தமிழகத்தில் தேசிய கல்வெட்டியல் நிறுவனம்:கருணாநிதி கோரிக்கை

9 views
Skip to first unread message

Anbudan Nilavan

unread,
Dec 15, 2009, 7:17:54 AM12/15/09
to mint...@googlegroups.com

''தமிழ்நாட்டில் தேசிய கல்வெட்டியல் நிறுவனம் அமைக்கவேண்டும் "என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி எழுதியுள்ள கடித்தில்...''  
மத்​திய அர​சின்சார்​பில் தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னம் உரு​வாக்​கப்​ப​டப் போகும் மகிழ்ச்​சி​யான செய்​தியை அறிந்​தேன்.​ 

நாட்​டின் பழ​மை​யான கல்​வெட்டு எழுத்​து​களை பாது​காக்​கும் அளப்​ப​ரிய முயற்​சி​யா​கும் இது.​தொல் ​லி​யல் துறை​யின் மத்​திய ஆலோ​ச​னைக் குழுக் கூட்​டம் கடந்த 2-ம் தேதி நடை​பெற்​றது.​ 

அப்​போது,​​ "இந்​திய தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னத்தை தமி​ழ​கத்​தில் அமைக்க வேண்​டும்'' என்ற கோரிக்​கையை மாநி​லத்​தின் மிகச் சிறந்த தொல்​லி​யல் அறி​ஞ​ரும்,​​ பத்​ம​பூ​ஷண் விருது பெற்​ற​வ​ரு​மான ஐரா​வ​தம் மகா​தே​வன் முன்​வைத்​தார்.​

த​மி​ழ​கத்​தில் சுமார் ஒரு லட்​சம் வரை​யி​லான கல்​வெட்​டு​கள் உள்​ளன.​ அதில்,​​ 60 ஆயி​ரம் கல்​வெட்​டு​கள் தமி​ழில் உள்​ளன.​ எனவே,​​ தமி​ழ​கத்​தில் தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னத்தை அமைப்​ப​தற்​குத் தேவை​யான நிலம் உள்​ளிட்​ட​வை​களை ஒதுக்க மாநில அரசு தயா​ராக உள்​ளது.​

எ​னது,​​ இந்த வேண்​டு​கோளை கனி​வு​டன் பரிசீ​லிக்​கு​மாறு கேட்​டுக் கொள்​கி​றேன்.​ "தமி​ழ​கத்​தில் தேசிய கல்​வெட்டு இயல் நிறு​வ​னம் அமைக்​கப்​ப​டும்'' என்ற அறி​விப்பு ஜூ​னில் நடை​பெற இருக்​கும் உலக தமிழ் செம்​மொழி மாநாட்​டுக்கு ​ அச்​சா​ர​மாக இருக்​கும் 
"என்று தனது கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மரபு வகையிலான தேடலில் இந்திய நாடும் முழித்துக் கொண்டு நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது எனக் கொள்ளலாமா ?

வாழ்க தமிழுடன், 
நிலவன் 

N. Kannan

unread,
Dec 15, 2009, 7:24:09 AM12/15/09
to mint...@googlegroups.com
அவசியம் செய்ய வேண்டும். முதன்முறையாக இது பற்றி தமிழக தொல்லியல்
அறிஞர்கள் சொன்னபோதே மின்னாக்கம் செய்ய வேண்டுமென்று கூறினேன். 8/9
வருடங்களாகிவிட்டன.

காகிதப்படிகள் உள்ளன. அவை மின்னாக்கம் பெறவேண்டும்.

க.>

2009/12/15 Anbudan Nilavan <anbudan...@gmail.com>

Reply all
Reply to author
Forward
0 new messages