சின்ன வேண்டுகோள் (தமிழ் விக்கிபிடியா வலைப்பதிவு)

60 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Nov 8, 2009, 4:03:17 AM11/8/09
to minT...@googlegroups.com
அன்பின் சிறீதரன்:

தமிழ் விக்கிபிடீயா வலைப்பதிவில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான தொடுப்பு
இருப்பு கண்டு மகிழ்ச்சி.
இத்தொடுப்பை ஒரு சிறிய படத்தோடு இணைத்து நினைவுறுத்தினால் அழகாக
இருக்கும். மதுரைத்திட்டத்தின் லோகோ இருப்பது போல்.
தங்கள் பயன்பாட்டிற்கு கீழுள்ள தொடுப்பிலிருக்கும் படத்தைப்
பயன்படுத்திக்கொள்ளவும்.
வெறும் எழுத்தைவிட சிறுபடங்கள் வலைப்பதிவின் அழகைக்கூட்டும் என்பது
தாங்கள் அறிந்ததே!

http://www.tamilheritage.org/logos/banners/stylish.jpg

படத்தை உங்கள் வலைப்பக்கத்திற்கு ஏற்றவகையில் உயர x அகல குறியீடு கொண்டு
சரி செய்து கொள்ளவும்.

நன்றி.

நா.கண்ணன்

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Sri Sritharan

unread,
Nov 8, 2009, 4:58:58 AM11/8/09
to mint...@googlegroups.com
அன்பின் நா. கண்ணன் அவர்களுக்கு

த.ம.அ. இன் சின்னத்தை இணைத்திருக்கிறேன்.

அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org

N. Kannan

unread,
Nov 8, 2009, 5:33:48 AM11/8/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி.
ஆனால் எங்கு இத்தொடுப்பு காணக்கிடைக்குமென்று தெரியவில்லை :-(
அப்படியே உங்கள் வலைப்பதிவிலும் இட்டுவிடுக.

கண்ணன்

2009/11/8 Sri Sritharan <ksth...@bigpond.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Sri Sritharan

unread,
Nov 8, 2009, 5:45:43 AM11/8/09
to mint...@googlegroups.com
விக்கியில் தமிழ் மரபு அறக்கட்டளை என்று தேடினால் கிடைக்கும். அல்லது இந்தத் தொடுப்புக்குச் செல்லுங்கள்:
 
 
முதலில் தமிழ் விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவல்ல. நீங்கள் எந்த வலைப்பதிவைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வலைப்பதிவைச் சொல்லுகிறீர்களா?
 
 
அதிலும் சேர்த்து விடுகிறேன்:).
 
அன்புடன்
சிறீதரன்
----- Original Message -----

N. Kannan

unread,
Nov 8, 2009, 5:55:44 AM11/8/09
to mint...@googlegroups.com
ஓ!

http://tamilwikipedia.blogspot.com/

இதைச் சொல்கிறேன்.
இது உங்கள் அளுமைக்குள் வரவில்லையா?
மன்னிக்க.

கண்ணன்

2009/11/8 Sri Sritharan <ksth...@bigpond.com>:
>

விருபா

unread,
Nov 8, 2009, 12:25:16 PM11/8/09
to மின்தமிழ்
முதலாவதாக 10 000$ நிதியுதவி வழங்கி, தமிழ்மரபு அறக்கட்டளை
தொடக்கப்படுவதற்கு காரணமாக இருந்த மலேசிய அரசியல்வாதி அன்றைய டத்தோ,
இன்றைய டத்தின் ஸ்ரீ சாமிவேலு அவர்களின் பெயர் இணைக்கப்படவில்லை. அதையும்
இணைத்து விடுங்கள்.

நன்றி

விருபா

Subashini Tremmel

unread,
Nov 8, 2009, 12:35:55 PM11/8/09
to mint...@googlegroups.com
அந்த தகவல் வலைப்பக்கத்தில் இல்லை என்ற நோக்கத்தில் எழுதியிருக்கின்றீர்கள்.
இதற்கான தொடுப்பு உள்ளதே. இன்னமும் பார்த்ததில்லை என்றால் இதோ
நிகழ்ச்சியின் படங்களுடன்   http://www.tamilheritage.org/old/begin.html
 
 
அதோடு நா.கண்னனின் அனைத்து த.ம.அறக்கட்டளை செய்திகளிலும் தவறாது இந்தச் செய்தி வரும். உதாரணத்திற்குந்த்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த 8ம் ஆண்டு விழா சொர்பொழிவையும் நீங்கள் கேட்கலாம்.
 
சுபா
 
2009/11/8 விருபா <vir...@gmail.com>

விருபா

unread,
Nov 8, 2009, 2:31:47 PM11/8/09
to மின்தமிழ்
சுபா,

கண்ணன் எங்கு இணைக்கச் சொன்னாரோ, அங்குதான் நானும் இணைக்கச் சொன்னேன்.

இதில் வலைப்பக்கத்தில் இல்லை என்ற நோக்கில்..... என்று தொடங்கி
எழுதுகிறீர்கள், இது தேவையில்லையே.

> > > "Be the change you wish to see in the world." -Gandhi- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Kannan

unread,
Nov 8, 2009, 6:26:34 PM11/8/09
to mint...@googlegroups.com
விருபாவிற்கு ஏனிப்படி விருப்பமின்மையோ!

ஒரு எளிய வேண்டுகோளை எவ்வளவுதூரம் அரசியல்படுத்த முடியுமோ, அவ்வளவு
அரசியலாக்குகிறார். நான் என்ன கேட்டேன், ஒரு தொடுப்பு உள்ளது, அதனுடன்
ஒரு அழகிய icon-ஐ இணையுங்கள் அதனால் அழகுறுமென்று.

பதில், முடியும் அல்லது முடியாது அவ்வளவுதான்.

ஆனால் சம்பந்தாசம்பந்தமில்லாமல் டத்தோவை ஏன் இழுக்க வேண்டும்?

டத்தோ ஒரு தொடக்கம். அதை நன்றியுடன் எப்போதும் குறிப்பதுண்டு.

அப்போது மலேசியாவில் வந்த சேதிகளையெல்லாம் நீங்கள் வாசித்து
இருக்கிறீர்களாவென்று தெரியாது. அந்த மாநாட்டில் ஜெர்மனியிலிருந்து வந்த
அறிஞருக்கு மதிப்பு, மரியாதை என்றுதான் அறிவிக்கப்பட்டன. எமது சொந்த
வேலைகள் ஆயிரம் இருக்கும் போது (தொழில்ரீதியாக ஒவ்வொரு மணித்துளியும்
இதற்கு செலவிடும் நேரத்தை நான் கணக்கிட்டுச் சொன்னால் நீங்கள்
அசந்துவிடுவீர்கள்!) மலேசியா வந்து தமிழ் மரபு பாதுகாக்கப்பட வேண்டும்
என்று குரல் எழுப்பியதற்கு கிடைத்த கௌரவம் அவ்வளவுதான். (யாரும்
விளிப்புறா வேளையில் வரும் முதல் குரலுக்கு எப்போதும் மதிப்புண்டு என்று
காண்க. இன்றுள்ள சூழலை வைத்து அக்கணத்தை எடை போட முடியாது என்றுணர்க)
அவர் என்னை அங்கு கௌரவிக்காவிடினும் தமிழ் மரபு அறக்கட்டளை
உருவாகியிருக்கும். It was on our drawing board. He was just lucky
enough to get a political attention based on our years of planning.

எனவே இம்மாதிரி அசட்டுத்தனமான பேச்சுக்களை இனிமேலும் பொது மன்றங்களில்
பேசவேண்டாம். நீங்கள் இலங்கையா, தமிழகமா? என்று தெரியவில்லை.
தமிழகத்தில்தான் தராதரமில்லாமல் இப்படியெல்லாம் கேட்பார்கள். கேள்வி
கேட்கும் போது நம் கௌரவம் என்ற ஒன்று உள்ளது என்பதை பலர்
மறந்துவிடுவதுண்டு.

நன்று குமரேசன்! உங்கள் நண்பர் பென்னேஸ்வரன் இதையெல்லாம்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

கண்ணன்

2009/11/9 விருபா <vir...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Nov 9, 2009, 1:34:14 AM11/9/09
to mint...@googlegroups.com
எது தேவையில்லை?
 
ஒரு விஷயம் முறையாக பதியப் பட்டிருக்கும் போது அது 'இல்லை' என்ற தோரணையில் எழுதுவது. அதிலும் முதலில் அதைச் செய்து விட்டு பின்னர் இதைக் கேளுங்கள் என்று சொல்வது எவ்வகையான தொணி?  
 
கேட்கின்ற கேள்விக்கு ஏற்ற வகையில் தான் பதிலும் அளிக்க முடியும்.
 
இன்னொரு விஷயம். டத்தோஸ்ரீ சாமிவேலு டத்தின் ஸ்ரீ சாமிவேலு அல்ல. டத்தோ பட்டம் வழங்கப்பட்டவர்களின் மணைவியருக்கு அமையும் பட்டம் அது. ஆக அது டத்தின் ஸ்ரீ இந்திராணி சாமிவேலுவுக்கு உள்ள கௌரவப் பெயர். அவருக்கும் இந்த ஆரம்ப விதைப் பண விஷயத்துக்கும் எந்த தொடர்பு இல்லாத போது அவரைப் பற்றி ஏன் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டும்?
 
இன்னொரு விஷயமும் சொல்லிக் கொல்கிறேன். த.ம.அறக்கட்டளை தொடங்கப்படுவதற்கு இந்த 10,000 நன்கொடை தான் காரணம்  என்று நினைக்காதீர்கள். எங்கள் கருத்தும் ஆர்வமும், நேரமும் உழைப்பும் இல்லாவிட்டால் த.ம.அ என்ன,  எந்த தன்னார்வ நிறுவனமுமே இல்லை.  பொது விஷய அனுபவமும் நிறைந்தவர் நீங்கள். நான் சொல்வதில் உள்ள அர்த்தம் உங்களுக்கும் புரியும் என நினைக்கிறேன்.

Sri Sritharan

unread,
Nov 9, 2009, 2:49:12 AM11/9/09
to mint...@googlegroups.com
குமரேசன்
 
அந்தத் தகவல் கட்டாயம் விக்கிப்பீடியா கட்டுரையில் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் தகுந்த மேற்கோள்களுடன் நீங்களே சேர்த்து விடுங்கள்.
 
சிறீதரன்

விருபா

unread,
Nov 9, 2009, 6:45:46 AM11/9/09
to மின்தமிழ்
சுபா,

டத்தோ என்பது மாநில அளவிலும், அதன் மேலாக மாமன்னரால் வழங்கப்படுவது டான்
ஸ்ரீ யும், அதன் பின் துன்.
இந்த டான் ஸ்ரீ பெறுபவர்களின் மனைவியை டத்தின் ஸ்ரீ என்று தொடங்கி
அவர்களின் பெண்பாற் பெயரையும் இணைத்துத்தான் அழைப்பது வழக்கம்

டான் ஸ்ரீ - சாமிவேலு
டத்தின் ஸ்ரீ - இந்திராணி சாமிவேலு

டத்தோ பெற்று, பின்னர் டான் ஸ்ரீ பெற்ற பின் அவர், டத்தோ என்று
அழைக்கப்படுவதில்லை, பெரிய விருதின் இணைப்பாலேயே அழைக்கப்படல் வேண்டும்.

ஆனால், இன்னமும் டத்தோ சாமிவேலு என்றே சில தமிழ் ஊடகங்கள் வழங்குகின்றன.

இதனையே மனதிற் கொண்டு நான் "டான் ஸ்ரீ" சாமிவேலு எனபதற்குப் பதிலாக
"டத்தின் ஸ்ரீ"என்று போட்டுள்ளேன், அது என் தவறுதான்.

ஆனாலும் இந்திராணி என்பதனை குறிப்பிடாவரை அது ஒரு தட்டச்சுத் தவறுதான்.
நீங்கள்தான் இந்திராணி பெயரை இதில் நுழைக்கிறீர்கள்.

அடுத்து,

நான் நினைப்பதாக நீங்களே கற்பனை செய்துகொண்டு எழுதுகிறீர்கள்

1. \\ அந்த தகவல் வலைப்பக்கத்தில் இல்லை என்ற நோக்கத்தில்


எழுதியிருக்கின்றீர்கள். \\

இதற்கு நான் பதில் தந்துவிட்டேன். \\ கண்ணன் எங்கு இணைக்கச் சொன்னாரோ,
அங்குதான் நானும் இணைக்கச் சொன்னேன். \\

இதற்குப் பின்னும், இப்பொழுது இரண்டாவதாக,

2. \\ த.ம.அறக்கட்டளை தொடங்கப்படுவதற்கு இந்த 10,000 நன்கொடை தான்
காரணம் என்று நினைக்காதீர்கள். \\

என்று நான் நினைக்காத ஒன்றை நீங்களே வலிந்து, நான் நினைப்பதாக ஏன்
எண்ணுகிறீர்கள்?

