ஜடாயு சாரைக் கொஞ்ச நாள் முன் கேட்டிருந்தேன், இந்த நூலைப்பற்றி அறிமுகம் செய்யச் சொல்லி. என்ன வேலை மும்முரமோ? குரல் காணவில்லை. அதற்குள் என் கைக்கே இந்த நூல் திணிக்கப் பட்டது. ஆமாம் திணித்தல் என்றுதான் சொல்லவேண்டும். என் பால்ய கால நண்பர் திரு ஜி பி ஸ்ரீநிவாசன் விடாப்ப்டியாக இதைப் படித்தால்தான் உண்டு என்று பிராணனை வாங்கிவிட்டார். பெயரைப் பார்த்ததும் சரி ஏதோ அழுமூஞ்சி புத்தகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வழியாகப் படிக்கத் தொடங்கியதும்தான் வெட்கமாக இருக்கிறது, இவ்வளவு நல்ல நூலை, அதுவும் முக்கியமான நூலை, என் மாதிரி ஆளே இவ்வளவு சிங்க நாதம் பிடித்துத்தான் படிக்கத் தொடங்குகிறேன் என்றால்....ஜி பி எஸ் அடிக்கடி பேசியதிலிருந்து நான் புரிந்துகொண்டது, ‘மேலை நாட்டு கல்விக்கழகங்களில் பல குழப்பவாதிகளும், கலாச்சார நாச வேலைக் காரர்களும் ஊடுருவி உயர்கல்விப் பெறுமானங்கள், துலாக்கோல்கள் எல்லாவற்றையும் ஹிந்துப் பண்பாட்டிற்கு எதிராகப் பிரயோகித்தலையே ரகசிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.’ என்பது. இந்த மாதிரி ஊரெல்லாம் திரண்டு நமக்கு எதிராகவே நிற்கின்றனர் என்பது ஒரு வித ம்னோவியாதி என்ற எண்ணம் எனக்குண்டு. எனவே அவர் சொல்வதைப் பெரிதும் சட்டை செய்வதில்லை. ஆனால் மனிதன் விடாப்பிடியாக என் கையில் இந்த நூலைத் திணித்த பின்னர்தான் மிக உன்னதமாகக் கருதப்படவேண்டிய கல்விக்கழகங்களே எப்படிப் புன்மைகளின் ஊடுருவலுக்குப் பலியாகி விட்டன என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.மற்ற மதங்களைப்பற்றி இப்படித் திரிபு வேலைகளில் யாரும் ஈடுபடுவதில்லை. காரணம், பெரும் பணபலம், ஆள்பலம், உலக ஆட்சி பலம், வன்முறை, பெரும்பாலான அதிகார பீடங்களைக் கைக்குள் வைத்திருத்தல் போன்றவை. ஹிந்து மதம் இன்றும் இத்தகைய குடைகளுக்குள் ஒண்டாமல் வெட்ட வெளியில் வெய்யில் மழை என்று அனைத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஹிந்து மத நூல்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரித்து, மறைத்துப் பழித்து அவதூறு செய்யலாம். மதம் சாராக் கொள்கை, ஹிந்துக்களுடைய ’தம்மைத் திட்டுவோரை முழு சுதந்திரம் அளித்து மாற்றுக்கருத்து விவாதம் என்று அணுகும் நிதானமும், பரந்த மனமும் கொண்டவர்கள்’ என்று சுமத்தப்பட்ட, சுமந்துகொண்ட, சுயமானதும் ஆன முகம். ஏகப்பட்ட நூல்கள், புராணங்கள், தத்துவ நூல்கள், சித்தாந்த நூல்கள், மகான்களின் சரிதங்கள், பெருவாரியான மதத் துணை நூல்கள் என்ற பெரும் பரப்பில் நீந்திக் கரை கண்டவர்களே கிடையாது என்னும் படியான நூல் பெருக்கமும், அதன் கருத்துக்களை அறியாமலேயே பழம் பெருமை பேசும் பெருவாரியான ஹிந்துக்கள், ஒரு வழமையான சமுதாய முறைகளிலிருந்து நவ நாகரிக வாழ்க்கை முறைகளுக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக பொதுமக்களும், பெண் சமுதாயமும் அறிமுகம் ஆன உற்சாகத்தில் மதம் பண்பாடு மரபு வழி விழுமியங்கள் முதலியவற்றை விமரிசனக் கண்கொண்டு அணுகுதல் மட்டுமே அறிவின் கடமை என்று நினைத்தல் -- என்று இன்னோரன்ன பல காரணிகள் இயங்கும் உலகின் பெரும் மக்கட் சுட்டு ஆக்கரமித்திருக்கும் நிலப்பகுதி. இதில் அறிவார்ந்த மீள்பார்வைகளும், உணர்ந்து பயன் கொள்ளும் புனர் செறிவுகளும், உலக பீடங்களில் நீங்கள் போய் அமர்ந்து கொண்டால்தான் தெரியும், எத்தகைய பேதலிக்கச் செய்வதும், வெருவரல் அடையச் செய்வதுமான மகா-- மக்கள் -- அறிவு -- சுய உணர்வு யத்தனம் என்று! பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, கனடா போன்ற நாடுகளின் மொத்த ஜனத்தொகைக் கூட்டம் நமது பாரதத்தின் 1/3 ஜனத்தொகைக்குக் குறைவுதான். எந்த விஷயத்தில் தெரியுமா? ஆங்கில மொழி அறிமுகம் என்ற வகையில். இந்த 1/3 ஜனத்தொகை என்பது இன்னும் அதிகமாகவோ அல்லது இந்த 1/3 ஜனத்தொகையே இன்னும் தீவிரமாகக் கல்வியில் முன்னேறினாலோ உலகில் பேராற்றல் கேந்திரம் என்பது அச்சு மாறி பாரத வர்ஷே பரதக் கண்டே என்று சங்கல்பம் செய்துகொண்டு நம்நாட்டின் பக்கம் வந்துவிடும். ஏற்கனவே அச்சு சிறிது சிறிதாக நகரத் தொடங்கிவிட்டது. அந்த அதிர்ச்சி அலைகள்தான் பல பயங்களைத் தோற்றுவித்திருக்கின்றன அந்நிய சக்திகளுக்கு, உலக ஆட்சிச் சக்தியாளர்களுக்கு. இது காலத்தின் பூதப் பாதப் பெயர்ப்பு என்பது அவர்களுக்கு உறைத்தாலும், முடிந்தமட்டும் எப்படியாவது ஆற்றல் கேந்திர அச்சைத் தக்க வைத்துக்கொள்ளச் செய்யும் முயற்சியாக பல தளங்களில் மறைமுக வேலைகள் நடைபெறுகின்றன.ஒரு நாட்டை அதன் காவியங்களையும், புராணங்களையும், கடவுளரையும் கண்டு உள் வெட்கம் கொள்ளச் செய்துவிடு. பின்பு வெட்டின மரம் தானே சாய்வதுபோல் காத்திருக்க வேண்டியதுதான் பாக்கி. -- இந்த ராஜ தந்திர சூத்திரத்தைத்தான் விதவிதமாக அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த விளக்கம் குறிப்பிடும் நூலில் காணப்படுவதன்று. ஆனால் இது போன்று நெடுக சிந்திக்கவைத்து விட்டது என்னை இந்த நூலில் காணும் பல கட்டுரைகள். எல்லாம் ஏற்கனவே பெரும்பாலும் இணையங்களில் மேட்டில் ஏற்றிவைத்த சரக்குகளைத்தான் நூல் வடிவில் ஆக்கியிருக்கிறார்கள் என்றாலும் ஒருங்கிணைந்த ஓர் ஓர்மை நூல் முழுதும் துலங்க வடிவாக்கம் செய்திருக்கிறார்கள்.இந்த நூலின் தலைப்பை எப்படித் தமிழாக்கம் செய்வது? ‘புனிதங்களின் எல்லைக்குள் புன்மைகளின் ஊடுருவல்’ என்று செய்து பார்த்தேன். ஆனால் புன்மை என்று சாடல் சரியே என்றாலும் விஷயம் அதைவிடச் சுழல் மிக்கது. குறிப்பிட்ட நபர் புன்மையானவராய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெருஞ்சுழலுக்குள் மாட்டி அவருடைய செயல்பாடு வக்கிரம் அடைந்துவிடுகிறது. எனவே அப்படியே மொழி பெயர்க்காமல் ஒலி பெயர்த்துப் போட்டுவிட்டேன். துணைத் தலைப்பு -- அமெரிக்காவில் நடைபெறும் ஹிந்துமதம் பற்றிய ஆய்வுகளைப் பற்றிய ஓர் அலசல்--பதிப்பாளர்கள் -- கிருஷ்ணன் ராமஸ்வாமி, அந்தோனியோ து நிக்கோலா, அதிதி பானர்ஜி ஆகிய மூவர். ரூபா கம்பெனியார் 2007ல் கொண்டுவந்திருக்கின்றனர்.சரி நூலுக்குத் தோற்றுவாய் என்று ஏதேனும் உண்டல்லவா? அதுவும் பலர் கூடி தேரிழுக்கும் இது போன்ற நூலுக்கு. ஆம். வட அமெரிக்க்காவில் பல்கலைக் கழகங்கள் ஹிந்து மதத் தலைப்புகளில் வகுப்புகள், ஆய்வுகள், பட்டங்கள், பாடத்திட்டங்கள் என்று வைத்ததில் புதிய திசைகளில் சிந்தித்தல், உளவியல் ஆய்வுகளைக் கொண்டு புது விளக்கம் காணல், உள்ளே மறைந்திருக்கும் மனித அமைப்பின் அடிமட்டமான வேகங்களே ஹிந்து விழுமியங்களின் உண்மை இயல்பு என்று எப்படியேனும் திரித்து, மறைத்து, சொன்னதையே சொல்லி, அதை சக மதிப்புடைய சான்றாண்மை நிறுவனங்களை விட்டு ஆமோதிக்கச் செய்து உண்மை என்பது போன்ற பெரும் மாயத்தோற்றத்தில், படிக்கும், குறிப்பாக வெளிநாட்டில் தங்கிவிட்ட ஹிந்துக் குடும்பங்களிலிருந்து வரும், மாணவ மாணவியரின் சுய மதிப்பைக் குலைத்தல். இந்த விபரீதப் போக்கைக் கண்டு அதிர்ச்சி. அதன் விளைவாக ஏற்பட்ட கிளர்ச்சி. அது கல்விக்கழகங்களின் நியாய இடங்களைத் தட்டிக்கேட்டு, உதாசீனம் கண்டதால் பின் பத்திரிக்கை, இணையம் என்று விவாதத்திற்கான மையங்கள் விரிந்து ... அந்தப் பட்ட பாடெல்லாம் இப்பொழுது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. ஆய்வுகளில் உண்மை, நடுநிலை என்று இருக்க வேண்டிய கல்விக்கழகங்கள் ஏன் இவ்வாறு மந்திரித்துவிட்ட கோழிபோல் யாரோ மறைமுக மந்திரவாதிகள் கையில் மாட்டிக் கொண்டதுபோல் இயங்க வேண்டியக் காரணம் என்ன? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? படிப்பு என்ற தூய மனித இயக்கம் ஏன் காளிங்கன் மடுவாகி விட்டது? (தொடரும்)
எனது எண்ணங்கள்!
இப்போதே சொல்வதா, இல்லை உங்கள் தொடரை வளரவிட்டு பின் பேசுவதா? என்ற
சிக்கல் இருக்கிறது.
என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறேன்?
மாற்று நோக்கில் பேசுவேன், வழக்கம் போல் ;-)
க.>
2009/10/9 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> உடனேயே பதிலூக்கம் தந்தமைக்கு நன்றி விஜய். நீங்கள், திரு கண்ணன் திரு
> ரெ கா இன்னும் அக்கரைச் சீமையில் வாழும் நண்பர்கள் இதைப் பற்றி
> இன்னும் பல பரிமாணங்களை விவாதிக்க முடியும். பல விதங்களில்
> சிந்திக்க வேண்டிய பிரச்சனை இஃது என்று தோன்றுகிறது.
தேவ்
ஹிந்து என்றால் யார் என்று அடிக்கடி இங்கு வரும் வெளிநாட்டு நண்பர்கள்
கேட்பார்கள். அவர்கள் ஆசியா வந்தவுடன் முதலில் பௌத்தம் அறிமுகமாகும்.
பின் ஹிந்து மதம் பற்றி கேள்விப்படுவார்கள். இவர்களுக்கு பதில் சொல்லிச்
சொல்லி இப்போது ஹிந்து என்றால் யார் என்ற ஒரு சூத்திரம் உருவாகிவருகிறது.
அது என்னவெனில், எவனொருவன் தன்னைக் கிறிஸ்தவனென்றோ, முஸ்லிம் என்றோ,
பௌத்தன் என்றோ, இன்னோரன்ன உலக மதங்களின் பேரில் தன்னை அடையாளப்படுத்திக்
கொள்கிறானோ, அவன் தவிர மற்றவரெல்லாம் ஹிந்துக்கள். இவர்கள் இந்தியப்
பெருவெளியில் மட்டும் வாழ வேண்டுமென்ற நியதி இல்லை.
இதுதான் அர்த்தமுள்ள இந்து (மதம்) என்று எனக்குப்படுகிறது!
நா.கண்ணன்
2009/10/9 devoo <rde...@gmail.com>:
ஆக்கிரமிப்பு ஏன் நடக்கிறது? பயம் உள்ளே இருப்பதால்தான்.
எனது யூத நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள், `எதிரே இருப்பவன் நம்மை மதிய
உணவிற்கு என்று எண்ணியிருப்பானாகில் அவனைக் காலையுணவாக்கிவிடு` என்று ;-)
இது இருப்பியல் சார்ந்த உளவியல் பிரச்சனை. ஏன் இருக்கிறோம் என்று
தெரியவில்லை? ஏன் போகிறோம் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் `வாழ்வு
நிலையற்றது, எனவே வாழும் போதே அனுபவித்துவிடு` எனும் உளவியலே
ஆக்கிரமிப்பிற்குக்காரணம்.
சமகால உலகில் இது சந்தை சார்ந்த ஒரு வியாபார உத்தியாகவும் படுகிறது.
உலகமெல்லாம் கிறிஸ்தவ நாடாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் போப்பின் ஆசை
ஆன்மீகம் சார்ந்தது என்று யாராலும் நம்ப முடியாது. உலகம் ஒரு பெரும்
சந்தையாக மாறும் போது சுரண்டுவோருக்கு வாய்ப்பு வசதிகள் அதிகம்.
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வசதி.
முதலில் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு எதற்கு மாற்ற வேண்டும்?
இது என்ன பண்டமா? பழைய கள்ளை புதிய போத்தலில் போட்டுத்தர? ஆனால், அதுதானே
நடக்கிறது உலகில்.
நேற்று லத்தீன் அமெரிக்க விருந்தாளிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
கொரியாவில் பௌத்தர்கள்தான் அதிகமா? என்று கேட்டார்கள். இல்லை! என்றேன்.
கிறிஸ்தவர்கள் என்று சொன்னபோது நம்பமுடியவில்லை அவர்களால். ஏன்
என்றார்கள். அமெரிக்க பாதிரிகளின் `ஆக்கிரமிப்பு` என்றேன். அவர்களால்
சட்டெனப் புரிந்து கொள்ள முடிந்தது. ஸ்பானிஸ் காடையர்கள் இலத்தின்
அமெரிக்கக் கலாச்சாரங்கள் அத்தனையும் ஒரே வீச்சில் ஒழித்துவிட்டனரே!
16ம் நூற்றாண்டில் ஒரு செவ்விந்தியனை மிருகம் போல் காட்சிப்பொருளாக
ஸ்பானிஷ் அவரசவையில் காட்டியவர்கள்தானே!
உலகின் தொன்மையான கலாச்சாரமாக உலகில் காட்சியளித்துக் கொண்டிருப்பது
`இந்தியக் கலாச்சாரம்` ஒன்றுதான். அதையும் கவுத்துவிட்டால் இந்த
மிஷினரிகளின் வேலை முடிந்தது.
ஆனால் அது முடியாது. ஏனெனில் சநாதன தர்மத்தின் இருப்பு தேவாலயம் (சர்ச்)
சார்ந்ததல்ல. மிக, மிகத் தெளிவான தொலை நோக்குடன் உருவான தர்மம் அது.
இதையும் தாண்டி எதிர்நீச்சல் போடும்.
இன்னும் இருக்கு சொல்ல...
2009/10/9 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> Dear Kannan, no problem. I am not going to write much like a
> series on this. Moreover this topic is more akin to diverse
> dialogues rather than towards any explicating as such. If at all
> any explicating is brought forth it has to be done through
> exchanges back and forth across as many minds as possible. So
> please carry on.
