//இணைய நூலகங்களின் இணைப்புப்பாலம்
குறிப்பாக முதலில் செய்ய வேண்டியது இணைய நூலகங்களுக்கான இணைப்பு ஆகும்.
மென்நூல்களை இலவசமாகப் பார்வையிட ஏற்ற வகையில் பலப்பல இணையக் குழுக்கள்
இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் ஒன்று கூடி ஒருங்கிணைந்த உலகத் தமிழ்
இணைய நூலகத்தை உருவாக்க வேண்டும். ............. //
நூலகத் தளம் (தமிழ் எண்ணிம நூலகம் - Tamil Digital Library - www.noolaham.org)
நூலகத்திட்டத்தின் வலைத்தளமாகத் தொடங்கப்பட்ட போதிலும் இப்பொழுது நூலக
நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்டு தமிழ் எண்ணிம நூலகமாக
மாற்றப்பட்டுள்ளது. நூலகத் திட்ட நூல்கள் மட்டுமல்லாமல் எல்லாமாக 9
சேகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பார்க்க: http://tinyurl.com/yz2n74b
//1. நூலகங்கள் தன் தனித்தன்மையோடு இயங்க உரிமை தரப்பட வேண்டும். அதே
நேரத்தில் ஒருங்கிணைப்பிற்கு வழி வைக்கப் பட்டு அது ஒரு பொதுத்தள
மரபுக்கு உட்பட்டதாகவும் இயங்கவேண்டும். //
தமிழ் எண்ணிம நூலகமானது இணையத்தில் கிடைக்கும் தமிழ், தமிழ் சார்ந்த
மின்னூல்களையெல்லாம் இணைப்பதாக இருக்கிறதேயொழிய அந்தந்த முயற்சிகள் மீது
எந்த தாக்கத்தையும் செலுத்துவதில்லை.
நூல் விபரங்களும் இணைப்புக்களையும் கொண்ட விக்கிப் பக்கங்களைக்
கொண்டதாகவே இத்தளம் இருக்கிறது. நூலகத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை,
தமிழம் ஆகிய செயற்றிட்டங்களிடம் அனுமதி பெற்றே பக்கங்கள்
உருவாக்கப்படுகின்றன. (ஆயினும் மின்னூல்களைப் பிரதி செய்து வைப்பதற்கு
அனுமதி பெறவுமில்லை; அத்தகைய நோக்கமுமில்லை.)
//2. எதிர்காலத்தில் இடம் பெறும் நூல்களும் அந்தந்த வகைமைக்குள்
சென்றுசேரும்
படியான வசதி ஒருங்கிணைந்த நூலகத் தளத்திற்கு வேண்டும். //
தமிழ்சார் செயற்றிட்டங்களிடம் கிடைக்கும் நூல்களை மின்னூலாக்கஞ் செய்யவே
போதிய ஆளணி, வளங்கள் இல்லை. அவ்வகையில் ஒவ்வொரு நூலையும் அவர்கள்
வலையேற்றும்போதும் நூலகத்தளத்திற்குத் தேவையான விதத்தில் பகுப்புக்களை
உருவாக்கக் கோருவது சாத்தியாகப் போவதில்லை. நூலகத்தளத்தில் இணைந்துள்ள
விக்கிப் பயனாளர்களே இத்தகைய வகைபிரிப்புக்களைச் செய்ய வேண்டிய நிலை
உள்ளது.
//3. ஒரே நூல் அனைத்துத் தளங்களிலும் வெவ்வேறு முறையில்
அமைந்திருந்தாலும் ஏற்கப்பட வேண்டும். அவற்றை ஒதுக்க வேண்டாம். அதாவது
பிடிஎப் கோப்பு, சாதாரண கோப்பு என்று கோப்பு எவ்வடிவில் இருந்தாலும்,
அல்லது உரை இல்லாது, உரையோடு, எளிய உரை, அல்லது மரபுரை போன்ற எதனோடு
இருந்தாலும் நூல்கள் ஒரே தலைப்பில் அமையும்படியான மென் பொருள்
உருவாக்கப்பட்டு செயல் படுத்தப்பட வேண்டும். //
பார்க்க: http://tinyurl.com/yfnfdal
2010 தைப்பொங்கலளவில் முடிவில் குறைந்தது 7000 மின்னூல்களின் விபரங்களை
இணைக்க வேண்டுமென முயற்சியெடுக்கப்படுகிறது.
