செயமோகனின் டவுசர கிழிக்கும் சாருநிவேதிதா!!

204 பார்வைகள்
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

அய்யனார் .

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 6:48:04 AM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
மக்களே!! பொறுமையா இந்த இணைப்பை படிங்க..அய்ம்பது பக்கத்துக்கு மேல செயமோகனின் செயல்பாடுகளை கடுமையா விமர்சனம் செய்திருக்கார் சாரு..கொஞ்ச நாளா இந்த எலக்கிய பிதாமகர்களின் அட்டகாசம் இல்லாம அமைதியா இருந்த இணையத்த மறுபடியும் செமோ ஒரு கலக்கு கலக்குறார்..அடியில படிஞ்சிருந்த வண்டல் மேல வந்து செம நாத்தமடிக்குது :(
mummy_returns-2.pdf

கென்

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 7:49:46 AM18/2/08
பெறுநர் பண்புடன்
அய்யனார் ,

ஜெயமோகன் தன் அடுத்த படைப்பை மூவாயிரம் பக்கங்களிலிருந்து நான்காயிரம்
பக்கங்களாக மாற்றிவிட்டார் அதுவுமின்றி அவரின் படைப்புகளுக்காக இன்னும்
எத்தனை காடுகளை அழிக்க வேண்டியிருக்குமோ,

அவர் நவீன தமிழிலக்கிய டைனோசர் அல்ல செத்த பிணம்.


சாருவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டார் ஏனென்றால்

ஒரு அதிகாரத்திற்கு எதிரான குரல் என்பது அந்த அதிகாரத்தை நோக்கிய பயணமே
தவிர வேறுன்றுமில்லை.

கொண்டாடும் சொங்கிகள் இனி ரசிகர் மன்றத்தில் இணையலாம் ஜெயமோகனின் அகில
உலக அஜால் குஜால் ரசிகர் மன்றத்தில்
>  mummy_returns-2.pdf
> 228KDownload

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 8:02:04 AM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
கென்

சாரு சொல்வதையும் வேதவாக்காக எடுத்துக் கொள்வதற்கில்லை.

ஜெமோவுக்கு சுட்டுப் போட்டாலும் பகடி என்பது வராது என்பதற்கு அவர் பகடி எழுதியிருக்கும்
லட்சணமே சாட்சி. பிரமிக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் என்றாலும் என்னைப் போல
யாராவது உண்டா?' என்று தெனாவட்டாகப் பேசும்போதும், 'என்னை ஏன் யாரும் கண்டுக்கவே இல்லை?'
என்று புலம்பும்போதும் நாலாம் தர எழுத்தாளனை விடவும் தரம் தாழ்ந்து போகிறார் என்பதை அவர்
என்று உணர்வாரோ தெரியவில்லை? :-((

ரௌத்ரன்

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 10:50:56 AM18/2/08
பெறுநர் பண்புடன்
முடியல சாமி...முடியல...
அய்யனார்...எங்கேயிருந்து கெளப்புனீங்க இந்த file-ஐ?

pandii durai

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 6:45:37 PM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
முடியுதுபா இப்பதான் நல்லா சிரிக்கமுடியது
 
--
www.pandiidurai.wordpress.com
பிரிவோம்
எனத் தெரிந்தே
ப்ரியப்படுகிறோம்

கென்

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 9:20:15 PM18/2/08
பெறுநர் பண்புடன்
பிரம்மிக்க வைக்கும் எழுத்தாளர் என்பதில் இப்போது சந்தேகம் எழ
ஆரம்பிக்கிறது . படைப்பாளியின் செருக்கு, தலைக்கனம் அதிகமாகும்போது
படைப்பின் தன்மை கீழ்த்தரத்திற்கு போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.

சாரு சொல்வதில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றாலும்
நியாயமான கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில் தேவை.

பெரியார் உட்பட எல்லா பிரபலங்களையும் கேவலப்படுத்தும் அவரின் பேச்சு
அருவருக்கத்தக்க ஒன்று.


இவருக்கான எழுத்து சுதந்திரத்தை சேற்றை வாரியிரைப்பதில்
காட்டத்தேவையில்லை தன்னைத்தானே பிதாமகனாக பாவிக்கிற ஜெயமோகன்
கண்டிக்கத்தகுந்தவர் என்பதில் ஐயமேதுமில்லை.


ம‌ன‌ந‌ல‌ம் பாதித்த‌வ‌னின் பேச்சுக‌ளை எப்ப‌டி பொருட்ப‌டுத்த‌
தேவையில்லையோ அப்ப‌டிதான் ஜெய‌மோக‌னின் பேச்சும் எழுத்தும்,

இனி காடு ம‌ட்டும‌ல்ல‌ ர‌ப்ப‌ரும் அழிந்து போக‌க்கூடும்

இலக்குவண்

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 9:27:19 PM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
//படைப்பாளியின் செருக்கு, தலைக்கனம் அதிகமாகும்போது

படைப்பின் தன்மை கீழ்த்தரத்திற்கு போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை//

மிக சரி கென்

2008/2/19 கென் <jakey...@gmail.com>:

pandii durai

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 9:33:08 PM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com
முதல் இரண்டு 3 பக்கங்களும்  ஆர்வத்தில் கடைசி இரண்டு பின்னினைப்பை மட்டும்தான் படித்தேன். முழுமையாக அலுவலக அவசரத்தில் படிக்க இயலாது.
 
 

pandii durai

படிக்கப்படவில்லை,
18 பிப்., 2008, 9:34:53 PM18/2/08
பெறுநர் panb...@googlegroups.com

///////ம‌ன‌ந‌ல‌ம் பாதித்த‌வ‌னின் பேச்சுக‌ளை எப்ப‌டி பொருட்ப‌டுத்த‌
தேவையில்லையோ அப்ப‌டிதான் ஜெய‌மோக‌னின் பேச்சும் எழுத்தும்,//////////////////////
 
எழுத்தாளனுக்கு இது இயல்பான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது
 

Siddharth Venkatesan

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 12:41:34 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
//ொண்டாடும் சொங்கிகள் இனி ரசிகர் மன்றத்தில் இணையலாம் ஜெயமோகனின் அகில
உலக அஜால் குஜால் ரசிகர் மன்றத்தில்//

நான் இணைஞ்சாச்சு... விவரத்திற்கு நன்றி கென்

2008/2/19 pandii durai <pandi...@gmail.com>:


///////ம‌ன‌ந‌ல‌ம் பாதித்த‌வ‌னின் பேச்சுக‌ளை எப்ப‌டி பொருட்ப‌டுத்த‌
தேவையில்லையோ அப்ப‌டிதான் ஜெய‌மோக‌னின் பேச்சும் எழுத்தும்,//////////////////////
 
எழுத்தாளனுக்கு இது இயல்பான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது
 





--
-----------------------------------------
http://angumingum.wordpress.com

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 2:03:22 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
சித்தார்த்

எதிர்பார்த்துக் காத்திருந்தேன் உங்கள் வரவை
'ஜெமோவைப் பற்றிப் பேச முனைந்தபோது அவரது ப்கதன் என்று நீங்கள்
சொன்னதால் மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை

ஆனால், ஜெமோ கனிமொழியின் ப்டம் போட்டு பத்திரிகை வருவதில் கலங்குவதையும்,
வைரமுத்து இலக்கிய் ஜாம்பவான் என்று சொல்லப்பட்டதற்காக பொறுமுவதையும்,
எம்ஜியாரின் உடல் குறைப்பாட்டை பகடி என்ற பெய்ரில் அசிங்கப்பாடுத்துவதையும்
எந்த வகையில் உங்களால் காணமுடிகிறது?

பக்கம் பக்கமாக எழுதுபவனுக்கு அதே அளவு சிந்தை இருக்க வேண்டும். ஆனால் இங்கே
சிந்தை என்பது தான் தோன்றித்தனமாக இருக்கிறதென்றே தோன்றுகிறது. புனைவிலக்கியத்த்றிகு
ஒரு முகமும் பகடிக்கு இன்னொரு முகமுமாக ஒரு எழுத்தாளனால் இயங்க் முடியுமா?

சிற்றிலக்கியச் சூழலை சிலாகிக்கும் ஜெமோ பெரும் பத்திரிகைகளில் எழுதாமலோ அல்லது
சினிமா போன்ற ஊடகங்களுக்கு எழுதாமலோ இருக்கப் போவதில்லை. இரண்டிலும் சோற்றுக்காக
சமரசம் செய்து கொள்ளும் ஒரு எழுத்தாள்ளன் தமிழ் இலக்கீயத்தை தன் தோளீல் சுமப்பதாகச் சோல்லுவதும்
பெரியாரிய சித்தாந்தங்கள் உள்ளிட்ட விச்யாங்களையும், திராவிடத் தலைவர்களைக்  கூட வகை தொகையில்லாமல் கேலிக்குரியதாக்குவதும் , தான் சார்ந்த விசயங்களை மட்டும் முன்னிறுத்துவதும், சுராவின் அரவணைப்பில் வந்ததுதான் தமிழ் இலக்கியமென்ற தோற்றத்தை முன்வைப்பதும் , ஆவி அவரது கட்டுரைஅயி வெளியிட்டதும் இலக்கிய வாசனை இல்லாத என்று ஒட்டுமொத்த வாசகர்களைய்யும் குறை சொன்னதையும் அவரது பல்வேறு முரண்பட்ட முகங்களாகவே காண முடிகிறது.

ஜெமோ மதிக்கத்தக்க எழுத்தாளர் என்பதை விடுங்கள்
மதிக்கத்த்குந்த மனிதரா என்பது கூட கேள்விக்குரியதாகி வருகிறதென்றே எண்ணுகிறேன்

பக்தர் பதில் சொல்லுங்கள்

Siddharth Venkatesan

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 2:13:53 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
வணக்கம் ஆசிப்.. 

ஜெயமோகன் அவரது படைப்பிற்கு வெளியே பேசுவது எதையும் நான் படிப்பதில்லை. முன்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் படிப்பதில்லை. எனக்கு அவரது இந்த புறங்கையில் தள்ளி விடும் போக்கு பிடிக்கவில்லை என்பதனால் இருக்கலாம். எனக்கு விருப்பமில்லாத எதையும் செய்வதில்லை என்ற அடிப்படையில் அவரது பத்தி கட்டுரைகளை படிப்பதையும் நிறுத்திவிட்டேன். அதை பற்றி நான் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்பதனால் விவாதிப்பதும் இல்லை. 

ஆனால் இதை வைத்துக்கொண்டு "செத்த பிணம்" எழுதிய எழுத்துக்கள் என அவரது படைப்புகளை பார்க்க விருப்பமில்லை. அப்படி அவை பார்க்கப்படும் போது அவற்றின் மீது (படைப்பின் மீது, படைப்பாளியின் மீதல்ல) நான் கொண்டுள்ள நெருக்கம் கோவம் கொள்ள செய்கிறது. அதன் வெளிப்பாடு மட்டுமே மேற்கூறிய வரி. 

2008/2/19 Asif Meeran AJ <asifm...@gmail.com>:



--
-----------------------------------------
http://angumingum.wordpress.com

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 2:56:54 AM19/2/08
பெறுநர் panb...@googlegroups.com
நன்றி சித்தார்த்
தெளிவான இந்த அணுகுமுறை வாசகர்கள் அனைவருக்கும் இருக்குமானால்
எழுத்தாளர்களும் தம் நிலை அறிந்து நடக்க முற்படுவார்கள் என்றே நம்புகிறேன்
உடனே பதில் சொன்னதற்கு நன்றி!

சில்லறை உத்திகளைக் கடந்து ஜெமோ தன் படைப்பாற்றலில் க்வனம் செலுத்துமாறு
உங்களைப் போன்றவர்களாவது அவருக்கு எழுதிச் சொல்லலாமே?!

கென்

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 5:45:15 AM19/2/08
பெறுநர் பண்புடன்
//ொண்டாடும் சொங்கிகள் இனி ரசிகர் மன்றத்தில் இணையலாம் ஜெயமோகனின் அகில
உலக அஜால் குஜால் ரசிகர் மன்றத்தில்//
நான் இணைஞ்சாச்சு... விவரத்திற்கு நன்றி கென்


அன்பின் சித்தார்த் நீங்கள் குவைத் மன்றத்தின் தலைவராக இருப்பதில் எனக்கு
எந்த ஆச்சர்யமும் இல்லை.

:))))))


பெரியாரை கேவலப்படுத்தும் அவரின் பேச்சுக்கள் மேல்தட்டு வர்க்க
வாசிகளுக்கு சொறிதலை ஏற்படுத்துமே தவிர வேறுன்றுமில்லை

ஜெயமோகனின் படைப்புகளை மீள்பார்வை செய்ய வேண்டிய தருணம் இது தன்
விஷமத்தனங்களை உள்நுழைத்திருக்கும், அவரின் கோணல் புத்தியை சுட்டிக்காட்ட
வேண்டியது உங்களை போன்றவர்களின் வேலை.


படைப்பை உருவாக்கும் படைப்பாளிகள் தான் மட்டும் கடவுள் என்ற
சித்தாந்தத்தில் உண்டாகும் போதை இது

மிகச்சிறந்த கலைப்படமான பாலா உட்பட வெகு சிரத்தையான சினிமா படைத்திட்ட
ஜெயமோகனின் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டியதே இல்லை.

செத்த பிணத்தின் உளரல்களாகத்தான் இதை எல்லாம் கொள்ளவேண்டும்
> > > எண்ணுகிறேன்- Hide quoted text -
>
> - Show quoted text -

KeN

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 6:40:10 AM19/2/08
பெறுநர் பண்புடன்

"இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய ?? இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம் "

 
 
ஆமாம் ஆனந்த விகடனும் ஜெயமோகனாகிய உங்களை பகடி பண்ணிவிட்டார்கள் போலும் ஆகவே நன்றாக வாய்விட்டு சிரித்துவிட்டு அடுத்து எவரையேனும் குதற ஆரம்பியுங்கள் .

மூவாயிரம் பக்கங்கள் இப்போது நான்காயிரமாய் மாறிவிட்டதா ?

எத்தனை காடுகளை அழிக்க வேண்டியிருக்குமோ பாவம் :)))))))))))

K.R.அதியமான்

படிக்கப்படவில்லை,
19 பிப்., 2008, 10:32:03 AM19/2/08
பெறுநர் பண்புடன்
சாருவுக்கு வேணுந்தான் இந்த ட்ரிட்மெண்ட்.

புதுமைப்பித்தனின் அனைத்து சிறுகதைகளுமே குப்பை. (with a preconveived
mindset or
strong bias) ஒன்று கூட தேராது என்று ஒரு கசாப்புக்க்டைக்காரன் கொத்துவது
போல்
கொத்தியவர் இவர். அதை படிக்கும் போதே நினைத்தேன், இவரின் கதைகளையும்
எதிர்காலத்தில் யாராவது இப்படி கொத்துகறி செய்தால் என்ன நினைப்பார்
என்று..

Jayamokan did it.. :))

K.R.அதியமான்

படிக்கப்படவில்லை,
20 பிப்., 2008, 8:56:35 AM20/2/08
பெறுநர் பண்புடன்
நான் 'பரிசளித்த' கட்டுரை இதோ : (தமிழ் இலக்கிய உலகிற்கு நல்ல
பொருந்துது !!)

Paulo Coelho on 'Progresive Writers'

a) A writer always wears glasses and never combs his hair. KAlf the
time he feels angry about everything and the other half he depressed.
He spends most of his life in bars, arguing with other dishevelled,
bespectacled writers. He says very 'deep' things. He always has
amazing ideas for the plot of his next novel, and hates the one he has
just published.

b) A writer has a duty and an obligation never to be understood by his
own generation ; convinced, as he is. that he has been born into an
age of mediocrity, he belives that being understood would mean loosing
his chance of ever being considered a genius. A writer revises and
rewrites eacj sentance many times. The voabulary if the average man is
made up of 3,000 words ; a real writer never uses any of these,
because there are another 1,89.000 in the dictonary, and he is not the
average man.

c) Only other writers can understand what a writer is trying to say.
Even so, he secretly hates all other wirters, because they are alwyas
jockeying for the same vacancies left by the history of literature
over the centuries. And so the writer and his peers compete for the
'most complicated book' : the one who wins will be the one who has
succeeded in being the most difficult to read.

d) A writer understands about things with alarming names, like
seminotics, epistomology, neoconcretism. When he wants to shock
someone, he says things like : 'Einstein is a fool', or 'Tostoy was
the clown of the bourgeoisie'. Everyone is scandalised, but they
neverthless go and tell other people that the theory of relativity is
bunk, and that Tolstoy was a defender of the Russian aristocracy.
e)When trying to seduce women, a writer says : 'I'm a writer', and
scribbles a poem on a napkin. It always works.

f) Given his vast culture, a writer can always get work as a literary
critic. In that role, he can show generosity by writing about his
freinds' books. Half of any such reviews are made up of quotations
from foreign authors and other half of analysis of sentances, alwyas
using expressions such as 'the epistemological cut', or 'an integrated
bi-dimensional vision of life'. Anyone reading the reviews will say
:'What a cultivated person', but he won't buy the book because he will
be afraid he might not know how to continue reading when the
epistemological cut appears.

g)When invited to say what he is reading at the moment, a writer
always mentions a book no one has ever heard of.

h)There is oonly one book that arouses the unanimous admiration of the
writer and his peers : Ulysess by James Joyce. No writer will ever
speak ill of this book, but when someone asks him about what it is all
about, he can't quite explain, making one doubt that he has actually
read it.

From the preface of 'Like the Flowing River'

N Suresh, Chennai

படிக்கப்படவில்லை,
21 பிப்., 2008, 4:53:48 AM21/2/08
பெறுநர் panb...@googlegroups.com
உண்மை தான் அவர் எழுதியுள்ளது.
 
நன்றி அதியமான்.
 
ஆனால் இந்த கட்டுரையில் பல இடங்களில் எழுத்துப்பிழை உள்ளதே!
 
அப்படி வேண்டுமென்றே ப்ராக்ரஸ்ஸீவ் ரைட்டேர்ஸ் எழுதுகிறார்கள் என்று சொல்ல வருகிறாரோ!
 
அன்புடன்
என் சுரேஷ்

 

பிரேம்குமார்

படிக்கப்படவில்லை,
23 பிப்., 2008, 1:29:43 AM23/2/08
பெறுநர் panb...@googlegroups.com
//
ஜெயமோகன் அவரது படைப்பிற்கு வெளியே பேசுவது எதையும் நான் படிப்பதில்லை. முன்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் படிப்பதில்லை. எனக்கு அவரது இந்த புறங்கையில் தள்ளி விடும் போக்கு பிடிக்கவில்லை என்பதனால் இருக்கலாம். எனக்கு விருப்பமில்லாத எதையும் செய்வதில்லை என்ற அடிப்படையில் அவரது பத்தி கட்டுரைகளை படிப்பதையும் நிறுத்திவிட்டேன். அதை பற்றி நான் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்பதனால் விவாதிப்பதும் இல்லை. //
 
ஆகா, சூப்பரா சொன்னீங்கப்பு :)

KeN

படிக்கப்படவில்லை,
23 பிப்., 2008, 1:42:37 AM23/2/08
பெறுநர் panb...@googlegroups.com

நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.

இங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.

என் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.

யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.


நன்றி ஜெயமோகன்

இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வீர்க‌ள் சூப்ப‌ர‌ப்பு க‌ல‌க்கிட்டீங்க‌ இதெல்லாம் எவ‌ர் வேண்டுமானாலும் சொல்ல‌லாம்

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
23 பிப்., 2008, 1:47:39 AM23/2/08
பெறுநர் panb...@googlegroups.com
கென்

எதுக்கு இப்படி அனாவசியமா சூடாகி உடம்பைக் கெடுத்துக்குறீங்க?
ஜெமோ அண்ணாச்சி தமிழிலக்கியத்தில் பகடி இல்லாத குறையைத்தீர்க்க
நகைச்சுவை நேரம் நடத்த ஆரம்பிச்சிருக்கார்ன்னு நெனச்சு மனசை உற்சாகமா
வச்சுக்கோங்க

உதாரணமா,

யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.


இதை  விட அற்புதமான வாய்விட்டு ரசித்துச் சிரிக்கக் கூடிய அங்கதத்தையோ பகடி புனைவையோ எங்கேனும்
படித்திருக்கிறீர்களா? எனக்கு அவரது பகடி ஆளுமையை நினைத்துச் சிரித்து மாளவில்லை.

உண்மையிலேயே, ஜெமோ சூப்பரப்பு :-))))

பிரேம்

கண்காணாம போயிட்டு வந்து இப்படி வாங்கிக் கட்டிக்கிட்டியே மக்கா. :-))

KeN

படிக்கப்படவில்லை,
23 பிப்., 2008, 2:13:40 AM23/2/08
பெறுநர் panb...@googlegroups.com
எனக்கு அவரது பகடி ஆளுமையை நினைத்துச் சிரித்து மாளவில்லை.

உண்மையிலேயே, ஜெமோ சூப்பரப்பு :-))))
:))))))))))))))))))))))))
 

பிரேம்குமார்

படிக்கப்படவில்லை,
23 பிப்., 2008, 4:46:00 AM23/2/08
பெறுநர் panb...@googlegroups.com
நான் வேற ஒரு கண்ணோட்டத்துல சொல்லப்போய், கென் வேற ஒரு கண்ணோட்டத்துல அத புரிஞ்சுக்கிட்டாரு. இந்த இழையில் அனேகமாய் தொடர்ந்து எழுத முடியாத காரணத்தால் இந்த விசயமாய் மேலும் எழுத ஆர்வமில்லை

KeN

படிக்கப்படவில்லை,
25 பிப்., 2008, 12:00:30 AM25/2/08
பெறுநர் panb...@googlegroups.com

வணக்கம் ஜெயமோகன்,

 உங்களின் கருத்துக்களில் உள்ள பகடி என்ற பதத்தில் ஆனந்த விகடன் உங்கள் கட்டுறையை கவிழ்ப்பாக்கம் என்கிற பின் நவீனத்துவ பாணியில் உபயோகித்திருக்கிறார்கள் என்பதாக தாங்கள் எண்ணிக்கொள்ள வேண்டியதுதானே, எதற்காய் கோப‌ம் கொண்டு மறுப்பு கடிதம் அனுப்பி இருக்கிறீர்கள்.

 பெரியார் பற்றிய தங்களின் பிதற்றலில் உள்ள பிழையை தாங்கள் இதுவரை உணராதது துரதிஷ்டமானது மற்றபடி ஆர் எஸ் எஸ் கும்பலின் இடைச்செருகல் சண்டைகள் ரசிக்கும்படியாயில்லை.

விகடன் செய்தது பிழை எனில் தங்களின் பகடி ?
சரியா தெளிவுப்படுத்தவும்

நன்றி
கென்

 

இது நான் திரு ஜெய‌மோக‌னுக்கு அனுப்பிய‌ ம‌ட‌ல் இத‌ற்கு ப‌தில் ஏதும் அளிக்காம‌ல் வெறும‌னே அவ‌ர் அனுப்பியுள்ள‌ ம‌ட‌ல் உங்க‌ளின் பார்வைக்கு


jeyamohan_ B  to me
 Feb 23 (2 days ago) 


உங்கள் கடுப்பை தெரிந்துகொண்டேன். நன்றி


ஆக‌வே ப‌டைப்பாளிக‌ளின் பித‌ற்ற‌ல்க‌ளை புற‌ம்த‌ள்ளிட‌ எத்த‌னை பேருக்கு தெரியும் என்ப‌துதான் என் கேள்வியே த‌விர‌ ஜெய‌மோக‌னுக்கும் என‌க்கும் த‌னிப்ப‌ட்ட‌ கொடுக்க‌ல் வாங்க‌ல் விவகார‌ம் இல்லை என்ப‌தை சில‌ருக்கு தெரிய‌ப்ப‌டுத்துகிறேன்.

--
-  -



On 2/23/08, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> wrote:

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
25 பிப்., 2008, 1:56:56 AM25/2/08
பெறுநர் panb...@googlegroups.com
கென்

ஏன் இந்தக் கொலைவெறி உங்களுக்கு?
ஏன் இப்படி கடுப்பாக எழுதுகிறீர்கள். இப்படியா ஓர் அசைக்க முடியாத ஆளுமையிடம்
கேள்வி கேட்பது? இப்படி 'சிற்றுயிராய்' திரியாமல் பேருயிராய் உதித்தெழுங்கள்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆஆஆஆஅ
கண்ணை தொறக்கவே முடியாது  போலிருக்கே :-)

உங்கள் கடுப்பை தெரிந்துகொண்டேன். நன்றி


கென், நல்ல வேளை என்று நினைத்துக் கொள்ளுங்கள்
400 பக்கத்துக்கு அவர் பாட்டுக்கு விளக்க பகடி வழங்கியிருந்தால்
உங்கள் நிலை என்னாகியிருந்திருக்கும்?


KeN

படிக்கப்படவில்லை,
25 பிப்., 2008, 1:57:56 AM25/2/08
பெறுநர் panb...@googlegroups.com
400 பக்கத்துக்கு அவர் பாட்டுக்கு விளக்க பகடி வழங்கியிருந்தால்
உங்கள் நிலை என்னாகியிருந்திருக்கும்?
 
:))))))))))))))))))))))))


 

Umanath Selvan

படிக்கப்படவில்லை,
25 பிப்., 2008, 2:05:48 AM25/2/08
பெறுநர் panb...@googlegroups.com
நல்லவேளை என்னை கேள்வி கேட்க என்ன தகுதி உமக்கு இருக்கு என பதில்வரவில்லை.

2008/2/25 KeN <jakey...@gmail.com>:

pandii durai

படிக்கப்படவில்லை,
25 பிப்., 2008, 3:42:03 AM25/2/08
பெறுநர் panb...@googlegroups.com
////இப்படியா ஓர் அசைக்க முடியாத ஆளுமையிடம்
கேள்வி கேட்பது?////

அண்ணாச்சி கேள்வி கேட்பது தப்பா அண்ணாச்சி?

!மறுபடியும் இப்ப நான் உங்களின் வலைப்பக்கம் சென்று வெற்றிமோகன் கதையினை படிச்சின்டு இருக்கிறேன்.!
 
மனதில் தோன்றியதை நேரடியாக கேட்டால் கொலைவெறியா?
கென்னின் கடிதத்தில் அப்படி ஒன்றும் தோன்றவில்லை.
ஜெமோதான் அப்படி வெறியாகி கருப்பு சாயம் பூசிஅனுப்பியிருக்கிறார்.

பாண்டித்துரை

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 12:38:04 AM27/2/08
பெறுநர் பண்புடன்
அய்யனார் ஆரம்பித்துவைத்தார் இந்த இழையை அப்புறம் அய்யனார் ஏனோ
இந்தஇழைப்பக்கம் வரவில்லை?
ஏன் அய்யனார் இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாகிவிட்டதா?

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 12:39:10 AM27/2/08
பெறுநர் panb...@googlegroups.com
அய்யனார் அந்த மாதிரிதான்
அவருக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியுமாம்

K.R.அதியமான்

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 12:47:30 AM27/2/08
பெறுநர் பண்புடன்
சாரு நிவேதித்தா என்ற புனைப்பெயரே ஒரு நகைமுரண்தான்.
சாரு ம‌ஸும்தார் என்ற‌ ந‌க்ஸ்ல் த‌லைவ‌ரின் பெய‌ரும், விவேகான‌ந்த‌ரின்
சீட‌ரான‌ நிவேதித்தா என்ற‌ துற‌வியின் பெய‌ர்க்ளையும் சூட்டிக்கொண்டு,
உல‌க‌லா‌விய சுக‌ங்க‌ளையும், போக‌த்தையும் அனுப‌விக்க‌ துடிக்கும்
ஒருவ‌ர் (அதாவ‌து வாழ்க்கையை 'கொண்டாடுப‌வ‌ர்') 100கோடி மாளிகை ப‌ற்றி
ஆசைப்ப‌டுவ‌து ஒரு பெரிய‌ ந‌கைமுர‌ண்தான்.

ந‌க்ஸால்பாரிகளின் கொள்கைக‌ளிலும், வ‌ழிமுறைக‌ளிலும் என‌க்கு உட‌ன்பாடு
கிடையாதுதான். ஆனால் சாரு ம‌ஸும்தார் ஒரு த‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ போராளி, உட‌ல்
பொருள், ஆவி அனைத்தையும் இய‌க்க‌த்திற்காக‌, கொள்கைக்காக‌ அர‌ப்ப‌ணித்த‌
தியாகி.
மிக‌ மிக‌ எளிமையான் போராளி வாழ்வை வாழ்ந்த‌வ‌ர். It is an insult to the
name of Charu Mazumdaar.

ந‌க்ஸ‌ல்க‌ளின் க‌ன‌வு மெய்ப்ப‌ட்டு, இந்தியாவில் ஒரு புர‌ட்சி
அர‌சாங‌க‌ம் வ‌ந்தால், முத‌ல் வேலையாக‌ சாருவின் நூல்க‌ள் த‌டை
செய்ய‌ப்ப‌ட்டு, அவ‌ர் சிறையில் அடைக்க‌ப்ப‌டுவார் என்னும் 'உண்மை'
அவ‌ருக்கு இன்னும் புரிய‌வில்லை. :))

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 12:53:38 AM27/2/08
பெறுநர் panb...@googlegroups.com
பொதுவாகவே இலக்கியச் சூழலில் நடக்கும் அரசியலுக்குள் நுழையாமல் இருப்பதே நல்லது
அரசியல்வாதிகளாவது அறியாமையால் கேவலபப்டுத்துகிறார்கள். இலக்கிய வாதிகளோ
தெரிந்தே கேவலப்படுகிறார்கள்.. இந்தச் சூழலில் இலக்கிய ஆளூமை என்றெல்லாம் பிதற்றுவதும்
அதை சுயமோகமென்று விமர்சிப்பதுமெல்லாம் பகடி புனைவு என்று சிரித்துவிட்டுப் போக வேண்டியதுதான்
அதியமான அண்ணாச்சி :-)

pandii durai

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 12:53:39 AM27/2/08
பெறுநர் panb...@googlegroups.com
அன்பின் அதியமான் பாண்டித்துரை என்ற பெயரில் முன்பு யாரவது வாழந்து சென்றிருக்கலாம் . இப்பொழு நான் அந்த பெயரை எனக்கு வைத்துக்கொண்டிருக்கும் பொழுது  எனக்கு முன்சென்றவரின் குணநலன்களை நானும் பெற்றிருக்க வேண்டும் என்பது போல உங்களின் கருத்து உள்ளது. எனக்கு சற்று தெளிவாக விளக்குங்கள் . ஏன் எனில் இன்று தெருவுக்கு ஒரு காந்தி தென்படுகின்றனர் (பெயரில் மட்டும்)

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 12:58:04 AM27/2/08
பெறுநர் panb...@googlegroups.com
பாண்டித்துரை

அதியமான் கருத்தில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை
நீங்கள் புனைபெய்ராக காந்தியின் பெயரை வைத்துக்கொண்டு கசாப்பு கடை நடத்தினால்
எவ்வளவு கோட்டித்தனமாக இருக்குமோ அதுபோலத்தான் சாருவின் புனைபெய்ரௌமென்று சொல்ல வருகிறாரென்றுதான் கருதுகிறேன்.

pandii durai

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 1:01:23 AM27/2/08
பெறுநர் panb...@googlegroups.com


அப்படியிம் இருக்கலாம் அண்ணாச்சி

அப்புறம்
என்னுடைய முழுமையான பெயர் நீதிபதி பாண்டித்துரை
படைப்புக்காக பாண்டித்துரை
பள்ளிச் சான்றிதழில் நீதிபாண்டி

ரௌத்ரன்

படிக்கப்படவில்லை,
27 பிப்., 2008, 4:45:41 AM27/2/08
பெறுநர் பண்புடன்

கடைசியாக நாம் பெயர் ஆராய்ச்சியில் இறங்கி விட்டோம்..ஒரு எழுத்தாளன்
இப்படி இருக்க வேண்டும்,அப்படி இருக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு
தான் எழுத்தாளர்களை தங்களை தாமே கடவுளாக எண்ணிக் கொள்ள வைக்கிறது
போலும்... இவ்வளவு நுட்பமாக இலக்கிய அரசியல் நிகழ்த்த முடியும் என்பதை
ஜெமோ நிரூபித்திருக்கிறார்..சாரு இங்கே கொட்டி கவிழ்த்திருப்பதெல்லாம்
ஜெமோவுக்கு தான் எந்த விதத்திலும் (போகிற போக்கில் புழுதி வாரி விட்டு
போவதிலும்,சுய தம்பட்டத்திலும்) குறைந்தவன் இல்லையென்பதையே
காட்டுகிறது...ஜெமோ கூறுகிறார் தான் ஒரு தவிர்க்க முடியாத
ஆளுமையென்று...சாருவுக்கு ஒரே இலக்கு ஐரோப்பா தானாம்...வாழ்க இலக்கியம்!
வாழ்க எழுத்தாளர்கள்!
ஆனால் இலக்கியம் அறியாதவர்கள் வாழ தகுதியில்லாதவர்கள் என்ற
இவர்களது எண்ண ஓட்டத்தை அறியும் பொழுது என்ன மயிருக்கு இத்தனை நாள் இந்த
"..........."ளின் எழுத்துக்களை படித்தோம் என்று கோபம் வருகிறது...
எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்