வித்யா,ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை..

12 views
Skip to first unread message

Anitha Jayakumar

unread,
Mar 26, 2008, 8:33:53 AM3/26/08
to panb...@googlegroups.com
திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும், விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும் தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை பாவாடை அழகியின் நடுபக்க புகைப்படம் போலவோ வெறும் ஆர்வம் ஈர்ப்பவை. வலியறியாதவை.
 
போன மாதம் பெங்களூருவின் பிரதான சிக்னல் அருகே ஒரு திருநங்கை ஒரு காய்கறி விற்பவளுடன் வெகு சகஜமாக பேசுவதை பார்த்தேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து, சாயங்காலத்தில் ஊர் கதை பேசும் இரெண்டு பெண்களை போல அத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் ஊர் கதை பேசியிருக்க கூடும். விலைவாசிப்பற்றி பேசியிருக்கக்கூடும். அரசியல் கூட பேசியிருக்கலாம். 
 
வித்யாவின் வலைப்பூவை எனக்கு சில மாதங்களுக்கு முன்பு யாரோ காட்டியபோது கூட "இதை எழுதறது ஒரு அரவாணி" என்றார்கள்.  திருநங்கை எழுதுவதாலேயே கவனம் பெற்றது அந்த வலைப்பூ. இன்று அவருக்கு பெரிதாய் உதவமுடியாவிடினும் அவரை சக வலைப்பதிவராக, கருணை கண்ணோட்டம் தவிர்த்து இயல்பாய் ஏற்றுக்கொண்டிருக்கிறாகள். வலைப்பூ எழுதுபவர்கள் மத்தியிலும் புத்தகம் படிப்பவர்கள் மத்தியிலும் வித்யாவால் இன்று அரவாணிகள் குறித்தான பார்வை ஆரோக்கியமாக மாறியிருப்பது உண்மை. ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.
 
திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும், நாளைய மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான். சீரியலிலும், கணினித்துறையிலும் கால் சென்டர்களிலும் முடங்கி கிடக்கும் இவர்களில் நிறைய பேருக்கு நேரமிருப்பதில்லை, இருந்தாலும் படிக்கும் வழக்கமில்லை, படித்தாலும் ஆங்கில மர்ம நாவல்களிலும் வார பத்திரிக்கை விட்டுகளிலும் தேங்கி விடுகிறார்கள். வாழ மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இவர்களைபோன்றவர்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றிய பார்வைகளை மாற்றுவது மிகவும் தேவையான, அதே நேரம் மிக கடினமான வேலையாகிறது.
 
வெளிச்சம் பரப்பும் மகிழ்ச்சியான அதிரடியான நிகழ்ச்சியாக துவங்கியிருக்கிறது "இப்படிக்கு ரோஸ்". அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் -  இது இங்கலிஷ் கூட பேசுதே என்று. அவள் பேசுவதும் தன்னை முன்னிறுத்தும் விதமும் நான் வேற்று கிரகவாசி இல்லை, உங்களில் ஒருத்தி என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. தள்ளி நின்றே இத்தனை நாளும் இவர்களை பார்த்தவர்களுக்கு வரும் சந்தேகங்களும் ஆச்சர்யங்களும் இருக்கத் தான் செய்யும்.. இருக்கட்டும். இது ஆரம்பம் தான்.
 
இந்த நிகழ்ச்சியில் அரவாணிகளின் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதில்லை. மாறாக, ரோஸ் என்ற திருநங்கை சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் விவாதிக்கிறாள், நேருக்கு நேராய் கேள்விகள் கேட்கிறாள். ஆசுவாசபடுத்துகிறாள், நம்பிக்கையூட்டுகிறாள். சாவகாசமாக ஒரு திருநங்கையை பார்ப்பது, அவள் குரலை கேட்பது, அவளை உற்று நோக்குவது என போதுமான அறிமுகங்கள் கிடைக்கின்றன. அவர்களை சாதாரண மனிதர்களாக பார்க்க பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தடைகள் களைந்து மெல்ல வெளிவருகிறார்கள். அந்த திருநங்கையின் மீதிருந்து கவனம் அகன்று அவள் பேசும் விஷயத்திற்கு மெல்ல நகரத்துவங்கியிருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் உணர்ந்திருப்பார்கள்.
 
நமக்கு நடக்காது என்ற மனோபாவம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான் மனத்தடைகளுக்கு காரணம். மனத்தடைகளால் விளையும் குழப்பமும், குழப்பத்தால் பயம் விளைவதும், பயத்தால் திருநங்கைகளை வீட்டிலிருந்து புறக்கணிப்பதும் நிகழ்கிறது. வித்யாவின் வீட்டாரோ ரோஸின் வீட்டாரோ அவர்களின் வளர்ச்சியிலும் துணிச்சலிலும் எத்தனை பூரித்துபோவார்களென தெரியவில்லை.
 
ஒரு திருநங்கை உருவாகிறாளென அறிந்துக்கொள்வது அத்தனை கடினமல்ல. உடல்ரீதியான, மனரீதியான குழப்பங்களால் நம் குழந்தை தனிமைபடுமேயானால் சில நாள் கவனம் குவித்து கண்காணிக்கலாம். ஒரு பெண் பருவத்திற்கு வரும்போது பயப்படாதேம்மா இது ஒன்றும் இல்லை சரியாகிடும்  என்று சாதாரணமாக கவுன்ஸிலிங் செய்வதில்லையா?
பெற்றோருக்கு தெரியவில்லையெனில் திருநங்கையாக மாறுபவர்களுக்கென நிறைய கவுன்சலிங் வழங்கபடுகிறது. இங்கு முதலில் நடக்க வேண்டியது பயம் களைதல், பெற்றோருக்கும், குழந்தைக்கும். பல வருடங்களாக தன்னை ஒரு பாலோடு இணைத்து யோசித்த குழந்தைக்கு பால் மாறும்போது மிகுந்த பாதுகாப்பும், நம்பிக்கையும் தேவையாயிருக்கும். மருத்துவரீதியாக குழந்தைக்கு என்னன்ன வேண்டுமோ செய்யலாம். விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஒரு குழந்தை போராடுமேயானால் எத்தனை செலவு செய்தும் காப்பாற்றுவதில்லையா?
 
திருநங்கைகள் உருவாவதை தடுக்கமுடியாவிடினும் அவர்களை ஒரு குடும்பத்திலிருந்து விலக்காமல் ஏற்றுக்கொள்வோமென்றால் அதுவே அவர்கள் வாழ்வை சீராக்குவதற்கான முதல் முயற்சி. இப்பொழுது கணிணித்துறையில் எங்கும் ஜாதி பார்ப்பதில்லை. பாலின பேதங்கள் இல்லை. ஆரோக்கியமாகவும் விரிவாயும் சிந்தித்தோமென்றால், திருநங்கைகளை பக்கத்து கேபினிலோ, ரயிலுக்கு நம் முன்னே பயணசீட்டு எடுத்துக்கொண்டோ, கட்சி ஊர்வலங்களிலோ, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலோ குடும்பத்துடனோ நண்பர்களுடனோ உறுத்தாமல் பார்க்க முடியலாம். காலம் மாறும்.
 
 

NilaRaseegan

unread,
Mar 26, 2008, 8:42:45 AM3/26/08
to panb...@googlegroups.com
நல்ல பதிவு அனிதா. திருநங்கை என்கிற வார்த்தைகூட வித்யாவின் வலைப்பதிவை படித்த பிறகே தெரிந்துகொண்டேன். இப்படிக்கு ரோஸ் வரவேற்க தக்கது.

2008/3/26 Anitha Jayakumar <anit...@gmail.com>:



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

karthik

unread,
Mar 26, 2008, 10:18:58 AM3/26/08
to பண்புடன்
நல்ல பதிவு அனிதா.இரண்டு வாரங்களுக்கு முன் இரு பாலியல் தொழிலாளரை ரோஸ்
பேட்டி கண்டவிதம் மிகவும் அருமை.அன்னிகழ்ச்சியில் எழுத்தாளர் சாருவும்
உடனிருந்தார்.
ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.

//திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும்,
நாளைய
மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான்.//

ஏன் ஒருவர் திருநங்கையாக பிறக்கிறார் என்பதை ஞானியின் அறிந்தும்
அறியாமலும் படிக்கும் வரை எனக்கும் தெரியாது.

http://bp0.blogger.com/_UwhM_S4i6Y8/R8xC-1QTBwI/AAAAAAAAAUQ/aQ21-mTGSZc/s1600-h/rose01.jpg

http://bp0.blogger.com/_UwhM_S4i6Y8/R8xDM1QTBxI/AAAAAAAAAUY/bhriGt3mEMA/s1600-h/rose02.jpg

On Mar 26, 5:42 pm, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> நல்ல பதிவு அனிதா. திருநங்கை என்கிற வார்த்தைகூட வித்யாவின் வலைப்பதிவை படித்த
> பிறகே தெரிந்துகொண்டேன். இப்படிக்கு ரோஸ் வரவேற்க தக்கது.
>
> 2008/3/26 Anitha Jayakumar <anith...@gmail.com>:
> ...
>
> read more »

N Suresh, Chennai

unread,
Mar 26, 2008, 12:09:13 PM3/26/08
to panb...@googlegroups.com
நல்ல பதிவு.
வித்யா இன்னமும் ஒரு நல்ல வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதாக சொன்னார்கள்.
இவர் போன்றோரை மனித நேயத்துடன் உதவ எல்லோரும் முன் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
 
நட்புடன்
என் சுரேஷ்

Asif Meeran AJ

unread,
Mar 27, 2008, 2:36:22 AM3/27/08
to panb...@googlegroups.com
அனிதா

நல்ல பதிவை முன்னிட்டமைக்கு நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன்
நாமே முற்படுத்தலைன்னா வேறு யார் செய்வாங்களாம்? :-)

வித்யா - தமிழ்ச்சமூகத்தில் எண்ண மாற்றங்களை உர்வாக்கியதில் இவரது
ப்ங்கு கணிசமானது. அவரது 'மரணம் மட்டுமா மரணம்' கவிதை என்னை உலுக்கிய
அளவுக்கு இன்னொரு அதிர்ச்சிமிகு கவிதையை தேடிக்கொண்டுதானிருக்கிறேன்


பிரேம்குமார்

unread,
Mar 27, 2008, 6:54:18 AM3/27/08
to panb...@googlegroups.com

நல்லதொரு கட்டுரை அனிதா. நானும் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக போய்க்கொண்டிருக்கிறது..

ஆனா இந்த வாரம் 'ஐ.டி துறை' பற்றி நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் போலும். பாத்துட்டு நாளைக்கு பெரிய பதிவு ஒன்னு போடனும் ;-)
 
நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க

Anitha Jayakumar

unread,
Mar 28, 2008, 8:56:56 AM3/28/08
to panb...@googlegroups.com
கருத்துக்களை பரிமாறிகொண்ட அனைவருக்கும் நன்றி.

karthik

unread,
Mar 29, 2008, 5:21:39 AM3/29/08
to பண்புடன்
// இந்த வாரம் 'ஐ.டி துறை' பற்றி நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள்
போலும். பாத்துட்டு நாளைக்கு பெரிய பதிவு ஒன்னு போடனும் ;-) //

பிரேம்.நிகழ்ச்சிய பாத்திங்கள ?

பிரேம்குமார்

unread,
Mar 31, 2008, 6:44:01 AM3/31/08
to panb...@googlegroups.com

பாத்தேன் கார்த்திக். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்கள் பற்றி பேசினார்கள். மூன்று ஆண் மக்களை அழைத்து வந்து 'தகவல் தொழில்நுட்ப' துறையில் வேலை பார்த்ததால் என் மனைவி என்னை விட்டு பிரிந்துவிட்டார்' என்று மூவரும் குற்றும் சுமத்தினார்கள்.

அதில் ஒருவர் 'என் அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் அம்மா எப்படி பதறுவார் தெரியுமா? காபி போடட்டுமா, சாப்பாடு கொண்டு வரட்டுமா என்று கேட்ட வண்ணம் இருப்பார். ஆனால் என் மனைவியோ என்னை கண்டுக்கொள்வதேயில்லை' என்று ஒரே புலம்பல். த‌ற்கொலைக்கும் முய‌ற்சித்தோம் என்று வெட்க‌மே இல்லாம‌ல் சொல்கிறார்க‌ள்

கேட்டுவிட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை. அட எப்போதும் போல், 'ஆமாங்க‌, த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறை ஒரு சாப‌க்கேடு, அதில் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் சாத்தான்க‌ள் என்ப‌து போல் முடிப்பார்க‌ள், நாமும் வாடகைக்கு ரூம் போட்டாவ‌து ஒரு ஐந்தாறு ப‌திவு எழுத‌ வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

ந‌ல்ல‌ வேளையாக PSYCHIATRIST மரு.ஷாலினி நிக‌ழ்ச்சியில் தோன்றினார். அவ‌ர்க‌ளை போல‌ அல‌ட்டிக்கொள்ளாம‌ல், 'இவ‌ர்கள் எல்லாம் அவ‌ர்க‌ளது ம‌னைவிய‌ர் எந்த‌ துறையில் இருந்தாலும் இப்ப‌டித்தான் புல‌ம்புவார்க‌ள். வேலைக்கு செல்லும் போது ம‌னைவி புதுயுக‌த்தில் வாழ‌ வேண்டும், ஆனால் வீட்டுக்கு வ‌ந்துவிட்டால் ப‌ழைய‌கால‌ம் மாதிரி இருக்க‌ வேண்டும் என்று யோசிப்ப‌து எவ்வ‌கையில் நியாய‌ம்' என்று ஆரம்பித்து எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார். புல‌ம்பிய‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் தாவு தீர்ந்த‌து, ட‌வுச‌ர் க‌ழ‌ண்ட‌து

என‌க்கு நிம்ம‌தியா தூக்க‌ம் வ‌ந்த‌து :))))))

 

karthik

unread,
Mar 31, 2008, 7:42:45 AM3/31/08
to பண்புடன்
//ந‌ல்ல‌ வேளையாக PSYCHIATRIST மரு.ஷாலினி நிக‌ழ்ச்சியில் தோன்றினார்.
அவ‌ர்க‌ளை
போல‌ அல‌ட்டிக்கொள்ளாம‌ல், 'இவ‌ர்கள் எல்லாம் அவ‌ர்க‌ளது ம‌னைவிய‌ர்
எந்த‌
துறையில் இருந்தாலும் இப்ப‌டித்தான் புல‌ம்புவார்க‌ள்.//

பிரேம் அவங்க பேசுனத கேட்டப்போ இப்படிக்கூட நடக்குமாங்குற மாதிரி
இருந்தது.அவாகள் பேச்சின் உச்சகட்ட காமடி பிறன்மனைபுகுதல்.
முதலில் பேசிய மூவரில் சிவக்குமார் பேசியது சரியென்றேபடுகிறது.

பிரேம்குமார்

unread,
Mar 31, 2008, 8:12:34 AM3/31/08
to panb...@googlegroups.com

சிவ‌குமார் சொன்ன‌ க‌ருத்துக்க‌ளோடு நான் க‌ண்டிப்பாக‌ ஒத்துப் போகிறேன். ஆனால் அவ‌ரே அத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை ச‌ரியாக‌ சொன்னார்.

வீட்டில் சுத‌ந்திர‌ம‌ற்று வ‌ள‌ரும் பிள்ளைக‌ள், கேட்க‌ ஆளிள்ளாத‌ அள‌வுக்கு சுத‌ந்திர‌ம் கிடைக்கும் போது ஆசைப்ப‌ட்ட‌தையெல்லாம் பரீட்சித்து பார்ப்பார்க‌ள். ஐ.டி துறை தான் என்றில்லை, இவ‌ர்க‌ள் சொல்லும் குற்றச்சாட்டு வீட்டைப் பிரிந்து வேலை பார்க்கும் எல்லோருக்கும் பொருந்தும். வெளியூரில் த‌ங்கி ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ளுக்கும் இது பொருந்தும்.

அந்த‌ பெண் (சே! பெய‌ர் ம‌ற‌ந்துப்போச்சு) நான் ப‌ணிபுரியும் அதே அலுவ‌ல‌க‌த்தில் தான் ப‌ணிபுரிகிறாராம். அவ‌ர் சொன்ன‌ மாதிரியெல்லாம் எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் ந‌ட‌க்க‌ வாய்ப்புக‌ள் இல்லை. நானும் அங்கே தான் 4 வருசமா வேலை செய்யுறேன், ஆனா எனக்கு மட்டும் இந்த மாதிரி செய்திகள் தெரியவே மாட்டேங்குதுப்பா

ஐ.டி. காரர்களுக்கு ஆதரவாக பேச முற்பட்டவர் மோசமான தேர்வு. பாவம் திருவிழாவில் காணாமல் போனவர் மாதிரி திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்...பாவம்!

karthik

unread,
Apr 1, 2008, 8:54:39 AM4/1/08
to பண்புடன்
// ஐ.டி. காரர்களுக்கு ஆதரவாக பேச முற்பட்டவர் மோசமான தேர்வு. பாவம்
திருவிழாவில்
காணாமல் போனவர் மாதிரி திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்...பாவம்! //

பிரேம் ஒருவேளை இந்த நிகழ்ச்சியும் இந்த பதிவர் சொன்ன மாதிரிதானா?

http://jazeela.blogspot.com/2008/02/blog-post.html

பிரேம்குமார்

unread,
Apr 1, 2008, 11:57:51 PM4/1/08
to panb...@googlegroups.com

கார்த்திக் குறிப்பிட்ட அந்த பதிவு. எழுதியது வேறு யாருமல்ல, நம்ம 'காணாமல் போன ஜெஸிலா' தான்

நாடகமே உலகம்

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

பிரேம்குமார்

unread,
Apr 2, 2008, 12:04:23 AM4/2/08
to panb...@googlegroups.com
கண்டிப்பாக கார்த்திக். 'அரட்டை அரங்கம்' நிகழ்ச்சியில் நாம் கொண்டு போகும் ஸ்கிரிப்டையே மாற்றிவிடுவார்கள் என்று முன்பே அதில் கலந்துக்கொண்ட என் தோழி ஒருவர் கூறியிருக்கிறார். 'நீயா நானா' நிகழ்ச்சியிலும் கோபிநாத்'தின் தலையீடு நிறைய இருக்கும், அவர்கள் பணம் கொடுத்து அமர்த்தும் ஆட்கள் தான் அதிகம் பேசுவார்கள் என்றெல்லாம் ஏற்கனவே நிறைய குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன. ஆக 'மெய் பாதி, பொய் பாதி' தான் இதில் சொல்லப்படும் செய்திகள் யாவும்
 
இப்போது தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட இப்போது NEWS REPORTING ஐ விட EMOTIONAL REPORTINGல் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்

Asif Meeran AJ

unread,
Apr 2, 2008, 3:29:33 AM4/2/08
to panb...@googlegroups.com
விசுவின் அரட்டை அரங்கம் மிக உச்சத்தில் இருந்த காலம்
ஆளாளுக்கு அந்தக் கண்றாவிக்காகக் காத்திருக்க நான் மொத்தமே நான்கோ ஐந்தோ
மட்டுமே பார்த்திருந்தேன். 'பொது ஜனம் கழுதை' என்பதை விசு நன்றாகப் புரிந்திருப்பதைப்
புரிந்து கொள்ள அந்த நான்கைந்து அரங்கங்களே போதுமானதாக இருந்தது

ஒரே மாதிரியான குரலில் பேசுவதும் அதீத உணர்ச்சிவசப்படல்களும் நாடகத்தன்மையும்
பார்த்ததுமே புலப்பட்டுவிட்டது (ஆனால் ஜெஸிலா எழுதியதும்தான் புரிந்ததாகச் சொல்லும்
மனிதர்கள் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது)

துபாயில் அரட்டை அரங்கம் ஏற்பாடு செய்ததும் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டார்கள்
முதல் இரண்டாம் சுற்றுகள் முடிந்து விட 'நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை' என்று என்னிடம்
கேட்டார்கள் விருப்பமின்மையைச் சொன்னேன். அ.அ பேச்சாளர்களைப் போல என்னால் அபத்தமாகவும்
நாடகத்தன்மையோடும் பேச முடியாதென்பதையும். 'நீங்கள் தேர்வுக்குச் செல்ல வேண்டாம். பேர் மட்டும்
நிரப்பி விண்ணப்பம் கொடுங்கள். நான் நேரடியாக விசுவிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்' என்றார் அந்த
மனிதர் - விழா ஏற்பாட்டாளர். வ்ணக்கம் சொல்லி மறுத்து விட்டேன்

இம்முறையும் அழைப்பு வந்தது
இம்முறையும் அதே வணக்கம்தான்.

நண்பரொருவர் அ.அவில் பேசிய பெருமையில் உலவிக்கொண்டிருந்தார்.
தங்கர் பச்சான் வந்திருந்தபோது அவ்ரிடம் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு
'நான் அ அவில பேசியிருக்கேன் சார்" என்றார் பெருமையோடு. "அதற்கென்ன இப்போ?" என்று
பதில் வந்தது. இவர் முகத்தில் ஈயாடவில்லை. "என்ன சார் இப்படிச் சொல்றீங்க? நாங்க
உண்ச்சியா பேசியிருக்கோம் சார்" என்றார் பேச்சாளர். 'உணர்ச்சியை ஒத்திகை பார்த்துத்தான்
சொல்வீங்களோ?" என்றார் பச்சான். பேச்சாளரைக் காணவில்லை.

நாடகத்தன்மை என்பது ஓரளவுக்கு விழிய ஊடகங்களில் உபயோகப்படுத்தத்தான் செய்வார்கள்
ஆனால் நாடக்மாகவே நிகழ்ச்சியை வடிவமைத்து பார்வையாளனை கேணையாக்கும் முயற்சியைத்தான்
ஜெஸிலா தைரியமாக வெளியே கொண்டு வந்திருக்கிறார். பாராட்டுக்குரிய விசயம்தான்
Reply all
Reply to author
Forward
0 new messages