எல்லாம் நிறைந்த மைசூர்

0 views
Skip to first unread message

vishalam raman

unread,
Nov 25, 2009, 5:44:54 AM11/25/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai, tamilamutham, piravakam
நம் நாட்டில் ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு விஷயத்தில் முக்கிய்த்தவம்
பெற்கிறது சில கோயில்களால் சில சுரங்கங்களால்
சில நீர்வளம் நிலவளங்களால் சில சரித்திர சம்பவங்களால் ,,,,,,
இவை எல்லாம் ஒரே இடத்தில் காண நாம் மைசூருக்கு போக வேண்டும் ,அந்த
இடத்தில் அன்னைக்காவேரி பெருக்கெடுத்து ஓடி நீர்வளம் அதனால் நில வளம்
எற்பட்டு பசுமையாக இருக்கிறது பல அணைக்கட்டுகள் இருக்கின்றன
பத்ராவதியில் பெரிய தொழிற்சாலையும் உள்ளது அங்கு இரும்பு
எடுக்கப்படுகிறது பின் வருகிறது பெண்கள் விழும் வலை ,,அதுதான் தங்கம்
,கோலாரில்
தங்கம் கிடைக்கிறது

கோயில் என்று எடுத்துக்கொண்டால் மிகப்பழமைப்பெற்ற
ஹொய்ய்சாலக்கோயில்கள் அங்கு இருக்கும் சிற்பங்களைப்பார்த்து
வியக்காமல் இருக்கம் முடியாது ,பின் சுற்றிலும் இயற்கைச்சூழ்ந்த
மனரஞ்சிகமான இடம் மலைகள் அதைஓட்டிக்காடுகள் ,,,,,
சரித்தரம் ஹிந்து மன்னர்கள் அவர்களுடன் மோதிய ஹைதர் அலி, திப்புசுல்தான்
என்று பின்னப்பட்டிருக்கிறது
ஸ்ரீரங்கம் போலவே இங்கும் காவேரி இங்கு இருக்கும்
ஸ்ரீரங்கப்பட்டினத்தைச்சுற்றி ஓடுகிறது ஆகையால் ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு
தீவு போல் அமைந்துள்ளது இங்கு ஆண்டு வந்த மன்னன் பெயர் திருமலய்யா இவரே
பள்ளிக்கொண்ட
பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டினார் ஸ்ரீரங்கப்பெருமாள் போலவே
அது இருக்க இதைச்ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற பெயருடன் அழைத்தார்கள்,
இந்த ஊரைச்சுற்றி காவேரி ஓடியது மன்னர்கள் பாதுக்காப்புக்கு
மிகவும் ஏற்றதாக இருந்தது ஆகையால் கோட்டைகளும் அமைத்துக்கொண்டார்கள் .
சரித்திர நிகழ்வில் மிக முக்கியமானது ஹைதர் அலி
படையெடுப்பு ,அவர் இந்தக்கோட்டையைக்கைப்பற்றி தனதாக ஆக்கிக்கொண்டு மைசூரை
ஆள ஆரம்பித்தார் அவ்ன் பின் வந்த அவனது மகன் திப்புசுல்தான் இந்த இடத்தை
மேலும் பலப்படுத்தினார்

திப்புசுல்தான் சரித்திரமே டிவியில் ஹிந்தியில் சீரியலாக வந்தது அவரது
தகப்பனார் ஹைதர் அலி படிக்காத மேதை எனலாம் ஆனால் ராஜ்ஜியம் ஆள்வதிலும்
சண்டையிலும் மிகத்திற்மை வகித்தவர் என அவர் சரித்திரம் கூறுகிறது அவர்
மைசூர் வந்தப்பின் அவருக்கு
கன்னடமும் பேச வந்தது அவருக்கு தெரிந்த மொழிகள்
ஹிந்துஸ்தானி உருது கலந்தது மராட்டி கன்னடம் தெலுங்கு தமிழ் ஆனால்
எழுதத்தெரியாது என்று சொல்கிறார்கள் ,அவர் ராஜ்ஜியத்தில் எல்லா
மதங்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டிருந்தது
கோயில்களுக்கும் மடங்களுக்கும் நல்ல மரியாதைச்செலுத்தி அதற்குத் தான்
தர்மங்களும் செய்திருக்கிறார் . அவர் தன் சுய முயறசியால தென்
இந்தியாவில் பல தன்னகத்தே கொண்டு ஆட்சி புரிந்து வந்தது மிகவும்
பாராட்டற்குரியது ஏனென்றால் கையெழுத்துக்கூட போடத்தெரியாத அவர் தன்
கூர்மையான அறிவினால் சிந்திக்கும் சக்தியினாலும் ஒரு பெரிய
சம்ராஜியத்திற்கே மன்னர் ஆனார்
தான் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தினால் மகன் திப்புவை பலமொழிகளிலும் பல
கலைகளிலும் தேர்ச்சி ஆக்கினார் பண்டிதர்கள் கவிஞர்கள் ப்லருடன்
சந்திப்பு ஏற்படுத்தி கல்வியின் அஸ்திவாரத்தை நன்கு பதித்தார்

வளரும்

jayashree shankar

unread,
Nov 25, 2009, 8:53:01 AM11/25/09
to pals...@googlegroups.com
ஒரு முறை சென்று வர வேண்டும்......
மிக்க நன்றி.....உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் உபயோகமானதாக உள்ளது.
ஒவ்வொன்றும் எதிர் பாராத, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
மிக்க நன்றி அம்மா.
பணிவோடு,
ஜெயஸ்ரீ ஷங்கர்.

2009/11/25 vishalam raman <rvis...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to pals...@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en

Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.

vishalam raman

unread,
Nov 25, 2009, 11:38:00 AM11/25/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai, tamilamutham, piravakam
திப்புசுல்தான் ஆண்ட வருடங்கள் சுமார் 18 இருக்கலாம் அவர் ஆண்டபோது
பலதரப்பட்ட போர்கள் .ஓய்ச்சல் இல்லாமல் போரில் பங்குப்பெற்றும் தன்
ராஜ்ஜியத்தில் எல்லோரும் கல்வி கற்று
மேதைகளாக் இருக்க வேண்டும் என்ற கொள்கையில் கல்விக்கு
முக்கியத்துவம் கொடுத்து புத்தகாலயங்கள் திறந்து அதில் பல அருமையானப்
புத்தகங்களை வரவழைத்து அடுக்கினார் கன்னடத்தில் மட்டும் இல்லாமல்
பர்சியன் அரபி டர்க்கி ஹிந்தி
என்று பல மொழிகளில் புத்தகங்களை வரவ்ழைத்து அதைப்போதிக்க அறிஞர்களையும்
அமர்த்தினார் அத்துடன் தானும்
பல நூல்கள் எழுதியிருந்தாராம்

திப்பு சுல்தானிடம் ஒரு ஆச்சரியமான புலிப்பொம்மை இருந்தது
இந்தக்காலத்தில் இதுபோல் விக்ஞான நுடபம் கொண்டு பல பொம்மைகள் வடிப்பது
எளிது ஆனால் திப்புசுல்தான் காலத்தில்
இதுபோல் நுடபமான பொம்மை செய்ய வேண்டுமென்றால் எத்தனை அறிவு இருந்திருக்க
வேண்டும் ? அபடி என்ன புலிப்பொம்மையில் விசேஷம் ,?
புலிப்பொம்மையின் ஒரு பக்கம் ஒரு விசை .அந்த விசையைத்
திருப்பினால் அது உறுமியபடியே அவன் முன் அமைந்திருக்கும்
சிப்பாய் பொம்மையின் முன் சீறி திருமபத்திரும்பத் தாக்கும்
ஆங்கிலேயர்கள் திப்புவின் ஆட்சியைக்கவிழ்த்த போது இந்தப்புலியைப்
பார்த்து வியந்து அதை இங்கலாந்திற்கு எடுத்துச்சென்று விட்டனர் ,இப்போது
அது ஒரு பொருட்காட்சியில்
இருப்பதாக சொன்னார்கள் .

ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வந்து விலை மதிக்கமுடியாத
நகைகளையும் திரவியங்களையும் கொள்ளை அடித்துச்சென்றனர் இந்தக்கால மதிப்பு
பலகோடிகள் இருக்கும்
திப்புசுல்தான் தன் தோளின் பட்டையில் ஒரு வைரகற்களால் ஆன நகை
அணிந்திருப்பது வழக்கம் அது ஒரு சிப்பாய்க்குக் கிடைக்க அவனும் அதை
விற்று கொள்ளைப்பணம் பெற்றானாம் திப்புவின்
சிம்மாசனத்தில் பொறித்திருந்த பறவை யையும் {தங்கத்தில் }
பெயர்த்து இங்கலாந்து அரண்மணைக்கு அனுப்பிவிட்டனர் எல்லாவற்ருக்கும்
மேலாக திப்புசுல்தான் தன் உயிருக்கும் மேலாக நேசித்த புத்தாலயத்திற்கு
நெருப்பு வைத்துவிட்டனராம் அதில் சில
எரியாமல் கிடந்தன , பல் வருடங்களுக்குப்பின் அவைகளை கவர்னர்
இங்குக்கொடுத்தாராம் முக்கிய சிலப்புத்தகங்களை தன் நாட்டிற்கு
எடுத்துச்சென்றுவிட்டார் திப்புசுல்தான் சரித்திரத்தை எடுத்த கான்
குடும்பத்தை பாராட்டாமல் இருக்க முடியாது டிவி சீரியலாக வந்தது


வளரும்

vishalam raman

unread,
Nov 26, 2009, 4:44:25 AM11/26/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai, tamilamutham, piravakam
ஸ்ரீரங்கப்பட்டினம் ,,,,,, காவேரி நதி மகிழ்ச்சியுடன் கலகலவென்று ஓடி
ஸ்ரீரங்கநாதர் கோபுரத்தைத் தரிசித்தபடியே வளைகிறாள் கோபுரத்தில் ஐந்து
கலசங்கள் பளபளவென்று மின்னுகிறது மின்னாமல் என்ன செய்யும் ! எல்லாம்
தங்கமாயிற்றே !அதுவும் சூரியன் காலையில் தன் கிரணங்களப்பரப்ப அப்போது
கோபுரத்தைத் தரிசிக்க வேண்டுமே ,,,,

முதலில் அது சிறிய கோவிலாகத்தான் இருந்தது ஆனால் பின்னால் பல மன்னர்கள் அதை மேலும்
விரிவாக்கினார்கள் கோயிலின் தேரும் அழகாக வைக்கப்பட்டிருக்கிறது அதன்
சிறப வேலைப்பாடுகள்
மிகவும் அருமை கோயிலில் பள்ளிக்கொண்ட ரங்கநாதரைப் பார்த்தால்
ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல்
உணர்வு ஏற்படுகிறது
கோயிலின் எதிரேயே மைசூர் மன்னர்கள் தங்கள் அரண்மணையைக்க்ட்டி தினமும்
கோயிலின் தரிசனத்தைக்கண்டு மகிழ்ந்தார்கள் பின்னால் அந்த அரண்மணை
இடிக்கப்பட்டு இன்று அங்கு ஒரு பெரிய
கட்டிடம் நிற்கிறது
திப்புசுல்தான் கட்டிய மசூதியின் இரண்டு ஸ்தூபங்கள் இன்றும் நிற்கின்றன
இதை ஜாமா மஸ்ஜித் என்கின்றனர் இதைப்பார்க்க பல டூரிஸ்ட் வருகின்றனர்
மன்னனின் கோட்டையில் பல வளைவுகள் உள்ளன உள்ளே போக முடியாதபடி
அமைந்திருக்கின்றன விரோதிகளிடமிருந்துக் காப்பாற்றிக்கொள்ளவே இந்த
மாதிரி நுணுக்கத்துடன் பல வளைவுகளாலான வாயிலகள் உள்ளன
ஒரு பெரிய பூந்தோட்டமும் மக்களைக்கவருகிறது
இதன் பெயர் "தாரியா தௌலத் பாக்" பூந்தோட்டங்களாலும் பூக்கள்
பூத்துக்குலுங்கும் மரங்களாலும் அந்தப்பூங்கா நிரம்பி வழிவதால் கண்ணிற்கு
மிகக்குளிர்ச்சியாய் இருக்கிறது திப்பு சுல்தான் கோடைக்காலத்தில் இதன்
ந்டுவில் இருக்கும்
பங்களாவில் இளைப்பாறுவாராம்
மாளிகையின் வெளிப்புறச்சுவரில் மிக அழகான சித்திரம் வரையப்பட்டிருகிறது
திப்புசுல்தான் கர்னல் போயின் தலைமையில் வந்த ஆங்கிலப்படையை விரட்டி
ஓட்டும் காட்சி தான் அது
கொஞ்சம் தூரம் நகர ஒரு வெள்ளை விமானம் நிற்கிறது
அங்குதான் தன் அருமை தந்தை ஹைதர் அலியின்
உடலை திப்புசுல்தான் அடக்கம் செய்தார் இந்தச்சமாதியைச் சுற்றிலும்
தோட்டம் ,,,,,இதை லால்பாக் என்கின்றனர்
இதன் அருகிலும் இன்னொரு கட்டிடம் ஒரு பெரிய சதுர மேடையின் மேல்
கட்டப்பட்டிருக்கிறது அதன் கதவுகளில் தந்த்ததினால் பூவேலைகள்
செய்யப்பட்டு இருக்கின்றன .திப்பு சுல்தான் இறந்ததும் அவரையும்
ஹைதருடனேயே அடக்கம் செய்தனர் மக்கள் திப்புவுக்கு புலி மிகப்பிடித்த
புலித்தோலை வர்ண்ணத்தில் குழைத்து அழகான சித்திரம் செய்திருக்கின்றனர்
,மேற்கில் ப்லவிரர்களின் கல்லறைகள் வரிசையாக வைக்க்க்ப்பட்டிருக்ன்றன,

காவேரியின் சங்கமும் அங்குதான் ,,
இருப்ப்க்கமம் பிரிந்தக்காவேரி கொஞ்சதூரம் ஓடியப்பின்
திரும்பவும் கூடுகிறது
இன்னும் சற்று நடந்தால் ஒரு பெரிய கட்டிடம் தென்படுகிறது .அதில் ஸ்காட்
என்ற ஆங்கிலேய்ர் தன் குடும்பத்துடன் ஒரே நாளில் இறந்துப்போனார் அவரது
ஞாபகமாக அவரது கட்டிடத்தை இடுக்காமல் அப்படியே
வைத்திருக்கின்றனர்
கிருஷண்ரரஜ சாகர் பார்க்கவேண்டிய இடம்.அங்கு பல சினிமா படப்பிடிப்பு
நடக்கும் பழையகால படங்களின் காதல் சீன் இங்குதான் நடக்கும் அங்கு
மியூசிகல் பவுண்டன்
என்ற நடனமாடும் ஊற்று பார்க்க வருபவர்களை மிகவும் கவருகிறது .எல்லாம்
நிதானமாகப்பார்க்க இரண்டு நட்கள்
வேண்டும்
இங்கு கங்காதீஸ்வரரின் ஆலயமும் மிகப்பிரசித்தம்
திரு சச்சிதானந்த ஸ்வாமிகள் இங்குதான் ஆஸ்ரமம் அமைத்திருக்கிறார் அவர்து
இசையைப்பற்றிய புத்தகங்கள் வந்திருக்கின்றன உடலில் இருக்கும் நோயை சில
ராகங்களினின மூலம் இசைத்து சரிப்படுத்துறார் மைசூரின் தசராவிழாவைக்காண பல
வெளிநாட்டு மக்கள் கூடுவார்கள் பார்க்க கண்கொள்ளாக்
காட்சி தான், ,,,,,,ஒரு ,தடவையாவது மைசூருக்குப்
போய் வர ஆனந்தம் தான்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 26, 2009, 6:11:19 AM11/26/09
to pals...@googlegroups.com
காவேரி நதியின் நடுவில் உள்ள தீவு ரங்கனதிட்டு எனப்படும் தீவு.  இது ஒரு பறவைகள் சரணாலயம், தமிழ் நாட்டின் வேடந்தாங்கல் போல.  இங்கு நீரின் நடுவே துருத்திக் கொண்டிருக்கும் பாரைகளின் மீது முதலைகள் 
படுத்து உறங்குவதைக் காணலாம், இணைப்பில் உள்ளது போல. 
 
ஹடராஜன் கல்பட்டு

2009/11/26 vishalam raman <rvis...@gmail.com>
கர்னாடக மானிலம் மைசூரு அருகே ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலத்தில் காவிரி நதியில் கல்லின் மேல் வாயைப் பிளந்து கொண்டு தூங்கும் ஒரு ஆசிய முதலை.doc
Reply all
Reply to author
Forward
0 new messages