போலீஸில் குரங்கு கொடுத்த புகார்

0 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Nov 23, 2009, 7:53:39 PM11/23/09
to தமிழமுதம், minTamil, tamil2friends, palsuvai, முத்தமிழ், பண்புடன், vishalam's page

புவனேஸ்வர் : "என் கணவன், என் குழந்தையை கொல்ல முயற்சி செய்றான்; அதனிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்!' இப்படி ஒரு புகார், சிம்பன்சி குரங்கிடம் இருந்து போலீஸ் நிலையத்துக்கு வந்தால் எப்படியிருக்கும்? ஆம், ஒரிசா மாநில போலீஸ் நிலையம் ஒன்றில் இப்படி ஒரு புகார் வந்தது.



புரி மாவட்டத்தில் உள்ளது ஆஸ்ட்டாரங் நகர். இங்குள்ள மார்க்கெட்டில் சிம்பன்சி குரங்கு கூட்டம் இருந்தது. இதில், இரண்டு மாத குட்டி குரங்குடன் ஒரு ஜோடி இருந்தது. அந்த பகுதி மக்கள் இந்த மூன்று குரங்குகளையும் செல்லமாக வளர்த்து வந்தனர்.பெண் குரங்குக்கு ஜூகுமுரி, ஆண் குரங்குக்கு ராஜ், குட்டிக்கு குனா என்றும் பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர். மார்க்கெட் வியாபாரிகள், மக்கள் கொடுக்கும் உணவுகளை குரங்குகள் உண்டு வந்தன. ஏனோ குட்டி குரங்கு மீது பொறாமை கொண்ட ஆண் குரங்கு, பலமுறை அதை தாக்கி வந்தது. தாக்குதலை பெண் குரங்கு தடுக்க முயற்சித்தது.


இதை அறிந்த சந்தை மக்கள் சிலர், ஒரு புகார் எழுதி, அதில், பெண் குரங்கின் வாலின் ரேகையை பதிவு செய்தனர். உள்ளூர் போலீஸ் நிலையத்தில் இந்த புகார் மனுவை அளித்தனர். குரங்கையும் அவர்கள் அழைத்துச்சென்றனர். குரங்குகளை பார்த்த போலீசார் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டனர். இப்போது ஆண் குரங்கை பயமுறுத்தி, குழந்தை குரங்குக்கு பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது


http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14259

~காமேஷ்~

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 23, 2009, 8:19:43 PM11/23/09
to pals...@googlegroups.com
நீல் ஆம்ஸ்ட்ராங்  இங்க்தான் பிறந்தாராமே!!!
 
நடராஜன் கல்பட்டு

2009/11/24 காமேஷ் <kame...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to pals...@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en
 
Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.

Reply all
Reply to author
Forward
0 new messages