இது தேவையில்லாத ஒன்று, இப்படித்தான் முன்னரும் சொன்னேன்.

நீங்கள் இவ்வாறு முண்டியடித்துக்கொண்டு பதில் தருவதுதான் என்னை இவ்வாறு
நினைக்கத் தூண்டிவிட்டது.

இப்பொழுது நினைக்கிறேன், வெளிப்படையாகவே கேட்கிறேன்.

சரி, 2001 இல் டத்தோ பணம் தருவதற்கு முன்னால் - 2000 இலோ அல்லது அதற்கு
முன்னரோ வெளியான தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய பத்திரிகை செய்தி ஒன்றை
இணைத்துவிடுங்களேன்.


- து.குமரேசன்

> > > - Show quoted text -- Hide quoted text -

Subashini Tremmel

unread,
Nov 9, 2009, 9:33:58 AM11/9/09
to mint...@googlegroups.com
திரு.குமரேசன்,
 
உங்கள் கேள்விகளுக்கு கண்ணன் பதிலளித்து விட்டார். இனி எனது நேரத்தை வீனாக்கி உங்கள் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கும் எண்ணம் எனக்கில்லை.  
 
ஆக்குவது கடினம் அழிப்பது சுலபம்.
இரண்டாவது வகையைச் செய்ய நீங்கள் முயற்சிக்கிறீர்கள். எவ்வளவு முடியுமோ செய்யுங்கள். அதனால் எங்களது முயற்சிகள் நின்று விடாது.
 
சுபா

 

Narayanan Kannan

unread,
Nov 14, 2009, 12:49:10 AM11/14/09
to minT...@googlegroups.com
சுபா,

அமைதி, அமைதி

1. நான் கூறிய அந்த 23 சொற்களுக்குள் எதுவுமே கேள்வியாக இல்லை -
த.ம.அ தொடங்கப்படுவதற்குக் காரணமானவர்களுள் ஒருவர் பெயர் விடுபடல் என்ற
குறைபாடு வரக்கூடாது என்று,மிகவும் தன்மையுடன் இணைத்து விடுங்கள் என்று
கூறி நன்றியுடன் முடித்துள்ளேன்.

கேள்வி எதுவுமே கேட்கவில்லை.

2. கேள்வியே இல்லாதபோது கண்ணன் பதில் தந்துவிட்டார் என்பது எப்படி
சரியாகும். அவருடைய பதிவுற்கு நான் இன்னமும் பதில் தரவில்லை. அவர் எழுதிய
ஒவ்வொரு சொற்களுக்கும், வசனங்களுக்குமான எனது பதில் விரைவில் வரும்.

3. நீங்கள் எழுதிய சொற்களை வைத்துக்கொண்டுதான் நான் உங்களுக்குப் பதில்
தருகிறேன்.

நான் எங்கே எவ்வாறு த.ம.அ வை அழிக முற்படுகிறேன்.

தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.

நான் எழுதிய அந்த 23 சொற்கள் கொண்ட நான்கு வரிகளில் எந்த இடத்தில் த.ம.அ
வை அழிக்க முற்படுவதான கருத்து வந்துள்ளது.

இல்லேயே, இல்லாத ஒன்றிற்காக, ஏன் இவ்வளவு கோபம்?

நீங்கள்தான் என்மீது அவதூறை இறைக்கிறீர்கள்.

நான் அவ்வாறு த.ம.அ வை அழிக்க முற்படுவதாக மின்-தமிழில் வேறு எந்த ஒரு
உறுப்பினரும் எதிர்வினையாற்றவில்லையே

நீங்கள்தான் வார்த்தைகளை வீணே கொட்டுகிறீர்கள்.

தர்க்க ரீதியாக வாதிடுங்கள், கோபத்துடன் வேண்டாம்.

திரும்பவும் கூறுகிறேன், கோபத்துடன் வேண்டாம்.

- நன்றி

து.குமரேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages