மௌலானா அபுல் கலாம் ஆசாத்

378 views
Skip to first unread message

ஆசாத்

unread,
Nov 12, 2008, 11:38:06 PM11/12/08
to பண்புடன்
அன்புடையீர்,

மற்ற இடங்களில் படிப்பதை மக்கள் இங்கே பகிர்ந்துகொள்வதைப் பார்க்கிறேன்,
நானும் அதேபோல் ஒன்றைச் செய்தால் என்னவெனத் தோன்றியது. படிப்பதையெல்லாம்
போடாமால், யார் பெயரை எனக்கு வைத்தார்களோ அந்த தலைவரைப் பற்றிய
கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் இது மேலோட்டாமாக எழுதப்பட்ட கட்டுரைதான்.
ஆனாலும், சல்தாஹை! இதற்கென்று ஆராய்ச்சி செய்து மௌலானா ஆசாத்தின்
வாழ்க்கையை இணையத்தில் எழுத நேரம் இல்லாததால் இக்கட்டுரை சல்தாஹை.

*****

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

http://niduronline.com/?p=1176#more-1176

மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேச கல்வி
தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் கல்வித் துறையை
வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்
கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச்
சென்றார்.
ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச
கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,
பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்
என்று ஆசாத் வலியுறுத்தினார்.

அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல்
அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்
ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா
முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத்
இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,
கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம்
வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு
மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே
குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற
ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார்
பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது
குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத்
துவக்கி நடத்தினார்.
1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தர
வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக
எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன்
இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக
இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா
சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற
நூலை எழுதினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல
ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக
விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.
இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள்
கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின்
உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன்
பணியாற்றினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்
தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை
செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்
நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான்
பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி
அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில்
இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார
உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத்
உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான
அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும்
முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக
இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்
சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து
குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட
பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்
துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று
கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக
இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும்
தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து
பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க
வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான
அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம்
(ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,
தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல்
திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத்
மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை
குறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய
கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில்
ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள்
தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.
இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான
பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம்
கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை
எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி
பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப்
பிரசுரித்தது.
மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேசிய கல்வி தினமாக
கொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்
பணிகளை நினைவு கூர்வோம்.

Courtesy:tamil.webdunia.com

ஆசாத்

unread,
Nov 12, 2008, 11:48:36 PM11/12/08
to பண்புடன்
சென்ற வருடம் மௌலானா ஆசாத்தின் பிறந்த தினத்தன்று நான் எனது வலைப்பதிவில்
எழுதியது, இது அவரது 'இண்டியா வின்ஸ் பிரீடம்' புத்தகத்தில் வரும் ஒரு
வாக்கியம் குறித்த எனது பார்வை.

*****

India Wins Freedom - 30 ஆண்டுகளுக்குப் பின் வெளியான 30 பக்கங்கள்

//The Muslim League leader Mohammed Ali Jinnah disparaged him as a
"Congress Showboy", a token elected by the Congress to advertise its
secular credentials. The Maulana was too dignified a figure to respond
to the League's insult. But,....//

மௌலானா ஆசாத்தின் பிறந்தநாளான இன்று (11ம் தேதி நவம்பர் *சென்ற வருடம்
வெளியான பதிவு*) இந்துவில் வெளியாகியிருக்கும் ஷஷி தரூர் பத்திகளில்
இப்படியான வரியை ஷஷிதரூர் எழுதியிருக்கிறார்.

அன்றைய முஸ்லிம் லீக்கின் தலைவர் காயிதேஆஸம் (முகமது அலி ஜின்னா) மௌலானா
குறித்து மேற்சொன்ன விமர்சனத்தை வைத்திருக்கலாம். ஆனால், காங்கிரஸின்
அனறைய நிலைபாடு குறித்து மௌலானா சாஹேபின் எண்ணம் என்னவாக இருந்தது என்பதை
அப்போது காயிதே ஆஸம் நிச்சயமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை; முகமது அலி
ஜின்னா மட்டுமல்லர், வேறு யாருக்குமே மௌலானா ஆசாத்தின் நிலைபாடு குறித்த
எழுத்துபூர்வமான ஆதாரம் கிடைத்திருக்காது என்பதே எனது எண்ணம். ஏனென்றால்,
ரகசியமாக வைக்கப்பட்டு, முப்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட 30
பக்கங்களுள் ஒன்றில் ஓரிரு வரிகள் காங்கிரஸின் மதச்சார்பு குறித்து ஆசாத்
எழுதியது காணக் கிடைத்திருக்கிறது.

India Wins Freedom - இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப்பிரதியை
பேராசிரியர் ஹுமாயூன் கபீர் ஓரியன்ட் லாங்மன் பதிப்பகத்தாரிடம்
ஒப்படைத்திருக்கிறார் (செப்டம்பர் 1958இல் - மௌலானா இறந்து ஏழு
மாதங்களுக்குப் பிறகு). அதில் 30பக்கங்கள் ரகசியமாக
வைக்கப்பட்டிருப்பதாகவும் 22 பிப்ரவரி 1988 அன்றுதான் ரகசியமாக
வைக்கப்பட்டிருக்கும் பக்கங்கள் பதிப்பிக்கக் கிடைக்கும் என்றும்
அறிவித்திருக்கிறார்கள். முதல் பிரதி அந்த 30 பக்கங்கள் இல்லாமல்
வெளியாகியிருக்கிறது.

22 பிப்ரவரி 1988இல் பல்வேறு சட்டப் பிரச்சனைகளால் பக்கங்கள்
பதிப்பகத்தாருக்குக் கிடைக்காமற்போனது. தொடர்ந்த வழக்கால் கொல்கத்தா,
புது டில்லி நீதிமன்றங்களைச் சுற்றிவந்து 29 செப்டம்பர் 1988 அன்று
வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 30 பக்கங்களின் நகல்கள் தேசிய நூலகம்,
கொல்கத்தாவிற்கும், தேசிய ஆவண காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டு
பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வெளியிடப்படும் 30 பக்கங்களும் அப்படியே
உள்ளது உள்ளபடி வெளியிடப்படவேண்டுமென்றும், வரிகளில் எந்தவிதமான
மாற்றமும் இருக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பக்கங்களைப் படிக்கும்போதுதான் பதிப்பகத்தாருக்கு விவரம்
புலப்பட்டிருக்கிறது, இந்த 30 பக்கங்களும் தனியாக எழுதபட்ட பின் இணைப்பு
அல்ல; மாறாக, ஒரு சில அத்தியாயங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வரிகள்.
பக்கங்களை அப்படியே இணைத்து அடுத்த வெளியீட்டைச் செய்யாமல், எந்தெந்த
அத்தியாயங்களில் வரிகள் சேர்க்கப்படவேண்டுமோ அவற்றை இணைத்து, சேர்த்த
வரிகளை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

அவற்றுள் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விருப்பம்.

முப்பதாண்டுகளுக்குப் பின் வெளியான வரிகள்:

அத்தியாயம்-1:

Congress in Office

"......One has to admit that the nationalism of the Congress had not
reached s atage where it could ignore communal consideration and
select leaders on the basis of merit without regard to majority or
minority."

அன்றைய காங்கிரஸ், தனது மதச்சார்பு நிலையை, ஒரு இஸ்லாமியரை (சையத்
மஹ்மூத்) பீகாரின் முதன்மந்திரியாகாமற் செய்தும் காட்டியிருக்கிறது,
Congress Assembly Party - Bombayஇன் தலைவராக ஒரு பார்சியை (நரிமன்)
ஆகாமலும் செய்திருக்கிறது.

இவ்விரண்டு விஷயங்களையும் குறிப்பிடும் சமயத்தில்தான் மேற்சொன்ன வரிகளை
ஆசாத் எழுதியிருக்கிறார். மொழிமாற்றங்களில் ஏதேனும் பிழை உண்டாகிவிடுமோ
என்பதால், ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தட்டச்சியுள்ளேன்.

இன்றைய அரசியல் நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற கருத்தையெல்லாமா
30 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கவேண்டும் என்று கேட்கத் தோன்றலாம். அன்று
பண்டித நேருவின் சர்தார் பட்டேலின் சில அணுகுமுறைகளை இப்படி
வெளிப்படையாகச் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள முப்பதாண்டுகள் ஆகும் என
ஆசாத் நினைத்தாரோ என்னவோ.

புத்தகம் குறித்த எனது விரிவான பார்வையை இன்னொரு நாள் எழுத விருப்பம்.

between the lines-1:

அன்றைய காங்கிரஸ், மதச்சார்பின்மை முகங்காட்டவேண்டி இஸ்லாமியரை
(மௌலானாவை) உயர்த்தியது உண்மையென்றால், அதே அன்றைய காங்கிரஸ்
பெரும்பான்மையை திருப்திபடுத்த ஒரு பார்சியையும், ஒரு இஸ்லாமியரையும்
பின்னுக்குத் தள்ளியும் காட்டியிருக்கிறது.


between the lines-2 :-)

அன்று, காங்கிரசுக்கு தன் மதச்சார்பின்மை முகத்தைக் காட்ட அபுல் கலாம்
ஆசாத் தேவைப்பட்டதாக முகமதலி ஜின்னா சொல்லியிருக்கிறார். அப்துல் கலாம்
ஜனாதிபதியானபோது இதே தொனி ஒலித்த கருத்தினை பலர் முன்வைத்தார்கள்.

அன்புடன்
ஆசாத்

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 13, 2008, 12:23:17 AM11/13/08
to panb...@googlegroups.com

இந்தியாவின் கல்வித்தந்தை!
சமூக நல்லிணக்கத்திற்காக அரும் பாடுபட்ட, நற்சிந்தனை மிக்க ஒரு கல்விமான்!
அர‌சிய‌லில் நல் ஒழுக்க‌த்தைப் பேணிய‌ தூய்மையாள‌ர்!
அல் ஹிலால் உட்ப‌ட‌ நிறைய‌ ப‌த்திரிகைக‌ளின் மூல‌ம், விடுத‌லை வேட்கையை இந்திய‌ ச‌முதாய‌த்தில் விளைவித்த‌வ‌ர்!

இவைதான் நான் க‌ண்ணியத்திற்குரிய‌ ஆஸாத் அவ‌ர்க‌ளைப் ப‌ற்றித் தெரிந்துக் கொண்ட‌து.
வ‌ர‌லாற்றில் இளைய‌த்த‌லைமுறைக்கு, இத்த‌கையோரின் தியாக‌ வாழ்வு வாழ்ந்த நல்லோர்களின் வாழ்வுக்குறிப்புகள்/விவ‌ர‌ங்க‌ள் ம‌றைக்க‌வும், ம‌ற‌க்க‌டிக்க‌ப்ப‌டவும் செய்ய‌ப்ப‌ட்ட‌தோ... என்ற‌ வ‌ருத்த‌ம்.


இன்னொரு முக்கிய‌ த‌க‌வ‌ல்:
எங்க‌ள் ஊரில் மௌலானா அபுல்க‌லாம் ஆஸாத் அவ‌ர்க‌ளின் நினைவாக‌, ஒவ்வொரு ஆண்டும் மே/ஜூன் மாதங்களில், இந்தியாவின் த‌லைசிற‌ந்த‌ அணிக‌ளைக் கொண்டு, கால்ப‌ந்தாட்ட‌ப் போட்டி ந‌ட‌த்துவார்க‌ள். அந்த‌ மாதங்க‌ளில் திருவிழா கொண்டாட்ட‌ம் தான்.


--
**** KML  ராஜன்  [ நீதி அரசு ]  ****

ஈட்டி முனை எதிர் கொண்டாலும்…..  கொண்ட உறுதி துறப்பதில்லை.

கண்காணா மூலையொன்றின் அநீதி கண்டு உன் மனம் கொதித்தால்,  என்னைக் கட்டித் தழுவு;
ஆம், நாமிருவரும் நண்பராகி விட்டோம்!

ஆசாத்

unread,
Nov 13, 2008, 12:56:06 AM11/13/08
to பண்புடன்
> இத்த‌கையோரின் தியாக‌ வாழ்வு வாழ்ந்த
> நல்லோர்களின் வாழ்வுக்குறிப்புகள்/விவ‌ர‌ங்க‌ள் ம‌றைக்க‌வும்,
> ம‌ற‌க்க‌டிக்க‌ப்ப‌டவும் செய்ய‌ப்ப‌ட்ட‌தோ... என்ற‌ வ‌ருத்த‌ம்.

அய்யா, என்ன சொல்கிறீர்கள் எனப் புரியவில்லையே.

மௌலானாவின் வாழ்க்கைக்குறிப்புகளை யரும் மறைக்கவில்லையே.

இந்த இழையில் சொல்லப்பட்டது என்னவென்றால், மௌலானா அவர்கள் தான் எழுதிய
புத்தகத்தில் முப்பது பக்கங்களை தனது மறைவிற்குப்பின் முப்பதாண்டுகள்
கழித்தே வெளியிடவேண்டும் என ரகசியமாக வைக்கச் சொன்னார்.

அவரது மறைவிற்குப் பின் முப்பதாண்டுகள் கழித்து, மௌலானாவின்
விருப்பப்படியே வெளியிடப்பட்டிருக்கின்றன. அவ்வளவே.

காங்கிரசின் சில போக்குகளை மக்கள் புரிந்துகொள்ள / ஏற்றுக்கொள்ள இன்னும்
சில வருடங்களாகலாம் என அவர் நினைத்திருக்கக்கூடும். மௌலானாவின் கண்ணியம்
குறித்த ஷஷி தரூரின் வரிகளை மேலே குறிப்பிட்டிருக்கிறேனே, 'The Maulana
was too dignified a figure to respond to the League's insult.'

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Nov 13, 2008, 1:24:22 AM11/13/08
to panb...@googlegroups.com

நான் அபுல்கலாம் ஆஸாத் அவர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

"இலக்கியச்சோலை" பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அருமையான புத்தகத்தைப் படித்த போது [பெயர் ஞாபகத்தில் வரவில்லை] விடுதலைக்காக அரும்பாடுபட்ட நிறைய தியாகச்செம்மல்களின் உண்மை வரலாறு இளைய தலைமுறையினருக்கு மறைக்கட்டுள்ளது எனத்தெரிந்தது. அதைத்தான் சொல்ல‌வ‌ந்தேன்.

அதுத‌விர, அபுல்கலாம் ஆஸாத் அவ‌ர்க‌ளின் நூற்றாண்டு விழாவில் வெளியிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ள் ப‌ற்றி ஏற்க‌ன‌வே ப‌டித்த‌ ஞாப‌க‌ம்.

ந‌ஜ்மா ஹெப்துல்லா, ஆஸாத் அவ‌ர்க‌ளின் உற‌வுமுறை என்றும் எங்கோ ப‌டித்த‌ ஞாப‌க‌ம்.
 
கண்ணியம் மிகுந்த‌  ஆஸாத் அவர்கள் புனித மறையான அல் குர்ஆனுக்கு உரைவிள‌க்க‌ம் எழுதியிருப்ப‌தாக‌வும் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.
 
ச‌ரி தானே!

ezhil arasu

unread,
Nov 13, 2008, 12:55:10 PM11/13/08
to panb...@googlegroups.com

என்னை வியக்க வைக்கிறீர்கள் ஆசாத்!

மேலே தந்த கட்டுரைக்கு நன்றி.



2008/11/13 ஆசாத் <banu...@gmail.com>

நண்பன்

unread,
Nov 13, 2008, 4:38:22 PM11/13/08
to பண்புடன்
ஆசாத்,

அருமையான பதிவு.

ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி
நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா
என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.

இன்றைய நடைமுறையில், எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதரவு
தேவைப்படுகிறதென்றால், அதை இரண்டு வழிகளில் பெற முடியும்.

கிடைக்கக் கூடிய நன்மைகளை நேரிடையாகச் சொல்லி, அதனால் ஆதரவு கோருவது. An
optimistic outlook.

நிகழ சாத்தியமற்ற கூறுகளைப் பட்டியலிட்டு, அச்சமூட்டி, அதனால், எங்களை
ஆதரித்து விடு என வற்புறுத்துவது. The pessimistic and negative view.

இதில் இன்று உலகம் முழுக்க இந்த எதிர்மறை எண்ணங்களைப் பரப்பித் தான்
அரசுகள் தங்களுக்கு ஆதரவைக் கோருகின்றன.

அமெரிக்க அரசியல் தலைமை தான் முதன்முதலாக இந்த எதிர்மறை பிரச்சார
உத்திகளை மேற்கொண்டு, அதன் மூலம் மனித உரிமைகள் என்ற தத்துவத்திற்கு
ஆதரவு கோரியது. அதாவது கம்யூனிஸத்தை ஒரு பயங்கரவாத பிசாசாக தொடர்ந்து
கட்டமைத்து, அதைத் தடுக்க வேண்டுமென்றால், நாம் முதலாளித்துவத்தைத்
தொடர்ந்து தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற மற்றொரு பயங்கரத்தை
முன்நிறுத்தி ஆதரவு வேண்டியது. இந்த வகையான பிரச்சாரம் நல்ல பலனைக்
கொடுக்கிறது என்ற தவறான புரிதலின் பயங்கரம் இன்று வெளிப்பட்டுக்
கொண்டிருக்கிறது - முதலாளி வாழ,தொழிலாளிகள் ஒழியட்டும் என்ற பூனை இன்று
பையிலிருந்து குதித்து ஓடிக் கொண்டிருக்கிறது அங்குமிங்கும்.

அமெரிக்காவின் இந்த உத்தியை, இன்று மிக லாகவமாக தன் வசப்படுத்திக்
கொண்டிருக்கின்றனர், பரிவார்கள். இந்துக்களை - அவர்களின்
உள்பலவீனங்களையும் மீறி, ஒன்று படுத்தி ஓட்டு வங்கியாக மாற்ற
முனைவதற்காக, அவர்கள் முன் வைக்கும் எதிர்மறை பிரச்சாரம் தான் -
முஸ்லிம், கிறித்துவ மதங்கள் தங்களை விழுங்கி விடும் என்ற பூதத்தைக்
காட்டி பயமுறுத்தி, மற்றவர்களைத் தங்கள் அணிக்கு வரவழைப்பதற்கான
முயற்சி.

இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற முயற்சி - அனைவரையும் சமமான
தளத்திற்குள் கொண்டு வருவோம் என்ற முயற்சியாக நேரிடையாக பிரச்சாரம்
செய்யப்படும் கருப்பொருளாக அமைந்திருந்தால், அதை விட மிக்க மகிழ்ச்சியான
செய்தி வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், அதை செய்ய அவர்கள்
விரும்பவில்லை. ஏனென்றால், பல சாதிக்கூறுகளாகப் பிரிந்து கிடக்கும்
இனங்களையெல்லாம் ஒன்று கூட்டி, இடைப்பட்ட தடைக்கோடுகளை அழித்தெடுக்கும்
எண்ணமெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. அதனால், இந்துக்களை ஓரணியில் ஒன்று
திரட்ட வேண்டுமென்ற முனைப்பு, அதன் உட்பிரிவின் கணங்களிலே அமிழ்ந்து
முழுகிப் போய்விடும். இந்துக்களை ஒன்று திரட்ட, அதன் உட்பிரிவுகளின் அகோர
முகத்தை ஒழிப்பதைக் காட்டிலும், இந்து மதத்திற்கு அழிவு என்ற
பூச்சாண்டியை வெளியில் இருப்ப்பவர்கள் மூலம் செய்வது ஒன்றால் மட்டுமே
முடியும் என்ற திடமான நம்பிக்கைக்கு வந்து விட்டனர். அதற்கான எளிய வழி -
அமெரிக்காவின் பிரச்சார மாடல்கள். Rather than being an optimist and
wait for the day to arrive, go the pessimist way and rampage through
by the negative propaganda.

இதற்குண்டான எளிய வழி, இஸ்லாம், முஸ்லீம் இவற்றின் பங்களிப்பைக் கொஞ்சம்
கொஞ்சமாக மக்களின் நினைவாற்றல்களிலிருந்து அழித்தொழிப்பது,அவர்களை
எதிரிகளாகச் சித்தரித்துக் காட்டுவது, அவர்கள் தேச துரோக குற்றங்களைச்
சாற்றுவது, பிற சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்துவது, கல்வி வேலை
வாய்ப்பு உரிமைகளைப் பறிப்பது என்ற தொடர் தாக்குதல்கள்.

பட்டியலிட்டால் கணக்கிலடங்காமல் போகும் அளவிற்கு உண்டு.

அங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தானை அவர்கள் religiou
bigot என்ற பட்டம் சூட்டியது, உலக வரலாற்றிலேயே முதன்முதலாக ராக்கெட்
என்ற ஏவுகணை ஆயுதத்தைப் பயன்படுத்தியதன் மூலம், ஒரு விஞ்ஞான அறிவுப்
பாதையைத் தொடங்கி வைத்தது இவற்றையெல்லாம் சுத்தமாக மறைத்ததைக்
குறிப்பிடலாம். இன்று திப்பு சுல்தானுக்கு அங்கீகாரம் கொடுத்தது
அமெரிக்காவின் நாசா நிறுவனம் தான். அவர்கள் அலுவலக வரவேற்பறையில் திப்பு
சுல்தானின் மிகப்பெரிய ஓவியப்படம் இருக்கிறது - ராக்கெட்
தொழில்நுட்பத்தைத் தொடங்கி வைத்தவர் என்பதற்கான மரியாதையின் நிமித்தம்.
ஆனால், இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில், எவராவது ஒருவர் திப்பு
சுல்தானுக்கான அங்கீகாரத்தை வழங்கியதுண்டா? ஏன் இந்தியாவின் முதல்
குடிமகனாக இருந்த கலாம் அவர்கள் கூட இதை எங்கும் குறிப்பிட்டதாக எனக்குத்
தெரியவில்லை.

இது போலவே இந்தியாவின் வலுவான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவிற்கு அடிகோலிய
ஐ.ஐ.டி கல்வி நிலையங்களை நிறுவியவரே ஆசாத் அவர்கள் தான் என்பதே இப்பொழுது
தான் பொதுவிற்கு வருகிறது.இதைப் பற்றியெல்லாம் பேச விரும்பாத,
தேசபக்தர்கள், இத்தனை நாளும் ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள் -
இஸ்லாமியத் தீவிரவாதம் என்று. ஆனால், இன்று அந்தப் பிரச்சாரமே
கேள்விக்குறியாகி நிற்கின்றது. நாட்டில் வெடித்த அனைத்து வெடிகுண்டுகளும்
இஸ்லாமிய குண்டுகள் மட்டும் தானா? ஆர்.எஸ்.எஸ் குண்டுகள் அவற்றில்
எத்தனையோ? தாங்களே குண்டுகளை வைத்து விட்டு, அவற்றை இஸ்லாமியர்கள் மீது
வெறுப்பை அள்ளி வீசும் வகையில் பிரச்சாரம் செய்தது எத்தனை கேவலமான செயல்?
எந்த ஒரு தத்துவமும் தன் தவறுகளின் கணத்தினாலே வீழ்ந்து விடுகிறதோ -
அதுபோலவே, இன்று இந்துத்வா தத்துவமும் தன் தவறுகளின் கணத்திலே
வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது. பூச்சாண்டிகளைக் காட்டுவதன் மூலம்
'நிச்சயிக்கப்பட்ட நிலங்களை' எவராலும் அடைய முடியாது என்பதே இன்றைய
நிதர்சனம்.

இன்று தீவிரவாதிகளை எந்த ஒரு மதத்திடனும் அடையாளப்படுத்தக் கூடாது என்று
குரல்கள் எழுகின்றன.

நன்றி.

இத்தனை நாளும் நாங்கள் மட்டுமே அதற்கான போராட்டத்தை நடத்தி வந்தோம்.
இன்று பெரும்பான்மையானவர்களும் அதையே பேச ஆரம்பித்திருக்கின்றனர். தவறான
அச்சுறுத்தல்களை விலக்கி விட்டு, உண்மையைப் பேசினால் மட்டுமே தீவிரவாத
எதிர்ப்பு வலுவுள்ளதாக இருக்கும் என்ற புரிதல் வருவதற்கு இந்துத்வ
வாதிகளே காரணம் என்ற வகையில், மீண்டும் ஒரு நன்றி.

இனியாவது, இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய நற்பணிகளைப் பற்றி,
நன்றியுடன் நம் சமூகம் பேச முன் வருமா?

இந்தக் கேள்விக்கான பதிலின் மூலம் மட்டுமே, இந்து முஸ்லீம்
நல்லிணக்கமும், பொதுவான நல்லிணக்கமும் சாத்தியப்படும், இந்தியாவில்.

ஆசாத், உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி. சரியான சமயத்தில் சரியான
கட்டுரை.
> read more »...

ஆசாத்

unread,
Nov 14, 2008, 10:05:45 AM11/14/08
to பண்புடன்
> <nanb...@gmail.com> wrote:
> இது போலவே இந்தியாவின் வலுவான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவிற்கு அடிகோலிய
> ஐ.ஐ.டி கல்வி நிலையங்களை நிறுவியவரே ஆசாத் அவர்கள் தான் என்பதே இப்பொழுது
> தான் பொதுவிற்கு வருகிறது.

இனிய நண்பன்,

மௌலானாவின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவித்திருக்கிறார்கள்.

இஸ்லாமியன், இந்து, சீக்கியன், கிறிஸ்தவன் என்றெல்லாம் அடையாளமிட்டு
தேசப் பணியை அணுகவேண்டுமா என பலநேரங்களில் நினைப்பதுண்டு, ஆனாலும்,
அடையாளமிட்டு பிளவு உண்டாக்கும் அணுகுமுறைகளின் இடையே வாழ்வதற்காக நான்
பிரிவினைவாதியல்ல என்று சொல்லிக்கொள்ளவேனும் அப்படி அடையாளத்தை
முன்னிறுத்தி தேசப் பணியை அணுகவேண்டிய நிலைக்கு ஆளாகியிருப்பது
அபாக்கியமே...சல்தாஹை.

எம்.ஜே.அக்பரின் 'Jinnah has sold Indian Muslims' right for a bowl of
soup' எங்காவது இணையத்தில் கிடைக்குமா எனப் பார்க்கிறேன், கிடைத்தால்
பகிர்ந்துகொள்வேன்.

நண்பன்

unread,
Nov 14, 2008, 3:41:30 PM11/14/08
to பண்புடன்
எவருமே தாங்கள் இந்து முஸ்லிம் கிறித்துவன் என்று பார்த்துக் கொண்டு, தன்
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடவில்லை. அன்று அனைத்து மக்களையும் ஓர்
அணியில் திரளச் செய்தவர்களும் தங்கள் தோளில் உரசும் தோள் எந்த
மதத்தினுடையது என்று எண்ணவில்லை.

ஆசாத் பாவம் - நேருவும் பட்டேலும் மதச்சார்பேற்றம் கொண்டிருந்தனர் என்று
ஒரு கருத்தைச் சொல்வதற்ற்குக் கூட அச்சப்ப்பட்டுக் கொண்டு, தான் இறந்து
30 வருடங்களுக்குப் பிறகு அதை வெளியிட்டால் போதுமென்று
சொல்லியிருக்கிறார். ஆனால், இன்று இந்தியா இருக்கிற நிலைமையைப்
பார்த்திருந்தால், மொத்தமாக அதை பதிவிடவே வேண்டாம் என்றே
சொல்லியிருப்பார். நாம் அதைவிட பலமடங்கு தீவிரமாக காந்தி, பட்டேல், நேரு
என்று அனைவரையும் அவர்களது மதகொள்கைகளை விமர்சித்து விட்டோம். அவர்கள்
மதத்தின் ஆளுகைக்குட்பட்டிருந்தவர்கள் என்று சொல்வதற்கா, இத்தனை தயக்கம்?

பின் எம்.ஜே. அக்பர் - !

He is a confirmed apologist. எப்படியாவது, இந்தியாவின்
ஆட்சியாளார்களிடமிருந்து நற்பெயர் பெற்றுவிட வேண்டும் என்று எதையாவது
எழுதிக் கொண்டிருப்பார்.

நானும் அவருடைய அந்தப் புத்தகத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

வரலாற்றை அறிந்தவர்கள் எல்லாம் சொல்வது - ஜின்னா ஒரு அற்புதமான வாதிடும்
திறமை மிக்க ஒரு வக்கீல். அவர், த்னிநாடு என்ற கொள்கையை முன்வைத்து, ஒரு
பேரம் பேசி, அதிகபட்ச உரிமைகளைக் கவர்ந்து விடவேண்டும் என்ற திட்டம்
கொண்டு தான், பாக்கிஸ்தானை முன்மொழிந்தார் என்று சொல்வார்கள். ஆனால்,
காங்கிரஸ் ஹிந்துத்வத்தினர், முஸ்லிம்களை எல்லாம் பிரித்துக் கொடுப்பதன்
மூலம், தங்கள் மேலாண்மைக்கு அடங்கிப் போகும் மக்கள் கொண்ட ஹிந்து
நாட்டின் அதிகாரம் தங்கள் கைக்கு எந்த போராட்டமுமின்றி தானாகவே வந்து
விடும் என்ற அபிலாஷை கொண்டு, பாக்கிஸ்தானம் என்ற கோரிக்கைக்கு வலு
சேர்ர்த்தனர். ராஜாஜி, ஜின்னாவுக்கு ஆதரவாகப் பேசினார் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்!! அதாவது, காத்திருந்தனர். யாராவது இப்படி ஒரு
கோரிக்கை வைத்தால், உடனே அதற்கு இணங்கி விடுவதென. ஆக, பழி மட்டும் ஜின்னா
தலைமையில், அதில் சமபங்கு வகித்து, அவர் மீது பாக்கிஸ்தானை திணித்த இந்து
தலைவர்கள் தேசிய தலைவர்களாகி விட்டனர்.

Even Advani had exonerated Jinnah during his visit to Pakistan.
அதற்காக அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது. அதாவது, நான் சொன்னேனே,
பூச்சாண்டிகளை உருவாக்கிக் காட்டி, மக்களை மிரட்டுவது ஒரு வகை
propaganda. The pessimistic way of looking at things. அவ்வளவு தான்.
எப்படி அப்துல் கலாம், பிஜேபிக்கு ஒரு முகமானாரோ,அது போலவே எம்ஜே
அக்பரும் ஒரு முகம். இந்தியா ஆட்சியாளார்கள் உலகிற்குக் காட்ட விரும்பும்
ஒரு இஸ்லாமிய முகம்.

ஜின்னா ஒரு கப் சூப்பிற்காக விற்று விடவில்லை. ஆனால், இங்கேயே தங்கிட
விரும்பிய இஸ்லாமியர்கள், தங்கள் தலைவர்களாக, அரசியலாளர்களையும்,
அறிஞர்களையும் உருவாக்க முடியாமல், (டெல்லி) மசூதி
இமாம்களுக்கும்,ஹைதரபாத் முல்லாக்களுக்கும் அடிமைப்பட தொடங்கிய பொழுது
தான் தங்கள் சரிவை சந்திக்க நேரிட்டது. முஸ்லிம்கள் இமாம்களை மசூதியின்
காம்பவுண்டு சுவ்ருக்குள் உட்கார்த்தி வைத்து விட்டு, தங்களுக்கு
(உண்மையாக இருக்கும்) அரசியல் கட்சிகளுக்குள் தங்களையும் இணைத்துக்
கொண்டு பணி செய்வது, தங்களுக்கும், தங்கள் நாட்டிற்கும் பாதுகாப்பாக
இருப்பதை உணர்வார்கள்...

மௌலானா அவர்களின் பிறந்த நாள் தேசிய தினமாக அறிவிக்கப்பட்டிருப்பதை
பெருமையுடன் நினைவு கூறுமளவுக்கு அதில் என்ன இருக்கிறது? இந்த மாதிரி
ஜாலவித்தைகள் காட்டி இனியும் எவரையும் ஏமாற்றிவிட
முடியாது.

On Nov 14, 7:05 pm, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > <nanb...@gmail.com> wrote:

மஞ்சூர் ராசா

unread,
Nov 15, 2008, 4:16:31 AM11/15/08
to panb...@googlegroups.com
விவரங்களுக்காக நண்பன் மற்றும் ஆசாத்துக்கு நன்றி.

ஆசாத்

unread,
Nov 15, 2008, 7:11:44 AM11/15/08
to பண்புடன்
> அவர்கள் மதத்தின் ஆளுகைக்குட்பட்டிருந்தவர்கள் என்று சொல்வதற்கா, இத்தனை தயக்கம்?

நண்பன்,

ஆசாத்தின் புத்தகத்தில் வெளியிடப்படாத பகுதிகள் அனைத்துமே மதச்சார்பு /
சார்பின்மை குறித்துப் பேசுபவை அல்ல. அது இருக்கட்டும், நாட்டின்
இப்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது மௌலானா தயங்கியது தேவையற்றதாகத்
தோன்றுகிறது.

அவர் ரகசியமாக வைத்துவெளியிட்ட மற்ற விவரங்களை இன்னொரு நாள்
பார்க்கலாம்.

*

> He is a confirmed apologist. எப்படியாவது, இந்தியாவின்
> ஆட்சியாளார்களிடமிருந்து நற்பெயர் பெற்றுவிட வேண்டும் என்று எதையாவது
> எழுதிக் கொண்டிருப்பார்.

நண்பன்,

சார்பு நிலை எல்லாரிடமும் உண்டு. ஒன்றைச் சார்வதால் நிச்சயமக
மற்றொன்றிற்கு எதிர்ப்புதான். எம்.ஜே.அக்பரின் எழுத்துகள் அப்படித்தான்.
காங்கிரஸ் சார்ந்த தேசியவாதத்தை அவரிடம் கண்டிருக்கிறேன்.

அவரது ஷேட்ஸ் ஆப் ஸ்வார்ட்ஸ் வாங்கி சில பக்கங்கள் புரட்டி
வைத்திருக்கிறேன். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள்
இவருக்குச் செய்த உதவிகளைப் பாராட்டியிருப்பார்.

தூதரக உதவிகள் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய எழுத்தாளராக நீங்கள்
இருக்கவேண்டுமென்றால் வெறுமனே வி.ஐ.பி. அந்தஸ்து மட்டும் போதாதென்பதை
வளைகுடாவில் வாழும் நாம் அறிவோம்.

பாக்கிஸ்தானிய எதிர்ப்பை நான் தவறென்று சொல்லமாட்டேன். என்னிடம்
இருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தேசியவியாதியை :-)நீங்கள் இதுவரையில்
உணர்ந்திருப்பீர்கள். பாக்கிஸ்தானிய எதிர்ப்பு + காங்கிரசு ஆதரவு =
எம்.ஜே.அக்பர், தவறில்லை என்பது எனது பார்வை. உங்கள் பார்வை வேறாக
இருக்கலாம்.

*

நண்பன்,

தேசிய கல்வி நாளாக மௌலானாவின் பிறந்த நாளை அறிவித்தது
சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்பட்ட போலி அங்கீகாரம் என்பது உங்கள்
கருத்தாக இருக்கலாம். இப்படியான மறுப்புகளை சில இடங்களில்
கண்டிருக்கிறேன்.

தமிழக அரசு உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோருடன் இணைத்தபோது
(எழுபதுகளின் துவக்கத்தில்) அதனைக் கண்துடைப்பென்றோம்.

மீலாதுன்நபி நாளை அரசு விடுமுறையாக அறிவித்தபோது அதனைக்
கண்துடைப்பென்றோம்.

அ.தி.மு.க. அரசு (எம்.ஜி.ஆரின் முதல் ரெஜிம்) வருமானமில்லாத
பேஷ்இமாம்களுக்கு உதவித்தொகை அறிவித்தபோது அதனைக் கண்துடைப்பென்றோம்.

இப்போது நடந்த இடஒதுக்கீட்டையும் நாடகமென்போம். அதற்கான புள்ளிவிவரங்கள்,
மறுப்பதற்கென்றே ஜெயா டி.வி.யில் வரும் இஸ்லாமிய சமுதாயத்
தலைவர்கள்...சல்தாஹை...சப் சல்தாஹை!

எல்லாருடைய பார்வையும் அவரவர் கோணத்தில் சரியானதே.

அடிக்கடி நான் சொல்வதுபோல் வரையறுக்கப்பட்ட தெளிவுகள் இருக்கும்
இடங்களில்தான் இது சரி இது தவறென்று வாதங்களை அடுக்க இயலும். மற்றபடி
இதுபோன்ற விவரங்களில் பார்வைகள் ஆளாளுக்கு வித்தியாசப்படும்.

நண்பன்

unread,
Nov 15, 2008, 5:28:16 PM11/15/08
to பண்புடன்

ஆசாத்,

// > சார்பு நிலை எல்லாரிடமும் உண்டு. ஒன்றைச் சார்வதால் நிச்சயமக
> மற்றொன்றிற்கு எதிர்ப்புதான்.//


நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே உண்மை.

எனது நிலைபாடு இது தான்.

சார்பு நிலை ஒருவரிடத்தில் இருப்பதனால், அவருடைய எழுத்துகளும் வாதமும்
அந்த சார்புடையதாகத் தான் இருக்க வேண்டும் என்று வாதிட்டால், உண்மை எங்கோ
போய் ஒளிந்து கொண்டது என்று தான் அர்த்தம். அவர் காங்கிரஸ் ஆதரவாளர்
என்பது, அந்தக் கட்சியின் மேடையில் ஏறி நின்று பேசும் பொழுது மட்டுமே
கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. ஒரு புத்தகத்தையும் அதே
சார்புநிலையில் எழுதுகிறார் என்றால், அவர் உண்மையை விட, தான் சார்ந்த
சித்தாந்தத்தை மட்டும் தான் வலியுறுத்த அந்தப் புத்தகத்தை எழுதியதாக
எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு ப்ளாக்கர் எப்படி தனக்குப்
பிடித்ததை மட்டும் தான் எழுதுவாரோ, (உண்மை எப்படியிருந்தாலும்,) அந்த
மாதிரி தான் எழுதுவேன் என்றால், அவரை என்னால் மற்றுமொரு ப்ளாக்கராக
மட்டுமே ஏற்றுக் கொள்ள இயலும். மற்றபடி, அவர் வரலாற்றில் ஒரு
துளியையேனும் தனது பங்களிப்பாக அளித்து விட்டார் என்று என்னால் ஏற்றுக்
கொள்ள இயலாது. சில ப்ளாக்கரக்ள், இந்த வகையில் எவ்வளவோ மேல். சில சமயம்
சிறப்பாக - இந்த மாதிரியான எழுத்தாளர்களை விட மேலானவர்களாக கருத
வைக்கிறது.

// > பாக்கிஸ்தானிய எதிர்ப்பை நான் தவறென்று சொல்லமாட்டேன். என்னிடம்
> இருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தேசியவியாதியை :-)நீங்கள் இதுவரையில்
> உணர்ந்திருப்பீர்கள். பாக்கிஸ்தானிய எதிர்ப்பு + காங்கிரசு ஆதரவு =
> எம்.ஜே.அக்பர், தவறில்லை என்பது எனது பார்வை. உங்கள் பார்வை வேறாக
> இருக்கலாம். //

ஒருவர் தன்னை நிறுவிக் கொள்ள, பொதுப்புத்தியில் நிகழும்
எண்ணங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற
'self-consciousness' கொண்டு செயல்படுகிறார்கள் என்பதைத் தான் இது
சொல்கிறது.

பாக்கிஸ்தான் எதிர்ப்பு, பாக்கிஸ்தான் ஆதரவு என்பதல்ல இந்த நிலைபாடு.
நான் ஒரு முஸ்லிம். இந்தியாவில் அனைவரும் முஸ்லிம் என்றால்,
பாக்கிஸ்தானைச் சார்ந்தவன் - அங்கு போகாமல், இங்கு தங்கி விட்டானே என்ற
ஆதங்கத்தை மனதிலேந்திக் கொண்டிருப்பவர்கள் - அவர்களிடத்தில் நான் நல்ல
பெயர் வாங்க வேண்டுமென்றால், அவர்களுக்கு வெறுப்பானதன் மேல் நானும்
வெறுப்பு கொள்வேன் - அவர்களுக்கு விருப்பமானதன் பேரில் நானும் விருப்பு
கொள்வேன் - I am a conscious guy about this likes and dislikes - என்று
இயங்க ஆரம்பித்தால், அவரால் எதையும் உண்மையுடன் பார்க்கும் பக்குவத்தைப்
பெற முடியாது. ஒருவன் தன்னை மையப்படுத்தி, அதன் மூலமே தன்னைச் சுற்றியவை
அனைத்தையுமே நோக்குவேன் என்று அடம் பிடித்தால், அவன் தனக்குப்
பிடித்தமானதை மட்டுமே எழுதும் ஒரு ப்ளாக்கர் தானே தவிர, ஒரு பெரும்
வரலாற்றை, அதன் நிகழும் போக்கில் படம் பிடித்துக் காட்டும் அருகதையற்றவன்
என்றாகிவிடுவான்.

அவன் தான் விரும்பியவற்றை பெரும்பான்மை கருத்திற்கு உகந்ததாக
மையப்படுத்தும் பொழுது, உண்மைநிலையை விளிம்பு நிலைக்குக் கொண்டு
செல்கிறான் என்பது சொல்ல வேண்டியதில்லை.
தான் எழுதுவது அனைவருக்கும் பிடிக்கிறதா என ஒருவன் அச்சம் கொள்கிறான்
என்னும் பொழுதிலே, அவனது நேர்மை சந்தேகத்திற்குரியதாகி விடுகிறது.
பின்னர் எப்படி அவனது எழுத்துகளை நேசிக்க இயலும்? இங்கு இவர் எழுதுவது
ஒரு propagandaist எழுதுவதைப் போன்றது தானே தவிர, அதற்கு மேற்பட்டு
எதுவுமில்லை. ஒருவர் உண்மையைச் சொல்ல வேண்டுமென்பதற்காக, தனது
தேசபக்தியைத் துறக்க வேண்டுமென்பதில்லை.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் -

(மராட்டா) சிவாஜியை நேர்மையற்ற தளபதி என்று ஒருவர் ஒரு புத்தகம்
எழுதிவிட்டார். (பெயர் இப்பொழுது ஞாபகம் இல்லை) அது ஒரு பெரும்
சர்ச்சையைக் கிளப்பி அந்தப் புத்தகம் தடை செய்யப்படும் அளவிற்கு
சென்றுவிட்டது. தகராறு செய்தவர் - பால் தாக்கரே.

எதனால்,சிவாஜி நேர்மையற்ற தளபதி?

விருந்திற்கு அழைக்கப்பட்ட ஔரங்கசீப்பின் தளபதியை, நயவஞ்சமாக முதுகுப்
புறத்தில் குத்திக் கொன்ற சம்பவத்தை தான் குறிப்பிட்டு, ஒரு diplomatic
meetingன் போது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது கூடாது என்பது தொன்று தொட்டு
வரும் சம்பவம். ஆனால், அந்த சம்பிராயத்தைக் கடைபிடிக்காது, நயவஞ்சகமாகக்
கொலை செய்தது மிகக் கொடூரமான சம்பவம். அதிலும், அந்த சம்பவம் அவரது படை
வீரர்களால் செய்யப்படவில்லை. அவரது கையாலே செய்யப்பட்டது.

சிவாஜி செய்தது மிகப்பெரும் நம்பிக்கைத் துரோகம் - இது தான் உண்மை.
ஆனால், அந்த துரோகம் நமக்கு கொண்டாடப்படும் ஒரு வரலாறாகவும், ஒரு வீர
செயலாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. இதையே அந்த எழுத்தாளரும் எழுதி,
சிவாஜி மகாராஜாவின் வீரத்தைப் பாரீர் என சொல்லியிருந்தால், அந்த
எழுத்தாளருக்கு எந்த சிரமமும் இல்லாது போயிருந்திருக்கும். ஆனால், அவர்
ஒரு உண்மையான வரலாற்றியலாளராக இருந்திருக்க முடியாது. ஏனென்றால், இந்த
கருத்தையே வரலாறுகளை ஆய்ந்தவர்கள் கூறுவது. ஆக, பாமர விருப்பம்
என்பதற்கும், உண்மைக்குமிடையே பல சந்தர்ப்பங்களில், வேறுபாடுகள்
கண்டிப்பாகத் தோன்றிவிடுகிறது. அவர் - எழுத்தாளர் - எந்த அளவிற்கு
உண்மைக்கு அருகில் பயணிக்க விரும்புகிறார் என்பதைப் பொறுத்து, அவரது
எழுத்துகள் தனித் தன்மை அடைகிறது.

எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிய ஒற்றை நோக்குடன் ஒரு எழுத்து பயணிக்க
வேண்டும். தேவையற்ற அநாவசிய சரக்குகளை - தன்னைப் பற்றிய உயர்வான
எண்ணத்திற்கு தன் எழுத்துகள் வித்திட வேண்டும் என்பது ஒரு எழுத்தாளனுக்கு
இலக்கானால், அவனால் பேசப்படும் விஷயங்களைப் பற்றித் தான் பேச முடியுமே
தவிர, பேச இயலாதவற்றைப் பற்றிப் பேச இயலாது. உண்மையும், நேர்மையும், பேச
இயலாத விளிம்புகளில் ஒளிந்து கொண்டு விடும்.

The Shade of Swords என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.
படித்து விட்டு சொல்லுங்கள், உங்கள் எண்ணம் என்னவென்று. அறிய ஆவலாக
இருக்கிறேன்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்-

The Abbasids of Abul Abbas, .... however would not be remembered so
much for the purity of the faith as the glory of some of his heirs,
the most famous being Haroon ur Rashid (786 - 804). Actually, the
Arabian Nights are a bit of an undersell. ............ At the palace,
truth began to compete with fiction. Haroon's grandson Mutawakkil is
said to have had 4000 concubines; more impressively, he claimed to
have slept with all of them. ............ Harun might buy a ruby for
40,000 dirham; the Caliph Mustain order a rug worth 130 million dirham
for his mother. ..... (page 65)

நானும் இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கவில்லை. வாங்கி வைத்ததோடு
சரி. நீங்கள் சொன்ன பிறகு, புத்தகத்தை எடுத்து தற்செயலாகப் பிரித்த
பொழுது, அவரது எழுத்தின் லட்சணங்களைக் கண்டு சிர்ப்பதா, அழுவதா என
புரியவில்லை. Jihad and the conflict between Islam & Christianity என்று
ஒரு Caption வேறு.

இது எப்படி இருக்கிறது தெரியுமா?

மதன் எழுதிய வந்தார்கள், வென்றார்கள் படிப்பதைப் போலிருக்கிறது. வரலாற்றை
விட, வரலாற்றைப் பற்றிய புரணிகள் தான் சுவையானவை. அதனால், வரலாற்றை
மேம்போக்காகப் படித்து எழுதிவிட்டு, புரணிகளையும், வதந்திகளையும்
சுவையுடன் பக்கம் பக்கமாக எழுதினார், மதன். அக்பரும் அந்த வகையோ? அல்லது
அவரது புரிதல் குறைவானதா?

Actually, the Arabian Nights are a bit of an undersell. என்ன வகையான
விமர்சனம் இது? மேஜிக்கல் சர்ரியலிஸம் என்பதைத் தாங்களே கண்டு கொண்டதாக
ஐரோப்பிய எழுத்தாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் -
இந்தியாவின் பஞ்ச தந்திரக் கதைகளையோ, அரபிய இரவுகளையோ
வாசித்திருக்கவில்லையென்பதே உண்மை. இது இவ்வாறிருக்க, அக்பரின் விமர்சனம்
- கொச்சையாக இருக்கிறது. ஏனென்றால், அதில் வரும் சில கதாபாத்திரங்கள்,
இன்றைய தினத்தில் கூட, எல்லோராலும் எளிதாக உள்வாங்கப்பட முடியாத,
நினைத்துப் பார்க்கக் கூட முடியாத காமத்தின் உச்சத்தைத் தொட்டுச்
செல்லும். இதைத் தான் "undersell" என்கிறாரா, அக்பர்? அல்லது, அந்த
சமூகம் அப்படியொரு கேடுகெட்ட சமூகமாக இருக்கிறது என்கிறாரா?
எப்படியிருந்தாலும், அவரது அனுமானங்கள் தவறு. இஸ்லாமிய உலகமும், கலாச்சார
பெருமை மிக்க சிகரங்களைத் தொட்டிருந்தது - இலக்கிய உத்திகளைத்
தேடிப்பிடித்து வளர்த்தெடுத்தது என்பதே உண்மை. அந்த சகிப்புத் தன்மையை
இழந்ததே நமது பரிதாபம். அந்த சகிப்புத்தன்மையும், இலக்கிய வளமும்
தொடர்ந்திருக்குமானால், இன்று நம்முடைய வளர்ச்சி எங்கேயோ
போயிருந்திருக்கும். இன்று பலரும் - குறிப்பாக - இறுக்கமான மதவாதிகள்
அந்த வகை இலக்கியங்களை ஏற்றுக் கொள்வதில்லை. நாமும் அதனுள்ளேயே முடங்கிப்
போயிருக்க மாட்டோம். அதைப் போன்று அவரே குறிப்பிடுவது போல, the line
between the truth and fiction fades away என்ற வைப்பாட்டிகளின் கணக்குத்
தொகையும், கலைப் பொருட்க்ளின் மீதான முதலீடு பற்றிய குறிப்புகளும்.

இந்த எழுத்துகளின் தரத்தோடு, நான் குறிப்பிடும் மற்றொரு புத்தகத்தை
ஒப்பிட்டுப் பாருங்கள் - The struggle within Islam என்ற Dr.Rafeeque
Zakaria எழுதிய புத்தகத்தையும். வளமான சிந்தனைக்கும், ஒரு
வலைப்பதிவாளரின் மனஓட்டத்திற்கிடையுமான வித்தியாசங்கள். வதந்திகள்,
புரணிகள் இவற்றையெல்லாம் பற்றி பிரஸ்தாபிக்காமல், நேரிடையாகப் பேசிச்
சொல்கிறது. இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான - the clash within
the ruler on his function between the temporal head and the spiritual
head lead to a compromise which had never satisfied the living people
and the priest class... இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் - அரசனா,
மதத்தலைவனா என்ற குழப்பத்திற்குள் ஆள்பவரை தொடர்ந்து தடுமாற வைத்தத்ன்
மூலம் - அரச குடும்பங்களின் எழுச்சியோடும், வீழ்ச்சியோடும் இஸ்லாமியர்கள்
தங்களை முடிச்சுப் போட்டுக் கொண்டனர். மதத்தையும், அரசியலையும்
குறிப்பிடத்தக்க அளவில் பிரித்து வைத்திருப்பார்களேயானால், இரண்டும்
தனித்தனி நிறுவனங்களாக அற்புதமாக வளர்ந்திருக்கும். ஒன்று வீழ்ந்தாலும்,
மற்றது நிலை பெற்றிருக்க்கும். இந்தக் கருத்தை ஒட்டியே அவருடைய
வாதங்களும், எதிர்வாதங்களுமாக அருமையாக எழுதியிருந்தார். (இறுதி
வரையிலும் படிக்கவில்லை. இந்த வருட விடுமுறையில் படித்து முடித்து
விடுவேன். பின்பு தான் சக்கரியா அவர்கள் தனது இறுதி கருத்தாக எதை
சொல்கிறார் என்பது தெரியவரும். ஆனால் - அவர் இரு தரப்பு வாதங்களையும்
வைக்கத் தயங்கவில்லை.படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற தொனியிலே
செல்கிறது.அந்தப் புத்தக்கத்தை துபாய் எடுத்து வர எனக்குத்
தயக்கமிருக்கிறது என்பதனால் எடுத்து வரவில்லை) இது தான் என்னுடைய
கருத்தும் - இஸ்லாமிய தலைமை - மசூதியை விட்டு வெளியே வரவேண்டும் - அதுவே
உண்மையான விழிப்புணர்விற்கும், எழுச்சிக்கும் வழி வகுக்கும்.
எதற்கெடுத்தாலும் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கும் சிந்தனையாளர்களை விட,
(நீங்கள்அடிக்கடி சொல்வது போல் - ) களப்பணியாற்றும், இறுகிய மதவாதியாக
இல்லாமல், இளகிய தலைவனாக தங்களை வழி நடத்த நாம் தேட வேண்டும் என்பதே எனது
கருத்து. இன்றும் ஒரு சிறு கூட்டம் என்றால் கூட உடனே தொப்பி, ஜிப்பா
என்றெல்லாம் போட்டுக் கொண்டு, தன் பழமைத்தனத்தை அடையாளமாக அணிந்து வரும்
நண்பர்களைப் பார்க்கும் பொழுது, இதிலிருந்தெல்லாம் விடுதலை எப்போது என
மனம் ஏங்குகிறது.

நிச்சயமாக MJ Akbar மூலம் அல்ல.

அக்பரின் நடை - ஜெயலலிதாவின் வீட்டை சோதனையிட்டு அவரது செருப்புகளையும்,
புடவைகளையும் ஒளிப்பதிவு செய்து, அதைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்
கொண்ட சன் டீவியின் சீப் பப்ளிசிட்டி ஸ்டண்ட் மாதிரி இருக்கிறது.
பாருங்கள், 4000 வைப்பாட்டிகள், 130,000 திர்ஹ்ம்மிற்கு ரூபி, 100,000
திர்ஹம்மிற்கு கம்பளம் என்றெல்லாமா எழுதுவது. யாருக்கு வேண்டும் இந்த
விவரங்கள்?

தாஜ்மஹால் கட்டி செல்வழித்து விட்டானே, இவனெல்லாம் மன்னனா என்று கேட்பது
போலிருக்கிறது? (அந்த மன்னனின் பெயரை வைத்துக் கொண்டு, கலைக்கும்,
இலக்கியத்துக்கும் செலவு செய்வதைக் குறை கூறினால், கோபம் பொத்துக் கொண்டு
வருகிறது. மன்னன் தன் வசதிக்கேற்ப தாஜ்மஹால் கட்டினான். நான் என்
வசதிக்கேற்ப ஒரு நூலகம்.. இரண்டு பேருமே - ஷாஜஹான் தான்.)

விஷயம் என்னவோ, அதைப் பற்றி மட்டுமே பேசுவோம் என்றில்லாமல், ஒரு மொக்கை
எழுத்தாளன் மாதிரி, அற்ப விஷயங்களையா பேசுவது?

அல்லது,

the clashes of civilization என்ற புத்ட்தகத்தையாவது ஒரு முறை
வாசித்திருக்க வேண்டும். (ஆசிரியரின் பெயர் நாளை தருகிறேன்.) ஒவ்வொரு
கலாச்சாரமும் எவ்வாறு எப்படி பிற கலாச்சாரத்துடன் மோதுகின்றன,
உறவாடுகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் புத்தகம்.

எழுத்தாளனிடமிருந்தே எழுத்துகள் பிறந்தாலும், அவனது சுய ஆளுமைகளைக்
கடந்து செல்ல எப்பொழுது அந்த எழுத்துகளால் முடிகிறதோ, அப்ப்பொழுது
மட்டுமே அந்த எழுத்துகள் நிலைத்திருக்கும். அதனால் தான் நான் M J
Akbarஐப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அவரை a confirmed apologist என்று
குறிப்பிடுகிறேன். தன்னை பிற முஸ்லிம்களிடமிருந்து விலக்கி தனித்தவனாக
அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காக, உண்மைகளை விட, நம்பிக்கைகளை
நேசிப்பவனை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும், சொல்லுங்கள்??

ஆசாத்

unread,
Nov 16, 2008, 9:23:55 AM11/16/08
to பண்புடன்
இனிய நண்பன்,

சார்பாக இருப்பதும் சார்பாகச் சிந்திப்பதும் தவறில்லை என்பதை ஏற்பவன்
நான்.

எல்லாரும் நடுவுநிலையாக உண்மையை மட்டுமே பேசவேண்டும் உண்மையாக
இயங்கவேண்டும் என்றால் குமுகாயம் குழப்பமாகிவிடும். ஏனெனில்,
சார்புநிலையில் இருக்கும்போது அதனை வெளிப்படுத்திய பின் நிகழும்
விளைவுகளை எதிர்கொள்ள மனோபலமும், இன்ன பிற பலங்களும் தேவைப்படும்.
வேகமாகப் பேசினாலும் விவேகமான அணுகுமுறையில் சார்ந்திருக்கும்
சமூகத்தின் / நாட்டின் / கொள்கையின் நலனுக்காகவும் சுயநலனுக்காகவும் சில
நேரங்களில் சில விடயங்களைப் பேசாமல் இருப்பதே நல்லது. கொள்கையின்
அடிப்படையில் ஒன்றை ஆதரிக்கத் துவங்கியபின் அந்தத் தரப்பின் சாதகங்களை
உயர்த்திக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. இதைத்தான் நாம் எல்லாரும்
செய்துகொண்டிருக்கிறோம், எம்.ஜே.அக்பரும் செய்கிறார்.

எனது பார்வையில் காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கி அவர் எழுதுவது அவரது
நிலைபாடு, ஏற்பதும் ஏற்காததும் நமது விருப்பம். நான் அவரது சில
கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன்.

இப்போது ஷேட்ஸ் ஆப் ஸ்வார்ட்ஸில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள்
குறித்து.

> விஷயம் என்னவோ, அதைப் பற்றி மட்டுமே பேசுவோம் என்றில்லாமல், ஒரு மொக்கை
> எழுத்தாளன் மாதிரி, அற்ப விஷயங்களையா பேசுவது?

1.
பகதூர் ஷா ஸஃபரின் 'ஆறடி நிலமும் இல்லா' கஸலை மொழிபெயர்க்கும்போது கடைசி
மொகலாய மன்னரின் நிலை இப்படியா அடக்கம் செய்யக்கூட இடமின்றி
நாடுகடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால்,

த லாஸ்ட் மொக்ஹலின் சில பக்கங்களைப் புரட்டியபோது, பகதூர் ஷாவுடன்
நாடுகடத்தப்பட்ட பட்டாளங்கள் பரிவாரங்களைப் படிக்கையில்
நடுநிலையாளர்களையும் 'என்னய்யா இது இத்தனை வசதி தந்து கடத்தப்படுவதற்குப்
பெயர் நாடுகடத்தலா?' என்று கேட்கத் தூண்டும்.

அதாவது, எம்.ஜே.அக்பர் சொல்லியதற்கு இணையாக அங்கே பகதூருடன் சென்ற
பரிவாரங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார், ஆசிரியர் வில்லியம்.

இதுவும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லும் மதன் வந்தார்கள் வென்றார்களுக்கு
இணையானதுதான்.

2.
பிரீடம் அட் மிட் நைட் உங்களிடம் இருக்கிறதல்லவா, அதில் காஷ்மீரத்தை
விட்டு மன்னர் புறப்படும்போது பரிவாரங்கள் அவருடன் சென்ற சித்தரிப்பு
இருக்கும் பாருங்களேன், அதுவும் இதைப் போன்றதுதான்.

3.
(சத்தியமாக பெயரை எழுதமாட்டேன் :-))) பயந்தாங்கொள்ளி, அடிவருடி,
முதுகெலும்பில்லாதவன், உண்மையைப் பேசத் தயங்குபவன்...என்ன சொன்னாலும்
சல்தாஹைஜீ :-))) )

ஒரு தலைவர் சிகிச்சைக்காகச் சென்றிருந்தபோது அவருடன் இருந்த
பரிவாரங்களைப் பட்டியல் இட்டது ஒரு பத்திரிகை. இவரென்ன சிகிச்சைக்குச்
சென்றாரா இல்லை இன்பச் சுற்றுலாவுக்கா என கேட்கத் தோன்றும். இதுவும்
நீங்கள் சொல்லிய வகையைச் சேர்ந்ததுதான்.

ஆக, எனது நிலைபாடு என்னெவென்றால், எதை வேண்டுமானாலும் பேசும் உரிமை
அவருக்கு இருக்கிறது. நமது பார்வை, பயிற்சி, கொள்கை இவற்றுக்கேற்ப அதனை
ஏற்பதும் ஏற்காததும் நமது விருப்பம்.

*

நண்பன்,

நான் விரும்பி வாசித்த இன்ன்னொரு பத்தியின் ஆசிரியர் குல்தீப் நய்யார்.
இந்தோ-பாக் உறவுகள் குறித்த இவரது பத்திகள் சில என்னிடம் சென்னையில்
இருக்கும், அரப் ந்யூஸில் வெளியானதன் வெட்டுகள். அவர்தான் (அநேகமாக சண்டே
இதழில் - 1982ஆக இருக்கலாம்) தனது COMMUNALISM என்னும் கட்டுரையில்
'இதுவரையில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் உயிரழந்தோர் எண்ணிக்கை
சிறுபான்மையினர் பகுதியிலிருந்தே அதிகம்' என்று எழுதி சேதாரத்தின்
பட்டியலையும் இணைத்திருந்தார்.

அப்பொழுதெல்லாம் நான்(ம்) நினைத்தேனா(மா) இந்தியா இன்னும் ரத்தக்களரியில்
மூழ்கும் என்று?

நல்ல பத்திரிகையாளர்களைப் படிக்கும் நேரமும் வயதும் மனமும்
வாய்ப்பதற்குக் கொடுத்துவைக்கவேண்டும்

நண்பன்

unread,
Nov 17, 2008, 2:33:01 PM11/17/08
to பண்புடன்
அன்பின் ஆசாத்,

ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கும். ஒரு குறிக்கோள்
இருக்கும். The Last Mughal - by William Dalrympleன் நோக்கம் என்ன?
வரலாற்றின் ஒரு துளியை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம்
மட்டும் தானா?

இன்றளவும் பிரம்மாண்டம் என்றால், அதன் குறியீடாக எழுதப்படுவது - Mughal
என்று தானே? அந்தப் பிரம்மாண்டத்தின் அந்திம காலம் எத்தனை குறுகியதாக,
பெருமையிழந்து போனது என்பதைக் குறிப்பிடாமல், எப்படி கடைசி மொகலின்
காலத்தின் அவலத்தை அவர் எழுதி இருக்க முடியும்? முரண்களால் அமையப் பெற்ற
வாழ்வை - துல்லியமாக எழுதுவதன் மூலம் தானே? கடைசி முகலின் காலத்தின்
அவலம் - அவருடன் சென்ற படைபட்டாளாங்களைக் கொண்டு தான் காட்டப் பெறும்.
அக்பர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கிளம்பினால், அது ஒரு
படையெடுப்பைப் போன்றிருக்கும் என்ற ஆராவரத்தை ஒரு சிறு கும்பலுடன்
கிளம்பிப் போன பகதூர் ஷாவின் நிலைமைய எப்படி தெளிவுபடுத்துவது?

என்றாலும், அவர் மரணித்ததும் என்ன நிகழ்ந்தது? எப்படி புதைக்கப்பட்டார்?
உலகில் வேறெவராலும் நிகராக சொல்லமுடியாத பிரம்மாண்டங்களின் ஸ்தாபகர்களான
Mughal மன்னர்களின் கடைசி வாரிசு ஒரு அநாதையைப் போலத்தானே
புதைக்கப்பட்டார்?

“He expired at 5 o’clock on the morning of the funeral. The death of
the ex-King may be said to have had no effect on the Mohamedan part of
the populace of Rangoon, except perhaps for a few fanatics who watch
and pray for the final triumph of Islam. A bamboo fence surrounds the
grave for considerable distance, and by the time the fence is worn
out, the grass will again have properly covered the spot, and no
vestige would remain to distinguish where the last of the Great
Mughuls rests”

இப்படியாகத் தான் கடைசி மன்னரின் முடிவு அமைந்திருந்தது. அதாவது அவருடன்
சென்ற படை, பரிவாரங்கள் எங்கே? அதுவே ஒரு கண்துடைப்பாகக் கூட
இருந்திருக்கலாம். ஒரு மன்னருக்குரிய மரியாதையைத் தந்து தான் நாடு
கடத்துகிறோம் என்ற மரபு சார்ந்த சம்பிராதாயங்களை ஒரு கண் துடைப்பாக
நிகழ்த்திக் காட்டியது - பிரிட்டிஷ் அரசு. இதுவும் கூட அவருடன் சென்ற
படைபரிவாரங்களைக் குறித்து எழுத, பதிவு செய்யத் தூண்டியிருந்திருக்கும்.
அதனால், தால்ரிம்ப்ளே எழுதியது வரலாற்றையொட்டி, நிகழ்ந்த தேவையான
சம்பவங்களாகத் தான் இருக்கின்றது.

// த லாஸ்ட் மொக்ஹலின் சில பக்கங்களைப் புரட்டியபோது, பகதூர் ஷாவுடன்
நாடுகடத்தப்பட்ட பட்டாளங்கள் பரிவாரங்களைப் படிக்கையில்
நடுநிலையாளர்களையும் 'என்னய்யா இது இத்தனை வசதி தந்து
கடத்தப்படுவதற்குப்
பெயர் நாடுகடத்தலா?' என்று கேட்கத் தூண்டும். //

அது போலவே, காஷ்மீர மன்னரின் வெளியேற்றமும். இவையெல்லாம் -
வெளியேற்றப்படுபவர்கள் மிகவும் மரியாதையாக, கண்ணியமாக நடத்தப்பட்டனர்
என்று வரலாற்றில் தங்களை பதிவு செய்து கொள்ள, ஆட்சியாளார்கள் செய்யும்
ஒரு சூழ்ச்சி தானே தவிர வேறில்லை. இந்த அரசியல் சூழ்ச்சிகள் எழுதப்படத்
தான் செய்கின்றன. அதன் உண்மை நிலை என்ன என்று தொடர்ந்து சென்று பார்த்து
எழுதுபவர்கள், அதை வெளிக் கொணரத் தான் செய்கிறார்கள்.

ஆனால், வரலாற்றிற்குத் தேவைப்படாதவற்றை உட்கார்ந்து பிரஸ்தாபித்துக்
கொண்டிருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று சொல்லுங்களேன் என்பது தான்
எனது கேள்வி. பாருங்கள், மதன் எழுதிய ஒரு தகவல்: (நினைவிலிருந்து
எழுதுகிறேன் என்பதால், வார்த்தைகள் என்னுடையது) அந்தக் கைதி, இரண்டாவது
தளத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டான். சாகவில்லை. மீண்டும் தூக்கி
செல்லப்பட்டான் இரண்டாவது தளத்திற்கு. அங்கிருந்து தூக்கி எறியப்பட்டான்
மீண்டும். இவ்வாறு சாகும் வரை அவன் தூக்கியெறியப்பட்டான். மன்னரும், மற்ற
அவையினரும், அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த விவரங்கள் எந்த விதத்தில் ஒரு வரலாற்றில் பொருந்திப் போகிறது என்று
எனக்குத் தெரியவில்லை. அக்பரைப் பற்றிய ஒரு படத்தை நமக்கு sketch
செய்கிறாரா, அல்லது அவரது வெற்றிப்பாதை இந்த வகையில் தான் அமைக்கப்பட்டதா
- எதை சொல்ல முனைகிறார்? அல்லது அக்பரின் குணம் இத்தகையது தான் என
வரையிறுக்கிறாரா?

நண்பன்

unread,
Nov 17, 2008, 2:51:04 PM11/17/08
to பண்புடன்
அன்பின் ஆசாத்,

எந்த ஒரு மனிதனும் சார்பு நிலைகளற்று, புனிதனாக இருக்க வேண்டும் என்று
எதிர்பார்க்க முடியாது தான். ஆனால், அதற்காக, தெரிந்தே தவறான தகவல்களைப்
பிரச்சாரத்தின் மூலம் உண்மையாக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள
வேண்டுமென்பதில்லையே?

ஒரு அரசியல்வாதியின் நிலைபாட்டைக் குறித்த கருத்துகள் இல்லையே இவை! ஒரு
பத்திரிக்கையாளர், மக்களுக்கு உண்மை தகவலை - அல்லது குறைந்தபட்சம் தான்
அறிந்த உண்மையையாவது பேசலாமில்லையா?

தவறான தகவல்களைக் கொண்டு, அது சிலருக்கு நன்மை பயக்கிறது என்று சொன்னால்,
அதன் மூலம் பாதிக்கப்படுகிறவருக்கு என்ன சமதானம் செய்யப் போகிறார்கள்?
'இஸ்லாமியர்கள் பிரிவினைவாதிகள்' என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து
தீவிரமாக பிரச்சாரம் செய்யப்படுகையில், அதை வலுப்படுத்தும் விதமாக,
சார்பு நிலை எடுப்பது எந்த விதத்தில் நியாயம்? அதை மறுப்பது தேசவிரோதம்
ஆகிவிடுமா, என்ன? இன்னும் சொல்லப்போனால், அது அவ்வாறில்லை என நிரூபிக்கத்
தக்க உண்மை விவரங்கள் இருந்தால், அதை வெளியிடுவது தானே உத்தமம்? சிலவற்றை
பேசாமல் இருப்பது தான் உத்தமம் என்று இங்கு மூடி வைத்தால், அதைப் போன்ற
அபத்தம் எதுவுமிருக்காது.

சார்பு நிலைகள் ஒரூ தனி மனித கருத்தாக இருக்கும் வரையில் அதனால்
பாதகமில்லை தான். ஆனால், அதுவே பொதுக்கருத்தாக வெளிப்டுத்தப்படும் பொழுது
பாதகம் தான். அதனால், அந்த சார்பு நிலை கருத்துகளின் மீது மௌனம் காத்தல்
என்பதே நன்மை பயக்கும்.

உண்மைகள் கசப்பானவை தான். ஆனால், அதை பேசித் தான் தீர வேண்டுமென்றால்,
பேசுவதில் தவறில்லை.

ஆசாத்

unread,
Nov 17, 2008, 11:29:51 PM11/17/08
to பண்புடன்
இனிய நண்பன்,

சார்புநிலை இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் (நீங்களும் நானும்)
மறுக்கவில்லை. இஸ்லாமியர்கள் பிரிவினைவாதிகள் என்பதற்கு வலு சேர்க்கும்
விதமாக ஷேட்ஸ் ஆப் ஸ்வார்ட்ஸ் செல்கிறதென்று சொல்ல வந்தீர்களென்றாலும்,
எம்.ஜே.அக்பரின் எழுத்துகளும் அப்படித்தான் செல்கின்றன என்று சொல்ல
வந்தீர்களென்றாலும் அது உங்கள் பார்வை. அதற்கான ஆதாரங்கள உங்களால் தர
இயலும்.

ஒற்றை வரியாக அதனைப் பிடித்துக்கொண்டு அதனை மறுத்து இஸ்லாம்யர்கள் பேசிய
பிரிவினைவாதங்களைத் திரட்டி இஸ்லாமியர்கள் பிரிவினைவாதிகளே என்னும்
வாதத்தையும் முன்வைக்க இயலும்.

இடையில் இஸ்லாமியர் மட்டும்தான் பிரிவினைவாதம் பேசிகிறாரா என உலகில்
நடக்கும் எல்லா பிரிவினை தொடர்பானவைகளையும் பட்டியலிட்டு அங்கே
நடப்பதையும் இங்கே நடப்பதையும் சுட்டிக்காட்டி இஸ்லாமியர் மட்டுமே
பிரிவினையையை விரும்புவதில்லை எல்லா குமுகாயங்களும் பிரிவினை
விரும்பிகள்தான் எனப் பேச முடியாதா? முடியும்.

அதனால் இதனை அப்படியே விட்டுவிடுகிறேன்.

மீண்டும் ஷேட்ஸ் ஆப் ஸ்வார்ட்ஸிற்கு :-)

முடிந்தால் வியாழனன்று அதிவிலை உணவுவிடுதிக்குச் சென்று இரண்டு மூன்று
மணிநேரத்தில் ஒருவார உணவிற்கான பணத்தை செலவு செய்யாமல் :-) ஏதாவது
மலையாளி காக்கா கடையில் சட்டுபுட்டென சிக்கன் சுக்கா பரோட்டாவை பத்து
நிமிடத்தில் அடித்துவிட்டு :-) ஷேட்ஸ் ஆப் ஸ்வார்ட்சுடன் உங்கள் அறையில்
உட்காரலாம். ஜியோனிசம் பற்றியும் அவர்களின் தீவிரவாதம் பற்றியும் அதில்
எழுதப்பட்டிருப்பதாக நினைவுக்கீற்று, அது சரிதானா எனப்
பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை எனது நினைவுக்கீற்று தவறென்றால் நான்
படித்தது எந்தப் புத்தகத்தில் என நினைவுகூறவேண்டும்.

ஜமாலன்

unread,
Nov 18, 2008, 1:02:49 AM11/18/08
to panb...@googlegroups.com
நண்பன் முன்வைக்கும் இக்கருத்துக்கள் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தவை. இங்கு மற்றொன்றையும் நினைவுட்டிக் கொள்வது நல்லது.  இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர் வீர் சாவர்க்கரும்தான். இதில் இன்னும் ஆச்சர்யமான விஷயம்.. ஜின்னா மற்றும் சாவர்க்கர் மற்றும் நேரு அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திகத்தை தங்கள் உலகப் பார்வையாகக் கொண்டவர்கள். ஆனால், மதச்சார்பற்றவர்கள் இல்லை என்பது முக்கியம். கடவுளுக்கு மதம் தேவையில்லை. மதங்களுக்குத்தான் கடவுள் தேவை. கடவுளின் நிலை என்பது  நம்பி ஓட்டுபொறுக்க அரசியல்வாதி சினிமா நடிகனின் கவர்ச்சியைப் போன்றது. மதம் மக்களிடம் ஒரு நம்பிக்கையாக பரவியுள்ளதால் அதனை தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக சாதுக்கள் துவங்கி முல்லாக்கள் வரை பயன்படுத்தகின்றனர் என்பது முக்கியம். 

அதேநேரத்தில் மௌலானாவின் பிறந்த தினத்தை தேசியதினமாக அறிவிக்கப்படும்போது அதிலிருந்து அவரது கல்வி இன்னபிற வரலாற்று நிழ்வுகள் நினைவுக் கூறப்படும். ஒருவகை வரலாற்று மீள்நினைவு. 

அதேநேரத்தில் தேசியத்தலைவர்கள் சாதிய மதத் தலைவராகவும் சாதிய மதத்தலைவர்கள் தேசியத்தலைவர்களாகவும் மாறும் அவலம் என்பது இன்றைய இந்திய ஆளும் கருத்தியலுடன் உறவு கொண்டதாக உள்ளது. அதனால் தேசிய தலைவரான ஆசாத்தை.. ஒரு மதம்சார்ந்தவராக இஸ்லாமியர்கள் கொண்டாடும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதுதான் கசப்பான உண்மை.

அன்புடன்
ஜமாலன்.

2008/11/14 நண்பன் <nan...@gmail.com>

ஆசாத்

unread,
Nov 18, 2008, 4:44:14 AM11/18/08
to பண்புடன்
இனிய ஜமாலன்,

> அதனால் தேசிய தலைவரான ஆசாத்தை.. ஒரு மதம்சார்ந்தவராக
> இஸ்லாமியர்கள் கொண்டாடும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதுதான்
> கசப்பான உண்மை.

இதையேதான் நானும் இந்த இழையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

>> இஸ்லாமியன், இந்து, சீக்கியன், கிறிஸ்தவன் என்றெல்லாம் அடையாளமிட்டு
>> தேசப் பணியை அணுகவேண்டுமா என பலநேரங்களில் நினைப்பதுண்டு, ஆனாலும்,
>> அடையாளமிட்டு பிளவு உண்டாக்கும் அணுகுமுறைகளின் இடையே வாழ்வதற்காக நான்
>> பிரிவினைவாதியல்ல என்று சொல்லிக்கொள்ளவேனும் அப்படி அடையாளத்தை
>> முன்னிறுத்தி தேசப் பணியை அணுகவேண்டிய நிலைக்கு ஆளாகியிருப்பது
>> அபாக்கியமே...சல்தாஹை.

இனி ஜின்னா குறித்து:

சில பாக்கிஸ்தானியர்கள் சொல்வார்கள், 'நேற்றுவரையில் மொஹாமடர்ரசூலுல்லா
என்று சொன்னவரெல்லாம் இஸ்லாமிக் ரிப்பப்ளிக் ஆப் பாக்கிஸ்தானின்
தலைவரானார்' [மொஹாமடர்ரசூலுல்லா - முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்]. ஜின்னாவின்
கனவு இஸ்லாமிய நாடு என்பது வரையில் மட்டுமே நிற்கவில்லை. பெருவாரியான
இஸ்லாமிய மக்கட்தொகையைக் கொண்டிருப்பதால் அரபுலகில் தனக்கு அங்கீகாரம்
கிடைத்துவிடும் என்பதும் அவரது கிளைக்கனவு என சிலர் வாதிடக்
கேட்டிருக்கிறேன். அந்தக் கோணத்தில் ஜின்னாவின் பிரிவினைக்கான பின்னணியை
அணுகினாலும் அதற்கான அடிப்படைகள் விரிகின்றன. பாக்கிஸ்தானிய வரலாற்றில்
பாக்கிஸ்தானின் தந்தை என்று ஜின்னா சொல்லப்பட்டாலுமே, வழக்குரைஞர்
ரஹமத்துல்லாஹ்தான் 1930களில் அதற்கான வித்தினை விதைத்தார் என்பதிலும்
பாக்கிஸ்தானியர் தெளிவாகவே இருக்கின்றனர்.
Reply all
Reply to author
Forward
0 new messages