நம் தமிழர் இல்லங்களில் வளரும் நாமக்கல் கோழிகள்

17 views
Skip to first unread message

Vallavanukku Vallavan

unread,
May 18, 2013, 11:45:27 AM5/18/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
கடந்த சில நாட்களாகக் கனடாவில் உள்ள கூட்டாளி ஒருவருடன் கலந்துரையாடலில் இருந்தேன்.  அவருக்கு முப்பரிமாண மெய்நிகர் கட்டிடச் சுற்றுலா ஒன்றை உருவாக்கித் தரும் நிறுவனம் ஒன்றிடம் பேசி அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்க என்ன தொகை கேட்பார்கள் என்று கேட்டுச் சொல்லுமாறு கேட்டார்

எனக்கு மிகவும் தெரிந்தவர் இத்துறையில் இருப்பதால அவரிடம் பேசினேன் அவர் ஒரு நிமிடத்துக்கு ஒரு லட்சரூபாய் தரவேண்டும் என்று சொன்னார்.

இன்று சென்னையில் முப்பரிமாண நகர் விழியங்கள் உருவாக்கும் திறன் உள்ளவர்கள் பல்கிப்பெருகியுள்ளனர் அவர்கள் கேட்கும் தொகை மலைப்பைத் தருவதாக உள்ளது

அதை நினைக்கவே பெருமையாக இருக்கும் எண்ணத்தை அவர் சொன்ன அடுத்த தகவல் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது. 

தமிழகத்தில் இருந்து பல இளைஞர்கள் பெருந்தொகை செலவு செய்து கனடாவுக்கு மேற்படிப்புக்கு வருகிறார்கள்.  அவர்களால் கனடாவின் தொழில் தேவைக்கான திறனை வளர்த்துக்கொள்ளாமல் சரியான வேலை கிடைக்காமல் அதே நேரம் தமிழகத்துக்குத் திரும்பச் செல்லாமலும் இங்கேயே தங்கி பெரும் சோதனைக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்

கனடாவில் இங்குள்ளதுபோன்று பட்டப்படிப்பு அதாவது உயர்நிலைப்பள்ளி முடித்து மேற்படிப்பு படிப்பதற்கு மதிப்பில்லை.  பட்ட மேற்படிப்புக்கு வாய்ப்புண்டு.  பட்டமேற்படிப்பில் ஆய்வுடன் கூடிய படிப்புக்கு அதிக மவுசு மட்டும் அல்ல அவ்வாறு படிப்புக்குச் சேருபவர்களின் அனைத்துச் செலவுகளையும் ஆராய்ச்சிப் பேராசிரியரே ஏற்றுக்கொள்வார்.  ஏனெனில் பேராசிரியர் அவருடைய ஆராய்ச்சிக்கான நிதி உதவியைப் பெற்று அதில் உதவி செய்யும் மாணவரின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ளுவார் என்று குறிப்பிட்டார்

அதை விட்டால கனடா அரசின் தொழிற்துறையும் பலகலைக்கழகமும் இணைந்து கணடாவில் தொழில்துறைக்கான குறிப்பிட்ட திறனை வளர்க்கும் பட்ட மேல்படிப்பு பட்டயப்படிப்பு உள்ளத்ன்றும் அதில் சேர்ந்து பயின்று சிறந்தமுறையில் தேர்வுபெற்ரவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டென்றும் பட்டயப் படிப்பில் குறிப்பிட்ட தொழில்நுட்பத் திறன் கற்றவர்களுக்கு நல்ல வேலைகள் உண்டு ஆராய்ச்சி மேல்படிப்பு என்பது அறிவுசார் நிலைப்பாட்டிலும் தொழில்சார் மேல்படிப்பு குறிப்பிட்ட வேலைக்கான தனித் திறனை வளர்ப்பதாகவும் சொன்னார்

ஆனாலும் இங்கு படித்துப்பட்டம்பெற்று குடியுரிமை பெற்று நல்வாழ்வு வாழும் கனவுடன் வருபவர்களில் பலர் இங்கு உள்ள கல்விமுறைக்கு ஏற்ற மனப்பக்குவமும் ஆளுமையும் தனித் திறனும் இல்லாமல் இருக்கிறார்கள் இது கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தமிழகத்தில் இருந்து வரும் மாணவர்களிடம் காணப்படுவதாகச் சொன்னார்

அவரே மேலும் கூறும்போது தமிழகத்தில் கோழி வளர்ப்பில் சிறப்பிடம் பெற்ற  நாமக்கல்லே மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்விலும் பள்ளி இறுதித் தேர்விலும் குறுக்கு வழிகளைக் கண்டு அதைப் பயன்படுத்தி அதிக மதிப்பெண்களைப் பெற்று மேல்படிப்புக்கு வருகிறார்கள்.  கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்லுரியிலும் பொறியியல் கல்லூரியில்ம் சேரத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் நாமக்கல்லைச் சேர்ந்தவர்களே.  இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றவர்களும் நாமக்கல்லைச் சேர்ந்தவர்களே அவர்கள் தேர்வு எழுத மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு மற்ற  கல்வித் திறன் இல்லாத நிலையில் உயர் கல்விக்கு வருகிறார்கள்.  இந்தக் கோழிகள் கட்டுப்பாடான சூழலில் வளர்க்கப்பட்டு சுருக்குவழி மூலம் அதிக மதிப்பெண்களைப் பெறும் கலையில் தேர்ந்துவிடுகிறார்கள். தேர்வு எழுதுவதில் சூரர்களாக இருப்பதைத் தவிர மற்ற அடிப்படைத் திறனும் ஆளுமையும் இல்லாதவர்களாக இருப்பதால் கனடாவில் அவர்கள் வெற்றிபெற இயலவில்லை என்று குறிப்பிட்டார்

சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்கச் சில இடங்களுக்கு மாணவனின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஒரு தந்தையாகச் சென்று பேசிப்  பார்த்தேன்  ஒரு கல்லூரியின் முதல்வர் தன் மகனை நாமக்கல்லுக்கு அனுப்பியதையும் அதன்பின் மேற்படிப்பில் அவனால் தாக்குப்பிடிக்க முடியாமல் மன உளைச்சலில் சிக்கியதையும் சொன்னார்.  கல்லூரிகள் வாழ்க்கைக் கல்வியையும்  தொழில்சார் திறனையும் ஆளுமையும் வளர்க்காமல் கிளிப்பிள்ளைகளை வளர்ப்பதில் நாட்டம் உள்ளவர்களாகச் செயல்பட்டு தமிழகத்தில் தொழில் படிப்பில் தேர்ச்சியடைந்தவர்களில் 80% விழுக்காடு எந்த வேலைக்கும் தகுதியில்லாதவர்களாக தனிப்பட்டு நிற்கிறார்கள்

ஐடி மற்ற மைக்ரோசாஃப்ட் ஐ பி எம் சர்டிபிகேசம் பயிற்சிக்குச் சென்று அங்கு நடப்பதென்ன என்று பார்த்தால் இன்னும் பெரிய அதிர்ச்சி.  அங்கிருந்தவர்கள் நாங்கள் பாடமெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை கணினியில் ஆன்லைன் தேர்வு எப்படி எழுதவேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுப்போம் நாங்கள் கொடுக்கும் பயிற்சியை அப்படியே பின்பற்றினால் தேர்வில் வெற்றிபெறுவது உறுதி என்று சொன்னார்கள்

அப்படியானால் இந்தப்பயிற்சிக்கு எந்தப்புத்தகம் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள் தேவையில்லாத வேலையெல்லாம் செய்கிறீர்கள் எந்தப் புத்தகமும் வேண்டாம் எங்கள் பயிற்சி மட்டும் போதும் என்றார்

இப்படியாகத்தான் தமிழர்கள் இப்போதெல்லாம் வீடுகளில் கல்வி வளர நாமக்கல்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாமக்கல் கோழிகள் போல் கட்டுப்பாடுள்ள சூழலில் உருவாக்கப்பட்டு சவால் மிக்க வெளிஉலகுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்

நாமக்கல்லின் கோழிவளர்ப்பே தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தால் யார் தமிழகத்தையும் லட்சக்கணக்கில் முதலீடு செய்யும் பெற்றோர்களையும் சொல்லிக்கொடுக்கும் சூக்குமம் போதும் என்று நம்பும் மாணவர்களையும் காப்பாற்றுவார்கள்

வவ

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2013, 11:57:39 AM5/18/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
உவமையும் பொருத்தம். செய்தியும் உண்மை. ஆய்வும் தேவையானது. பேராசிரியர். அதுவும் மானிட இயல். நாலும் பார்த்தவர். நீங்கள் இந்த 'நாமக்கல் கோழி' பிரச்னைக்கு விடை காண முயன்றதில் அனுபவம் என்ன? 


2013/5/18 Vallavanukku Vallavan <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 4:09:44 PM5/18/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


18 மே, 2013 11:45 AM அன்று, Vallavanukku Vallavan <radius.co...@gmail.com> எழுதியது:


சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்கச் சில இடங்களுக்கு மாணவனின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஒரு தந்தையாகச் சென்று பேசிப்  பார்த்தேன்  ஒரு கல்லூரியின் முதல்வர் தன் மகனை நாமக்கல்லுக்கு அனுப்பியதையும் அதன்பின் மேற்படிப்பில் அவனால் தாக்குப்பிடிக்க முடியாமல் மன உளைச்சலில் சிக்கியதையும் சொன்னார். 

ஒரு சோறு பதமாகாது.
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்று வாயாடினார்கள்

கல்லூரி சென்ற பின் உலக இயலை கற்றுக்கொள்ளலாமே?

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
May 19, 2013, 1:51:18 AM5/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.... என்றபடி நடைமுறைப் படுத்த இயலாவிட்டால், கசடறக் கற்ற எந்தக் கல்வி அறிவினாலும் பயனில்லை. 

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் போன்ற கதைதான்.

அப்பொழுது எந்த பட்டமும்/பட்டங்களும் ஒரு அலங்காரப் பொருளின் நிலைக்கு, பெருமையாக காட்சிக்கு வைக்கும் நிலைக்குத் தள்ளப் படும்.

அதனால்தான் இப்பொழுது காசு கொடுத்து பட்டத்தை வாங்கும்/தேர்வில் வெற்றி பெறச் செய்யும் முயற்சிகள் மலிந்து விட்டது. 

இதற்கு கல்வி அமைச்சர்களும் (புதுவை?) விலக்கல்ல.


..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
May 19, 2013, 8:08:50 AM5/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


19 மே, 2013 1:51 AM அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:



கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.... என்றபடி நடைமுறைப் படுத்த இயலாவிட்டால், கசடறக் கற்ற எந்தக் கல்வி அறிவினாலும் பயனில்லை. 

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் போன்ற கதைதான்.

படிச்சபின்னர்தான் இடிக்கணும் என தோணுச்சி. )
 


ஏட்டிக்கு போட்டி ஏடாகூடன்

தேமொழி

unread,
May 19, 2013, 12:51:44 PM5/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஹி..ஹி..ஹீ...சிரிப்போ சிரிப்பு ....

ஆகா...எத்தனை பேர் புனைப் பெயரில் உலா வருகிறார்கள்.. இனி நானும் புனைப் பெயர் வைத்துக் கொள்ளலாமா என யோசிக்கிறேன்.  தூங்கி எழுந்த உடன் மண்டையை உடைத்து புதுப் பெயர் கண்டு பிடிக்கத்  திறன் இல்லாததால் தற்பொழுது "இ" ஐயா சூட்டிய பெயரையே உபயோகிக்க முடிவு செய்துள்ளேன்.

..... அமுதமொழி 

(அப்பா சூட்டிய பெயருக்கு ஏற்றார் போல வாழ வேண்டியது மகள் தந்தைக் காற்றும் உதவி இல்லையா?...ஏதோ என்னால முடிஞ்ச உதவி எங்க அப்பாவுக்கும் என்  காட் ஃபாதருக்கும்)

Innamburan S.Soundararajan

unread,
May 19, 2013, 12:53:53 PM5/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
அமுதமொழிக்கு என் வாழ்த்துக்கள்.
2013/5/19 தேமொழி <them...@yahoo.com>

தேமொழி

unread,
May 19, 2013, 2:27:19 PM5/19/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
நன்றி ஐயா.

அன்புடன் 

..... அமுதமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages