சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததின்ன
காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் நேரம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகந்தானிது போலும் வாழும் வழி கேட்டேன்
வண்ணக்கனவே வட்டநிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையோ..
பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
இந்த படத்தின் அத்தனை பாடல்களும் நம்மை முணுமுணுக்க வைத்தாலும், எனக்கு மிக பிடித்த பாடல் இதோ...
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
"அழகிய தீயே"ன்னு ஒரு படம் வந்தது..பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த படம்.இசை: ரமேஷ் வினாயகம்.ஆண்டு: 2004
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
தற்போது, எனக்கு மிகப் பிடித்தவரிகளில் மூன்றாமிடம் இதற்கு கொடுப்பேன். அலைகடல் என்று சொல்லும்போது ஒரு பிரம்மாண்டம், அழகு, வசீகரம் என்று பல நம் மனதில் எழும். அதுபோன்ற மனம் துளித்துளியாய் சிதறுதல் என்பது காதலால் எனும்போது வார்த்தைகளின் மீது ஒரு மரியாதை பிறக்கின்றது.
தூங்கிய இழையொன்றை மீண்டும் உயிர்ப்பித்தமைக்கு நன்றி அண்ணாச்சி. எனக்கு ரொம்ப நாளாக இருந்த வினாவை இந்த இடத்தில் எழுப்புகிறேன்
'ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்' என்பது இலக்கணப்படி சரியா?
ஒவ்வொரு பல்லிலுமே சிரித்தேன் என்றல்லவா வர வேண்டும்?
கவிதைதானே இரசிச்சிட்டுப் போங்க பிரேம்ஜி.. அனுபவிக்கனும் ஆனாஆராயப்படாது.. :-)
பாடல் : காதல் வைத்து காதல் வைத்து
படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : விஜய் யேசுதாஸ்
வரிகள் : நா.முத்துக்குமார்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
//என்னோட ஆசை இதுதான்
பேரரசு இயக்கத்தில் அகிலாண்ட நாயகன் ரித்தீஷ் நாயகனாகவும்
டி.ஆர் வில்லனாகவும் நடிக்கணும். அதை பண்புடன் மக்களையெல்லாம் கட்டிப் போட்டு
பார்க்க வைக்கணும்.எப்படி நம்ம நல்லெண்ணம்? (இழை திசை மாறிடுமோ?) //
2
--
இந்த பாடலை