வெற்றிமோகனும், தனிமொழியும்

1 பார்வை
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 7:28:57 AM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
" என்னடே அங்க தகராறு?"

" ஒண்ணுமில்ல அண்ணாச்சி. இவருக்கு என்னமோ பிரச்னையாம்?"

" என்ன பிரச்னைன்னுதானலே கேக்கேன். கேட்டுச் சொல்ல வேண்டியதுதானே?"

" அதெல்லாம் உங்க கிட்டத்தான் சொல்லுவாராம்"

" சரி வரச் சொல்லு"

" அண்ணாச்சி கூப்பிடுதாருடே!"

" வந்துட்டியாடே! சரி. சொல்லுடே. என்ன உன் பிரச்னை?"

" என் பிரச்னை என் பேருதான்"

" என்னடே உன் பேரு?"

" வெற்றி மோகன்"

" பேரு நல்லாத்தாண்டே இருக்கு. பொறவென்னடே பிரச்னை?"

" என் பேரை எதுலயுமே போட மாட்டேங்குறாங்க"

" என்னத்துல போடணும் உன் பேரை"

" சினிமா போஸ்டர்ல"

" அப்படியா? உன் பேரை போடுததுக்கு நீ என்ன படத்துல கதாநாயகனா?"

" இல்ல அண்ணாச்சி. பயபுள்ள ஏழாவது வரிசையில் எட்டாவதா நின்னுக்கிட்டு ஆடிக்கிட்டிருப்பான்"

" ஓ! 'க்ரூப் டான்ஸர்'ன்னு சொல்லு"

" ஆமா. இவனுவ எல்லாம் ஒரு 'க்ரூப்பாத்தான்' அலைவானுவோ. அதனால அபப்டியும் சொல்லலாம்"

" நீ சும்மா கிடலே! ஓலப் பாயில நாய் மோண்ட மாதிரி சலசலங்காத புரியுதா?.. நீ சொல்லுடே! உன் பேரை ஏன் போடணும்னு சொல்லுதே?"

" நான் கதக் படிச்சிருக்கேன். குச்சிப்புடி படிச்சிருக்கேன். பரதநாட்டியம் படிச்சிருக்கேன். உலகத்துலேயே 'நவீன நடனமும் தமிழ் மரபியல் சந்தங்களும்'னு 3000 பக்கத்துக்கு புத்தகம் எழுதிக்கிட்டிருக்கேன்"

" சரி அதுக்கு?"

" ஆனா நான், என் கூடச் சேர்ந்து ஆடுற முன்னோடி டாண்ஸர்ங்க பேரு எதையும் போடாம ஒழுங்கா ஆடவே தெரியாத 'பவள முத்து' பேரை நடன இயக்குனர்ன்னு போஸ்டர்ல போட்டு வெளம்பரம் பண்றாங்க. இது அயோக்கியத்தனம் இல்லையா?"

" இதுல என்னடே அயோக்கியத்தனம் இருக்கு?"

" நான் ந்ல்லா ஆடுவேன். அவனுக்கு ஆடவே தெரியாது"

" அதுக்கு என்னடே செய்ய முடியும்? நீ நல்லா ஆடுதேன்னு நீ மட்டும் சொன்னாப் போதுமா? மக்களும் சொல்ல வேணாமா? யாராவது தயாரிப்பாளர் கண்ணுல பட்டு அவரு உன்னை நடன இயக்குனர்ன்னு சொல்ற வரைக்கும் நீ பொறுமையா இருக்க வேண்டியதுதானே?"

" அது எப்படி? நான் கடந்த 50 வருசமா தன் வூட்டு புள்ளைங்களுக்கு டான்ஸ் சொல்லிக்குடுத்த புரா வாத்தியார் கிட்ட நடனம் படிச்சிருக்கேன்.அந்தத் தகுதி ஒண்ணே போதாதா?"

" புரான்னா?"

" என்ன இப்படி கேக்குறீங்க. புண்ணாக்கு ராமசாமியைத்தான் சுருக்கமா புரான்னு சொல்லுவோம்"

" சரிதான். அவரு சொல்லித் தந்தா மட்டும்தான் நாட்டியம்ன்னு நீயா நெனச்சுக்கிட்டா அதுக்கு நாங்களாடே பொறுப்பு? நீ அவர் கிட்ட படிச்சிருந்தா பவளம் வேற யார் கிட்டயாவது படிச்சிருக்கும்"

" அதெல்லாம் எப்படி நடனமாக முடியும்? புரா வாத்தியார்தான் தமிழ் நடனத்துக்கே குரு. அவர் ஆட்டுனா மட்டும்தான் அது நடனம் "

" இதப் பாருடே! உன்ன மாதிரி நாலு பேருக்கு மட்டும் குருவா இருக்குறவரையெல்லாம் குருன்னு சொல்லிக்கிடுததுக்கு உனக்கு வேணும்னா புல்லரிப்பா இருக்கலாம். எல்லாத்துக்கும் இருக்கணுமா என்ன?"

" சரி அதை விடுங்க. நான் எத்தனை வருசமா டான்ஸ் ஆடுறேன்? ஆனா நேத்து வந்தவ இந்த இங்கிலிஸ்காரி. அவ கதாநாயகியா நடிக்கிறான்னு அவ பேரை போஸ்டர்ல போடுறானுங்க"

" யாருடே போட்டா?"

" என் ஃபிரெண்டுதான். பேரு அமானுஷ்ய புத்திரன் "

" சவத்து மூதியா இருப்ப போல இருக்கே! எலே, ஊரு உலகத்துல கதாநாயகி, கதாநாய்கன் படத்தைத்தான் போஸ்டர்ல போடுவானுங்க. புரா வாத்தியாரு சிஷ்யன்னு சொல்லிக்கிட்டா ஏழாவது வரிசையில் எட்டாவதா ஆடுற ஆளு பேரைப் போடுவாங்களா என்ன?"

" அதையாவது விடுங்க. இன்னொரு டான்ஸர். பேரு தனிமொழி. அவங்க அப்பா நிறைய மேடையில் ஆடியிருக்காரு. ஆனாலும் அவருக்கு டான்ஸ் தெரியாதுன்னு நான் சொல்லி யிருக்கேன்"

"ஆதெப்படிடே அவருக்கு ஆடத் தெரியாதுன்னு நீ சொல்லுதே?"

" ஏன்னா அவரு ஆடுறது டான்ஸே கிடையாது"

" அதுசரி. உன்னை விட்டா வேற யாருக்கும் ஆடவே தெரியாதுன்னு சொல்லுவ போல இருக்கே?"

" அதத்தான் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னோட சிஹ்யனௌங்களைத் தவிர வேற ஒருத்தனும் கேக்குறதில்ல "

" புராவுக்கு நீ கிடைச்ச மாதிரி உனக்கும் ஆளு கிடைச்சுடுச்சு போல இருக்கு. பாத்துடே!"

" அத விடுங்க.அவரு பொண்ணு டான்ஸ் ஆட வந்தபோதே நான் சொன்னேன். அவங்க அப்பாவுக்கே டான்ஸ் தெரியாது. இந்தப் பொண்ணு எப்படி ஆடும்ன்னு. ஆனா ஒரு பயலும் கேக்கலை."

" ஆமா. வெவரம் கெட்டத்தனமா பேசுனா எவன் கேப்பான்?"

" இப்ப என்னடான்னா தனிமொழி டான்ஸ் ஆடலைன்னா கூட பரவாயில்ல. படத்தோட பூஜைக்கு வந்தாலே அவங்க படம் போட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டுறானுங்க"

" அது உனக்கு ஏண்டே வலிக்குது?"

" என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? உயிரைக் குடுத்து நான் டான்ஸ் ஆடுறேன்"

" உயிரை எடுக்குற மாதிரி ஆடுதேன்னுல்லா மக்கள் சொல்லுதாங்க"

" அது பவளமுத்துவோட ஆட்கள். நான் சொல்லுறது என் ஆட்டத்தைப் பாக்குறவங்க"

" சரிடே!!"

" ஆனா என் ஆட்டத்துக்காக என் பேரை எதுலயும் எவனும் போடுறதில்ல. புதுசா படம் எடுக்கப் போற என் நண்பர்கள் கூட தனிமொழி படத்தைத்தான் போட்டுத்தான் வெளம்பரம் பண்ணுவாங்க போல"

" அப்படின்னு சொன்னானுவளா உங்க கிட்ட?"

" இல்ல. நானாவே அப்படி நெனச்சுக்குறேன். அப்படிச் சொன்னாலாவது அவ படத்தப் போடாம இருக்கானுவளான்னு பார்க்குறேன்"

" நல்ல எண்ணம்டே உனக்கு!! பார்த்தியா? உன் கூட்டாளிங்களே உன்னை ஆட்டத்துல சேர்த்துக்கலைன்னா என்னடே அர்த்தம்? உன் படத்தையோ பேரையோ போட்டு வெளம்பரம் பண்ணுனா போணியாவாதுன்னு தெரிஞ்சிருக்கு அவங்களுக்கு. படம் எடுக்குறதே லாபம் பார்க்கத்தானடே! யாரு படத்தையும் பேரையும் போட்டா யாவாரம் ஆவும்னுதான் பட மொதலாளி பார்ப்பானே தவிர 'கதக்' தெரியும்கறதுக்காக உன் பேரைப் போடணும்னு எதிர்பார்த்தா என்னடே அர்த்தம்? ஏதோ உன்னையும் கூட்டத்துல ஒருத்தனா சேர்த்திருக்கானுவலேன்னு சந்தோசப்படுடே!! கவலைப்படாதே! "

" எனக்கு இதனால் வருத்தமெல்லாம் ஒண்ணும் கிடையாது. என்னை மாதிரி டான்ஸ் ஆட உலகத்துலேயே ஆளில்லன்னு என்க்கும் என் கூட்டாளிங்களுக்கும் மட்டும் நல்லாத் தெரியும்.
ப்வளமுத்துவோட ஆட்களுக்கு அதெல்லாம் தெரியாது "

" பொறவென்னடே!"

" இதயெல்லாம் வெளிய சொன்னாலாவது நாலு பேரு திரும்பிப் பார்ப்பாங்கன்னுதான் நானும் சொல்லிப் பார்த்தேன். அப்படியும் ஒரு பயலும் பார்க்கலை "

" அப்ப எவனாவது உன்னைச் சீந்தணும்னுதான் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு திரியுதியா? இந்தப் பாருடே! உன நல்லதுக்குச் சொல்லுதேன் கேட்டுக்கோ. புரா வாத்தியாரு சொல்லித் தந்து நீ ஆடுறது மட்டும்தான் நடனம்னு நெனக்கே பாரு, அந்த நெனப்பை மொதல்ல மாத்திக்கோ. சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம்னு இன்னும் நெறய ஆட்டமும் இருக்கு. அதெல்லாம் நீ கத்துக்குறியோ இல்லையோ இருக்குதுன்னு புரிஞ்சிக்கவாவது செய்.அது ரொம்ப முக்கியம்"

"எனக்கு அதெல்லாம் கவலையே இல்ல. என் பேரைப் போடலையேன்னு நான் வருத்தப்படவே மாட்டேன். என்ன மாதிரி டான்ஸ் ஆட ஆளே இல்லன்னு என் சீடனுங்களுக்கு மட்டும் நல்லா தெரியும். அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.

" அதுசரிடே! பொறவெதுக்கு இப்படிக் கெடந்து பொலம்புதே? சரி போவட்டும் வுடு. இந்தாப் புடி"

"என்னது இது?"

"ஜெலுசில் மாத்திரை - வேளைக்கு ஒண்ணோ ரெண்டோ சாப்பிடு. வயித்துல அநியாயத்துக்கு எரிச்சல் இருந்தா இந்த மருந்து நல்லா வேலை செய்யும். தெரியுதா? கையக் காலை ஒழுங்கா ஆட்டத் தெரிஞ்ச பய புள்ளங்குறதாலத்தான் இவ்வளவும் சொல்லியிருக்கேன். புரிஞ்சுதா? இனிமேலாவது போஸ்டர்ல பேரு போடலைன்னு ரோட்டுல வுழுந்து பொரண்டு அழுது புலம்பிக்கிட்டு திரியாம 'நாம உண்டு நம்ம நடனம் உண்டு'ன்னு இரு. புரியுதா?!!நல்லா இருடே! "

(இது முழுக்க முழுக்க புனைவு மட்டுமே)

அய்யனார் .

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 12:54:33 PM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com

இது சாதா புனைவு இல்ல அண்ணாச்சி..அசாத்திய புனைவு..செம கலக்கல் :))

pandii durai

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 6:49:41 PM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
அண்ணாச்சி டோட்டலா மாறிட்டாருடோ.
இதுதான் பகடியா அண்ணாச்சி.
ஆளாளுக்கு இதுதான் பகடி இதுதான் பகடினு சொல்லுதாக...............

