> தியாகு,
> அப்படி யாரும் வாதட மாதிரி
> தெரியல....
> சமீபகாலத்தில் பொதுத் துறை
> தனியார் மயமாக்கம் பல
> கெட்ட விளைவுகளை
> உள்ளடக்கியதை பலர்
> பார்த்திருக்குறனால சில
> அரைகுறைகள் மட்டுமே
> புதிதாக விசயங்கள
> பாத்துட்டு தனியார் மயம்
> சரின்னு வெள்ளேந்தியா
> பேசிக்கிட்டிருக்காங்க.
> இன்னும் சொன்னா நம்ம
> பொதுத் துறை நிறுவனங்களின்
> அசுர வளர்ச்சி, இன்றைய
> உலகமயச் சூழலிலும்
> ஏகாதிபத்திய
> நிறுவனங்களுக்கு போட்டி
> கொடுக்கும் பலம், இவை
> அத்தனையும் போதிய அளவு
> மக்களுக்கு சேவை செய்த
> பிற்ப்பாடு....
> ஆனால் தனியார்
> நிறுவனங்களால் இவற்றை
> கற்பனை செய்து கூட பார்க்க
> முடியாது.
> தனியார் மயத்தின் இழி
> நிலையை பார்க்க வேண்டுமா?...
> கேத்ரீனா புயல் அடித்த
> பொழுது பக்கத்து டெக்ஸாஸ்
> கவர்னர் உதவி செய்ய
> வழியின்றி கைவிரித்தா,
> காரணம் அங்கு எல்லாம்
> தனியார் மயம் துட்டுக்
> கொடுத்து வாங்கும்
> நிலைமையில் அரசு இல்லை.
> மக்களுக்கு ஆத்திர
> அவசரத்துக்கு உதவ
> வக்கில்லன்னா அப்புறம்
> என்ன மயித்துக்கு வரி
> வசுல், ராணுவம், போலிசு
> மட்டை பூட்ஸ் எல்லாம்..
> *********
> மத்தபடி தொழில் நுட்பங்கற
> ஈத்தரத்தன்மான வாதமொன்னு
> வைப்பாங்க....
> உண்மை என்னென்னா... இந்தியா
> போன்ற நாடுகளில் தேசிய
> முதலாளிகள் சுதந்திரமாக
> செயல் பட அனுமதிச்சா
> அங்கங்க அவனவன் தன்கிட்ட
> இருக்கீற முதலீட்ட
> வைச்சிகிட்டு புதுசு
> புதுசா கண்டுபிடிச்சு
> தொழில் நுட்ப புரட்சி
> அத்துக்கிட்டு ஓடும்... அத
> தடுத்து, சந்தையை MNC
> கைப்பற்றுவதற்க்கு மாமா
> வேலை பாக்குது அரசு....
> உண்மையில் இது தனியார்
> மயம் இல்லை... உலகமயம்... இது
> உள்ளூர் முதலாளிக்கு ஆப்பு
> வைக்கிறனாலதான்
> வியாபாரிகள் சங்கத் தலைவர்
> வெள்ளையன், ம.க.இ.க. ங்கற
> நக்சல்பாரி அமைப்போடு
> சேர்ந்து போராடுறாரு,
> இந்திய சில்லறை
> உற்பத்தியாளர்கள்,
> கம்யுனிஸ்டுகள்தான்
> உண்மையான தேசப்பற்று
> உள்ளவங்கன்னு அறிக்கை
> விடுறாங்க, TVS, TATA போன்ற தரகு
> முதலாளிகள், MNCக்களிடம்
> காண்டிராக்ட் எடுத்துள்ள
> திருப்பூர், ஓசூர்
> முதலாளிகள் தான் தயாரிக்கற
> பொருளுக்கு தானே விலை
> வைக்க முடியாமே வெறுமனே
> ஸ்டிக்கர் ஒட்டிட்டி அவன்
> விக்கிறத பாத்து
> வயிறெரிஞ்சு கிடக்குறாங்க.
> இத உடச்சி, ஏகாதிபத்தியத்த,
> நிலபிரபுத்துவத்த இந்தியா
> விட்டு விரட்டிட்டு, சிறு
> அளவிலான தனியார்
> முதலீடுகளை காட்டாற்று
> வெள்ளம் போல திறந்து
> விடுவது, பெரு முதலீடுகளை
> அரசும், உள்ளூர்
> முதலாளிகளும் சேர்ந்து
> செய்வது அப்படிங்கற ஒரு
> நல்ல முதலாளித்துவ
> வளர்ச்சிக்கு வித்திடுவது
> கம்யுனிஸ்டுகள் செய்யும்
> புதிய ஜன நாயக
> புரட்சியில்தான்
> சாத்தியம்.
> அதனால இன்னைய உள் நாட்டு
> முதலாளிகளும்(அதாவது நாளைய
> தொழிலாளீகளூம்)
> கம்யுனிஸ்டுகளோட இணைஞ்சு
> போராட வேண்டிய
> நிர்பந்தத்துக்கு
> தள்ளப்பட்டிருக்காங்க.
> மத்த எல்லாமே,(தனியார்மயம்
> என்ற பெயரில் செய்யப்படும்
> போர்ஜரியும் சேர்த்து)
> ஏகாதிபத்திய சேவைதான்.
> Please read this:
> http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html
> அசுரன்.