கவிஞர் தா.காசீம்

47 views
Skip to first unread message

ஆசாத்

unread,
Dec 29, 2008, 6:38:21 AM12/29/08
to பண்புடன்
எனது வலைப்பதிவில் சென்ற நவம்பரில் எழுதியது. கவிஞர் தா.காசீம் குறித்து
இப்போது வேணுவின் இழையில் உரையாடல் வந்ததால், மறுபதிப்பு செய்கிறேன்.
ஏற்கெனவே படித்திருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பீர்.

அன்புடன்
ஆசாத்

கவிஞர் தா. காசீம்
___________

நாகூர் ஹனீபா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டிருப்போர் கவிஞர் தா.காசிம்
அவர்களின் வரிகளைக் கேட்டிருப்பார்கள். இளையராஜாவின் திரையுலக
வெற்றிக்குப் பிறகு நாகூர் ஹனீபா பாடிய கச்சேரிகளில் 'இளையராஜா
மெட்டமைத்துத் தந்த பாடல்' என்னும் அறிவிப்போடு பாடபட்ட பாடல்,
'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! - எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு சலாம் சொல்லு' இந்தப் பாடலை இயற்றியவர்
கவிஞர் தா.காசிம்.

'தீன்குலக் கண்ணு! - எங்கள்
திருமறைப் பொண்ணு!
மாண்புகளைக் காத்து நிற்கும்
மஹ்ஷரின் கண்ணு' இதை இயற்றியவரும் தா.காசிம்.

மடலாற்குழுமங்களில் அறிமுகமான நல்லோர்களால் யாப்பிலக்கணத்தின்
அடிப்படைகளை அறிந்துகொண்ட பின், மரபுக் கவிதைகளை வாசிக்கையில் அவற்றின்
எதுகை, மோனை, அசை, சீர், ஓசைநயம் இவைகளை, ரசிகன் என்னும் நிலையத் தாண்டி
மாணவன் என்னும் நிலையில் இருந்து அணுகிப்பார்த்த நாள்களில் தா.காசிமின்
'உதயங்கள் மேற்கே' என்னும் நூல் படிக்கக்கிடைத்தது.

சிறுவயது முதலே கேட்டு வளர்ந்த 'தாயிஃப் நகரத்து வீதியிலே' பாடலும்,
'தீன்குலக் கண்ணு' பாடலும் நூலின் துவக்கத்திலேயே இருக்க, கவிஞரின்
வரிகளுடன் ஏற்கெனவே உண்டாகியிருக்கும் தொடர்பு, அவரது விருத்தங்களைப்
படிப்பதில் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கியது. முந்தைய பதிவில்
குறிப்பிட்டதுபோல், ஆர்வம் இருக்கும் துறையில் வாசிப்பு அதிகமாகியது.
அங்கே வண்டிகள்; இங்கே விருத்தங்கள்.

*

'பெருநாளின் பிறைவிடு தூது!', திரவியம் தேடும் பாதையில் மனைவியைப்
பிரிந்திருக்கும் நண்பர்களுள் எத்தனை பேர் இதனை வாசித்திருப்பார்களென
அறியேன். ரசனையும், தனிமையும் இந்த விருத்ததின் சுவையை இன்னமும்
அதிகமாக்கூடும்.

நவீன கவிதைகளின் ரசிகர்கள் இவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் கவிதை
வந்துவிட்டதே இன்னுமென்ன பழைய விருத்தங்களில் ஆழ்வது
என எண்ணலாம். அதுவும் ஒருகோணம்.

நட்சத்திர வாரம் எனக்குத் தரப்பட்டிருப்பதால் வழமையைவிடவும் அதிகமான
நண்பர்கள் இடுகையினைப் படிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை ஒரு வாய்ப்பாக
எண்ணி, என்னைக் கவர்ந்த எண்சீரை அதிகமான வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள
நினைத்ததன் விளைவுதான் இந்த இடுகை.

*

பெருநாளின் பிறைவிடு தூது!

மேற்றிசையின் வானத்து வெள்ளிக் கீற்றாய்
. மின்னுகின்ற பெருநாளின் பிறையே வந்தாய்!
ஏற்றுதற்கும் போற்றுதற்கும் இனிய நாளை
. எழில்செய்ய இளம்பிறையே தோன்றிவிட்டாய்!
நோற்றுவந்த பெருநோன்பை முற்ற வைத்தாய்;
. நோன்புக்குப் பெருநாளோ நாளை என்றாய்!
சாற்றுகிறேன் என்நெஞ்சக் கிடக்கை யெல்லாம்
. சந்தித்தே என்னவரில் சொல்லு வாயே!

அரும்பள்ளிக் குழல்பின்னி முடிக்க வில்லை
. அழகுமுகம் கண்ணாடி பார்க்க வில்லை
குறும்பாகச் செவ்விதழ்கள் விண்ட தில்லை
. குமுதவிழி அஞ்சனத்தைக் கொண்டதில்லை
கரும்பான மொழிபேசக் கேட்ட தில்லை
. கண்ணென்றும் மணியென்றும் சொன்ன தெண்ணி
துரும்பான என்னுடலம் இருப்பதெல்லாம்
. தூரதேசம் சென்றவரின் வருகைக் கன்றோ!

நல்லுணவை என்கையால் படைத்து வைப்பேன்
. நறும்நெய்யை ஊற்றியதில் தோய வைப்பேன்
அள்ளியள்ளி அவருண்ணப் பார்த்தி ருப்பேன்
. அவருண்டு மீந்ததைநான் அமுதம் என்றே
உள்ளினிக்க நாவினிக்க உண்டி ருப்பேன்
. உடனவர்க்கு வெற்றிலையும் மடித்த ளிப்பேன்!
அள்ளியுண்ண அவரில்லை மீதம் இல்லை
. அறிந்திருந்தும் மறந்தாரே பேதை என்னை!

நித்தமிங்கே உம்முருவை மனதில் தாங்கி
. நெஞ்சத்தின் சுமையாலே வதங்கு கின்றாள்!
கொத்து மல்லிச் சரமள்ளிக் குழலிற் சூடி
. குமுதமலர் முகம்காட்ட ஏங்கு கின்றாள்!
இத்தரையில் உமையல்லால் ஏது மில்லை
. என்றிருக்கும் ஏந்திழையைக் காண்பாய் என்றே
வித்தகரைக் கண்டுரைக்க மாட்டா யாநீ
. விண்ணேற்ற முதற்பிறையே என்ற னுக்காய்!

(கவிதையின் நீளம் கருதி இடையிலிருந்த எட்டு அடிகளைத் தட்டச்சவில்லை)

MASDOOKA

unread,
Dec 30, 2008, 2:54:28 PM12/30/08
to பண்புடன்
அருமையான மரபுக்கவிதை படித்து ஆண்டுகள் எத்தனையோ! இன்று 'பெருநாளின்
பிறைவிடு தூது' படித்து மகிழ்ந்தேன். இவ்வளவு அழகான கவிதையை இடையிலிருந்த
எட்டு அடிகளைத் தட்டச்சாமல் விட்டிருக்கிறீர்களே.எப்படி ஆஸாத் உங்களுக்கு
விட மனம் வந்தது?
அன்புடன்
மஸ்தூக்கா

ஆசாத்

unread,
Dec 30, 2008, 11:26:53 PM12/30/08
to பண்புடன்
> இவ்வளவு அழகான கவிதையை இடையிலிருந்த
> எட்டு அடிகளைத் தட்டச்சாமல் விட்டிருக்கிறீர்களே.எப்படி ஆஸாத் உங்களுக்கு
> விட மனம் வந்தது?

அவரோட நபிகள் நாயகத் தாலாட்டு ஒண்ணு இருக்கும். மொதல்ல சந்தவசந்தம்
குழுவுல போட்டதா நெனப்பு. அத தேடியெடுத்துப் போட்டு இந்த எட்டு வரிக்கு
பகரமாக்க முடியுமான்னு பாக்கறேன்.

ஆசாத்

unread,
Jan 5, 2009, 2:47:06 PM1/5/09
to பண்புடன்
நாயகத் தாலாட்டு
---------------

பிள்ளையுருக் கொள்ளாமல் பெற்றோரும் இல்லாமல்
எல்லையற்ற பேரருளாய் எல்லாம் கடந்தோனாய்
உள்ளோனோ வல்லோனே ஓர்மைசேர் யாஅல்லாஹ்
உள்ளத்தில் உனைவைத்தே ஊசலிட்டேன் தாலாட்டு!

சொல்லுமென்றன் தாலாட்டுச் சொல்லமுதத் தமிழோசை
வெல்லமெனத் தான்சுவைத்தே விழிக்கதவம் ஒருக்கணித்து
முல்லைவாய் முகப்பதரம் முறுவலுடன் கண்வளர
வள்ளலெங்கள் நாயகத்தை வரித்திட்டேன் தாலாட்டு!

அன்னையெங்கள் ஆமினார்தம் அழகுசேர் மணிவயிற்றுள்
பொன்னாகி மணியாகிப் பூவுலகின் குருடகற்றக்
கண்ணாகி வந்துதித்த கற்பூரப் பெட்டகமாம்
அண்ணலெங்கள் நாயகத்தின் அருளிருக்கக் கண்வளராய்!