INVADING THE SACRED----------------------------------------(An Analysis of Hinduism Studies in America)EDITORS:-- Krishnan Ramaswamy, Antonio de Nicolas, Aditi Banerjee(pp xix + 545)இந்த நூலை ஒரே கோணத்தில் படித்தல் இயலாது என்றுதான் தோன்றுகிறது. பல நுழைவுகள் உடைய விவாதக் களம் என்றும் சொல்லலாம். இதில் Invading என்பது என்ன? Sacred என்றால் என்ன? படையெடுப்பு என்று கூறலாம் இன்வேடிங் என்பதை. அப்பொழுது மற்றொரு பிரதேசத்தின் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு. சேக்ரட் என்பதை புனிதம் என்பது அவ்வளவு சரியா? உண்மையில் தெய்வத்துக்கு என்று விடப்பட்ட விஷயம்/ ஸ்தலம் என்பது சேக்ரட் என்பதற்குக் கிட்ட வரும் பொருள். அப்பொழுது தெய்வத்திற்கு என்று விடப்பட்ட ஸ்தலம் / விஷயம் என்பதை நோக்கிப் படையெடுத்தல் என்றால் அவ்வாறு படையெடுப்பவர்கள் கையாளும் ஆயுதங்கள் என்ன? ஆக்கிரமிக்கும் வழிமுறைகள் என்ன? ஆக்கிரமிப்பாளர்களின் உள்மனக் கோணல் எத்தகையதாக அமைந்திருக்கிறது, இது போன்ற அத்துமீறல்களை ஊக்குவிப்பதற்கு? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நூலால் பலவிதங்களில் தரப்படுகின்றன.முதலில் கையாளப்படும் ஆயுதங்களில் முக்கியமானது ப்ராய்ட் என்பவரின் உளவியல் கொள்கைகள். க்ரேக்க நாடகங்கள் வடிவாக்கம் நல்கிய ஹெலனியத் தொன்மங்களில் ஒன்றான ‘ஓடிபஸ்’ என்ற கதைப்படிவம், முறைமீறிய உறவுக்கான இச்சைகள் மனிதரின் குழந்தைமை தொட்டே அவர்தம் உளத்தில் புதைந்து விடுகின்றன என்பதைத் தெளிவாக விளக்கப் பயன்படும் கருத்து என்பதை முன்னிறுத்தினார் ப்ரய்ட். இத்தகைய ஓடிபஸ் தனமான, கண்டனத்திற்கு இலக்காகும் முறைபிறழ்ந்த இச்சைகள்தாம் பலவிதங்களில் கடவுள் கருத்து, இலக்கியம், உயர்ந்த விழுமியங்கள் என்று மனிதர் நினைத்துப் போற்றும் பல கருதுகோள்கள் அனைத்திலும் ஊடுருவி வெளிப்படுகின்றன என்பது ப்ராய்டிய அணுகுமுறையின் அடிப்படை.இன்றைய உளவியல் இந்த மாதிரியான ப்ராய்டின் நிரூபிக்கப் பட்டவை போல் புழங்கிவந்த அபிப்ராயங்களைப் பெரிதும் மதித்துப் போற்றுவதில்லை. வெறுமனே உளவியலின் சரித்திரத்தின்பாற்பட்ட வந்தவழித்தடங்கள் என்ற வகைப்பாட்டில் கொண்டுபோய் வைத்துவிட்டுத் தன் போக்கில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது உளவியல் படிப்பு. ஆனால் நூல் குறிப்பிடும் சான்றாண்மையற்ற ஆய்வுப்போலிகள் இந்த வீழ்ந்துபட்ட கருத்தை மற்ற கலாச்சாரங்கள் மேல், இங்கு குறிப்பாக ஹிந்து காலாச்சாரத்தின் மேல் ஏவுவதற்கு ஆயுதமாகப் பயன் படுத்துகிறார்கள்.மற்ற கலாச்சாரங்கள் என்கிறோமே அப்பொழுது இந்த ஆய்வாளர்கள் எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள்? பெரும் ஆய்வு நாற்காலிகளில் அமர்ந்த இவர்களில் பலர் தம்மைக் கிறித்தவர் என்று கூறிக்கொள்கின்றனரா என்றால் சொல்லமுடியாது. மேலை நாட்டு நிறவெறி,-- ’உயர் நாகரிகம் தங்களது, கீழை நாட்டினர் கீழானவர்கள், நாகரிகம் அற்ற மிருகப் பிராயத்தினர், காட்டுமிராண்டிகள், எனவே நாகரிக உலகின் சலுகைகளான பொது நீதி, மதிப்பான அணுகுமுறை, தங்கள் உடைமைகளின் மீதும் கருத்துக்களின் மீதும் பிரத்யேக உரிமை பாராட்டத் தகுதியற்றவர்கள்’ -- இது போன்ற மனநிலை, இவைதான் அவர்களுக்குள் பொதிந்து இயக்குகிறது என்பது நமது பிரமை பிடித்த பார்வையன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது பல சமயங்களில் அவர்களுடைய சொல்லாடல்களும், அவ்ற்றின் தொனியும்.(தொடரும்)
ஜப்பானில் வாழ்ந்த போது ஒரு வீட்டில் இரவுச் சாப்பாட்டு. அவர்கள்
வீட்டில் ஒரு சின்னப்பெண். அவளுக்கு ஒரு கிளி, வீட்டுப்பிராணியாக. அவள்
அதைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது, சும்மா இல்லாமல் என் நண்பன், இன்று
இதை கறிவைத்து சமைக்கப்போகிறோம் என்றான். அந்தப் பெண் அலறாத குறைதான்.
ஏன்? என்று கேட்டது. அவன் மிகச்சாதரணமாகச் சொன்னான், இன்று உங்கள்
வீட்டில் சிக்கன்தானே! சிக்கன் என்றால் கோழி. கோழி என்றால் பறவை. அதுவும்
பறவை, இதுவும் பறவை. அதைத்தின்பது போலத்தான் இதைத்தின்பதுமென்று.
அக்குழந்தைக்கு இந்த logic விளங்கவில்லை. சிக்கன் சூப்பர்மார்க்கெட்டில்
உணவுப்பகுதியில் கிடைக்கிறது. என் பறவை என்னுடன் வீட்டில் இருக்கிறது.
இரண்டிற்கும் சம்மந்தமில்லையென்று.
இந்து மத வாழ்வில் இப்படி ஒன்று சேராத புள்ளிகளாய் நிறைய உண்மைகள்,
இங்கும் அங்குமாக. சின்னப்பிள்ளையில் கேட்டது, பிரசங்கத்தில் கேட்டது,
பாட்டி சொன்னது என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சேதிகள். அதுதான்
இந்து மதமென்று நம்மவருக்கே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்து மதத்திற்கும்
இந்து வாழ்விற்கும் என்ன தொடர்பு என்றறியாத ஒரு இலை மேல் நீர் வாழ்க்கை.
மின்தமிழில் இம்மாதிரி விட்டுப்போன புள்ளிகளை இணைத்து யாராவது கோலம்
போட்டால் அழகு தெரியும்.
கண்ணன்
2009/10/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
.. சிரிப்பதைத் தவிர என்ன செய்வது? ‘படித்தவன்
> சூதும் வாதும் பண்ணினா போவான் போவான் ஐயோவுன்னு போவான்’ என்று
> பாரதியின் உடுக்கை ஒலிக்கிறது. (தொடர்வேன் விடியும் வரை)
>











இந்த நூலில் முன்மொழி(Foreword) எழுதியிருக்கும் Mr S N Balagangadhara , அறிந்தோர், அன்பர்கள் வட்டாரங்களில் அன்பாக ‘பாலு’ என்று அழைக்கப் படுபவர் பெல்ஜியத்தில் பேராசிரியராக இருப்பவர். ஆணித்தரமான கருத்துக்கள் சிலவற்றை விடிவெள்ளி போல் புதிய இந்தியத் தலைமுறைகளுக்குத் தந்திருப்பவர். இவருடைய அருமையான சில கருத்துக்களை நாம் பின்னர் பார்க்க இருக்கிறோம். இந்த முன்மொழியிலேயே ‘பாலு’ முக்கியமான கவன ஈர்ப்பு செய்கிறார்.
* நன்றி திரு ஏ.எம்.ஆர். அவர்களின் கட்டுரையிலிருந்து *
திரு ஏ.எம்.ஆர் பாரத வரலாற்றின் இண்டு இடுக்குகளை நன்கறிந்தவர்;பயண
அனுபவமும்,உலகளாவிய முறையில் பல அரிய தொடர்புகளும் கொண்டவர்.அபூர்வமான
ஆதாரங்களையும் பாதுகாத்து வந்துள்ளார்.கிறிஸ்தவ மிஷனரிகளின்
தந்திரத்தையும் ‘குமுதம் ஜோதிடம்’ வாயிலாகத் தோலுரித்துக்
காட்டியுள்ளார்.தற்போது மிகக் கொடிய வருந்தத்தக்க சூழலில் உள்ளார்;
அவர்தம் கருத்துக்களைப் பெற்று வெளியிட இயலவில்லை.
தேவ்
திரு வெங்கடாசலம் சுப்ரமணியன்,தாங்கள் இவ்வளவு ஊக்கத்துடன் எழுதிவருவது மற்றவர்க்கு ஓர் உற்சாகத்தைத் தருவதாக இருக்கிறது. ஆனால் இந்த இழையோ, அல்லது குறிப்பிட்ட நூலோ மதமாற்றங்களைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, இந்து மதக் கோட்பாடுகள், நூல்கள், கடவுளர்கள் முதலிய துறைகளில் வாழ்வில் உணர்வு பூர்வமாக ஈடிபாடுகொள்வோரின் அனுபவங்களைப் புறந்தள்ளி, அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள், மத இயல் ஆய்வு நிறுவனங்கள் ஆகியன செய்யும் சில போலித்தனங்களைப்பற்றி நமது கவனத்துக்குக் கொண்டுவருகிறது இந்த நூலான Invading the Sacred.தாங்கள் அந்த அணுகுமுறையை நன்கு கவனித்து, தங்களுடைய நெடிய அனுபவத்தின் அடிப்படையில் உங்களது விமரிசனக் கருத்துக்களைக் கொடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.ஆனால் தாங்கள் கூறியது போல மதமாற்றம் என்பது வெளிப்படையான ஒன்று. அதுவும் கவலைப்பட வேண்டிய ஒன்றே. ஆனால் அதைவிட மோசமானது ஹிந்துமதத்தைபற்றி ஹிந்து மதத்தோடு எவ்வித் தொடர்பும் அற்றவர்கள், அதைக்கண்டு உள்ளுர வெறுப்பும், காழ்ப்பும் உள்ளவர்கள், பெரும் விஞ்ஞானி, ஆராய்ச்சி நிபுணர், டாக்டரேட், பெலோஷிப், ஹெட் ஆப் த டிபார்ட்மெண்ட், என்று பல ஹோதாக்களை சம்பாதித்து வைத்துக்கொண்டு அந்தப் போர்வையில் ஹிந்துமதத் தலைப்புகளை எடுத்துக்கொண்டு மிக மோசமானவையாய்ச் சித்திரித்து ஆய்வேடுகள் கொண்டுவருதல். ஒரு நிறுவனத்தில் ஹிந்துமதத்திற்கு என்று நாற்காலி இருந்தால் அங்கு ஹிந்து அல்லாத இதுபோல் வெளிநாட்டுப் போலி ஆய்வாளர்தான் அமர்த்தப்படுகிறார். அல்லது இந்தக் கூட்டம் சொல்வதை அப்படியே மேலெழுத்து இடும் ஹிந்துமதத்தைச் சேர்ந்த பேர்வழிதான் அமர்த்தப் படுகிறார். அதே மற்ற மதங்கள் என்றால் அந்த மதத்தைச் சேர்ந்த நபர்களுக்குத்தான் உரிமை.தாங்கள் தங்கள் வயதையும் பொருட் படுத்தாமல் இந்தத் தொடரில் கவனம் காட்டுகிறீர்கள் என்பதே ஓர் ஆசீர்வாதமாய்க் கருதுகிறேன். மேலும் தங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
//தந்த்ர சாஸ்திரம்,குறிப்பாக வாமாச்சார மார்க்கம்,மக்களின் கவனத்தை
ஈர்த்த ஒன்று.மனித பாலியல் வேகங்களை ஆன்மிகத்தோடு இணைத்தது
அதன் கவர்ச்சிக்குக் காரணம்.ஆனால் தந்த்ர சாஸ்திரங்களிலேயே காமத்தை
ஆன்மிக சாயம் பூசிக் கொடுத்ததாக எந்த ஒரு ரகசியக்
குறிப்பும் காணமுடியாது.
ஏனெனில் முதலில் காமத்தைக் கண்டு நம் நாட்டில் யார்தான் பயந்தார்கள்?
சதுர்வித புருஷார்த்தங்கள் என்றும்,தர்மம்,அர்த்தம்,காமம் என்று
த்ரிவர்க்கம் என்றும் மனித வாழ்வின் உறுதிப்பாடுகளில் ஒன்றாக அன்றோ
ஆரம்ப நாள் தொட்டு காமத்தை நாம் அணுகி வருகிறோம்.
சிறியது,சிறப்பில்லாதது,அல்பம்,அஸ்திரம்,உடலே நான் என்ற
ஜாட்டியத்தை வளர்ப்பது என்ற காரணங்களினால்தான் மோக்ஷம் முக்தி
அடையத் தவிக்கும் முமுக்ஷுவுக்கு அவன் தன் வாழ்விலிருந்து நீக்கிக்
கொள்ள வேண்டிய தடையாக இந்தக் காமத்தை அவன் விஷ்யத்தில் கூறுகிறது.
வாழ்வின் நெடிய பரப்பில் எந்த ஓர் அம்சத்தையும் எள்ளியோ,
அருவருத்தோ, அயிர்த்தோ ஹிந்துமதம் ஒதுக்குவதில்லை ’ஸர்வம் கலு இதம்
ப்ரம்ம’இவையனைத்தும் ப்ரம்மமன்றோ! என்று கண்டு
வியக்கிறது.ஸ்ரீவைஷ்ணவப் பேராசிரியர்கள் கூறுவதுபோல்‘ஈச்வராத்மகம்
ஆகையாலே அனைத்தும் ஆநுகூல்யமே’ஈச்வரன் ஆத்மாவாய்,அனைத்தும் அவன்
சரீரமாய் இயலும் உலகில் எது வெறுக்கத்தக்கது?//
மேற்குறித்த பகுதிகள் Desk Top ஐ Invade செய்து விட்டன.உலக அளவில்
இவ்வுண்மைகள் தெரிய வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
தேவ்
இந்தப் போக்கு மேலை நாட்டு ஆய்வாளர்களிடத்தில் எப்பொழுதும் இப்படியேதானா? ஆய்வுகள் கோணல் பார்வைதானா? என்றால் கடந்த 30 ஆண்டுகளாகத்தான் இந்தப் போக்கு மிகுந்து காணப்படுகிறது. முன்னால் இருந்தவர்களிடத்தில் யாராவது ஒருவர் இருவர் மனக்கோணலுடன் ஆய்வு செய்திருப்பார்.
காலமாக, பால் கோர்ட்ரைட், வெண்டி டொனீகர் போன்ற இந்திய இயல் ஆய்வாளர்கள் கையில் ஆய்வு என்பது பெரும் ஆணவ அதிகார மறைமுக ஊடறுப்புச் சாதனமாகப் போய்விட்டது என்பதை நூல் பல விதங்களில் காட்டுகிறது.அதுவும் வெண்டி டோனீகர் என்ற மாதுவின் ஆராய்ச்சிக்கான வழிகாட்டல்களும், இளைய தலைமுறையினரை முடுக்கிவிடும் விதமும் கல்விக்கும், அறிவுக்கும், உண்மைக்கும் பொருத்தமானதாகவோ, அழகூட்டுவதாகவோ இல்லை என்பது நூலில் நாம் தெரிந்துகொள்ளும் செய்தி.
..கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை தந்திர சாஸ்திரங்கள். ஏனெனில் முதலில் காமத்தைக் கண்டு நம் நாட்டில் யார்தான் பயந்தார்கள்?
சதுர்வித புருஷார்த்தங்கள் என்றும், தர்மம், அர்த்தம், காமம் என்று த்ரிவர்க்கம் என்றும் மனித வாழ்வின் உறுதிப்பாடுகளில் ஒன்றாக அன்றோ ஆரம்ப நாள் தொட்டு காமத்தை நாம் அணுகி வருகிறோம்.
வெறும் மட்டையடியாக மொத்த மனிதர்களையும் ஒரே தலையாக்கி கழுத்தறுக்கும் முட்டாள்தனத்தை ஒரு போதும் ஹிந்து மதம் செய்வதில்லை. அதுமட்டுமில்லை. வாழ்வின் நெடிய பரப்பில் எந்த ஓர் அம்சத்தையும் எள்ளியோ, அருவருத்தோ, அயிர்த்தோ ஹிந்துமதம் ஒதுக்குவதில்லை.
மேலை நாட்டினருக்கு இந்தக் காமம் கொஞ்சம் சீரணித்துக்கொள்ள இயலாத ஒன்று. ஒரு பக்கம் ஆண்பெண் புழங்கு தளத்தில், சமுதாயத்தில் ஒரு நல்ல பக்குவமான, பண்பாட்டு அம்சங்களைப் பேணுகிறது கிரேக்க நாகரிகத்தின் சில கூறுகளைக் கடன் வாங்கிக்கொண்ட மேலை நாகரிகம். chivalry என்ற மனோபாவத்தின் ஒரு நல்ல சாயையும் அதனுள் உண்டு. ஆனால் காமம் என்பதைக் கண்டு மிரளும் பஞ்சைத்தனமும் அதனுள் இருக்கிறது. அதுவும் புனிதம் என்பதையும் காமம் என்பதையும் ஒரு சேர வைத்துக்காண்பதுவா? ஐயய்ய்யொயோ தான். காரணம் puritanic bias அங்கு தியாலஜி வாழ்க்கையைப் பிளவுகள் கண்டு சூறையாடிவிட்டது.
இங்கோ வாழ்க்கையின் முழுமையான பார்வைதான் எந்த சாஸ்திரத்துக்கும் அடிநாதமாக ஓடும் ஸ்வரம். காரணம் இங்கு மனிதன், விலங்கு, பற்வை, ஊர்வன, திரிவன என்று பார்க்காது அனைத்துள்ளும் உடல்வயப்பட்டு இயங்கும் ஜீவன் என்ற பார்வைதான் மூல அச்சு.
மதம் விதிக்கும் நெறிமுறைகள் என்பது வேறு; பூதஞ்சித்தனம் என்னும்
பாசாங்கு வேறு. கர்ம காண்டம் விதியாகவே கூறுகிறது.மண்டன மிச்ரரின்
மனையாள் மறை நெறிகளின் அடிப்படையிலேயே இல்லறம் குறித்து ஆதி சங்கரரிடம்
வினா எழுப்புகிறாள்.அவரும் தப்பித்துச் செல்லவில்லை; சபிக்கவில்லை.
உரிய முறையில் துறவறத்துக்கு மாசு நேராமல் சவாலை எதிர்கொள்கிறார்.
