சுட்டதில் சுவையானது

73 பார்வைகள்
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 8:35:5514/12/08
பெறுநர் பண்புடன்

திரைப்படப் பாடல்கள் தொடர்பான சில சுவாரஸ்யங்களை வாசித்தபோது இங்கே இதனை இடத் தோன்றியது. தேரை வழக்கம் போல இழ்த்து தெருவுல உடுற் வேலையை செஞ்சுட்டேன். கன்சு, ஆசாத் அண்ணன், லக்கி, ரித்தீஷ், இளைய தளபதி, பாட்டியம்மா எல்லாருமா சேர்ந்து சேர்க்க வேன்டிய இடத்துல சேர்த்துடுங்க :-)

இதெல்லாம் ஒரு பொழப்பா?

பரிசல் அவியலில் பாடல்கள் காப்பி அடிப்பதைப் பற்றி நாங்கள் பேசியதை குறிப்பிட்டிருந்தார்.எனக்கு இதில் பெரிய ஆர்வம். சிலப் பாடல்களை ராஜா தெரியாமலே இருமுறை போட்டதும் உண்டு. வேறு மொழியிலிருந்து அடிப்பதை விடுங்கள். தமிழிலே இது போன்று பலப் பாடல்கள் திருடப்பட்டுள்ளன.

1) தூங்காதே தம்பி தூங்காதேவில் வரும் "என்ன வேணும் தின்னுங்கடா டோய்" மெட்டும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் "வாழ வைக்கும் காதலுக்கு ஜே" மெட்டும் பல்லவியில் ஒன்றே.

2) அர்ஜுனர் வில்லு பாடலில் வரும் "தனியொரு மனிதனின் படை/ அதில் எழுவது விடுதலை விடை" என்ற வரியைக் கேட்கும் போது என் உதடுகள் முனுமுனுப்பது "அழகிய தமிழ் மகள் இவள்"

3) என்ன விலை அழகே என்ற அற்புதமான பாட்டின் மூலம் "தங்கப் பதக்கத்தின் மேலே..". ஆனால் இதைக் காப்பி என சொல்ல முடியாது.

4) தேவாவை எனக்கு ரொம்ப புடிக்கும். யார் யாரோ Fusion செய்கிறார்கள். தேவா செய்ததற்கு ஈடாக எவரும் செய்ததில்லை. குஷி படத்தில் வரும் மாக்கோரீனா பாடலின் பல்லவி ஒரு ஆங்கில ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி. ஆனால் சரணம் எங்கே இருந்து எடுத்தார் தெரியுமா? எம்.ஜி.ஆரின் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..

மாக்கோரீனா சரணம்:

தாகம் வந்து உதடு வறண்டால் அந்த மேகத்தின் நீர் குடிப்போம்..
விண்வெளியில் பசிதான் எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம்..

  இதை பாடுங்கள்.

  மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..   ஒரு மாசு மருவற்ற தலைவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்

5) சமீபத்தில் வந்த ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் ஒரு பாட்டு "இன்னுமொரு வானம் இன்னுமொரு பூமி வேண்டுமடி உன்னைக் காதலிக்க". நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு மொக்கைப் பாட்டு. இதன் மூலம். "செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே" என்ற பாடல். என்ன படம் எனத் தெரியவில்லை. ஹரிஹரன் பாடிய தேவாவின் பாடல்.

6) தாமிரபரணி என்ற படத்தில் ஒரு பாட்டு. இது சொல்லி விட்டே செய்தார்களா இல்லையா என்பது தெரியாது. "கருப்பாக இருக்காளே" என்ற பாடல், பக்தி பாடலான "கற்பூர நாயகியே கனகவல்லி" என்ற மெட்டில அட்சரம் பிச‌காமல் இருக்கும்.

7) தமிழகத்தையே கலக்கிய வாள மீனுக்கும் பாட்டு கூட ஒரு பழைய பாடலின் அப்பட்டமான காப்பி. குட்டி பதிமினி சின்ன பெண்ணாக பாடிய ஒரு கருப்பு வெள்ளை பாடலின் காப்பி. வரிகள் நினைவலில்லை.

8) ஹாரிஸ் ஜெயராஜின் கிட்டதட்ட அனைத்துப் பாடல்களும் எங்கேயோ கேட்டதுண்டு என்றே நினைக்க வைக்கும். அஞ்சல பாடலில் வரும் "ஒன்னுக்குள்ள ஒன்னா என் நெஞ்சுக்குள்ள நின்னா. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா" என்ற வரி பழைய பாடலில் இருந்து சுட்டதுதான். கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடுவேன்.

9) இந்த‌ ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் தெரிய‌வில்லை. "பொன்மான‌ தேடி நானும் பூவோடு வந்தேன்". இப்போது இதைப் பாடுங்க‌ள். "பாட்டுக்கு பாட்டெடுத்து நானும் பாடுவ‌தை கேட்டாயோ"

10) டீ.ஆரின் என் ஆசை மைதிலியேவும் சொன்னால்தான் காதலா சொல்லேன்டா வடிவேலாவும் ஒரே மெட்டு. இது ரீமிக்ஸ் இல்லை.

டிஸ்கி: தலைப்பு எனக்கு நானே சொல்லிக் கொன்டது. வேறு வேலையில்லாமல் இந்த ஆராய்ச்சி தேவைதானா?

நன்றி:
http://www.karkibava.com/2008/12/blog-post_14.html

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:38:5414/12/08
பெறுநர் panb...@googlegroups.com
//தாமிரபரணி என்ற படத்தில் ஒரு பாட்டு. இது சொல்லி விட்டே செய்தார்களா இல்லையா என்பது தெரியாது. "கருப்பாக இருக்காளே" என்ற பாடல், பக்தி பாடலான "கற்பூர நாயகியே கனகவல்லி" என்ற மெட்டில அட்சரம் பிச‌காமல் இருக்கும்.//
 
 
இதில் இன்னும் ஒரு வேடிக்கை இருக்கிறது.. ஹாஜாரே (சரியா நினைவில்லை - கோகுலம் படத்தில்
கூட பானுப்ரியா பாடுவார்)
எனத்தொடங்கும் ஒரு இந்திப்பாடல் இந்த
மெட்டில் துவங்கும். நாகூர் ஹனீபா இதை தீனோரே ஞாயமா எனப்பாடி வைக்க பின் கற்பூர
நாயகியே கனகவல்லி என தொடர்ந்து கொண்டிருக்கிறது

 
2008/12/14, Asif Meeran AJ asifm...@gmail.com:

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:40:1114/12/08
பெறுநர் panb...@googlegroups.com
மணிக்குயில் படத்தில்
 
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே பாடல் மெட்டும்
தர்மத்தின் தலைவன் படத்தில் வரும்
அள்ளிக் கொள்ளப் போறேன் உன்னை அழகாகத்தான் என்ற
பாடல் மெட்டும் சேம் டிட்டோ


 
2008/12/14, lucky shajahan luckys...@gmail.com:

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:41:3114/12/08
பெறுநர் panb...@googlegroups.com
சலோமியா சலோமியா
சுண்டக்கஞ்சி சோறுடா
சுரும்புக்கருவாடுடா
 
என்ற கண்ணெதிரே தோன்றினாள் பாட்டும்
 
 
மேகமாய் வந்து போகிறேன்
மின்னலாய் உன்னைத்தேடினேன்
 
 
பாடலும் கேளுங்கள் ஒரே ராகம்

 

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:42:2714/12/08
பெறுநர் panb...@googlegroups.com
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
 
பாடலும்
 
 
சொல்லாமலே யார்பார்த்தது நெஞ்சோடு பூபூத்தது
 
பாடல் மெட்டும் ஒன்றல்லோதானே

 
2008/12/14, lucky shajahan <luckys...@gmail.com>:

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:49:3414/12/08
பெறுநர் panb...@googlegroups.com
ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒனப்புத்தட்டும் தாரேன் -
 
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி.. 
 
ரெண்டும் ஒரே ராகம் தானே..? 

 

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:50:2914/12/08
பெறுநர் panb...@googlegroups.com
அத்திந்தோம் திந்தாதி தந்தோம் சந்திரமுகி பாடல் கேட்கும்போது
மாங்குயிலே பூங்குயிலே பாடல் நினைவுக்கு வந்தால்
யார் பிழை?

 

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 9:51:4014/12/08
பெறுநர் panb...@googlegroups.com
சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் கேட்கையில்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
நினைவுக்கு வருகிறதே..?

 

ஆசாத்

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 10:03:5114/12/08
பெறுநர் பண்புடன்
இந்த மாதிரி மேட்டரெல்லாம் கொஞ்சம் டெக்னிக்கலானதுங்க. நாம நெனச்சுக்கினு
இருப்போம் சுட்டதுன்னு, ஆனா அவிங்க சுட்டது இல்லேன்னு சொல்லுவாங்க.

நைனா பர்ஸே ரிம்ஜிம் ரிம்ஜிம் - இது வந்து
நானே வருவேன் இங்கும் அங்கும் - இப்படி ஆச்சு.
அப்புறம், காயத்ரி படத்துல,
வாழ்வே மாயமா வெறுங்கதையா - வந்தப்ப ராஜாகிட்டயே இத்தக் கேட்டாங்க. அப்ப
அவரு ரெண்டு பாட்டோட ம்யூசிக் நோட்ஸையும் சொல்லி இது வேற - அது வேறன்னு
விளக்கினாருங்க.

ஆனா, அதே ராஜாதான் சண்டி ராணில எம்.எஸ்.வி. கம்போஸ் பண்ண ஓ வெண்ணிலாவ
உல்டா பண்ணி வா வெண்ணிலான்னு ரெண்டு பேரும் (எம்.எஸ்.வி. - ராஜா) சேந்து
போட்டதா மேடைலயே ஒத்துக்குனாரு.

இங்க எல்லா பாட்டுலயும் தத்தகாரம் ஒண்ணா இருந்துட்டா அத்த காப்பி
அடிச்சதுன்னு சொல்றாங்க. என்னோட பார்வை வேற, ட்யூன் இல்லாம சொல்ற
தத்தகாரம் ஒரே மாதிரி இருந்தாலும் வேற ட்யூனு கூட அதுக்கு இருக்கலாங்க.
அளவுல வர்த்தைங்க ஒண்ணா வந்துட்டதாலெயே அதுவும் இதுவும் ஒண்ணாகிரதுங்க.

நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒருநாள் வரும் வரையில் நானிருப்பேன் நதிக்கரையில்

இதே வரிங்க ரெண்டு ட்யூன்ல அதே படத்துல வந்திருக்குல்ல, தத்தகாரம்
ஒண்ணுதான. (அநேகமா படம் மன்னிப்பு, ம்யூசிக் சுப்பையா நாயுடு)

சமயத்துல ட்யூனுக்கு இழுத்து கொறச்சு ஒரு மாத்திரைய ரெண்டாக்கி ஒண்ணரைய
ஒண்ணாக்கியெல்லாம் படுவாங்க, அப்ப ஒரே ட்யூனுக்கு வெவ்வேற சந்தமுள்ள
வார்த்தைங்க வந்துருங்க.

இப்ப பாருங்க,

தே1ரே2 சங்3கு4 ப்யா5ரு6 மை7 நஹீ8 தோ9டுனா10 - எத்தினி சிலபல்ஸு பத்து
இல்லீங்களா?

அதே ட்யூனுக்கு, இங்க பாருங்க,

ஒரே1 ஜீ2வன்3 ஒன்4றே5 உள்6ளம்7 வா8ராய்9 கண்10ணா11 - எத்தினி சிலபல்ஸு
இங்க என்னாச்சு பதினொண்ணாச்சு. தத்தகாரம் போட்டு ட்யூனு இல்லாம எழுதுனா
ரெண்டு பாட்டோட வார்த்தைகளும் எங்கெங்கயோ போயி நிக்கும்.

ஆக, நாம பாடுறதுக்கு வார்த்தைங்க பொருந்தலேன்னாலும் ட்யூனு ஒண்ணா
இருக்கும். வார்த்தைங்க பொருந்துனாலும் ட்யூனு வேறயா இருக்கலாம்.

கேக்கறத வெச்சு இந்தப் பாட்டு அது, அந்தப் பாட்டு இதுன்னு நாம
சொல்லிக்கலாம், அது நம்மோட ரசனையையும் கவனிக்ற திறனையும் காட்டும்.

ஆனா, டெக்னிக்கலா நாம சொல்றது சரிதானா அப்படீன்றத ம்யூசிக் நோட்ஸ்
எக்ஸ்பர்ட்தான் சொல்ல முடியும்.

இது என்னோட அபிப்ராயங்க, ஜஸ்ட் அபிப்ராயந்தான். நீங்க சொல்றதுன்னு
சரின்னு உங்களுக்குப் பட்டுச்சுன்னா சரிதான்.

lucky shajahan

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, AM 10:10:2314/12/08
பெறுநர் panb...@googlegroups.com
//கேக்கறத வெச்சு இந்தப் பாட்டு அது, அந்தப் பாட்டு இதுன்னு நாம

சொல்லிக்கலாம், அது நம்மோட ரசனையையும் கவனிக்ற திறனையும் காட்டும்.
//
 
அப்படி கவனிச்சதுதான் இந்த பாட்டெல்லாம் அண்ணா

 
2008/12/14, ஆசாத் banu...@gmail.com:--

ezhil arasu

படிக்கப்படவில்லை,
14 டிச., 2008, PM 12:17:1414/12/08
பெறுநர் panb...@googlegroups.com

ஒன்றிரண்டல்ல ஏகப்பட்ட பாட்டுக்கல் இப்படிதான்.

இதில் எந்த இசையமைப்பாளரும் விதிவிலக்கல்ல.

ஆனால் தேவா மாத்திரம் வித்தியாசமானவர். ஒரு தடவை குழம்பி போய் தன் பாட்டையே காப்பி அடித்து விட்டார்.






2008/12/14 lucky shajahan <luckys...@gmail.com>

sadayan sabu

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, AM 12:02:4615/12/08
பெறுநர் panb...@googlegroups.com
இதன் ஒரிஜினல் பாக்கிஸ்தானின் ஸூபி பாடகர்கள் பாடியது பாடலின் பெயர் ஸய்யோனி

On 12/14/08, lucky shajahan <luckys...@gmail.com> wrote:
சலோமியா சலோமியா
சுண்டக்கஞ்சி சோறுடா
சுரும்புக்கருவாடுடா
 
என்ற கண்ணெதிரே தோன்றினாள் பாட்டும்
 
 
மேகமாய் வந்து போகிறேன்
மின்னலாய் உன்னைத்தேடினேன்
 
 
பாடலும் கேளுங்கள் ஒரே ராகம்

 
2008/12/14, lucky shajahan luckys...@gmail.com:


--
அன்புடன்
சாபு

mynah

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, AM 4:36:4115/12/08
பெறுநர் பண்புடன்

//ஆனால் தேவா மாத்திரம் வித்தியாசமானவர். ஒரு தடவை குழம்பி போய் தன்
பாட்டையே
> காப்பி அடித்து விட்டார்//

சூப்பர். எந்த பாட்டு அது?

மைதிலி


On Dec 14, 10:17 pm, "ezhil arasu" <nand...@gmail.com> wrote:
> ஒன்றிரண்டல்ல ஏகப்பட்ட பாட்டுக்கல் இப்படிதான்.
>
> இதில் எந்த இசையமைப்பாளரும் விதிவிலக்கல்ல.
>
> ஆனால் தேவா மாத்திரம் வித்தியாசமானவர். ஒரு தடவை குழம்பி போய் தன் பாட்டையே
> காப்பி அடித்து விட்டார்.
>

> 2008/12/14 lucky shajahan <luckyshaja...@gmail.com>


>
>
>
> > //கேக்கறத வெச்சு இந்தப் பாட்டு அது, அந்தப் பாட்டு இதுன்னு நாம
> > சொல்லிக்கலாம், அது நம்மோட ரசனையையும் கவனிக்ற திறனையும் காட்டும்.
> > //
>
> > அப்படி கவனிச்சதுதான் இந்த பாட்டெல்லாம் அண்ணா
>

> > 2008/12/14, ஆசாத் banua...@gmail.com:--


> > எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
> > நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
> > *

> > லக்கி ஷாஜஹான்.- Hide quoted text -
>
> - Show quoted text -

மஞ்சூர் ராசா

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, AM 7:48:2715/12/08
பெறுநர் panb...@googlegroups.com
//ஆனால் தேவா மாத்திரம் வித்தியாசமானவர். ஒரு தடவை குழம்பி போய் தன் பாட்டையே காப்பி அடித்து விட்டார்.//
 
ஒரு பாட்டல்ல பட பாடல்கள்.
 
அந்த பாடல்களும் வேறு எங்கிருந்தோ சுடப்பட்டவை தான்.
 
எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் வந்த எல்லா படங்களிலும் ஒரு பாடல் இருக்கும் அது கிட்ட்த்தட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனால் வார்த்தைகள் மட்டும் மாறியிருக்கும்.
 
பொதுவாகவே எல்லா இசையமைப்பாளர்களூம்காப்பியடிப்பதில் கில்லாடிகள். ஆனால் தங்களுடைய கலக்கல் திறமையில் அது தங்களின் சொந்த இசையை போல மாற்றிவிடுவார்கள். இளையராஜாவின் பல பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும். ஏ.ஆர். ரகுமான் பல தமிழ் ட்யூன்களை அப்படியே வெவ்வேறு படங்களில் இந்தியில் போட்டிருக்கிறார். அதே போல இந்தியில் போட்ட சிலவற்றை தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார்.
 
இந்தியில் பப்பி லஹரியும், தமிழில் தேவாவும் காப்பியடிப்பதில் சூரர்கள். ஆனால் கண்டுப்பிடிக்கப்பட்டு மாட்டுவதிலும் சூரர்கள்.
 
கில்லாடித்தனமாக காப்பியடிப்பவர்கள் ஏ.ஆர். ரகுமான், யுவன், ஹாரிஸ், தேவிபிரசாத் மற்றும் சமீபத்திய புதிய பல இந்தி இசையமைப்பாளர்கள்.
 
ஆனால் இப்பொழுதெல்லாம் சிறிய குழந்தைகள் கூட சுலபமாக இது காப்பி, என பழைய பாடலை சொல்லிவிடுகின்றன.

lucky shajahan

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, AM 8:21:4815/12/08
பெறுநர் panb...@googlegroups.com
பார்த்த முதல் நாளே - வேட்டையாடு விளையாடு படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த
பாடல் மிகப்பிரபலமாக இருந்தது ( அது கமல் முகர்ஜினிக்கும் சேர்த்துதான் என்றால் கோபித்துக்
கொள்ளப்போகிறார்கள்.) சென்ற வருடத்து சென்னை விஜயத்தின் போது பரங்கிமலை அருகிலுள்ள
ஒரு பெரிய சர்ச்சுக்கு நண்பனைத்தேடி சென்றபோது உள்ளே கீபோர்டில் யேசுநாமம் வாசித்து
கொண்டிருந்தார்கள். யேசு வருகின்றார்.. நம்மை மீட்க வருகின்றார்.. உற்று கவனிக்க பார்த்த
முதல் நாளே இசை வழிந்து வந்தது..
 
வெளியில் வந்த நண்பனிடம் கேட்டேன். பரவாயில்லையே காலத்துக்கு ஏத்த மாதிரி ஜீஸ்ஸ் பாட்டும்
மாறிடிச்சே..
 
எவன் சொன்னது..இங்க இந்த டியூனை 20 வருஷமா இதே மாதிரிதான் வாசிக்கிறாங்க.. எதுக்கு எது காப்பின்னு
இப்ப காட்றேன் பார்
 
பிறகு சொன்ன செய்தியை நம்பவும் முடியவில்லை.நம்பாமலிருக்கவும் முடியவில்லை.
 
அந்த சர்ச்சுக்கு வாடிக்கையாய் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

 
2008/12/15, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:

ஆசாத்

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, AM 10:20:0215/12/08
பெறுநர் பண்புடன்
> அந்த சர்ச்சுக்கு வாடிக்கையாய் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

லக்கி,

நாம படிச்சது மணீஸ், கெல்லட்டுன்னு கிறித்துவ சார்புள்ள
பள்ளிக்கூடங்கதான, அங்க ஒரு ப்ரேயர் பாட்டு இருக்கும், 'செவ்வானத்தில்
ஒரு நட்சத்திரம் சிரித்தது எதைப் பார்த்து'ன்னு வர்ர பாட்டு மத்ரியே
இருக்கும். செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் முந்தியா, இந்த ப்ரேயர் பாட்டு
முந்தியான்னு நமக்கு தெரியாது. ஹார்மோனியம் வசிக்ற வாத்தியாரு, அந்தப்
பாட்ட எப்பவாச்சும் ப்ரேயர் இல்லாம தனியா பாடற ப்சங்களுக்கு மெட்டுக்கு
ப்ராக்டீஸ் பண்ணும்போது வாசிச்சருன்னா, அந்தக் கடைசி அடிய மட்டும் 'என்
சிவந்த உடலா இதழா மனமா - சிரித்தது எதைப் பார்த்து' மாதிரி ட்யூனக்
கொணாந்து புன்னகையோட முடிப்பாரு.

மஞ்சூர் ராசா

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, AM 11:20:4315/12/08
பெறுநர் panb...@googlegroups.com
அதே சமயத்தில் பல கிறித்துவ பாடல்கள் சினிமா பாடல்களின் மெட்டுக்களை பயன்படுத்தியுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, PM 3:33:1015/12/08
பெறுநர் panb...@googlegroups.com


2008 டிசம்பர் 15 10:20 அன்று, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com> எழுதியது:

அதே சமயத்தில் பல கிறித்துவ பாடல்கள் சினிமா பாடல்களின் மெட்டுக்களை பயன்படுத்தியுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கிறிஸ்தவ பாடல்கள் மட்டுமல்ல அநேகமாக எல்லா  பக்திபாடல்களும் பல சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் வந்திருக்கின்றன.





--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

lucky shajahan

படிக்கப்படவில்லை,
15 டிச., 2008, PM 3:56:5015/12/08
பெறுநர் panb...@googlegroups.com
தன் பாடலை தானே தெரியாமல் காப்பியடித்துக் கொண்டதில் இன்னொரு
இசையமைப்பாளரும் அடங்குவார்..
 
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
மைனாவே மைனாவே இது என்ன மாயம் - வானத்தைப் போல..
 
ரெண்டுக்கும் இசையமைச்சது எஸ்.ஏ.ராஜ்குமார்..

 

மஞ்சூர் ராசா

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 7:25:5216/12/08
பெறுநர் panb...@googlegroups.com
லக்கி இந்த பாட்டை தான் சொன்னேனே

விக்கிரமன் இயக்கத்தில் வந்த எல்லா படங்களிலும் இந்த பாடல் மிகவும் சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கும்.

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 7:45:1616/12/08
பெறுநர் panb...@googlegroups.com
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே - ஆஹா ப்டத்துல தேவாவோட இசை
ஆஹான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்

'ஸோச்சேங்கே முஜே ப்யார் கரேங்கே நஹி' ந்னு ஒரு
பாட்டு அதுக்கு முன்னால்யே தேவா ஹிந்தில போட்டிருககாராம் :-)

சில பாடல்கள் ஒன்றுக்கொன்று சேர்ந்தாற்போல இருக்கும்
நிகழ்ச்சிகளில் பல்லவியில் ஒன்றும் சரணத்தில் வேறுமாக ஒரே பாடலைப்
பாடுவது போல கேட்டிருக்கிறோம்தானே?

மொத்தமே 7 ஸ்வரம்தான்
இதுல அவருஇப்படி போட்டதை அவரு அப்படி போட்டா தப்பா?

அவனவன் ஆராய்ச்சி கட்டுரையையே 'லவட்டிக்கிட்டு' பொண்டாட்டி பேருல
போடுறான். கேட்டா 'நான் இலக்கிய ஆளுமை'ன்னு வேற சொல்லிக்கிடுவானுங்க
துப்பு கெட்ட பயலுக!

சல்தா ஹை! பாட்டு காப்பியடிக்குறது
சலதா நஹீ ஹை! இலக்கியத் திருட்டு

குட்டி செல்வன்

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 8:39:2216/12/08
பெறுநர் panb...@googlegroups.com
கடைசியா காதலில் விழுந்தேன் படத்தில் வரும் "உனக்கென நான்" பாடல்.
ஆங்கில பாப் பாடகி ரிஹன்னாவின் Unfaithful ஆல்பத்திலுள்ள "Story of my life" பாடல்.
விஜய் ஆண்டனி ஒரு துளி கூட விடாமல் அப்படியே மொழிப்பெயர்த்துள்ளார்.

 
2008/12/16, Asif Meeran AJ <asifm...@gmail.com>:

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 8:47:1616/12/08
பெறுநர் panb...@googlegroups.com
குட்டி

காதலில் விழுந்தேனோட எத்தனாவது பாகம் இந்தப் படம்?
இல்லே....

கடைசியா காதலில் விழுந்தேன்
அப்படின்னு எழுதுனதால வந்த சந்தேகம்தான்
அப்ப
முதலில் காதலில் விழுந்தேன்
இடையில்காதலில் விழுந்தேன்னுலாம் படம் வந்திருக்கா?

இலல் ஒரு தகவலுக்காகத்தான் கேட்டேன்

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 8:49:1016/12/08
பெறுநர் panb...@googlegroups.com
இன்றைக்கு ஹாரீஸ் ஜெயராஜின் காக்க காக்க படப்பாடல்
உயிரின் உயிரே உயிரின் உயிரே பாட்டைக் கேட்டேன்...
 
எப்போது இந்த பாடலைக் கேட்டாலும் அப்படியே நெய்யாய் நெக்குருகிப் போகும்
நான் மிக எதேச்சையாக அடுத்த 2 மணி நேரத்தில் நந்தா படத்தில் லைலா அகதி
முகாமில் பாடும் கள்ளி அடி கள்ளி என்ற பாடலையும் கேட்டேன்..
 
ஆச்சரியம்.. இரண்டும் ஒரே தாளலயம்... நந்தா முதலில்.. பின் மிகத் தாமதமாய்
காக்க காக்க
 
முன்னதில் ராசா பின்னதில் ஹாரிஸ்..
 
திருந்துங்கப்பா.. லக்கி இன்னொரு தர பேசிக்கிட்டிருக்க மாட்டேன் ஆமா.. :-)
 


 
2008/12/16, குட்டி செல்வன் kutty....@gmail.com:

குட்டி செல்வன்

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 8:59:2516/12/08
பெறுநர் panb...@googlegroups.com
//முதலில் காதலில் விழுந்தேன்
இடையில்காதலில் விழுந்தேன்னுலாம் படம் வந்திருக்கா?//

அதெல்லாம் தெரியாது அண்ணாச்சி
எனக்கு கடைசியா காதலில் விழுந்தேன் தான் தெரியும் :))
 

 
2008/12/16, lucky shajahan <luckys...@gmail.com>:

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:04:4216/12/08
பெறுநர் panb...@googlegroups.com
சரி.. முதல்ல விழுந்தது இருக்கட்டும்..
 
அப்புறம் எந்திரிச்சீங்களா இல்லையா..? அதத்தான் அண்ணாச்சி
கேக்குறாவ.. :-)

 
2008/12/16, குட்டி செல்வன் <kutty....@gmail.com>:
//முதலில் காதலில் விழுந்தேன்

இடையில்காதலில் விழுந்தேன்னுலாம் படம் வந்திருக்கா?//

அதெல்லாம் தெரியாது அண்ணாச்சி
எனக்கு கடைசியா காதலில் விழுந்தேன் தான் தெரியும் :))

Ahamed Zubair A

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:07:2416/12/08
பெறுநர் panb...@googlegroups.com
கண்கள் சிவக்க "கேப்டன்" தோன்றி மறைந்தார்.. :-)

2008/12/16 lucky shajahan <luckys...@gmail.com>

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:08:4516/12/08
பெறுநர் panb...@googlegroups.com


2008 டிசம்பர் 16 08:04 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:

சரி.. முதல்ல விழுந்தது இருக்கட்டும்..
 
அப்புறம் எந்திரிச்சீங்களா இல்லையா..? அதத்தான் அண்ணாச்சி
கேக்குறாவ.. :-)
 
எங்க எழும்புறது.. அதுக்குப் பின்னால் பிரதட்டணை தான்...

 
2008/12/16, குட்டி செல்வன் <kutty....@gmail.com>:
//முதலில் காதலில் விழுந்தேன்

இடையில்காதலில் விழுந்தேன்னுலாம் படம் வந்திருக்கா?//

அதெல்லாம் தெரியாது அண்ணாச்சி
எனக்கு கடைசியா காதலில் விழுந்தேன் தான் தெரியும் :))
 

 

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:09:2216/12/08
பெறுநர் panb...@googlegroups.com
நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை..  :(

2008 டிசம்பர் 16 08:08 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:10:0816/12/08
பெறுநர் panb...@googlegroups.com
ஏன் சுபைர்.. இன்னைக்கு வேற யாரும் கிடைக்கலியா :-)


 
2008/12/16, Ahamed Zubair A <ahamed...@gmail.com>:

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:10:2516/12/08
பெறுநர் panb...@googlegroups.com

நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை..  :(

இப்படிச் சொல்லிட்டா எப்படி?
அப்புறம் நானெல்லம் என்ன செய்றதாம்?

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:11:4216/12/08
பெறுநர் panb...@googlegroups.com


2008 டிசம்பர் 16 08:10 அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:



நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை..  :(

இப்படிச் சொல்லிட்டா எப்படி?
அப்புறம் நானெல்லம் என்ன செய்றதாம்?

:) நீங்க தான் ஆணிவேராச்சே...

நாங்கள் என்ன வெறும் விழுதுகள் தானே...



lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:12:0616/12/08
பெறுநர் panb...@googlegroups.com
அப்டி எல்லாம் கஷ்டப்பட ட்ரை பண்ணக்கூடாது.. அண்ணாச்சி கோவிச்சுக்குவாக
தெரியுமில்லை அக்கா :-)

 
2008/12/16, Swathi Swamy <mswat...@gmail.com>:
நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை..  :(

Ahamed Zubair A

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:13:0616/12/08
பெறுநர் panb...@googlegroups.com
லக்கிண்ணா,

தங்கள் கண்களின் கோபக்கனல் அப்படியே வெண் திரையை கிழித்துக்கொண்டு, வாகனத்தின் சிவப்பு விளக்காய் தோன்றியதால் அங்ஙனம் பகர்ந்தேன்..



2008/12/16 lucky shajahan <luckys...@gmail.com>

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:13:4116/12/08
பெறுநர் panb...@googlegroups.com


2008 டிசம்பர் 16 08:12 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:
அப்டி எல்லாம் கஷ்டப்பட ட்ரை பண்ணக்கூடாது.. அண்ணாச்சி கோவிச்சுக்குவாக
தெரியுமில்லை அக்கா :-)

 அண்ணா தான் ஒரு இழையில் ரொம்ப நொந்து போய் எழுதினார்..மொக்கையாவே இருக்கு குழுமம்னு..அதான் முயற்சி பண்ணினேன்....

 

2008/12/16, Swathi Swamy <mswat...@gmail.com>:
நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை..  :(

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.


குட்டி செல்வன்

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:10:2916/12/08
பெறுநர் panb...@googlegroups.com
இல்ல, நான் முதல்ல விழல கடைசியாதான் விழுந்தேன் :))

2008/12/16, lucky shajahan <luckys...@gmail.com>:
சரி.. முதல்ல விழுந்தது இருக்கட்டும்..
--
அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்

http://selvakavithaigal.blogspot.com/

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:14:1816/12/08
பெறுநர் panb...@googlegroups.com
அப்படி எல்லாம் மொக்கைல ஏ கிரேடு பி கிரேடு
பிரிக்ககூடாது ஆமா ;-) அப்புறம் சுபைர் கோவிச்சுக்குவான்.. பாசக்கார பயபுள்ள :-)

 
2008/12/16, Swathi Swamy mswat...@gmail.com:


:) நீங்க தான் ஆணிவேராச்சே...

நாங்கள் என்ன வெறும் விழுதுகள் தானே...


--

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:15:2816/12/08
பெறுநர் panb...@googlegroups.com
சமீப காலமா பின்நவீனத்துவ மொக்கையாவே போய்க்கிட்டிருக்கு..
 
அடங்குடா ராசா :-)

 

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:16:5716/12/08
பெறுநர் panb...@googlegroups.com


2008 டிசம்பர் 16 08:15 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:

சமீப காலமா பின்நவீனத்துவ மொக்கையாவே போய்க்கிட்டிருக்கு..

யாரோடது? உங்களோடதா?

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:35:2416/12/08
பெறுநர் panb...@googlegroups.com
யக்கோவ்..நான் சுபைரை சொன்னேன்..க்கா.. :-)

2008/12/16, Swathi Swamy <mswat...@gmail.com>:


2008 டிசம்பர் 16 08:15 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:
சமீப காலமா பின்நவீனத்துவ மொக்கையாவே போய்க்கிட்டிருக்கு..

யாரோடது? உங்களோடதா?
 
 

கார்த்திக்

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:36:1516/12/08
பெறுநர் பண்புடன்
/சலோமியா சலோமியா
சுண்டக்கஞ்சி சோறுடா
சுரும்புக்கருவாடுடா

என்ற கண்ணெதிரே தோன்றினாள் பாட்டும்
மேகமாய் வந்து போகிறேன்
மின்னலாய் உன்னைத்தேடினே//

இரண்டுமே சயோனி என்ற பாகிஸ்தான் ஆல்பத்திலிருந்து சுட்டதுதான்..
********************

/ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒனப்புத்தட்டும் தாரேன் -

என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி..
ரெண்டும் ஒரே ராகம் தானே.//

மிகச்சரி.. இரண்டுமே ஒரு நாட்டுப்புற பாட்டின் காப்பி.
*************************

//அத்திந்தோம் திந்தாதி தந்தோம் சந்திரமுகி பாடல் கேட்கும்போது
மாங்குயிலே பூங்குயிலே பாடல் நினைவுக்கு வந்தா//

மெட்டு வேறு.. தாளம் ஒன்று.. அது பரவாயில்லை..
********************

/ஆச்சரியம்.. இரண்டும் ஒரே தாளலயம்... நந்தா முதலில்.. பின் மிகத்


தாமதமாய்
காக்க காக்க

முன்னதில் ராசா பின்னதில் ஹாரிஸ்//

அது ராசா இல்லைங்க.. அவரின் புதல்வர்..

இது கார்க்கி அனுப்பியது

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:38:1116/12/08
பெறுநர் panb...@googlegroups.com
நன்றி கார்த்திக்..
 
காப்பியை பத்தி பேசறப்ப அத்த மறந்துபூட்டேன் :-)

 
2008/12/16, கார்த்திக் karth...@gmail.com:

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:38:4916/12/08
பெறுநர் panb...@googlegroups.com
/ஆச்சரியம்.. இரண்டும் ஒரே தாளலயம்... நந்தா முதலில்.. பின் மிகத்
தாமதமாய்
காக்க காக்க
முன்னதில் ராசா பின்னதில் ஹாரிஸ்//

அது ராசா இல்லைங்க.. அவரின் புதல்வர்..

ஆமாங்க கார்க்கி
அது யுவன் சங்கர் ராசாங்குறதை சுருக்கித்தான் லக்கி ராசான்னு சொன்னாரு
அவரு எப்பவுமே சுருங்கச் சொல்லி விளங்க (வைககாமலிருப்பதில்) வல்லவர்

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:40:4916/12/08
பெறுநர் panb...@googlegroups.com
இசையமைப்பாளர் சிற்பி வித்தியாசமான காப்பியடிப்பாளர்.
அவர் ஒருவர்தான் அரேபிய இசைகளை காப்பியடித்து
தமிழுக்கு தந்த புண்ணியவான் :-)
 
அழகியலைலா - உ.அ.தா , அன்புள்ள மன்னவனே - மேட்டுக்குடி இந்த
பாடல்கள் எல்லாம் அப்பட்ட எகிப்திய இசையின் காப்பி
 
2008/12/16, lucky shajahan <luckys...@gmail.com>:
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

ஆசாத்

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:45:2816/12/08
பெறுநர் பண்புடன்
> சமீப காலமா பின்நவீனத்துவ மொக்கையாவே போய்க்கிட்டிருக்கு..
> அடங்குடா ராசா :-)

> > தங்கள் கண்களின் கோபக்கனல் அப்படியே வெண் திரையை கிழித்துக்கொண்டு, வாகனத்தின்


> > சிவப்பு விளக்காய் தோன்றியதால் அங்ஙனம் பகர்ந்தேன்..

லக்கி,

இது பின்நவீனத்துவம் கெடையாது, இது கழகத்தமிழுக்கும் கொஞ்சம் முன்னால
உள்ள காலகட்டம் மாதிர் தோணுது.

ஆனாலும், வெண்திரை + பகர்ந்தேன் + விளக்காய் இந்த கையாடல்கள்
ஒண்ணுக்கொண்ணு பொருந்தாததால இத கழகக்காலத்துக்கு முந்துனதுண்ணும் சொல்ல
முடியல.

மொத்தத்துல...முடியல...

சுயவேள்வியில் ஆடை எரிந்துவிட யாரோ அவிழ்த்துப்போட்டிருந்த *கந்தல்
துண்டை* அணிந்துகொண்டு சுற்றித்திரியும் புறத்தோற்ற அணிவகுப்புகள்
வீதியெங்கும்....வுடு ஜூட்...

குறிப்பு: 'கந்தல் துண்டை' அப்படீன்ற எடத்துல 'உள்ளாடை'ன்னு
போட்டுப்பாருங்க, அப்புறம் சொல்லுங்க எது பின்நவீனத்துவம்னு.

அன்புடையீர், இது கலாய்ப்பதற்குத்தானன்றி வேறெதற்கும் அல்ல.
பின்நவீனத்துவக் கவிதைகளை ஏற்காதவனல்லன் நான்.

lucky shajahan

படிக்கப்படவில்லை,
16 டிச., 2008, AM 9:47:0816/12/08
பெறுநர் panb...@googlegroups.com
அண்ணா என்னை விட்ருங்க முடியல ;- )
அண்ணா என்னை விட்ருங்க  தாங்கல ;- )

 
2008/12/16, ஆசாத் banu...@gmail.com:

சுயவேள்வியில் ஆடை எரிந்துவிட யாரோ அவிழ்த்துப்போட்டிருந்த *கந்தல்
துண்டை* அணிந்துகொண்டு சுற்றித்திரியும் புறத்தோற்ற அணிவகுப்புகள்
வீதியெங்கும்....வுடு ஜூட்...

rishanshareef

படிக்கப்படவில்லை,
17 டிச., 2008, PM 12:15:0417/12/08
பெறுநர் panb...@googlegroups.com
//சமீபத்தில் வந்த ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் ஒரு பாட்டு "இன்னுமொரு வானம் இன்னுமொரு பூமி வேண்டுமடி உன்னைக் காதலிக்க". நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு மொக்கைப் பாட்டு. இதன் மூலம். "செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே" என்ற பாடல். என்ன படம் எனத் தெரியவில்லை. ஹரிஹரன் பாடிய தேவாவின் பாடல்//

மிகச் சரி ஆசிப் அண்ணா..

செம்பருத்திப்பூவே...பாடல் ஹரிஹரனின் ஹிட்களில் ஒன்று..அழகான இசை..அழகான (தமிழ்) வரிகள்..இந்தப் பாடல் சூர்யா,சுவலட்சுமி நடிக்க 'லேடிஸ் & ஜென்டில்மேன்' திரைப்படத்துக்காகப் பதிவானது..கடைசியில் படம் வராமலே நின்று போய்விட்டது.. :((







--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

lucky shajahan

படிக்கப்படவில்லை,
18 டிச., 2008, AM 12:18:5818/12/08
பெறுநர் panb...@googlegroups.com
//இதன் மூலம். "செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே" என்ற பாடல். என்ன படம் எனத் தெரியவில்லை. ஹரிஹரன் பாடிய தேவாவின் பாடல்//
//
 
படம் : காதல் சொல்ல வந்தேன்.

 
2008/12/17, rishanshareef rishan...@gmail.com:
எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்