CAPital,
சீனாவில் யார் புரட்சி
செய்தார்கள் என்று
நினைக்கிறேர்கள்?
ரஸ்யாவில் யார் புரட்சி
செய்தார்கள் என்று
நினைக்கிறேர்கள்?
பிரெஞ்சு பாட்டாளி வர்க்க
புரட்சியின் தோல்விக்கு
காரணமாக ஏங்கெல்ஸும்,
மார்க்ஸும் எதை
சொல்கிறார்கள் தெரியுமா?
விவசாயி தொழிலாளி இடையே
ஒரு நேச அணி இல்லையெனில்,
ஒற்றுமை இல்லையெனில் எந்த
காலத்திலும் புரட்சி
சாத்தியமில்லை.
அதுவும் இந்தியா போன்ற
முதலாளித்துவ வளர்ச்சி
பரவலாக்கப்படாத நாடுகளில்,
இன்னும் மறைமுகமான
காலனிகளாக இருக்கும் அடிமை
நாடுகளில், விவசாயிகள்
அருதிப் பெரும்பான்மையாக
இருக்கும் நாடுகளில் -
விவசாயிகளை நிராகரித்து
விட்டு ஒரு அடி கூட எடுத்து
வைக்க முடியாது.
புரட்சியில் விவசாயிகளின்
பங்கு என்பது ஆக
முக்கியமானது என்பதை
கம்யுனிஸ்டு கட்சி
அனுபவமும் காட்டுகிறது,
மார்க்ஸிய முன்னோர்களின்
கூற்றும்
எடுத்தியம்புகிறது.
இன்னும் சொன்னால்
விசயங்களை அவர்களுக்கு
புரியும் வகையில்
எளீமைப்படுத்தி எடுத்துச்
சென்றால் விவசாயிகளை விட
நம்பகமான, போர்குணமிக்க,
சந்தேகத்திற்க்குஇடமற்ற
ஒரு அணியை வேறு எந்த
வர்க்கத்திடமும் பார்க்க
முடியாது என்பது
கம்யுனிஸ்டு கட்சியின்
அனுபவம்
ஜன நாயக தன்மைபற்றிய
அறிமுகமின்மை, உலக விசயம்
பற்றிய அறிவில்லாமை,
நிலப்பிரபுத்துவ
உணர்வுகள், மூட
நம்பிக்கைகள் -
இவையெல்லாம் மைனஸ்
பாயிண்டுகள் என்பது
உண்மையே. இதை மீறி
நகரத்துக்கும்,
கிராமத்துக்கும்
அலைக்கழிக்கப்படும்
விவசாயினது வாழ் நிலை, அவனை
புரட்சியின் இயல்பான ஒரு
இயங்கு சக்தியாக
மாற்றுகிறது.
அசுரன்.