FOSSConf-08.. is a free and open source software conference@Chennai...!

0 views
Skip to first unread message

Albert Fernando

unread,
Jan 31, 2008, 9:45:09 AM1/31/08
to panbudan
கட்டற்ற மென்பொருள் மாநாடு - அழைப்பிதழ்
 
என் ஆர் சி  பாஃஸ்

பாரத அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் என் ஆர் சி பாஃஸ் என்றழைக்கப்படும் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மையம் (http://nrcfoss.org.in) சென்னையினை மையமாக வைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டி கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, தேசிய அளவில் கட்டற்ற மென்பொருள் மாநாடுகளுக்கு ஆதரவு நல்குவது முதலியவை இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க  பணிகளுள் சிலவாகும்.

கட்டற்ற மென்பொருள் மாநாடு

தேசத்தின் குனு/ லினக்ஸ் பயனர் குழுக்களுக்கு முன்னோடியாகத் திகழும் சென்னை பயனர் குழுவும் என் ஆர் சி பாஃஸ் நிறுவனமும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று தேதிகளில் சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஐ டி வளாகத்தில் கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. கணினியினைப் பயன்படுத்த விரும்பும் எவரும் பங்கு கொள்ளும் விதத்தில் இந்நிகழ்வு வடிவமைக்கப் பட்டுள்ளது. அடிப்படை விடயங்கள் துவங்கி ஆழமான விடயங்களையும் அலசும் பல சொற்பொழிவுகளை பயனர்கள் மற்றும் அனுபவசாலிகள் நிகழ்த்தவுள்ளனர். மக்கள் தங்கள் கருத்துக்ளை வெளிப்படுத்த மொழித் தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து அவரவர் விரும்பும் மொழியில் உரை நிகழ்த்தும்  வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வு குறித்த விவரங்களுக்கு http://fossconf.in .

பதிவு செய்யப்பட்டுள்ள சொற்பொழிவுகள் குறித்தறிய
http://registration.fossconf.in/web/talks/

கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
 
0<>0

கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?

இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்தரத்தைப் பற்றியது:
  • எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது சுதந்தரம்).
  • நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்). முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
  • பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம். (மூன்றாவது சுதந்தரம் )
  • ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)
இச்சுதந்தரங்கள் அனைத்தையும் பயனொருவருக்குத் தரவல்ல மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகும்.

குனு திட்டம் என்றால் என்ன?

யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப் பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர்.

குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர்.

குனு/ வினக்ஸின் எண்ணற்ற வழங்கல்கள் கிடைக்கப் பெறுகின்றன. நூறு விழுக்காடு கட்டற்ற மென்பொருளாலான அதாவது பரிபூரண சுதந்தரத்தினை மதிக்கத்தக்க குனு/ லினக்ஸ் வழங்கல்களைப் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.

"குனு யுனிக்ஸல்ல " என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு-நூ என இது உச்சரிக்கப் படுகிறது. விளங்'கு' எனும் போது எழும் குற்றியலுகரத்தைப் போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.

குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களில் தமிழ் வசதிகள்

குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் பயனர்கள் தங்கள் பணியினை செவ்வனே செய்ய  உதவும் பொருட்டு இடைமுகப்புகளைத் தாங்கி வருகின்றன. அவற்றுள் குநோம் எனப்படும் இடைமுகப்பும் கேடியீ எனப்படும் இடைமுகப்பும் பிரபலமாகப் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றுள்  குநோம் பணிச்சூழலின் இடைமுகப்பு தமிழில் கிடைக்கப் பெறுகின்றது. கேடியீக்கான தமிழாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தமிழ் மொழியினை அதிக சிரமங்கள் எதுவும் இன்றி இயல்பிருப்பாகவே உள்ளிடக் கூடிய வசதிகளை குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் நமக்குத் தருகின்றன.

குனு/ வினக்ஸ் வழங்கல்கள்

குனு மற்றும் லினக்ஸினைக் கொண்டு இன்று பல இயங்கு தளங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் டெபியன், ரெட்ஹாட், சூசே, மான்ரிவா, உபுண்டு முதலியன குறிப்பிடத் தக்கவை. பாரத அரசின் சிடாக் நிறுவனமும் தற்சமயம் பாஸ் எனப் பெயரிட்டு தமது குனு/ லினக்ஸினை வெளியிட்டு வருகிறது.

குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள்

குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களின் சிறப்பம்சமே அவற்றின் பயனர் குழுக்கள் தான். சமூகம் சார்ந்த கூட்டுருவாக்கம் மற்றும் ஆதரவு முறைகளை அடிப்படையாகக்கொண்டு இத்தகைய குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பாரதத்தில் இத்தகைய பயனர் குழுக்களுக்கு முன்னோடியாக சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழு (http://chennailug.org) பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது.

சென்னை நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதே சமயம் கலந்துகொண்டவர்கள் நிகழ்வுகளை இங்கும்
எழுதினால் நாங்களும் அறிந்துகொள்வோம்!
 
 
நட்புடன்,
ஆல்பர்ட்.
Reply all
Reply to author
Forward
0 new messages