தினம் ஒரு பாடல்

72 views
Skip to first unread message

AKR

unread,
Nov 14, 2009, 1:42:45 PM11/14/09
to muthami...@googlegroups.com
"கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே" என்று பாபனாசம் சிவம் அவர்கள் பாடியுள்ளார். அத்தகைய நாட்டியக் கலை பாரம்பரியமான பல வடிவங்களில் நமது பாரத தேசத்தில் பண்டைக்காலம் தொட்டே சிறந்து விளங்கி வருகின்றது. இவற்றுள் பரதநாட்டியம் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்து இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயின்று வருகின்றனர். மோகினியாட்டம்,  கதகளி ஆகிய நடனங்கள் கேரள மாநிலத்தின் சிறப்பம்சங்களாக விளங்குபவை. ஒடிசி நடனம் ஒரிஸ்ஸா மாநிலத்தின் பாரம்பரியமான  கலையாகும். கதக் வட இந்தியாவில் தோன்றி வளர்ந்த நாட்டியக் கலை.
 
தமிழ்த் திரையுலகில் நாட்டியத்துக்காகப் புகழ் பெற்று விளங்கும் கலைஞர்களுள் நாட்டியப் பேரொளி பத்மினி, வைஜயந்திமாலா இருவரும் முறையே பரத நாட்டியம், கதக் ஆகிய நாட்டியங்களில் மேதைகளாக விளங்கினர். இவ்விருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு ஆடும் நடனம் அன்று முதல் இன்றுவரை தமிழ்த் திரைப்பட ரசிகர்களையும் நாட்டியம் பயிலும் பலரையும் வெகுவாகக் கவர்ந்து புகழ் பெற்றதாகும்.
 
 
 
படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சி. ராமச்சந்திரா
பாடியவர்: பி. லீலா, ஜிக்கி
ஆஅண்டு: 1958
 
ஏனோ இன்பமே புதுமையாய்க் காண்பதேன்
காதல் என்பது இது தானோ இது தானோ அறியேனே
 
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்
காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
 
(சபாஷ் சரியான போட்டி)
 
ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்
ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்
ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட
ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்
             
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?                       
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே
 
சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
 
ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
ஆணவத்தில் வந்தாயோடி?
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி
 
இன்னொருத்தி நிகராகுமோ? எனக்
கின்னொருத்தி நிகராகுமோ?
இடி இடித்தால் மழையாகுமோ? பேதைப்பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ?
மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
முன்னேவந்து நீ ஆடடி - இந்த
மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
முன்னேவந்து நீ ஆடடி
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 15, 2009, 3:27:50 PM11/15/09
to muthami...@googlegroups.com
விலங்குகளிலே தந்திரம் மிகுந்தது குள்ளநரி. குள்ளநரியால் எந்த ஒரு விலங்கையும் தனியே வேட்டையாட இயலாது. எனவே பல குள்ளநரிகள் ஒன்றுசேர்ந்தே வேட்டையாடும். அத்துடன் இக்குள்ளநரி வேட்டையாடத் தக்க இரை இருக்கும் இடத்திலிருந்து ஊளையிடும். அந்த ஊளைச் சத்தத்தைக் கேட்டுப் புலி, சிங்கம் முதலான விலங்குகள் இரை இருக்கும் இடமறிந்து வேட்டையாடி இரையைத் தின்ற பின் மீதமிருக்கும் மாமிசத்தைக் குள்ளநரி உண்ணும்.
 
குள்ளநரியை விடவும் தந்திரமானவன் மனிதன் என்பதும் பிரசித்தம். மனிதன் சுயநலம் மிக்கவன். தான் மட்டும் பிழைத்தால் போதும் எனும் குறுகிய மனோபாவத்துடன் பெரும்பாலான மனிதர்கள் செயல்படுவதாலேயே அவர்கள் தம்மையறியாமல் ஒருவருக்கொருவர் பெருந்தீங்கிழைத்து வீணே வருந்தி மடிகின்றனர்.
 
கவிஞர்கள் பலர் குள்ளநரியுடன் மனிதனை ஒப்பிட்டு மனிதனால் விளையும் சமூக சீர்கேடுகளைப் பல பாடல்களின் வாயிலாக விளக்கி எழுதியுள்ள போதிலும் மனிதன் திருந்துவதாகக் காணோம். இதோ ஒரு கவிஞர் ஒரு நரிக்குறத்தி பாடுவதாக எழுதிய பாட்டில் குள்ளநரியை விட மனிதன் எவ்வாறு அதிகத் தீமை புரியும் குணமுள்ளவன் என விளக்குகிறார். பாடல் ஓர் இரவு படத்துக்காக எழுதப்பட்டது. இப்படத்தின் கதை வசனகர்த்தா பேரறிஞர் அண்ணா ஆவார். இப்பாடலை இயற்றிய கவிஞர் யாரென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன்.
 
 
திரைப் படம்: ஓர் இரவு
இயற்றியவர்:
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி
 
ஓ சாமி
ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
ஐயா சாமி ஓ ஐயா சாமி
 
கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி
பல்லிளித்துக் காட்டி பட்டம் பதவி தேடி
கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்
 
ஐயா சாமி ஆவோஜி சாமி - ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
 
வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும்
பட்டினியைப் பாத்தும் புளி ஏப்பம் விடும்
 
ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
ஐயா சாமி ஒ ஐயா சாமி
 
காட்டிலுள்ள நரி ரொம்ப நல்லதுங்க - உங்க
நாட்டிலுள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க
குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
குள்ளநரிக் கொம்பைக் கோத்துப் போடு சாமி
புள்ளை குட்டி யார்க்கும் நல்ல புத்தி வரும்
 
ஐயா சாமி ஆவோஜி சாமி ஐயா
ராய்யா வாய்யா யூ கம்மையா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 16, 2009, 2:01:44 PM11/16/09
to muthami...@googlegroups.com
சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்வதால் வானமெங்கும் மேகமூட்டமாய் விளங்கினாலும் அவ்வப்போது வானில் சூழ்ந்த மேகங்கள் கலைகையில் நம் சிந்தை கவர்ந்த வெண்ணிலாவும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை. காதலர்கள் ஒருவரையொருவர் பிரிந்திருக்கும் காலத்தில் தங்கள் காதல் எண்ணங்களைத் தம் காதலர்க்குத் தெரிவிக்க வெண்ணிலவைத்  தூதுவிடுதல் மரபு. அந்த வெண்ணிலா உண்மையிலேயே தூதுச் செய்தியை உரியவரிடத்தில் சேர்க்குமோ இல்லையோ, அதன் தண்ணொளி பிரிவுத்துயரைச் ச்ற்றே தணிக்க வல்லதாகையால் அதனிடம் தன் உள்ளத்திலுள்ள காதல் நினைவுகளை மனம் விட்டுச் சொல்கையில் காதல் கொண்டோரின் ஏக்கம் சற்றே தணியும் எனக் கொள்ளலாம்.
 
இதோ நம் நாயகனின் மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணின் நினைவால் அவன் தவிக்கையில் தன் உள்ளத்தின் தவிப்பை வெண்ணிலாவிடம் முறையிடுகின்றான், தன் உள்ளத்தைத் திருடிய கள்ளியிடமிருந்து அதனை மீட்டுத் தருமாறு.
 
 
படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960
 
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
 
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?
 
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
 
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே
 
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
 
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
 
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 18, 2009, 12:28:09 PM11/18/09
to muthami...@googlegroups.com

"இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதாதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், 'நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் நம்மிடம் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையாய் இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது."

- மஹாகவி பாரதியார்

 
வெட்டுப்பட்ட புண்களிலும்
விம்மி நின்ற கட்டியிலும்
கட்டுப்பட்டு நின்றதொரு காலம் புத்தி
கெட்டபின்பு வந்ததடி ஞானம்
 
- கவிஞர் கண்ணதாசன்
 
 
 
திரைப்படம்: காட்டு ரோஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1963
 
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
 
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!
 
வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!
 
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
 
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
 
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!
 
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!
 
