எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

0 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
Apr 28, 2008, 2:42:23 AM4/28/08
to panb...@googlegroups.com



 



















 

பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை



--
http://mrishanshareef.blogspot.com/
http://rishanshareef.blogspot.com/
http://mrishansharif.blogspot.com/
http://www.mrishaanshareef.blogspot.com/
http://msmrishan.blogspot.com/
http://rishansharif.blogspot.com/
http://mrishan.blogspot.com/


சூர்யா

unread,
Apr 28, 2008, 4:56:18 AM4/28/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
இருளின் போர்வையில் கோரச்சம்பவங்கள் நடந்தேறியபின்பு, ஏதுமறியாததுபோல மெல்ல விடிகின்றது.
 
எனக்குப் புரிவது இது.  நன்றாக சொல்லப்பட்டுள்ளது.
 
 
2008/4/28 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:
//அனைத்தும் முடிந்தநேரம்

வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !//

இந்த வரிகளை மாற்றியிருக்கலாமோ!



M.RISHAN SHAREEF

unread,
Apr 29, 2008, 4:25:04 AM4/29/08
to panb...@googlegroups.com
சூர்யா,சரியாகச் சொன்னீர்கள்..நன்றிகள் :)

Reply all
Reply to author
Forward
0 new messages