பெண்பிறந்தால் பீடென்றே பெற்றோர்கள் அந்நாளில்
மண்ணறையுள் பெண்புதைத்தே மகிழ்ந்திருந்த மடமைதனைத்
தம்கையால் தடுத்திந்தத் தாய்க்குலத்தை வாழவைத்த
மன்னரெங்கள் நாயகத்தின் மணிச்சரமே கண்வளராய்!

தாயென்றும் தங்கையென்றும் தாரமென்றும் பாராமல்
நாயினும் இழிவாக நங்கையரை நடத்திவந்த
பேயர்களைத் திருத்தியிந்தப் பெண்குலத்தை வாழவைத்த
தூயரெங்கள் நாயகத்தின் தொடர்வழியே கண்வளராய்!

விதவையென்ற சொல்லாலே வெந்துபட்ட மங்கையர்க்குப்
புதுமை வழிவகுத்துப் பூச்சூடி வாழவைத்துப்
பதுமை நிலையகற்றிப் பாரிடத்தே மகிழவைத்த
நிதியெங்கள் நாயகத்தின் நினைவிருக்கக் கண்வளராய்!

வல்லோன் மறுமைக்கென்று வாக்களித்த சுவனமிங்கே
நல்லோராம் தாய்க்குலத்தின் நனிசிறந்த பாதத்திலே
உள்ளதென்ரு சொல்லியெங்கள் உயர்வுக்கே உயர்வளித்த
வள்ளலெங்கள் நாயகத்தின் வழித்தொடரே கண்வளராய்!

இற்புகுந்து மாலையிட்டு இல்லறத்தின் வாழ்வேற்று
கற்பரசி அன்னையெங்கள் கதீஜாவின் கரம்பிடித்து
பொற்பரசி பாத்திமாவைப் புதல்வியெனப் பெற்றளித்த
நற்பேராம் நாயகத்தின் நல்லழகே கண்வளராய்!

முல்லை மலரழகே முத்தொளிரும் ரத்தினமே
எல்லையற்ற பேரருளால் என்வயிற் றுதித்தவனே
வல்லோன் எனக்களித்த வண்டுபடா மாங்கனியே
நல்வடிவாம் நாயகத்தின் நகத்தழகே கண்வளராய்!

தீண்டாப் பனிமலரே தீன்குலத்து மாமலரே
தூண்டாச் சரவிளக்கே தூதர்வழி மணிவிளக்கே
ஆண்டாண்டு நூறாண்டு அத்தனையும் பொன்னாண்டு
மீண்டும் கண்மலரும் விண்ணாமுதே கண்வளராய்!

எழுதியவர்: கவிஞர் தா. காசீம்

lucky shajahan

unread,
Jan 6, 2009, 5:54:52 AM1/6/09
to panb...@googlegroups.com
ஆசாத்.. அண்ணா.. உடனே எழுதுறது மொக்கை.. உட்கார்ந்து
படிச்சி நிதானமா எழுதறது இந்த மாதிரி பதிவுக்கு..
 
சும்மா மடிச்சி மடிச்சி எதுகையும் மோனையும் சந்தமும் - தொடையும்
அழகாய் அமைந்திருக்கிறது பாடலில்..
 
ஜித்தா சந்திப்பில் உங்களிடம் சுவையான வெண்பா - கருத்தாழமிக்கதாகவும் இருக்க வேண்டும் என கேட்டதற்கு அதற்கு
நிறைய படிக்க வேண்டும் ஷாஜி என்று ஒற்றை வரியில் முடித்து
விட்டீர்கள்.. ம்.. இது வேற பெருமூச்சு
 
இந்தப் பாடல் குறித்த இலக்கண விதிகளை
கொஞ்சம் விளக்குங்களேன்..
 
இது என்ன விருத்தம்..கொச்சை கலிப்பாவா..?
 


 
2009/1/5, ஆசாத் <banu...@gmail.com>:
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

ஆசாத்

unread,
Jan 6, 2009, 6:08:16 AM1/6/09
to பண்புடன்
> இது என்ன விருத்தம்..கொச்சை கலிப்பாவா..?

ஆஹ்ஹா! எலக்கணப் பொத்தகம் சென்னைலல்லோ இருக்கு!

இலக்கணத்தோட சேத்து அந்த 'பொற்பரசி' அதுக்கும் அர்த்தம்
தெரிஞ்சுக்கணும்னு நெனைக்கிறேன்.

IBNU HAMDUN

unread,
Jan 7, 2009, 4:19:07 AM1/7/09
to panb...@googlegroups.com

 
2009/1/6, ஆசாத் <banu...@gmail.com>:

இலக்கணத்தோட சேத்து அந்த 'பொற்பரசி' அதுக்கும் அர்த்தம்
தெரிஞ்சுக்கணும்னு நெனைக்கிறேன்.

பொற்பு என்றால் அழகு! தானே..






--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

Reply all
Reply to author
Forward
0 new messages