கா...கா...கா...

0 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 19, 2009, 10:12:10 PM11/19/09
to pals...@googlegroups.com

கா...கா...கா...

 

கா...கா...கா... எனக் கரையுது காகம்

கலந் துண்ணலாம் வாரீர் என்றே

தன் கூட்டத்தினை அழைக்கின்றதோ

 

கீ...கீ...கீ... என்றே கத்தும் கிளி

மரத்தி லுண்டு பழங்களும் கொட்டைகளும்

வயலி லுண்டு முற்றிய கதிர்கள்

உண்டு களித்திடலாம் வாரீர் என்கிறதோ

 

கூ...கூ...கூ... என்றே கூவிடும் அக்கூ

ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற தன்

அக்காவை நினைத்து அழுகின்றதோ

 

கேச்...கேச்...கேச்... என்றே கூவிடும் சிறார்

உயரச் சென்ற கிரிக்கெட் பந்தை

விடாது பிடி என்றே ஊக்குவிக் கின்றார்களோ

 

கை...கை...கை... என்றே கதறிடும் குழந்தை

கதவிடுக்கில் மாட்டிய கை

வலி தாங்காதே கத்திடுதோ

 

கோ...கொக்கரக் கோ... கோ...கொக்கரக் கோ...

என்றே கூவிடும் சேவல்

விடியல் தன்னை அறிவிக் கின்றதோ

 

கௌ...கௌ...கௌ... என்றே கத்தும் சிறுமி

அன்றைய ஆங்கிலப் பரீட்சைக்கே

தயார் செய் கின்றாளோ தன்னையே

 

ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிக் குரலும்

தனி மொழியும் கொடுத்திட்டாய்

இறைவா என்னே உன் கருணை

 

 

 

 

20-11-09                         நடராஜன் கல்பட்டு

 

 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 19, 2009, 10:26:21 PM11/19/09
to maza...@googlegroups.com, pals...@googlegroups.com, Thamizhthendral
Kaa...Kaa...Kaa....pdf

jayashree shankar

unread,
Nov 20, 2009, 12:47:52 AM11/20/09
to pals...@googlegroups.com
கா...கா...கா..,என்று காக்கா  பிடிக்கலை......
ஆஹாஹா.....என்று பாராட்டுகின்றேன்......
இறை அவனையும்........ஒலி கேட்டு கவி தந்த
உங்களையும்....
ஒவ்வொரு ஒலியும்...ஒவ்வொரு விதமாய் செவியில் விழ செய்தீர்கள்......
வாவ்....வாவ்....வாவ்.....என்று பாராட்டலாம்..
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.




2009/11/20 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

 

--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to pals...@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en
 
Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.

Venkatram Shrinivas

unread,
Nov 20, 2009, 1:38:49 AM11/20/09
to pals...@googlegroups.com

படைப்பு மிக அருமை! pdfஃபிற்கு பதில் powerpointடில் இன்னமும் அழகாக இருக்கும் என  எனது தாழ்மையான கருத்து. ககர வரிசையின் சிறப்பைக் கனியைப் போலினிக்கவைத்தளித்த  கல்பட்டாரவர்களே தங்களது இயல்பான அடக்கத்துடன், அவ்வரிசையே ல்பட்டில் தான் துடங்குகிறது எனச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்
நான் கூறுகிறேன் கேளுங்கள் PLEASE, AGAIN PLEASE FORGIVE ME FOR ALL MY ECCENTRICITIES


2009/11/20 jayashree shankar <jayas...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)
Kalpattu.mp3

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 20, 2009, 2:19:50 AM11/20/09
to pals...@googlegroups.com
இந்த ஜடத்திற்கு ப்ள்க் பாயின்ட் தெரியும்.  பவர் பாயின்டெல்லாம் தெரியாதே.  என்ன செய்ய?
 
நடராஜன் கல்பட்டு

2009/11/20 Venkatram Shrinivas <see...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 23, 2009, 6:23:02 AM11/23/09
to pals...@googlegroups.com
அழகாய்த் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கீங்க. குழந்தைகளுக்கும், புதிதாய்த் தமிழ் கற்பவர்களுக்கும் பயன்படும்.

2009/11/20 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

கா...கா...கா...

 

--

Tthamizth Tthenee

unread,
Nov 23, 2009, 9:59:55 PM11/23/09
to pals...@googlegroups.com
இந்த ஜடத்திற்கு ப்ள்க் பாயின்ட் தெரியும்.  பவர் பாயின்டெல்லாம் தெரியாதே.  என்ன செய்ய?
 
 
ப்ளக் பாயிண்டில்  பவர் இருக்கும்
 
ஷாக் அடிக்கும்
 
ஆனால் ஜடமமக இருந்தால்  ஷாக் அடிக்காது
 
அதனனல் நீங்கள் தாராளமாக  பவர் பாயின்ட்  உபயோகிக்கலாம்
 
இருக்கவே இருக்கிறார்  ஆபத் பாந்தவன்  ஏ கே ஆர்
 
அவரிடம் சொல்லுங்கள்
 
எப்படி பவர் பாயின் ட்   ஷாக்  அடிக்காமல் உபயோகிப்பதென்று  ஒரு பாடமே  நடத்திவிடுவார்
 
நீங்களா  ஜடம்
 
பல ஜடங்களை     இயறகையய அனுபவிக்க  கற்றுத்தரும்  நீங்கள் ஜடமல்ல
 
மழலைகளின் திடம்
 
நிறை குடம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


23-11-09 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

vishalam raman

unread,
Nov 24, 2009, 4:52:47 AM11/24/09
to pals...@googlegroups.com
வாவ் ,,, சுப்பர் தான்
Reply all
Reply to author
Forward
0 new messages