எங்கே செல்லும் இந்தப் பாதை? - பாமரன்

6 views
Skip to first unread message

எழில்

unread,
Apr 25, 2008, 2:29:37 AM4/25/08
to பண்புடன்



இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?

திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?

"சுதந்திரம்" பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?

உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற "தாராள"தொழிற் கொள்கைகள் பற்றியா?

இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு "தேசத்துரோகி"யாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு இதுவா பிரச்சனை?

மேற்கத்திய நாடுகள்குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்துஅவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?

8 மணி நேரம் உழைப்பு - 8 மணி நேரம் ஓய்வு - 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் "சமூக முன்னேற்றத்திற்காக" ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.

இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.

இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.

அந்த டாஸ்மாக்கும் இரவு 11 மணிக்கு மேல் திறந்திருப்பதில்லை என்பது மூன்றாவது பிரச்சனை.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் திரும்பும் இந்த நடுநிசி நாயகர்களுக்குக் காத்திராமல் PUBS களை ஒரு மணிக்கே மூடி விடுவது நான்காம் பிரச்சனை.

அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை

அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.
இப்படி ஒன்றா இரண்டா இச்"சமூக சேவகர்கள்" சந்திக்கும் இன்னல்கள்?


எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்
இரவாவது பகலாவது?
சுதேசியாவது விதேசியாவது?
தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?
அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.
சம்பளத்தை விடவா சமூகம்?
இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?
இவர்கள் மட்டும்தானா?
உங்கள் கேள்வி நியாயம்தான்.உண்மை.
ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் "தியாகங்களுக்கு" ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.


" '
இரவு வாழ்க்கை' குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கவில்லை.
நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.
நம்மைப் பொறுத்தவரை ….
நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட
பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்!!!!!!!!!!!!!!
ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.
சபாஷ்.


ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்
எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?
இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
தெரிந்திருக்கிறதோ இல்லையோ
ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.


வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்

இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.
குடிக்கட்டும்
கும்மாளமிடட்டும்
இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்து
கடவுள் பாதி - மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.
அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.
ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.


மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்
செல்கிறார்கள்…..வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது
போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.
அதுதான்:


முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.

சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.






--
நட்புடன்,
எழில்

http://ezhilbharathi.blogspot.com/
pamaran.zip

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:21:57 AM4/25/08
to panb...@googlegroups.com

இந்த ஞாநிக்கும் பாமரனுக்கு வேறு வேலை இல்லை. பத்தி பத்தியாய் எழுதுவது தவிர‌

ஒரு முறை நீயா நானாவில் ஞாநி ஐ.டி காரர்களை பார்த்து கேட்டார் 'இதே 50000 சம்பளத்தை மாதா மாதம் நான் தருகிறேன். இவர்கள் எல்லாம் மலம் அள்ள தயாரா என்று கேட்டார்'.

ஆகா, ஞாநிக்கு தான் என்ன ஒரு சமூக அக்கறை என்று நினைத்த போது, எதிர்ப்புறம் இருந்த ஒருவர் ஞாநியை பார்த்து 'நான் உங்களுக்கு மாதா மாதம் 60000 ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் அள்ளுகிறீர்களா?' என்று கேட்ட போது ஞாநி எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. என்னால் முடியாது என்றார்

அப்போது அங்கே கிழிந்தது ஞாநியின் முகத்திரை

பாமரனும் அது போலவே தான். இந்த ஒரு 'பப்' விசயத்தை இன்னும் எத்தனை காலம் தான் பேசுவாரோ தெரியவில்லை. ஐ.டி காரர்கள் என்ன மாதிரியான வேலை பார்க்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து விமர்சனம் செய்வது எளிது. மஞ்சள் காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்

KeN

unread,
Apr 25, 2008, 3:24:55 AM4/25/08
to panb...@googlegroups.com
எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் :)

2008/4/25 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>:

KeN

unread,
Apr 25, 2008, 3:25:47 AM4/25/08
to panb...@googlegroups.com

முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.

சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.
 
இது மிகச்சரிதான் ப்ரேம்

2008/4/25 KeN <jakey...@gmail.com>:

pandii durai

unread,
Apr 25, 2008, 3:27:34 AM4/25/08
to panb...@googlegroups.com
நன்னா சொன்னிங்க ப்ரேம்.
பப்புக்கு 99 சதவிகிதம்ஐடிகாராங்க மட்டும்தான் போறதாலா இருக்கிறது
 
 

 

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:31:20 AM4/25/08
to panb...@googlegroups.com
On 25/04/2008, KeN <jakey...@gmail.com> wrote:

முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.

சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.
 
இது மிகச்சரிதான் ப்ரேம்
 
 


இதை நான் பாமரனின் பொறாமை என்று தான் சொல்வேன். நான் ப‌டிக்கும் கால‌த்தில் எப்ப‌டி இருந்தேனோ அப்ப‌டித்தான் இப்போதும் இருக்கிறேன். இன்னும் என் ந‌ண்ப‌ர்க‌ளும், சொந்த‌க்கார‌ர்க‌ளும் அப்ப‌டியே தான் இருக்கிறார்க‌ள். நான் நானாக‌வே தானே இருக்கிறேன்

அவ‌ர் சொல்வ‌து எல்லா ஐ.டிக்கார‌ர்க‌ளுக்கும் பொருந்தாது. ஒரு சில‌ரை வைத்து ஒரு ஒட்டு மொத்த துறையின‌ரை குற்றம் சொல்ல‌ முடியுமா?

பாம‌ர‌னால் தோன்றும் பிம்ப‌த்தை வைத்து 'எல்லா ப‌த்திரிக்கையாள‌ர்களும் ம‌ன‌ நோயாளிக‌ள்' என்று நான் சொல்ல‌வா?


 

pandii durai

unread,
Apr 25, 2008, 3:31:34 AM4/25/08
to panb...@googlegroups.com


On 4/25/08, KeN <jakey...@gmail.com> wrote:
கென்  கோடிட்டு குறிப்பிட்டுள்ளவற்றிற்கு பல ஐடி நண்பர்கள் இங்க இருக்கிங்க. ஐடி நண்பர்கள் அல்லாதவர்கள் பலர் இருக்க கூடும் . நீங்கள் உணர்ந்ததை பதிவுசெய்யுங்கள் .

pandii durai

unread,
Apr 25, 2008, 3:32:58 AM4/25/08
to panb...@googlegroups.com
////அவ‌ர் சொல்வ‌து எல்லா ஐ.டிக்கார‌ர்க‌ளுக்கும் பொருந்தாது. ஒரு சில‌ரை வைத்து ஒரு ஒட்டு மொத்த துறையின‌ரை குற்றம் சொல்ல‌ முடியுமா?////
 
 
 

/////பாம‌ர‌னால் தோன்றும் பிம்ப‌த்தை வைத்து 'எல்லா ப‌த்திரிக்கையாள‌ர்களும் ம‌ன‌ நோயாளிக‌ள்' என்று நான் சொல்ல‌வா?
////

சபாஷ்

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:36:13 AM4/25/08
to panb...@googlegroups.com


நான் சென்னை பப்களுக்கு சென்றதில்லை. பெங்களூரில் ஒரு முறை போன போது அங்கே 70% மாணவர்கள் தான் இருந்தார்கள். அப்போது அவர்களை என்ன சொல்வது??

சென்னையில் தினம் வரும் வழியில் நெடுக டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்பே அதற்கு முன் ஒரு கூட்டம் காத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் எந்த ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார்கள் என்று கேட்டு சொல்வாரா பாமரன்?

கலாச்சார சீர்கேட்டுக்கும் நாங்க தானாய்யா கிடைச்சோம்? போன முறை ஊருக்கு போன போது பின் இருக்கையில் இரு இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

'எப்படிடா என்னால அவள மறக்க முடியும்? அவள தான் நான் முதன் முதலில் புணர்ந்தேன். அதுவும் அவள் வயதுக்கு வந்து ஒரு வாரத்திற்குள்'

இதை சொன்னவனுக்கு அதிகபட்சம் 16 அ 17 வயதிருக்கும். அவன் எந்த ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறான் என்பதை கேட்க மறந்துவிட்டேன்
:(


On 25/04/2008, pandii durai <pandi...@gmail.com> wrote:
நன்னா சொன்னிங்க ப்ரேம்.
பப்புக்கு 99 சதவிகிதம்ஐடிகாராங்க மட்டும்தான் போறதாலா இருக்கிறது
 
 

 


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

KeN

unread,
Apr 25, 2008, 3:36:27 AM4/25/08
to panb...@googlegroups.com

ப்ரேம் , தகவல் தொழில்நுட்பத்துறை விமர்சனத்திற்கு உள்ளாவதில் நிறைய மனரீதியான சிக்கல்கள் இருக்கிறது.

உங்க‌ளுட‌ன் ப‌டித்த‌வ‌ர்க‌ள் எல்லோருமே உங்க‌ள் நிலையில் ப‌ணிபுரிய‌ப்போவ‌தில்லை.

துறைச்சார்ந்த‌ சீர‌ழிவுக‌ளில் முத‌லிட‌ம் த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌த்திற்கு என்ப‌தை தாங்க‌ள் தெரிந்து வைத்திருப்பீர்க‌ள்( ம‌த்திய‌ ம‌னித‌ வ‌ள‌த்துறையின் ஆய்வு)

சிலர் அல்லது ஒட்டமொத்தம் என்பதில் இல்லை கோளாறு புரியும் என நினைக்கிறேன்

2008/4/25 pandii durai <pandi...@gmail.com>:

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:37:03 AM4/25/08
to panb...@googlegroups.com

On 4/25/08, KeN <jakey...@gmail.com> wrote:
கென்  கோடிட்டு குறிப்பிட்டுள்ளவற்றிற்கு பல ஐடி நண்பர்கள் இங்க இருக்கிங்க. ஐடி நண்பர்கள் அல்லாதவர்கள் பலர் இருக்க கூடும் . நீங்கள் உணர்ந்ததை பதிவுசெய்யுங்கள் .
 
 
ரிப்பீட்ட்டு

 

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:39:48 AM4/25/08
to panb...@googlegroups.com

உங்க‌ளுட‌ன் ப‌டித்த‌வ‌ர்க‌ள் எல்லோருமே உங்க‌ள் நிலையில் ப‌ணிபுரிய‌ப்போவ‌தில்லை.

அதே அதே.....

என் நண்பன் ஒருவன் அரசு பணியில் LDCயாக உள்ளான். வேறு சிலர் வெவ்வேறு தொழில்களில் இருக்கிறார்கள். வேலையே இல்லாமல் இருப்பவர்களும் உண்டு.

இதனால் நட்பிற்கு பாதகம் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அது அப்படியே தான் இருக்கிறது.


 

pandii durai

unread,
Apr 25, 2008, 3:39:58 AM4/25/08
to panb...@googlegroups.com
///ஐடி நண்பர்கள் அல்லாதவர்கள் பலர் இருக்க கூடும் ///
 

இன்னொரு வரியை விட்டுட்டேன்.

ஐடி அல்லாத நண்பர்கள் ஐடி நண்பர்களுடன் பழகியிருக்ககூடும். நட்புகொண்டிருக்கலாம் அந்த அடிப்படையில் எழுதுங்கள்

pandii durai

unread,
Apr 25, 2008, 3:42:37 AM4/25/08
to panb...@googlegroups.com
///நான் சென்னை பப்களுக்கு சென்றதில்லை. பெங்களூரில் ஒரு முறை போன போது அங்கே 70% மாணவர்கள் தான் இருந்தார்கள். அப்போது அவர்களை என்ன சொல்வது??////
 
 
///இதை சொன்னவனுக்கு அதிகபட்சம் 16 அ 17 வயதிருக்கும். அவன் எந்த ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறான் என்பதை கேட்க மறந்துவிட்டேன் ///
 
 
இந்த இருவிசயங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். 
சிலவற்றை நான் நகர்புரத்தில் பார்த்துள்ளேன் (மதுரை)
கிராமப்புறங்களிலும் இப்பஎல்லாம் பிடலைபையன்கள் விசுக் விசுக்னுதான் நடக்கிறாங்கப்பா

பிரேம்குமார்

unread,
Apr 25, 2008, 3:44:35 AM4/25/08
to panb...@googlegroups.com

துறைச்சார்ந்த‌ சீர‌ழிவுக‌ளில் முத‌லிட‌ம் த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌த்திற்கு என்ப‌தை தாங்க‌ள் தெரிந்து வைத்திருப்பீர்க‌ள்( ம‌த்திய‌ ம‌னித‌ வ‌ள‌த்துறையின் ஆய்வு)
 

அக்காங், என்ன சீரழிவு என்று விளங்கவில்லை

குடிக்கனும் என்று நினைத்துவிட்டால் காசு இருக்குறவன் பப்பில் போய் குடிக்க போறான். காசு இல்லாதவன் கள்ளச்சாராயம் குடிக்கப்போறான்.

அதே போலத்தான் மற்றவையும்

என்னமோ ஐ.டி துறையில் எல்லாருக்கும் கூப்பிட்டு வாயில் ஊத்துற மாதிரி சொல்றீங்க‌


 

pandii durai

unread,
Apr 25, 2008, 3:45:36 AM4/25/08
to panb...@googlegroups.com

////குடிக்கனும் என்று நினைத்துவிட்டால் காசு இருக்குறவன் பப்பில் போய் குடிக்க போறான். காசு இல்லாதவன் கள்ளச்சாராயம் குடிக்கப்போறான்.////

KeN

unread,
Apr 25, 2008, 3:46:04 AM4/25/08
to panb...@googlegroups.com

அட ஒட்டு மொத்த சீரழிவுக்கும் தகவல் தொழில்நுட்பம்தான் காரணம் என்பதல்ல என் வாதம்.

 டாஸ்மாக் எல்லாம் நீங்க போற இடமா அதுக்காகத்தான் நாங்க இருக்கோமே

ஐடி ல இருக்கிற ஆட்களில்தான் என் நட்பு வட்டாரம் நிறைய , மிக முக்கியமாக என்னைத்தன்னோட குழந்தையாக பாவிக்கிற ஒருத்தரும் ஐடிதான்.

 ஒட்டுமொத்தமா சேறு பூசறது என் வேலையில்லை தவறுகளுக்கான வாய்ப்புகளும் வசதியும் இருப்பதால் மிக அதிக அளவில் சீரழிவும் நடக்கிறது .

மத்திய மனித வளத்துறையின் ஆய்வின்படி மனிதத்தன்மையே எல்லாவிதங்களிலும் குறைந்து போகிற ஆட்களாக மாறிக்கொண்டிருக்கிறவர்கள் ஐடி ஆட்கள்தானாம்.

இந்த மனிதத்தன்மைன்னு சொல்றது காதல் , காமம், குடும்ப உறவுகள் மற்றும் சில‌

2008/4/25 pandii durai <pandi...@gmail.com>:

pandii durai

unread,
Apr 25, 2008, 3:48:20 AM4/25/08
to panb...@googlegroups.com
//அட ஒட்டு மொத்த சீரழிவுக்கும் தகவல் தொழில்நுட்பம்தான் காரணம் என்பதல்ல என் வாதம்.///////
 
//மிக முக்கியமாக என்னைத்தன்னோட குழந்தையாக பாவிக்கிற ஒருத்தரும் ஐடிதான்.//
 
////தவறுகளுக்கான வாய்ப்புகளும் வசதியும் இருப்பதால் மிக அதிக அளவில் சீரழிவும் நடக்கிறது ./////
 
 

Asif Meeran AJ

unread,
Apr 25, 2008, 5:15:19 AM4/25/08
to panb...@googlegroups.com
நாட்டில் நடக்கும் பல சீரழிவுகளுக்கும் காரணம் த்தொ துறை சார்ந்தவர்கள் மட்டுமே காரணமென்று சொல்லி விட முடியாது
 
சமூகப் பொறுப்பின்மை என்பது தாராளம்யமாக்கலுக்குப் பின் தாராளமாகிவிட்டது. நுகர்வோர் சந்தை விசாலமாகிவிட்ட பிறகு கடனட்டைகளும் க்டன் வாங்குவதும் வாழ்வின் ஒரு பகுதியென்ற சூழலுக்குள் தங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது சமூக விழுமியங்களீல் ஏற்படும் கவலைக்குரிய மாற்றங்களில் ததொ துறை சார்ந்தவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதையும் ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ள முடியாது
 
முன்பு கேரளத்தில் வளைகுடா நாட்டில் பணிபுரிபவர்கள் வந்து வீசும் பணத்தால் ஏற்பட்ட சில பொருளாதார நெருக்கடிகாளும் அதுபோன்ற ஏக்கங்களும் பொருமல்களும்தான் இன்றைய இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் ஆதாரமும் கூட. அந்த்த் துரையில் இருப்பவர்களின் சிக்கல்கள் அவரக்ளுக்கு மட்டுமே உரித்தானதென்றபோதும் கூட வெளிப்படயான பார்வையில் அவர்களது திடிர் பொருளாதாரப் பெருக்கமும் ஒருவிதமான எந்திர மய வாழ்க்கையில் பிறிதொன்ரைப் ப்அற்றியும் அலட்டிக் கொள்ளாத லேசான மேட்டிமைத்தனமும் எளிதில் அவர்களை நோக்கி விரல் சுட்ட ஏதுவாககஇருக்கிரதென எண்ணுகிறேன்
 
ச்சமூகத்தில் மேடும் பள்ளமும் இயல்புதான் என்றாலும் இப்போதைய சூழலில் மேடுகள் மிக உயரமாக இருப்பதும் அதனால் பள்ளத்திக்ல் இருப்பவர்கள் சமவெளிக்கு வருவதுமே கூட சங்கடமென்ற இருப்பதும் கூட் இவற்றிற்கு காரணிகளாகலாம்

K.R.அதியமான்

unread,
Apr 25, 2008, 7:42:40 AM4/25/08
to பண்புடன்
my comments at Pamaran's post :

மிகவும் மிகைபடுத்தப்பட்ட, பொதுப்படுத்த பட்ட கருத்துக்கள்.
Gross generalisations…

1980கள் மாதுரி இளைஞ‌ர்கள் அரசு வேலைக்கு மனுப்போட்டு விட்டு சிங்கிள்
டீக்கு லாட்டரி அடிக்கும் நிலைதான் பரவாயில்லையா ? மென் பொருள் துறையில்
பல லச்சம் பேர்கள் கடும்யாக உழைத்து முன்னேறுவது குற்றமா என்ன ? எதோ பிற
துறைகளில் பணி புரிவோர் மட்டும் நாட்டை பற்றி கவலைப்ப்டுவது போலவௌம்,
இவர்கள் திமிருடன் அலைவது போலவும் சித்தரிப்பது மிகவும் எளிவ்மை
படுத்தும் முயற்சி.

உங்க பசங்க நாளைக்கு மென் பொருள் துறையில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தால்
மறுக்க போகிறீர்களா என்ன ?

சம்பளம் இன்று அதிகம். பின்னாளில் குறையும். புதிஅய் துறையில் இயல்புகள்.
வெறும் பொறாமையும், வயுத்தெறுச்சலும்தான் பலருக்கும் அவர்களை பற்றி.

/////நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக்
கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட… பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து
சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு
துப்புரவுத் தோழனைவிட ….
இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.////

யாரும் அப்படி கருதவில்லையே ? பிற துறையில் பணி புரியும் மக்கள் மட்டும்
என்ன‌ துப்புரவு தொழிலாளர்கள தம் சகோதர்களாக கருதகிறார்களா என்ன ?

////உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய
கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற்
கொள்கைகள் பற்றியா?/////

அன்னிய கம்பேனிகளின் வரவால் எந்த உள்னாட்டு வர்தகதங்கள் முடப்பட்டன ?
நிருபியுங்களேன் ?

இந்த கூஃபுள், வோர்ட்ப்ரெஸ் கூட அன்னிய கம்பேனிகள்தாம். முதல்ல இந்த
இலவச‌ வலைபதிவுகள நிறுத்தனும். :)))))))

இதில் சூடான விவாதங்கள் ; பார்க்கவும் :

http://balaji_ammu.blogspot.com/2008/02/418.html

-----------------------


the following are the benefits of IT boom in India :

1.Employment generation for some 12 lac IT pros who get good salaries.
(Baala, remember your govt service days and your present job status)

2.Indirect employment generation in the ratio of 12 jobs for 1 IT job
like drivers, caterers, electricians, plumbers, cleaners, office
admin, HR, training, construction, etc

3.The IT induustry earns foreign exchange to the tune of several
billion dollars which stenghthens our rupee thereby making imports
cheaper than otherwise. (mainly petro product imports and vital and
rise in these prices result in direct price rise across the board)

4. IT cos pay billions of income and service taxes. These 12 lac
people directly employed by IT co pay more income tax than any other
group of professionals.

5. Ripple effect : The surplus income of IT cos and IT employees are
channelised into savings and capital formation which helps more growth
and employment generation in many sectors. The funds invested in IPOs
create more industry and employment and taxes and so on. The
disposable incomes spent by these people creates new demand for many
products and services like hotels, entertainment, garments, retail,
jewellery, cosmetics, pharma, tourism and travel services and
iinumerable other sectors. all these spendings create more demand and
jobs and tax revenue in the form of service, excise and sales tax.
this is called the trickle down effect. For e.g : there is relatviely
less relative poverty in Bangalore when compared to say
Raichur which has no IT cos.

