இன்று மொஹம்மத் ரஃபியின் பிறந்தநாள்

11 views
Skip to first unread message

ஆசாத்

unread,
Dec 23, 2008, 4:42:13 PM12/23/08
to பண்புடன்
சில சாதனையாளர்களை நினைக்கும்போது ஏற்படும் பிரமிப்பு தவிர்க்க
முடியாததாகிவிடுகின்றது. கட்டுடைப்பு, கேள்விக்குறியது, இன்னொரு முகம்
இத்தியாதிகளிலெல்லாம் மனதைச் செலுத்தாமல் ரசிகனாக மட்டுமே தன்னை
வரித்துக்கொண்டு சாதனையாளர்களை அணுகிப் பார்க்கும் என்போன்றோர் இப்படிப்
பிரமிப்பில் மூழ்குவது அதிசயமான நிகழ்வல்ல. அப்படியான ஒரு பிரமிப்பில்
என்னை அடிக்கடி ஆழ்த்துபவர் மொஹம்மத் ரஃபி. இன்று (24.12.2008) அவரது
பிறந்த நாள்.

எத்தனை பாடல்கள் ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்கில் திரைப் பாடல்கள்,
நாற்பதாண்டுகால திரைப்பயணம், எத்தனை விதமான பாடல்கள். சோகமே உருவான
பாத்திரங்களுக்கும், துள்ளிக் குதிக்கும் பாத்திரங்களுக்கும், நடனமாடும்
பாத்திரங்களுக்கும், மென்மையான உணர்வை வெளிப்படுத்தும்
பாத்திரங்களுக்கும், சாஸ்த்ரிய சங்கீதம் இசைக்கும் பாத்திரங்களுக்கும் என
திரையிசையில் எத்தனை உணர்வுகள் உள்ளனவோ அனைத்து உணர்வுகளைப்
பிரதிபலிக்கும் பாடல்களுக்கும் தனது பங்களிப்பைச் செய்திருப்பவர்,
மொஹம்மத் ரஃபி.

மர்ஹூம் (காலஞ்சென்ற) மொஹம்மத் ரஃபி குறித்து பேசும்போது நண்பர்
இரா.முருகன் அவர்கள் கட்டாயம் ஒரு பாடலைக் குறிப்பிடுவார். இந்தித்
திரையிசையில் இது ஒரு முக்கியமான பாடல் என்றும் சொல்வார். பைஜு பாவ்ரா
படத்தில் இடம்பெற்ற 'மன் தரப்பத்து ஹரி தர்ஷன்கோ ஆஜ்'. தம்பூராவின்
சுருதியுடன் ரஃபியின் குரலில் 'ஹரி ஓம்' என்ற அதிர்வுடன் துவங்கும்
இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நவ்ஷாத், எழுதியவர் ஷகீல் பதாயுனி,
பாடியவர் மொஹம்மத் ரஃபி. இது பஜன் வகைப் பாடல் என சொல்லக்
கேள்விப்பட்டதுண்டு இந்தப் பாடலைக் கேட்க இந்தி, சமஸ்கிருதம், உருது
எதுவும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே கிடையாது, இசையை ரசிக்கும் மனம்
மட்டுமே இப்பாடலில் மூழ்க போதுமானதாக இருக்கும். பாடலில் பங்கேற்றோர்
பெயர்களையும் பாடலின் தன்மையையும் நோக்கினாலே நண்பர் இரா.மு. அவர்கள்
எதற்காக இந்தப் பாடலைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

பைஜு பாவ்ராவில் இடம்பெற்ற இன்னொரு பாடலான 'ஓ துனியாகே ரக்வாலே' பாடலை
நேருஜியவர்கள் சிலாகித்துப் பேசியதாக சில செவிவழிச்செய்திகளைக்
கேட்டிருக்கிறேன். ரஃபி சாஹேபின் நினைவாக என்னும் அறிவிப்புடன் நாகூர்
ஹனீபா தனது மேடைக்கசேரியில் இந்தப் பாடலைப் பாடியதை திருவல்லிக்கேணி
நாள்களில் கேட்டிருக்கிறேன்.

திருவல்லிக்கேணி வளர்ப்பில் இந்தித்திரையிசையில் மனம் லயிப்பதற்கு
முன்னமே ரஃபியின் பாடல்களைக் கேட்கவேண்டிய கட்டாயம். யாதோங்கி பாராத்தின்
'சுராலியாஹை'வாகட்டும், தரம் வீரின் 'ஓ மேரி மெஹ்பூபா'வாகட்டும் மாணவப்
பருவத்தில் அவரது பாடல்களை முணுமுணுக்கத் தவறவில்லை. ஓரளவிற்கு நினைவு
தெரிந்து இந்தித்திரையிசையின்பால் அடிக்கடி ஒதுங்கியபோது 'ஸிந்தகி யே
பேவஃபா ஹை ஏக் தின் டுக்ராயேகி' என முக்கத்தர் கா சிக்கந்தரில் ஒலித்த
ரஃபி சாஹேபின் குரல் ஈர்த்தது. அந்த வரிகளை உற்சாகமாக ஒலிக்கையில் கிஷோர்
சாஹேபும் சோகமாக ஒலிக்கையில் ரஃபிசாஹேபும் பாடியிருப்பார்கள். பின்னாளில்
செவிவழிச் செய்தியாக அந்த சோகமான ஒலிப்பிற்கும் கிஷோரே பாடியதாகவும்,
பிறகு ரஃபி பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் நினைத்து ரஃபியைப்
பாடவைத்ததாகவும் யாரோ சொன்னார்கள். இதைப் போன்ற ஆதாரமற்ற
உவந்தேத்தல்களுக்கு அத்தனை முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்பதே எனது
பார்வை.

நம்மையறியாமல் சில சின்னச்சின்ன சந்தோஷங்கள் உண்டாவதுண்டு. ரங்குதே
பஸந்தியில் ஒருகாட்சியில் இடம்பெறும் விடுதலை வேட்கைக் கவிதையை எழுதியவர்
விடுதலைப் போராட்ட வீரரான ராம் ப்ரஸாத் பிஸ்மில். 'சர்ஃபரோஷிகி தமன்னா
அப் ஹமாரி தில்மே ஹைன்' என்னும் அந்தக் கவிதையை மொழிபெயர்த்தபோது அதனை
ரஃபியவர்கள் இந்தித் திரையில் பாடியிருக்கிறார் என்னும் விவரம் எனக்குத்
தெரிந்திருக்கவில்லை. பிறகு இணையத்தில் சர்ஃபரோஷியைத்
தேடிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக ரஃபி பாடிய பாடல் கேட்கக் கிடைத்தபோது
மேற்சொன்ன சின்னச்சின்ன சந்தோஷம் உண்டானது. ரங்குதே பஸந்தியில் அந்தக்
கவிதையை குல்கர்னி சொல்லிக்காட்டிய உணர்வும், ஷஹீத் படத்தில் ரஃபியின்
குரலில் பாடலில் ஒலித்த உணர்வும் மாறுபட்டதாக இருக்கின்றன. சில
நேரங்களில் 'எப்படி இப்படி' என ஒலிக்கும் கேள்வி ஷஹீத் பாடலைக்
கேட்டபோதும் ஒலித்தது.

தமிழில் 'என்று தணியும் இந்த சுதந்திரதாகம்' கவிதையைப் படிக்கும்போது
ஏற்பட்ட உணர்வும், அதே கவிதையை திரையிசைப் பாடலாகக் கேட்டபோது ஏற்பட்ட
உணர்வும் எனக்கு வெவ்வேறாக இருந்தன. அதைப் போன்ற வெவ்வேறு
உணர்வுகளைத்தான் சர்ஃபரோஷிகி தமன்னாவை குல்கர்னி சொல்லக்கேட்டபோது ஒரு
அதிர்வும் ரஃபியின் குரலில் பாடலாகக் கேட்டபோது இன்னொரு அதிர்வுமாக
இரண்டு மாறுபட்ட சூழல்களை உணர்ந்தேன். இரண்டு பாடல்களுமே படிக்கச்
சொல்லிக் கேட்கையில் பொங்கும் உணர்வுமாக பாடலாகக் கேட்கையில் கொஞ்சம்
சோகம் கல்ந்தாற்போன்ற உணர்வுமாக மாற்றத்தைக் காட்டக்கூடியவகையில்
இருக்கின்றன.

ட்ரம்பெட் ஒலியுடன் மேலைப்பாணியில் கடகடவென ஓடும் 'ஆஜ் கல் தேரே மேரே
யார்கி சர்ச்சே ஹர் ஸபான் பர்' பாடலாகட்டும், அதே ஷம்மி கபூரின்
'யாஆஆஹூஊஊ சாஹே கோயி முஜே ஜங்லீ கஹே'யாகட்டும், அமைதியாக உறங்கும்
காதலியைப் பார்த்துக்கொண்டே பாடும் 'சவ்துவீன்கா சாந்த்' பாடலாகட்டும்,
நகைச்சுவை நடிகர் ஜானிவாக்கருக்காகப் பாடிய பாடலான 'ஹை தில் ஹை முஷ்கில்
ஜீனா யஹான் ஸரா கட்கே ஸரா பச்கே யே ஹை பம்பை மேரி ஜான்'ஆகட்டும்,
கவ்வாலியை நகைச்சுவையாக்கி ரிஷிகபூருக்காக அவர் பாடிய 'பர்தா ஹை பர்தா
ஹை'யாகட்டும், இன்னும் அப்துல்லாவின் 'மைனா பூச்சா சாந்த் ஸே கே தேக்கா
ஹை கோயி மேரே ப்யாரு கா ஹஸீன்'ஆகட்டும், இப்படி சொல்லிக்கொண்டே
செல்லலாம்.

இன்று இணையதளங்களில் ரஃபி குறித்த நினைவுகளை ரசிகர்கள்
பகிர்ந்துகொள்வதைப் படிக்கவேண்டுமென நினைத்துக்கொள்கிறேன். ரஃபியின்
பிறந்ததினமான இன்றைய தினத்தை தேசீய ஒருங்கிணைவுத்தினமாகக்
கொண்டாடவிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மும்பையில்
ரஃபி இல்லத்தில் காலை பதினோரு மணியிலிருந்து நிகழ்ச்சிகள்
துவங்கவிருக்கின்றனவாம்.

ரஃபி பெயரைக் குறிப்பிடும் காட்சியை 'மும்பை மேரி ஜான்' திரைப்படத்தில்
கண்டேன். கதாபாத்திரத்தில் (கேகே) ஒருவருக்கு முஸ்லிம்கள் என்றால்
ஒவ்வாமை. அவர்கள் இந்தியாவில் தீவிரவாதம் செய்யவே பிறப்பெடுத்திருப்பதான
முன்முடிவுடன் முஸ்லிம்களை அணுகுகின்றார். குண்டுவெடிப்பில் ஒரு முஸ்லிம்
இளைஞனுக்குத் தொடர்பு இருக்குமோ என்னும் சந்தேகத்தில் அவன் வீட்டைத் தேடி
முஸ்லிம்கள் வாழும் பகுதிக்குச் செல்கிறார். அங்கே ரஃபி பாடல்
ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்பொழுது கூட வந்த நண்பர் 'ரஃபி பாடல்' என்று
சொல்லும்போது, கேகே, "பாத்தியா இவனுங்க கிஷோர் பாட்டு கேக்க
மாட்டானுங்களே" என்பார். பிறகு படத்தின் முடிவில் அவர் முஸ்லிம்களுடன்
நண்பராவது சினிமாத்தனமா இல்லையா என்பது அவரவர் பார்வை. இங்கே சொல்ல
விழைவது என்னவென்றால், இந்து - முஸ்லிம் வேறுபாட்டை சொல்லிக்காட்ட
(ஒருமைப்பட) ரஃபியின் பாடலும் உதவியிருக்கின்றது, இந்த இடத்தில் கொஞ்சம்
மேலே சென்று மூன்றாவது பத்தியைப் படிக்கவேண்டுகிறேன்.

sadayan sabu

unread,
Dec 23, 2008, 10:46:26 PM12/23/08
to panb...@googlegroups.com
ஜீ
 
இவ்வளவு விலாவாரியாக ரஃபி அவர்களின் தகவல் தந்தமைக்கு நன்றி. ரஃபியின் ஆங்கிலப் பாடலை விட்டுவிட்டீர்களே:-)
 
பஹாரோ பூல் பர்ஸாவோ
மேரா மெஹ்பூப்
 
பாடலை ரஃபி அவர்கள் ஆங்கிலத்திலும் பாடியிருக்கிறார்கள். ஷ்ரதாஞ்சலி எனும் ஒளிபரப்பில் அமீன் சயானி அவர்கள் ரஃபிக்கு அளித்த அஞ்சலி மறக்க முடியாதது.

 
On 12/24/08, ஆசாத் <banu...@gmail.com> wrote:
ரஃபி பெயரைக் குறிப்பிடும் காட்சியை 'மும்பை மேரி ஜான்' திரைப்படத்தில்
கண்டேன்.
 
 
 

அன்புடன்
சாபு

ஆசாத்

unread,
Dec 23, 2008, 11:35:11 PM12/23/08
to பண்புடன்
> பஹாரோ(ன்) பூல் பர்ஸாவோ

> மேரா மெஹ்பூப்

நந்தவனங்களே பூத்துக்குலுங்குங்கள்
எனது பிரியமானவள் வந்திருக்கிறாள்

:-)


sadayan sabu

unread,
Dec 23, 2008, 11:46:00 PM12/23/08
to panb...@googlegroups.com

ஏனுங்க கஞ்சத்தனம்
முழுமையாகவே
தந்திருக்கலாம்
 
On 12/24/08, ஆசாத் <banu...@gmail.com> wrote:
--

Asif Meeran AJ

unread,
Dec 25, 2008, 1:34:33 AM12/25/08
to panb...@googlegroups.com
அழகான பதிவு ஆசாத்ஜி!
சில நினைவுகள் சில உருவங்கள் சில ஆளுமைகள் தவிர்க்க முடியாதவை
-தன்னைத்தானே ஆளுமைகளாகப் பறைசாற்றிக் கொள்ளும் கழிசடைகளைத் தவிர.

ரஃபியை ரசிப்பதற்கு முன்னால் எனக்கு கிஷோர்தான் அறிமுகம்
கல்லூரி நாட்களில்தான் ரஃபி அறிமுகம். அதன் பிந் ரஃபியிலேயே விழுந்தேன் இன்னமும் எழ முடியவில்லை

பாடல் வரி புரியாமலேயே முணுமுணுக்க வைத்த ரஃபிக்கு அஞ்சலிகள்

நேற்றைய தினம் மக்கள் திலகத்தின் நினைவு நாளும் கூட
அவரை மறந்த உங்களுக்கு என்ன தண்டனை தரலாமென யோசித்துக் கொன்டிருக்கிறேன்

sadayan sabu

unread,
Dec 25, 2008, 1:38:42 AM12/25/08
to panb...@googlegroups.com
ஓய்..
 
என்ன புளி போட்டு விளக்கினால் நீர் விளங்குவீர் ;-))
 
On 12/25/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:

நேற்றைய தினம் மக்கள் திலகத்தின் நினைவு நாளும் கூட
அவரை மறந்த உங்களுக்கு என்ன தண்டனை தரலாமென யோசித்துக் கொன்டிருக்கிறேன்
 

Asif Meeran AJ

unread,
Dec 25, 2008, 1:41:08 AM12/25/08
to panb...@googlegroups.com
ஆசாத் அண்ணனைப் புளி போட்டு விளக்க வேன்டிய நிலையில் அவர் இல்லை என்பதை சாபத்தா என்று புரிந்து கொள்வீர்?! :-)

ஆசாத்

unread,
Dec 25, 2008, 2:22:04 AM12/25/08
to பண்புடன்
> நேற்றைய தினம் மக்கள் திலகத்தின் நினைவு நாளும் கூட
> அவரை மறந்த உங்களுக்கு என்ன தண்டனை தரலாமென யோசித்துக் கொன்டிருக்கிறேன்

இனிய ஆசிப்,

வெகு சிலரே விளையாடும் இரட்டைச் சிலம்பத்தை எம்.ஜி.ஆர். விளையாடிய
காட்சியின் 3gp கோப்பை எனது வலைப்பதிவில் ஏற்றியிருந்தேன்.

இரட்டைச் சிலம்பம் குறித்தும், மாட்டுக்காரவேலனில் அதனை எம்.ஜி.ஆர்.
விளையாடிய உத்தி குறித்தும் நேற்றுதானே இங்கே ஒரு இழையில் பின்னூட்டமாக
இட்டேன். லக்கிகூட தொழில்நுணுக்கத்திற்கு மதில் எழுதியிருந்தாரே!

sadayan sabu

unread,
Dec 25, 2008, 7:52:06 AM12/25/08
to panb...@googlegroups.com
ஜீ..
 
அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடான " அவளும் ஒரு பாற்கடல் " எனும் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இது ஈழ எழுத்தாளர். எஸ்.எல்.எம் ஹனீபா என்பவரால் எழுதப்பட்டது. இதிலே "மக்கத்து சால்வை' எனும் ஒரு சிறுகதை முற்றிலும் சிலம்பாட்டத்தை சுற்றி சுற்றியே வருகிறது. தவிர இக்கதை 1992 ல் வெளிவந்த உடனே இலங்கை அரசின் கல்வித் திணைக்களத்தின் 11ம் வகுப்பு தமிழ்ப் பாட திடத்தில் க்டந்த 15 ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறதாம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை.

2008/12/25 ஆசாத் <banu...@gmail.com>

>
வெகு சிலரே விளையாடும் இரட்டைச் சிலம்பத்தை எம்.ஜி.ஆர். விளையாடிய
காட்சியின் 3gp கோப்பை எனது வலைப்பதிவில் ஏற்றியிருந்தேன்.

 
அன்புடன்
சாபு

ஆசாத்

unread,
Dec 25, 2008, 9:19:52 AM12/25/08
to பண்புடன்
> நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய
> சிறுகதை.

விடுமுறைல வரும்போது வாங்கிக்கறேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages