மொழிபெயர்ப்பு கவிதைகள்

141 views
Skip to first unread message

சூர்யா

unread,
May 15, 2008, 6:50:37 AM5/15/08
to pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

நண்பர்களே,

 

அயர்லாந்து நாட்டுக் கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் என்பவரின் இரண்டு கவிதைகளை நான் மொழிபெயர்ப்பு செய்து உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.

 

இவர் 1923 -ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

 

* * *

 

சொர்கத்தின் ஆடைகள்

 

எனக்கு மட்டும்

தங்கமும், வெள்ளியும் பூண்ட

மின்னிடும் பூக்களாலான்

சொர்க்கத்தின் ஆடைகளிருந்தால்

உன் பாதங்களுக்கு விரித்திருப்பேன்.

 

ஆனால் நான் ஏழை.

கனவுகள் மட்டும் சேர்த்து வைத்திருக்கிறேன்.

அவற்றை உன் பாதங்கள் பதியுமிடமெல்லாம்

விரித்துவைத்திருக்கிறேன்.

 

மென்மையாக நடந்துவா.

ஏன் தெரியுமா?

என் கனவுகள் மீது நீ நடந்துவருகிறாய்.

 

* * *

 

மனிதனும் மரணமும்
 
மரணத்தை நடுக்கத்தோடு

எதிர்க்கொண்டிருப்பதில்லை

விலங்கினம்.

 

மனிதனோ தன் இறுதிமுடிவை

நடுங்கியே எதிர்க்கொள்கின்றான்.

ஜீவிக்கையில் பலமுறை செத்தும்

பிழைத்தும் இருக்கிறான்.

 

வலிமையின் உச்சத்தில்

கொல்லவருவோரை எதிர்க்கொண்டிருக்கலாம்.

எள்ளிநகையாடியிருக்கலாம்

அவர் மூச்சையும் அடைக்கியிருக்கலாம்.

 

ஆனால் தன் மரணத்தின் வலியை

அவனுடைய எலும்புகள் கூட

அறிந்துவைத்திருக்கின்றன.

 

மனிதனே சாவை

உருவாக்கியிருக்கிறான்.
 
* * *
 

பிரேம்குமார்

unread,
May 15, 2008, 7:03:21 AM5/15/08
to panb...@googlegroups.com

//எனக்கு மட்டும்

தங்கமும், வெள்ளியும் பூண்ட
மின்னிடும் பூக்களாலான்
சொர்க்கத்தின் ஆடைகளிருந்தால்
உன் பாதங்களுக்கு விரித்திருப்பேன்.

//
அழ‌காய் சொல்லியிருக்கிறீர்க‌ள்

ந‌ல்ல முயற்சி சூர்யா. தொடர்ந்து எழுத வாழ்த்துக்க‌ள்


மஞ்சூர் ராசா

unread,
May 15, 2008, 7:33:34 AM5/15/08
to mutht...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com
இரண்டு கவிதைகளுமே மிகவும் நன்றாக இருக்கிறது.
மூலம் படிக்கவில்லையென்றாலும் உங்களின்  மொழிப்பெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து முயற்சியுங்கள்.

Asif Meeran AJ

unread,
May 15, 2008, 11:47:25 AM5/15/08
to panb...@googlegroups.com
நல்ல கவிதைகள் நல்ல முயற்சி
தொடரட்டும் மொழி பெய்ரப்பு கவிதைகளின் அணிவகுப்பு

"...ப்ரியன்..."

unread,
May 15, 2008, 1:09:44 PM5/15/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
நல்ல முயற்சி...

மொழிபெயர்ப்போடு மூலத்தையும் இடுங்களேன்...

கோகுலன்

unread,
May 15, 2008, 6:50:44 PM5/15/08
to Pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..
 
நல்ல கவிதைகள்..மொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது..
 
தொடர்ந்து எழுதுங்கள்..