நூலகத்திட்டம் - 5000
தமிழம் - 1200
தமிழ் மரபு அறக்கட்டளை - 200
இன்ரர்நெற் ஆர்க்கைவ் - 200
யூலிப் - 300
ஏனையவை - 200
என 7000 இணையத்தில் உள்ளன. இவற்றில் சுமார் 4800 மின்னூல்களின் விபரங்கள்
ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர சென்னை நூலகம், மதுரைத்திட்டம், கீற்று போன்ற தளங்களும்
இணையத்தில் கிடைக்கும் யுகமாயினி, காலச்சுவடு போன்றவற்றுக்கான
இணைப்புக்களும் உருவாக்க வேண்டும்.
இவ்வகையில் தாங்கள் குறிப்பிடும்படியான இணைப்புப்பாலமொன்று ஏற்கனவே
உருவாகியுள்ளது. ஆயினும் செயற்பாட்டுத்தளத்தில் மிகச்சிலரே
இயங்குவதாகவுள்ள தமிழ்ச்சூழலில் ஒரு முழுமையான மின்னூலகமொன்றை
உருவாக்குவதற்கான ஆளணி என்பது கிடைப்பதாகவில்லை.
மின்தமிழில் நன்கறியப்பட்ட வினோத் நூலகத்தளத்தில் முக்கிய நுட்பப்
பங்காற்றி வருகிறார் என்பதும் த.ம.அ.வின் சுபாவும் கண்ணனும் ஆர்வத்துடன்
இம்முயற்சிக்கு த.ம.அ.வின் சம்மதத்தை அளித்தனர் என்பதுவும் இவ்விடத்தில்
குறிப்பிடப்பட வேண்டிய தகவல்கள்.
அத்துடன் மின்தமிழிலும் இருக்கும் பொள்ளாச்சி நசன் அவர்களும் நூலக
முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றார். (அவர் ஒரே பட்டியலில் அனைத்து
மின்னூல்களையும் பார்க்கக்கூடிய வசதியொன்றைத் தமிழம் தளத்தில் ஏற்படுத்த
உழைத்து வருகின்றார் என்பதையும் இது தொடர்பில் குறிப்பிட வேண்டும்.)
- கோபி
> ----- Original Message -----
From: "gopi" <kopi...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Wednesday, December 09, 2009 11:37 AM
Subject: [MinTamil] Re: இணையத் தமிழின் ஒருங்கிணைப்பிற்கான தேவையும், அதன் வழி
முறைகளும்
இன்றுதான் இதைக் கண்ணுறும் வாய்ப்புக்குக் கிடைத்தது.
நாங்கள் எதிர்பார்த்தது வாசகரை எங்கள் தளத்திற்கு வரவழைக்கும் ஒரு
முயற்சியாக இது இருக்குமென்று. ஆயின் உங்கள் நூலகக் குடையின் கீழேயே
எங்கள் நூல்களை தரவிரக்கம் செய்து கொள்ளலாம் என்பது ஒரு வசதி போல்
இருந்தாலும், தாங்கள் இச்சேவை செய்வதற்கு வாசகனிடமிருந்து நன்கொடையை
எதிர்பார்க்கும் 'பேபால்' விளம்பரம் கவனத்தை ஈர்க்கிறது.
இது ஒருவகையில் கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலுள்ளது.
அதுவும் மிகச்சாமர்த்தியமாக நாங்கள் அரும்பாடுபட்டு சேகரித்திருக்கும்
பிரித்தானிய நூலக சேகரத்தை முன்வைத்து நிதி உதவி கேட்பது அறம்
சார்ததுதானா என்ற கேள்வி எழுகிறது. அந்நூல்களை நாங்கள் சேகரிக்க எத்தனை
முறை லண்டன் பயணப்பட்டிருப்போம் என்று எங்களுக்குத்தான் தெரியும்.
இதுகுறித்து நாம் பேச வேண்டியுள்ளது.
எங்கள் நோக்கம் ஒரு வாசகன் எங்கள் தளத்திற்கு வரும் போது ஒரு நூலை
மின்னாக்கியவன் யார், உதவியவன் யார் போன்ற பல சேதிகளை வழங்கி
மின்னூலாக்கத்திற்கு தொண்டூழியர்களைத் தேடுகிறோம். ஆனால் தாங்களோ எங்கள்
நூல்களைக் காண்பித்து நன்கொடை வாங்குகிறீர்கள். உங்கள் செயல்பாட்டிற்கு
அது ஒத்துவரலாம் ஆனால் எங்கள் செயல்பாட்டை அது மெத்தனப்படுத்துகிறது.
உங்கள் சேவை பாராட்டற்குரியது உங்கள் சேகரம் என்ற அளவில். ஆனால்
அடுத்தவர் சேகரத்தைக் காட்டி நிதி கேட்பது அறமில்லை.
இதுபோல் முன்பொரு பிரச்சனை வந்தது. மதுரைத்திட்டத்தின் நூல்களை
தரவிறக்கம் செய்து சிடியில் போட்டு விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். அவர்
கண்ட லாபத்தின் ஒரு பகுதியை இம்மாதிரி முயற்சிகளுக்கு நன்கொடை அளித்தால்
பாராட்டுப்பெறலாம்.
தமிழ் மின்னாக்க முயற்சிகள் எல்லாமே மிகுந்த சிரமத்திற்கு இடையேதான்
நடைபெற்று வருகின்றன. எனவே, நாம் எல்லோரும் வளரும்வரை, நல்ல நிதியுதவி
கிடைக்கும்வரை இவ்வகை முயற்சிகளைத் தவிர்க்கலாம்.
கண்ணன்
On Dec 9, 1:00 am, "gcsekaran" <gcseka...@gmail.com> wrote:
> அன்புடையீர்!
> உலகத் தமிழ் இணைய நூலகத்தை குறித்த இந்த செய்திகள் வரவேற்கத்தக்கதே. ஆனால் இவை
> அனைத்து ஏட்டளவிலே இருந்து விடுவது தான் ஏமாற்றமளிக்கும் செய்தியாகும்.
> அரசாகட்டும் அல்லது தன்னார்வ நிறுவனங்களாகட்டும் எல்லோருமே பேசுவதோடும்
> எழுதவதோடும், சரி, உண்மையைச் சொன்னால் கைதட்டல் பெறுவதுதான் அவர்கள் நோக்கமே.
> நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எனக்கு இதுவரை இணையத்தில் தமிழ் வளர்ச்சி
> குறித்து பொதுமக்களும் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் தான் அவ்வப்போது மடல்
> அனுப்பியிருக்கிறார்களே ஒழிய தமிழகத்தில் அரசுத் துறையிலோ அல்லது தன்னார்வ
> அமைப்புகளிலிருந்தோ ஒரு மடல் கூட இணைய நூலகத்தை பற்றியோ, அவைகளின் இணைப்பு
> மற்றும் வளர்ச்சி குறித்தோ வந்ததே இல்லை என்பது தான் உண்மை. என்ன செய்வது
> நானும் உங்கள் கட்டுரையை படித்து மனத்தை மட்டுமே தேற்றிக் கொள்ளத்தான்
> முடியும். இதுவாவது எழுத்து வடிவை கடக்குமா என்று?
> அன்புடன்
> கோ.சந்திரசேகரன்
> சென்னைநூலகம்.காம்
>
சந்திரசேகரன்,
இங்கே இருக்கிறீர்களா?
சென்னைநூலகம் ஒரு பழைய தளம். அரிய சேவை.
அன்புடன்,
நா. கணேசன்
சென்னை நூலகத்தை திறந்தால் வைரசுகள் இருப்பதாகச்
செய்தி பலகாலம் வந்துகொண்டிருந்தது. களைந்து விட்டீர்களா?
> > ----- Original Message -----
> ...
>
> read more »
எந்த ஒரு தளத்துக்கும் ஆழ இணைப்புத் (டீப் லிங்) தர முன்னர் அனுமதி பெற
வேண்டுமென்பது அறம் சார்ந்தது. அவ்வகையில் நூலகஞ் சார்பாக உங்களையும்
சுபாவையும் தொடர்புகொண்டு உங்களது அனுமதியையும் பெற்றதோடு உங்கள்
வழிகாட்டலின்படி த.ம.அ இலச்சினையையும் வார்ப்புருவில் இணைத்தே குறித்த
நூல்விபரங்கள் இணைக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக த.ம.அ. நூல்விபரங்களை இணைத்தவர் மின்தமிழின் இளைய
தளபதி வினோத் என்ற அளவில் தம.அ.வின் செயல்பாட்டை மெத்தனப்படுத்துவது
நோக்கமில்லை என்பதனை நம்புவீர்களென எதிர்பார்க்கிறேன்.
அத்துடன் இத்தகயை நுஉல்விபரப்பக்கங்களை இணைப்பது த.ம.அ. தளத்துக்கான
வருகையாளர்களை சிறிதளவு குறைக்கலாம் என்பது அனுமதிபெறுவதற்கான மடலிலேயே
சுட்டிக் காட்டப்பட்டதென்ற அளவில் பேபால் இணைப்பு ஒன்றே உங்களுக்கு ஏற்க
முடியாததொன்றாக இருக்கிறதென நான் நம்புகிறேன்.
ஆயினும் "உங்கள் சேகரம், உங்கள் நூலகக் குடை" என்பதாக நீங்கள்
குறிப்பிட்டது மனம் நெருடுவதாக உள்ளது. உண்மையில் நூலகத் திட்டச்
சேகரத்தை நூலகத்தளத்தின் சேகரமொன்றாக மட்டுமே இப்பொழுது வைத்துள்ளோம்.
(ஆயினும் நூலக நிறுவனம் பெற்றுக் கொள்ளும் நிதியுதவிகளில் பெருமளவை
நூலகத் திட்டத்துக்கு வழங்குகிறோம் என்பதனை அடுத்த ஆண்டறிக்கையிலும்
காணலாம்)
இணையத்தில் கிடைக்கும் தமிழ், தமிழ் சார்ந்த நூல்களனைத்தினதும்
விபரத்தரவுகளைத் (மெற்றா டேற்றா) தொகுத்து ஒரு மெய்நிகர் இணைய நூலகத்தினை
உருவாக்க முயல்வதன் நோக்கத்தை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதன்
பின்னர் த.ம.அ. சேகரத்தை நூலகத்தளத்தில் தொடர்ந்தும் இணைக்கலாமா இல்லையா
என்பது தொடர்பிலான உங்கள் மேலான முடிவினைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
1. ஆவணப்படுத்தல் நோக்கம் : இணையமேறிய தமிழ்நுஉல் விபரங்களைத் திரட்டிக்
கொள்ளுதலால் ஒரே நூல் இருதடவை எண்ணிமமாக்கப்படும் வள விரயம்
தவிர்க்கப்படுகின்றது. பொருளாதார பலம் இத்தகைய முயற்சிகளுக்குக்
கிடைக்காத தமிழ்சூழலில் வளவிரயம் தவிர்க்க வேண்டியுள்ளமை நீங்களும்
அறிந்ததே.
2. அறிவு வரைபட உருவாக்கம் - தமிழ் எண்ணிம நூலக முயற்சியின் மிக முக்கிய
நோக்கம் இதுவாகும்.
இணையத்தில் கிடைக்கும் தமிழ் உள்ளடக்கம் எந்தெந்த
விடயப்பரப்புக்களையெல்லாம் கொண்டுள்ளதென்பதனை தெளிவுவாகத் தெரிந்து
கொள்வது எமது தேவைகள் என்னவென்பதனை வரையறுத்து ஒரு மொழிசார் சமூகமாக
முன்னேற அத்தியாவசியமாகத் தேவை என நாம் நம்புகிறோம்.
ஓர் எடுத்துக்காட்டு: http://tinyurl.com/lv9543
இணையத்தில் கிரந்தம் சார்ந்து கிடைக்கும் நூல்களெல்லாம் இங்கே
தொகுக்கப்பட்டுள்ளன. கிரந்த வரிவடிவத்தினைக் கற்பதற்குக் கிடைக்கக்கூடிய
ஓர் ஆங்கில நூல், சில தமிழ் நூல்கள், சமற்கிருதங் கற்க வழிகாட்டும் இரு
நூல்கள், சில மணிப்பிரவாள நூல்கள் எனப் பலவும் தொகுக்கப்பட்டுள்ளன.
இங்கே என்ன உள்ளன என்பதனை விட என்ன இல்லை என்பது முக்கியமாகிறது.
மணிப்பிரவாளத்தை விளங்கிக் கொள்ள இங்கே தொகுக்கப்பட்ட நூல்கள் போதுமா?
என்ற கேள்வி ஓர் ஆய்வாளருக்கு முக்கியமானது. அவ்வாறில்லையெனின் அத்தகைய
நூல்களை இனங்காண்பதும் எண்ணிமமாக்குவதும் அவசியமாகிறது. அவ்வாறு
எண்ணிமமாக்குவோர் மதுரைத்திட்டமாக, தம.அ. வாக, நூலகத்திட்டமாக இல்லை வேறு
எவராகவேனும் இருந்துவிட்டுப் போகலாம்.
அவ்வாறே கிரந்த எழுத்துக்களை இங்குள்ள நூல்கள் முழுமையாக
விளக்குகின்றனவா? அவை எளிமையாக கற்கக் கூடியனவாக உள்ளனவா? என்கிற
கேள்விகளுக்கான விடை 'இல்லை' எனின் வினோத்தோ கண்ணனோ இன்னம்பூரானோ கூட
அத்தகைய நூலொன்றை எழுதக்கூடும். இல்லையேல் அத்தகைய நூலொன்றை எண்ணிமமாக்க
முயலும் நிலை வரும்.
அன்புள்ள கண்ணன்,
கிரந்தப் பகுப்பினுள் இன்டர்நெற் ஆர்க்கைவ், தெற்காசிய எண்ணிம நூலகம்,
முக்தபோத மின்னூலகம், சடகோபன் தளம், ஹிமாலயன் ஆகடெமி், அம்பா,
நூலகத்திட்டம் ஆகிய 7 சேகரங்களின் நூல்கள் உள்ளன. தம.அ. அண்மையில்
வெளியிட்டவற்றையுமிணைத்தால் 8 சேகரங்களின் நூல்கள் உள்ளன.
இவற்றில் எதனை நீக்கினாலும், இணைக்காவிட்டாலும் தமிழுலகுக்கு இழப்பு
என்பது நீங்கள் அறியாததா?
தொண்டூழியத்தினை நம்பிக் களமிறங்கி அதனூடாக சில நூறு நூல்களைத் தாண்ட
முடியாத நிலையில் நிதியினைப் பெற்று விரிவாக்கி வளர்ந்தது நூலகத்திட்டம்.
அதன் வளர்ச்சி கூட அறிவியக்கத்தைச் சாத்தியப்படுத்தப் போதாதென்ற வகையில்
அதனிலிருந்து தோன்றியதெனினும் முழுமையாக வேறொன்றாக நூலக நிறுவனம்
உருவாக்கப்பட்டு தமிழ் எண்ணிம நூலக முயற்சி தொடருகிறது.
கண்ணன், சுபா, இன்னும் பல தொண்டூழியரின் பணிகள் வணங்குதற்குரியவையே.
நானும் ஓர் அணில் போல் ஏதாவது செய்ய முயலும் தொண்டூழியனே. ஆயினும்
நிதிபெற்றுச் செய்யக்கூடியவையோ ஏராளம். பேபாலூடாக கிடைப்பது மிகச்
சொற்பமாயிருப்பினும் (நிதி விபரங்களனைத்தும் நூலகத்தளத்தில்
வெளிப்படையாகவே உள்ளன) அதனால் இன்னும் ஓரிரு நூல்களை எண்ணிமமாக்க
உதவமுடியுமென்றால் அது பெரிது என்றே நம்புகின்றேன்.
இல்லை நூலகத்தளத்தில் சாமர்த்தியமாகக் கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு
அடிப்பதாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களென்றால் த.ம.அ சேகரத்தை நூலகத்தில்
இணைக்காமலிருக்கலாம்.
தங்கள் சித்தம் தமிழர் பாக்கியம்
தோழமையுடன்
கோபி
On Dec 9, 7:23 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/9 gopi <kopin...@gmail.com>:
கோ.சந்திரசேகரன்
சென்னைநூலகம்.காம்
2009/12/9 gcsekaran <gcse...@gmail.com>
&
தங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி.
நல்நோக்கங்களை சிதைப்பது என்பது என்னால் கனவில் கூட எண்ணமுடியாத ஒன்று.
தாங்கள் மேற்கொண்டிருக்கும் பணி மெச்சத்தகுந்தது. அதில் இருவேறு
கருத்தில்லை.
ஆயினும், வளர்கின்ற நிலையில் உள்ள தமிழ் மின்னாக்க உலகில் சில
நடைமுறைகளைப் பேணுவது அவசியமென்று தோன்றுகிறது. (some etiquettes).
உதாரணமாக உங்கள் சேவை, ஒரு நொடியில் வாசகனுக்கு தேவையான நூலை, அவன் தேட
வேண்டிய அவசியமின்றி அளிக்கிறது. உண்மைதான்.
அதே நேரத்தில் பல்வேறு சேவைகள் செய்யும் மின்னாக்க இயக்கங்கள் பல்வேறு
கருதுகோள்களை வைத்துள்ளன.
உதாரணமாக, பொள்ளாச்சி நசன் ஐயா, யார் கையையும் எதிர்பாராமல், இதற்கென
குறுகிய கால ஓய்வு பெற்று 1000 நூல்கள் போல மின்னாக்கம் செய்துவிட்டார்.
அதுவொரு கின்னஸ் ரெகார்டு.
நூலகம் வெளி நிதியுதவி பெற்று, தமிழகத்தின் மனித வளத்தைப் பயன்படுத்தி
(probably on contact basis) 4000+ நூல்கள் மின்னாக்கம் செய்துவிட்டன.
மதுரைத்திட்டம் தொண்டூழிய அடிப்படையை மட்டும் வைத்து 300+ நூல்களை
எழுத்தாக்கம் செய்துள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் அணுகுமுறையே வேறு.
எங்கள் முன் முதலில் நிற்பது தமிழ் முதுசொம் பாதுகாப்பு பற்றிய பிரக்ஞையை
உருவாக்குவது.
எங்கள் கண்ணோட்டத்தில் மின்னாக்கம் என்பது சரஸ்வதி தொழில். வாணி தொழில்.
நான் மட்டும் வாணியைத்தொழுதால் போதாது. எல்லோரும் தொழ வேண்டும்.
எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும். மின்னாக்கம் குடிசைத்தொழில் போல் தமிழ்
கூறும் நல்லுலகில் பரவ வேண்டும். இதை ஊக்குவிக்கும் விதமாக எங்கள்
மின்சேகர முயற்சி அமைகிறது.
இதை ஒரு வாசகன் எம் தளத்திற்கு வந்து பார்த்தால்தான் புரிந்து
கொள்ளமுடியும் அங்கு வரும் போது நூலை ஆக்கியோன் பெயர்,
அதைப்படியெடுத்தோன் பெயர், பிற உதவிகள் செய்தோன் பெயர் என்று எல்லா
விவரங்களும் கிடைக்கும் (பிரித்தானிய நூலக சேகரம் இப்பிரிவில் அடங்காது).
அது ஒரு வாசகனை ஊக்குவிக்கும். அட! நாமும் இதுபோல் செய்தால் நமது பெயரும்
மின்னுலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கும் என்று தோன்றும். அதுவே நாம்
தரும் சேதி.
ஆனால், வாசகன் நேரடியாக உங்கள் தளத்திற்கு வந்து தரவிறக்கம் செய்து
கொண்டால் இந்த அனுபவம் இல்லாமல் போகும். அது எவ்வளவு பெரிய இழப்பு.
அது மட்டுமல்ல தமிழ் மரபு அறக்கட்டளை புத்தக சேகரிப்பு என்பதை மட்டும்
நோக்கமாகக் கொண்டதல்ல. தமிழ் முதுசொம் எவ்வடிவில் இருந்தாலும் அவைகளை
இணையம் தரும் பல்லூடகத்தன்மையைப் பயன்படுத்தி மின்னாக்கம் செய்ய
வேண்டுமென்று கருதுகிறோம்.
இன்னொன்றையும் நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். இன்னொருவர், ஒரு
நிதியுதவி பெற்று, தாங்கள் செய்வது போலவே, தமிழில் இதுவரை வந்துள்ள
அனைத்தையும் தமது தளத்தில் 'mirror image' ஆகவோ அல்லது வியாபார நோக்கிலோ
(விளம்பரம் (AdSense) செய்தால், அப்போது உங்கள் மனோநிலை எப்படி
இருக்கும்? தொழில்நுட்ப சாத்தியம்தானே!
எனவே, இப்போதைக்கு தமிழக அரசோ, வேறு அரசாங்கங்களோ இப்படியான ஒரு தள
நிர்மாணம் செய்யும்வரை, நாம் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக, தொடுப்பு மட்டும்
கொடுத்து செயல்படுவோம். உங்களால் செய்ய முடியும் என்ற தொழில்முறை
சாத்தியத்தைக் காட்டியுள்ளீர்கள். பாராட்டிற்குரியது.
இம்முயற்சிகளின் அடிக்கோடு நாம் கொள்ளும் பெருமைதான் (just the pride).
அதையும் தொழில்நுட்ப வசதியால் தட்டிப்பறித்து விட்டோமெனில் தொலைதூர
நோக்கில் மின்னாக்க கதி மெத்தனப்படும் என்பது என் யூகம். எச்சிறு
முயற்சியெனினும், அதில் செய்பவர் பெருமைப்படும் விதம் நாம் ஆக்கபூர்வமாக
உதவி செய்ய வேண்டும்.
அண்ணா கண்ணன், மின்மஞ்சரிக்கு எழுதிய கட்டுரையில் இதையெல்லாம் தமிழக அரசு
செய்ய வேண்டுமென்றார். செய்யலாம். அப்போது நூலக முயற்சி (your current
effort) ஒரு சரித்திரமாக இருக்கும். அதில் எனக்கு அவ்வளவுதூரம்
உடன்பாடில்லை.
நாம் இன்னும் யோசிக்க இடமுள்ளது.
மிக்க அன்புடன்
நா.கண்ணன்
2009/12/9 gopi <kopi...@gmail.com>:
----- Original Message -----From: Innamburan Innamburan
2009/12/9 gcsekaran <gcse...@gmail.com>
>> > நிறுவனத்தால் பொறு�®
----- Original Message -----
From: "gopi" <kopi...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Wednesday, December 09, 2009 7:25 PM
Subject: [MinTamil] Re: இணையத் தமிழின் ஒருங்கிணைப்பிற்கான தேவையும், அதன் வழி
முறைகளும்
//ஆயினும், வளர்கின்ற நிலையில் உள்ள தமிழ் மின்னாக்க உலகில் சில
நடைமுறைகளைப் பேணுவது அவசியமென்று தோன்றுகிறது.... மின்னாக்கம்
குடிசைத்தொழில் போல் தமிழ் கூறும் நல்லுலகில் பரவ வேண்டும். இதை
ஊக்குவிக்கும் விதமாக எங்கள் மின்சேகர முயற்சி அமைகிறது. வாசகன்
நேரடியாக உங்கள் தளத்திற்கு வந்து தரவிறக்கம் செய்து கொண்டால் இந்த
அனுபவம் இல்லாமல் போகும். அது எவ்வளவு பெரிய இழப்பு. நாம் இன்னும்
யோசிக்க இடமுள்ளது. //
உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி. த.ம.அ மின்னூல்கள் பற்றிய
பக்கங்களில் மின்னூல்களுக்கு இணைப்புத்தராமல் த.ம.அ மின்னூற்
பட்டியலுக்கு இணைப்புத் தருவது பொருத்தமாக இருக்குமா?
அவ்வாறானால் மின்னூல் விபரத்தை அறிந்து கொள்ளும் எந்தப் பயனாளரும் த.ம.அ
தளத்துக்கு வந்து அங்கு என்ன நடைபெறுகின்றதென்பதை ஓரளவு விளங்கிக் கொண்டே
பதிவிறக்குவார். நேரடியாக நூலகத்தளத்திலிருந்து நூல்களைப் பெற்றுக்
கொள்ளாத அளவில் நூலக நிறுவனத்துக்கு நிதியுதவும் வாய்ப்புக்களும் இல்லை.
(நூலகத்தளத்தில் 17 த.ம.அ பக்கங்கள். அவத்தில் 15 பக்கங்கள் 2009
ஒக்டோபர் 19, 22 ஆம் திகதிகளில் சுபாவின் அனுமதி மடல் பெற்ற பின்னரே
இணைக்கப்பட்டவை. நிதி பெறுவதற்கான குறுக்குவழியாக அவை இணைக்கப்படவில்லை.
அறிவசைவியக்கத்தைச் சாத்தியப்படுத ஒரு செயலுபாயமாகவே இணைக்கப்பட்டன.
கடந்த மடலொன்றின் கிரந்த எடுத்துக்காட்டினூடாக அதனை ஏற்கனவே
கூறியிருந்தேன்)
அவ்வகையில் நுல்விபரப்பக்கங்களில் மின்னூற்பட்டியலுக்கான இணைப்பைத்
தருவது,
1. ஏற்கனவே எண்ணிமமாக்கப்பட்ட நூல் விபரங்களை அடையாளங் காண்பதில்
தொடர்ந்தும் உதவும்.
2. அறிவு வரைபட உருவாக்கத்திலும், சேகர உருவாக்க முயற்சிகளிலும்
தொடர்ந்தும் பங்களிப்பதாக இருக்கும்
அவ்வகையில் நூலகத்தளத்தின் முக்கிய 2 நோக்கங்கள் தொடர்ந்தும் நிறைவேறும்.
அத்துடன்
3. த.ம.அ.வின் மின்னூற்பட்டியற்பக்கத்துக்கு மேலும் சிறிதளவேனும்
வருகையாளர்களை அதிகப்படுத்தி த.ம.அ.வின் செய்தியை இன்னும் பரவலாக்குவதாக
அமையும்.
அவ்வாறு மின்னூற்பட்டியலுக்கான இணைப்புடன் பக்கங்களை உருவாக்குவதும்
பொருத்தமான நடைமுறையாயிராதெனத் தாங்கள் கருதுமிடத்து உடனடியாக
அப்பக்கங்களை நீக்க முடியும்.
வணக்கம் சந்திரசேகரன்,
சென்னை நூலகத்தின் பணிகளை சென்னைநெட்வேர்க்கின் பகுதியாக அது இருந்த
காலத்திலிருந்தே அறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளேன். மிகக் குறைந்த
வளங்களுடன் எல்லா மின்னூலகங்களினதும் மின்னூல் விபரங்களை இணைப்பது
நடைமுறைச் சாத்தியமாகாதென்ற வகையில் படிப்படியாகவே செயற்பட
வேண்டியுள்ளது. அவ்வகையில் இதுவரை htm பக்கங்களைக் கொண்டிருக்கும் சென்னை
நூலகம், மதுரைத்திட்டம், கீற்று போன்றவற்றை நாம் தொடர்பு கொள்ளவில்லை.
நூலகத்தின் முயற்சியை மேலும் விரிவாக்குகையில் சென்னை நூலக வெளியீடுகளைக்
கட்டாயம் இணைக்க வேண்டும். நன்றிகள்.
தோழமையுடன்
கோபி
குறிப்பு: நூலக நிறுவனத்தில் நான் ஒரு செயற்குழு உறுப்பினன் மட்டுமே.
நூலகத்தளம் சார்பில் இங்கே நான் உரையாடுவதால் அத்தளம் என்னுடையதென்று
எவரும் கருத வேண்டாம்.
மிகச்சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.
நூல் பட்டியல் அப்படியே இருக்கட்டும். மிக அழகாக உருவாக்கம்
கொடுத்துள்ளீர்கள். தரவிறக்கம் என்று தட்டியவுடன் அந்த நூல் உள்ள
பக்கத்திற்கு அச்'சுட்டு' இட்டுச் செல்லட்டும். அப்படி இருந்தால்
அவர்களுக்கு எமது சேவை பற்றிய அறிமுகமும், (உம். டாக்டர் அப்துல் கலாம்
இந்நோக்கை பாராட்டியுள்ளார். வருகின்ற காலங்களில் இன்னும் நிறைய
புத்தகங்களை வெளிநாட்டிலிருந்து எடுப்போம். இதற்கு வெளிநாட்டு
ஈழத்தமிழர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஈழத்தின் பழைய
ஆவணங்களெல்லாம் நெதர்லாந்து நூலகங்களில் உள்ளன. ), ஒரு மின்னூல் ஆகும்
போது ஈடுபடுவோர் பெயரும் நிலைபெறும் எனும் சேதியும் கிடைக்கும்.
எனக்குத்தோன்றியது என்னவெனில், `நாம் இலவசமாக வழங்கும் நூல்கள் freeware
போல் என்று கொள்வோம். ஒரு இலவசச் செயலியை தரவிரக்கம் செய்ய பல்வேறு
தளங்கள் உள்ளன. அவைகளைத் தட்டியவுடன் அவை நேரடியாக தரவிறக்கம் ஆவதில்லை.
சில பல தளங்களுக்குப் போய்தான் பின் இறங்குகிறது. நோக்கம் என்னவெனில்
ஆர்வமுள்ளோருக்கு மேலும் கூடுதல் சேவை தரும் தளங்களை அறிமுகப்படுத்துவது.
அதே போல் செயல்படலாம் என்று தோன்றுகிறது.
இது ஒருவகையில் மின்னாக்கம் செய்வோரை ஊக்கப்படுத்துவது போல் அமையும்.
தமிழின் முதுசொம் ஆழ்கடல் போல் உள்ளது. இன்னும் நிறைய `வாணி தொண்டர்கள்`
வேண்டுமென்று தோன்றுகிறது. எல்லோரையும் ஊக்கப்படுத்தும் தளமாக உங்கள்
`நூலகம் அமையட்டும்`.
தாங்கள் உங்கள் சேவையை எங்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர்தான்
செய்துள்ளீர்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். ஆனால் final product
எப்படி இருக்குமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனவே சின்ன
அதிர்ச்சி. அவ்வளவே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உங்கள் சேவை வளர எனக்கு வாய்ப்புக்கிடைக்கும் போது உங்களுடன் ஆலோசித்து உதவுகிறேன்.
மிக்க நன்றி. வினோத்தின் வடிவமைப்பு அழகுற அமைந்துள்ளது.
உங்களது முந்தைய கடிதத்தின் பிற பகுதிகளுக்கு பின்னால் (வாரக்கடைசியில்)
வருகிறேன். இன்றும் நாளையும் கொஞ்சம் வேலைப்பணி அதிகம்.
அன்புடன்
நா.கண்ணன்
உங்கள் முடிவு கண்டு மகிழ்ச்சி. உங்கள் ஆதரவும் ஆலோசனைகளும் நூலக
முயற்சிக்கு மென்மேலும் வலுச்சேர்ப்பதாயுள்ளன. விரைவில் நூலகத்தளத்தில்
உரிய மாற்றங்கள் செய்யப்படும். (தனிப்பட்ட பணிச்சுமைகளால் உடன்
பதிலளிக்கவோ உரிய மாற்றங்கள் செய்யவோ முடியவில்லை)
க.>
--
The above discussed changes are very minor ones. Editing the template
would redirect all the THF ebooks to the THF download page.
Lemme see what I can do..
V
All THF books will now redirect to the Sortable eBook Catalog @
http://www.tamilheritage.org/old/text/ebook/ebookcat.html
V
> > கோபி- Hide quoted text -
>
> - Show quoted text -
Kannan
2009/12/16 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
> Yup done.
>