இணைக்குறள் 1330 :[அதிகாரம் 003: நீத்தார் பெருமை] குறளும், குறளால் விளக்கமும் / துரை. ந. உ

0 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Nov 24, 2009, 9:30:28 AM11/24/09
to palsuvai, maza...@googlegroups.com, இல்லம் (your HOME)
அதிகாரம் 003 : நீத்தார் பெருமை
 
(திருக்குறளும் , குறளுக்கான விளக்கம் இணை குறளாகவும் )
 
21)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
விளக்கக் குறள் :

ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்

22)

துறந்தார் பெருமை துணைக்கூறி வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

 
விளக்கக் குறள் :

அ)

துறந்தோரின் நற்பெருமை கூறல்; உலகில்

இறந்தோரை எண்ணுதல் போல்

ஆ)

துறவியர் நற்பெருமை கூறுதலின் ஞாலத்(து)

இறந்தோரை எண்ணுவ(து) எளிது

 

 
23)
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்   பூண்டோர்

 பெருமை பிறங்கிற்று உலகு

விளக்கக் குறள் :

இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்


 
24)
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விளக்கக் குறள் :
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும்  காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து

25)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி

விளக்கக் குறள் :
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று

---(தொடரும்)-----

 

 

--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

துரை.ந.உ

unread,
Nov 25, 2009, 3:25:45 AM11/25/09
to palsuvai, maza...@googlegroups.com, இல்லம் (your HOME)

26)

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்
விளக்கக் குறள் :

அ)

பெரியோர் பெரும்செயல் செய்வார்; சிறியோர்

பெருமைச் செயல்செய்யா தோர்

ஆ)

அருஞ்செயல் செய்வோரே சான்றோர் ; சிறியோர்

எனப்படுவோர் ஒன்றும்செய் யார் 

 

 
27)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

 
விளக்கக் குறள் :

அ)

புலம்ஐந்தும் ஆள்பவனைத்  தேடிவந்து  சேரும்

உலகினை ஆளும்  பலம்

ஆ)

ஐம்புலன்  ஆட்க்கொள்ளும் ஆற்றல் உடையோரை

என்றும் போற்றும்  உலகு

 

 
28)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

 
விளக்கக் குறள் :

பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச்  சொல்உணர்த்  தும்

 

 
29)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

விளக்கக் குறள் :

அ)

நற்பண்புச் சான்றோர் பெருங்கோபம் கொண்டால்

சிறுகணம் கூடநிலைக் காது

ஆ)

நற்பன்புச் சான்றோரின் கோபம் எதிர்த்து

ஒருகணம் நிற்கஇய லாது

 

 
30)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

 
விளக்கக் குறள் :
அ)

அனைத்துயிர் அன்புகொண்(டு) அருள்புரிவார் அந்தணர்

என்ற அறஞ்செய் பவர்

ஆ)

அனைத்துயிர் அன்பால் அருளால் அறமாய்

அணைப்பார் அந்தணர்என் போர்

Reply all
Reply to author
Forward
0 new messages