//மகிழ்சிங்கறது ஆளாலுக்கு
வேறுபடுது சிலருக்கு
அமெரிக்காவை புகழ்ரது
மகிழ்வானதுதான் அசுரன்
//
சரியா சொன்னீங்க தியாகு
*******
CAPital Z,
//சரி புரட்சி அமைப்பு ஒன்று
இல்லை என்று சொன்னால்
சரியாகுமா? புரட்சி
அமைப்பு
என்பது ஒரு சட்ட பூர்வமாக
உருவாவது இல்லை. //
அப்படி ஒரு மாயை எனக்கும்
இல்லை :-)..
//புரட்சி அமைப்பை வெளியில்
இருப்பவர்கள் உருவாக்க
இயலாது. அது உள்ளிருந்து
[இந்தியாவில்] தான் உருவாக
வேண்டும். //
மிகச் சரி....
//ஆகவே எந்த ஒரு
அரசியல் கட்சியாலும் இதை
செய்ய இயலாது. வாக்கு
கேட்டு தேர்தலில் நிற்கும்
கட்சி உதவி செய்யலாம்,
ஆனால் அது அந்த அரசியல்
நோக்கத்திற்காகவே
இருக்கும்.
ஆகவே, அரசியலில் இல்லாத
அமைப்பு தான் புரட்சியை
செய்து முடிக்கலாம். //
நீங்கள் தேர்தல்
அரசியலையும் புரட்சிகர
அரசியலையும்
குழப்புகிறீர்கள் என்று
அஞ்சுகிறேன். வோட்டுப்
பொறுக்கி கட்சிகளால்
மக்களுக்கு எந்த
காலத்திலும் விடிவு இல்லை
என்று சொல்லுமிடத்து
நீங்கள் சரியாகவே
உள்ளீர்கள். ஆனால் அரசியல்
என்பது தேர்தல்
சம்பந்தப்பட்டது என்ற
புரிதலில் நிற்க்கும் போது
தவறு செய்கிறீர்கள்.
அரசியல் என்பது அரசு
பற்றிய இயல்... அவ்வளவுதான்.
அரசு என்பது - ராணுவம்,
போலிசு, நீதிமன்றம்,
சிறைச்சாலை,
அதிகாரவர்க்கம் இணைந்த ஒரு
அமைப்பு. இது மனித
சமூகத்தின் புராதான வடிவ
அரசுக்கும் பொருந்தும்.
//கஷ்டம் வந்த பின் தானே ஐயா
புரட்சி செய்வார்கள்.
கஷ்டம் இல்லாத போது ஏன்
புரட்சி செய்ய வேண்டும்? //
கஸ்டம் ஒரு முக்கியமான
காரணி என்பதை நான்
மறுக்கவில்லை. அது மட்டுமே
ஒரு காரணியல்ல
என்பதைத்தான்
வலியுறூத்தினேன். அதைவிட
முக்கியமான காரணியாக ஒரு
புரட்சிகர அமைப்பே உள்ளது.
ஒரு புரட்சிகர அமைப்பு
இல்லையெனில் எந்த
காலத்திலும் புரட்சி
இல்லை. சில பல கலகங்களுடன
அமுங்கிப் போகும்.
இந்தியாவில்
கஸ்டத்திற்க்குப் பஞ்சம்
கிடையாது என்பதை, அதாவது
புரட்சிக்கான ஒரு காரணி
வலுவாக உள்ளதை இங்கு பதிவு
செய்து கொள்கிறேன்.
இன்னொரு காரணியான
புரட்சிகர அமைப்பு இல்லை
என்பதுதான் பிரச்சனை.
கஸ்டம் என்பதான் விளக்கம்
ஆளூக்காள்,
வர்க்கத்திற்க்கு
வர்க்கம் மாறுபடுகிறது.
ஒரு சின்ன உரிமை
பிரச்சனையே ஒரு தொழிலாளியை
போராடச் செய்ய போதுமானது
ஆனால் அதே ஒரு
தாழ்த்தப்பட்ட சாதியை
சேர்ந்த விவசாயியோ சாவே
வந்தால் கூட தன்னைத் தானே
குற்றம் சொல்லிக் கொண்டு
சும்மா இருப்பதுதான்
இந்திய மரபு. மேலும் கஸ்டம்
என்பதை மக்கள் முதல் முறை
குற்றம் சொல்வார்கள்
அடுத்தடுத்து பழகிப் போய்
அதை வெறும் கிசு கிசு,
காமெடி செய்யும் அளவில்
விமர்சிப்பார்கள். இதை
'இந்தியாவில் மட்டுமே
சாத்தியம்' என்ற பெயரில்
வரும் விளம்பரங்கள்,
புகைப்பட
காமேடிகளிலிருந்து
புரிந்து கொள்ளலாம்.
//புரட்சிக்கு முதலாவது
மக்கள் பலம். ///
முதலாவது என்ன.. முற்று
முதலாக இதுதான் ஒரே பலம்....
மக்கள்தான் எல்லாம் என்றூ
சொல்கிறார் மாவோ. அவர்
மேலும் சொல்கிறார்:
"நாம்தான் பல நேரங்களில்
சிறுபிள்ளைத்தனமாக
இருக்கிறோம்..." என்று.
//இருக்க முடியும்?
வேலையில்லாப் பட்டதாரிகள்!
//
இது முதல் தவறு. புரட்சி
செய்யக் கூடியவர்கள் -
உழவர்களும்,
தொழிலாளர்களூம்
நடுத்தர வர்க
அறிவுஜீவிகளின் சித்தாந்த
பலம் என்பது ஒரு புரட்சிகர
அமைப்பின் முக்கிய பலம்
என்பதும் மறுக்கவியலாத
உண்மை.
வேலை உத்திரவாதமில்ல,
உரிமைகள் மறூக்கப்பட்ட
தொழிலாளர்கள்,
எதிர்காலத்தில் இதே நிலையை
அடைய உள்ளா நிகழ்காலத்தில்
சில அடிப்படை உரிமைகளை
பறிகொடுத்த தகவல் தொழில்
நுட்ப தொழிலாளர்கள்,
தொழில் நசிவடைந்து
தொழிலாளாயாக தள்ளப்படும்
சிறூ முதலாளீகள்,
இவர்கள்தான் அமைப்பின்
சித்தாந்த வாய்ப்புள்ள்
பலம். ஏனைய
வர்க்கத்திலிருந்தும்
ஆட்கள் அரிதாக வருவார்கள்
//நல்ல கல்வி
கற்றவர்கள். நற்சிந்தனை
உதிக்கக்கூடியவர்கள். //
இதுவும் மிகச் சரி.
//பலர் இன்றும்
பொருளாதாரத்தில் மிகவும்
ஏழ்மை நிலையில் இருப்பது.
அன்றாட
அடிப்படைத் தேவைக்கே
யோசிக்க வேண்டி
இருக்கும்போது நாட்டைப்
பற்றி யோசிக்க
முடியுமா? ஆகவே புரட்சியை
நகரத்தில் உள்ளவர்கள் தான்
செய்ய வேண்டும். //
நகரத்தில் உள்ளவர்கள்.
அதாவது ஜன நாயகமான
சிந்தனைக்கு
அறீமுகமானவர்கள்.
சிந்திக்க, படிக்க, அறிவை
வளர்க்க வாய்ப்பு
பெற்றவர்கள்தான்
புரட்சிக்கான
தயாரிப்புகளை செய்ய
முடியும் என்பது சரிதான்.
ஆனால் புரட்சி என்பதை
பிரதானமாக விவசாயிகளும்,
அடுத்து தொழிலாளர்களுமே
செய்ய முடியும்.
//தீவிரவாதம் இன்னும்
நாட்டில் இருப்பதால்,
யாராவது புரட்சிகரமான
சிந்தனையோடு
வெளிக்கிட்டால், சந்தேகக்
கண் கொண்டு பார்க்கவேண்டிய
கட்டாயம் அரசுக்கு. //
புரட்சி செய்ய முற்படுபவனை
எந்த அரசும் பார்த்துக்
கொண்டு வரவேற்காது... அது
தீவிரவாத முத்திரை குத்தி
மக்களை பீதியூட்டி
அழிக்கவே முயற்சி
செய்யும். அதை மீறி
மக்களின் நம்பிக்கையை
பெறுவதும், அவர்களுடன்
ஐக்கியமாவதும், அரசின்
மக்கள் வீரோத தன்மையை
தொடர்ந்து
அம்பலப்படுத்துவதும்தான்
ஒரு புரட்சியை
காப்பாற்றும்.
//புரட்சி ஒரு இரவில்
வெடிப்பதில்லை.
சுதந்திரம் போல் சிறுகச்
சிறுக
கட்டியமைத்து கடைசியில்
பேரெழுச்சி பெறுவது.
இந்தியா முழுவதும் புரட்சி
வெடிக்கும் என்று
பார்த்துக்கொண்டிருக்க
இயலாது.
முன் சொன்ன காரணிகள்
இந்தியா முழுவதும் வராது.
ஏதாவது ஒரு மாநிலம்
தொடங்கினால்
மற்றவை இதைப் பார்த்து
தொடங்கும். //
இந்தியா போன்ற
நாடுகளில்(முன்னாள் காலனி,
இன்னாள் அரைக்காலனி-அரை
நிலபிரபுத்துவம்) ஒரே
நேரத்தில் புரட்சி எனும்
ரஸ்ய பாணி புரட்சி
சாத்தியமில்லை என்பதை
சரியாகவே
சொல்லியிள்ளீர்கள்.
இதைத்தான் மாவோவும்
கணீத்து - அரசு பலவீனமாக
இருக்கும்
கிராமப்புறங்களை மையமாக
வைத்து சிறிது சிறிதாக
இடங்களைக் கைப்பற்றி
மக்களாட்சியை நிறுவி
நகரங்களை பிறகு
கைப்பற்றுவது எனும் நீண்ட
கால மக்கள் யுத்தப் பாதையை
சொன்னார். இது தனது
சாராம்சத்தில் ஒரு
முதலாளித்துவ புரட்சியே.
அதாவது இந்திய முதலாளிகள்
செய்ய வேண்டிய புரட்சியை
இந்திய உழவர், பாட்டாளி
வர்க்கம் செய்வது.
இதைத்தான் புதிய ஜனநாயக
புரட்சி என்கிறார் மாவோ.
***********
பெரிய பதிலாக இருந்தாலும்
தங்களுக்கு தெரிந்த அளவில்
நேர்மையாகவே விசயங்களை
விமர்சனம்
செய்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
*******************
//ஆனால்...இந்தியாவில் நல்ல
அரசியல் இருக்கின்றது
சிறந்த அரசியல் வாதிகள்
இல்லை
நாட்டு நலனின் அக்கறை
உள்ளவர்களுக்கு பதவி இல்லை
பதவியில் இருப்பவர்களோ
தங்கள்
நலனைத்தவிர வேறு எதையும்
சிந்திப்பவர்களாகத்
தெரியவில்லை!!.....
நாட்டில் ஒரு புரட்சி
எப்படித் தொடங்கும்?!
மறுமலர்ச்சி எப்போது
கிடைக்கும்?
பணத்திற்கு விலைப்போகாத
பதவிக்குத் தலைகுனியாத ஒரு
தன்மான உணர்வு கொண்ட ஒரு
மனிதன் முதலில் உருவாக
வேண்டும். அதன் பின் தான்
மற்றையதெல்லாமே...
//
விஜி,
இந்தியாவின் அரசு அதன்
வர்க்கத்தனமையிலேயே
பெரும்பாலான மக்களுக்கான
அரசு அல்ல. அது மேலதிகமாக
நீங்கள் சொல்லியுள்ள
அரசியலவாதிகலை மட்டுமெ
தனது அரன்மனைக்குள்
அனுப்பும் செய்ல்முறை
கொண்ட அரசு. அதனால் வெளியே
நல்ல அரசியல்வாதிகளை
உருவாக்கி இந்த அரசை
திருத்தி விடலாம் என்பது
மாயை.
புரட்சி பற்றி தங்களது
கேள்விகளுக்க் CAPital Z -க்கு
சொன்ன பதில்களில் விடை
உள்ளது என்று
நினைக்கிறேன். வேறு
ஏதேனும் விமர்சன்ம்
கேள்விகள் இருந்தால்
முன்வைக்கவும்.
நட்புடன்,
அசுரன்