--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--

நன்றி, சுபாஷிணி. எதிர்நோக்குகிறேன். மறுமலர்ச்சி ஒரு ஆற்றுப்படை. மூல நூலையும் முடிந்த போது படியுங்கள். டான் ப்ரெளனின் எல்லைகள் தென்படலாம்.. உங்களுடைய மேற்கோள் அபாரம்.
2013/6/2 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
நன்றி, சுபாஷிணி. எதிர்நோக்குகிறேன். மறுமலர்ச்சி ஒரு ஆற்றுப்படை. மூல நூலையும் முடிந்த போது படியுங்கள். டான் ப்ரெளனின் எல்லைகள் தென்படலாம்.. உங்களுடைய மேற்கோள் அபாரம்.எனக்கு ப் பொதுவாகவே கவிதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டு திரு.இன்னம்பூரான். ஆனாலும் இந்த நூலைத் தேட வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலையில் தேடியதில் நூலின் ஆங்கில வடிவம் pdf வடிவத்தில் கிடைத்தது. http://www2.hn.psu.edu/faculty/jmanis/dante/dante-longfellow.pdfதேவைப்படுபவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.
--

இன்பெர்னோ வாசித்து முடித்ததும் மனதை முழுமையாக ஆக்ரமித்திருப்பது இந்த நூலில் வழங்கப்பட்டிருக்கும் உலகின் பிரமாண்டமான சில கட்டிட அமைப்புக்கள் (grand architecture) பற்றிய விவரணைகள் தான். இதனை பற்றியும் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கின்றேன்.முதலில் இப்படி கட்டிடங்களை நேசித்து அதன் ஒவ்வொரு பகுதியையும் சரித்திர விவரங்களோடு வழங்கியிருப்பதற்காகவே டான் ப்ரவ்னின் எழுத்து நம்மைக் கவர்கின்றது. நானும் ஒரு கட்டிடங்களின் பிரியை என்பதால்:-))வரலாற்று விஷயங்களைச் சேகரிப்பதற்காக நேரில் சென்றும் ஒவ்வொரு பகுதியையும் உன்னிப்பாக கவனித்தும் அதற்கான சான்றுகளை இண்டெர்னெட்டிலும் கிறிஸ்துவ மத பழம் நூல்களிலும் டாண்டேவின் டிவைன் கோமெடியிலும் தேடி எடுத்து தொடர்பு படுத்தி மிக அழகாக நூலை எடுத்துச் சென்றிருக்கின்றார் ப்ரவுன். முன்பு சொன்னது போல நூல் விமர்சனம் இப்போது இல்லை. :-)ஆனால் இந்த நூலில் குறிப்பிடப்படுகின்ற சில அரிய பிரமாண்ட கட்டிடங்களைப் பற்றி தகவல் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. வாசித்து முடித்ததும் ஓடிப் போய் யூடியூபில் தேடிப் பார்த்து ரசித்தசில விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இதில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.முதலில் மனதில் உடன் தோன்றுவது டான் ப்ரவுன் குறிப்புக்களில் இருக்கும் இஸ்தான்பூல் நகரின் வரலாற்றுப் பெருமை மிக்க ஹாஃகியா சோபியா.
5ம் நூற்றாண்டு ஆர்த்தடொக்ஸ் சமயக் கோயிலாக இருந்து பின்னர் 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாக மாறி பின்னர் 15ம் நூற்றாண்டின் மத்தியில் இஸ்லாமிய தொழுகைக்காகப் பயன்படுத்தப்பட்டு சென்ற நூற்றாண்டின் மத்தியில் அருங்காட்சியமாக உருவம் கொண்ட ஒரு மாபெரும் கட்டிடம் இது. பொன்னால் இழைக்கப்பட்ட வடிவங்கள், பிரமாண்ட வடிவங்கள், மதங்களின் சங்கமங்கள் என இதற்கு மாபெரும் சிறப்பு இருக்கின்றது.யூடியூப் வழங்கியிருப்பும் வாய்ப்புக்கள் நமக்கு இருந்த இடத்திலேயே இத்தகைய பிரமாண்டங்களைக் கண்டு

--
கட் டு ரை யி ன் கட்டுமானமே பிரமாதம். ரசித்துப்படித்தேன். எதற்கும் இன்னொரு கதவு. புலண்ட்தர் தர்வாஜா. அக்பர் கட்டியது. சர்வமதசமரசட்டுக்கு வாயில். சித்திரம் இங்கே.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

வாசித்து முடித்து 2 வாரங்களாகி விட்ட பின்னரும் கூட இன்பெர்னோவின் ரோபர்ட் லாங்டனும் சியன்னாவும்என் மனதிலேயே சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்கள்.இன்பெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு பிரமாண்டமான ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். இந்தக் கதவு இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் தற்சமயம் ஓப்பரா டி சந்தா மரியா டெல் பியோரே அருங்காட்சியகத்தில் (Museo dell'Opera di Santa Maria del Fiore) பாதுகாக்கபடுகின்றது.
--

Please do write. It is so interesting!

Narasiah
--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
டான் ப்ரவுனின் மூன்று நாவல்களை வாசித்திருக்கிறேன். அவரும் ராபர்ட் லேங்க்டனும் கை கோர்த்துக்கொண்டால் சுவாரஸ்யத்திற்குக் குறைவேயிருக்காது. இந்த நாவலையும் வாசித்து விடத்தூண்டுகிறது உங்கள் விவரிப்பு. நன்றி சுபா.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.

இன்பெர்னோவை வாசிப்பவர்கள் ஒரு சினிமா படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே உணர்வார்கள். அந்த வகையில் கதையின் அமைப்பை அமைத்திருக்கின்றார் ப்ரவுன். டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன் போல இதுவும் சோனி நிறுவனத்தால் திரைப்படமாகக்கூடிய சாத்தியம் விரைவில் நிகழ உள்ளது. ஏனைய இரண்டு படங்களையும் இயக்கிய ரோன் ஹோவர்ட், தனது கதாநாயகனாகிய டோம் கேன்க்ஸை இன்பெர்னோவிற்காக பதிவு செய்திருப்பதாக அண்மையில் செய்தி வாசித்தேன். நல்லதொரு திரைப்படம் இக்கூட்டு முயற்சியில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.கதையில் இத்தாலியின் ப்ளோரன்ஸிலிருந்து பறந்து வெனிஸிற்குச் சென்று விடுகின்றார்கள் சியன்னாவும் ரோபர்ட்டும். அங்கு அவர்கள் தேடும் சில விஷயங்களினூடேயே தனக்கு வெனிஸ் நகரின் மேல் உள்ள காதலை ப்ரவுன் மறைக்காமல் விவரித்து விடுகின்றார்.
..
2013/8/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>இடையில் சில நாட்கள் இந்த இழையை மறந்திருந்தேன். இன்று மாலை அலுவலகப் பணி முடித்து மட்ரிட் சாலையில் சற்றே நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது பிரமாண்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அரச மாளிகையைப் பார்த்தபோது அதன் ஒரு பக்கச் சுவர் பகுதி ப்ளோரன்ஸ் நகரின் பிட்டி மாளிகையை நினைவுறுத்தியதில் இன்று இந்தப் பதிவு.
--
மிக அருமையான பகிர்வு சுபா. இப்படி எல்லாம் இருப்பது தெரியாது. என்பதோடு இந்த ஒபிலிஸ்க் பற்றி எல்லாம் இப்போது தான் கேள்விப் படுகிறேன். கலைக்கூடமான தோட்டம் அருமையான பராமரிப்பில் இருக்கிறது என்பதும் புரிகிறது.
2013/8/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பிட்டி மாளிகையைப் பற்றி கடந்த இழை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மாளிகையின் பின் புறத்தின் வழியே நடக்கத் தொடங்கினால் பசுமை நிறைந்த பூங்கா ஒன்றிற்கு வந்து விடுவோம். இந்த பூங்கா ப்ளோரன்ஸ் நகரின்

பிட்டி மாளிகையைப் பற்றி கடந்த இழை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மாளிகையின் பின் புறத்தின் வழியே நடக்கத் தொடங்கினால் பசுமை நிறைந்த பூங்கா ஒன்றிற்கு வந்து விடுவோம். இந்த பூங்கா ப்ளோரன்ஸ் நகரின் பெருமைகளுக்குச் சிகரம் சேர்க்கும் அமைப்புக்களில் ஒன்றாக விளங்கும் போபோலி தோட்டம் (Boboli Gardens).

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எந்தவொரு சுழலும் தன்னுள் அகப்பட்டுக்கொண்டவர்களை ஏதாவதொரு கட்டத்தில் உமிழ்ந்து விடும். ஆனால், முதலில் தன்போக்கில் போகவிட்டு அதன் பின் எதிர்பாராத ஒரு தருணத்தில் சடாரென்று பற்றிப் பிடித்து ஆக்கிரமித்து வாய்க்குள் போட்டுக்கொண்டு ஆடிப்பூவெடுத்தது இந்தச்சுழல். வெளியே வரப்பிடிக்காமல் அதனுள்ளேயே அமிழ்ந்து கிடக்கிறேன். சுழலின் பெயர் "இன்ஃபெர்னோ"
கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் இரவெல்லாம் வாசித்து முடித்தபின் மறுபடியும் கையிலெடுத்திருக்கிறேன். நாவலில் குறிப்பிட்டிருக்கும் இடங்களையெல்லாம் கூகிளாண்டவர் உதவியுடன் மறுபடியும் சுற்றிப்பார்ப்பது நல்லதொரு அனுபவமாகத்தான் இருக்கிறது. பாயாசத்தில் முந்திரியாக உங்களது தகவல் பகிர்வுகளும். நன்றி சுபா..

டான் ப்ரௌனின் இன்பெஃர்னோவில் ரோபெர்ட் சியென்னா இருவரும் செல்வதாக காட்டப்படும் இத்தாலியின் ப்ளோரன்ச், வெனிஸ் நகரங்களின் கட்டிடங்களையும் துருக்கிய இஸ்தான்புல் கட்டிடம் பற்றியும் முந்தைய பதிவுகளில் சில குறிப்புக்கள் கொடுத்திருந்தேன்.

இன்று இன்ஃபெர்னோவில் குறிப்பிடப்படும் மேலும் ஒரு ஓவியத்தைப் பற்றி விவரிக்கலாம் என நினைக்கின்றேன்.Battle of Marcianoப்ளோரன்ஸில் பாலாஸியோ வெச்சியோவில் உள்ள The Hall of Five Hundred பகுதிக்குள்ளே ஒளிந்து கொண்டே தடையங்களைத் தேடிக் கொண்டிருக்கும் ரோபெர்ட், சியென்னா இருவரும் இந்த ஓவியத்தைப் பார்ப்பது போல ஒரு பகுதி அமைத்

.jpg)
ஓவியப் பார்வை தொடர்கின்றது..
--

Dan Brown's 'Inferno' tops all book sales in 2013For the third time since 2004, Dan Brown has written the best-selling book of the year.Brown's Inferno, a modern-day thriller built on clues from The Inferno, Dante's 14th-century poem about hell, topped sales in 2013. That's based on data from USA TODAY's Best-Selling Books list and a compilation of the top 100 best sellers (based on sales from Dec. 31, 2012-Dec. 29, 2013).

டான் ப்ரவ்னின் புதிய நூல் Inferno வெளிவந்து விட்டது. டான் ப்ரவுன் நூல் விசிறிகளுக்கு இது மேலும் ஒரு பெரிய பரிசாக அமையும்.. டா வின்சி கோட் தொடங்கி ஹார்வெர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரோபெர்ட் லாங்டன் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் ஆய்வுகளும் தேடல்களும் பயங்கர அனுபவங்களும் அவை அனைத்தும் தொடர்பு கொண்டுள்ளதாய் அமையும் சமய பின்புலங்களும் இந்த நாவல்களின் மையமாக அமைந்திருக்கும்.இம்முறை வெளிவந்திருக்கும் Inferno - 14ம் நூ இலக்கியவாதி Dante கவிதைகளை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அதற்காக இத்தாலியின் ப்ளோரன்ஸ் மானிலத்தில் பல மாதங்கள் ஆய்விற்கு செலவிட்டு இந்த நூலை எழுதியிருப்பதாகவும் தெரிகின்றது. ப்ளோரன்ஸ் ஒரு மிஸ்டிக்கல் நகரம். இவ்வாண்டு 4 நாட்களை அங்கு நான் செலவு செய்தேன். 11 - 15ம் நூற்றாண்டு வரை இத்தாலிக்கு மட்டுமல்லாது ஐரோப்பிய கத்தோலிக்க மதப்பரப்பலுக்கு மையமாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் இதன் சிறப்பு ஈடு செய்ய முடியாதது.நூலைப் பற்றிய மேல் தகவல்களுக்கு...http://www.danbrownofficial.co.uk/?gclid=CMTexOW2orcCFerHtAodK3wA3A டான் ப்ரவ்னின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் ஒன்று..
ஒரு நூலை நேற்று அமேஸோன் பக்கத்தில் வாங்கியிருக்கின்றேன்.சுபா--
Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
..
துன்பம் என்றால் இன்பம்என்றுஉன் அகராதியைசாவகாசமாக புரட்டிப்பார்த்துஅர்த்தம் படித்துக்கொண்டிருக்கும்இறை வடிவே.உயிரை கொஞ்சம் கொஞ்சமாகபிசைந்து தின்னும்பேரருளே

அணமையில் ஜெர்மனிக்கு அருக்காமையில் இருக்கும் ப்ரென்ச் நகரமான ஸ்ட்ராஸ்புர்க் சென்று வந்தேன். கலைகளுக்குப் புகழ் மிக்க இந்த நகரத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் கலைஞர் ஒருவரும் டாண்டேயின் டிவைன் காமெடி நூலில் உள்ள விஷயங்களுக்கு சித்திரங்களைப் படைக்கும் பணியைச் செய்திருக்கின்றார். அவரைப் பற்றியும் அவரது ஒரு கலை படைப்பையும் இந்த பதிவில் சொல்கிறேன்.

ஏறக்குறைய ஒரு வருடமாகப் போகின்றது இந்த இழையைத் தொடங்கி. ஆனாலும் இன்ஃபெர்னோ நூலைப் பற்றி விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன அனெக்கு .. பகிர்ந்து கொள்ள!இன்றும் ஒரு ஓவியம் தான் பதிவில் இடம் பெருகின்றது.

ஃப்ளோரன்ஸ் நகரின் புகழ்மிக்க 14ம் நூற்றாண்டு கவிஞன் டாண்டே பற்றி அவ்வப்போது இந்த இழையில் பதிந்துள்ளேன். இன்ஃபெர்னோ நூலில் குறிப்பிடப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை விவரிப்பது போல சித்திரங்களைப் பற்றியும் சில பதிவுகளின் நான் வழங்கியிருக்கின்றேன். அந்த வரிசையில் இன்று வருவது ஒரு மனித முகமூடி.உலகின் வரலாற்று சிறப்புமிக்க 7 Death Mask களில் ஒன்
தொடரும்..

டான் ப்ரவுன் தனது எல்லா நூல்களையுமே மிக விரிவான ஆராய்ச்சிக்குப் பின்னரே படைப்பது வழக்கம். முந்தைய தனது படைப்புக்களாக வெளிவந்த ஏனைய ஐந்து நூல்களுக்குமே அவர் காட்டிய வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து அதனை தனது நாவலில் இணைக்கும் உத்தியை அவர் இன்ஃபெர்னோவிலும் கடைபிடித்திருக்கின்றார் என்பதில் ஐயமில்லை.

இன்ஃபெர்னோ.. பார்த்து விட்டேன்.
நூலை வாசித்து ரோபர்ட் சியாராவுடன் நானும் பயணித்த நினைவுகள் இருந்ததால் ஒவ்வொரு நிகழ்வுகளும் திரைப்படத்திலும் வருகின்றனவா என என் மனம் ஓடிக்கொண்டிருந்தது.
படத்தை சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள். திரைப்படத்தில் இத்தாலியின் ப்ளோரன்ஸ், வெனிஸ், இஸ்தான்புல் நகரங்களும் அதன் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும் மிக நன்கு காட்டப்படுகின்றன. எனது கட்டுரைத் தொடரில் நான் குறிப்பிட்டிருக்கும் கட்டிடங்கள் அனைத்தையும் காண முடிகின்றது.
சியாராவாக நடித்திருப்பவர் அந்த பாத்திரத்தை சரியாகவே உள்வாங்கிச் செய்திருக்கின்றார். சோப்ரிஸ்ட் உடனான காதல், அதன் விளைவாக அவர் எடுக்கும் முயற்சிகள் ஆகியன தான் படத்தின் மைய நிகழ்வுகள்.
ஆயினும் நாவலில் உள்ள சில முக்கிய நிகழ்வுகள் அதிலும் சியாரா தொடர்பான குறிப்புக்கள் திரைப்படத்தில் இல்லை. அதிலும் இறுதிப் பகுதியைச் சொல்லலாம். நாவலை வாசிக்காதோருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. அதனால் ரசிக்கலாம்.
டான் ப்ரவுன் டாண்டேயை இக்கால இளைஞர்களும் நினைத்துப் பார்க்கச் செய்துவிட்டார், அவரது நரகத்துக்கான பயணமும் இத்தாலியின் 14, 15ம் நூற்றாண்டு வரலாறும் ஐரோப்பிய வரலாற்றில் முக்கிய இடம் பிடிப்பவை. அவை பற்றிய தேடல்களை வாசகர்களுக்குக் கொடுத்த டேன் ப்ரவுன் பாராட்டுதலுக்குறியவர்.
இந்த நாவலை வாசித்து விட்டு இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகர் சென்று ரோபர்ட் லாங்டனும் சியாராவும் செல்லும் ஊர்களெல்லாம் சென்று பார்த்து தகவல் தேடி புகைப்படம் எடுத்து வந்தேன். அவை சுகமான அனுபவங்கள்.
-suba