அம்பெத்கர் சட்டக்ககல்லூரிப் பிரச்சனை - உண்மை அறியும் குழு அறிக்கை.

83 views
Skip to first unread message

ஜமாலன்

unread,
Nov 18, 2008, 6:01:22 AM11/18/08
to panb...@googlegroups.com

நண்பர்களே...

அம்பேத்கர் சட்டக்கல்லூரிப் பிரச்சனையில் ஊடகங்களும் அரசுச்சார்பு நிறுவனங்களும் சேர்ந்து பொதுபுத்தியில் தலித்துகளக்கு எதிரான கருத்தியலை கட்டமைக்கிறது என்பதைபப்ற்றி ஏற்கனவே தோழர் வினவு எழுதி உள்ளார். இது உண்மை கணடறியும் குழு முன்வைத்த அறிக்கை. புரையோடிப்போன சாதியம் எப்படி வினவு கூறியதுபோல "சாதியத் தலைவரான முத்துராமலிங்கத் தேவரை தேசியத் தலைவராகவும். தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதியத்தலைவராகவும் மாற்றும்" கீழ்தரமான முயற்சியில் இறங்கி உள்ளது. நாம் ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்களுக்காகவும்.. இன்னும் வாய்ப்பிருந்தால் எல்லா சட்டக் கல்லூரிகளுக்கும் அம்பேத்கர் பெயர் வைக்கவும் நமது குரலை முன்வைப்போம்.   

Dear Friends,

This is a fact finding report into the current caste conflict in Chennai. The purpose is to muster quick support to the  Dalit students involved because they are just feeling helpless. If any of you (including organizations) wish to come forward, you may contact me. My contact is +91 9820216146.

- Anand  Teltumbde

 

The Facts behind the Incidents of violence at Chennai

 Dr. Ambedkar Law College.

                        The incident of violence on 12.11.2008 at Dr.Ambedkar Law College has shaken the conscience of every body.  This incident  surely needs to be condemned.  The reason behind the submission of details herein is to bring out the facts behind the incidents of violence at a law college that we all believe is to produce future judges and socially conscious lawyer.

          That clashes take place in the law college is not a new phenomena. We are shaken thoroughly to know the details of the brewing tension over the past four years that has broken out violently today. "Thevar Peravai" that functions with its headquarters at Chennai has been concentrating, specifically targeting the Thevar community students from the southern districts of Tamilnadu. It functions primarily in whipping up the passions and utilizes them for their vested parochial goals. With these students a casteist organization named ' Mukkulothor Student's Federation" has already been formed. The main objective of this organization is to target and attack the Dalits. And they also raise queries like while all other 4 govt. law colleges are named as Govt.law college, why should the Chennai law college be named after Dr.Ambedkar and called Dr.Ambedkar law college. Since Dr.Ambedkar is a Dalit this name should be changed. This is their contention for their past 4 years. They do not use Ambedkar's name in any of their advertisement and mention it only as 'Chennai Law College'.

          Such activities has raised unnecessary discomfiture amonsgtthe dalit students and raised a sense of hatred between the communities. In all these issues Bharathi Kannan, belonging to Mukkulathor Student Federation is the prime culprit. In the recent past,( in 6 months duration) Bharathi Kannan was waiting with five of his friends with swords in hand prowling to kill atleast tow Dalit boys. Police came to know of this and arrested him red handed with 3 long swords in their possession. But they were released without any complaints been filed against them. Though the college authorities were in the know of his activities it did not make any efforts to curb him. In the same manner he with his friends went and attacked the students of Dr.Ambedkar Law college residing in hostel at Millers road, Kilpauk. The Principal did not take any action. At least there are 17 cases including attempt to murder, pending on Bharathi Kannan.

          In this circumstance on '30th October' during the Thevar Jayanthi the passion were whipped up. The poster prepared by Mukkulothor Students Federation expressed the re assertion of its casteist hierarchy, with usages avoiding Dr. Ambedkar's name. Also they teased the Dalit students on that day. The Dalits who questioned this were beaten up and with the law college students having exams from 3 rd of November, Mukkulothor Students Federation declared that any Dalit entering the college would be thrashed and killed. They were roaming around in the college complex with logs, iron rod, dagger and swords. Dalit boys could not enter the hall. Some Dalit boys came sneaking through and wrote the exams. Police or college authority did not take any action even though they were in the know of things.

          Only on such a condition they came on 12.11.2008with logs, sticks etc for self protection. College authorities insisted that the students should avoid precipitating the issue. The Dalit students retorted stating that when the college authorities did not take any action when they were being prevented from attending exams, and they had come there for giving protection for Dalits and not attacking the Mukkulathor. Since some Dalit students have come for exams and Mukkulathors have identified and planned to attack them, they came for their defence. In such a situation Bharathikannan, Arumugam and Ayyadurai with daggers 2 ft. long, jumped in shouting that they shall kill at least 5 or so and moved towards the Dalit students. The Dalit students ran helter- shelter for their safety. When Bharathi Kannan and Arumugam ran and caught hold of Chithraiselvan, a Dalit student and tried to stab him down through the head. When he turned and saved his head his ears were torn off by the dagger. Other students joined in to save Chithrai Selvan and hit Bharathi kannan  and Arumugam.

          The sole responsibility for this callous approach rests entirely with the college authorities. For the last 4years when in the name of celebrating Thevar Jayanthi, efforts to assert caste hierarchy were being made, specifically failing to address Dr.Ambedkar Law college as such and naming it only as Chennai law college, threatening of the Dalit students, issuing threat to life for those Dalit students who opposed bringing caste conflict into the campus etc were brought to the notice of the college authorities no action was taken. Especially, for the last three days when it was brought to their notice of the magnitude and massive proportion of the brewing trouble, police or the college authorities made no action was taken to prevent the same.

          In this situation Bharathi Kannan came in with daggers in hand to attack Dalit students. If the college authorities had acted in time this incident of violence could have been prevented.

 

 

Our demands:

1) Take appropriate action on the Principal for failing to take necessary action in time to prevent the brewing violence.

2) College authorities should initiate necessary action to prevent the casteist organizations that function from within the campus triggering violence.

3) Give due protection to all the students especially the Dalit students.

4) Take necessary action on those behind the incidents of violence, the organization, Thevar Peravai for fomenting casteist feelings.

5) Take appropriate action on the police authorities that failed to prevent the students who prowled inside the college campus for the past one week with weapons.




--
http://jamalantamil.blogspot.com/
http://tamilbodypolitics.blogspot.com/
http://kalakuri.blogspot.com/

கென்

unread,
Nov 18, 2008, 7:40:23 AM11/18/08
to panb...@googlegroups.com
நன்றி : உயிரோசை
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
மாயா

 

சாவுக்குக் காத்திருக்கும் வெட்டியான் போல காத்திருந்த ஊடகங்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தவம் பலித்துவிட்டது. திரும்பத் திரும்ப காட்டி டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள, பரபரப்பாக எழுதி விற்பனையை அதிகமாக்கிக்கொள்ள மீடியாவுக்கு ஒரு லைவ் வன்முறைக் காட்சி கிடைத்துவிட்டது. சட்டசபை கூட்டத் தொடரில் சண்டையையும் பரபரப்பையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கழுகுகளுக்கு சட்டசபையின் ஆளெடுப்பு மையங்களாக இருக்கும் சட்டக் கல்லூரி ஒன்றில் செம வேட்டை கிடைத்தது. தமிழ் சமூகத்தின் ஜாதிரீதியான பிளவுகளின் பூதக் கண்ணாடியாக இருக்கும் நமது கல்லூரிகளில் பல காலமாக நடந்து வரும் ஜாதி மோதல், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர்களுக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் நடந்தது.

 

உலகம் தெரியாத பழங்குடியினர் மத்தியில் நடக்கும் காளை அல்லது குதிரை சண்டை போல சட்டம் படிக்கும் மாணவர்கள் மோதிக்கொண்டார்கள். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ், பொது மக்கள், செய்தியாளர்கள் சேவல் சண்டையை பார்த்தது போலத்தான் ஆரம்பத்தில் இந்தச் சண்டையை பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. மிருகத்தனமான மோதல் என்று பலரும் இதை வர்ணிக்கிறார்கள். ஆனால் மிருகங்களுக்கிடையிலான சண்டையில்கூட இதைவிட சிறப்பான நாகரீகத்தைக் காண முடியும். தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதத்தில் தரையில் புரளும் நாயை எதிரியான சக நாய் கடித்துக் குதறுவதில்லை. ஆனால் எதிரியான சக மனிதன் ஒருவன் சுய நினைவிழந்து வீழ்ந்த பிறகும் மனிதனின் ஆத்திரம் தீர்வதில்லை. எதிர்ப்பற்று பூமியில் கிடக்கும் சதைக் கூளத்தின் மீது இரும்புத் தடிகளும் உருட்டுக் கட்டைகளும் கைகள் ஓயும் வரை பிரயோகிக்கப்படும் அந்தச் சண்டையின் கடைசி கட்ட காட்சிகள்தான் மனதைப் பிசைகிறது. அறிவு, சிந்தனை என பலவற்றில் விலங்குகளைவிட ஒரு படி முன்னேறிய மனிதன் வன்முறையிலும் எப்போதோ அவர்களை மிஞ்சிவிட்டான்.

பொதுவாகவே எந்த ஒரு சண்டையிலும் அடி வாங்கியவர்கள் நல்லவர்கள், அடித்தவர்கள் கெட்டவர்கள் என்ற எளிய புரிதலே பலருக்கும் உண்டு. ஜாதிரீதியான மோதல்களின் அத்தகைய எளிதான புரிதல்கள் ஆபத்தானவை. சட்டக் கல்லூரி மோதலில்கூட புதிய ஆதிக்க சாதிகளாக உருவெடுத்திருக்கும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை இறுதிக் கட்டத்தில் மூர்க்கமாக தாக்கும் தலித்துகளுக்கு எதிராகவே உணர்ச்சிகரமான எதிர்வினை செல்கிறது. இந்திய பாரம்பரியத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான ஜாதியும் அதன் அடிப்படையிலான பேதங்களும் நமது சமூகத்திலும் கல்லூரிகளும் எவ்வாறு எதிரொலிக்கின்றன என்பதை அறிந்துகொள்ளாமல் கண்ணால் கண்டதை மட்டும் வைத்து இந்த விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. மிருகங்களிடம்கூட இனம் மட்டும்தான். மனிதர்களிடையே இனம் சார்ந்த பிரிவுகளோடு ஒவ்வொரு இனக் குழுக்களின் உள்ளேயும் எக்கச்சக்கமான ஜாதிப் பிரிவினைகள் உள்ளன. தமிழகத்தில் முந்தைய சமூக எழுச்சி அலையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உயர் சாதி ஒடுக்குமுறையைத் தாண்டி வந்தார்கள். இப்போது தலித்துகளின் முறை. முன்பு ஒடுக்குதலுக்குள்ளான அதே பிற்படுத்தப்பட்டோர் இன்று அரசியல் எழுச்சி காணும் தலித்துகளுக்குத் தடையாக இருக்கிறார்கள்.

கிருஷ்ணசாமி மீதான கொலை முயற்சிகள் பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களால் நியாயப்படுத்தப்படும், அரசால் கண்டும் காணாமல் விடப்படும் சமூகம் இது. ஒரு தலித் இயக்கத் தலைவருக்கே அந்த கதி என்றால் சாதாரண தலித்தின் நிலையை நினைத்துப் பாருங்கள். டீக்கடைகள் முதல் சட்டக் கல்லூரி வரை இந்தப் போராட்டம் வெளிப்படுகிறது. எங்கெல்லாம் தலித்துகள் எழுச்சி காண்கிறார்களோ அங்கெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் எதிர்வினையை காண முடிகிறது. ஒரு கொடியன்குளத்தில் அவர்கள் கண்ணில் புகைவது தலித்துகளின் பொருளாதார பலம். ஒரு சட்டக் கல்லூரியில் அவர்கள் கண்ணை உறுத்துவது அவர்களின் எண்ணிக்கை பலம். தமிழகத்தின் ஜனத்தொகையில் சுமார் 24 சதவீதம் இருக்கும் தலித்துகள் ஒரு கொத்தாக அல்லாமல் தமிழகம் முழுவதும் சிதறியிருக்கிறார்கள். அதனால் அவர்களின் அரசியல் எழுச்சி பிற சமூகத்தினரை சார்ந்திருக்கும் அவலத்தைக் காண முடிகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பல்வேறு எதிரும் புதிருமான ஜாதிகள் தலித்துகளின் எழுச்சியை கூட்டாகத் தடுக்கின்றன. அந்த வகையில் இது போன்ற கல்வி நிலையங்களில்தான் தலித்துகளின் எண்ணிக்கை அவர்களுக்கு திருப்பி அடிக்கும் பலத்தைக் கொடுக்கிறது. இந்தச் சட்டக் கல்லூரி வன்முறையில் நாம் கண்டது அதைத்தான்.

இலுப்பைப் பூ சர்க்கரை போல உருப்படியான தலைவர்கள் இல்லாத தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவர்களுக்கு மாயாவதியின் கட்சியைச் சேர்ந்த ஒரு ஆர்ம்ஸ்ட்ராங் பின்புலமாக இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் ஆதிக்க வெறி சட்டக் கல்லூரி வரை வரும் போது அங்கு அவர்களுக்கு ஒரு சவால் வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் ஜெயந்திக்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டரில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று முழுதாக போடாமல் வெறுமனே சட்டக் கல்லூரி என்று போட்டது ஒரு சில்லறை விஷயம்தான். ஆனால் நெடுங்காலமாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் ஒரு சின்ன தூண்டுதலில்தான் வெடிக்கும். ஏன் அம்பேத்கர் பெயரை சேர்க்கவில்லை என்ற கேள்வியே ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியாத விஷயம். வகுப்புக்கு கத்தியுடன் வரும், பேராசிரியர்களையே மிரட்டும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரிடம் ஒரு தலித் இவ்வாறு கேட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள். அதுதான் நேர்ந்தது. ஒரு தலித் மாணவர் வெட்டுக் காயம் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலித்துகளுக்கு மட்டுமே தங்கும் வசதி கொண்ட சட்டக் கல்லூரியில் தலித்துகள் ஒன்று கூடி பதிலடி கொடுப்பது, தமிழகமெங்கும் பரவியிருக்கும் சாமானிய தலித்துகளைப் போல் அன்றி, சிரமமாக இருக்கவில்லை.

இந்தப் பிரச்சனையின் பின்விளைவாக தமிழகமெங்கும் தலித்துகள் சந்திக்கப் போகும் சவால்கள், வாங்கப் போகும் அடிகள் கேமராக்களின் முன்பு நடக்காது. தென் தமிழகத்தில் தலித்துகள் திருப்பி அடிப்பார்கள் என்று தெரிந்துவிட்டதாலும் ஜாதி மோதல்கள் இரு தரப்பிலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த புரிதலாலும் 1990களில் நடந்தது போன்ற கலவரங்கள் நடக்கும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தலித்துகளின் அரசியல் எழுச்சிக்கு இந்த சம்பவம் பேரிடியாக இருக்கும். பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளுக்கு எதிராக மேலும் உறுதியாக கைகோர்ப்பதற்கான மையப் புள்ளி போல இந்த சம்பவம் தெரிகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை வைத்து பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளுக்கு வலை வீசுகின்றன. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் பறி போகுமோ என்ற பயத்தில் கருணாநிதி பதட்டமாக என்னென்னவோ செய்கிறார். பிற சமூகத்தின் வாக்குகளையும் பெறுவது மூலம் தனது வாக்கு வங்கியை விரிவுபடுத்த நினைக்கும் திருமாவளவன் இந்த விஷயத்தில் கவனமாக அறிக்கை விடுகிறார்.

மொத்தத்தில் பிற்படுத்தப்பட்டோர்-தலித்துகளின் இடையிலான அதிகாரப் போர் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளம் போல தெரிகிறது இந்தச் சம்பவம். இப்படிப்பட்ட குரூரமான அடிதடிகள் தமிழகத்தின் வீதிகளெங்கும் நடந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்? அத்தகைய ஒரு சூழல் உருவாகாமலிருக்க வேண்டும் என்றால் தலித்துகளின் எழுச்சியை எவ்வாறு பிற்படுத்தப்பட்டோரை அரவணைத்துச் செல்ல வைப்பது என்பதை யோசிக்க வேண்டும். உரியதைக் கொடுத்திருந்தால் பாண்டவர்கள் போருக்குச் சென்றிருக்கப் போவதில்லை



-  கென் -

www.thiruvilaiyattam.com

கென்

unread,
Nov 19, 2008, 6:34:59 AM11/19/08
to பண்புடன்
Nov 19 சட்டக்கல்லூரி சம்பவம் - உண்மையறியும் குழுவின் அறிக்கை!

நன்றி : லக்கிலுக் (http://www.luckylookonline.com/2008/11/blog-
post_19.html)

ஆனந்த் டெல்டும்பட்- தலித்துகளுக்கான உரிமைகள் குறித்து தொடர்ந்து
குரல்கொடுத்து வருபவர். டாக்டர் அம்பேத்கரின் பேரர்களில் ஒருவர்.
சமீபத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம்
குறித்த உண்மையறியும் விசாரணையை நடத்தி அறிக்கை தந்திருக்கிறார்.
பண்புடன் குழுமத்தில் திரு.ஜமாலன் அவர்களால் இவ்வறிக்கை
பதிவேற்றப்பட்டது. ஆங்கிலத்தில் இருக்கும் இவ்வறிக்கையை இங்கே
(முடிந்தவரை) தமிழில் மொழிபெயர்த்து அனைவரின் வசதிக்காகவும் தருகிறேன்.


சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு
பின்னணியில் உறங்கும் உண்மை!

12.11.2008 அன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த
வன்முறை சம்பவம் ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கிறது. நிச்சயமாக
இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது. எதிர்கால வழக்கறிஞர்களையும்,
நீதிபதிகளையும் உருவாக்குமிடத்தில் நடந்த சம்பவம் என்பதால், பின்னணியில்
நடந்தவற்றை இங்கே பொதுவில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.

சட்டக்கல்லூரியில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவது புதிதல்ல. கடந்த
நான்காண்டுகளாக பல மாணவர்களின் இதயங்களுக்குள் குமுறிக்கொண்டிருந்த
எரிமலை சம்பவத்தன்று வெடித்து சிதறி நெருப்பாறாய் ஓடியிருக்கிறது.
சென்னையில் தலைமையகம் அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் 'தேவர் பேரவை'
சட்டக்கல்லூரியை தொடர்ந்து அவதானித்து வருகிறது. குறிப்பாக தென்
தமிழகத்திலிருந்து படிக்க வந்த தேவர் சமுதாய மாணவர்கள் இப்பேரவைக்கு
பலிகடாவாக்கப்பட்டு வருகிறார்கள். இம்மாணவர்களைக் கொண்டு 'முக்குலத்தோர்
மாணவர் பேரவை' என்ற அமைப்பும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.
முக்குலத்தோர் மாணவர் பேரவையின் முக்கிய நோக்கமே தலித் மாணவர்களை
குறிவைத்து தாக்குவதாக இருந்திருக்கிறது.

மற்ற நான்கு அரசு சட்டக்கல்லூரிகளும் 'அரசு சட்டக்கல்லூரி' என்ற பெயரில்
இயங்கும்போது சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரி மட்டும் ஏன் டாக்டர்.
அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரில் இயங்குகிறது என்றும் இப்பேரவை
மாணவர்கள் பிரச்சினை செய்து வந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் ஒரு
தலித் என்பதாலேயே அவரது பெயர் நீக்கப்படவேண்டும் என்று கடந்த
நான்காண்டுகளாக இவர்களால் பேசப்பட்டு வந்தது. இம்மாணவர்கள் கல்லூரி பெயரை
குறிப்பிட வேண்டிய இடங்களிலெல்லாம் 'சென்னை சட்டக்கல்லூரி' என்று
மிகக்கவனமாக டாக்டர் அம்பேத்கர் பெயரை தவிர்த்து வந்திருக்கிறார்கள்.

'முக்குலத்தோர் மாணவர் பேரவை'யின் இதுபோன்ற செயல்கள் தேவையில்லாத
பிரச்சினைகளையும், வெறுப்புகளையும் இரு தரப்பினரிடையே ஏற்படுத்தி வந்தது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இதுபோன்ற செயல்களின் சூத்திரதாரியாக
வன்முறை சம்பவத்தன்று தாக்கப்பட்ட பாரதிகண்ணன் என்ற மாணவர்
இருந்திருக்கிறார். கடந்த ஆறுமாதகாலமாகவே கையில் பட்டாக்கத்தியோடு ஐந்து
மாணவர்கள் துணையோடே எப்போதும் பாரதிகண்ணன் காட்சியளித்திருக்கிறார்.
குறைந்தது இரண்டு தலித் மாணவர்களையாவது போட்டுத்தள்ளவேண்டும் என்பது
அவரது எண்ணமாக இருந்திருக்கிறது. காவல்துறைக்கு ஏற்கனவே இதுதெரிந்து அவரை
கைது செய்திருக்கிறது. அவரிடமிருந்து மூன்று நீளமான பட்டாக்கத்திகள்
கைப்பற்றப்பட்டும் இருக்கிறது. ஆயினும் எந்த வழக்கும் பதியப்படாமல் அவர்
விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகத்துக்கு பாரதிகண்ணனின்
இந்த போக்கு தெரிந்தும், அவரை அடக்க எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில் பாரதிகண்ணனும் அவர்களது நண்பர்களும்
ஒருமுறை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் டாக்டர்
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயிலக்கூடிய தலித் மாணவர்களுக்கான தங்கும்
விடுதியை தாக்கியிருக்கிறார்கள். பாரதிகண்ணன் மீது கொலைமுயற்சி உட்பட
குறைந்தது 17 வழக்குகள் இருக்கிறது.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி வந்தது. முக்குலத்தோர் மாணவர்
பேரவை சார்பில் தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும்
வழக்கம்போல டாக்டர் அம்பேத்கர் பெயர் தவிர்க்கப்பட்டு 'சென்னை
சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதே தினம்
கல்லூரியில் தலித் மாணவர்களை சீண்டுவதும், கிண்டலடிப்பதுமான போக்கு
அதிகரித்திருக்கிறது. தட்டிக்கேட்ட தலித் மாணவர்கள்
தாக்கப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 3ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய
நிலையில் "எந்த தலித் மாணவராவது கல்லூரிக்குள் நுழைந்தால் தாக்கப்பட்டு
கொல்லப்படுவார்கள்" என்று முக்குலத்தோர் மாணவர் பேரவை
அறிவித்திருக்கிறது. அறிவித்தவாறே கல்லூரி வளாகத்தில் பேரவையை சேர்ந்த
மாணவர்கள் உருட்டுக்கட்டை, இரும்புத்தடிகள், பட்டாக்கத்திகள் ஆகிய
ஆயுதங்களோடு சுற்றி வந்தார்கள். தலித் மாணவர்களால் தேர்வு எழுதும்
அரங்குக்குள் நுழையமுடியாத நிலை இருந்தது. சில தலித் மாணவர்கள் மட்டும்
அவர்களது கண்களுக்கு தப்பி தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவ்விவரங்கள்
வெளிப்படையாக தெரிந்த நிலையிலும் கல்லூரி நிர்வாகமோ அல்லது காவல்துறையோ
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தான் கடந்த 12.11.2008 அன்று தங்களின்
சுயபாதுகாப்புக்காக தலித் மாணவர்கள் ஆயுதம் ஏந்தி கல்லூரிக்கு
வந்திருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம் தலித்
மாணவர்கள் ஆயுதமேந்தியதுமே விழித்தெழுந்து பிரச்சினையை
பெரியதாக்கவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறது. ஆயுதமேந்திய சில
மாணவர்களோ மற்ற தலித் மாணவர்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள்
ஆயுதமேந்தியிருக்கிறோமே தவிர முக்குலத்தோர் பேரவை மாணவர்களை தாக்க அல்ல
என்று விளக்கமளித்திருக்கிறார்கள். தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களை
அடையாளம் கண்டுகொண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் மற்றும் அய்யாதுரை
உள்ளிட்டவர்கள் குறைந்தது ஐந்து பேரையாவது கொல்லும் நோக்கத்தோடு இரண்டு
அடி நீள கத்தியோடு எகிறிக்குதித்து, பலமாக குரலெழுப்பி
ஓடிவந்திருக்கிறார்கள். இதைக்கண்ட தலித் மாணவர்கள் சிதறி
ஓடியிருக்கிறார்கள்.

துரத்திவந்த பாரதிகண்ணன் மற்றும் ஆறுமுகம் இடையே சித்திரைச்செல்வன் என்ற
தலித் மாணவர் மாட்டிக் கொண்டார். சித்திரைச் செல்வனின் தலையை வெட்ட
முயற்சித்திருக்கிறார்கள். சித்திரைச்செல்வன் தலையை அசைத்ததால் கத்தி
காதில் இறங்கி காது அறுபட்டு ரத்தம் சொட்டியது. சித்திரைச்செல்வனை
காப்பாற்ற திரும்ப ஓடிவந்த தலித் மாணவர்களிடையே பாரதிகண்ணனும்,
ஆறுமுகமும் சிக்கிக் கொண்டார்கள். அன்று நடந்த விரும்பத்தகாத
சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகமே முழுப்பொறுப்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக
சாதிவெறி கல்லூரி வளாகத்துக்குள் தலைவிரித்து ஆடியும், தலித் மாணவர்கள்
இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் நிர்வாகத்தால்
எடுக்கப்படவில்லை. பாரதிகண்ணன் போன்ற மாணவர்கள் ஆயுதங்களோடு உலாவுவதை
தடுத்து நிறுத்தியிருந்தால் பிரச்சினை வன்முறையாக வெடித்திருக்காது.

உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் :

1) சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் வன்முறை ஏற்படும்வரை அமைதி
காத்த கல்லூரி முதல்வர் மீதான நியாயமான நடவடிக்கை.

2) சாதி அமைப்புகள் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தூண்டி
வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவதை கட்டுப்படுத்துதல்.

3) அனைத்து மாணவர்களுக்கும் (குறிப்பாக தலித் மாணவர்களுக்கு) தகுந்த
பாதுகாப்பு உடனடியாக வழங்கப்படுதல்.

4) இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னாலிருந்து குளிர்காயும்,
மாணவர்களுக்குள் சாதிய உணர்வை தூண்டிவிடும் தேவர்பேரவை போன்ற
அமைப்புகளின் மீதான உடனடி நடவடிக்கை.

5) ஒருவாரத்துக்கும் மேலாக கல்லூரி வளாகத்துக்குள் ஆயுதங்களோடு
சுற்றிவந்து அச்சுறுத்தியவர்களிடமிருந்து மாணவர்களை காக்க தவறிய
காவல்துறை அதிகாரிகள் மீதான கடும் நடவடிக்கை.


சென்னையில் நடந்த சாதி தொடர்பான ஒரு மோதலின் உண்மை அறியும் அறிக்கை இது.
சம்பவத்தோடு தொடர்பான தலித் மாணவர்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான உடனடி ஆதரவை தரும் வகையிலும் இவ்வறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்களோ, தனிநபர்களோ இம்மாணவர்களுக்கு
உதவ விரும்பினால் உடனடியாக எனது கைப்பேசி எண்ணில் (+919820216146)
தொடர்புகொள்ளலாம். - ஆனந்த் டெல்டும்பட்

On Nov 18, 4:40 am, "கென்" <jakey342...@gmail.com> wrote:
>   நன்றி : உயிரோசை
> ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்

>    மாயா...

> read more »

நண்பன்

unread,
Nov 19, 2008, 10:42:03 AM11/19/08
to பண்புடன்
ஒரு பிரச்சினையை அதன் தொடக்கத்திலே எதிர்நோக்கத் திராணியற்று, தள்ளிப்
போட்டுக் கொண்டே போவதன் அனர்த்தம் இன்று அனைவருக்கும் புரிந்திருக்கும்.

ஒவ்வொரு சமூகமும் விழிப்புணர்வு கொண்டு, தன்னைப் பிறருக்கு சமமாக
மீட்டெடுத்துக் கொள்வதை அனைவரும் வரவேற்கத் தான் வேண்டும். ஆனால், தான்
வளர்ந்தால் மட்டுமே போதும், தனக்கு இணையாக பிறருக்கு வாய்ப்புகள்
வழங்கப்படக் கூடாது. அவர்கள் வளர்ந்து விடக் கூடாது என்பது எந்த வகையான
சமூக நீதி என்று தெரியவில்லை.

இங்கு மோதிக் கொண்ட இரு பிரிவினருக்குமிடையிலே, காலம் காலமாக மோதல்கள்
நடந்தே வந்திருக்கின்றன. நான் கல்லூரியில் படித்த காலத்திலும்,
கல்லூரியில் நிகழ்ந்த மோதல்கள் இந்த இருவருக்குமிடையிலே தான்
நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அவை இத்தனை கொடுரமாக இருந்ததில்லை. 25
வருடங்களுக்குப் பிறகும் இந்த (அல்லது எந்த) பிரிவினரிடையையுமே விவேகம்
என்பது வளரவில்லை. மாறாக மோசமடைந்திருக்கிறது.மிருகத்தனமாக
மாறியிருக்கிறது.

மாணவர்கள் எப்பொழுதுமே புதிய சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும்
எளிதாகப் பற்றிக் கொள்வார்கள் என்பது பொதுவான கருத்து. பெருந்தன்மையான
நீக்குப் போக்கான நடத்தைகள் கொண்டவர்களாக மாணவர்கள் இருப்பார்கள் என்பதே
எல்லோரின் எதிர்பார்ப்பும். ஆனால், இங்கே மட்டும், ஏன் எந்த
இலக்குமின்றி, மாணவர்கள் தங்கள் நடத்தையில் பிற்போக்குத்தனத்தையும்,
வெறியையும் தங்கள் சிந்தனைகளில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது
புரியவில்லை. இளம் ரத்தம் சூடானது என்று சொல்வதெல்லாம், பாரம்பரியமாகக்
கையாளப்படும் மரபுகளை மீறும் வேகத்தையே குறிப்பதாக இத்தனை நாட்களும்
நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவை முற்போக்கு சிந்தனைகள் அல்ல -
வெறும் பித்துக்குளித்தனம் மட்டுமே என்பதை நினைக்கையில், நம் சமூகம்
எத்தனை தூரம் பின்னோக்கிப் போய் விட்டிருக்கிறது என்ற வேதனை மிகுகிறது.

மாணவர்களின் மத்தியில் இந்த ஈனத்தைக் களைவதைக் காட்டிலும், அதிகாரங்களின்
கரங்களைப் பற்றிக் கொள்ளவும், தொடர்ந்து தனக்குரிய வாய்ப்புகளைப்
பெறுவதற்கும், எளிய சமூகத்தினரை அடக்கியாள்வது ஒன்றே வழியென்ற பாடம்
புகட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலமே இதுவரையிலும் பெற்ற ஆதாயங்களைத் தக்க
வைக்க முடியும் என்ற தவறான பாதை காட்டப்பட்டிருக்கிறது. தங்கள் பிரிவின்
பாராம்பரிய பெருமைகளாக, போர், வன்முறைகளே வீரம் எனக்
காட்டப்பட்டிருக்கிறது. இன்றைய சமூகங்களில், போர் என்பது
சாத்தியமற்றதாகப் போன பின், வீரம் என்பது வன்முறையாக சொல்லப்படுகிறது.

இந்தப் பண்பை தொடர்ந்து வளர்த்தெடுக்க அமைப்புகள் வேண்டும். யாரும்,
எந்தத் தூண்டுதலும் இல்லாமல், இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சாத்தியமானதா
என்ன? இருக்காது என்றே தோன்றுகிறது. அப்படியானால், இவர்களுக்கு சொல்லித்
தருவது யார்? அந்த அமைப்புகள் தனியாக, சுயார்ஜிதமாகத் தான்
செயல்படுகின்றனவா, அல்லது, அந்த அமைப்புகளே, பிற சுயநலமிகள், விஷமிகளை
மூளையாகக் கொண்டு செயல்படும் திரைமறைவு அமைப்புகளின் முகமா என்பது
வரையிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அம்பேத்கர் ஒரு சட்ட மேதை. இந்தியாவின் சட்டமியற்றும் குழுவின்
தலைமையாளாராக இருந்தவர். அவர் பெயரில், ஒரு கல்லூரி இயங்குவதை எதிர்க்க
வேண்டுமென்று தோன்றியதே சில அமைப்பு சார்ந்த இயக்கங்களின் சித்தாந்தமாகத்
தான் இருக்க வேண்டும். எந்த ஒரு மாணவருக்கும் தோன்றியிருக்காது என்றே
நினைக்கிறேன். அம்பேத்கரை ஒரு சாதியின் தலைவராக மட்டுமே குறுக்கிப்
பார்க்க வேண்டும் என்ற சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் விதைப்பது, இந்த
அமைப்புகள் எத்தனை வன்மம் மிக்கவையாக இருக்கின்றன என்பதையே
அறிவிக்கின்றன.

இந்த வகை அமைப்புகளை அடையாளம் காண வேண்டும். அமைப்புகளின்
திரைச்சீலைகளுக்குப் பின்னர் ஒளிந்திருக்கும் மற்ற முகங்களையும் வெளிக்
கொண்டு வர வேண்டும். தேர்தல்கள் தெருமுனையில் காத்திருக்கும் பொழுது,
இத்தகைய நிகழ்வுகள் சொல்வது - சில அமைப்புகளைத் தூண்டிவிட்டு, உணர்ச்சிக்
கொந்தளிப்பை உருவாக்கி, அதன் மூலம் ஓட்டுகளை அள்ளிவிடலாமென்ற நப்பாசை
தான். இருவித நோக்கங்கள் இருக்கின்றன - ஒன்று. தனது ஆதரவு ஓட்டுகளைச்
சேகரிப்பது. தங்களுக்கு எதிராகத் திரளும் ஓட்டுகளைச் சிதறடிப்பது.
ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் பொழுதும், இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதன்
காரணம் விளக்கிச் சொல்ல வேண்டிய அளவிற்கு புதிர் அல்ல.

இது வெறும் மாணவர்களுக்கிடையேயான பிரச்சினை அல்ல.

எதிர்வரும் தேர்தலை நோக்கி நகர்த்தப்படும் வன்முறைக்கும், கலவரத்திற்கும்
வித்திடப்பட்ட அடிவாரம். இந்த அடிவாரம் வரையிலும் சென்று, தீர
விசாரித்து, மேலும் கலவரம் நிகழாமல் தவிர்க்க வேண்டும். அதற்கு
அடிப்படைத் தேவை - அரசியல் தீரம். ஓட்டுகளை இழப்போம் என்ற அச்சத்தில்
இப்பொழுது செயல் இழந்து நின்றால், நாளை ஓட்டுகளை மட்டுமல்ல, தேர்தலையும்
இழந்து விட்டு, மேலும் ஒடுக்கப்பட்டோரை அவலத்திற்குள்ளாக்கும் நாட்களைத்
தான் எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய பரிதாபத்திற்கு ஆளாவோம்.

கட்டுரைகளைத் தந்த, ஜமாலானுக்கும், கென்னுக்கும் நன்றிகள்...

பிரேம்குமார்

unread,
Nov 19, 2008, 11:46:35 AM11/19/08
to panb...@googlegroups.com
//ஒரு பிரச்சினையை அதன் தொடக்கத்திலே எதிர்நோக்கத் திராணியற்று, தள்ளிப்

போட்டுக் கொண்டே போவதன் அனர்த்தம் இன்று அனைவருக்கும் புரிந்திருக்கும்.
//
 
மிகச்சரியா சொன்னீங்க நண்பன்.

ஜமாலன்

unread,
Nov 20, 2008, 3:44:05 AM11/20/08
to panb...@googlegroups.com
மீடியா பார்த்த மோதலுக்கு முன்னே...!

சென்னை, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர் மோதல் காட்சிகள் இன்னும்கூட மனதை விட்டு அகலவில்லை. இந்தியாவையே பதற்ற மடையவைத்த நவம்பர் 12-ம் தேதி என்ன நடந்தது என்பது பற்றிய முழு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை!

இந்நிலையில், மாணவர்கள் மோதலின் நேரடி சாட்சியங்களான வழக்கறிஞர் ரஜினிகாந்த்தும் விஞ்ஞானி கோபாலும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைக் கேட்கத் தமிழக அரசும், சென்னை மாநகரக் காவல்துறையும் காதைத் தீட்டிக்கொண்டு இருக் கின்றன.

வழக்கறிஞர் ரஜினிகாந்த், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர். மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலர்.

கோபால், கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானி யாக இருந்து


ஓய்வு பெற்றவர். மனித உரிமை அமைப்புகளில் ஈடுபாடுடையவர். தற்போது குடியுரிமைப் பாதுகாப்புக் குழுவில் இருக்கிறார்.

கடந்த 12-ம் தேதி சட்டக் கல்லூரி வளாகத்தில் ஆயுதங்களோடு திரண்டுவிட்ட மாணவர்களை சமாதானப்படுத்திப் பேச்சுவார்த்தை நடத்த, கல்லூரி தரப்பிலிருந்து அழைக்கப்பட்டிருந்தார் ரஜினிகாந்த். இனி ரஜினிகாந்த்தே பேசுகிறார்.

''தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், நான் மாணவனாக இருந்தபோது எனக்குப் பேராசிரியர். சட்டக் கல்லூரியில் மாணவர் மோதல் அன்றாட நிகழ்வாகிவிட்ட தால், சமாதனப் படலத்துக்கு என்னை அவர் அழைப்பார். அந்த வகையில் அன்றும் அழைப்பு வர... கோபாலுடன் சென்றேன். 12-ம் தேதி நடைபெற்ற சம்பவத்தை மட்டும் சொன்னால் புரியாது. கொஞ்சம் முன்பிருந்தே சொன்னால்தான் புரியும்.

சில வருடங்களாகவே கல்லூரி வளாகத்தில் சாதியப் பாகுபாடுகள் தென்படத் தொடங்கி இருந்தன. அதன் ஒரு வெளிப்பாடாக 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்றொரு அமைப்பு தொடங்கப் பட்டது. அதன்பின், 2007-ம் வருடம் ஹாஸ்டலில் கை கழுவும் இடத்தில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதி கண்ணன், சாதி ரீதியான பேச்சுகளால் தலித் மாணவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். அது அடிதடி வரை போக, தலித் மாணவர்களும் பாரதி கண்ணனும் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போதும் பேச்சுவார்த்தையின் மூலம் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்தோம்.

ஆறு மாதங்களுக்கு முன்பு கல்லூரியின் பெயரில் இருக்கும் 'அம்பேத்கர்' என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி, பாரதி கண்ணன் தலைமையில் ஒரு மாணவர் கூட்டம் பிரச்னையை ஆரம்பித்தது. 'சிங்கங்களே, ஒன்று சேருங்கள்' என்று தேவர் சமூக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, கல்லூரி வளாகத்துக்குள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு தலித் மாணவர்கள் எதிர்ப்புக் காட்டினர். எதிர்த்தவர்களைப் பழிவாங்க கல்லூரி வளாகத்துக்குள் கொடுவாள்கள் அணிவகுத்தன. இதுகுறித்து பி-1 காவல் நிலையத்துக்குப் புகார் வர... உடனடியாகக் காவல்துறை கொடுவாள்களைக்கைப்பற்றி, பாரதி கண்ணனைக் கைது செய்தது. அவரிடமிருந்து மூன்று கொடுவாள்கள் கைப்பற்றப்பட்டன. அவர் காவல் நிலையத்தில் இருந்தார். நானும் வழக்கறிஞர் பால் கனகராஜும் காவல் நிலையம் சென்றபோது, அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கொடுவாள்களைக் காட்டினார்கள். ஆனால், பாரதி கண்ணன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, போலீஸ் திரும்பவும் தலையிட்டது. இப்போது போலீஸ் வாகனங்கள் மீது கல்லெறிந்தார்கள் என தலித் மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாரதி கண்ணன் தரப்பினர் ஹாஸ்டலில் உள்ள மின் விளக்குகளை அடித்து நொறுக்கினார்கள். அப்போது பாரதி கண்ணனைப் பற்றிய சில குறிப்புகள் புகாராக முதல்வர் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தற்போது, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு போஸ் டர் அச்சடித்ததில் அம்பேத்கர் பெயர் இல்லை என்று பிரச்னை ஆரம்பித்தது. கடந்த 3-ம் தேதி தொடங்கிய தேர்வுகளில், தலித் மாணவர்கள் பங்கேற்க முடியாத படி பாரதி கண்ணன் தலைமையிலான ஒரு குரூப் ஆயுதங்களோடு கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதாகவும், சமாதானம் பேச வருமாறும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் என்னை அழைத்தார். நானும் சென்றேன். தேர்வுக்கு வந்த மாணவர்களைக் கணக்கிட்டால், 'பெரும்பாலான தலித் மாணவர்கள் தேர்வே எழுதவில்லை' என்று கல்லூரி நிர்வாகமே தெரியப்படுத்தியது. இது விபரீத விளைவு களை ஏற்படுத்தும் என்று அச்சப்பட்டு, பேராசிரியர்கள் தொடங்கி கல்லூரி முதல்வர் வரையிலும் பேசினேன். அதன் பலனாக தலித் மாணவர்கள் சிலர் தேர்வுகளை எழுத வந்தார்கள். நம் மிரட்டலையும் மீறித் தேர்வு எழுத வருவதா என்று சீறிய பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாபிள்ளை ஆகியோர் அடங்கிய இருபது பேர் கும்பல், கடந்த 7-ம் தேதி மாலை தேர்வெழுதிவிட்டு வெளியில் வந்த ஏழுமலை, ராஜா, மேகநாதன், மனோஜ்குமார் ஆகியோரை பாரிமுனை பஸ் ஸ்டாண்டில் அடித்து நொறுக்கியிருக்கிறது. இதற்கு நேரடி சாட்சி, தற்போது சிகிச்சையில் இருக்கும் சித்திரைச்செல்வன் என்ற மாணவர்.

இந்நிலையில்தான், 12-ம் தேதி மூன்றே முக்கால் மணிக்கு என்னை சட்டக் கல்லூரியின் பேராசிரியர் அழைத்து, 'மாணவர்களின் மோதலைத் தடுக்க, உடனே வாருங்கள்!' என்று பதைத்தார். நானும் கோபாலும் சமரசத்துக்காக கல்லூரி வளாகத்துக்குள் அன்று போனோம். உள்ளே தென்பட்ட சில பிரமுகர்களை வைத்து, இந்த முறை சில அ.தி.மு.க. தலைவர்களின் ஆதரவும் பாரதி கண்ணன் குரூப்புக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டோம்.

'நிச்சயம் மோதல் பெரிய அளவில் இருக்கும்' என்பதை உணர்ந்ததும், தலித் மாணவர்களை நோக்கிச் சென்றேன். வழியிலேயே, 'வாடா ரஜினி, ஏதாவது செஞ்சு மோதலைத் தடு' என்று கல்லூரி முதல்வர் உரிமையோடு கேட்டு என் கையைப் பிடித்து அழைத்துப்போனார். வழியில் உதவி ஆணையர், ஆய்வாளர் அடங்கிய பெரும் போலீஸ் படை முகாமிட்டிருந்தது. வளாகத்தின் ஒரு பகுதியில் தலித் மாணவர்கள் திரண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் முதல் ஆளாக சித்திரைச்செல்வன் நின்றிருந்தான்.

'பாருங்கண்ணா, பரீட்சை எழுத விடமாட் றாங்க' என்று என்னை நோக்கி வந்தான். அவன் பின்னால் மாணவர்கள் அணிதிரள, நான் அவர்களை நோக்கிப் போனேன். அப்போது என் செல்போனில் கோபால் கொடுத்த மெஸேஜ், 'இருவர் வருகிறார்கள், ஜாக்கிரதை!' என்று இருந்தது...''

ரஜினிகாந்த்தை இடைமறித்து, அந்த மெஸேஜ் மேட் டர் பற்றி கோபால் பேசினார் -

''ரஜினிகாந்த் தலித் மாணவர்களிடம் போய்க் கொண்டிருந்தபோது நான் உயர் நீதிமன்றத்துக்கும் கல்லூரி வளாகத்துக்கும் இடையிலிருக்கும் சின்ன மதில் அருகே நின்றுகொண்டு, இன்னொரு பிரிவு மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தேன். அப்போதுதான் பாரதி கண்ணனும், ஆறுமுகமும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்கள். பாரதி கண்ணன் கறுப்புப் பை வைத்திருந்தார். இருவரின் நடவடிக்கைகளும் என்னை ஈர்க்க, அவர்கள் பக்கத்தில் சென்று நின்றேன். அப்போது பாரதி கண்ணன் செல்போனுக்கு அழைப்பு வந்தது. 'இன்னும் பத்து நிமிஷத்துல களத்துல இருப்பேன். மூணு பேராவது சாய்ஞ்சுடுவாங்க' என்றார். உடனே, நான் ரஜினிகாந்த்துக்கு போன் போட்டேன். கிடைக்காததால்தான் மெஸேஜ் கொடுத்தேன். மெஸேஜ் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால், அருகில் இருந்த மதிலில் கத்தியைக் கூர்தீட்டிக்கொண்டு இருந்தார் பாரதி கண்ணன். நானும் தலித் மாணவர்களை நோக்கி ஓட, அதற்குள் சித்திரைச்செல்வன் மீது தன் கத்தியைப் பாய்ச்சிவிட்டார்!'' என்று கோபால் நிறுத்தினார்.

ரஜினிகாந்த் தொடர்ந்தார்...

''பாரதி கண்ணனின் தாக்குதலில் கீழே சாய்ந்த சித்திரைச்செல்வனின் ஒரு காது துண்டானது. இதைப் பார்த்த மாணவர்கள், நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங் கினார்கள். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அனைவரும் ஆறுமுகத்தையும் பாரதி கண்ணனையும் நோக்கி கம்புகளோடும், கிரிக்கெட் மட்டைகளோடும் பாய்ந்து வந்தார்கள். அங்கு என் பேச்சோ, முதல்வர் பேச்சோ எடுபடவில்லை. போலீஸ் வேடிக்கை பார்க்க... ஊடகங்கள் வாயிலாக உலகமே அதன்பிறகு நடந்த அந்த பதில் தாக்குதல் கோரத்தைப் பார்க்கத் தொடங்கியது!'' என்று முடித்த ரஜினிகாந்த் கடைசியாக,

''மாணவர்களின் மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸ், வழக்கில் தொடர்புடைய மாணவர்களை வளைக்க அவர்களுடைய பெற்றோர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்து, தங்கள் கோபத்தைக் காட்டியிருக்கிறது. ஆதாரங்களோடு இதுகுறித்து வழக்குத் தொடுக்க இருக்கிறோம். மோதலுக்குக் காரணமான பாரதி கண்ணன் மீது இப்போதும் சாதாரண பிரிவில் மட்டுமே வழக்குப் போட்டுள்ள காவல்துறை, தாக்குதலுக்கு ஆளான சித்திரைச்செல்வன் மீது கொலைமுயற்சி வழக்கு தொடுத்திருக்கிறது. போலீஸ் தன்னுடைய தவறான நடவடிக்கையால், இன்னும் மாணவர்கள் மோதலை தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறது!'' என்றார். இதில் ரஜினிகாந்த் தலித் சமூகத்தவர்... கோபால் மோதல் நடத்திய இரண்டு சமூகங்களும் அல்லாதவர்!

'ஐடியா கொடுத்ததே அரசியல் புள்ளிகள்தான்!'

கை, கால்களில் கட்டுகள் சகிதம் மருத்துவமனையில் இருக்கும் நான்காமாண்டு மாணவர் பாரதி கண்ணனிடம் பேசினோம். ''சம்பவத்தன்னிக்கு நான் ஹாஸ்டல்ல தூங்கிட்டு இருந்தேன். அப்ப பசங்க ஓடிவந்து 'ஆறுமுகத்தை அடிக்கிறாங்க'னு எழுப்பினாங்க. பதறியடிச்சு காலேஜுக்குப் போனப்ப... ஒரு பெரிய கும்பலே ஆறுமுகத்தை அடிச்சு நொறுக்கிக்கிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல ஆறுமுகத்தைக் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை. அதனாலதான், கையில பட்டாகத்தியை எடுத்துக்கிட்டு ஓடினேன்.

'ஆறுமுகத்தை விடுங்கடா'னு கத்திக்கிட்டே அந்தக் கும்பலை விரட்டினேன். அதுல சித்திரைச்செல்வனுக்கு காயம்பட்டது. அவனுங்க என்னையும் தாக்கினானுங்க. யாரை யாவது குத்துறதுக்காக நான் கத்தி எடுத்திருந்தா, குறைஞ்சது பத்து பேரையாச்சும் குத்தி இருக்கலாம். ஆனா குத்துற நோக்கத்துல நான் கத்தி எடுக்கலை. நான் கத்தி எடுத்தது தப்புங்கிறாங்க. நான் எடுத்திருக்காட்டி, கண்டிப்பா ஆறுமுகத்தைக் கொன்னுருப்பாங்க!'' என்றவர்,

''சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே 'தேவர் ஜெயந்தி போஸ்டர்ல அம்பேத்கர் பெயர் போடலைங்கிறதுக்காக ரவுடிகளை அழைச்சுவச்சுக்கிட்டு சில பசங்க திட்டம் போடுறாங்க. அதுக்கு அரசியல்வாதிங்க சிலர் தூண்டுகோலா இருக்காங்க. பெரிய பிரச்னை வர வாய்ப்பிருக்கு'னு பிரின்சிபால்கிட்ட போய் சொன்னோம். ஆனா, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

கட்டை, கம்புகளோட காலேஜுக்கு வந்த பசங்களுக்கும் பிரின்சிபாலுக்கும் ஏதோ பேச்சுவார்த்தை நடந்திருக்கு. அதுக்கிடையில, சம்பவம் நடக்கறதுக்கு முன்னால பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கின் கார் கல்லூ ரிக்கு வந்தது. பிற்பாடு, ஆம்ஸ்ட்ராங் பிரின்சிபாலை சந்திச்சுப் பேசியிருக்கார். இதையெல்லாம் பார்த்தா, இதுல ஏதோ அரசியல் பின்னணி இருக்குனு தெரியுது. இப்பகூட முக்கியமான குற்றவாளிகள் மேல சாதாரண வழக்குகளைத்தான் பதிவு பண்ணியிருக்காங்க. காலேஜ்ல ஏற்கெனவே பல விஷயங்கள்ல தகராறு நடந்திருக்கு. என் மேல ரெண்டு வழக்கு பதிவாகியிருக்கு. அந்த விவகாரங் களில் என் மேல தவறு இல்லைனு காலேஜுக்கே தெரியும். என் மேல கம்ப்ளெயின்ட் கொடுக்கச் சொல்லித் தூண்டிவிட்டதே சில அரசியல் புள்ளிகள்தான்! அவங் களோட பேச்சை கேட்டுக்கிட்டுத்தான் சம்பவத்தன்று சித்திரைச்செல்வன் தனக்குக் கீழான மாணவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தான். இதை அவனது தரப்பினரே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்!'' என்றார் பாரதி கண்ணன்.

- இரா.சரவணன்

- எஸ்.சரவணகுமார்
படம்: எம்.உசேன்

நன்றி : ஜூனியர் விகடன்.

Asif Meeran AJ

unread,
Nov 20, 2008, 3:54:22 AM11/20/08
to panb...@googlegroups.com
நன்றி ஜமாலன்
இதையே நண்பர் ப்ரியனும் முன்னிட்டிருக்கிறார்
சட்டக் கல்லூரி மோதல்கள் நம்க்குள் விளைவித்திருக்கும் தாக்கத்தைன்
அறிகுறியாகக் கொள்ள வேண்டியதுதான்

2

ஜமாலன்

unread,
Nov 22, 2008, 12:44:16 AM11/22/08
to panb...@googlegroups.com
26 சட்ட மாணவர்கள் சஸ்பெண்ட்-புதிய முதல்வர் அதிரடி
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008  
    

சென்னை: சென்னை அரசு சட்டக் கல்லூரியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக 26 மாணவர்கள் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய முதல்வராக முகமது இக்பால் நியமிக்கப்பட்டார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் கல்லூரியில் நடக்கும் அரசியல், ஜாதி மோதல் குறித்து ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களிடம் விவாதித்தார் இக்பால்.

இதையடுத்து இந்த மோதலுக்கு வித்திட்ட 26 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை, சித்திரைச் செல்வன் ஆகியோரும் அடங்குவர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் கல்லூரி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அட்வகேட் ஜெனரல் நியமனம்:

இதற்கிடையே சட்டக் கல்லூரி மற்றும் அதன் விடுதியின் செயல்பாடுகளை ஆராய அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

கல்லூரிக்குள் நடந்த வன்முறை, அதை போலீசார் வேடிக்கை பார்த்தது ஆகியவை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.

நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,

மோதல் தொடர்பாக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை சரியான முறையில் துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.

இந்த கோர்ட்டுக்கு உதவ அட்வகேட் ஜெனரலும், சென்னை சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான சீனியர் வக்கீல் ஜி.மாசிலாமணி நியமிக்கப்படுகிறார்.

இவர் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் சட்டக் கல்லூரியிலும், விடுதியிலும் சென்று விசாரணை நடத்த வேண்டும்.

ஆசிரியர்கள், ஊழியர்கள் விவரத்தையும், இக்கல்லூரிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது, எந்த முறையில் செலவு செய்யப்படுகிறது, ஆசிரியர்களின் தகுதி, வகுப்பறைகள் நிலைமை, விடுதி என்ன நிலைமையில் உள்ளது, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட முதல்வர், தற்போதைய முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரிக்க வேண்டும்.

இந்த விசாரணைக்கு கல்லூரி முதல்வர், துணைவேந்தர், மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு குறை இருந்தால் அதை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். குறைகளை தெரிவித்த மாணவர்களை நேரில் அழைத்தும் விசாரிக்கலாம். இந்த விசாரணைக்கு மாணவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். முழுமையான விசாரணை நடத்திய பிறகு, பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் வரும் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது

நன்றி தட்ஸ் தமிழ் 

ஜமாலன்

unread,
Nov 22, 2008, 2:27:53 AM11/22/08
to panb...@googlegroups.com

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மோதல் ஒரு வருந்ததக்க செயல் என்பதும் பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்.  வன்முறை எப்போதும் எதிர்வன்முறைக்கான கூறைக் கொண்டே உள்ளது. அவ்வகையில் இந்த வன்முறையின் ஒருபக்கத்தை மட்டும் ஊடகங்கள் பெரிதுபடுத்தி இந்தப் பிரச்சனையில் தங்களது ஒருதலைப் பச்சமான உயர்சாதி சார்பு மனப்பான்மையை வெளிப்படுத்தி கொண்டன என்பதுடன் தங்களது ஓட்டுவங்கி அரசியலுக்கு இதனை பயன்படுத்திக்கொண்டன. ஊடகங்கள் உண்மைகளை சொல்வதில்லை "உண்மைகளை" கட்டமைக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லியுள்ளது இச்சம்பவம்.

இச்சம்பவத்தில் பரவலாகப் பேசப்பட்ட முக்கியச் சொல்லாடல்கள். 1. சட்டம் 2. வன்முறை 3. வன்மம் 4. காட்டுமிராண்டித்தனம். 5. மாணவர்கள் - அரசியல் உறவு 6. காவல்துறைப்பணி 7. பொதுமக்கள் பார்வை 8. அரசு நடவடிக்கை 9. ஊடகங்கள் கட்டும் உண்மை 10. பொதுபுத்தியும் சாதிப்புத்தியும்.

இச்சொல்லாடல்கள் மறு உற்பத்தி செய்யப்பட்டு சமூக பொதுப்புத்தி கட்டமைப்பை மறுபடியும் மறுஉருவாக்கம் செய்து அவரவர் அடையாளங்களை ஒரு முறை மீளாக்கம் செய்துள்ளது என்றால் மிகையாகாது.  மேற்க்கண்ட சொல்லாடல்கள்வழி இந்நிகழ்வு எப்படி பரவலான கவனத்தையும் மக்களிடம் ஒரு அதிகார விருப்புறுதியையும் உருவாக்கியது என்பது பிறிதொரு ஆய்வு. சாதியம் என்பது ஒரு கருத்தியில் அல்ல அது ஒரு உடலரசியல் நிகழ்வு என்பதையும் ஒரு உடலின் உள்ளார்ந்துள்ள செயல்-பழக்கத்தின்(habitués)  வழியாக ஒரு கருத்துருவ-உடலாக மாற்றப்பட்டுள்ளது. விழாககள், ஜெயந்திகள் மற்றும் பல கொண்டாட்டங்கள் வழியாக சாதி குறித்த பல வரலாற்று நினைவுகள் தொடர்ந்து ஊடகங்களால் அந்த சாதிய ஆதிக்க வர்க்கத்தினரால் பெருக்கப்பட்டு, பாதுகாப்பாக அந்தந்த சாதி உடலுக்குள் இறக்கப்படுகிறது. இப்படி இறக்கப்பட்ட சாதிய உடல்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதின் வழியாக தங்களது அடையாளத்தை மீளுருவாக்கம் (assemblages)  செய்துகொள்கின்றன. சாதியம் என்பது அடிப்படையில் தீண்டாமை மற்றும் தனது குழு உடல்கள் பற்றிய பெருமித அடையாளங்கள் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. வரலாறு என்கிற பெயரில் பல கற்பிதங்களை உருவாக்கி பல கதையாடல்களைக் கட்டமைத்துக் கொண்டதன்மூலம் சாதிய உடல்கள் மீண்டும் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொண்டே உள்ளன இத்தகைய நிகழ்வுகளால். வினவு சுட்டிக்காட்டியதுபோல "சாதியத்தலைவரை தேசியத்தலைவராகவும், தேசியத்தலைவரை சாதியத்தலைவராகவும்" கட்டமைக்கும் ஒரு கதையாடலை இந்கிகழ்வுகள் சென்னை போன்ற பெருநகர்வரை கொண்டு சென்றுள்ளது.

விரிவாக இதனை வேறாரு பதிவாக எழுதலாம். இங்கு, இந்நிகழ்வின் காட்சிகள் மற்றும் இதுகுறித்து தோழர். அ.மார்க்ஸ் மற்றும் மக்கள் குடியுரிமைவாதிகளால் நடத்தப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கையும் நிகழ்ந்த இந்த வன்முறையின் அடிப்படைகளைச் சொல்லும் என்பதால் இங்கு மீள்பதிவிடப்படுகிறது.

இப்படி வந்த நான் ........... 

imageimage 
imageimage

















imageimage 
இப்படி ஆயிட்டேன்.

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)

தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.செல்: 94441 2058294442 1417594434 39869

20, நவம்பர் 2008

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.

இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.

பின்னணி:

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.

எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. 'முக்குலத்தோர் மாணவர் சங்கம்' என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் 'தேவர் ஜெயந்தி' கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது 'டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி'என்னும் பெயரிலுள்ள 'டாக்டர் அம்பேத்கர்' என்னும் சொல்லை நீக்கி வெறும் 'சென்னை சட்டக் கல்லூரி'என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.

இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை 'ராகிங்' செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் 'கலாய்ப்பது' என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ''என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் 'அக்யூஸ்ட்' ராமர் என்னுடைய சித்தப்பா'' என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி தலித் மாணவர்களை ''தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்'' என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.

நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.

இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.

நவ.12 வன்முறை:

இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் 'கேட்'டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள 'எஸ்பிளனேடு' காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.

தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் 'பகுஜன் சமாஜ் கட்சி' தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.

சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.

இன்றைய நிலை:

நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் 'மற்றும் பலர்' குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்('மற்றவர்கள்') சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.

3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.

எமது பார்வைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.

2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.

3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.

4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.

5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.

6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.

8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத 'திருப்பதி சட்டக் கல்லூரி' மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.

பரிந்துரைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். 'டாக்டர் அம்பேத்கர்' உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.

2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.

3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.

4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.

5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.

6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு 'வார்டன்' நியமிக்கப்பட வேண்டும்.

8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும் 
Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.

9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.

நன்றி - சத்தியக்கடுதாசி

குறிப்பும் மீள்பதிவும் ஜமாலன் - 22-11-2008.

http://jamalantamil.blogspot.com/2008/11/blog-post_22.html


Reply all
Reply to author
Forward
0 new messages