6.Charity by IT cos and IT employees. lacs of IT people donate for
many causes (incl the excemplery example set by this blog owner. hat’s
off to you Baala) and many It cos have inhouse foundations (like
Infosys Foundation) which donate crores annually. lot of good work is
done everyday.

7.IT boom has been the base for this cheap telecom and many other
related sectors which create more employment and cheap communications.
For e.g banking, rail ticketing and thousand other transaction costs
are now only a fraction of old days and new avenues for improved
efficiceny and transparency (e-governance) are opening up. Stock
market data and agricultural commodity price data are now easly and
ranparetly available. (MCX echange, ITCs e-choupals, etc have
ransformed millions of lives of farmers and rural people). more
downstream effects. it is noweasy to tract info and data and find good
and cheap sources of goods, services and employment across the globe.

All these above ‘benefits’ would not be there but for the boom of IT
cos. Pls remember the terrible days of 70s and early 80s when there
was even more acute unemplyment and poverty when compared to now.
Suppose if IT boom didn’t occur in India and all these cos flourished
in neigbouring nations instead, would we all be better off ?

Lastly, the central govt and many state govts compete with each other
to draw IT cos to their states with land, tax breaks, power,
infrastructue, etc. Even the communist W.Bengal is eager for IT cos to
set up shop in Calcutta. Are they foolish, crazy or dishonest in
giving incentives ? Why in the hell do they offer all these in the
first place. these govts are elected by the people and answerble to
queries like this post. The answer is it ultimately benefits the state
and its economy in multi-various ways. But for Chandrababu Naidu,
Hyderabad would not be in the map of IT industry in India. Now next,
to Bangalore, Chennai, NCR and Mumbai, Hyderabad too is fast growing
due to the vision and ground wor done by C.Naidu. Would Hyderabad and
AP be better off if he had not taken this intiative ?
Pls compare Hyderabad with its olden days of 70s or present Patna ?
which is preferable.

sure the growth is not even. but the reality is something is better
than nothing. we had nothing before and there was more poverty,
unemployment, less tax revenue and welfare spending until 90s..

I think plain jealosy and heart burn is the reason for many comments
in this post. We Indians still have the socialist mentality.
If everyone is starving then it is ok, but if a few manage to climb
then it is not accepted..
Indian crab story !!


சார்லசு

unread,
Apr 25, 2008, 10:06:32 PM4/25/08
to panb...@googlegroups.com

இது நம்ம நண்பர் ஒருத்தர் எழுதுனது


நாங்களும் மனிதர்கள் தான்

சாப்ட்வேர் வல்லுந்ர்களை சபிகாதீர்கள்
நாங்களும் மனிதர்கள் தான்

நாங்கள் வாங்கும் முழுசம்பள பணத்திற்கும்
அரசிற்கு வரிகட்டுகிறோம்....
நாங்கள் மேசைக்கு கீழே கீம்பளம்
வாங்குவது கிடையாது.....

எங்கள் அலுவலகங்களில் அரசு அலுவலகங்கள் போல்
வேலை நேரபலகை இல்லை

இந்தியா வேலை அமைப்பு சட்டத்தின்
சாதி,மதம் என்னும் கட்டத்தை
எங்கள் அலுவலகங்களில் உபயோபடுத்துவது இல்லை

எங்களுக்கு வெயிலின் அருமை தெரியாது
ஆனால் மன அழுத்தத்தின் வலி தெரியும்

எங்களுக்கு சம்பளம் அதிகம் என்று எண்ணுகிறோர்கள்
ஆனால் உங்களை போல் சாகும்வரை
ஓய்வு ஊதியம் இல்லை

மற்ற துறைகளால் இந்தியனின் அறிவு மதிப்பு
அந்நியனுக்கு தெரிந்ததைவிட
எங்களால் தெரிந்தது அதிகம்

எங்கள் அருமை உங்களுக்கு தெரியவில்லை
உங்களின் பொறமைபிடித்த கண்களுக்கு
நாங்கள் அந்நிய அடிமைகள் என்று எண்ணலாம்

குழந்தையின் மழலை பேச்சு தாய்க்கு புரியாதது
குழந்தையின் குற்றம் இல்லை

நாங்களும் மனிதர்கள் தான்



--
நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.
Reply all
Reply to author
Forward
0 new messages