eelam Tamil Cause
shocked all our hearts. Not only in Tamilnadu, this Shock like a
thunder was heard at all the corners of the world. Even in Paris all
the Tamil shops displayed Homage posters to Mr.Muthukumar. This
incident shows the serious nature of the Tamil Eelam problem & how we
are not seriously treating this issue. we have become selfish & do not
bother about our blood's suffering. Day by day singala govt butchers
our race that too particularly young men & women to prevent the
reproduction of Tamil society. Instead of blaming the real culprits -
the singala govt,we have to blame our INDIAN GOVT & TAMILNADU Govt for
their double game. Rajiv killing is a crime but at the same time a
whole race should not be butchered to avenge for his death. If we
blame MR.Muthukumar's self immolation, then we have to also blame
Indian govt's vengeance. So Indian Govt should stop the Genocide
immediately, stop selling the arms, technology, inteligencies &
purpose a true solution. A true solution should propose the Tamils to
live with respect & diginity but not as SLAVES.


வேந்தன் அரசு

unread,
Feb 5, 2009, 5:20:48 PM2/5/09
to minT...@googlegroups.com, panb...@googlegroups.com

எதை செய்தால் அரசுகளின் கவனம் திரும்பும் என்று சொல்லி இருக்கலாம்

முழு அடைப்பு நடத்தி மக்கள் ஆதரவை தெரிவித்தாச்சு.
 வேறு ஜனநாயக அறவழி இருந்தால் சொல்லுங்க பெரியோர்களே.

மறியல் செய்து பொதுமக்களின் வெறுப்பை தேடலாமா?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

N. Ganesan

unread,
Feb 5, 2009, 6:10:18 PM2/5/09
to பண்புடன்
Reply all
Reply to author
Forward
0 new messages