 
--
நட்புடன்,
கோகுலன்.
http://ninaivukalil.blogspot.com/  
http://gokulansirukathai.blogspot.com/  
http://gokulanpoem.blogspot.com/  
http://gokulanfotos.blogspot.com/

சூர்யா

unread,
May 17, 2008, 1:12:41 AM5/17/08
to Pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
பின்னூட்டம் தந்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
 
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு தவிர்த்து, பிறமொழிக் கவிஞர் சொல்லும் உணர்வுகளையும், எண்ணங்களையும் முதன்மைப்படுத்துவது என் நோக்கம்.
 
வரும் பதிவுகளில் கவிதைமூலத்தையும் தருகிறேன்.
 
- சூர்யா

--
http://suryawrites.blogspot.com

சூர்யா

unread,
May 19, 2008, 5:42:45 AM5/19/08
to pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
Anne Bradstreet (c.1612-1672) எழுதிய
TO MY DEAR AND LOVING HUSBAND
கவிதையை மொழிப்பெயர்த்துள்ளேன்.
 
* * *
 
என் பிரியமுள்ள கணவருக்கு...
 
எப்போதாயினும்
இருவர் ஒருவரெனக் கருதினால்

அது நாமாகத்தான் இருக்கவேண்டும்.

 

எப்போதாயினும்
தன் மனைவியால்

அன்புகூரப்பட்ட ஒருவனென்றால்

அது நீயாகவேண்டும்.

 

எப்போதாயினும்
தன் கணவனால்

அன்புகூரப்பட்ட ஒருத்தியென்றால்

எனக்கு இணையான பெண்ணொருத்தி

கிடையாது எனலாம்.

 

உன் அன்பு

தங்கச்சுரங்கத்தைக் காட்டிலும்
மதிப்பு நிறைந்தது.

 

ஏன்

கீழ்த்திசை ராஜ்ஜியங்களின்
செல்வங்களினும் உன் அன்பே

திரட்சியுடையவை.

 

உன் மீதான அன்பின் தாகத்தை
நதிகளும் தீர்த்திடாது.
 
எதுவுமே என்னைத் தணிக்கயியலாது.
 

உன்னிடமிருந்து பெருகும் அன்பிற்கே

எனனை ஆற்றுப்படுத்தும் சக்தியுண்டு.

 

உன் அன்பை எதைக்கொண்டு

பிரதிபலன் செய்வேன்

என்றெண்ணித் திகைக்கிறேன்.
சொர்க்கம் உன்னை
பன்மடங்கு ஆசீர்வதிக்க பிரார்த்திப்பேன்.

 

மரணத்திற்கப்பாலும்
என்றென்றும் வாழ்வதற்காய்
வாழும் காலத்தில்
அன்பிலே திளைத்திடுவோம்.

 

 * * *
 
TO MY DEAR AND LOVING HUSBAND

by: Anne Bradstreet (c.1612-1672)

IF ever two were one, then surely we.

If ever man were lov'd by wife, then thee.

If ever wife was happy in a man,

Compare with me, ye women, if you can.

I prize thy love more than whole Mines of gold

Or all the riches that the East doth hold.

My love is such that Rivers cannot quench,

Nor ought but love from thee give recompetence.

Thy love is such I can no way repay.

The heavens reward thee manifold, I pray.

Then while we live, in love let's so persever

That when we live no more, we may live ever.

--
http://suryawrites.blogspot.com

நந்தா

unread,
May 20, 2008, 2:18:55 AM5/20/08
to பண்புடன்
சூர்யா மிக நல்ல முயற்சி...

உண்மையிலேயே உங்களது மொழி பெயர்ப்பு மிக அருமை. மிகத் தேர்ச்சி பெற்ற
ஒருவரின் மொழி பெயர்ப்பினைப்போலவே உள்ளது..

கீழ்த்திசை ராஜ்ஜியங்கள், தங்கமும், வெள்ளியும் பூண்ட மின்னிடும்
பூக்களாலான் சொர்க்கத்தின் ஆடைகளிருந்தால் என்பது போன்ற சொல்லாடல்கள் இது
ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை என்பதை அழகாய் உணர்த்துக்கிறது.

தொடருங்கள்...

சூர்யா

unread,
May 20, 2008, 2:23:26 AM5/20/08
to panb...@googlegroups.com
அன்பு நந்தா.
நன்றி

2008/5/20 நந்தா <media...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages