முதல் குத்து:
அபத்தம் என்பதற்கு இணையான தமிழ் சொல்லை தேடினேன். கிடைக்கவில்லை. அதனால்
அபத்தம் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றை சொன்னால் நம் மக்கள் புரிந்து
கொள்வீர்கள். ஆம் மக்களே, அபத்தம் என்பதற்கு பொருத்தமான கட்டுரை அசுரன் தேடி
இட்ட இந்த கட்டுரைதான்.
அன்று நான் வாயை மூடிகொண்டு சும்மா இருந்தேனானால் அபத்தத்துக்கு எல்லாம்
மறுமொழி சொல்லிகொண்டிருக்க தேவை எற்பட்டிருக்காது. என்ன செய்வது, திறந்து
விட்டேன். சொல்லிதான் ஆக வேண்டும்.
முதலில் கட்டுரை ஆசிரியர் நம் நாடு விடுதலை பெற வில்லை என்கிறார். சிரிக்க
கூடாது! நாம் பெற்றது விடுதலை அல்ல. நுகம் மாற்றிக்கொண்டுள்ளோம் என்கிறார்.
விடுதலை என்பதற்கு விளக்கம் அளிக்க அவர்கள் தனி அகராதியை அச்சிட்டு
கொண்டுள்ளார்கள். அதுவும் அவர்கள் மட்டும் அறிந்த (சீன ருசிய?) மொழியில்.
..........ம்.
நமக்கு தெரிந்த விடுதலை என் ஊரின், மாநிலத்தின், நாட்டின் ஆட்சி பொறுப்பில்,
பொதுவுடைமை தோழர்கள் உட்பட, யார் இருக்க வேண்டும், நான் எங்கு சென்று
குடியிருக்க வேண்டும், நான் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும்,
நான் சேர்த்த காசை எப்படி செலவிட வேண்டும், நான் யாருடன் இன்றைய பொழுதை கழிக்க
வேண்டும், நான் எந்த மதத்தை தழுவ வேண்டும், எந்த சாமியை கும்பிட வேண்டும்.
எனக்கு தோன்றிய கருத்தை அச்சமின்றி சொல்ல வேண்டும் என பலவாக, நாம் பெற்ற
உரிமைகளே. அவை இன்று இந்தியாவில் இல்லையா? அவர்களுக்கே வெளிச்சம்.
(அதனால் சிவா, கலாமை இழிவு செய்தாலும் அந்த உரிமையை நாம் மறுக்க கூடாது.
பண்பாடு அவர்களுக்கு வரட்டும் என்று மட்டும் நம்புவோம்)
ஆனால் அசுரர்கள் சொல்லும் சுதந்திரமோ, நம்மை ருசியாவையும் சீனாவையும்
வழிநடத்தும் நாடுகளாகவும், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ற்றோ, குரோசாவோ போன்றவர்களை
கண்கண்ட தெய்வமாகவும் ஏற்று, ஒரு சிறிய கொள்ளையர் கூட்டம் ஆயுதம் ஏந்தி
பெரும்பாண்மை மக்களை அடிமை படுததி சவுக்கடி கொண்டு ஆளும்் ஒரு ஆட்சி முறையை.
அது நடைமுறை சாத்தியம் அற்றது என்று உலகம் நிறுவியும் அதிலேயே
தொங்கிகொண்ண்டிருக்கும் திறம் வியக்காமல் இருக்க முடியாது.
இந்த ஆட்சிமுறை செல்லுபடியாது என்று உலகத்துக்கு சொல்லி அதை தவிடு படி ஆக்கிய
காரணத்தால் அமெரிக்காவை எதிர்ப்பது இவர்களது தாரக மந்திரம். ருசியாவை பார்
என்றார்கள். ஆஃஆ என எழுந்த யுக புரட்சி மண்னை கவ்வியதை கண்டோம். நாம்
அமெரிக்காவை பார் என்கிறோம். அது விழுமா என்று நப்பாசை கொண்டுள்ளார்கள்.
ஒரு காலத்தில் தமிழன் சேரன், சோழன், பாண்டியன் என்று பிரிந்து கிடந்தான்
பின்னர் தமிழகம் ஆனோம். அதை எந்த பாண்டியனோ, சோழனோ எதிர்க்க வில்லை. அசோகர்
போன்ற பேரரசர்களுக்குகூட தமிழகம் அடிபணியாமல் இருந்தது. ஆனால் இன்று இந்திய
கூட்டாட்சியில் உள்ளோம். அதை நாம் ஏற்றுகொண்டோம். இன்று சார்க், என்ற பன்னாட்டு
கூட்டணிக்கு அடிகோலிகொண்டு உள்ளோம். நாளை உலக நாடுகள் என்ற கூட்டணி வந்தாலும்
அதில் இணையலாம். இவை எல்லாம் மனித நாகரத்தின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியை
ஏற்றுகொள்ளாமல் நாம் மேலை நாடுகளுக்கு அடி பணிகிறோம் என்பதெல்லாம் பூச்சாண்டி.
பகத் சிக், சின்ன மலை எல்லாம் போராடி பெற்ற சுதந்திரம் இன்னமும் எம்
கையில்தான் உள்ள்து,. அதை உங்கள் புலம்பலுக்கு கரைந்து, அச்சுறுத்தலுக்கு
அஞ்சி உங்கள் கையில் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.
விடுதலை பெற்றபின் ஐம்பது ஆண்டுகளாக் சிவப்பு திசையில் சென்று இந்தியாவை ஆட்சி
செய்தவர்களால இரண்டு தலைமுறை வீணாகி விட்டது. படித்த மாணவர்கள் வெளி
நாடுகளுக்கு சென்று வேலை தேடும் நிலைமையை அவர்கள்தான் உண்டாக்கினார்கள். கடந்த
பத்து ஆண்டுகளாக மன்மோகன், சிதம்பரம் போன்ற தொலை நோக்குகொண்ட தலைவர்களால்
விழித்து கொண்டு மேற்கு திசையில் செல்கிறோம். அதனால் இன்றைய கல்லூரி மாணவர்கள்
முன் எப்போது இல்லாத நல்ல நம்பிக்கையை எதிர்காலததின் மேல் கொண்டுள்ளார்கள்.
வெளி நாடுகளில் வாழ்வோரும் தாய்கம் திரும்புகிறார்கள். இவர்கள் எல்லோரும் நல்ல
வேலை பெற்று நல்ல ஊதியம் பெற்று அரசுக்கு நிறைய வரி செலுத்துகிறார்கள். அந்த
வரிபணத்தைகொண்டுதான் கலைஞர் அரசு உழவர்கடன், இரண்டு ஏக்கர் நிலம், அதையும்
பண்படுத்தி, என்ற பல சமூக திட்டங்களை நிறைவேற்றுகிறது.
பத்து ஆண்டுகளில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்துள்ளது இன்னும் நாற்பது ஆண்டுகளில்
என்ன நிகழும் என்பதற்கு இது முன்னோடி. அன்று உழவர்கள் உட்பட எல்லோரும் அடிப்படை
வசதிகள் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். உழவை அடிப்படையாக வாழ்க்கையை
கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து நிறுவன தொழில்களில் வாழ்வுரிமை அவர்கள் பெற
பண்ணையாருக்கு அடிமைத்தனம், சாதி வேற்றுமை, கந்துவட்டி, பெண்ணடிமை, வர தட்சனை
போன்ற சமூக சீர்கேடுகள் ஒழிந்து எல்லோரும் எல்லாமும் பெற்று இந்திய திருநாடு
செழிக்கும்்.
அன்று உங்கள் சிவப்பு சாயம் கரையும். (இப்போது அதுதான் நடக்கிறது) அதுகாறும்
உங்கள் புலம்பல் ஓயாது என்பது நாங்கள் அறிந்ததுதான்.
இன்னும் வளரும்...
On 9/8/06, அசுரன் <asura...@gmail.com> wrote:
சுதந்திரமும்
சூழ்ச்சியும்:
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)