சின்னவயசு சீனு
குழந்தை கவுண்டர்
ராமுசித்தி
சங்கீதா
பூங்கொடி டீச்சர்
சேட்டு
லெட்சுமி
லாரி அப்பானு
ஒவ்வொரு காலத்திலும்
பிரிந்து செல்கின்றனர்
நான் மட்டும் இருக்கிறேன்
கடைசிவரை……….
முட்டிப்போட்டுருக்கையில் நாம் திட்டிய பெண் அவள் தோழிகளுடன் வந்து சிரித்தபடி போகையில் உள்ளுக்குள் இன்னும் வண்டையாக திரளும் கோபம்.
( குறிப்பு : என் தமிழ்க்கையெழுத்து கொஞ்சம் அழகாக இருக்கும் , வகுப்பில் ஒழுங்காக குறிப்பெடுத்துக்கொண்டிருப்பேன்)
.
வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையில் பணம் எடுத்துக்கொள்வேன் எதுக்கு சொல்லிட்டு எடுத்துக்க என்பாள் , போடி காரணம் மயிரெல்லாம் சொல்லனும்னா நீ தேவையேயில்லை என்கையில் ,
மயிறு என்ற வார்த்தையில் காது பொத்திக்கொள்வாள் , முகம் எல்லாம் சிவந்து போய்விடும் , பணம் தந்து விட்டு அழுதபடி போய்விடுவாள், திங்கள் பள்ளிக்கு வந்தாலும் என் முகம் பார்க்காமல் இருப்பாள் .
என் வீட்டில் ஜெனியா பூக்கள் பூத்திருந்த காலம் அது . ஜெனியா பூக்கள் பிளாஸ்டிக் பூக்களைப்போன்றவை , வாடாமல் இரு நாட்களுக்கு மேல் இருக்கும் அவை பல நிறத்தில் பூக்கும்.
சண்டைப்போட்ட நாட்களில் ஒரு பூவை எடுத்துச்சென்று என் டெஸ்க்கின் மேல் வைப்பேன். ஓரக்கண்ணால் பார்த்தபடி இருப்பாள், சில நிமிட மாயஜாலங்களில் அவள் தலையில் சிரித்தபடி இருக்கும் அந்த பூ.
வெகு ஆண்டுகளுக்குப்பிறகு வீட்டிற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் ஒரு பெண் அடம்பிடிக்கும் மகளோடும் கைக்குழந்தை ஒன்றோடும் இருந்தாள்.
ஏதோ ஞாபகத்தில் அவளையே பார்த்தப்படி இருக்க திடிரென அந்த பெண் தன் கணவனிடம் என்னைக்கைக்காட்டி ஏதோ சொல்லியபடி தன் கைக்குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.
சாலையை ஒரு சிறுமியின் குதூகலத்துடன் கடந்து வந்து என்னைத்தெரியுதா என்றாள். சில ஆண்டுகளில் அவள் வெகுவாய் மாறிப்போயிருந்தாள் , அந்த குழந்தை முகம் அப்படியே இருந்தது. உங்கையில சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நீ எங்க இருக்க உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.
என் வீட்டுப்பக்கம் திரும்பி பார்த்தேன் , வீடு கட்டுவதற்காய் இடித்துப்போடப்பட்டிருந்த செங்கற்கள் எல்லாம் ஜெனியா பூக்களாய் மாறிப்போயிருந்தது.
அதே பள்ளியில் படித்த என் தம்பி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டானாம் , காலையில் தொலைப்பேசினான்.
அழகான மலரும் நினைவுகள் கென்.. அதிலும் அந்த ஜினியா பூ.. எனக்கு என் வீட்டி ஞாபகப்படுத்தும் எங்கு பார்த்தாலும்..
பயமறியா, கள்ளமில்லா வயது...அருமை.. பகிர்ந்தமைக்கு நன்றி
--
சாந்தி.
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
நல்லபதிவு கென்..என் பள்ளிகாலத்தை மீண்டும் அசைபோட துவக்கிவிட்டது....நான் என் தோழிகளுக்கு மனோரஞ்சிதம் பூ தான் தருவேன்..யாருக்குமே கிடைக்காத அந்த பூ என் கையில் மட்டும் இருக்கும்.பள்ளி வளாகத்திலே இருக்கும் அந்த மரத்தில் பூவின் வாசனையை மோப்பம் பிடித்து காலை 6.30 மணிக்கெல்லாம் சென்று பூ பறித்து கொடுத்த நினைவுகள்..