கட்டபொம்மன் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?

75 பார்வைகள்
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

jmms

படிக்கப்படவில்லை,
16 மே, 2008, AM 4:08:2016/5/08
பெறுநர்

கட்டபொம்மன் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?

ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.

அதில் —
கப்பத் தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டமொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது. இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன். அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தும்ர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில் கட்டப்பொம்மன், ஜாக்சனை சந்தித்தார்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா) மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பணபாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கை கலப்பில் கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டப் பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டப்பொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கபட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லும்சிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

http://revver.com/video/169981/veerapaandiya-kattabomman/

— இப்படி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Dinakaran.com
 
சுட்ட இடம்:
 
 
 
சுட்டது....
 
 

 



--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

ஸ்ரீ

படிக்கப்படவில்லை,
16 மே, 2008, AM 8:10:0216/5/08
பெறுநர் panb...@googlegroups.com
அடடா, என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?

கட்டபொம்மனின் மேல் நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேனே. நீங்கள் இப்படி கூறியவுடன் விக்கிபீடியாவுக்கு சென்று இதைப் பற்றி படித்தேன். ஆனால் அங்கே சிறிது மாறுதலாக கொடுத்திருந்தார்கள். உங்களுக்காக இங்கே அந்த இணைப்பு:

http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman

இதில் Events என்று வரும் பத்தியைப் படித்தால் இப்படி வருகின்றது:

Kattabomman refused to pay his dues and for a long time refused to meet Jackson the Collector of the East India Company. Finally, he met Jackson at Ramalinga Vilasam, the palace of Sethupathi of Ramanathapuram. The meeting turned violent and ended in a skirmish in which the Deputy Commandant of the Company's forces, Clarke was slain. Kattabomman and his men fought their way to freedom and safety, but Thanapathi Pillai, Kattabomman's secretary was taken prisoner.

The Commission of Enquiry that went into the incident fixed the blame on Jackson and relieved him of his post, thinking the Company's plan to take over the entire country gradually could be marred by Jackson's fight with Veerapandiya Kattabomman.

The new Collector of Tirunelveli wrote to Kattabomman calling him for a meeting on 16 March, 1799. Kattabomman wrote back citing the extreme drought conditions for the delay in the payment of dues and also demanded that all that was robbed off him at Ramanathapuram be restored to him. The Collector wanted the ruling house of Sethupathis to prevent Kattabomman from aligning himself with the enemies of the Company and decided to attack Kattabomman.

The British also instigated his long time feuding neighbor Ettayapuram Poligar to make provocative wars over Kattabomman on their long pending territorial disputes.

இதில் கண்டவரை, ஜாக்சன் துரையை நீக்கியதற்கு காரணம் கிழக்கிந்திய கம்பெனியின் இந்தியா முழுமையையும் தன் ஆளுமைக்கு கொண்டு வந்துவிடும் திட்டத்திற்கு ஜாக்சன் மற்றும் கட்டபொம்மனின் சண்டை தடைக்கல்லாக வந்துவிடும் என்ற பயம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மஞ்சூர் ராஜா கூறியதைப்போல எனக்கும் கட்டபொம்மன் என்றால் சிவாஜிதான். எத்துனை அருமையாக நடித்திருப்பார். நடிப்பு என்றாலும் அதில் உண்மைகள் இல்லை என்றாலும் மிகவும் ரசிக்கலாம்.

நன்றி...

2008/5/16 jmms <jmms...@gmail.com>:



--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
http://www.sripauljoseph.com/

"நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வேனோ மாயையே
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை மாயையே" - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

கார்த்திக்

படிக்கப்படவில்லை,
16 மே, 2008, AM 10:33:5316/5/08
பெறுநர் பண்புடன்
அப்புறம் எதுக்கு அவர எதுக்கு தூக்குல போட்டாங்க
எட்டப்பன் கதை என்னாச்சு ?

jmms

படிக்கப்படவில்லை,
16 மே, 2008, PM 9:52:4416/5/08
பெறுநர் panb...@googlegroups.com
On 5/16/08, ஸ்ரீ <sripau...@gmail.com> wrote:
அடடா, என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?

கட்டபொம்மனின் மேல் நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேனே. நீங்கள் இப்படி கூறியவுடன் விக்கிபீடியாவுக்கு சென்று இதைப் பற்றி படித்தேன். ஆனால் அங்கே சிறிது மாறுதலாக கொடுத்திருந்தார்கள். உங்களுக்காக இங்கே அந்த இணைப்பு:

http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman

இதில் Events என்று வரும் பத்தியைப் படித்தால் இப்படி வருகின்றது:
 
நன்றி ஸ்ரீ...
எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்