AyyAnar KaviThaigaL : KadhaL

80 views
Skip to first unread message

அய்யனார்

unread,
Jul 28, 2008, 12:09:54 AM7/28/08
to panb...@googlegroups.com

சொல்லிட்டா போதுமா என்கிறாள் ராஜி
சொல்லப்படாதவைகளின் உன்னதமும்
சொல்லித் திரிபவைகளின் நம்பகத் தன்மை குறித்தும்
போதிய அனுபவங்கள் இருக்கிறதென்றாலும்
சிலவற்றை சொல்லாமல் விடுவது
மழை மாலையில் முத்தங்களை தவறவிடுவதற்கு ஒப்பானது

நண்பன்

unread,
Jul 28, 2008, 12:38:56 AM7/28/08
to panb...@googlegroups.com
அனுபவங்கள் - இருக்கிறது?
 
பலமுறை வரும் காதல்.....?
 
சொல்லி விட்டு, முத்தங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

 
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

http://nanbanshaji.blogspot.com/
http://littleblossoms.blogspot.com/
http://alternatemovies.blogspot.com/

அய்யனார்

unread,
Jul 28, 2008, 1:00:30 AM7/28/08
to panb...@googlegroups.com
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..

jmms

unread,
Jul 28, 2008, 1:07:12 AM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
ஹஹ. நல்லாருக்கு, என் பார்வையில்..

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 3:35:49 AM7/28/08
to panb...@googlegroups.com
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?

திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)

2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:

jmms

unread,
Jul 28, 2008, 3:43:59 AM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?

திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)
 
 
அதே பயம்தான் எனக்கும்.. எனக்குகூட புரியுதே கவிதைலாம்னு சந்தேகம் வந்துடுச்சு... ரொம்ப அறிவாளி ஆயிட்டேனோன்னு...
 
( பயம் வேற .. ஒரு வேளை அப்படி கிப்படி ஆயி, நானும் எழுத ஆரம்பிச்சா  என்னாகும்.. ??? )

2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


 

 

Gnaniyar

unread,
Jul 28, 2008, 3:48:45 AM7/28/08
to panb...@googlegroups.com


2008/7/28 jmms <jmms...@gmail.com>



On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?

திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)
 
 
அதே பயம்தான் எனக்கும்.. எனக்குகூட புரியுதே கவிதைலாம்னு சந்தேகம் வந்துடுச்சு... ரொம்ப அறிவாளி ஆயிட்டேனோன்னு...

வாசிப்பவர்களுக்கு புரியலைனா உணர்வு நிலை கவிதை
எழுதுறவனுக்கும் புரியலைன்னா உயர்வுநிலை கவிதையாம்..

அப்படின்னா இது எந்த வகை அய்யனார்?  :)
 
( பயம் வேற .. ஒரு வேளை அப்படி கிப்படி ஆயி, நானும் எழுத ஆரம்பிச்சா  என்னாகும்.. ??? )

2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


 

 

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================




--
Warm Regards,

K.Gnaniyar Zubair,
Software Developer,
TransIT mPower Labs (P) Ltd,
Bangalore

www.nilavunanban.blogspot.com
www.vithaigal.blogspot.com
www.lifebyliferay.blogspot.com

அய்யனார்

unread,
Jul 28, 2008, 3:51:26 AM7/28/08
to panb...@googlegroups.com
அண்ணாச்சி
100 காதல் கவுஜ எழுதலாம்னு இருக்கேன்..கவிஜ எழுத தேவையே படாத விசயம் மூளை.... காதல் கவுஜ எழுதனும்னா இன்னும் சந்தோசம்.அதுக்கு எதுவுமே தேவை கெடயாது..அதுனால இந்த ப்ராஜக்ட முடியும்வர நான் ஏற்கனவே கெளப்பியிருந்த பீதியலாம் மறந்திடுங்க
 

அய்யனார்

unread,
Jul 28, 2008, 3:56:49 AM7/28/08
to panb...@googlegroups.com

மக்கள்ஸ்

இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்

jmms

unread,
Jul 28, 2008, 4:14:19 AM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:

மக்கள்ஸ்

இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்

 
இந்த டமில் வார்த்தைக்கு டிக்ஷனரி எங்கே கிடைக்குமோ?..:-)

அய்யனார்

unread,
Jul 28, 2008, 6:28:15 AM7/28/08
to panb...@googlegroups.com
உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம் எரிச்சல்
மகிழ்வு சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

Gnaniyar

unread,
Jul 28, 2008, 6:33:10 AM7/28/08
to panb...@googlegroups.com


2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>

நல்லாயிருக்கு அய்யனார்... அழகிய கற்பனை

நல்லவேளை பூனைக்குட்டி ஞாபகம் வந்தது உங்களுக்கு

நிறையபேருக்கு புலிக்குட்டிதான் ஞாபகம் வருது  :)

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 7:06:20 AM7/28/08
to panb...@googlegroups.com
இதைத்தான் புலி பூனையாகிறதென்று சொல்வார்கள் போல :-)
புல்லத் தின்னாம நல்லாஇருந்தா சரிடே!!

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:16:39 AM7/28/08
to panb...@googlegroups.com
இந்தக் கோடையில் வேண்டாம்
சாயங்கால கசகசப்புகளும்
அனலும்
இந்நாட்டில் மிக அதிகம்
நீளமான இறக்கைகள் கொண்ட
வெள்ளை நிறப் பறவைகள் வரத்துவங்கும்
குளிர் கால மாலையில்
சந்திக்கலாம்.
ஒரு தேநீரும்
சில மணிநேரங்களும் போதும்
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும்
கருணையின் கண்களை

rvc

unread,
Jul 28, 2008, 7:25:34 AM7/28/08
to பண்புடன்
நீங்க என்னதான் லைட்டா எழுதணும்னு நெனச்சாலும் உள்ளிருக்கும் புலி
விடமாட்டேங்குது போலயே? :)

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 7:34:23 AM7/28/08
to panb...@googlegroups.com
அதுவும் அடர்கானகத்துப் புலி :-)
ஏனயா புலி? சூடு காலம்ன்னா கருணையான கண்களைப் பார்க்க முடியாதா?
குளிர் காலம்ன்னா நீங்க ஏன் கருணையைத் தேடுறீங்கன்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்?

ஆனாலும்.. சும்மா வெயிலுக்கு இதமாத்தான்யா இருக்கு கவிதை

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:37:52 AM7/28/08
to panb...@googlegroups.com
சேகர்..புலியையும் போர்ஹேவையும் நான் தூக்கி தூரப் போட்டு ரொம்ப
நாளாச்சி..நண்பர்கள்தான் இன்னும் புலியை விடாம
வச்சிட்டிருக்காங்க...மத்தபடி நான் புலிக்கவிஞன் இல்ல :)

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:53:31 AM7/28/08
to panb...@googlegroups.com
நீ வராத நாட்களின் மீது
நமக்கான 'இது'
மிக அழுத்தமான தடயங்களை
பதித்துச் செல்கிறது...

வந்த நாட்களில்
நாம் தவறவிட்டவைகளை
இந்த நாட்கள்
மாயக்கண்ணாடியின் லாவகத்தோடு
கண்முன் கொண்டுவருகிறது.
மின்னி மறையும் ஒவ்வொன்றும்
சொல்லிப்போகிறது நமக்கான
இதை

மேலும்
நமக்கான இதில்
மெளனங்களே மிகவும் வசதியானது

Kathir

unread,
Jul 28, 2008, 7:54:53 AM7/28/08
to panb...@googlegroups.com
எத?

2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>
நீ வராத நாட்களின் மீது



--
kathir

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:59:28 AM7/28/08
to panb...@googlegroups.com
அதாம்பா :))

Kathir

unread,
Jul 28, 2008, 8:00:17 AM7/28/08
to panb...@googlegroups.com
எதாம்பா.................................?

2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>
அதாம்பா :))





--
kathir

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:03:07 AM7/28/08
to panb...@googlegroups.com
அடக் கெரகமே சில வெசயங்கள சொல்லாம வுட்டாதான்யா அழகு..எது எது னு
அண்ணாச்சி இவனலாம் தட்டி கேட்க ஆளே இல்லையா
:@@

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 8:03:42 AM7/28/08
to panb...@googlegroups.com
அதேதாம்பான்னா எதேதாம்பான்னு  கேட்டா
அந்த அதேதாம்பாவை எப்படி இதேதாம்பானு சரியா சொல்றது?


எதாம்பா.................................?


அதாம்பா :))

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:10:13 AM7/28/08
to panb...@googlegroups.com
நீயற்ற கணங்களில் பெருக்கெடுக்கும்
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
நீயிருக்கும் கணங்களில்
சொல்ல முடியாதென்பதால்
இப்போதாவது சொல்லிவிடவா?..

வேண்டாம்..

சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
அறியத் தராதைவைகளை
பறிமாரிக்கொள்ளாதவைகளை
அறிய
துணிய
விழைய
சிறிது காலம் எடுக்கலாம்
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:22:49 AM7/28/08
to panb...@googlegroups.com
கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:31:41 AM7/28/08
to panb...@googlegroups.com
உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை

Kathir

unread,
Jul 28, 2008, 8:34:28 AM7/28/08
to panb...@googlegroups.com
போதும் நிப்பாட்டு....

2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>
உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே



--
kathir

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:36:47 AM7/28/08
to panb...@googlegroups.com
வந்துட்டே இருக்கே என்ன செய்ய :D

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 8:45:10 AM7/28/08
to panb...@googlegroups.com
அடகக்வே முடியாம வர்றதுக்கு இது என்ன ஊச்சாவா?
வெறும் கவுஜைதானலே சவத்ஹ்து மூதி?

கொஞ்சம் நிப்பாட்டுனாத்தான் என்னவாம்?
பாவம் பச்சப்புள்ள கதிரு பயப்படுதான்லா.

அவன் எழுதுறதைப் படிச்சு இப்படித்தான எல்லாரும் பயப்படுதாவன்னு
இப்பவாவது அந்த சவதது மூதிக்குப் புரிஞ்சா சரி

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 9:16:17 AM7/28/08
to panb...@googlegroups.com
நீ வந்த நாட்களில்
பூனைக்குட்டியின் ரோமங்கள் உதிர்ந்த
அது
த்டயம் பதிக்கிறது

பசித்த புலியின்
வயிறு போல
பேரிரைச்சலாய் வந்து செல்கிறது
இச்சை தூண்டும் உன் நினைவு

வெயில்
கசகசத்தால்தான் என்ன
கசந்தா போய் விடும்?
குளிர்காலம் வருவதற்குள்ளாவது
கருணைப்பார்வைக்காக
உன் குருட்டு விழியை
அறுவை சிகிச்சை செய்து தொலை


2008 ஜூலை 28 15:54 அன்று, Kathir <flash...@gmail.com> எழுதியது:

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Jul 28, 2008, 10:52:02 AM7/28/08
to panb...@googlegroups.com

அனைத்துக் கவிதைகளும் மிக அருமையாக இருக்கின்றன;

அறுவைசிகிச்சை செய்யச்செய்து...
சோடாபுட்டி கண்ணாடி அணியச் செய்திடுவோம்

நீங்க வீணா டென்ஷனாகாதீங்க அண்ணாச்சி!
சொன்னா கேட்டுவிடும் அது;

"சவத்து மூதி" நம்ம ஏரியா வழக்குச் சொல் போல் இருக்கிறதே...



2008/7/28, Asif Meeran AJ <asifm...@gmail.com>:

நண்பன்

unread,
Jul 28, 2008, 4:27:29 PM7/28/08
to panb...@googlegroups.com
அய்யனார்,
 
மனம் மிகவும் மென்மையாக இருக்கிறது போல் உணர்கிறீர்களா?
 
மீண்டும் ஒரு முறை காதலித்துப் பார்க்கச் செய்துவிடும் போலிருக்கிறதே!!!!
 


 

jmms

unread,
Jul 28, 2008, 10:16:31 PM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
ஹஹஹ.. எப்டி இப்டிலாம்??? :-))

jmms

unread,
Jul 28, 2008, 10:17:07 PM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
அடகக்வே முடியாம வர்றதுக்கு இது என்ன ஊச்சாவா?
வெறும் கவுஜைதானலே சவத்ஹ்து மூதி?

கொஞ்சம் நிப்பாட்டுனாத்தான் என்னவாம்?
பாவம் பச்சப்புள்ள கதிரு பயப்படுதான்லா.

அவன் எழுதுறதைப் படிச்சு இப்படித்தான எல்லாரும் பயப்படுதாவன்னு
இப்பவாவது அந்த சவதது மூதிக்குப் புரிஞ்சா சரி
 
 
ஹஹஹ.. ஹையா  ...எங்கூரு பேச்ச்சு..:-)))

வந்துட்டே இருக்கே என்ன செய்ய :D

jmms

unread,
Jul 28, 2008, 10:18:22 PM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
யாருங்க உங்க மனைவியா... இப்பத்தானே உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?

jmms

unread,
Jul 28, 2008, 10:20:42 PM7/28/08
to panb...@googlegroups.com


On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
அதேதாம்பான்னா எதேதாம்பான்னு  கேட்டா
அந்த அதேதாம்பாவை எப்படி இதேதாம்பானு சரியா சொல்றது?
 

 

 
:-))))

 
எதாம்பா.................................?


 
அதாம்பா :))

 

ஆதவா

unread,
Jul 29, 2008, 1:39:23 AM7/29/08
to panb...@googlegroups.com
முன்பு முயல்குட்டி இப்போ பூனைக்குட்டியா?

பேச்சு என்ற ஒலிப்புலனுக்கு பூனைக்குட்டியின் முகங்கள் ஒத்துவரவில்லை.
அவள் முகம் வேண்டுமானால் பூனைக்குட்டியின் ஞாபகம் தரலாம் ஆனால் குரல்
எப்படி>? அது பூனையின் குரலை அல்லவா ஞாபகம் படுத்தவேண்டும்??

ஏதோ தெரிஞ்சது சொன்னேங்க...

நல்ல கவிதைங்க..

On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:

ஆதவா

unread,
Jul 29, 2008, 1:33:58 AM7/29/08
to panb...@googlegroups.com
பாசைகளற்றது காதல். ஆனால்
ஆசைகளற்றதா?

முயல் மொழி அறியும் ஆவல் - காதல் பித்து தலைக்கேறிய நிலையோ?? (சும்மா!!!)

நல்ல கவிதை அய்யனார். (கத்தி வெச்சு மிரட்டுவியலா?)

காதலியின் மொழி உருவகம் நல்ல கற்பனை...

On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:

> மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
> நீ உதிர்க்கும்
> ஒவ்வொரு சொல்லும்
> பதுங்குவதற்கு குழிகளற்ற
> பசுஞ்சமவெளியின்
> பிரம்மாண்டம் கண்டு மிரளும்
> முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
> முயல் மொழியறிந்தோர்
> யாராவது சொல்லுங்களேன்
> பசுஞ்சமவெளிகளில்
> பயங்களில்லையென..
>
> >
>

ஆதவா

unread,
Jul 29, 2008, 1:43:44 AM7/29/08
to panb...@googlegroups.com
ஆக மொத்தத்தில ஒரு முடிவாத்தான் இறங்கியிருக்கீங்க.... அசாத்துங்க...
கவிதையை நிப்பாட்டாதீங்க... ரொம்ப அடக்கி பீறிட்டு வரதவிட, மெல்ல பொங்கி
வருவதே பெஸ்ட்...

வாழ்த்துகள் அய்யனார்

அய்யனார்

unread,
Jul 29, 2008, 3:34:44 AM7/29/08
to panb...@googlegroups.com
தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட 
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.

 

அய்யனார்

unread,
Jul 29, 2008, 3:46:02 AM7/29/08
to panb...@googlegroups.com
ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது

 

Asif Meeran AJ

unread,
Jul 29, 2008, 4:33:01 AM7/29/08
to panb...@googlegroups.com
தெரிந்ததென்று சொல்லியிருந்தாலும்

சொன்ன அந்த இதழை
சுவைக்கத்தோன்றியது
ன்னு கெளம்பியிருப்ப..

மொதத்துல, நீ எங்க எதுக்கு எப்படி நடமாடுறன்னு எங்களுக்குத்தானய்யா
தெரியும்? :-)

பிரேம்குமார்

unread,
Jul 29, 2008, 4:39:34 AM7/29/08
to panb...@googlegroups.com

ஆகா, அய்யனார்... இப்படி அடிச்சு ஆடுறீயேப்பா

//தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்

பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை

தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது//

எல்லாம் வ‌ய‌சுக் கோளாறு
//


இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்

//

:)


//ஆழப் புகைக்கலாம் // ரொம்ப‌ முக்கிய‌ம்

அத்தோடு
உன்னை முத்தமிட்ட 

தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.

ந‌ல்லா வ‌ருது வாயில‌,..

காத‌லாய் க‌சிந்துரும் ந‌ல்ல‌தொரு க‌விதை அய்யனார். எனினும் எழுதிய‌ ந‌ம்ம‌ அய்ய‌னார் அப்ப‌டீன்னு நினைக்கையில‌ ....

அய்யனார்

unread,
Jul 29, 2008, 4:56:33 AM7/29/08
to panb...@googlegroups.com

ஒரு மனுசனுக்கு காதலே வரக்கூடாதா இல்ல அவன் காதல் கவிஜ தான் எழுதக் கூடாதா இப்படி தப்பர்த்தம் பண்ணியே திரியுறிங்களே..நான் ரொம்ப நல்லவன்யா பாருங்க காதல் கவிஜ லாம் எழுதுறேன் :)

அய்யனார்

unread,
Jul 29, 2008, 5:07:29 AM7/29/08
to panb...@googlegroups.com
செயின்ட் த்ரேஸ் தெருமுனையில்தான்
அந்த சிவப்பு நிற ரோஜாவினை வாங்கினேன்
வழக்கமாய் சந்திக்கும் ரூ டுமாஸ் சாலை முடிவில்
புன்னகைகளோடு காத்துக்கொண்டிருந்தாள்
நேரு வீதி நெரிசலென விரல் பிடித்துக் கொண்டாள்
வெகு நேரம் தாங்கவியலாது
ரோமன் ரோலன்ட் வளைவில் சினிமாத்தனமாய்
ரோஜாவினைக் கொடுத்து காதலைச் சொன்னேன்
இத்தனை நாளா இதுக்கென சலித்து
நடுரோட்டில் கட்டிக்கொண்டாள்

kutty....@gmail.com

unread,
Jul 29, 2008, 5:50:46 AM7/29/08
to பண்புடன்
ரொம்ப நல்லாயிருக்குங்க அய்யனார் :))

//இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.
//
//பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது
//

//இத்தனை நாளா இதுக்கென சலித்து
நடுரோட்டில் கட்டிக்கொண்டாள்//

Asif Meeran AJ

unread,
Jul 29, 2008, 6:25:32 AM7/29/08
to panb...@googlegroups.com
பாண்டிச்சேரியில ஒரு தெரு விடாம
தெருத்தெருவா
சுத்தி அலைஞ்சீங்க போல



Asif Meeran AJ

unread,
Jul 29, 2008, 6:26:03 AM7/29/08
to panb...@googlegroups.com
 
ரோஜாவினைக் கொடுத்து காதலைச் சொன்னேன்
இத்தனை நாளா இதுக்கென சலித்து
நடுரோட்டில் கட்டிக்கொண்டாள

மோதிக் கொண்டனர்
எதிர்த்திசைகளில் வந்த வாகனஓட்டிகள் :-)

கார்த்திக்

unread,
Jul 29, 2008, 8:29:23 AM7/29/08
to பண்புடன்
அருமை தொடருங்கள்.

அய்யனார்

unread,
Jul 30, 2008, 2:00:07 AM7/30/08
to panb...@googlegroups.com
புத்தகங்களாலும் அழுக்குத் துணிகளாலும்
நிரம்பிக் கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசிக்கொள்வதாய் சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன்

 

Gnaniyar

unread,
Jul 30, 2008, 2:08:34 AM7/30/08
to panb...@googlegroups.com


2008/7/30 அய்யனார் <ayya...@gmail.com>


நல்ல கற்பனை அய்யனார்

அப்படியென்றால் அழகில்லாத அந்த மீன் யார்? :)

அய்யனார்

unread,
Jul 30, 2008, 2:46:50 AM7/30/08
to panb...@googlegroups.com
இந்த செல்லிடைப்பேசிக்கள் அப்போது மிகக் குறைவு
நெட் சாட் என எதுவும் இல்லாமலிருந்தது
அவளின் விடுதிக்கு தொலைபேச
பெண்கள் அமர்ந்திருக்கும்
எஸ்டிடி பூத் களையே நம்பியிருந்தேன்
என் அலுவலக நேரத்திற்குள் அவள் தொலைபேசிவிடுவாள்
தினம் கடற்கரைக்கு போவோம்
அதே ரோமண்ட் ரோலன்ட் வளைவில் முத்தங்களோடு பிரிவோம்
அவள் கடைசியாய் தொலைபேசியபோது
எங்களிருவரிடமும் சொந்தமாய் தொலைபேசி இருந்தது

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 3:51:49 AM7/30/08
to panb...@googlegroups.com

யப்பா, மொத்த புதுவையையும் சுத்தி காட்டுடிவீங்க போல....

புதுவையில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு காட்சி அடிக்கடி காணக்கிடைக்கும்.

காதலி மிதிவண்டியில் போய் கொண்டிருப்பார். காதலன் பைக்கில் அவளது வேகத்துக்கே பக்கத்தில் போய் கொண்டிருப்பார். பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். பார்த்து கொள்ளவும் மாட்டர்கள் (எனக்கு தூரத்தில் இருந்து அப்படி தான் தெரிந்தது) எங்கோ போய் கொண்டே இருப்பார்கள்.

உங்கள் கவிதைகள் அந்த நாட்களை நினைவுப்படுத்தின அய்யனார் :)


//தினம் கடற்கரைக்கு போவோம்
அதே ரோமண்ட் ரோலன்ட் வளைவில் முத்தங்களோடு பிரிவோம்//

உங்கள மாதிரி ஆட்களாலே தான்யா புதுச்சேரியோட கலாச்சாரமே கெட்டுப்போயிடுச்சு ;)))))))))))))))

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 3:52:20 AM7/30/08
to panb...@googlegroups.com
என்னைக்காவது துணீயைத் துவைச்சுத் தொலைங்கடே!1
எப்பப்பாரு. கவிதையிலும், புனைவிலும் ,புண்ணாக்கிலும் மறககாம
வ்ந்துடுது இந்த அழுக்குத்துணி

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 3:53:23 AM7/30/08
to panb...@googlegroups.com

காதலி மிதிவண்டியில் போய் கொண்டிருப்பார். காதலன் பைக்கில் அவளது வேகத்துக்கே பக்கத்தில் போய் கொண்டிருப்பார். பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். பார்த்து கொள்ளவும் மாட்டர்கள் (எனக்கு தூரத்தில் இருந்து அப்படி தான் தெரிந்தது) எங்கோ போய் கொண்டே இருப்பார்கள்.


பிரேமு, பைகெல்லாம் சைக்கிள் வேகத்துல ஓட்டுவீங்களா???
சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவே  யில்ல..
வீட்டுக்காவது தெரியுமா இப்படி ஓட்டுறது?

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 3:54:37 AM7/30/08
to panb...@googlegroups.com

//செயின்ட் த்ரேஸ் தெருமுனையில்தான்


அந்த சிவப்பு நிற ரோஜாவினை வாங்கினேன்
வழக்கமாய் சந்திக்கும் ரூ டுமாஸ் சாலை முடிவில்
புன்னகைகளோடு காத்துக்கொண்டிருந்தாள்
நேரு வீதி நெரிசலென விரல் பிடித்துக் கொண்டாள்
வெகு நேரம் தாங்கவியலாது
ரோமன் ரோலன்ட் வளைவில் சினிமாத்தனமாய்

ரோஜாவினைக் கொடுத்து காதலைச் சொன்னேன்
இத்தனை நாளா இதுக்கென சலித்து

நடுரோட்டில் கட்டிக்கொண்டாள்//

செயிட்ன் தெரஸ் வீதியில் என்னைக்குய்யா ரோசாப்பூ வித்துருக்காங்க??? நான் அந்த தெருவில் இருக்குற பள்ளியில தான் 12 வருசம் படிச்சேன். ஆனால் அப்படி பூ வித்ததா நினைவேயில்லை. ஒருவேளை நான் அவ்வளவு வெகுளியா இருந்திருப்பேன்.....

சில‌ கால‌ங்க‌ளே வ‌சித்தாலும் புதுவை உங்க‌ளை நிர‌ம்ப‌ பாதித்திருக்கிற‌து போலும் ;)

ம்ம்ம், ரோமன்ட் ரோலண்டு வீதியை கடக்க நேரிட்டாலே இனி உங்கள் கவிதையின் நினைவு வரக்கூடும் அய்யனார் :)

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 3:55:40 AM7/30/08
to panb...@googlegroups.com


பிரேமு, பைகெல்லாம் சைக்கிள் வேகத்துல ஓட்டுவீங்களா???
சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவே  யில்ல..
வீட்டுக்காவது தெரியுமா இப்படி ஓட்டுறது?

அண்ணாச்சி, அப்ப‌டி ஒரு வாய்ப்பு என‌க்கு கிடைக்க‌வேயில்ல‌. நான் சொன்ன‌து நான் பார்த்த‌ காட்சிக‌ள் ;)

 

Gnaniyar

unread,
Jul 30, 2008, 3:56:21 AM7/30/08
to panb...@googlegroups.com


2008/7/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>

 பின்தொடர்வது ஒரு பக்கம் இருக்கட்டும்..வெகு தொலைவில் யாரோ தடியுடன் பின்தொடர்வதும் அரசல் புரசலாக தெரிகின்றது பிரேம்?

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 3:56:25 AM7/30/08
to panb...@googlegroups.com

சரிங்கண்ணா!! முழுசா நம்பிடோம். :-))

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 3:57:45 AM7/30/08
to panb...@googlegroups.com

யோவ் அய்ய‌னார‌ப்பா... உன் க‌விதையை சிலாகிச்சு பேசினா என்னை இப்ப‌டி ம‌ட‌க்கி ம‌ட‌க்கி க‌லாய்க்கிறாங்க‌.

க‌லிகால‌ம்பா

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 3:58:38 AM7/30/08
to panb...@googlegroups.com
ஞானியார்

தம்பியை என்ன நெனச்சீங்க?
அவர் புறமுதுகுகாட்ட மாட்டாரு.
நெஞ்சுலேயே வாங்கிக்குவாரு.
எதையும் தாங்கும் இதயமய்யா அவரு

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 4:00:02 AM7/30/08
to panb...@googlegroups.com
அய்யனார் கிட்ட அரிவாள் வாங்கி பென்சில் சீவணும்
அதை விட்டுட்டு அவரு கவிதை எழுதுனாராம்
இவரு சிலாகிச்சாராம். பொறவு என்ன செய்வாங்க>

கவிதை எழுதுனவரையே என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டிருக்கோம்
இதுல் இவரு வேற?

Gnaniyar

unread,
Jul 30, 2008, 4:01:00 AM7/30/08
to panb...@googlegroups.com
2008/7/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அய்யனார் கிட்ட அரிவாள் வாங்கி பென்சில் சீவணும்

அதை விட்டுட்டு அவரு கவிதை எழுதுனாராம்
இவரு சிலாகிச்சாராம். பொறவு என்ன செய்வாங்க>

கவிதை எழுதுனவரையே என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டிருக்கோம்
இதுல் இவரு வேற?



ஹா ஹா ஹா

ஏன் இந்த கொலைவெறி ஆசிப்..?   :)

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 4:01:32 AM7/30/08
to panb...@googlegroups.com
சுத்தம்!! கண்ட காட்சி ஒன்றினை ப‌திவு செய்ய‌ விட‌மாட்டேங்குறாங்க‌... :)))
 
வ‌ர‌ வர‌ ம‌க்க‌ளுக்கு பாச‌ம் பீறிக்கிட்டு வ‌ருது. முடிய‌ல‌ ;))))

அய்யனார்

unread,
Jul 30, 2008, 4:01:59 AM7/30/08
to panb...@googlegroups.com

ப்ரேம் பெடிட் ல படிச்சிட்டு அப்பாவின்னா நாங்க நம்பனுமாக்கும்... அண்ணாச்சி பேச்சிலர் ரூம் ன்னா அழுக்குத்துணிதான் சிம்பல் அடூர் கோபாலகிருஷ்ணன் சொன்னதுலாம் மறந்துபோச்சா....
 

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 4:04:05 AM7/30/08
to panb...@googlegroups.com

நேத்து ந‌ம்ம‌ 'கோ'வுக்கு போன‌ போட்டு 'யோவ், ந‌ம்ம‌ அய்ய‌னார் ஒரே காத‌ல் க‌விதையா பொழியிராருன்னு' சொன்னேன்...

'அவ‌ர் க‌ல்யாண‌த்துக்கு வாழ்த்து சொன்ன‌ போதே, கேட்டேன். இனிமே காத‌ல் க‌விதை எழுதுவீங்க‌ தானே'ன்னு... இப்போ அது ந‌ட‌ந்திருச்சான்னு ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டாரு !!! ;-)))

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 4:26:28 AM7/30/08
to panb...@googlegroups.com
ஆமா. நான் கூ டகேள்விப்பட்டிருக்கேன்
பெடிட் ல படிச்சா 'செமி' 'நாறி' யாமே?? அப்படியா பிரேம்? :-)



ப்ரேம் பெடிட் ல படிச்சிட்டு அப்பாவின்னா நாங்க நம்பனுமாக்கும்... அண்ணாச்சி பேச்சிலர் ரூம் ன்னா அழுக்குத்துணிதான் சிம்பல் அடூர் கோபாலகிருஷ்ணன் சொன்னதுலாம் மறந்துபோச்சா....

அடூரையும,் உன் அழுக்குத் துணியையும் (முடிஞ்சா உன்னையும் உள்ள வச்சு) தீயை வச்சு கொளுத்தணூமய்யா

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 4:28:00 AM7/30/08
to panb...@googlegroups.com
பின்ன என்ன ஞானியார்??
அவங்கவங்க அவங்கவங்களுக்கு விதிக்கப்பட்டதைத்தான் செய்யணும்

அய்யனார்ன்னா அதுல அடர்கானகம், புலி, அம்மணமா நீலி இவங்க எல்லாம்
வரணும். அதெல்லாம் இல்லாம போரடிக்குதுல்ல? :-)

பிரேம்குமார்

unread,
Jul 30, 2008, 4:32:18 AM7/30/08
to panb...@googlegroups.com

ஆகா! அண்ணாச்சி, உங்க‌ளுக்கு புதுவை ப‌த்தி இத்த‌னை விவ‌ர‌ம் தெரியும்னு தெரியாம‌ போச்சே!

அண்ணாச்சி, பெத்தி செமினேர் ப‌ச‌ங்க‌ எல்லாம் ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ய‌லுவ‌ அண்ணாச்சி.. ந‌ம்புங்க‌!!! :)
 
 

Asif Meeran AJ

unread,
Jul 30, 2008, 4:47:56 AM7/30/08
to panb...@googlegroups.com

ஆகா! அண்ணாச்சி, உங்க‌ளுக்கு புதுவை ப‌த்தி இத்த‌னை விவ‌ர‌ம் தெரியும்னு தெரியாம‌ போச்சே!அண்ணாச்சி, பெத்தி செமினேர் ப‌ச‌ங்க‌ எல்லாம் ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ய‌லுவ‌ அண்ணாச்சி.. ந‌ம்புங்க‌!!! :)

ஆமாம் நம்பிட்டேன்
நம்ம கூட பொறியியல் படிச்ச பசங்க எல்லாம் புதுசேரி மக்கள்தான்
அதனால புச்சேரிக்குப் போகாம இருக்க மாட்டேன்

நம்ம பயலுவளும் பெத்தி செமினேர்தான்
அதனாலதான் அந்தப் பசங்க எவ்வளவு நல்லவங்கன்னு எனக்குத் தெரியும்ணு சொல்றேன் :-)

Thanigai.

unread,
Jul 30, 2008, 5:09:47 AM7/30/08
to panb...@googlegroups.com
பிரேம் அண்ணாச்சி உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறேன்..

அய்யனார்

unread,
Aug 4, 2008, 2:05:29 AM8/4/08
to panb...@googlegroups.com
அங்கே பனி பொழிந்துகொண்டிருக்கலாம்
செய்வதற்கு எதுவுமற்ற பிற்பகலில்
போர்வைக்குள் முடங்கியபடி
என் பேச்சுக்களை நினைவில்
தருவித்துக் கொண்டிருக்கலாம்
அதிகபட்சமாய் என் முத்தங்களையோ
கோபங்களையோ நினைத்துச்
சிரித்துக்கொண்டிருக்கலாம்
இங்கே பகல் பனிப்பொழிவுகள் இல்லை
.............
..............
நீயுமில்லை

lucky shajahan

unread,
Aug 4, 2008, 2:18:27 AM8/4/08
to panb...@googlegroups.com
சில கவிதைகளின் இறுதி வரிகள் தீர்மானிக்கின்றன
கவிதையின் அழகை...
 
நல்ல நினைவு பொழிவு...

 
2008/8/4, அய்யனார் <ayya...@gmail.com>:



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

அய்யனார்

unread,
Aug 4, 2008, 3:36:07 AM8/4/08
to panb...@googlegroups.com
விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது
கருத்த வயல் வெளியில் அலையும் மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..

அய்யனார்

unread,
Aug 4, 2008, 4:14:29 AM8/4/08
to panb...@googlegroups.com
சும்மா கவிதையெழுதவாச்சுக்கும்
உன்னை நினைத்துக்கொள்வது
என் போலித்தனங்களின் மீது
இன்னும் வெறுப்பைக் கூட்டுகிறது
என்ன செய்ய
உன்னை நினைத்துக்கொண்டால்தான்
கவிதையும் வந்து தொலைகிறது

Asif Meeran AJ

unread,
Aug 4, 2008, 4:55:09 AM8/4/08
to panb...@googlegroups.com
அய்சு
கலக்குற மகனே!


அப்ப  நினைப்புல தீயை வச்சு கொளுத்துனா கவிதை தன்னால நின்னுடும்தானே?!  :-)

Ayyanar

unread,
Aug 6, 2008, 8:53:07 AM8/6/08
to panb...@googlegroups.com
அயர்ச்சியாகவும் சலிப்பாகவுமிருக்கிறதென்றாய்
என்ன செய்வதென்று யோசித்துப்பார்த்தேன்
இப்போதைக்கு இவைகளை
மாற்றிக் கொள்வதாய் உத்தேசமில்லை
இன்னும் புதிய யுக்திகளோடு
உன்னை நெருங்குவதைத் தவிர வேறுவழியில்லை
உனக்கான என் அன்பை
ஆக்டோபஸின் வடிவமொத்து
எல்லாத் திசைகளிலும் விரித்தாயிற்று
ஒரு புள்ளியில் குவிய
இனிமேல் சாத்தியமில்லை
..........
காதலித்துதான் தொலையேன்

கென்

unread,
Aug 6, 2008, 8:57:47 AM8/6/08
to panb...@googlegroups.com
உனக்கான என் அன்பை
ஆக்டோபஸின் வடிவமொத்து
எல்லாத் திசைகளிலும் விரித்தாயிற்று
 
:)
 

கண்ணி வச்சி பிடிக்கிறியா காதல புலி
 
பாத்து நீயே சிக்கிக்க போற
 
பொய்யான  கவிதை இதுதான் ( வேற யாரவது சண்டைக்கு வந்திட போறாங்க)
2008/8/6 Ayyanar <ayya...@gmail.com>

Ayyanar

unread,
Aug 6, 2008, 11:13:07 AM8/6/08
to panb...@googlegroups.com
கவிதைக் கண்ணி க்கு லாம் எந்த கன்னியும் சிக்குறதில்ல கென் :) குறைந்த
பட்சம் ஒரு நல்லாருக்கு நல்லால்லன்னு கூட யாரும் சொல்றதில்ல ..எல்லாம்
வெவரமாயிட்டாங்க..சும்மா பொலம்பல்ஸ் தான் பெரிசா ஒண்ணும் இல்ல.

Ayyanar

unread,
Aug 9, 2008, 8:42:17 AM8/9/08
to panb...@googlegroups.com
கவிதையில் நெகிழ்வைக் கொண்டுவர
என்னால் எப்போதும் முடிந்ததில்லை
செய்வதில் விருப்பமில்லையாதலால்
அதனை அப்படியே விட்டுவிட்டேன்.
தென்னைமரங்களின் சலசலப்புகளுக்கிடையில்
மோனத்தில் ஆழ்ந்திருந்த
ஓர் பின்னிரவில் கிசுகிசுத்தாள்
"உன் கவிதைகள் வறட்டுத்தனமானவை"
இவை இப்படித்தான் வருகின்றன
என்ன செய்யவென வருந்தினேன்..
 
கிழக்கின் ஒற்றை நட்சத்திர மினுங்களில்
கண் விழிக்கச் செய்தாள்
பூவிதழ்கள் மிதக்கும் குளுமை நீரில் முங்கியெடுத்து
பன்னீர்பூக்களுதிரும் மரத்தினடியில்
நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் நிற்கப் பணித்தாள்
அந்தியின் வண்ணங்களெடுத்து கூடு திரும்பும் பறவைகளின்
இறக்கைகளுக்கு தடவிவிட பயிற்சித்தாள்.
 
இப்போதெல்லாம் உங்களால்
நெகிழ்வை உணரமுடிகிறதல்லவா
என் கவிதைகளில்?...
 
Message has been deleted

Thooya

unread,
Aug 10, 2008, 8:40:55 AM8/10/08
to பண்புடன்
நல்லாயிருக்கு...

On Jul 28, 3:00 pm, "அய்யனார்" <ayyana...@gmail.com> wrote:
> மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
> நீ உதிர்க்கும்
> ஒவ்வொரு சொல்லும்
> பதுங்குவதற்கு குழிகளற்ற
> பசுஞ்சமவெளியின்
> பிரம்மாண்டம் கண்டு மிரளும்
> முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
> முயல் மொழியறிந்தோர்
> யாராவது சொல்லுங்களேன்
> பசுஞ்சமவெளிகளில்
> பயங்களில்லையென..

Ayyanar

unread,
Aug 11, 2008, 12:46:41 AM8/11/08
to panb...@googlegroups.com

மஞ்சம்பில் வேய்ந்த கூரையின் குளுமை
சாணி மெழுகிய மண்தரையின் தணிவு
முருங்கைப்பூத் தேன் உண்ட
தேன்சிட்டுக்களின் உற்சாக 'ட்விட்' 'ட்விட்'
எல்லாவற்றையும் எப்படி
உதடுகளில் தேக்கி வைத்திருக்கிறாய்?
 

Ayyanar

unread,
Aug 11, 2008, 7:07:14 AM8/11/08
to panb...@googlegroups.com
ஒரு மாலையின்
மேகக் கவனித்தலின்போது*
நினைவை அசைத்தது
அந்தியின் பொன்னிறம்
மேகத்தை விட்டு
அடிவான நிறங்களில் கரையும்போது
இரவுப்பெண் தன் நீளக் கருங்கூந்தலினால்
வானத்தை மூடவாரம்பித்தாள்
அது உன் கூந்தலிழைகளில் புதையும்
என் முகத்தினையொத்தபடி
நிறங்களை விடுவித்து
கருமையில் புதைந்து கொண்டது.

* cloud watching a medidation by osho

Ayyanar

unread,
Aug 11, 2008, 7:09:52 AM8/11/08
to panb...@googlegroups.com
meditation**

Manjo...@gmail.com

unread,
Aug 11, 2008, 9:19:12 AM8/11/08
to பண்புடன்
ஆறு, நதி இரண்டும் வெவ்வேறா?


கங்கை ஆறு, கங்கை நதி, தாமிரபரணி ஆறு, தாமிரபரணி நதி

இவையெல்லாம் வெவ்வேறா?

Asif Meeran AJ

unread,
Aug 11, 2008, 12:16:06 PM8/11/08
to panb...@googlegroups.com
ஆமாம் மஞ்சூராரே

கங்கையும் தாமிரபரணியும் வெவ்வேறுதான்
அய்யனார் கவிதையைப் படிச்சுட்டு இப்படியெல்லாம் சந்தேகம் கேடடா எப்படி?

ஆதவா

unread,
Aug 11, 2008, 2:19:19 PM8/11/08
to panb...@googlegroups.com
சிதறும் வார்த்தைகளைப் பொறுக்கி நெஞ்சில் அழுத்தி இட்ட தண்மை வடு.
பூக்கள் பேசிக் கொள்ளும் நேரத்தைக் கண்விழித்து கவனித்து அவற்றின் மொழி
அறிய முற்பட்டதில் உங்கள் கவிதையின் எழில் கொஞ்சும் வார்த்தைகளே
நியாபகத்திற்கு நின்றன. மூளும் மேகத்தின் உச்ச காமத்தில் பொழியும்
திரவமென முற்றிலும் நனைந்துவிட்டு இல்லம் திரும்புகிறேன்...

ஆம்,

உங்கள் கவிதை படிக்கும் போது ஏனோ அத்தகைய நெகிழ்வு ஏற்படுகிறது.

Ayyanar

unread,
Aug 12, 2008, 12:46:12 AM8/12/08
to panb...@googlegroups.com
சுந்தர்
ஓடை,சிற்றாறு,ஆறு,நதி என நீர் வடிவம் அளவு இவைகளுக்கேற்ப பெயர்பெறுகிறது
மேலதிகமாய் ஆறுகள் என்னை எப்போதும் திருப்திபடுத்தியதில்லை எனக்கானவை
நதிகள் மட்டுமே :)

நன்றி ஆதவன்

Ayyanar

unread,
Aug 12, 2008, 4:00:45 AM8/12/08
to panb...@googlegroups.com
கூடுகளை விரும்பிடாத பறவையொன்றின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இளைப்பாறல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனெனினும்
பறவையின் வசீகரம் இளைப்பாறல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்

Ayyanar

unread,
Aug 12, 2008, 4:21:01 AM8/12/08
to panb...@googlegroups.com
அழுத்தக்காரியென்பேன் அவளை
மிகுதியாய் ஒரு வார்த்தையோ
தேவையில்லா ஒரு அசைவோ
எப்போதும் நிகழ்த்தியதில்லை
ஒரு விடியலில் வெளிச்சமென உள்நுழைந்தவள்
மிகுந்த குழப்பங்களை சுமந்து வந்திருந்தாள்
எப்போதோ செய்த சிறு தவறினுக்காய்
மருகிக்கொண்டிருந்தவளின்
கன்னம் பற்றி உதடுகளில் முத்தமிட்டேன்
உடைந்து அழ ஆரம்பித்தவளின் கண்ணீர்
அறையை நிறைத்தது

Ayyanar

unread,
Aug 13, 2008, 3:59:23 AM8/13/08
to panb...@googlegroups.com
திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில்
நம்மைத் தொலைத்தது அந்த இசை
வீணையின் அதிர்வுகளில்
நினைவு
முடிவிலியின் சுவர்களில் மோதி
இரத்தமிழந்தது
இப்போது உன் உதடுகளிலிருந்து துவங்குவதே
மிகச்சரியானதாயிருக்கக்கூடும்

Ayyanar

unread,
Aug 14, 2008, 1:16:17 AM8/14/08
to panb...@googlegroups.com

யானையைப் பார்த்து மிரண்ட உன் விழிகள்
இன்றைய கலையா விழிப்பின் முதல் நினைவானது


தொடர்ச்சியாய்

இருளில் சொல்லப்படும் பேய்க்கதைகளுக்கு 
இறுக மூடிக்கொள்ளும் விழிகளும்
கதை மிகவதிக பயங்களாக உருக்கொள்கையில்
தாங்கவியலாது
என் கதைகளைத் துண்டிக்கும்
உன் உதடுகளின்
மெல்லிய நடுக்கமும்
நினைவிலதிர்ந்தது
உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்ததுப் பறந்திருந்தது
நிகழ் சிட்டுக்குருவி

 


Ayyanar

unread,
Aug 14, 2008, 8:26:19 AM8/14/08
to panb...@googlegroups.com
ஓர் நட்சத்திர ஒளியிரவில்
கொடிமுல்லைப் படர்ந்திருந்த
பால்கனியில்
அந்நட்சத்திரக் கண்களை
முத்தமிட எண்ணியிருந்தேன்
நேற்றைய பிற்பகலில்
வெயிலுண்டு வந்தவள்
'கண்ணில முத்தம் கொடு'வென
கட்டிக்கொண்டபோதுதான்

பார்த்தேன்
அவள் உடல் முழுக்க
கண்களாலாயிருந்ததை
 

Ayyanar

unread,
Aug 14, 2008, 8:43:04 AM8/14/08
to panb...@googlegroups.com
உன் அழுகைக்கான துவக்கப்புள்ளி
எதுவாக வேண்டுமானாலும்
இருந்து விடுகிறது
சொல்லப்படாத அன்பு
தேக்கி வைத்த கோபம்
சமரசம் செய்து கொண்ட எதிர்பார்ப்புகள்
இன்னும் நீண்ட இப்பட்டியலில்
எப்படியோ சேர்ந்துகொள்கிறது
விழிப்பில் விடுபட்டுப்போன
என் முத்தமும்
 

ரௌத்ரன்

unread,
Aug 14, 2008, 9:22:28 AM8/14/08
to பண்புடன்



// ஓர் நட்சத்திர ஒளியிரவில்
கண்களாலாயிருந்ததை//

வெறுமனே நல்லாருக்குனு சொல்ல அலுப்பா இருக்குங்க...வேறென்ன சொல்றதுன்னும்
தெரியல....

Asif Meeran AJ

unread,
Aug 14, 2008, 9:37:54 AM8/14/08
to panb...@googlegroups.com
வெறுமனே நல்லாருக்குனு சொல்ல அலுப்பா இருக்குங்க...வேறென்ன சொல்றதுன்னும்
தெரியல..


ரொம்ப சுலபம்
நல்லா இல்லேன்ன்னு சொல்லிடுங்க :-)
நம்ம அய்யனார்தானே? கண்டுக்கவே மாட்டாரு.

என்ன் பிரச்னைன்னா அவரு பகல்லேயே நட்சத்திரம் பார்த்துட்டு
ராத்திரியில் சூரியனைப் பத்திக் கவிதை எழுதுவாரு.

lucky shajahan

unread,
Aug 14, 2008, 10:29:33 AM8/14/08
to panb...@googlegroups.com
//என்ன் பிரச்னைன்னா அவரு பகல்லேயே நட்சத்திரம் பார்த்துட்டு

ராத்திரியில் சூரியனைப் பத்திக் கவிதை எழுதுவாரு.
//
 
அதுதான் ஆசிஃப் அண்ணா கவிஞர்களை பிரித்துக் காட்டும் அடையாளம்


 
2008/8/14, Asif Meeran AJ <asifm...@gmail.com>:

Ayyanar

unread,
Aug 17, 2008, 8:14:22 AM8/17/08
to panb...@googlegroups.com
நள்ளிரவுப் பயணங்களில்
அவளின் பால்யங்கள் மீண்டும்
உயிர்கொள்ளவாரம்பிக்கின்றன
தூக்கம் மிதக்கும் விழிகளும்
துவளும் உடலும்
மடியிலும் தோளிலும்
மாறி மாறித் தூங்கும்
சலனமற்ற அம் முகத்திலிருந்து
குறும்புகள் மிகுந்த சிறுமியினைக்
காண முடிகின்றது
தலைமுடி கோதி
நெற்றியில் முத்தமிடுகையில்
விழித்துக்கொள்கிறாள்
அவ்வப்போது பால்யங்களுக்கு
சென்று திரும்பும் அபூர்வக் கன்னி

Kathir

unread,
Aug 17, 2008, 8:15:45 AM8/17/08
to panb...@googlegroups.com
நாராயணா......

2008/8/17 Ayyanar <ayya...@gmail.com>



--
kathir
It is loading more messages.
0 new messages