Kasali Mohammed

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 2:17:20 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
யோவ் ஆசிப்,

நெசம்மாவே  மிக அருமை. கூறுகெட்ட எருமைகளைப் பத்தின அருமையான நக்கல். இதுக்காகவே நீர் சென்னை வரும்போது, சந்திப்பில் உமக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்வோம். (செலவு நிலா ரசிகனும், இலக்குவனும் வாலிப தாத்தாவும் பகிர்ந்து கொள்வார்கள்)

 தொடருமைய்யா உம்ம சேவையை.

கஸாலி


2008/2/18 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 2:49:57 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
யாரு வாலிபத் தாத்தா?
 
அன்புடன்
சுவாதி

2008/2/19 Kasali Mohammed <kasal...@gmail.com>:

Kasali Mohammed

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 7:01:16 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com


2008/2/19 Swathi Swamy <mswat...@gmail.com>:

யாரு வாலிபத் தாத்தா?

நீங்களே யோசிங்க.

Swathi Swamy

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 3:48:50 PM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com


2008/2/19 Kasali Mohammed <kasal...@gmail.com>:



2008/2/19 Swathi Swamy <mswat...@gmail.com>:

யாரு வாலிபத் தாத்தா?

நீங்களே யோசிங்க.
 
நீங்க தானே அது/

pandii durai

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 7:36:00 PM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com

கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்டிங்களே

Kasali Mohammed

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 9:01:55 PM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com

2008/2/19 Swathi Swamy <mswat...@gmail.com>:

யாரு வாலிபத் தாத்தா?

நீங்களே யோசிங்க.
 
நீங்க தானே அது/

அடப்பாவி மக்கா...சின்னப்புள்ளையப் போயி யோசிக்காம  இப்படிச் சொல்ல எப்படி மனசு வந்தது? சுவாதி... நான் உங்களோட 'டூ'.
நான் சொன்னது சாபு தாத்தாவைப் பற்றி.
 
அன்புடன்
சுவாதி

கஸாலி

Kasali Mohammed

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 9:03:16 PM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com


2008/2/20 pandii durai <pandi...@gmail.com>:


கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்டிங்களே

வாருமைய்யா பாண்டிதுரை...ரொம்ப சந்தோஷமோ?

கஸாலி

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 11:10:53 PM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
இதுக்குத்தான் ஸ்வாதி நீங்க வேனும்கறது
இந்தக் குழுமத்துல் உண்மையை உரக்கப் பேசுரதுக்கு நீங்க
ஒருத்தரவாது இருக்கீங்களே?!!
 
பாண்டி, இதுல யோசிக்க என்ன இருக்கு?
பார்த்தா பச்சக்குழந்த கூட சொல்லிடுமே
வாலிபதாத்தா கஸ்ஸாலின்னு :-)))


யாரு வாலிபத் தாத்தா?

Naresh Kumar

படிக்கப்படவில்லை,
20 பிப்., 2008, 9:41:41 AM20/2/08
பெறுநர் பண்புடன்
ஹ ஹா ஹா (பி.கு - நான் சிரிச்சேன்)

அண்ணாச்சி வர வர உங்க அழிச்சாட்டியம் அதிகமாகிட்டே போகுது!

யாராவது என்னான்னு கேளுங்களேன்.

On Feb 18, 5:28 pm, "Asif Meeran AJ" <asifmee...@gmail.com> wrote:
> " என்னடே அங்க தகராறு?"...
> read more »

Kasali Mohammed

படிக்கப்படவில்லை,
20 பிப்., 2008, 11:09:50 AM20/2/08
பெறுநர் panb...@googlegroups.com


2008/2/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

இதுக்குத்தான் ஸ்வாதி நீங்க வேனும்கறது
இந்தக் குழுமத்துல் உண்மையை உரக்கப் பேசுரதுக்கு நீங்க
ஒருத்தரவாது இருக்கீங்களே?!!
 
பாண்டி, இதுல யோசிக்க என்ன இருக்கு?
பார்த்தா பச்சக்குழந்த கூட சொல்லிடுமே
வாலிபதாத்தா கஸ்ஸாலின்னு :-)))

யோவ் ஆசிப்பு,

நான் வாலிப தாத்தான்னா...நீர் என்ன தொண்டுக் கிழமா? வாயைக் கொடுத்து மாட்டிக்காதீரும்.

sadayan sabu

படிக்கப்படவில்லை,
20 பிப்., 2008, 10:51:33 PM20/2/08
பெறுநர் panb...@googlegroups.com
சாத்தான்குளத்தார் தமிழுக்காக 'தொண்டு' செய்கிறார்.ஆதலின் அவர் தொண்டுக் கிழமே :-))
எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்