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 19, 2009, 2:48:48 PM11/19/09
to muthami...@googlegroups.com
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றி மூத்த குடி"
 
என்ற தமிழர்களின் தொன்மையைக் குறித்து எழுதப்பட்ட வரிகளின் பொருள் பற்றிய சர்ச்சைகள் நிறைய எழுந்துள்ளன. கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தமிழன் தோன்றினான் எனில் அவன் காற்றாக இருந்தானா? என ஒரு அன்பர் கேள்வி எழுப்புகிறார். மற்றொரு நண்பர் "கல்" என்பதைக் கல்வி எனவும் மண் எனபதற்கு பதில் "மன்" என மன்னரைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொண்டு, கல்வி பயிலும் வழக்கமும், மன்னராட்சியும் ஏற்படுவதற்கு முன்னதாகவே தோன்றிய குடி என்கிறார். வேறொரு அன்பர், கல் என்பதைக் கற்காலம் எனவும் மண் என்பதை, எனது உனது என மண்ணை மனிதன் சொந்தம் கொண்டாடி எல்லைகளைப் பிரித்த காலத்தையும் குறிப்பிடுகிறார்.
 
எவ்வாறாயினும் தமிழன் உலக மக்கள் அனைவரிலும் மிகவும் தொன்மையானவன் என்னும் கருத்துக்கு மாற்றுக் கருத்தை யாரும் வெளியிடவில்லை. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழனின் தொன்மைக்கும் மேன்மைக்கும் சான்றாக விளங்குகிறது.
 
தமிழர்கள் பண்டைக்காலம் தொட்டு இன்றளவும் ஒருவரோடொருவர் நட்புறவுடன் பழகுவதையே பெரிதும் விரும்பி, அதற்கேற்றவாறு தமது தேவைகளைத் தியாகம் செய்து வாழும் பண்பாளர்களாகவே உள்ளனர் என்பது கண்கூடு. தமிழ் நாட்டைப் பல கூறுகளாகப் பிரித்து மன்னர்கள் ஆண்ட பொழுதும், ஒருங்கிணைந்த தமிழ்நாட்டை இன்று அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியில் ஆளும் பொழுதும் தமிழ்நாடு பெரும்பாலும் அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வருகின்றது. அந்த அமைதி அவ்வப்பொழுது குலைந்து அல்லல்கள் ஏற்படுவதற்கு அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் பெரும்பலும் ஆட்சியாளர்களே காரணமாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்குத் தமது ஆட்சித் திறனே காரணம் என்று யாரேனும் அரசியல்வாதி கூறுவாரெனில் அவர் கூறுவது பொய் என்பது திண்ணம்.
 
தமிழனின் உன்னத குணத்தை விரிவாக எடுத்துரைக்கும் நாமக்கல் கவிஞரின் பாடலை ஏற்கெனவே பிறிதொரு பாடலுடன் பதிவு செய்துள்ளேன். அப்பாடலில் இருந்து திரைப்படத்தில் பாடலாக அமைக்கவென்று மிகவும் பொருத்தமாக இருக்கும் வரிகளைத் தேர்வு செய்து இன்னிசையுடன் தந்துள்ளனர்.
 
 
திரைப்படம்: மலைக்கள்ளன்
இயற்றியவர்: நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை (நாமக்கல் கவிஞர்)
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
 
தமிழன் என்றொரு இனம் உண்டு தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழதம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்
அன்பே அவனது வழியாகும்
 
கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்
 
தமிழன் என்றொரு இனம் உண்டு
 
மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்
மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேலெனப் பேசிடுவான் தருவது மேலெனப் பேசிடுவான்
 
தமிழன் என்றொரு இனம் உண்டு
 
ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் நிறை குறையாமல் பண்ணினவன்
 
தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு
குணம் உண்டு
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 20, 2009, 12:18:22 PM11/20/09
to muthami...@googlegroups.com
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டிங்கு
ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
 
எனும் ஔவையின் அருள்வாக்கை மதியாது காசாசை மிகுதியால் காவியுடை தரித்துக் கள்ள மனத்துடன் பொய்யான வேடமிட்டுப் பொருள் பெற்று மருள் வாக்கை அருள் வாக்கெனக் கூறி ஏதேதோ பிதற்றும் போலிச் சாமியார்களை நம்பி ஏமாந்து போகாதே மானுடா.
 
இவ்வுலகில் என்றும் நிலையான செல்வம் அன்பொன்றேயாகும். உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் நீ அன்பு செலுத்துவாயாகில் அவையனைத்தும் உன் மேல் பன் மடங்கு அன்பு செலுத்துதலால் நீ என்றும் அழியாத அமரத்துவம் பெறுவாய். உன் பூத உடல் மறைந்தாலும் உன் பெயர் நிலைத்து நிற்கும். நீ உலகிற்கு வழங்கிச் சென்ற அன்பு என்றும் நிலைத்து உலகைக் காத்துநிற்க, கடவுள் நிலையை நீ அடைவாய்.
 
அல்லாமல் அழியும் பொருளான செல்வத்தையே தேடி உன் வாழ்நாளில் அன்பு செலுத்தத் தவறி வீணே மடிவாயெனில் உன்னை நினைப்பவர் யாருமின்றி நரகக் குழியில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அல்லலுறுவாய்.
 
அமரத்துவமா, அடுத்தடுத்த பிறவியா? எது வேண்டும் உனக்கென நீயே முடிவெடு. 
 
 
திரைப்படம்; பட்டிணத்தார்
இயற்றியவர்: பட்டிணத்தார்
இசை: ஜி. ராமநாதன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
 
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
 
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு ஆ....
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே
 
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை ஆ...
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே
 
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 21, 2009, 3:32:32 PM11/21/09
to muthami...@googlegroups.com
நட்பைப் போன்ற உயர்ந்த உறவு உலகில் வேறில்லை. ஒருவர் தன் தாய் தந்தையர், சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் மற்றும் பிற எந்த உறவினரிடமும் சொல்ல முடியாத அந்தரங்கங்கள் அனைத்தையும் தனது நண்பரிடம் தயங்காமல் கூற முடிகிறது. அவற்றின் காரணமாக எழும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நண்பர்கள் மூலம் உரிய வழி ஏற்படுகிறது. இக்கருத்தையே வள்ளுவர்
 
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
 
எனும் குறளின் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்.
 
நாமெல்லோரும் சக மனிதருடன் நட்புப் பூண்டு அவர்கள் நமக்கு உதவுவர் என்று நம்பி வாழ்வின் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அவர்களுள் சிலர் வெறும் பொழுது போக்குக்காக நம்மிடம் நட்புப் பூண்டது போல் காட்டிக்கொண்டு நமக்கு ஒரு சிக்கல் ஏற்படுகையில் நம்மிடமிருந்து விலகிச் செல்வதும் உண்டு. இத்தகைய போலி நட்பை விடுத்து உண்மையான நட்பைத் தேடியடைதல் ஒருவருக்கு அவசியமானதாகும். உண்மை நண்பர்கள் நம்மைத் தீய வழியில் செல்ல விடாது தடுத்து நல்வழியில் செலுத்துவதுடன் நமது வெற்றிக்கும் உற்ற துணையாக விளங்குவர்.
 
மஹாகவி பாரதியார் மனிதர்களிடையே நட்புறவுடன் வாழ்ந்த போதிலும் மனிதர்களின் சுயநல நோக்கினைச் சரியாகப் புரிந்து கொண்டவராதலின் மனிதர்களை விடவும் மேலாக கீதையுரைத்த கண்ணனிடம் நட்புக் கொண்டார். தன்னை அருச்சுனனாக பாவித்தே அவர் கண்ணன் என் தோழன் எனும் கவிதையை எழுதியுள்ளார்.
 
பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவ தற்கே - இனி
என்ன வழியென்று கேட்கில், உபாயம்
இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்
கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு
உன்னை யடைந்தேன்
என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்.

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினி லேசொல்லுவான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வருவான்;
மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்.

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்; - எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; - என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான்; - சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும் - பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்.
..........................
 