நம் மதத்தில் அதிகாரிக்கேற்ற விதிமுறைகள் என்பதை அரங்கனார் அழகாக
நிறுவியுள்ளார்.
தேவ்
ரங்கன்:
இங்கு பொருந்துகிறதா? இழையுடன் இணைந்து நடக்கிறேனா என்று தெரியவில்லை.
சும்மா, ஒரு மின்னல்.
நேஷனல் ஜியாகிராபிக் 'சரித்திர' சேனலில் யூத மதம் பற்றிய ஆவணம். அதில்
ஆதாம், ஏவாள் பற்றிய யூத கருத்தாக்கம் இதுவரை நான் கேள்விப்படாதது.
ஏவாள், சைதானின் தூண்டுதலால் பாவக்கனியை உண்டதால் பெருநிலையிலிருந்து
கவுளால் தள்ளப்பட்டாள் (ஆதாமுடன்) என்று சொல்கிறது.
ஆனால் யூதம், நாம்தான் 'கடவுளை' நம் தளத்திலிருந்து தள்ளிவிட்டோம்
என்கிறது. மிகவும் பொருள்ள பார்வை இது.
நமது ஒவ்வொரு செய்கையும் இறைவனை நம்மிடம் கிட்டவோ, தூரவோ தள்ளுகிறது.
பிரபஞ்ச காரியங்கள் எல்லாம் மனிதனது நல்ல/தீய செயல்களின்
பிரதிபாலிப்பாகவே உள்ளது எனும் யூதப்பார்வை இந்தியப்பார்வையிலிருந்து
மாறுபட்டதல்ல.
ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல் எங்கோ பிழை! we took a wrong turn!
கண்ணன்
*தம் வாய்ப்பிற்கேற்பப் பயன்படுத்தித் தமக்கு முற்றிலும்
அந்நியமான பண்பாட்டிலும்,அந்நியமான சூழலிலும்,அந்நியமான
காலத்திலும் உண்டான ஹிந்து மதக் கருத்துக்கள் பலவற்றை
தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சித்திரித்துக் காட்ட வசதியான
நியாயப்படுத்துதலாகப் பயன்படுத்துகின்றனர்.*
ஸநாதநக் கருத்துகள் எந்தச் சூழலிலோ, எக்காலத்திலோ ஏற்பட்டிருப்பினும்
மாந்தரின் மனக்கோணலை நேர் செய்வதில் நோக்கமுடையவை.
இதைப்படித்ததும் மனத்தில் ஏற்பட்ட எண்ணம் :
பூமியைப் பாயாகச் சுற்றிக்கொண்டு போன அரக்கன் - நில ஆக்கிரமிப்பு,ஆவண
மோசடிகள்
சித்ரகூடத்தில் நடைபெற்ற ஸ்ரீ ராம-பரத ஸம்வாதம் --- அம்பானி
சகோதரர்களிடையே ஏற்பட்ட பிணக்கு
பிராட்டியின் நூபுரத்தை மட்டும் அடையாளம் காட்டிய இலக்குவன் - அண்ணன்
மனைவியினிடத்தில் தவறாக நடந்துகொண்ட மைத்துனன்
தேவ்
ஜே.கிருஷ்ணமூர்த்தி வேடிக்கையாக ஒரு கதை சொல்வார். இருவர் நடந்து
செல்கின்றனர். வழியில் விலை மதிப்பற்ற ஒரு மாணிக்கக்கல் கிட்டும். ஒருவன்
அதன் அழகில் சொக்கிப்போயிருக்க அடுத்தவன் இதை எப்படி ஒழுங்கு செய்யலாம்?
என யோசித்தானாம்.
புனிதமென்று தெரிந்துவிட்டாலே அதை அப்படியே விட்டு வைக்காமல் ஏதாவது
செய்தாக வேண்டுமென்பது மனித சுபாவம்.
கழகங்கள் கோயிலை நடத்தும் விதத்தை ஆக்கிரமிப்பு என்று சொல்லாமல் என்ன சொல்வது?
பேருண்மைகளை புரிதலின்றி அல்லது வேண்டுமென்றே திருத்தி மலிய வைத்து,
நசித்துப்போக வைப்பது காலம்,காலமாக உலகெங்கும் நடந்து வருவதுதானே.
வெள்ளைக்காரன் புரிந்து செய்கிறானோ, புரியாமல் செய்கிறானோ, இந்த
மண்ணிலேயே, நம் கண்ணெதிரே எத்தனை ஆக்கிரமிப்புகள் நடந்த வண்ணமுள்ளன.
புனிதத்தை கோட்டை கட்டி பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்பார் பரனூர்
பெரியவர். அப்படி சில சம்பிரதாயங்கள் தென்னகத்தில் இருப்பதாகச் சொல்வார்.
அட்சய பாத்திரம் (holy grail) போல் அதை மிகப்பாதுகாப்பாக காலத்தின்
ஆக்கிரமிப்பிலிருந்து காக்கத்தான் எத்தனை முயற்சிகள். துருக்கியர் படை
திருவரங்கத்தை நோக்கி படையெடுக்கும் போது ரங்கனை மடியில் கட்டிக்கொண்டு
காடு, காடாய் அலைந்த பிள்ளை லோகாச்சாரியரும் இன்ன பிற பெரியோரும்தான்
நினைவிற்கு வருகின்றனர்.
அவ்வளவு ஏன் போக வேண்டும்? இதே காஞ்சியில் திருமண் இட்டுச்செல்லும்
அந்தணனை வழி மறித்து நெற்றித்திருமண்ணை நாவால் நக்கி அழிக்கவில்லையா? இது
என்ன உரிமை மீறல்? புனிதத்தின் மீதான தாக்குதல்?
உங்கள் பக்தி இழை கூட இதைத்தான் சொல்லாமல் சொல்கிறது! பக்தியென்றால்
என்னவென்று புரியவில்லையெனில் நாம் செய்வது கூட ஆக்கிரமிப்பாக மாறிவிடும்
அபாயம் உண்டல்லவா?
தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கௌவும்..!
இறுதியில், தருமமே வெல்லும்! ... -(பாரதியார்)
க.>
http://www.youtube.com/watch?v=izzNFCtFyyY&feature=player_embedded
Kannan
ஆமாம், வேலை மும்முரத்தில் கொஞ்ச நாள் இங்கே ரெகுலராக வர முடியவில்லை,
மன்னிக்கவும்.
அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது உங்கள் விமர்சனம். தொடருங்கள்.
ஒரு விஷயம் கவனித்திருக்கலாம். இந்த நூலின் உருவாக்கத்தில் பங்கு
பெற்றவர்களீல் பெரும்பாலர் முறையான ஆய்வாளர்களோ, பேராசிரியர்களோ,
எழுத்தாளர்களோ கூட அல்ல.. ஆயினும் அவர்கள் வாழ்வோடு ஒன்று கலந்து விட்ட
இந்து தர்மம் மீது நடத்தப் படும் தாக்குதலைக் கண்டு உள்ளம் நொந்து,
தங்கள் ஆன்மிக முனைப்பால் இதில் ஈடுபட்டு, ஒன்று சேர்ந்து உழைத்து ஒரு
அருமையான பணியைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் பணி
போற்றுதலுக்குரியது. உலகெங்கும் உள்ள இந்து அறிவியக்கத்தினருக்கு ஒரு
ஆதர்சம்.
On Oct 15, 9:18 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> இந்தப் போக்கு மேலை நாட்டு ஆய்வாளர்களிடத்தில் எப்பொழுதும்
> இப்படியேதானா? ஆய்வுகள் கோணல் பார்வைதானா? என்றால் கடந்த 30
> ஆண்டுகளாகத்தான் இந்தப் போக்கு மிகுந்து காணப்படுகிறது. முன்னால்
> இருந்தவர்களிடத்தில் யாராவது ஒருவர் இருவர் மனக்கோணலுடன் ஆய்வு
> செய்திருப்பார். அல்லது பெரும் அறிஞரே சில பார்வைக்
> கோளாறுகளையும் உணர்ச்சிகளையும் கல்ந்து கட்டி செய்திருப்பார்.
> அவையெல்லாம் மற்ற அறிஞர்களால் விமரிசனம் செய்யப்பட்டு
> வெளிப்படையாகியிருக்கும். எனவே மொத்தத்தில் ஆய்வு ஆரோக்கியமான போக்கு
> உடையதாய் இருக்கும். ஆனால் சமீப காலமாக, பால் கோர்ட்ரைட்,
> வெண்டி டொனீகர் போன்ற இந்திய இயல் ஆய்வாளர்கள் கையில் ஆய்வு
> என்பது பெரும் ஆணவ அதிகார மறைமுக ஊடறுப்புச் சாதனமாகப்
> போய்விட்டது என்பதை நூல் பல விதங்களில் காட்டுகிறது.
> அதுவும் வெண்டி டோனீகர் என்ற மாதுவின் ஆராய்ச்சிக்கான
> வழிகாட்டல்களும், இளைய தலைமுறையினரை முடுக்கிவிடும் விதமும்
> கல்விக்கும், அறிவுக்கும், உண்மைக்கும் பொருத்தமானதாகவோ, அழகூட்டுவதாகவோ
> இல்லை என்பது நூலில் நாம் தெரிந்துகொள்ளும் செய்தி.
>
> தந்த்ர சாஸ்திரம், குறிப்பாக வாமாச்சார மார்க்கம், மக்களின்
> கவனத்தை ஈர்த்த ஒன்று. மனித பாலியல்
> வேகங்களை ஆன்மிகத்தோடு இணைத்தது அதன் கவர்ச்சிக்குக்
> காரணம். ஆனால் தந்த்ர சாஸ்திரங்களிலேயே காமத்தை ஆன்மிக சாயம்
> பூசிக் கொடுத்ததாக எந்த ஒரு ரகசியக் குறிப்பும் காணமுடியாது.
> எந்த ஒரு மனித வேகத்தையும் உள்ளார்ந்த ஆன்மிகத்தை
> வெளிப்படுத்தவும், கவனச் சிதறலில் அலையும் மனித உயிரை எப்பாடு
> பட்டாவது, எந்த வழியிலாவது ஆன்மிக ஞான விழிப்பு பெறச்
> செய்துவிடவும்தான் தந்த்ர சாஸ்திரங்களும் முயல்கின்றன. அந்த
> நோக்கம் இல்லையேல் வெறும் காமத்தை அனுபவிக்கக் கற்றுக்கொடுக்க
> வேண்டியதில்லை தந்திர சாஸ்திரங்கள். ஏனெனில் முதலில் காமத்தைக்
> கண்டு நம் நாட்டில் யார்தான் பயந்தார்கள்? சதுர்வித
> புருஷார்த்தங்கள் என்றும், தர்மம், அர்த்தம், காமம்
> என்று த்ரிவர்க்கம் என்றும் மனித வாழ்வின் உறுதிப்பாடுகளில்
> ஒன்றாக அன்றோ ஆரம்ப நாள் தொட்டு காமத்தை நாம் அணுகி வருகிறோம்.
> நமது மோக்ஷ சாஸ்திரங்களும் காமத்தைக் கண்டு வெறுத்தோ, பயந்தோ,
> அல்லது அருவருத்தோ துறவை உபதேசித்ததில்லை. மனித வாழ்வின் ஒரு
> பெரும் பகுதி அனுபவ உலகை ஆக்கிரமிக்கும் காமத்தை சிறியது,
> சிறப்பில்லாதது, அல்பம், அஸ்திரம், உடலே நான் என்ற ஜாட்டியத்தை
> வளர்ப்பது என்ற காரணங்களினால்தான் மோக்ஷம் முக்தி
> அடையத் தவிக்கும் முமுக்ஷுவுக்கு அவன் தன் வாழ்விலிருந்து
> நீக்கிக் கொள்ள வேண்டிய தடையாக இந்தக் காமத்தை அவன் விஷ்யத்தில்
> கூறுகிறது.
>
> யாரைப் பற்றிக் கூறுகிறோம்? யாருக்கு என்ன நோக்கம்?
> அவருடைய தகுதியும், இலட்சியமும் என்ன? இவற்றைப் பொறுத்தே ஹிந்து
> மதத்தில் எந்த சாஸ்திரமும் பேசும். வெறும் மட்டையடியாக மொத்த
> மனிதர்களையும் ஒரே தலையாக்கி கழுத்தறுக்கும் முட்டாள்தனத்தை ஒரு
> போதும் ஹிந்து மதம் செய்வதில்லை. அதுமட்டுமில்லை. வாழ்வின்
> நெடிய பரப்பில் எந்த ஓர் அம்சத்தையும் எள்ளியோ, அருவருத்தோ,
> அயிர்த்தோ ஹிந்துமதம் ஒதுக்குவதில்லை. ’ஸர்வம் கலு இதம்
> ப்ரம்ம’ இவையனைத்தும் ப்ரம்மமன்றோ! என்று கண்டு
> வியக்கிறது. ஸ்ரீவைஷ்ணவப் பேராசிரியர்கள் கூறுவதுபோல்
> ‘ஈச்வராத்மகம் ஆகையாலே அனைத்தும் ஆநுகூல்யமே’ ஈச்வரன் ஆத்மாவாய்,
> அனைத்தும் அவன் சரீரமாய் இயலும் உலகில் எது வெறுக்கத்தக்கது?
> இந்த பாவனைகளின் அடர்த்தியான சூழலில்தான் தந்த்ர
> சாஸ்திரமும் தனது அணுகுமுறைகளை விவரிக்கிறது. அது
> வாமாச்சாரமோ, தக்ஷிணாச்சாரமோ எதுவானாலும். ஆண் பெண் உறவுக்கான
> பாலியல் குறிப்புகள் அல்ல தந்த்ர சாஸ்திரம். ஆனால் என்ன? வேத
> மார்க்கம் எவற்றை மோக்ஷ நெறியில் தடைகள் என்று
> விலக்குகின்றனவோ அவற்றின் வழியிலேயே சென்று
> மோக்ஷத்திற்கான தாண்டு கணங்களைத் திடீர் விழிப்பில் செயித்துப்
> பார்த்தால் என்ன என்று துணிந்து பார்க்கிறது. (விவேகாநந்தர்)
> நரேன் தந்திர சாஸ்திரத்தின் இதுபோன்ற ஏடாகூடமான வழிமுறைகளைப்
> பற்றி நெடு நேரம் கண்டித்துக் கொண்டிருந்ததைக்
> கேட்டுவிட்டு, ஸ்ரீராமகிருஷ்ணர் ‘சரியப்பா! ஒரு வீடு என்று
> எடுத்துக்கொண்டால் அதற்கு முக்கிய வாசல் வழி
> ...
>
> read more »
ஒரு காலத்தில் ‘நாம்--அவர்கள்’ என்ற பிணக்கு ஆய்வுத்துறையிலும், இலக்கிய ஆக்கங்களிலும் கடும் உளைச்சல் கொடுத்துவந்ததை ஆய்ந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர் எட்வேர்ட் செயித் போன்றவர்கள். இலக்கியங்களே இந்த ‘உள்ளே வெளியே’ சூதாட்டத்திற்கு இரையான கொடுமையை தமது ‘ஓரியண்டாலிஸம்’ (Orientalism) என்ற நூலிலும், ‘கல்சர் அண்ட் இம்பீரியாலிஸம்’ (Culture and Imperialism) என்ற நூலிலும் விளக்கமாக ஆராய்ந்திருக்கிறார் செயித் என்னும் அராபிய கிறித்தவராகப் பிறந்து அமெரிக்கா சென்று குடியேறி பேராசியராகப் பணிபுரிந்தவர். இந்த ‘நாம் -- அவர்கள்’ என்ற பிணக்கு இன்று அமெரிக்கச் சூழ்நிலையில் சில பல்கலைக் கழக வளாகங்களிலேயே வெண்டி டொனீகர் போன்றவர்களின் செயலால் இன்னும் வக்ர முகம் அடைந்திருக்கிறது என்பதை இன்வேடிங் த சேக்ரட் நூலில் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.முதலில் மல்ஹோத்ராவின் Wendy's Child Syndrome என்ற விளக்கக் கருவி மிக முக்கியமானது. இந்த WCS என்பதின் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்த்தால் விஷய்ம் நன்கு சுவை படுகிறது.1)மேலை நாட்டுப் பெண்கள் தங்கள் பாரம்பரியச் சூழலில் தங்களுக்கான இடம் மிகவும் அலட்சியக்கப்பட்ட ஒன்றாய் இருப்பதை உணர்ந்தார்கள். ஆனால் அதுவே ஹிந்து மதப் பண்பாட்டின் குடை நிழலில் ஒதுங்கின பாரம்பரியக் காட்சிகளில் பெண் என்பவளுக்கு, நன்கு முக்கியப் படுத்தப்பட்ட, கவனம் மிக்க இடம் தானாகவே அமைந்திருக்கக் கண்டார்கள். அதனால் முதலில் மிக ஆர்வத்துடனும் மதிப்புடனும் தங்கள் ஆய்வுகளை நடத்தியவர்கள் சிறிது காலத்தின் பிறகு தங்களுடைய உள்ளார்ந்த வாசனைகள் தலைதூக்கவும், ஹிந்துமதச் செழுமைகளை மெதுவாக தங்கள் பண்பாட்டுப் பெண் புனிதங்களின் மீது சுமத்தித் தங்கள் கையோங்கலை ஸ்தாபித்துக்கொள்ளத் தொடங்கி விட்டனர். ஹிந்துமதப் பெண்களின் ஆளுமைச் சித்திரத்தையும் தங்களின் உள்நோக்கங்களுக்குத் தகுந்தவாறு வரையறுக்கத் தொடங்கினர். தலைப்பொட்டு, சேலை, குனிந்த தலை நிமிராமை, கல்லானாலும் கணவன், தியாகச் சித்திரம் என்பன போன்ற கருத்துப்படங்கள் மட்டுமே ஹிந்துப் பெண்களுக்கான ஆமோதிக்கப்பட்ட வரையறை. யதார்த்தமான வாழும் மரபின் பெண்களின் காலத்திற்கேற்ற வளர்ச்சி என்பது இந்த அச்சடித்த உள்நோக்கம் மிகுந்த வலியுறுத்தும் வரையறையின் புறமான விபரீதம் என்று தீர்ப்புணர்த்தும் ஒரு அபிப்ப்ராயச் சூழலை பரவவிட்டனர்.(இந்தச் சித்திரத்தில் பல அம்சங்கள் நாமே ஏற்கனவே பெண்ணின் விழுமியங்களாகப் பேணும் கருத்துக்கள்தானே என்று தோன்றும். ஆனால் நமது வாழும் மரபில் காலத்தோடு ஒட்டி வளர்கின்ற வளர்ச்சிக்கும் ஒரு சாத்தியத் திறவு கூடவே இருக்கிறது. நாம் சீதையை மட்டும் ஹிந்துப்பெண்ணின் சித்திரத்தில் காண்பதில்லை. நமது பார்வை ஸர்வதோமுகமானது. சீதையை வணங்கும் அதே நேரத்தில் திரௌபதியையும் நாம் கற்புக்கரசியாய்ப் பார்க்கிறோம். விழுந்த பழம் ஒட்டிக்கொள்வது ஒரு பெண் தன் மனத்தைத் திறந்து சொல்லத் தரப்படும் வாய்ப்பில், அஞ்சாது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறாள், அந்த அச்சமின்மையை சுற்றியிருக்கும் சமூகம் இயல்பாக எடுத்துக்கொள்கிறது என்றும் பார்க்கிறோம். அதே நேரத்தில் கலயாணமாகாத பெண் தன் வரனைத் தானே தீர்மானிப்பது மட்டுமன்று, அவன் தலைவிதியையும் தான் மாற்றி எழுத முடியும் என்பதை நிறுவுகிறாள் என்ற விழுமியத்தை சாவித்திரியிடம் பார்க்கிறோம். அநசூயையின் சித்திரம் ஒருபக்கம். அகல்யாவின் சித்திரம், நளாயினியின் சித்திரம், கண்ணகியின் சித்திரம், இந்திரனின் மகன் ஜயந்தனின் சம்பந்தமான கதைப் பின்னணியுடன் தரப்படும் மாதவி மணிமேகலை சித்திரம் ஒருபக்கம். தான் பெறாத குழந்தைக்கு முலை சுரந்த பெருந்தாயான யசோதை, தான் ஈன்ற மகவுகளைக் கங்கைக்கு இரையாக்கிய ஊர்வசி, புருஷகார பூதை என்று ஸ்ரீவைஷ்ணவச் சான்றோர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீமஹாலக்ஷ்மி,ஸ்ரீமஹாவிஷ்ணுவின் யோகநித்ரா என்று கொண்டாடப்படும் சண்டிகா, ரஜபுத்ரப் பெண்ணரசிகள், கணவனுக்குச் சமமாக அரியணை வீற்று அரசில் பங்கெடுத்த சோழ, சேர, பாண்டிய குல அரசிகள் --- நமது பெண்மையைப்பற்றிய சித்திரஙக்ள் எண்ணத்தொலையாத முகங்களை உடையன. வரையறைக்கு இறாய்க்கும் இந்த பன்முக விழுமியப்பாட்டைப் புரிந்துகொள்வது சற்று கடினம். அதுவும் காலக் கோளாறுகளால் சில காலமாய் நாம் பெண்மைக்கு நமது மரபிற்கும் ஒவ்வாத முறையில் இழைத்திருக்கும் அநீதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் புரிந்துகொள்வது இன்னும் சற்றுக் கடினம். கருத்துகளின் நுணுக்கப் பெருக்கம், காலத்தின் கொடுமை, இதை எதையுமே உணராத நம்மில் பலரின் அறியாமை இவைதான் இந்த மேலைநாட்டுப் பொறுப்பற்ற சிலரின் விஷமங்களுக்கு ஊக்கமளிக்கிற அடித்தளம்.)வெண்டிக் கூட்டம் என்று சொல்லத்தக்கவர்கள், அதிலும் பெண்கள் இந்த மாதிரியான ஹிந்துவின் பெண்மையைப் பற்றிய விழுமியச் செறிவைத் தங்கள் உள்நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதாவது தங்கள் சொந்த இனத்தில் தங்களுக்கு மறுக்கப்பட்ட வேட்கைகளையும், இஷ்டப்படியான சுயசரிதப் போக்குகளையும் ஹிந்துக் கடவுட் பெண்களின் மீதும், தேவியரின் மீதும் சுமத்தி அதற்குத் தகுந்தாற்போல் விளக்கம் கூற முற்படுகின்றனர். பல விழுமியங்கள் ஒன்றுக்கொன்று உள்தாங்கும் ஒரு மரபிலிருந்து ஒற்றைப்பட்டையை உருவி எடுத்து தங்கள் கற்பனைகளையும், தீரா வேட்கைகளையும் அதற்குள் புகுத்தி, பின்னர் அதுதான் மூல மரபிலும் இருக்கிறது, அவ்வாறு இல்லாது போனாலும் தங்கள் திரிபு வேலைக்கேற்பத்தான் மூல பாடங்களையே அர்த்தம் செய்யவேண்டும் என்ற போக்கு இது WCS என்பதில் ஒரு பிரதான அம்சம். (தொட் அரும்)
----- Original Message -----From: srirangammohanarangan vSent: Sunday, November 01, 2009 6:32 PMSubject: [MinTamil] Re: ”இன்வேடிங் த சேக்ரட்” -- ஒரு நூல் அறிமுகம்நன்றி ஸ்வாமி. ஒருவேளை இந்தச் சொல்லின் பொருள் தெரியாமல் சிலர் சங்கடப் படலாம். சொல்லிவிடுகிறேன்.ஸர்வதோமுகம் -- அனைத்துப் பக்கமும் பார்வை கொண்டது. multifaceted, multifacing அதாவது ஒருவிதத்தில்தான் பொருள் கூற முடியும் என்பது இன்றி பலப்பல விதங்களில் பொருள் தரும் சாத்தியம் கொண்டது.
வஸுக்கள் - சந்தநு - கங்கை : கங்கை ஏழு குழந்தைகளை ஆற்றில் எரிவது
இவர்கள் தொடர்பான வரலாற்றில்.
கைகேயியின் தாய் கணவனின் தலை வெடித்தாலும் சரி என்று எறும்புகள்
பேசிக்கொண்டதை அறிவதில் ஆர்வமுள்ளவளாய் இருந்தாள்.
* பல விழுமியங்கள் ஒன்றுக்கொன்று உள்தாங்கும் ஒரு மரபிலிருந்து
ஒற்றைப்பட்டையை உருவி எடுத்து தங்கள் கற்பனைகளையும்,தீராவேட்கைகளையும்
அதற்குள் புகுத்தி, பின்னர் அதுதான் மூல மரபிலும்
இருக்கிறது,அவ்வாறு இல்லாது போனாலும் தங்கள் திரிபு வேலைக்கேற்பத்தான்
மூல பாடங்களையே அர்த்தம் செய்யவேண்டும் என்ற போக்கு இது WCS
என்பதில் ஒரு பிரதான அம்சம்*
இத்தகைய அடாத செயல்களுக்கு முடிவு காண்பதெப்படி ?
தேவ்
நதிகள் அனைவரும் வருண தேவனின் மனைவியர்; வருணன் ‘மஹாபிஷக்’என்னும்
மன்னனாகப் பிறக்கிறான்.ப்ரம்மலோகத்தில் மேலாடை சற்று விலகிய நிலையில்
நின்ற கங்கா தேவியின்பால் அவன் பார்வை செல்கிறது.ப்ரம்ம தேவர் இருவரையும்
மானுடராய்ப் பிறக்கச் செய்கிறார்.மஹாபிஷக்கின் மறு பிறவி சந்தநு;வாசனை
தொடர்கிறது.சந்தநு வருணனின் அம்சம்;சாதாரண மானுடன் அல்லன்.ஆதி பர்வத்தில்
விரிவு காணலாம்.
மஹாபாரதப் பாத்திரங்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள்.
தேவ்
*விடாமல் விரட்டுகிறீர்.*
க்ஷமிக்கணும்.
அப்படியெல்லாம் இதுவரை யாரையும் செய்ததில்லை அண்ணா,
அவ்வப்போது கருத்துச் சொல்லவில்லை என்றால் கோஷ்டியில்
‘ஸம்பாஷணைக்கே அர்த்தம் இல்லை’ என்று தேவரீர் சொன்ன நினைவு.
தேவ்
WCS -Wendy's Child Syndrome என்ற வார்த்தையை எப்படி மல்ஹோத்ரா கையாளுகிறார்? ஜெப்ரி க்ரைபல் Kali's Child என்று நூல் எழுதினாரா? சரி இப்படி எழுதுகின்ற இவர்கள் மூலம் இயக்கும் கருத்துச் சூழ்நிலை யாருடையது? அந்த நபருடைய ஊக்கம், தாக்கம் இவற்றால்தானே இந்தக் கல்விப்பரம்பரை இப்படி அலங்கோல ஆய்வுகளில் ஈடுபடுகிறது. எனவே இதுவே ஒருவித உளவியல் சூன்யம் போல்தானே செயல்படுகிறது. அதன் பாதிப்பில் வந்தவர்கள் எல்லாம் ஒரே அபஸ்வரமாகப் பாடிக்கொண்டு. இந்தத் திருப்பித் திருப்பி உந்தித் தள்ளும் பழக்கச் சுழலை syndrome என்றால் இது வெண்டிக்கொடுக்கு syndrome அல்லவா? (கொடுக்கு -- மகன்).இவ்வாறு ஒருவித கேலியாகத்தான் மல்ஹோத்ரா இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அது மிகவும் குறிப்புணர்த்தும் பெயராகவும் மாறிவிட்டது.இந்த WCS இன் தாத்பர்யங்களாக மல்ஹோத்ரா குறிப்பிடுபவை:1)இந்த ஆய்வாளர்கள் பலபேருக்கு ஒரு மரபின் உள்ளாழங்களை அதன் நளினம் அறிந்து பயன் கொள்ளத்தக்க பண்பாட்டுச் சூழலைப்பற்றிய அறிவோ, பிரதேச மொழியறிவோ, மொழியாளுமையில் பண்பாட்டுக் கூறுகள் நடத்தும் செறிவான பொருள் தரங்கள் பற்றிய சாதாரண தெரிவோ எதுவுமே இருப்பதில்லை. எனவே அவர்களால் அந்தப் பிரதேச மொழியினராகிய அறிஞர்களின் விளக்கத்தை மிஞ்சுகிற அளவிற்கு யோசிக்கமுடிவதில்லை. ஆனால் அவ்வாறு தாங்கள் எடுத்த எடுப்பிலேயே மிஞ்சிப் போய்விடுவதாக மனப்பால் குடிக்கின்றனர்.2) ஒரு மரபைச் சார்ந்த உள் தேசிகர்கள் இவர்களின் கலந்துரையாடலிலும், விவாதங்களிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை. காரணம் பயம். கட்டி எழுப்பப்படும் கோணல் சித்திரங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும் வாய்ப்பு அதிகம் அன்றோ! அப்படியே உள்ளே அனுமதித்தாலும் அவர்களுக்கான அந்தஸ்து ’விவரம் தெரிவிக்கும் ஊரான்’ என்பதே ஆகும்.3) துறை சார்ந்த கருவிச் சொற்கள் கர்ம சிரத்தையாகத் தாறுமாறாக மொழிபெயர்க்கப்பட்டு, அலட்சியமான விதங்களில் கையாளப்பட்டு, எல்லா சொற்களும் கூடியவரையில் அவற்றின் அடிமட்டமான பொருளிலேயே வலுக்கட்டாயமாகப் பொருத்திவைக்கப் படுகின்றன. (இன்னும்)
On 11/3/09, vj kumar <vj.ep...@gmail.com> wrote:
சென்ற வாரம் நண்பருடன் ஒரு கார சார வாக்கு வாதம்.
அப்படியா, நண்பரே , நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா. எனக்கு நீங்கள் விடை அளிக்க வேண்டாம், உங்களுக்கே நீங்கள் விடை அளித்து விட்டு பின்னர் நீங்கள் என்னை என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கள் என்று இந்த கேள்விகளை கேட்டேன்.
1. கடந்த மூன்று மாதங்களில், எத்தனை முறை நீங்கள் உங்கள் வழிப்பாட்டு தளத்திற்கு சென்றீர்கள்.
2. சென்ற ஒரு வருடத்தில். உங்கள் சமய நூல்களை நீங்கள் எத்தனை முறை படித்தீர்கள்.
3. உங்கள் சமயம் தழைக்க வழிவகுத்த இருபது ஞானிகளின் பெயர் மற்றும் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு தெரியுமா.
4. உங்கள் சமய நூல்கள், பாடல்கள், ஸ்லோகங்கள் - எத்தனை உங்களால் அவற்றை பார்க்காமல் ஒப்பிக்க முடியும்.
5. சென்ற ஆண்டு உங்கள் ஆண்டு வருமானத்தில் எத்தனை சதவிகியிதம் தருமம் செய்தீர்கள்.
6. பணம் செலவழிக்க வில்லை என்றால், உங்கள் உடல் உழைப்பை சமுதாயப் பணியாக ஏதாவது செய்தீர்களா.
இந்த கேள்வியயை கேட்ட பிறகு....வாதம் தொடரும்.
வாதம் தொடர்கிறதோ இல்லையோ பிடிவாதம் தளரும். நல்ல கேள்விகள்தான். ஆனால் ஹிந்துக்களை நோக்கித்தான் பரந்தமனப்பான்மைக்கான உபதேசம் நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத்தான் அது பொதுவாக தேவையில்லாத ஒன்று. பரந்தமனப்பான்மையா? அப்படீன்னா என்ன என்று இருக்கும் மற்றவர்களுக்கு அந்த உபதேசம் செய்யப்படுவதில்லை. மாறாக ‘அவர்கள் உணர்ச்சிகளை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று மறுபடியும் நமக்கேதான் உபதேசம் செய்யப்படுகிறது. :--))-------------------------------------*** ஒரு செய்தி --இங்கு நாம் எழுதும் நூல் விமரிசனத்தை தமிழ் ஹிந்து .காம் தளத்தார் அவர்கள் தளத்திலும் இன்று வெளியிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு கட்டுரை வடிவில் அங்கு மேலும் வரக்கூடிய பின்னூட்டங்களோடு படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.நல்ல விஷயத்தை நாற்திசையிலும் பரவ ஊக்கம் காட்டிய ஜடாயு சாருக்கு நன்றி.
இத்துணை அளவும் நாம் மாற்றார் நம்முடைய கலாச்சாரத்தில், மதக் கருதுகோள்களில், தெய்விக உருவங்கள், புராணச் சித்திரங்கள், நம் உளம் கெழு வாழ்வின் ஊற்றாய்த் திகழும் முனிவரர்களின் வாழ்க்கை வரலாறுகள் இவற்றையெல்லாம் எப்படி அணுகத் தெரியாமல் அணுகி குழப்புகிறார்கள் என்று பார்த்தோம். அணுகு முறை தெரிந்தும் உள்நோக்கத்தோடு செய்யும் விஷமத்தனங்களும் என்ன என்றும் பார்த்தோம். ஆனால் இவை அத்தனைக்கும் காரணம் அவர்கள்தாமா? முழுப்பழியும் அவர்களின் வாசலில்தான் விழுகிறதா? இந்தக் கேள்வியை நாம் வேண்டுமென்றேதான் இவ்வளவு கடந்தபின்னர் இப்பொழுது எழுப்புகிறோம். ஆனால் நூலோ மிக யதார்த்தமாக எடுத்த எடுப்பிலேயே முதல் அத்யாயத்திலேயே கேட்டுவிடுகிறது.(பக் 6)ஒவ்வொரு மதத்திற்கும் அதனதன் நாட்டில் தேச பண்டிதர்களால் ஆய்வு நடத்தப்படும் அமைப்பு இருக்கிறது. யூத கிறித்தவ மரபுகளா அந்த நம்பிக்கையாளர்களில் பண்டிதர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளைப்பற்றி படிப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கு ஹிந்துமதம் என்பதைப்பற்றிப் பேசாமல் இருப்பதுதான் மதச்சார்பற்ற தன்மை என்பது போன்ற மூளைச் சலவையில் அறிவுஜீவிகளின் கூட்டம் சிக்கித் தவிக்கிறது. பல பல்கலைக கழகங்களிலும் மத ஆய்வுகள் என்பதற்கே ஆஸனங்கள் உண்டா என்பதே சந்தேகம்தான். ஸ்ரீவைஷ்ணவம் பற்றியோ, சைவம் பற்றியோ, சாக்தம், சமணம், பௌத்தம் இவைபற்றியோ ஒரு ஹிந்து படிக்க வேண்டும் என்றால் மரபு ரீதியான சாலைகளுக்கோ, மடங்களுக்கோதான் போயாக வேண்டும். கல்விக் கழகங்களின் முக்கிய பாட்டையில், மதக்கல்வி என்பதே மூடநம்பிக்கை, மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியது, மதச் சண்டைகளை ஏற்படுத்தக் கூடியது என்ற அபிப்ராய மூட்டத்தில், மதங்களைப் பற்றிப் படித்தல் கைகழுவப் படுகிறது. எனவே விஞ்ஞானம், தொழில், தகவல் நுட்பம் என்பவற்றில் எல்லாம் சிறந்த அறிவாளிகளை ஏற்படுத்தும் நாட்டில் மதம் என்பதற்கு மட்டும் வெளிநாடுகளுக்குத் தான் போயாக வேண்டும் என்ற நிலைமை ஞானத்திலே பர மோனத்திலே உயர் நாடான தேசத்தில்!.In other words, unlike all other major world religions, Hinduism does not have its own home team, by which we mean a committed group of academic scholars who are both practitioners of the faith and well- respected in the academy at the highest levels. (pp 7)அமெரிக்காவில் போய் கோவில் கட்டுகிறார்கள், ஆலயம் ஏற்படுத்துகிறார்கள்.ஆனால் தங்கள் பண்பாட்டைப் பற்றியும்,மதங்களைப் பற்றியும் ஆன பொது அபிப்ராயத்தை, பொதுஜனத்திற்கான விளக்கத்தை, மற்ற உலக மதங்களை ஒப்பிட்டால், பொது ஊடகங்களிலும், கலாசாலைகளிலும் அந்நிய நாடுகளில் ஏற்படுத்தத் தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம். மேலை நாட்டார் பெரிய மனது பண்ணி இவர்களைப்பற்றி ஆக்கபூர்வமாக எழுதினால்தான் உண்டு என்ற நிலை. இதனால் கண்டவர்களும் வாய்க்கு வந்தபடி நம்மைப் பற்றி உளறியதெல்லாம் நம்மைச் சித்திரிக்கும் விளக்கங்களாக ஆகி, நமது குழந்தைகள் அங்கேயே பிறந்து, அங்குள்ள கல்விக்கழகங்களில் படிக்கப் போகும் போது தங்களைப் பற்றிய எள்ளலான சூழ்நிலைகளில் தாம் இருப்பதைக் கண்டு மனம் கவல்கின்றனர். தங்களுடைய அடையாளங்களையே சொந்தம் கொண்டாட மனம் அஞ்சுகின்றனர். வீட்டிற்கு வந்து தம் பெற்றோர் இதுவரை தங்களுடைய பெரும் பண்பாடு என்று பீத்திக் கொண்டதெல்லாம் தங்களுடைய அன்றாட அவமானக் காரணங்கள் என்று அந்நியப் படுகின்றனர்.இந்தத் தருணத்தில், இந்தத் தருணத்திலாவது நாம் ஒன்றை நம் வரலாற்றில் உணர்ந்துவிடுவது நல்லது. அமெரிக்க நாட்டில் நடக்கும் இது போன்ற அவஸ்தைகள், ஹிந்துக்களால் அனுபவிக்கப் படுவது இது முதன் முறையன்று. ஹிந்துவின் நெடிய வரலாற்றில் அவனுடைய வாழிடமே அவனுக்கு அந்நியப்படுத்தப்பட்டு, அவனுடைய புராணங்களும், வேதங்களும், பக்தி நூல்களும், அனுஷ்டானங்களும், கடவுளரும் ஹிந்துவுக்கு எதிரான கருத்தும், சநாதன தர்மத்துக்குப் புறம்பான நெறிகளும் கொண்ட கூட்டத்தார் பலரால் பல காலங்களில் கையகப்படுத்தப்பட்டு கீழான பல கேலிச் சித்திரங்களையே மூலப்பனுவல்களிலும் நுழைத்துச் செய்த சில்மிஷங்கள் ஏராளம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் ஓர் அருமையான கருத்தைக் கூறும். அதாவது பிரமாணம் என்றால் சாஸ்திர நூல்கள், பிரமேயம் என்றால் கடவுளர், கோவில்கள். ஹிந்துவுக்கு என்றும் பிரமாண ரக்ஷணமும், பிரமேய ரக்ஷணமும் பெரும் சவால்களுக்கிடையில்தான் நடந்தேறி வந்திருக்கின்றன. ஆனால் பலகாலங்களில் அவனுக்கு ஹிந்து என்ற பெயருக்குப் பதில் வேறு பெயர்கள் வழங்கின என்பதுதான் வித்யாசம். பிரமாண ரக்ஷணமும், பிரமேய ரக்ஷணமும் ஒவ்வொரு ஹிந்துவின் கடமை என்று கூறும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.பிரமாணத்தை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்த அசுரனின் கதையும், பிரமேயங்களுக்கு அவ்வப்பொழுது ஊறு விளைத்தவர்களின் கதையும் நமக்குத் தெரிந்ததுதானே. ஹிந்து முற்றிலும் தனக்கு எதிரான, தன் வாழிடத்தையே ஆக்கிரமித்த அரசு சக்திகளுடன் ஓங்கிய மத சக்திகளான சமணம் பௌத்தம் ஆகிய உள்நாட்டு விமரிசன சக்திகளையும் கடந்தே, உள்வாங்கியே, செரித்தே வந்திருக்கிறான் என்பதை அவனுடைய புராணங்கள், இதிகாச மாற்றுப் பிரதிகள், எதிர்ப்பிரதிகள் இவற்றின் பெருக்கமே காட்டுகிறது அன்றோ! இந்த விமரிசன கல்மஷம் வைஷ்ணவம் சைவம் ஆகிய ஊக்கமுடையோர் மத்தியிலும் தலை காட்டியது என்பது நம்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி மூலம் அறியக் கிடைக்கிறது.இறையிலி நிலம் தொடர்பாக ஒரு கிராமத்தில் வந்திருந்த அரசு அதிகாரியிடம் பார்க்கச் சென்ற இடத்தில் ஒரு சைவர் நம்பிள்ளையிடம் வந்து ‘ஐயா! தாங்கள் தமிழில் மிகவும் துறைபோயவர் என்று கேள்வி. இந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்ல வேண்டும் என்று ‘அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறானார்க்கே’ எனற பாடலைக் காட்டிக் கேட்டார். நம்பிள்ளைக்குப் புரிந்தது. ஏதோ புராணங்களை வைத்துக் கேலிச் சித்திரம் உருவாக்கப் படுகிறது என்று. தாம் அதற்கு உரியவர் இல்லை, தம்முடைய சம்பிரதாயம் வேறு என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். நபர் விடுவதாக இல்லை. (ஒன்றும் இல்லை இதற்குப் பொருள் சொன்னால் ‘உங்க சாமி எங்க சாமிக்குப் பொண்டாட்டிதானே, ஹய் ஹய்’ என்ற எள்ளலுக்குக்கான ’வெண்டித்தனம்’.) நம்பிள்ளை நினைத்திருந்தால் அவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எள்ளலில் ஈடிபட்டிருக்கலாம். ஆனால் அவர் கூறிய பதில் ஒவ்வொரு ஹிந்துவும் என்றென்றைக்கும் மனத்தில் கொள்ள வேண்டிய பதிலாக அமைந்துவிட்டது.‘அப்பா! நீ ஒரு தெய்வத்தை வணங்குகிறாய் என்றால் அதற்கு அனைத்து உயர்குணங்களையும் சாற்றிப் போற்ற வேண்டுமே அல்லாது இழிவு கற்பிக்கும் அம்சங்களைச் சொல்லக் கூடாது. ஒரு புருஷன் ஸ்திரீ வேஷத்தில் வந்தால் அவனைக் கண்டு மற்றொரு புருஷனே மயங்கினால் அதுவே நகைப்பிற்கிடமாகும். அவ்வாறிருக்க, புருஷோத்தமன் ஸ்த்ரீ வேஷமிட்டு வந்தால் அதை நீ உயர்ந்த பரதெய்வம் என்று நினைத்துக் கும்பிடும் கடவுள் உண்மை என்று மயங்கிச் சென்றது என்று நீ கூறுவது அந்தத் தெய்வத்திற்கு எள்ளளவும் உயர்வைச் சொல்லாதே. இப்படியெல்லாம் கதை கட்டினவன் பிரமாணம் அற்றவன் என்று நீ அலட்சியப்படுத்தி போகவேண்டியதுதான் உன் பக்திக்கே நீ காட்டும் மரியாதை’ என்றார்.எனவே நமது முன்னோர்களும், ரிஷிகளும், யோகிகளும் தத்வங்களை உள்பொதிந்து பல கதைகளை உருவகமாக ஆன்மிக நிலைகளைச் சித்திரிக்கக் கூறியிருக்கின்றனர் என்பது ஒருபுறம் உண்மையேயாயினும் நடுவில் நாம் தாண்டி வந்த எதிர்பிரச்சாரக் காலங்களில் ஏற்பட்ட இழிவுபடுத்தும் இடைச்செருகல்களும் கலந்துள்ளன. இதை நாம் கவனத்துடன் ஆராய்ந்து களைய வேண்டும். இந்நிலை நாம் மேற்கூறிய Home Team Scholars நன்கு கிளர்ந்தால்தான் உருவாகும். அத்தகைய ஹோம் டீம் நம்முடைய சநாதன தர்மத்திலேயே பழங்காலத்திலும் ஏற்பட்டதுண்டு. ‘ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யச புனப்புன:| இதம் ஏகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணோ ஹரி:’ ---‘அனைத்து சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் விசாரித்து, ஆலோசித்துப் பார்த்ததில் இந்த ஒன்றே நிச்சயப் படுகிறது--- த்யானிக்கப் படவேண்டியது நாராயணராகிய ஹரி’ என்ற ச்லோகமே அத்தாட்சியன்றோ. அனைவரது நித்ய பாராயணத்தில் இருப்பது அன்றோ இது! நாராயணரைச் சொல்லியிருக்கிறதே அப்பொழுது வைஷ்ணவமா சைவமா என்ற நோக்கு வேண்டாம். அது இல்லை இங்கு முக்கியமானது. சாஸ்திரங்களை நமது முன்னோர் மீண்டும் மீண்டும் ஏன் ஆராய வேண்டும்? ஏன் விசாரிக்க வேண்டும்? பிறகு இதுதான் கடைந்தெடுத்த முடிவு என்று ஏன் நிர்தாரணம் செய்ய வேண்டும்? ஹோம் டீம் என்பதின் இயக்கம் இங்கு பல காலங்களில் தெளிவையும், தேற்றத்தையும் நல்க வேண்டி இயங்கி வந்திருக்கிறது என்பதுதான் மனம் கொள்ள வேண்டிய விஷயம்.இன்று ஹிந்து மதம் என்பதற்கே இத்தகைய Home Team அறிஞர்கள் மிகவும் அவசியம் என்பதை நூல் கவனப் படுத்துகிறது. (தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
இப்போதுதான் உள்நுழைய மனம் ஆசைப்படுகிறது. காரணம் எனது 20 வருட வெளி உலக
வாழ்க்கையில் ஹிந்து மதத்தைப் பற்றித்தூற்றிப்பேசிய ஒருவரைக் கூட நான்
காணாததுதான். எங்கு சென்றாலும் எனக்கு மரியாதை என் மதத்தால் ஏற்பட்டு
இருக்கிறது என்பதே உண்மை.
ஆனால், நான் ஹிந்து என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டது நமது தமிழர்களாலே,
இலக்கிய சந்திப்புக்களில்தான். கழக இயக்கங்களின் கண்மூடித்தனமான
தாக்குதலால் எனது மூத்த சமுதாயம் நிலைகுலைந்து போனதை செவிவழிச் செய்தியாக
பிள்ளைப்பிராயத்தில் கேட்டதுண்டு. நான் பலமுறை எழுதியது போல்
திருப்புவனம் சிவன் கோயில் சுவரில், `கடவுளை நம்புகிறவன் முட்டாள்` எனும்
சுப்ரபாதத்துடன்தான் எழுந்து பள்ளிக்குப் போவது வழக்கம்.
நமது தமிழ் இந்து மரபு பள்ளிகளில், கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட
வேண்டும். இதற்கென தனித்தனி துறைகள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில்
ஏற்படவேண்டும். பிரமாண ரக்ஷணமும், பிரமேய ரக்ஷணமும் கட்டாயம் செய்யப்பட
வேண்டிய ஒன்று.
ஆனால் நம் மரபிற்கு, சம்பிரதாயங்களுக்கு ஏற்பட்டுள்ள இடற்பாடுகளால் நம்
மரபைப் பேணுபவரும், கல்வி கேள்விகளில் தேர்தவரும் இக்கல்வி நிலையங்களில்
வேலை பார்க்க வேண்டும் எனும் ஆசை எப்படி நடைபெறப்போகிறது என்பதே கேள்வி?
நரசய்யா அவர்களின் ஊழல் பற்றிய மடலைக் கவனித்துக் கொள்க. அர்ச்சகரே
கோயில் சிலையை விற்கும் நிலை தமிழகத்தில். இத்தனை நூற்றாண்டு தமிழ்ச் சமய
வாழ்வில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள இழிவு போல் இதுவரை
ஏற்பட்டுள்ளதா என்பதே என் கேள்வி.
தமிழ் இந்து சமயம் நிலைகுலைந்து நிற்பதே யதார்த்தம். நான் ஒரு
தொலைக்காட்சி பேட்டியில், `இலக்கியத்தின் எல்லைக்கோடு ஆன்மீகம்` என்று
சொன்னேன். பின் நவீனத்துவ உலகில் வாழ்வதாக ஏமாற்றிக்கொள்ளும் பேட்டி
கண்டோர் என்னை ஒரு கட்டுக்குடுமி என்றே கண்டனர். எனது பாசுர மடல்கள்
வாசித்துவிட்டு என்னைக் காணத்துடித்த பலர் நான் பஞ்சகச்சம் , குடுமி
சகீதம் இருப்பேன் என்றே எதிர்பார்த்தனர். எனக்கு அப்படியொரு வாழ்வு
லபிக்கவில்லை என இப்போதும் வருத்தமுண்டு. பஞ்ச கச்சம் எப்படிக் கட்டுவது
என்பதே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலையாகி நிற்பதுதான் இன்றைய நிலமை.
ஆனால், இவ்வளவுதூரம் உங்கள் அலசலுக்கு உள்ளான் வெளிநாட்டினர்தான் பிரமாண
ரக்ஷணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் லண்டன் குருக்கள் ஒருமுறை
ஆக்ஸ்போர்டு (இங்கிலாந்து)க்கு என்னை அழைத்துச் சென்றார். ஆச்சர்யமான
முறையில் அங்கு நடந்த அகண்ட காயத்ரி யக்ஞயத்தில் கலந்து கொள்ளும் பாக்யம்
கிடைத்தது. அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் `இஸ்க்கான்`
இயக்கத்தினர் வைணவத்துறையொன்று ஏற்படுத்தி வைணவக் கல்வியை உலகின் மிக
உயர்ந்த ஒரு பல்கலைக் கழகத்தில் செயல்படுத்தியிருக்கின்றனர். நம்மவர்
தமிழகத்திலேயே இன்னும் பள்ளிகளில் பாடம் சொல்லித்தரவில்லை. இதுதான்
நிலமை.
பகவத்கீதை கொரிய மொழிபெயர்ப்பு விழாவில் பேசிய பின் பல இஸ்க்கான்
இயக்கத்தவருடன் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. அவர்களின் தீவிர ஆசை,
கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் பெருமாள் கோயிலை மீண்டும்
இந்துக்களுக்கு பெற்றுத்தருவது. இப்படி சிந்திப்பவன் தமிழன் அல்ல.
இத்தாலியன், அமெரிக்கன், ஆங்கிலேயன்.
ரங்கன், நம்மை நாமே கட்டுடைக்க வேண்டிய காலக்கட்டமிது. இது முள்போல்
தைக்கலாம். ஆனால் ரண சிகிச்சைக்குப்பின்தான் நோய் குணமாகும் என்பது
அனுபவம்.
மிக்க ஆர்வத்துடன்
நா.கண்ணன்
2009/11/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஒவ்வொரு மதத்திற்கும் அதனதன் நாட்டில் தேச பண்டிதர்களால் ஆய்வு
> நடத்தப்படும் அமைப்பு இருக்கிறது. யூத கிறித்தவ மரபுகளா அந்த
> நம்பிக்கையாளர்களில் பண்டிதர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளைப்பற்றி
> படிப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கு ஹிந்துமதம்
> என்பதைப்பற்றிப் பேசாமல் இருப்பதுதான் மதச்சார்பற்ற தன்மை என்பது
> போன்ற மூளைச் சலவையில் அறிவுஜீவிகளின் கூட்டம்
> சிக்கித் தவிக்கிறது.
> பிரமாணத்தை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்த அசுரனின் கதையும்,
> பிரமேயங்களுக்கு அவ்வப்பொழுது ஊறு விளைத்தவர்களின் கதையும்
> நமக்குத் தெரிந்ததுதானே. ஹிந்து முற்றிலும் தனக்கு எதிரான, தன்
> வாழிடத்தையே ஆக்கிரமித்த அரசு சக்திகளுடன் ஓங்கிய மத
> சக்திகளான சமணம் பௌத்தம் ஆகிய உள்நாட்டு விமரிசன சக்திகளையும்
> கடந்தே, உள்வாங்கியே, செரித்தே வந்திருக்கிறான் என்பதை அவனுடைய
நீங்கள் அறியாதது அல்ல.
இறைவனை உருவாக்குவதில் ஏன் மனிதன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் எனில் அது
நமது பிரச்சனைகளைப் புறம் தள்ள ஒரு அரிய வாய்ப்பு. அறம் ஒன்றைச்
சொல்கிறது எனில், அதை நம்மால் கடை பிடிக்க முடியவில்லையெனில் உடனே நாம்
அதைத்தொழத்தொடங்கிவிடுகிறோம். இப்படித்தான் தொழும் கலாச்சாரம்
தொடங்குகிறது. தொழுதலும் தூற்றலும் இரட்டைப் பிறவிகள். இரண்டிற்கும்
காரணி ஒன்றே. நம் குறையை நாம் காண முடியவில்லையெனில் அடுத்தவரைக் குறை
சொல்லத்தொடங்கிவிடுகிறோம். பொதுவாக இந்தியாவின் பிரச்சனைகளே வெளியே
இருந்துதான் வருகிறது என்பது போன்ற ஒரு கருத்தாக்கம் சுதந்திரம் பெற்ற
காலத்திலிருந்து நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு
எப்போதும் ஒரு சைத்தான் தன் நாட்டிற்கு வெளியே தேவைப்படுகிறது. முன்பு
ரஷ்யா, பின் ஆப்கானிஸ்தான், பின் ஈரான், பின் லிபியா, இப்போது ஈராக்.
இதே மனோபாவம் இந்தியாவிலும் இருக்கிறது. பிரச்சனைக் கிளப்புவர்கள்
வெளிநாட்டில் இல்லாமல் இல்லை. அதன் பின்னால் வலுவான அரசு, ஸ்தாபன. மத
இயந்திரங்கள் செயல்படாமல் இல்லை. ஆனால் ஒரு கொரியன் போலோ, ஒரு ஜப்பானியன்
போலோ, ஒரு வியட்நாமியன் போலோ ஒற்றுமையுடன் செயல்படும் குணாதிசயம்
நம்மண்ணில் இல்லை. எவ்வளவு கஷ்டமிருந்தாலும் அதை சேர்ந்து அனுபவிக்கும்
குணம். அதிலிருந்து சேர்ந்தே மீளும் குணம். ஜப்பானில் யாரும்
வெளிநாட்டைக்குறை சொல்லிப்பார்த்ததில்லை.
புனிதத்தின் ஆக்கிரமிப்பில் பெரும் பங்கு வகிப்பவர்கள் நம்மவர்களே.
இவர்கள் இங்கு செய்திருக்கும் கேடிற்கு முன் வெளிநாட்டான் செய்வது
கொசுறு.
நெஞ்சு பொறுக்குதில்லையே! என்று பாரதி தமிழனை நோக்கித்தான் பாடினான்.
இது மாறும், நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்.
நா.கண்ணன்
2009/11/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
>> உண்மை. உத்தரேத் ஆத்மனா ஆத்மானம். நம்மை நாமே உயரச் செய்து
> முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.
> நாமே நமக்குப் பகையும் நாமே நமக்கு நட்பும்.
>
புனிதத்தின் ஆக்கிரமிப்பை Sir William Jones போன்றோர் மேற்கொண்ட அரிய
முயற்சிகளின் எதிர்வினையாகவும் கருத இடமுள்ளது.
ஸாயணருக்குப்பின் அத்துறையில் ஒரு நீண்ட வெற்றிடத்தையே காண்கிறோம்.
பின்னர் வெள்ளையர் அத்துறையில் ஏற்படுத்திய மலர்ச்சியையும் மறுக்க
முடியாது.
மொகலாய மன்னர் ஷாஜஹானின் மூத்த மகன் தாராசுகோஹ் பாரசிக மொழியில் ‘மஜ்மா
உல் பஹ்ரைன்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் காஃபிர்களின் கோட்பாட்டில்
காணப்படும் உன்னதங்களை இஸ்லாம் மதக்கோணத்தில் மறு பரிசீலனை செய்கிறது
எனலாம். தாரா ஹிந்து அறிஞர்களுக்கும் உரிய மதிப்பளித்தவர். வரலாற்றில்
இது அரிது. இவரது ஆதரவில் 1657ல் உபநிஷத்துக்களின் பாரசிக மொழிபெயர்ப்பு
முழுமை பெற்றது. தம்பி ஔரங்கசேப் கையால் இவர் கொல்லப்பட்டது வேறு கதை.
ஒரு நேர்மையான மொழிபெயர்ப்பும், மூலக்கருத்தை மாற்றாத உரையும்கூட மூல
நூல்களைக் காக்கும் முயற்சிதான். நம்மவர் ஸித்தாந்த நூல்களில் மட்டுமே
கவனம் செலுத்தினர் என்று தெரிகிறது.
ஒற்றுமையும் விழிப்புணர்வும் நம்மில் உள்ள பற்றாக்குறை.
தேவ்
.
இது போன்ற அரிய நூல்களை நமது மரபு விக்கியில் சேமிக்க வேண்டும். யுனிகோடு
என்பதால் அரபிமொழியில் சேமித்து வைக்கலாம்.
அரபி தெரிந்தோர் ஆர்வம் காட்ட வேண்டும்.
கண்ணன்
http://www.vedah.com/org2/literature/upanishads/108_upanishads.html
Dev
ரங்கன்:
ஆணிவேரைப் பிடித்துவிட்டீர்கள். அற்புதம்.
தமிழர்கள் இந்துமதக் கருத்துக்களை 'வைத்து வாங்க' வேண்டுமெனில்
சட்டெனத்தழுவது, 'அறிவியல்'. இவர்கள் சத்தியமென நம்பும் 'அறிவியல்'
'கிறிஸ்தவ அறிவியல்' என்று இவர்களில் பலருக்குத்தெரியாது. இப்போது
நடைமுறையில் இருக்கும் மேலைத்திய அறிவியல் என்பது கிறிஸ்தவ-யூத தத்துவ
(உலகநோக்கு)ப் பின்னணி கொண்டது.
நியூட்டன் அறிவியல் ஆளுமை செய்தவரைக்கும் இது கேள்விகேட்கப்படாமல்
பயன்பாட்டில் இருந்தது. பின் கற்றையியல் (குவாண்டம் பிஸிக்ஸ்) வந்த
போதுதான் இது ஆட்டம் கண்டது.
உயிரியியலில் டார்வின் வரும்வரை இதே நிலை. உண்மையான கிறிஸ்தவரான டார்வின்
20 வருடங்கள் தாம் எழுதிய கருதுகோளை 'தேவாலயம்'( சர்ச்) ஒத்துக் கொள்ளாது
என்று பயந்து எழுதாமல் இருந்தார்.
கற்றையியல் முதன்முறையாக 'இந்திய (இந்து) தத்துவப் பின்னணியில்' புரிந்து
கொள்ளப்பட்டது. உதாரணமாக:
உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவகள்
உளனலலெனில் அவனுருவம் இவ்வுருவுகள்
உளனென இலனென இவைகுணமுடைமயில்
உளன் இருதகமையொடு ஒழிவிலன் பரந்தே
அது எப்படி அவன் 'உளன்' 'இலன்' என்ற இரண்டு நிலையில் உள்ளான் என்பதைக்
கிறிஸ்தவம் விளக்கவே முடியாது. அங்கு இதற்கான தத்துவ விளக்கம் கிடையாது.
இலத்திரன் (எலெக்றான்) பார்ப்பரைப் பொருத்து 'இருக்கிறது' 'இல்லை' எனும்
இருநிலையில் உள்ளது என்று சொல்லும் கற்றையியலை கிறிஸ்தவப் பின்னணியுள்ள
அறிவியலால் புரிந்து கொள்ள முடியாது என்று அப்போது நிரூபிக்கப்பட்டது!
ஜே. கிருஷ்ணமூர்த்தி 'பார்ப்பவனே பார்க்கப்படும் பொருள்' (The Observer
is the Observed) என்று சொன்ன போது சொக்கிப்போய் வந்தவர்கள்
கிறிஸ்தவ/யூத/பிற மதத்தவரல்லர். டேவிட் பாம் எனும் மேதகு விஞ்ஞானி
(ஐன்ஸ்டைனுக்குப் பிறகு இவர்தான் என்று சொல்வோருண்டு). இவர்
சொக்கிப்போனதற்குக் காரணம், ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னது கற்றையியல்
சூத்திரமாக அவருக்குப் பட்டது! இதை ஒரு கிறிஸ்தவ ஞானியால் சொல்லியிருக்க
முடியாது. ஒரு இந்துவால் மட்டுமே சொல்லியிருக்க முடியும்.
இவையெல்லாம் உண்மை என்பதனாலேயே முஸ்லிம்களெல்லாம் சேர்ந்து லண்டனில்
முஸ்லிம் அறிவியல் என்ற ஒன்றைச் சில வருடங்களுக்கு முன் பிரகடணம்
செய்தனர்.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ நவீன உலகில் 'சர்வம் கிறிஸ்தவ மயம்' என்பதே உண்மை!
உலகில் விரைவில் ஆகபெரும்பான்மை மக்கள் தொகை கொண்டாக வலம்வரப்போகும்
இந்தியா இதற்கு என்ன பதில் சொல்கிறது?
கண்ணன்
பிகு: ரங்கன் உங்கள் கருத்துக்கள் தமிழ் இந்து.காமில் திரட்டப்படும் போது
நமது கலந்துரையாடலையும் சேர்த்துப் போட்டால் பயனுள்ளதாக இருக்கும்!
நடைமுறை அளவில் இன்று இந்து மத அவமதிப்பு, திரிபுகள்,
துஷ்பிரசாரங்கள் மற்றும் கலாசாரச் சீரழிவுகளை நடத்திக்
கொண்டிருப்பவர்கள் ”நம்மவர்களே” (அதாவது தமிழகத்தை இருப்பிடமாகக்
கொண்டு, இந்து மதத்திலேயே பெயரளவில் இருந்து கொண்டு ஆனால் இந்து
தர்மத்திற்குக் குழி பறிக்கும் துவேஷ கருத்துக்களுக்கு பலியாகி விட்ட
தமிழ் சகோதரர்கள்) என்பதை ஒப்புக் கொள்கிறேன். இவற்றுக்கு எதிராகவும்
நாம் பேச வேண்டும், பேசிக் கொண்டிருக்கிறோம்..
ஆனால் இதன் சித்தாந்த வேர்கள் கண்டிப்பாக காலனியத்தில், மேற்கத்திய/
கிறிஸ்தவ அதிகார வேட்கையில் தான் உள்ளன என்பதில் ஐயமில்லை. சீசன்
பால்கு, பிரான்சிஸ் சேவியர், கால்டுவெல், ஜே.டபிள்யூ,வில்கின்ஸ்,
மோனியர் வில்லியம்ஸ் என்று தூவிய விதை தான் இன்றைக்கு பொய்யான இனவாத
மற்றும் வெறுப்புணர்வுக் கருத்துக்களை பூதாகரமாக வளர்த்து
விட்டிருக்கிறது.. அதன் நீட்சியாகவே தான் இந்த வெளிநாட்டு ஆய்வுகளையும்
நாம் பார்க்க வேண்டும். இது அறிவுத்துறையில் நிகழும் காலனியம்.
இந்த சித்தாந்த ரீதியான விஷத்தை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல்
ஒழிக்கவேண்டுமானால், அதன் வேரிலேயே ஓங்கி அடிப்பது முக்கியம். அப்படி
வேர்கள் ஆட்டம் காணும்போது அவை விளைத்த விஷவிருட்சங்கள் விழுவதும்
துரிதமாகும்.
எனவே தான், ரங்கன் அவர்கள் குறிப்பிடும் நூலும், அது போன்ற முயற்சிகளும்
மிக முக்கியமாகின்றன என்று நான் நினைக்கிறேன்.
இத்தகைய விமர்சனங்களில் ஆதாரமற்ற ஒட்டுமொத்த மேற்கத்திய-வெறுப்புணர்வும்
பொதுப்படுத்தலும் இருக்கக் கூடாது என்பதும் மிக முக்கியம். இந்து
தர்மத்தின் மேன்மைகளை உணர்ந்து அதை நோக்கி வரும் மேற்கத்தியர்களை
ஒருபோதும் நாம் அன்னியப் படுத்தி விடவும் கூடாது. இந்த நூலை
எழுதியவர்கள் அதை சரியாகக் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், சில
இந்துத்துவ அறிவுஜீவுகள் ஒட்டுமொத்த மேற்குலக-எதிர்ப்பு மனப்பான்மை
கொண்டுள்ளனர், அது ஆரோக்கியமானதல்ல.
> 2009/11/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
ஆரம்பித்து வைப்போம் ;-)
ரங்கன் உங்கள் கருதுகோளைப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் குழப்பம்.
எம்பெருமானார் சொல்லியபடி ஒரு உண்மையன வைஷ்ணவனுக்கு சிவன் ஒரு பிரச்சனை
அல்ல. சிவ அடியார்கள் இருக்கலாம் ;-)
ஒரு சைவருக்கு விஷ்ணு ஒரு பிரச்சனை அல்ல.
அத்வைதிகளுக்கு எதுவும் பிரச்சனை அல்ல.
அப்படி இருக்கும் போது, ஒருவன் வைஷ்ணவனாகவோ, சைவனாகவோ, அத்வைதியாக
இருக்கும் போது பூரண ஹிந்துவாகத்தான் இருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு
ஹிந்துதான் இராமகிருஷ்ணரும், விவேகாநந்தரும்.
உங்கள் அலசல் (analysis) சுட்டப்படுபவராக சொல்லப்படுபவர் செய்யும்
பிழையையே செய்வதாகவே எனக்குப்படுகிறது. நாம்தான் அங்கு நுண் அரசியல்
காண்கிறோமா? இல்லை அங்கொரு அரசியல் இருக்கிறதா?
கடைசிவரை, இந்தியர்களைப் பூரணமாக பாதுகாத்துவிட்டீர் ;-)
க.>
2009/11/20 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நான் இந்த நூல் விமரிசனத்தை, அறிமுகத்தை ஒரு வழியாக
> முடித்துவிட்டேன். இனிமேல் பந்தை ஆட வேண்டிய முறை உங்களது. கார
> சார குறுக்குப் பாய்ச்சல், எதிரும் புதிருமான விவாதங்களுக்கு
> இழை தயாராக இருக்கிறது. எங்கே யார் எத்தகைய வாதங்களை
> முன்வைக்கின்றீஈகள் பார்ப்போம். ஏதோ அவ்வப்பொழுது பதில் சொல்ல வேண்டி
> நான் தலை காட்டுவேன். நன்றி
இந்து தர்மம் (சநாதன தர்மம்) என்பது தன்னியல்பில் தற்காப்புக் கொண்டது.
அதன் அமைப்பே அப்படி. புரிந்து கொள்ளாதோர் பிறழ்வுபடப் பேசி, நடித்து
வருவர். இதனால் சநாதன தர்மம் அழிந்துபடுமா? என்பது கேள்வி. நாம் இங்கு
செய்வதெல்லாம் ‘பாத்திரத்தை விளக்கி’ தூசு நீக்குதல்தான். அதுவும் நம்
புரிதலுக்காகத்தான். ‘இதோ பார் இந்து தர்மத்தை நான் காக்கிறேன்’ என்று
புரட்டப்பட்டவர்களெல்லாம் அதற்கு குந்தகம் விளைவிக்கின்றனரே தவிர அதன்
ரக்ஷணத்திற்கு உதவுவதில்லை.
இந்தியாவை நோக்கும் போது இரவு வானம்தான் நினைவிற்கு வருகிறது. எத்தனையோ
தாரகைகள்! சில மிக ஒளிப்பாச்சும், சில கமுக்கமாக இருக்கும். சில
ஆச்சார்யர்கள், குருமார்கள் பிரகாசமாக சில காலம் ஒளிவீசுவர். அப்போது
மக்களும் அது குறித்து அதிசயத்து பின் தொடர்வர். அவர் போனபின் கொஞ்சகாலம்
கும்மி அடித்துவிட்டு அடுத்த குருவை நோக்கிப் போய்விடுவர். இராமகிருஷ்ணர்
கதையும் அதுதான். விவேகாநந்தர் ஒரு ஆன்மீக சிங்கம் என்பதில்
சந்தேகமில்லை. அவர் இன்னும் திறக்கப்படாத பரிசுப் பொருளாகக் கூட
இருக்கலாம். ஆயினும், அவர் விதிப்படி கொஞ்ச கால சம்ரோக்ஷண கைங்கர்யம்.
பின் வேறொருவர் வருவர்.
எனவே வெளிநாட்டுக்காரரோ, உளநாட்டுக்காரரோ பழிப்பதை நாம் பெரிது பண்ணி
அரசியல் செய்வதில் லாபமில்லை.
நமது தர்மத்தை பொலிவுபட செய்யும் நடவடிக்கைகளில் எல்லோரும் ஈடுபட
வேண்டும். அதைப் புரிந்து கொள்ள நிறைய முயற்சி எடுக்க வேண்டும். பறவைக்
குஞ்சுகளில் எது வாயை, வாயை திறக்கிறதோ அதுவே உணவைப் பெருகிறது. அது போல்
தான். அவனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆராக்காதல் ஊற்றுப்பெறின் அவனே சகல
வசதிகளையும் செய்து கொடுத்து புரிய வைப்பான்.
சரி, மற்றவர்கள் புரிதல் என்னவென்று பார்ப்போம்!
கண்ணன்
On 11/20/09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:‘அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்’ என்றும், ’அவரவர் விதிவழி அடைய நின்றனர்’மொத்தமும் இதில் அடங்கி விட்டது
தமிழ்த்தேனியாரே! ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின்படி இந்த வரிகள் இப்படிப் படிக்கப் படுவதில்லை. ‘அவரவர் இறையவர் குறைவிலர்’ என்றும், ‘இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனர்’ என்றும் பிரிக்கப் படுகிறது. அந்தந்த இறையவர்களை அண்டி வணங்குவோர்க்குப் பலன் தருவதில் அந்தந்த இறையவர் குறைவின்றி இருக்கின்றனர் என்பது முதல் வரியின் பொருள். எப்படி அவர்கள் அவ்வாறு குறைவிலராய் ஆகின்றனர்? இறையவராகிய திருமால் அந்தந்த இறையவர்களுக்குள்ளும் அந்தராத்மாவாய் நின்று அவர்களை அந்தந்த பலன்களைத் தருவதில் குறைவற்றவராக ஆக்குகின்றான் என்ற காரணத்தால் என்பது இரண்டாம் வரியின் பொருளாகவும் கொள்ளப்படுகிறது.எனவே கண்ணனார் கூறிய பூரண ஹிந்துத் தனமை ஸ்ரீராமகிருஷ்ண தர்சனம் விளங்குவதற்கு முன்னரே நிலவியது என்பது பரிசோதனைக்கும், விவாதத்திற்கும் உரியது. மேலும் கருத்துகள் வரட்டும். நிதானமாக ஆராய்வோம்.
20-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:ஹரி! ஓம்!!
ஆரம்பித்து வைப்போம் ;-)
ரங்கன் உங்கள் கருதுகோளைப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் குழப்பம்.
எம்பெருமானார் சொல்லியபடி ஒரு உண்மையன வைஷ்ணவனுக்கு சிவன் ஒரு பிரச்சனை
அல்ல. சிவ அடியார்கள் இருக்கலாம் ;-)
ஒரு சைவருக்கு விஷ்ணு ஒரு பிரச்சனை அல்ல.
அத்வைதிகளுக்கு எதுவும் பிரச்சனை அல்ல.
அப்படி இருக்கும் போது, ஒருவன் வைஷ்ணவனாகவோ, சைவனாகவோ, அத்வைதியாக
இருக்கும் போது பூரண ஹிந்துவாகத்தான் இருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு
ஹிந்துதான் இராமகிருஷ்ணரும், விவேகாநந்தரும்.
உங்கள் அலசல் (analysis) சுட்டப்படுபவராக சொல்லப்படுபவர் செய்யும்
பிழையையே செய்வதாகவே எனக்குப்படுகிறது. நாம்தான் அங்கு நுண் அரசியல்
காண்கிறோமா? இல்லை அங்கொரு அரசியல் இருக்கிறதா?
கடைசிவரை, இந்தியர்களைப் பூரணமாக பாதுகாத்துவிட்டீர் ;-)
க.>
2009/11/20 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நான் இந்த நூல் விமரிசனத்தை, அறிமுகத்தை ஒரு வழியாக
> முடித்துவிட்டேன். இனிமேல் பந்தை ஆட வேண்டிய முறை உங்களது. கார
> சார குறுக்குப் பாய்ச்சல், எதிரும் புதிருமான விவாதங்களுக்கு
> இழை தயாராக இருக்கிறது. எங்கே யார் எத்தகைய வாதங்களை
> முன்வைக்கின்றீஈகள் பார்ப்போம். ஏதோ அவ்வப்பொழுது பதில் சொல்ல வேண்டி
> நான் தலை காட்டுவேன். நன்றி
பரமஹம்ஸ தேவரின் காலகட்டத்தில் இந்தியா இருந்த நிலையையும்,வெள்ளையர்
அரவணைப்பில்
கிறித்தவ மிஷினரிகள் செய்த மதமாற்ற வேகத்தையும் நினைத்துப் பார்த்தால்
அந்த அவதார வரிஷ்டரின் மேன்மை புரியும்.துளஸி தாஸர்,ஸமர்த்த ராமதாஸர்,
வித்யாரண்யர் போன்றோர் எடுத்த அமைதியான,அறிவுசார்ந்த முடிவுகள் நம்
தேசத்தின் தலை எழுத்தை மாற்றின.
தாக்கம் கொஞ்ச காலம்தான் நிலைக்க முடியும்.அவதாரங்கள் பல எடுத்துக் கை
சோர்ந்த நிலையில்தான் ஆண்டவன் ஆழ்வார்களை அனுப்பினான்.ஒரு வீட்டை
அடிக்கடி செப்பனிட்டுப் பழுது பார்ப்பதுபோல்தான் தர்ம ஸம்ரக்ஷணமும்.
பெரிய குறைபாடு இது என் மதம்,என் நாடு என்னும் கரிசனம் நம்மில்
இல்லாததுதான்.
தேவ்
>>பரமஹம்ஸ தேவரின் காலகட்டத்தில் இந்தியா இருந்த நிலையையும்,வெள்ளையர்
அரவணைப்பில்
கிறித்தவ மிஷினரிகள் செய்த மதமாற்ற வேகத்தையும் நினைத்துப் பார்த்தால்
அந்த அவதார வரிஷ்டரின் மேன்மை புரியும்<<
எப்படித் தேடித் தேடி வார்த்தைகளைப் போடுகிறீர்கள்!! ‘அவதார வரிஷ்டர்’ -- அவதாரங்களிலேயே மிக்குயர்ந்தவர்!ஆமாம் அவரை அப்படித்தான் சொல்லமுடியும். ‘லொரேன்’ ஆகிய விவேகாநந்தரும் அப்படித்தானே பாடுகிறார்!‘ஸ்தாபகாய ச தர்மஸ்ச ஸர்வ தர்ம ஸ்வரூபிணே|அவதார வரிஷ்டாய ஸ்ரீராமகிருஷ்ணாய தே நம:||’
அன்புள்ள
தமிழ்த்தேனீ
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன எனில், சதீஷ் சொல்வதும் சரியே; தமிழ்த்தேனீ சொல்வதும் சரியே. கோணங்கள் வேறு.
> அது மட்டுமல்லாது, அவர்களின் குழந்தைகளுக்கெல்லாம் வாழ்க்கை என்பது என்னவென்றே
> தெரியாது, மொத்த கூட்டமும் அறியாமையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே
> தவறு செய்து கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் எழுதச் சொன்னால் பக்கம் பக்கமாக
> எழுதுவேன். அவ்வளவு பார்த்துவிட்டேன் இரண்டே இரண்டு ஆண்டுகளில்...
>
> இதை எல்லாம் இங்கு இருக்கும் பத்திரிக்கைகளே அவ்வப்பொழுது எழுதி கொண்டுதான்
> இருக்கின்றன.
>
சதீஷ்!
தாங்கள் அவசியம் இதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்மவர் அங்கு
படும்பாடு அறியப்பட வேண்டிய ஒன்று.
க.>
சதீஷ்! அப்படியே வந்ததுதான் வந்தீங்க. ஒரு வார்த்தை இந்த நூல் சுட்டும் பிரச்சனையான ‘புனிதங்களை ஊடுருவிக் களங்கப் படுத்தல்’ என்பதைப் பற்றி உங்கள் வாதங்கள் ஏதேனும் பதிவு பண்ணுங்கள் பார்ப்போம். வெகு நாட்களாக உங்கள் குரல் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.
நான் இந்த நூல் விமரிசனத்தை, அறிமுகத்தை ஒரு வழியாக முடித்துவிட்டேன். இனிமேல் பந்தை ஆட வேண்டிய முறை உங்களது. கார சார குறுக்குப் பாய்ச்சல், எதிரும் புதிருமான விவாதங்களுக்கு இழை தயாராக இருக்கிறது. எங்கே யார் எத்தகைய வாதங்களை முன்வைக்கின்றீஈகள் பார்ப்போம். ஏதோ அவ்வப்பொழுது பதில் சொல்ல வேண்டி நான் தலை காட்டுவேன். நன்றி
மனசுல மாத்திரம் திட்டிக்கினே தன் வேலையைப் பாக்க போயிட்டாரு.
ரங்கனாரே!ஒரு கதை சொல்லட்டுமா..உம் கொட்டினால் சொல்வதற்கு இண்டரெஸ்ட்டாக இருக்கும்.ஒரு ஊரில் .. ஊர்னா கிராமம்னு வெச்சுக்கோங்க..அந்த கிராமத்து இளைஞன் ஒருவனுக்கு திடும் என காதில் ஏதோ குடைய ஆரம்பித்து சில நிமிஷங்களில் தாங்கமுடியாத தொல்லையாகி தவித்துப் போய்விட்டான். அய்யோ அப்பா குடையுதே.. தாளமுடியலேப்பா.. னுகத்தறான்.. இதை ஊர்ப் பெரிசு ஒண்ணு பாத்துண்டுருக்கு.இவன் கத்தறதைக் கேட்ட அவனோட அப்பா உடனே ஓடி வந்தார்.. ஏண்டா கத்தறே.. ன்னு கேட்டார்.. 'அப்பா எறும்புங்க காதுக்குள்ளே பூந்துடுச்சு.. ஐயோ தாளமுடியலே நைனா.. ஏதாவது பண்ணு.. அதுக்கு அவங்கப்பா 'நான் என்னடா பண்றது.. உள்ளே போன எறும்பு அதுவா செத்துடும்.. இதுக்கெல்லாம் போய் ஏன் கத்தறே' ன்னு துண்டை உதறித் தோள் மேல போட்டுண்டு போயிட்டார். இதையும் அந்த ஊர்ப் பெரிசு, முதல்லே சொன்னேனே.. அது பாத்துண்டுருக்கு.அவங்கம்மா.. பாவம், அவனை ஊர் வைத்தியர்கிட்டே போய் காமிடா.. எதுனாச்சும் மருந்து போடுவார்'னு இலவச ஆலோசனை கொடுத்துச்சு.. அவனும் கத்திக்கினே வைத்தியர்கிட்டே ஓடிப்போய் காமிச்சான். வைத்தியர் மிகப் பெரிய ஆளாச்சா.. இந்த மாதிரி மைனர் விஷயத்துக்கு வந்தவனை பாத்து திருப்பி சப்தம் போட்டார்.'ஏண்டா இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாமா எங்கிட்ட வருவே.. போ எலே அந்தாண்ட'.. இதெல்லாம் தானா சரியாப்போயிடும் னு திருப்பி அனுப்பிச்சுட்டார்.. ;இத்தையும் அந்த ஊர்ப் பெரிசு, அதான் முதல் இரண்டு தடவையும் சொன்னேனே, அது பாத்துக்கினே இருக்கு.இவனா.. சீ.. யாருமே என்னைப்பத்தியோ, என் காது இப்படிக் குடையுறதைப் பத்தியோ கண்டுக்கிடவே இல்லே.. அய்யோ.. இப்படிக் குடையுதே.. என்னா பண்ணுவேன்..' அப்படின்னு ரொடுல அழுதுண்டு போறச்சே.. அப்போ எதிரே வந்த பாதிரியார் ஒத்தர் பாத்தார். 'மகனே.. ஏன் அழுவறே..'ன்னு கேட்டார். சொன்னான், காதுல கையை வெச்சுண்டே.. வலி பொறுக்கமுடியலியே..ன்னான். உடனே அவரு 'தம்பி, கவலைப்படாதே' நான் உன் வலியைப் போக்கறேன்.. என்னோட பேசிண்டே வந்தியானா உனக்கும் வலி மறந்துபோகும்.. அப்படியே டவுன் ஆசுபத்திரிக்குப் போயி ஒன் காதை வலி தெரியாம அறுத்து எடுத்து உள்ளே தொல்லை பண்ற அந்த பாவம் செய்யும் எறும்புகளை எடுத்து உன் கண்ணுலே காமிச்சு தூக்கிப் போட்டுட்டு, அப்பாலே அந்த அறுந்த காதையும் நல்லா தெச்சு ஒட்ட வச்சுடறேன்.. எல்லாம் சரியாப் போயிடும்..' அப்படின்னு அவன்கிட்டே அன்பா சொல்லி கையோட நடத்தி அழைச்சுண்டு போயே போய் விட்டார். 'இதையும் அந்த ஊர்ப் பெருசு பாத்துக்கினே இருக்கு மூக்குலே விரலை வெச்சுண்டு..மத்தாநாள் அந்த இளைஞன், வாலிபன், சிரித்துக்கொண்டே காதுலயும் முகத்துலேயும் பெரிய பாண்டேஜ் ஓட கிராமத்துல நுழைஞ்சப்ப அந்த ஊர்ப் பெரிசு பாத்து ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போச்சு.'அட போக்கத்தப் பயலே.. போயும் போயும் 'ரெண்டு சின்ன எறும்புக்காக காதையே அறுத்து ஒட்டவெச்சுட்டு வருவியா.. ஏண்டா.. ஒரு ரெண்டு சொட்டு தண்ணியை எறும்பு பூந்த காதுல ஊத்து அப்படியே கழுத்தை ஒருபக்கம் சாய்ச்சியானா அந்த தண்ணீ வெளியே வரும்போது எறும்பும் வந்திருக்குமேடா.. இது கூட தெரியாம இருக்கியேடா..' அப்படின்னு அப்பக் கூட வெளியே சொல்லாம
On 11/20/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:நான் இந்த நூல் விமரிசனத்தை, அறிமுகத்தை ஒரு வழியாக முடித்துவிட்டேன். இனிமேல் பந்தை ஆட வேண்டிய முறை உங்களது. கார சார குறுக்குப் பாய்ச்சல், எதிரும் புதிருமான விவாதங்களுக்கு இழை தயாராக இருக்கிறது. எங்கே யார் எத்தகைய வாதங்களை முன்வைக்கின்றீஈகள் பார்ப்போம். ஏதோ அவ்வப்பொழுது பதில் சொல்ல வேண்டி நான் தலை காட்டுவேன். நன்றி
இந்த இழை எழுப்பிய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். சில
கருத்துகள் இழையுடன் ஒட்டாமலும் இருக்கலாம். கூடவே எனக்குப் புரியாத சில
உண்மைகளையும் அறிஞர் நிறைந்த இந்த அவையின்முன் வைக்கிறேன்.
‘Invading the Secret’ - இதுவே ஸநாதந நூல்களின் முயற்சி; (ஸநாதநம்
என்றால் வேறு சாயம் பூசப்படுவது மரபு; அதை இங்கு விவாதிக்க வேண்டாம்.)
இறவாப் பெருநிலைக்கான தேடல்தான் அந்நூல்களின் நோக்கம்
எனினும் அத்தேடல் பல நிலைகளில் புரிந்து கொள்ளப்படுவதால் கிளை
பிரிந்துள்ள பல மரபுகள், இவற்றை ஆழ்ந்து கற்பதில் ஏற்படும் சிக்கல்கள்,
இதையே ஒரு பெரிய குறைபாடாகச் சுட்டிக்காட்டும் ஆபிரகாமிய மதங்கள், அதை
உண்மை என்று நம்பும் மக்கள் தொகையின் வளர்ச்சி – குறைபாடுள்ளவை போல்
தோற்றமளிக்கும் இம்மதக்கோட்பாடுகளை விவரிக்கப் புக்கால் பெரிய பூசல்
ஏற்பட்டுவிடும் என்று சாமானியர்கள் அஞ்சுவதில் நியாயம் இல்லாமல் இல்லை;
ஒரு ஸித்தாந்தத்திற்கு மற்றவை பூர்வ பக்ஷம் என்னும் மரபு தெரிந்தோர்
பல்வேறு கோட்பாடுகளை அலசுவதில் தயக்கம் காட்டுவதில்லை; ஆனால்
இவ்வகையினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
நம்மவர்களுக்கு வேறு வழியில்லை; உலகில் உள்ளவை அனைத்தையும் ஆங்கிலப்
பலகணி வழியாகத்தான் பார்த்தாக வேண்டும் என்னும் நிலை; பிற இந்திய
மொழிகளின் சொற்களைக் கூட ஆங்கில உச்சரிப்பில்தான் பேசியாக வேண்டும்.
ஆராய்ச்சித் துறையில் மேற்கத்தியர் கூறுவதுதான் முடிந்த முடிவு; மறு
பேச்சுக்கு இடமில்லை என்னும் இச்சூழலின் யதார்த்தத்தைப்
புரிந்துகொண்டோர் நம்மில் எத்தனை பேர் ?
ஒரு பெரிய பல்பொருள் அங்காடிக்குள் நுழைய நேர்ந்த கிராமத்தானைப் போன்ற
நிலை இருந்தும் தயங்காமல் நுட்பம் மிகுந்த நம் நூல்களை ஆராய முனையும்
மேற்கத்தியத் திருக்கூட்டம்; (விதி விலக்கானோர் இருப்பதை மறுக்கவில்லை)
மேற்கத்தியத் தாக்கம் மிகுந்துவிட்ட நிலையில் நம்மவர் அந்த
ஆராய்ச்சிகளின் பின் போகாமல் தடுப்பது கடினமான பணி.
இந்த ஆராய்ச்சிகளின் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி, ஸத் விசாரத்தின்
நெளிவு, சுளிவுகளை அனைவருக்கும் உணர்த்துவது ஹிந்துக்களின்முன்
விச்வரூபம் எடுத்து நிற்கும் சவால். கருத்துத் தெளிவும்,பன்னூற்
பயிற்சியும், போதனைத் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர்தான் இதில் வெற்றி
காண முடியும்.
ஆனால் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் இத்தகுதிகள் இருந்தனவா ?
நகர்ப்புறத்தார் பேசும் நாசூக்கான வங்கமொழிப் பேச்சைக் கூட
அறியாதவராகத்தானே அவர் இறுதிவரை வாழ்ந்தார்! மேற்கத்திய ஒய்யாரத்தில்
மூழ்கிய ப்ரம்ம ஸமாஜிகளை நீர்க்காவியேறிய ஆடையணிந்த அவர்பால் ஈர்த்தது
எது ? எந்த ஸித்தாந்தத்தையும் விமர்சிக்காமல் கடினமான வேதாந்த நுட்பங்களை
எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் பேதை பாமரரும் அறியும் வண்ணம் கூறும் கலை
அவரிடம் குடி புகுந்தது எப்படி ? மறை மொழிகளை உச்சரித்தபடி ஸமாதியில்
ஆழ்ந்த அவர் யாரிடம் மறை பயின்றார் ?
இது போன்ற உன்னதங்களை இந்தியாவில் உரிய தருணத்தில் தோன்றச் செய்யும்
பேராற்றல் எது ?
தேவ்
அருமையான் கதை சார்,
அது மகா உண்மை.
கிறிஸ்தவத்தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
உலகிலேயே `கிறிஸ்தவத்தனம்` அதிகமுள்ள இரண்டு நாடுகள் என்று சொன்னால்,
ஒன்று இந்தியா, அடுத்தது பிலிபைன்ஸ்.
மற்ற நாடுகள் `கிறிஸ்தவ நாடுகள்` என்று அறிவித்தாலும் (உம்.ஜெர்மனி)
அங்கு `கிறிஸ்தவத்தனம்` கிடையாது. அவரவர் வழி அவரவர்க்கு எனும் தன்மை.
ஆனால் இந்தப் பாதிரிகள் உலகம் வேறு ;-)
க.>
2009/11/22 Satheesh kumar R <svp...@gmail.com>:
> அருமையான் கதை சார்,
> என் கூட வேலை செய்யற இத்தாலியன் கழுத்துல ஒருத்தனுக்கு கூட ஜெபமாலையோ, சிலுவையோ
இரண்டு கருத்துக்களுக்கு மட்டும் என் பின்னூட்டம்.
`புறச்சின்னம்` பற்றியது.
இந்தியா போன்ற சத் விஷயங்களில் ஊறித்திளைத்து பல்வேறு கிளைகள் கொண்ட ஒரு
நாட்டில், தான் இன்ன மார்க்கத்தைச் சேர்ந்தவன் என்று மற்றவர்க்கு காட்ட
திருநீறு அணிதல் (விபூதி), திருமண் காப்பிடுதல் (நாமம்) போன்றவை தோன்றி
இருக்க வேண்டும். ஒரு நளினமான, நாகரீக காலத்தில் இப்படி காப்பிட்டவரைக்
கண்டால் மற்ற வழியினர் வணங்கி ஒதுங்கி விடுவதோ, இல்லை மரியாதையுடன்
அம்மார்க்கம் பற்றி அறிவதோ வழக்கில் இருந்து வந்தது. (நாமத்தை நக்கி
அழிப்பது போன்ற கொடுமையும் அம்மண்ணில் நிகழ்ந்திருக்கிறது)
ஆனால், நான் தினமும் திருமண் காப்பிட்டு கொரியாவில் நடந்தால்
கேலிக்கூத்தாக இருக்கும். ஏனெனில் `சமயம் எதற்கு?` எனும் நாடு இது! இங்கு
புறச்சின்னங்களின் தேவை பொருளற்றுப் போகிறது.
`அகம் பிரம்மாஸ்மி` என்றுதானே வேதம் சொல்கிறது. இந்தப் பேருண்மையை வேறு
எந்த மார்க்கமாவது காட்டியுள்ளதா? `உள் கட, உள் கட` என்பதே கடவுள் ஆனது
என்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டும் பேருண்மை. எனவே வெளி நாட்டில்
புறச்சின்னங்கள் தேவையில்லை என்பது என் வாதம் (உள் நாட்டிலும் அதன் தேவை
குறைந்து வருவதைக் காண்கிறோம்). ஆயினும் `திருக்காப்பு` என்ற
சொல்லிற்கிணங்க அது ரக்ஷை என்றாகும் போது, அவரவர் மனோபாவத்தை,
வழிமுறைகளைப் பொறுத்து அவை அணியப்படலாம் என்பது வேறு விஷயம்.
அடுத்து, இனிமேல் நாம் சமிஸ்கிருதம் கற்று வேதபாடமெல்லாம் படிக்க வேண்டிய
அவசியமில்லை என்று தோன்றுகிறது. இத்தனை நூற்றாண்டுகளிலும் வேதம்
அக்குவேறு, ஆணிவேறாக பதம் பிரித்து, ஆள் பொருள் கண்டு வழிமுறைக்கு
வந்துவிட்டது. நமது வாழ்வே வேதம் சார்ந்துதான் இயங்குகிறது. நம்புகிறோமோ
இல்லையோ, இந்தியா வேத பூமி. அங்கு இருப்போர் அனைவரும் வேதத்தால்
ரக்ஷிக்கப்படுகின்றனர். இதை உணர்பவன் பாக்கியசாலி. இல்லையெனில், வேத
விற்பன்னரான வேதாந்த தேசிகன், ஏன் நமக்கொரு வாய்ப்பு (சாய்ஸ்) தருகிறார்?
`வேதம் கற்க வாய்ப்பு இல்லையெனில், நாலாயிரம் அறிந்தால் போதும்` என்பது
அவர் வாக்கு. திராவிட வேதமான நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இல்லாத
எதுவும் வேதத்தில் தனியாக இருக்கப்போவதில்லை. இப்படி மிக எளிய வழி
இருக்கும் போது. நாம் தமிழின் மூலம் அளப்பரிய பேறு பெற்றிருக்கும் போது,
அலட்சியம் செய்து இவைகளைக் கற்கவில்லையெனில், பிறவியின் பயன் வீண்
அல்லவோ?
ரங்கனாரின் இவ்விழை சொல்லும் பெரிய பாடம் என்னவெனில், பள்ளி, கல்லூரி,
பல்கலைக்கழக அளவில் தமிழ் பனுவல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு தமிழன்
வாழ்வு மேம்படவேண்டும் என்பதே! ஒரு பெரிய நிதியை வங்கியில் போட்டுவிட்டு
பிச்சைக்காரனாக வாழ்வது போல்தான் நம் வாழ்வு உள்ளது!
கண்ணன்
2009/11/22 Satheesh kumar R <svp...@gmail.com>:
>என்னையும் யாரும் அவ்வாறு பார்த்ததில்லை ஒரே ஒரு முறை
> தவிர! நான் எங்கு சென்றாலும் நெற்றியில் திருநீறு (மூன்று கோடுகள் மற்றும்
> புருவ மத்தியில்) அணிந்து செல்வது உண்டு, அவ்வாறு ஒரு நாள் அணிந்து கொண்டு
> அபுதாபியில் taxi பிடிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்த்து விட்டு அரபி
> மொழியில் ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு போய் விட்டனர் மூன்று
> ஓட்டுனர்கள். அதற்காக நான் இட்ட திருநீரை அழிக்க வில்லை, மூன்று கி.மீ நடந்தே
> போய்விட்டேன்.
>
சதீஷ்!
அது மகா உண்மை.
கிறிஸ்தவத்தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
உலகிலேயே `கிறிஸ்தவத்தனம்` அதிகமுள்ள இரண்டு நாடுகள் என்று சொன்னால்,
ஒன்று இந்தியா, அடுத்தது பிலிபைன்ஸ்.
மற்ற நாடுகள் `கிறிஸ்தவ நாடுகள்` என்று அறிவித்தாலும் (உம்.ஜெர்மனி)
அங்கு `கிறிஸ்தவத்தனம்` கிடையாது. அவரவர் வழி அவரவர்க்கு எனும் தன்மை.
ஆனால் இந்தப் பாதிரிகள் உலகம் வேறு ;-)
சதீஷ்! நீங்கள் செய்வது பெரிய தர்மம். அதைக்காட்டிலும் பெரிய அறம் வேறு இல்லை. உங்களைப் பற்றிய என் வியப்பை அதிகப் படுத்தி விட்டீர்கள்!
ஆஹா! என்னவெல்லாமோ பெரிய வார்த்தைகள் சொல்லுகிறீர்கள்
>> மூன்று ஓட்டுனர்கள். அதற்காக நான் இட்ட திருநீரை அழிக்க வில்லை, மூன்று கி.மீ நடந்தே போய்விட்டேன்<<
ஆஹா!! உங்கள் ஊக்கமும், விடாப்பிடியும் அருமை.
>>இப்பொழுதே படிக்க வேண்டுமென்றால் எவனோ ஒரு மேலை நாட்டான் எழுதிய ஆங்கில ....அவர்களுடைய கற்பனைகளைக் கொட்டி எழுதியுள்ளனரோ எப்படி அறிய முடியும்?<<சதீஷ்! அதெல்லாம் ஒன்றும் கவலைப் படாதீர்கள். யார் எழுதியதாய் இருந்தாலும் என்ன கையில் கிடைக்கிறதோ கவலைப் படாமல் படியுங்கள். ஆனால் விமரிசன சிந்தனையுடன் எதையும் படியுங்கள். எதுவும் ஒன்றும் பாதித்து விடாது. சிந்தனையைக் கைவிட்டுவிட்டு என்னதான் நீங்கள் ஸம்ஸ்க்ருதத்திலேயே வாய்கொப்புளித்தாலும் ஒன்றும் பயன்படாது. சந்நியாசியின் கமண்டலம் போல் அப்படியே இருக்க வேண்டியதுதான்.
அது இருக்கட்டும். ஏன் ஹிந்துமதத்திற்கு நல்ல அறிமுக நூல் இல்லை என்கிறீர்கள்? விவேகாநந்தரின் முழுநூல் தொகுதி ஆங்கிலத்திலோ, தமிழிலோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஹிந்து மதம் என்பதற்கான ஆவணங்களே அவைதானே! நமது முன்னோர் செய்த புண்ணீயம் அன்றோ அவை நமக்குக் கிடைத்திருப்பது!!!
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
இந்த Invading the Sacred இழை முழுவதிலும் இந்திய விஷயங்களை
அறைகுறையாகப் புரிந்து கொண்ட, ஓரளவு விஷமக்காரர்களான,
மேற்கத்திய (அல்லது மேற்கத்திய சார்புடைய கிழக்கித்திய) விமர்சகர்கள்தான்
விமர்சிக்கப் பட்டார்கள். இந்தியத் தந்மையை இழிவு படுத்த வேண்டும்
என்னும் ஒரு ஒளித்துவைத்த நோக்கம் இதில் உண்டு எனபதை
ரங்கன் தெளிவு படுத்தினார்.
ஆனால் இந்த விஷமக்காரர்களின் பிரச்சாரத்துக்கு இத்தனை முக்கியத்துவம்
கொடுக்க வேண்டுமா என்று கேட்கிறேன். இது இந்தியாவைப் பின்னடையச் செய்கிறதா?
அதற்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறதா? ரங்கன் "ஆம்" என்று எண்ணுவதால்தான்
இவ்வளவும் எழுதினார்.
நாம் இவற்றை "முக்கியமில்லை" எனப் புறந்தள்ளல் தகும். ஏனெனில் இவை
மேற்கல்வி ஆய்வுத் தளத்தில் நடக்கும் சங்கதிகள். முடிவுகளை முற்படுத்தலும்
பின்னைய விவாதங்கள் அவற்றை மறுத்தலும் அங்கு நடக்கும். அதற்குப்
பொதுவாக வெகுஜன விளைவுகள் ஏதும் இல்லை.
நமது பிள்ளைகளுக்கே இந்த விஷங்களைக் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இதனை முறியடிப்பது மிகவும் எளிது. ஒரு இந்தியனின் வீட்டுக் கலாச்சாரமே இதனை
முறியடிக்கும். இதுவரை மேற்கத்திய பிரச்சாரத்தைக் கேட்டு இந்திய பாரம்பரியத்தை
வெறுக்கும் அல்லது துறக்கும் குழந்தையை நான் பார்த்ததில்லை. (விதிவிலக்குகள்
இருக்கலாம்;
மிகச் சிறுபானமையாக இருக்கும்.)
இதன் மறுபக்கமாக இந்தியத் தன்மையையும் இந்துத் தன்மையையும் மேலை நாடுகளில்
பரப்புகின்ற முயற்சிகளையும் நாம் பார்க்க வேண்டும். எத்தனை நூற்றுக் கணக்கான
ஆசிரமங்கள், நிறுவனங்கள் இன்று இந்தியக் கலாச்சாரத்தை மேலை நாடுகளில்
பரப்பி வருகின்றன! கவ்வை ஆதினம் ஒன்று மட்டும் எடுத்துக்காட்டுக்குப் போதும்.
அவர்கள் நடத்தும் Hinduism Today என்னும் இதழைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு
இந்தியக் கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் பெற்றுள்ள உயர்ந்த மதிப்பும்,
மேற்கத்தியர்
மீது அது கொண்டுள்ள தாக்கமும் தெரியும். சமயத்தோடு கலந்த இந்துக் கலாச்சாரம்
உலக முழுவதும் எத்தனை மேன்மையோடு இருக்கிறது என்ற செய்தியும் புரியும்.
இது ஒரு முக்கியமான "சமன் செய்யும்" முயற்சி.
பொதுவாக மேற்கத்திய கலாச்சாரம் - முக்கியமாக அமெரிக்கா - கலாச்சார வெறுமையில்
இருக்கிறது. அந்த வெறுமையை கிழக்கத்தியக் கலாச்சாரங்களே நிரப்புகின்றன.
இந்துக் கலாச்சாரத்துக்கு இதிலே ஒரு பெரும் பங்கு உண்டென்றாலும், இஸ்லாம்,
பௌத்த கலாச்சாரங்களுக்கும் பங்குண்டு. சீக்கிய சமயம் கூட மேற்கத்திய நாடுகளில்
பெருகி வருவதற்கான சான்றுகள் உண்டு. ஒரு சமயமும் சாராத நன்னெறிகளை
அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும் பெருகி வருகின்றன. (உ-ம். பஹாய்).
இதனாலெல்லாம் நாம் பெருமிதம் கொள்ளலாம். நம் கலாச்சாரத்தைப் பரப்பும்
முயற்சிகளுக்குத்
துணையாக இருக்கலாம். நிதி வழங்கலாம். இவையல்லவோ ஆக்ககரமான முயற்சிகள்!
எல்லாவற்றையும் நாம் "ஆங்கிலப் பலகணி" வழியாகத்தான் பார்க்கிறோம் என்ற உங்கள்
கூற்றிலும் நான் வேறுபடவே விரும்புகிறேன். ஆங்கிலத் தாக்கம் பல துறைகளில்
உள்ளது. ஆனால் சமயத் துறையில் இல்லை. ஆங்கிலம் நமது கலாச்சாரத்தின் பெருமைகளை
மேற்கத்திய உலகுக்குக் கொண்டு செல்லும் வாகனமாகத்தான் இருந்திருக்கிறது. இதனால்
விளைந்துள்ளவை நன்மைகளே. ஆங்கிலம் நமது சமயத்திற்குச் செய்த தீமைகள் இல்லை.
இருந்தாலும் சிறுபான்மையே. கணக்கில் எடுத்துக் கொள்ளும் அளவில் இல்லை.
என் இரண்டு பென்னிக் கருத்துக்கள்.
ரெ.கா.
இவ்விதமான பிரசாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதும் தர்ம ரக்ஷணத்தோடு
சேர்ந்ததுதான்; இத்தனை நுண்ணிய கவனம் பரவலாக இருந்திருந்தால் பல
தாக்குதல்களிலிருந்து நம் சிந்தனைகளைக் காத்திருக்கலாம்.
>>ஆங்கிலம் நமது கலாச்சாரத்தின் பெருமைகளை மேற்கத்திய உலகுக்குக் கொண்டு செல்லும் வாகனமாகத்தான் இருந்திருக்கிறது <<
ஆங்கிலத்தில் குறை காண்பது நோக்கமில்லை ரெ.கா சார்;நுட்பம் மிகுந்த
மெய்யியலை அறிந்துகொள்ளவும் ஆங்கி்லம் தவிர வேறு போக்கில்லை என்னும்
இரண்டாம் நிலையில் முன்வைக்கும் வாதம் அது. இந்தியர்களின் உறவு முறைப்
பெயர்களைக்கூடத் தெளிவாக ஆங்கிலத்தில் கூற முடியாது.
தேவ்
ஆங்கிலத்தில் குறை காண்பது நோக்கமில்லை ரெ.கா சார்;நுட்பம் மிகுந்த
மெய்யியலை அறிந்துகொள்ளவும் ஆங்கி்லம் தவிர வேறு போக்கில்லை என்னும்
இரண்டாம் நிலையில் முன்வைக்கும் வாதம் அது. இந்தியர்களின் உறவு முறைப்
பெயர்களைக்கூடத் தெளிவாக ஆங்கிலத்தில் கூற முடியாது.
>>>>>>> இந்தக் கருத்துக்களில் எனக்கும் பெருமளவு சம்மதம் உண்டு.
>>
உங்கள் இருவர் கருத்துடன் ஒன்றுகிறேன்.
இந்திய தத்துவத்தில் நான் ஆழாங்காட்பட உதவியவை ஜே.கிருஷ்ணமூர்த்தியின்
ஆங்கில் நூல்களே. அதே போல் விவேகாநந்தரின் ஆங்கில நூல்களும் என் ஆர்வத்தை
தூண்டியவையே.
பல நேரங்களில் தோன்றும், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஒரு ஞானியை
குழந்தையிலிருந்தே கடத்திக் கொண்டு போய் ஆங்கில மயப்படுத்தியதில்
ஆங்கிலம் எவ்வளவு வளம் பெற்றுவிட்டது!! அதே போல் அரவிந்தரின் போதனைகள்
பிரெஞ்சிற்குப் போனது எவ்வளவு பெரிய வளம். இரண்டாம் உலகப்போருக்குப் பின்
ஜெர்மனியில் விழுந்த `சமய ஓட்டையை` இட்டு நிரப்புவது பௌத்த, இந்து
தத்துவங்களே. யோகா பயிற்சி இல்லாத சிறு கிராமத்தைக் கூட ஜெர்மனியில்
காணமுடியாது என்று சொல்லும் வண்ணம் யோகா பிரபலமாகியிருக்கிறது. இதில்
மகேஷ் யோகி/பீட்டில்ஸ்/ரவிசங்கர் இவர்களின் பங்கு அதிகம்.
அங்கு இன்னும் கதாகாலட்சேபம் வேறூன்றவில்லை. அதை விரைவில் கருப்பு
அமெரிக்கர்கள் செய்தாலும் செய்துவிடுவர். அவர்களது காஸ்பல் நமது பஜனை
சம்பிரதாயம்தான்.
அதனால்தான் நான் மீண்டும் வலியுறுத்துவது, “இந்து மதம்” என்று சொல்லாமல்
வேறொரு அழகான வார்த்தையால் நமது சமய ஒழுங்கைச் சொல்ல வேண்டும் என்பது.
(நமஸ்தே என்று சொல்லுங்கள் என்று ஒரு கருப்பு பாதிரி தமது `செர்மனில்`
வலிந்து ஊக்கமூட்டிய வீடியோ இங்கு வலம் வந்தது முன்பு)
இந்துயிசம் என்பது ஒரு பிரபஞ்ச நோக்கு! யாதும் ஊரே, யாவரும் கேளிர்
என்பது சாமானியப்பட்ட வார்த்தை இல்லை!
ரங்கனார் முயல வேண்டும் ;-)
கண்ணன்
ஹிந்து மதம் என்னும் சொல் வானளாவிய ஸநாதநத்திற்கான ஒரு குறியீடுதான்;
அதனால் பிற மதங்களோடு ஒக்கக் குறுகிவிடும் என்னும் அச்சத்திற்கு
இடமில்லை.
மதம் என்று சொல்லிவிட்டால் கூடவே பேய்பிடித்து ஆட்டும் என்னும் அச்சமும்
தேவையற்றது.
விஷ்ணு ஸாளக்ராம சிலைக்குள் ஒடுங்கினாலும் விஷ்ணுத்வத்திற்குப் பழுது
ஏற்படாது.
தேவ்
இதான..வேண்டாங்கறது...
இந்து மதம் என்பது போலி.
நமது சமயத்தை நம்மவர் எப்படி அழைக்கின்றனர்?
க.>
க.>