 
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்

இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1961
 
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் - அவன்
சிரித்துக் களித்திடுவான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன்
சிரித்துக் களித்திடுவான்
 
கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான்
கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான் - மனத்
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான் - மனத்
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
 
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் - அவன்
சிரித்துக் களித்திடுவான்
 
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான்
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
 
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன்
சிரித்துக் களித்திடுவான்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

vidya vamadevan

unread,
Nov 16, 2009, 7:28:14 AM11/16/09
to muthami...@googlegroups.com
Please don't send mails to this ID

2009/11/16 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Nov 22, 2009, 10:23:35 AM11/22/09
to muthami...@googlegroups.com
மஹாகவியின் "கண்ணன் என் தோழன்" பாடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து அதனைக் காதல் காட்சிக்கு ஏற்றவாறு பெண் குரலில் பதிவுசெய்து "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய விருந்தாக அமைத்த நம் திரையுலக மேதைகள் அவரது "கண்ணம்மா என் காதலி" எனும் பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் பொருளும் நயமும் கெடாதவாறு அதில் சில வார்த்தைகளை மாற்றியமைத்து, அழகிய இனிமையான இசையமைத்து விருந்தாகப் படைத்துள்ளனர் பழம்பெரும் பாடகர் டி.ஆர். மஹாலிங்கம் குரலில்.
 
'என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே" என்று பிறிதொரு பாடலில் பாரதியார் குறிப்பிட்டிருப்பதாலோ என்னவோ இப்பாடலில் கண்ணம்மா என்ற பெயரை ஆங்கங்கே சேர்த்து மெருகேற்றியுள்ளனர்.
 
 
திரைப்படம்: விளையாட்டு பொம்மை

இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
ஆண்டு: 1954
 
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் நிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள்
பார்த்திருந்தால் வருவேன் நிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள் - கண்ணம்மா
வார்த்தை ததவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி கண்ணம்மா
 
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
 
மேனி கொதிக்குதடி கண்ணம்மா மேனி கொதிக்குதடி - தலை
வேதனை செய்குதடி கண்ணம்மா மேனி கொதிக்குதடி
வானினிடத்தையெல்லாம் ஆ ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ
வானினிடத்தையெல்லாம் வெண்ணிலா வந்து தழுவுது பார் - கண்ணம்மா
மோனத்திருக்குதடி
மோனத்திருக்குதடி வவையகம் முழ்கித் துயிலினிலே - கண்ணம்மா
மோனத்திருக்குதடி
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ? - கண்ணம்மா
தீர்த்தக் கரையினிலே
 
கூடிப் பிரியாமலே ராவெல்லாம் கொஞ்சிக் குலாவியங்கே
ஆடி விளையாடியே உன் மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடி
தவம் பண்ணியதில்லையடி கண்ணம்மா தீர்ததக் கரையினிலே
 
ஆகிரா
 
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 23, 2009, 3:12:26 PM11/23/09
to muthami...@googlegroups.com
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.
 
- நீதி நெறி விளக்கம்:52 (17-ம் நூற்றாண்டு)
—- குமரகுருபர சுவாமிகள்
 
இக்கவிதையில் குறிப்பிட்டுள்ள கருத்து பாரத நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்துவதாகும். ஏனெனில் நமது நாட்டின் குடும்ப, சமுதாய அமைப்பில் பெண்ணுக்குப் பொறுப்புகள் மிகவும் அதிகம். குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை அவள் தன் குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவர் மீதும் மிகுந்த அக்கரை கொண்டு அவர்களது நலம் பேணுவதை மிகவும் இன்றியமையாத கடமையாகக் கொண்டு செயல்படுகிறாள். பெண்களின் இத்தகைய பொறுப்பும் அக்கரையும் மிக்க வாழ்க்கை நெறிமுறையினாலேயே நமது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருந்த போதிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாடம் அடுப்பு எரிகிறது. அனைவருக்கும் பசிக்கு உணவு கிடைக்கிறது.
 
இல்லறத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும் தியாகம் செய்கிறாள். குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும் உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே தான் உணவருந்துகிறாள். அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும் இழக்கிறாள்.
 
 
திரைப்படம்: சித்தி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: பி. சுசீலா
 
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
 
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீஆரீராரோ
ஆரீராரீரீ ஆரீரீஆரோ ஆரீராரீரீரோ
 
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
 
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி
 
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
 
மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
 
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது? கண்ணுறக்கம் ஏது?
 
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
 
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும்
அன்னையென்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து தேடும்
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும் தானாக சேரும்
 
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
 
ஆரீராரீரீ ராரீராராரோ ஆரீராரீராரோ ஆ
ஆரீராரீரீ ஆரீராராரோ ஆரீராரீராரோ ஆரீராரீராரோ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages